Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, December 7, 2024
Please specify the group
Home > Featured > பலிக்காத பரிகாரம் – இறைவனிடம் நீதி கேட்டு வென்ற தம்பதியினர்! Rightmantra Prayer Club

பலிக்காத பரிகாரம் – இறைவனிடம் நீதி கேட்டு வென்ற தம்பதியினர்! Rightmantra Prayer Club

print
செல்வத்துள் இன்றியமையாத செல்வமான மழலைச் செல்வம் எங்களுக்கு வேண்டும் என்று பலர் நம் பிரார்த்தனை கிளப்புக்கு மனு செய்துவருகின்றனர். “பல பரிகாரங்கள் செய்தும் இதுவரை புத்திர பாக்கியம் கிட்டவில்லை” என்பதே அவர்களின் வேதனை குரல். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பதிவு நிச்சயம் ஒரு கலங்கரை விளக்கமாக இருக்கும் என்று கருதுகிறேன். ஏனெனில் இறைவனையே ஒரு கணம் மடக்கி அவனை தடுமாற வைத்து சாதித்துக்கொண்ட தம்பதியினரை பற்றிய வரலாற்றையல்லவா படிக்கப்போகிறோம்?

திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் நமக்கு விட்டுச் சென்ற ராஜ ராஜ சோழன் மூலம் கண்டெடுக்கப்பட்ட அரும்பெரும் பொக்கிஷமாம் திருமுறைகளில் ஊழ்வினையாலும் விதிவசத்தாலும் நமக்கு தோன்றும் பல்வேறு பிரச்சனைகளுக்கு எளிமையான தீர்வு அடங்கியிருக்கிறது. அதில் ‘மகப்பேறு கிட்ட’ சம்பந்தர் கூறிய படி ஒரு ஆலயத்திற்கு சென்று இறைவனை தரிசித்து பரிகாரங்களை செய்த ஒரு தம்பதியினருக்கு அதன் பிறகும் குழந்தை பிறக்கவில்லை. எனவே சிவனிடமே சென்று “திருமுறையில் கூறியதெல்லாம் பொய்யோ?” என்று நீதி கேட்டு, சிவனையே ஒரு கணம் தடுமாற வைத்து பிள்ளை பெற்ற ஒருவரின் வரலாற்றை பார்ப்போம்.

Thiruvenkadu

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்துக்கு அருகே உள்ள பெண்ணாடம் என்னும் ஊரில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் அச்சுதக் களப்பாளர் என்னும் சைவ வேளாளப் பெருநிலக் கிழார் வசித்து வந்தார்.  அவருக்கு நெடுநாட்களாகக் குழந்தைப் பேறே இல்லை.  ஆகவே தம் குலகுருவான சகலாகம பண்டிதர் என்பவரிடம் சென்று தம் குறையைச் சொல்லி பரிகாரம் தேடினார்.

சகலாகம பண்டிதரும் மூவர் தேவாரங்களில் கயிறு சார்த்திப் பார்க்கலாம் எனக் கூறிவிட்டு அவ்வாறே கயிறு சார்த்திப் பார்த்தார்.  கயிறு சார்த்திய இடத்தில் திருஞானசம்பந்தரின் திருவெண்காட்டு தேவாரப் பதிகத்தின் இரண்டாம் பாடல் கிடைத்தது.

அக்காலத்து வழக்கப்படி, தாம் நினைத்த எண்ணம் நிறைவேற வேண்டும் என்று நினைப்பவர்கள், திருமுறைகள் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகளுக்கிடையே, கயிற்றினை விடுவர். அக்கயிறு எந்த ஓலையின் மீது நின்றதோ, அந்த ஓலையில் எழுதப்பட்ட பாடலை ஒரு குறிப்பிட்ட காலம் பாராயணம் செய்து தமது எண்ணம் ஈடேறப் பெறுவர். இதற்குக் கயிறு சார்த்துதல் என்று பெயர்

பேயடையா பிரிவெய்தும்; பிள்ளையினோடுள்ளம் நினை
வாயினவே வரம்பெறுவர்; ஐயுற வேண்டா ஒன்றும்
வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர் தம்மைத் தோயாவாம் தீவினையே

(பொருள் : மூங்கில் போன்ற திரண்ட தோளினை உடைய உமையம்மை பங்கன் எழுந்தருளிய திருவெண்காட்டை அடைந்து அங்குள்ள முக்குளநீரில் மூழ்கி எழுந்து வழிபடுவாரைப் பேய்கள் சாரமாட்டா. பேய் பிடித்திருந்தாலும் விலகும். மகப்பேறு வாய்க்கும். மனவிருப்பங்கள் ஈடேறுவதை இறைவர்பால் அவர் பெறுவர். சிறிதும் சந்தேகம் வேண்டா.)

என்ற பாடல் வந்ததைக் கண்டு சகலாகம பண்டிதர், “பிள்ளையினோடுள்ளம் நினைவாயினவே வரம்பெறுவர்; ஐயுற வேண்டா ஒன்றும்”  என்னும் இந்த வரிகளைச் சுட்டிக் காட்டிப் பிள்ளை பிறக்கும் என்று ஆறுதல் கூறித் “திருவெண்காட்டுத் தலம் சென்று அங்குள்ள மூன்று குளங்களிலும் நீராடி வழிபட்டால் கட்டாயம் பிள்ளை பிறக்கும்; கவலைப்படவேண்டாம்.”  என்று கூறி அனுப்பி வைத்தார்.  உடனே அச்சுத களப்பாளர் தம் மனைவியோடு திருவெண்காடு சென்று மூன்று குளங்களான, சூரிய தீர்த்தம், அக்னி தீர்த்தம், சக்ர தீர்த்தம் போன்றவற்றில் முறையே நீராடி திருவெண்காட்டு ஈசனை வழிபடலானார்.  அப்படியும் அவருக்கு குழந்தை பிறக்கவில்லை. ஒரு நாள் அவர் கனவில் ஈசன் தோன்றி, “அச்சுத களப்பாளா! சென்ற பிறவியில் நீ செய்த தீவினையின் காரணமாக இந்த பிறவியில் இப்பிறவியில் உனக்குப் பிள்ளை வரம் இல்லை.” என்று கூறிவிட்டு மறைந்துவிடுகிறார்.

கனவு கண்டு விழித்தெழும் அச்சுத களப்பாளர் தமது மனைவியுடன் மீண்டும் திருவெண்காட்டுக்கு சென்று, “உன் பிள்ளை சம்பந்தர் கூறியது பொய்யோ?” என்று முறையிட்டார்.

அன்றிரவு மீண்டும் அவர் கனவில் தோன்றிய ஈசன், “அன்பரே…இப்பிறவியில் உமக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இருப்பினும், எனது பிள்ளையின் பதிகத்தில் நம்பிக்கை வைத்து வழிபட்டதால், அவன் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் சம்பந்தனைப் போலவே உனக்கும் ஒரு தெய்வ மகவு தனை அருளுவோம்” என்று திருவாய் மலர்ந்தார்.

கனவிலிருந்து விழித்துக் கொண்டவராய் எழுந்த களபாளருக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அந்த கனவினை, தன் மனைவியிடம் தெரிவித்தார். மங்கைபாகர் அருளிய வண்ணமே அந்த திவ்ய தம்பதிகளுக்கு ஒரு ஆண் மகவு பிறந்தது. திருவெண்காடரின் திருவருளால் அவதரித்த மகவாதலால், சுவேதவனப் பெருமாள் என்ற அவரது திருநாமத்தையே வைத்தனர். குழந்தை பிறந்ததிலிருந்தே சிவபக்திச் செல்வனாய் விளங்கிற்று. அந்த குழந்தை தான் மெய்கண்டார். சந்தான குரவர்கள் நால்வரில் முதலாமவர்.  சைவ சித்தாந்த சாத்திர மரபையும், சைவ சமயத்துக்கான குரு மரபையும் தோற்றுவித்தவர்.

எனவே மகப்பேறு விரும்புகிறவர்கள், கணவன்-மனைவி இருவரும் திருவெண்காட்டுக்கு சென்று இறைவனை தரிசித்து, முக்குலங்களில் நீராடி பக்தியுடன் இந்த பதிகத்தை பாராயணம் செய்து வந்தால் விரைவில் குழந்தை பிறக்கும்.

Thiruvenkadu2

முக்குளம் (சூரிய, சந்திர, அக்கினி தீர்த்தங்கள்) முதலில் அக்கினி, பிறகு சூரிய இறுதியாக சந்திர தீர்த்தம் என்ற முறையில் நீராடவேண்டும் நீராடுவதற்கு தேவையான வசதிகள் இக்குளத்தில் உள்ளன. திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளபடியால் குளங்கள் நல்லமுறையில் பராமரிக்கப்படுகின்றன. (மழைக்காலங்களில் குளம் மிகவும் ஆழமாக இருக்கும் என்பதால் பக்தர்கள் இறங்கி நீராட அனுமதிக்கப்படுவதில்லை. அது போன்ற நேரங்களில் குளத்தில் இருந்து குடத்திலோ அல்லது குவளையிலோ நீரை கொண்டு வந்து கரையில் நின்றபடி நீராடலாம்.)

அருகில் தான் திருக்கருகாவூர் கர்பரக்ஷாம்பிகை கோவில் உள்ளபடியால் அந்த கோவிலுக்கும் சென்று இறைவனையும் இறைவியையும் தரிசித்துவிட்டு வரலாம். ஒரேநாளில் இரண்டு கோவில்களையும் தரித்து விடலாம். அதற்க்கு ஏற்றார்போல உங்கள் பயண திட்டத்தை வகுத்துக்கொள்ளுங்கள்.

அருள்மிகு. சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில்,
திருவெண்காடு – அஞ்சல் – சீர்காழி வட்டம,
நாகப்பட்டினம் மாவட்டம் – 609 114.
தொலைபேசி : 04364-256424

(இந்த பதிவின் ஆக்கத்தில் பெரிதும் உதவி புரிந்த ஆன்மீக எழுத்தாளர், நம் வாசகர், நண்பர் சிவ.அ.விஜய் பெரியசுவாமி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.)

================================================================

புத்திர பாக்கியம் அருளும் திருவெண்காட்டு பதிகம்

கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்
பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே.

பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்
வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே.

மண்ணொடுநீ ரனல்காலோ டாகாயம் மதிஇரவி
எண்ணில்வரு மியமானன் இகபரமு மெண்டிசையும்
பெண்ணினொடாண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே.

விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகென்று
தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
கடல்விண்ட கதிர்முத்த நகைகாட்டுங் காட்சியதே.

வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன்
மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன்தூதர்
ஆலமிடற் றான்அடியார் என்றடர அஞ்சுவரே.

தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன்
ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில்
பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை
வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே.

சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணிய
மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளம்நன் குடையானும் முக்கணுடை இறையவனே.

பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
உன்மத்தன் உரம்நெரித்தன் றருள்செய்தான் உறைகோயில்
கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல்முழங்க
விண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே.

கள்ளார்செங் கமலத்தான் கடல்கிடந்தான் எனஇவர்கள்
ஒள்ளாண்மை கொளற்கோடி உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்
வெள்ளானை தவஞ்செய்யும் மேதகுவெண் காட்டானென்(று)
உள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே.

போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்
பேதையர்கள் அவர்பிறிமின் அறிவுடையீர் இதுகேண்மின்
வேதியர்கள் விரும்பியசீர் வியன்திருவெண் காட்டானென்
றோதியவர் யாதுமொரு தீதிலரென் றுணருமினே.

தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்
விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்
பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலியப் புகுவாரே.

திருச்சிற்றம்பலம்

Also Check :

புத்திர பாக்கியம் நல்கி சுகப்பிரசவமும் அருளும் திருக்கருகாவூர் கர்பரக்ஷாம்பிகை

================================================================

இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் யார் தெரியுமா?

ஏழு தலைமுறைகளாக குன்றத்தூர் முருகனுக்கு பூஜை செய்து வரும் பாக்கியம் பெற்ற திரு.ரகு ஐயர்!

Ragu Iyer Kundrathurஇந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் குன்றத்தூர் கோவிலின் தலைமை குருக்கள் திரு,ரகு ஐயர் அவர்கள். குன்றத்தூர் முருகனுக்கு ஏழு தலைமுறைகளாக பூஜை செய்து வரும் பரம்பரையை சேர்ந்தவர் இவர். கடந்த 22 ஆண்டுகளாக குன்றத்தூர் கோவிலில் முருகனுக்கு சேவை செய்து வருகிறார். கடந்த பல ஆண்டுகளாக ஒவ்வொரு தைப்பூசத்தன்றும் இவரது குடும்பத்தினர்  சுமார் 5000 பேருக்கு தங்கள் சொந்த செலவில் அன்னதானம் செய்து வருகின்றனர் என்பது தெரியுமா?. இதைவிட பெரிய புண்ணியச் செயல் வேறு இருக்கமுடியுமா!!

திரு.ரகு ஐயரிடம் நமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். திருகார்த்திகை தீபத்தன்று நமது இந்த வாரம் பிரார்த்தனை வருகிறது. அது சமயம் ஆலயத்தில் தான் இருப்பேன் என்றும் நிச்சயம் முருகனின் திருவடிகளில் பிரார்த்தனையை சமரிப்பிதாக கூறியிருக்கிறார்.

இங்கு இடம்பெற்றிருக்கும் இந்த பதிவையும் இந்த கோரிக்கைகளையும் ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து சென்று சனிக்கிழமை காலை அவரிடம் அளிக்கவிருக்கிறேன். முருகனின் திருவடிகளில் அதை வைப்பதாக கூறியிருக்கிறார். இதற்கு முன்பு கோரிக்கைகளை சமர்பித்தவர்களுக்கும் சேர்த்து பிரார்த்தனை செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளேன். நிச்சயம் செய்வதாக கூறியிருக்கிறார். அவருக்கு நம் தளம் சார்பாக நன்றி.

(குன்றத்தூர் கோவிலுக்கு தனிப்பட்ட முறையில் செல்பவர்கள் யார் வேண்டுமானாலும் செல்லலாம். நமது பெயரை பயன்படுத்துகிறவர்கள் அவசியம் நம்மிடம் தொலைபேசியில் கூறிவிட்டு தான் செல்லவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். காரணம் ஒருவரை முன் பின் தெரியாமல் நமது பெயரையோ தளத்தின் பெயரையோ இது போன்ற இடங்களில் பயன்படுத்துவதை நாம் விரும்பவில்லை. அது சரியல்ல என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும்.)

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகள் பார்ப்போமா?

================================================================

புத்திர பாக்கியம் வேண்டும்!

Dear Sundar sir & Rightmantra friends,

I am Nagabhushanam aged 37 years married with Mrs.Saradha. Till date, we are not blessed with any child. I have made several pariharams and going to several temples. Kindly help me to solve my problem. Please pray for me.

Regards
Nagabhushanam, Chennai

================================================================

மழலைக் குரல் வீட்டில் கேட்க வேண்டும்

Dear Sir,

My Name is Manju my Husband name is Krishnamurthy. We got married few months back. We are expecting a Child. But there’s not any sign.

I am regular reader of Rightmantra and now a days am praying to Mahaperiya also after knowing his power which we understood after reading your site. I kindly request your goodself to pray fr my wish in this week Prathana Club

My Wish is to get conceive soon and to give Happiness to my family members and dear ones by this and also my husband expecting a good job as per his wish.

I hope all your prayers will soon give me Child and a good job to my Husband. Please pray to Mahaperiya on my & my Husband behalf.

Regards

Manju, Tirupur

================================================================

நண்பரின் திருமணம் நல்ல முறையில் நடக்கவேண்டும்

I want to pray for one of my friend’s marriage. My friend name is N.Jagannath Rao. He recently got engaged and marriage will be held on 19 & 20 November at Dharmastala. Recently his fiancee told some personal problem which she has been facing several month. Being she is poor and no one will support her, even her parents and sister also didn’t support. I consoled him to leave everything to God.

I want all Right Mantra viewers to pray for his peaceful marriage life. Please pray for this week my friend’s peaceful marriage life.

Regards,

P.Raja, Bangalore
================================================================

நம் பொது பிரார்த்தனை

elephants இது நியாயமா?

நாட்டில் தினசரி நடக்கும் எத்தனையோ விபத்து மற்றும் அழிவு பற்றிய செய்திகளை பார்க்கவோ படிக்கவோ நேர்கிறது. அவற்றில் நம் மனதை சில செய்திகள் மிகவும் பாதித்துவிடுவதுண்டு. அப்படி நம்மை பாதித்த செய்தி தான் இது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு  மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரி மாவட்டத்தில், சாப்ராமாரி வனப்பகுதியை ஒட்டிய ரயில் பாதையில், பயணிகள் ரயில் ஒன்று, 80 கி.மீ., வேகத்தில் சென்ற போது, தண்டவாளத்தில் சென்ற யானைகள் கூட்டத்தில் மோதியது. இதில் 2 குட்டி யானைகள் உள்ளிட்ட 7 யானைகள் சம்பவ இடத்திலேயே இறந்தன. மேலும் 10 யானைகள் படுகாயம் அடைந்துள்ளன.

Seven_Elephant_Kill_256802g

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இதே பகுதிகளில் இது போன்று ரயில் மோதி பல யானைகள் இறந்துள்ளன. ரயில் பாதையை  யானைகள் கடப்பதால் இந்த விபத்து நடக்கிறது என்று கூறப்படுகிறது. ஆனால் யானைகளின் பாதையில் தான் ரயில் புகுந்துள்ளது என்பதே உண்மை.

நகருக்குள் புகுந்து யானைகள் ரயில் பாதையை கடக்கவில்லை. சரணாயலத்தில் அவை உலவாமல் வேறு எங்கே உலவும்? அவை இருக்குமிடத்தில் ரயில் பாதையை போட்டுவிட்டு, அவை குறுக்கே வந்ததால் விபத்து என்று கூறுவது எந்த வகையில் நியாயம்? வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் எவராவது இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இது போன்ற அரிய விலங்குகளின் அழிவை தடுத்து நிறுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன். மேற்கு வங்க அரசு, இந்த ரயில் பாதையை மூட நடவடிக்கை எடுத்துவிட்டு வேறு மார்க்கத்தை தேர்ந்தெடுக்கவேண்டும். யானைகளை அழிவில் இருந்து காப்பாற்றவேண்டும். இல்லையெனில் வருங்கால சந்ததியினர் யானைகளை மியூசியத்தில் மட்டுமே பார்க்க முடியும்.

இனி இப்படி ஒரு விபத்து நடக்கக்கூடாது என்று இறைவனை வேண்டுவோம்.

“அப்பா… விநாயகப் பெருமானே நீ தான் இதை தடுத்து நிறுத்தவேண்டும்! மனித இனம் ஏற்கனவே பல்வேறு சாபத்துக்கு ஆளாகி அல்லல்பட்டு வருகிறது. நீ தான் இந்த விஷயத்தில் தலையிட்டு ஒரு தீர்வு காணவேண்டும்!”

================================================================

இந்த வாரம் கோரிக்கைகள் அனுப்பியிருப்பவர்களில் முதலாமவர் திரு.நாகபூஷணம். ஏற்கனவே இவர் பரிகாரங்களை செய்துவருவதாக அறிந்தேன். என் பங்கிற்கு மஹா பெரியவாவை காஞ்சியில் உள்ள அவரது அதிஷ்டானத்திற்கு சென்று தரிசித்துவிட்டு வரும்படி கூறினேன். அவரும் சென்றுவிட்டு வந்தார். துர்தேவதைகளின் பார்வையோ தாக்கமோ ஒருவருக்கு இருப்பின் அவை இது போன்ற இடங்களுக்கு செல்லும்போது ஓடிவிடும்.

இரண்டாவது திருமதி.மஞ்சு. மஹா பெரியவா மீது பேரன்பும் பக்தியும் அவருக்கு ஏற்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார். அது உண்மை தான் என்பது அவரது வார்த்தைகளில் தெரிகிறது. சத்குருவின் பக்கம் நம் பார்வை திரும்பியதே வினைகளெல்லாம் முடிவுக்கு வருவதை குறிப்பது தான்.

மூன்றாமவர் திரு.ராஜா. பெங்களூரை சேர்ந்த வாசகர் இவர். தனது நண்பருக்காக அவரின் நல்வாழ்வுக்காகவும் நிம்மதியான திருமண வாழ்க்கைகாகவும் இங்கு கோரிக்கை அனுப்பியிருக்கிறார். அவருக்கு என் பாராட்டுக்கள்.

மேற்படி மூவருக்கும் நாம் கூறவிரும்புவது என்னவெனில், நாம் கூறிய படி திருமுறை பாராயணம் + ஆலய தரிசன பரிகாரத்தை செய்யுங்கள். தவிர கீழே கூறப்பட்டிருப்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

இந்த வாரம் பிரார்த்தனைக்கு திரு.ரகு ஐயர் மூலம் தலைமை ஏற்றிருப்பது சாட்சாத் அந்த குன்றத்தூர் முருகனே என்றால் மிகையாகாது. எனவே கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேறும் என்பது திண்ணம். அப்படி நிறைவேறும் பட்சத்தில் குன்றத்தூர் முருகனை சென்று தரிசித்து அவனுக்கு அர்ச்சனை அபிஷேகங்கள் செய்து, பக்தர்களுக்கு அன்னதானமும் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

================================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpgதிரு.நாகபூஷணம் தம்பதியினருக்கும், மஞ்சு-கிருஷ்ணமூர்த்தி தம்பதியினருக்கும் விரைவில் புத்திர பாக்கியம் கிட்டவும், திரு.ராஜாவின் நண்பர் ஜகன்னாத் ராவ் அவர்களின் திருமணம் இனிதே நடைபெற்று சந்தோஷமான ஒரு இல்வாழ்க்கை அமையவும் அவரின் மனையை வரக்கூடிய அந்த ஏழைப்பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை தீர்ந்து அவர் நிம்மதியாக் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடவும் குருவருளையும் திருவருளையும் வேண்டி நிற்போம். அதே போன்று ஒரு பாவமும் அறியாத விலங்குகள் இது போன்று விபத்துக்களில் சிக்கி மரணமடையக்கூடாது என்றும் இறைவனை வேண்டுவோம்.

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை சொல்லை பிரார்த்தித்துவிட்டு கூடவேஇங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

பிரார்த்தனை நாள் : நவம்பர் 17, 2013 ஞாயிறு  நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131
=======================================================

சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : சப்தரிஷி ஜோதிட கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நிறுவனரான திரு.எஸ்.நாராயணன் அவர்கள்!

11 thoughts on “பலிக்காத பரிகாரம் – இறைவனிடம் நீதி கேட்டு வென்ற தம்பதியினர்! Rightmantra Prayer Club

  1. சுந்தர்ஜி,

    இந்த வார பிரார்த்தனை அன்று அனைவரும் தீபம் ஏற்றி வழிபடும் தினமான கார்த்திகை அன்று வருகின்றது. முருகன் அருளால் எந்த ஒரு குறையும் இன்றி அவரவர் பிரார்த்தனைகள் ஈடேறி வாழ்வில் அவர்களுக்கு நல்லதொரு ஓளி ஏற்றுவார்.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த பதிகம் கிடைக்க பெற்றது வர பிரசாதம் ஆகும்.

    தானத்தில் சிறந்தது அன்ன தானம் . இப்படி வழி வழியாக அன்ன தானம் செய்யும் குடும்பத்தில் ஒருவர் இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்று இருப்பது நாம் செய்த புண்ணியம் அன்றி வேறு ஒன்றும் இல்லை.

    நன்றி

  2. டியர் sundariji

    இந்த பதிவின் மூலம் இதுவரை தெரியாத கதையை தெரிந்து கொண்டோம்.

    எனது ஆபீஸ் நண்பர் nagabhusanam அவர்களின் கோரிக்கை prathana கிளப்பில் பதிவு செய்தது பற்றி மிக்க மகிழ்ச்சி. அவர் தற்சமயம் ஷிர்டி சென்றிருக்கிறார். அவருக்காகவும் மற்றும் மஞ்சு-கிருஷ்ணமூர்த்தி தம்பதியினருக்கும் விரைவில் புத்திர பாக்கியம் கிட்டவும், திரு.ராஜாவின் நண்பர் ஜகன்னாத் ராவ் அவர்களின் திருமணம் இனிதே நடைபெற்று சந்தோஷமான ஒரு இல்வாழ்க்கை அமையவும் அவரின் மனையை வரக்கூடிய அந்த ஏழைப்பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை தீர்ந்து அவர் நிம்மதியாக் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடவும் குருவருளையும் திருவருளையும் வேண்டுகிறேன். அதே போன்று ஒரு பாவமும் அறியாத விலங்குகள் இது போன்று விபத்துக்களில் சிக்கி மரணமடையக்கூடாது என்றும் இறைவனை வேண்டுகிறேன்.

    திரு.ரகு ஐயர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

    நன்றி
    உமா

  3. சுந்தர்ஜி
    இந்த வாரம் பிரார்த்தனைக்கு வந்துள்ளவர்களின் பிரச்சனைக்கு தகுந்த பதிகத்தை எடுத்து தந்ததற்கு உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். குன்றத்தூர் முருகனும் அதற்கு பொருத்தமே. குருவருளாலும் முருகருளாலும் அனைவரும் நலம் பெற திரு ரகு அய்யருடன் நாமும் பிரார்த்திப்பொம்.

    திரு ரகு அய்யர் அவர்களின் அன்னதான பணி உன்னதமானது. பல பெரிய கோவில்களில் அர்ச்சகர்கள் அவர்களின் வருமானத்தை பெரியதாக எதிர்பார்க்கும் காலத்தில் இவரது பணி ஆச்சர்யமாக உள்ளது . நன்றி

  4. பிரார்த்தனை கோரிக்கைக்கு ஏற்ப பதிவினை தந்துள்ளீர்கள் …அனைவருக்கும் பயன் படுகிறதோ இலையோ நிச்சயம் பிரார்த்தனை கோரிய நண்பர்களுக்கு இது பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை …நன்றி ..

    இந்த வார பிரார்த்தனைக்காக விண்ணப்பித்த அனைவருக்காகவும் எல்லாம் வல்ல அந்த பரம்பொருளை பிரார்த்திப்போம்..

  5. திரு ரகு அய்யர்-ஏழு தலைமுறை இறைப்பணி வணங்குதற்கு உரியது …,
    மஞ்சு – கிருஷ்ணமூர்த்தி தம்பதியினர் ஒரு முறை கரூர் அருகே பவித்திரத்தில் உள்ள கரூர் சித்தர் பாலசுப்ரமணிய சுவாமிகளின் ஜீவா சமாதி சென்று வந்தால் நலம் என எண்ணுகிறேன்… இணைய தள முகவரி http://karursiddharbalusamy.org/

    1. மிக்க நன்றி சார்.

      மஞ்சு – கிருஷ்ணமூர்த்தி தம்பதியினர் மேற்கூறியவாறு கரூர் சித்தர் பாலசுப்ரமணிய சுவாமிகளின் ஜீவ சமாதிக்கு சென்று வரவும். நான் கரூர் சென்ற போது இங்கு சென்று வந்துள்ளேன். அது பற்றிய பதிவு ஒன்றை அளிக்க இருக்கிறேன். அதில் விரிவாக கூறுகிறேன்.

      நன்றி…

      – சுந்தர்

  6. இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர், ஏழு தலைமுறைகளாக குன்றத்தூர் முருகனுக்கு பூஜை செய்து வரும் பாக்கியம் பெற்ற திரு.ரகு ஐயர்அவர்களை வணங்கி வரவேற்கிறேன் .

    ‘திரு.நாகபூஷணம் தம்பதியினருக்கும், மஞ்சு-கிருஷ்ணமூர்த்தி தம்பதியினருக்கும் விரைவில் புத்திர பாக்கியம் கிட்டவும், திரு.ராஜாவின் நண்பர் ஜகன்னாத் ராவ் அவர்களின் திருமணம் இனிதே நடைபெற்று சந்தோஷமான ஒரு இல்வாழ்க்கை அமையவும் அவரின் மனையை வரக்கூடிய அந்த ஏழைப்பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை தீர்ந்து அவர் நிம்மதியாக் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடவும் குருவருளையும் திருவருளையும் வேண்டி நிற்போம். அதே போன்று ஒரு பாவமும் அறியாத விலங்குகள் இது போன்று விபத்துக்களில் சிக்கி மரணமடையக்கூடாது என்றும் இறைவனை வேண்டுவோம்.”

    குன்றத்தூர் முருகன் இடத்தில் சமர்ப்பிக்கும் வேண்டுதல்கள் அனைத்தும் ,எல்லோருக்கும் நல்லதொரு மகிழ்ச்சியை தரும் என்றும் ,நம் எல்லோருக்கும் புத்துணர்வு கிடைக்கும் என்றும் உறுதியாக இருக்கிறேன் .
    -மனோகர் .

  7. கல்யாணத்துக்கு அப்புறம் ஜோடியாக தொடர்ந்து 3 முறை திருஅண்ணாமலை கிரிவலம் போயிட்டு வர சொலுங்க

  8. குழந்தை வரம் பெற வேண்டுமா? அல்லது சந்ததி விருத்தியாக வேண்டுமா?
    படியுங்கள் ….

    பதினே ழொன்றும்விழை செய்ய பாத மோலிடநன்
    மதிபோன் மமைமுக மண்ட லம்ப குக்கநகுங்
    கதியே வேற்குழவீ நின்னைக் காத லாற்றழுவ
    நிதியே வாராயோ கைக ணீளு கின்றனவே.

    சீவி முடித்தசிகை செம்பொற் சுட்டி நன்குழைகள்
    மேவு முறுப்புநிழல் செய்ய வாடும் வேற்குழவீ
    ஏவல் கொடுத்தருள வெண்ணி யென்முன் வாராயோ
    கூவை வெறுத்தகண்க ளிச்சை கொள்ளு கின்றனவே.

    பாவே றுஞ்சவையர் மெச்சிப் பாடும் வேற்குழவீ
    சேவே றுன்பவளத் தெய்வ வாயை யேதிறந்து
    தூவே றின்கரைக ளிங்குச் சொல்ல வாராயோ
    கோவே யென்செவிக ளிச்சை கொள்ளு கின்றனவே.

    பொன்னார் கண்டசர நன்கு பூண்ட தங்கவொளிக்
    கொன்னார் வேற்குழவீ நல்ல கொவ்வை நின்னிதழை
    என்னார் வந்தீர விங்கு நல்க வாராயோ
    உன்னா ருண்ணிலையும் வாயு மூறு கின்றனவே.

    எண்ணே றும்பலயி லென்ற வேல்பி டித்தசையுங்
    கண்ணே செங்குழுவீ யென்றன் கண்க ணாடழகே
    தண்ணே றும்வதன முத்தந் தாரா யோயிறிது
    நண்ணா வென்னுளந்தா னின்னை நாடு கின்றதரோ

    முத்தே மாமணியே முல்லை வெட்சி நன்கடம்பு
    வைத்தா ரம்புனைந்தென் முன்னர் வாரா யோவுழலுஞ்
    சித்தார் வேற்குழவீ யுச்சி செவ்வன் மோந்துகொள்ள
    வித்தே யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ.

    ஐயார் நல்லரையிற் பொன்வ டங்க ளாடவுழல்
    வையார் வேற்குழவீ யிங்கு வாரா யோகால்கள்
    மையார் கண்மலர்க ளின்பு மல்க மோந்துகொள்ள
    மெய்யா யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ

    பொன்போன் மேனியிலே நல்ல பூம ணங்கமழும்
    இன்பே வேற்குழவீ யிங்கு வாரா யோவிரியா
    அன்பார் புன்முறுவல் செய்யு மார்விற் பல்லழகென்
    துன்பீ ரம்பெனவே னெஞ்சந் துள்ளு கின்றதரோ.

    கள்ளார் செங்கரும்பே கண்டு தேனே யின்னமுதுண்
    கிள்ளாய் வேற்குழவீ யன்பர் கேளே மாதுமையாள்
    பிள்ளாய் கண்ணியொன்று நல்ல பெட்பி னான்றருவேன்
    தள்ளா தேகொளற்கென் முன்னர் வாரா யோதகையே.

    மாண்பார் சந்தமுனி யின்ப வாழ்வே நின்னெழிலைக்
    காண்பார் வேறழகு மிங்குக் காண்பார் கொல்லோநான்
    ஊண்பா டஞ்சியுனை நன்கு காண்பா னின்றுவந்தேன்
    வீண்போ காதபடி யிங்ஙன் வாராய் வேற்குழவீ.

    சுவாமிகள் எழுதிய குறிப்பு:- இத்திருப்பத்து, காலை மாலை பூசிக்கப்பட்டுப் பத்திபிறங்கப் பாடப்படுமாயிற் புத்திரதோடம் நிவர்த்தியாம். சந்ததி விருத்தியாம்.
    ,….ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்

  9. Dear sir,for the past 20years iam working hard.3 years back i had started a business with 3 partners.i have invested all the asserts.but there is no result.i have to pay nearly 8 lakhs to my partys & relatives.i am in very critical possition.please make parayer for me &guide me.i have two female babys.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *