அந்த பாடசாலைக்கு சந்நியாசியின் நண்பர்களில் ஒருவரான அந்த ஊரைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் வந்திருந்தார். அவர் பழமையான நூல்களையும் ஓலைச்சுவடிகளையும் சேகரிக்கும் வழக்கம் உள்ளவர்.
பாடசாலையில் பழங்கால, அரிய தகவல்களும் ஆரூடங்களும் அடங்கிய ஒரு சுவடியை காண நேர்ந்த போது பேராசையினால் உந்தப்பட்டு அதை களவாடி சென்றுவிடுகிறார். விலையே மதிப்பிட முடியாத ஒரு மிக அரிய சுவடி அது.
சுவடி களவாடப்பட்டது அனைவருக்கும் அன்றே தெரிந்துவிடுகிறது. பாடசாலையே பரபரப்பாகிவிடுகிறது. மேற்படி நபர் வந்து சென்ற பிறகு தான் அது காணமல் போனது. எனவே அவர் தான் அதை களவாடி சென்றிருக்கவேண்டும் என்று மாணவர்கள் தங்கள் குருவிடம் கூறுகின்றனர். ஆனால் குருவோ “இதை நான் அவரிடம் போய் கேட்க முடியாது. நீங்கள் இனி எச்சரிக்கையாக இருங்கள். இதை விட்டுவிடுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவிடுகிறார்.
அந்த சுவடியை களவாடி சென்ற சந்நியாசியின் நண்பர் பக்கத்து ஊரில் அதை விற்க முயன்ற போது, அதன் மதிப்பை யூகித்த அந்த ஊர் பெரிய மனிதர் ஒருவர் அதை வாங்கிட விருப்பம் தெரிவித்தார். ஆனால் ஒரு நிபந்தனை விதித்தார்.
“இந்த சுவடியை ஒரு நாள் என்னிடம் கொடுங்கள். இதன் மதிப்பை ஆராய்கிறேன். நாளை நீங்கள் வந்தால் இதற்குரிய விலையை தருகிறேன். விலை உங்களுக்கு ஏற்புடையதல்ல என்றால் நீங்கள் திரும்ப எடுத்துச் செல்லலாம்” என்றார்.
ஊர் பெரிய மனிதர் என்பதால் அவரிடமே கொடுத்துவிட்டு, “நான் நாளை வருகிறேன்” என்று கூறிவிட்டு செல்கிறார்.
அந்த சுவடியை அந்த ஊர் பெரிய மனிதர் மதிப்பிட முயன்றபோது, “இதன் மதிப்பு எங்களுக்கு தெரியாது. பக்கத்து ஊரில் பாடசாலை நடத்திக்கொண்டிருக்கிறாரே சந்நியாசி ஒருவர். அவருக்கு தான் தெரியும்” என்றார்கள்.
உடனே எந்த இடத்தில் இருந்து அது களவாடப்பட்டதோ அதே இடத்தில் கொண்டு போய், அதே சந்நியாசியிடம் காண்பித்து, “இதன் மதிப்பை உங்களால் கூற முடியுமா?” என்று கேட்க்கிறார்.
“இது எப்படி உங்களுக்கு கிடைத்தது?” சந்நியாசி வியப்புடன் கேட்கிறார்.
“உங்கள் ஊர் வியாபாரி ஒருவர் என்னிடம் இதை விற்க வந்தார். எனக்கோ இதன் சரியான மதிப்பு தெரியாது. இதன் மதிப்பு தெரிந்து சரியாக அந்த பணத்தை மட்டுமே கொடுத்து வாங்க விரும்புகிறேன்.”
அது தங்கள் பாடசாலையில் திருடப்பட்டது என்று இவர் திருடிய நபரை காட்டிக்கொடுக்க விரும்பவில்லை.
“அது நிச்சயம் 10 தங்கக் காசுகள் ஏன் அதற்க்கு மேலும் கூட பெறும்” என்றார்.
அடுத்த நாள், நூலை விற்றவர் வந்தபோது, தான் 10 தங்கக் காசுகள் கொடுத்து வாங்க தயாராக இருப்பதாக சொல்கிறார்.
அவருக்கு ஒரே சந்தோஷம்.
“யாரிடம் இதை காட்டினீர்கள்?” ஆவலுடன் கேட்கிறார்.
“உங்கள் ஊரில் உள்ள பாடசாலையில் உள்ள குருவிடம் தான்.”
இவருக்கு தூக்கி வாரிப்போடுகிறது. “அவர்…அவர்…. என்ன சொன்னார்?”
“இந்த சுவடி 10 தங்கக்காசுகள் தாரளமாக பெறும்” என்று.
“வேற ஏதாவது சொன்னாரா?”
“இல்லை…!”
“என்னை மன்னிச்சிடுங்க. இந்த நூலை விற்கும் முடிவை நான் மாற்றிக்கொண்டேன். இதை நான் விற்க விரும்பவில்லை”
“ரெண்டு மடங்கு விலை தர்றேன்… கொடுங்க…”
“இல்லை முடியாது…” என்று கூறி அந்த சுவடியை வாங்கிக்கொண்டு நேரே பாடசாலை செல்கிறார்.
அதை அந்த சந்நியாசியிடம் அளித்து, “என்னை மன்னித்துவிடுங்கள்” என்றார். கண்களில் கண்ணீர் துளிர்த்தது.
“இல்லை நீயே அதை வைத்துக்கொள். உன் நேர்மைக்கு அதை பரிசாக தரவிரும்புகிறேன்” என்றார் குரு.
“வேண்டாம்… இது இங்கே இருந்தால் பலருக்கு உதவியாக இருக்கும். இனி நான் உங்களுடன் தங்கி நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ள விரும்புகிறேன். மேலும் என்னிடம் உள்ள இது போன்ற அரிய சுவடிகளையும் உங்களுக்கு கொடுத்துவிடுகிறேன்!” என்று கூறி சன்னியாசியின் கல்வி பணிகளில் உதவி வரலானார்.
ஒருவேளை மாணவர்கள் சொன்னதைப் போல, இவரிடம் சன்னியாசி வந்து ஓலைச் சுவடி பற்றி கேட்டிருந்தால் “நான் எடுக்கவில்லை” என்று மறுத்திருப்பார். ஓலைச் சுவடியும் கிடைத்திருக்காது.
பெருந்தன்மை ஒரு சுவற்றில் அடித்த பந்து போல. அதை உங்கள் பகைவர்களிடம் கூட காட்டுங்கள். அது நிச்சயம் திரும்பி வரும். உங்களுக்கு தேவை பொறுமை மட்டுமே!
சந்நியாசியின் இடத்தில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? என்ன நடந்திருக்கும் ? சற்று யோசித்து பாருங்கள். பல விஷயங்கள் புரியும்!
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு. (குறள் 874)
=============================================================
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….
http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
=============================================================
[END]
வணக்கம் சுந்தர் சார்
மிகவும் அருமையான பதிவு
நன்றி
சுந்தர் சார்,
பொறுமையாக இருப்பது சிறந்தது தான். ஆனால் இந்த அளவிற்கு மிக அறிய பொருளை இழந்தும் பொருமை காத்ததினால் தான் அவர் குருவாக இருக்கிறார்.
இந்த பதிவு வழக்கத்தை விட நல்ல பதிவு.
நன்றியுடன் அருண்.
டியர் சுந்தர்,
குட் மோர்னிங். அருமையான பதிவ்வு.
நன்றி,
நாராயணன்.
அருமை…
திரு அருண் சொன்னதைப்போல் அவரது பெருந்தன்மை அவரை சிறந்த குருவாகக் காட்டுகிறது. இதைப் போன்ற கதைகளை மாணவர்களுக்கு போதனை நூலாக வைக்க வேண்டும். அப்பொழுதுதான் மாணவர்கள் நல்ல சிந்தனையுடன் வளர்வார்கள்.
எனக்கு ஒரு சிந்தனை தோன்றுகிறது. இந்த வருடம் கோடை விடுமுறையில் rightmantra.com மூலம் ஒரு நல்ல பணியினை ஆரம்பிக்கலாம். ஒரு குறிப்பிட்ட இடத்தில் குழந்தைகளுக்கு நல்வழிப் பாடங்கள் – MORAL classes – நடத்தலாம். புராணக் கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள், நல்வழிப்படுத்தும் கதைகள், விளையாட்டுகள் ஆகியவற்றை சொல்லிக் கொடுக்கலாம். வருங்காலக் குடிமக்களாக உறுவாகும் குழந்தைகளிடம் நல்ல எண்ணம், நல்ல செயல், நல்ல பேச்சு, நல்ல நடத்தை, பெருந்தன்மை, பொறுமை, கண்ணியம் போன்ற குணங்களை வளர்க்கலாம்.
அன்புடன்
நாராயணன்
மணப்பாக்கம்
நிச்சயம் சார். இது பற்றி நான் அடிக்கடி யோசிப்பதுண்டு. செயல்படுத்தும் நேரம் வந்துவிட்டது என்றே கருதுகிறேன்.
நன்றி.
– சுந்தர்
DEAR SIR,
GOOD ARTICLE – BUT NOWADAYS NO ONE IS HAVING PATIENCE
WARM REGARDS
SUMA
திங்கள் கிழமை சிறப்பு பதிவு, உண்மையிலே சிறப்பான பதிவு
தேவை பொறுமை.
மிக்க நன்றி.
ஜெ.சம்பத் குமார் .
“இந்த உலகத்தில் எத்தனையோ நல்லது, கெட்டது நடந்து கொண்டேயிருக்கின்றன. அதையெல்லாம் இந்தப் பூமி பொறுமையாகப் பார்த்துக் கொண்டும், தாங்கிக் கொண்டும் நம்மை தாயாகக் காத்து வருகிறது”.
பொறுமையும், பெருந்தன்மையும் , நமக்குப் பலமான மன வலிமையையும், பல நன்மைகளையும் பெற்றுத் தருகிறது.
ஒருவன் மெய்யறிவால் பெறுகின்ற பொறுமை மலைபோல் உறுதியாய், பூமியைப்போல் எதையும் தாங்கும் சக்தியுடன், கடல்போல் பரந்த உள்ளத்துடன் எத்தகைய துன்பம் வந்தாலும், கொடுமை செய்தாலும் கலங்காது ஏற்றுக்கொண்டு பிறருக்கு கனவிலும் துன்பம் தராது மெல்லிய பூங்காற்றாய் இன்பமே தரும்.
காந்திஜி ஆங்கிலேயரிடம் பட்ட அவமானங்கள் எண்ணிலடங்கா. காந்திஜி பொறுமை எனும் புகைவண்டியில் ஏறி சக்கரம், அஹிம்சை என்ற இரு தண்டவாளங்களின் மீது கடவுள் நம்பிக்கை என்ற எஞ்ஜினை ஓட்டினார். டாக்டர் அம்பேத்கர் பொறுமை என்ற அணிகலன்களை அணிந்திருந்ததினாலேயே சட்டமேதையாகி, நம் ஜனநாயக நாட்டிற்கேற்ற சட்டத்திட்டங்களை உருவாக்கித் தந்தார்.
மனிதன் சலனம், சபலம், கோபம், அகங்காரம், ஆணவம் இவைகளைத் தன்னிடமிருந் து எப்போது விடுபடச் செய்கிறானோ அவனிடம் பொறுமை குடிகொள்கிறது. அவன் போக்கில் பணிவு இருக்கும், கண்களில் கனிவு இருக்கும், செய்யும் தொழிலில் நேர்மையும் உண்மையும் அன்பும் கலந்திருக்கும். அவனே மனிதருள் மாணிக்கம்.
பொறுமையை இழந்தவன் எத்தனை நற்பண்புகளை பெற்றிருந்தாலும் கோபம் கொள்ளும் இடத்தில அவன் பெருமையை அவனே கெடுத்து கொள்கிறான். கோபத்தில் என்ன பேசுவது என்று தெரியாமல் தேவையற்ற வார்த்தைகளை பேசி காலம் முழுதும் அவனே வேதனை அடைகிறான். பொறுமையுடன் இருப்பதே நமக்கும் நம்மை சுற்றி உள்ளவர்க்கும் சிறந்ததாகும்.
பொறுமையும் பெருந்தன்மையும் விளக்கியவிதம் அருமை சுந்தர் ஜி .
-மனோகர்
சுந்தர்ஜி
உண்மையில் ஒரு நல்ல பதிவு. ஒவ்வரு திங்கள் கிழமை சிறப்பு பதிவை எதிர்பார்த்து நாங்கள் காத்திக்ருகிறோம்
சுந்தர்ஜி
monday morning ஸ்பெஷல் சூப்பர்.
குருவாக இருப்பவர் எதை செய்தாலும் காரண காரியம் இல்லாமல் செய்வதில்லை. மாணவர்கள் சொன்னதை கேட்டு உடனே கேட்டு இருந்தால் அவர் எடுக்க வில்லை என்றுதான் கூறி இருப்பார்.அவர் திருந்துவதற்கு ஒரு சந்தர்பத்தை ஏற்படுத்தி கொடுத்து விட்டார் அந்த குரு.