தீபாவளியை முன்னிட்டு நாம் செய்யவேண்டிய நலப்பணிகளை ஏற்கனவே இறுதி செய்து, நம்மிடம் சேர்ந்த தொகையை அதற்கென ஒதுக்கிவிட்டபடியால் அவரிடம் என்ன பதில் சொல்வது என்று ஒரு கணம் புரியவில்லை. தளத்தில் செய்தி வெளியிட்டு தேவையான நிதி திரட்ட அவகாசம் இல்லை. ஏற்கனவே நங்கநல்லூர் ‘நிலாச்சாரல்’ மாணவிகளுக்கு ஆடைகள் மற்றும் ஃபேன்சி ஜூவல்லரி செட்டுகள் தருவது உள்ளிட்ட நமது தீபாவளி நலப்பணிகளுக்கு நம் வாசகர்கள் சிலர் அவர்களால் இயன்ற தொகையை அனுப்பிவிட்டனர். இந்நிலையில் மேற்கொண்டு யாரிடம் போய் கேட்பது என்ற தயக்கம் எனக்கு.
இருப்பினும் நம்பிக்கையுடன் நம்மை அணுகியவர்களிடம் எம்மால் எதிர்மறையான பதிலை கூற முடியவில்லை.
“கொஞ்சம் முன்னாடியே சொல்லியிருந்தீங்கன்னா எங்க வாசகர்களிடம் பேசி நிறைய குழந்தைகளுக்கு டிரஸ் அரேஞ் செஞ்சிருப்போமே… பரவாயில்லை… எங்களால் முடிஞ்சதை செய்றோம் மேடம் கவலைப் படாதீங்க! நாளைக்கு உங்களை காண்டாக்ட் பண்றோம்!” என்று அவர்களிடம் வாக்குறுதி அளித்தோம்.
ஆனது ஆகட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று அடுத்த நாள் அவர்களை தொடர்புகொண்டு 5 குழந்தைகளுக்கு நம் தளம் சார்பாக ஆடைகள் எடுத்து தர விரும்புவதாக சொன்னோம்.
நம்முடைய பட்ஜெட்டை சொல்லி… “நீங்களே அந்த ஐந்து குழந்தைகளையும் செலக்ட் செஞ்சி – அவங்க சூப்பர்வைசருடன் – அவங்க வந்து போறதுக்கு சௌகரியமாய் இருக்கும் – கடைக்கு அனுப்புங்க. நான் வந்து கவுண்டர்ல CASH PAY பண்ணிடுறேன்!” என்றேன்.
நம்பினால் நம்புங்கள்… அடுத்தநாள் காலை நம் வாசகர் ஒருவர், நமக்கு தேவைப்பட்ட அந்த தொகையை நமது தீபாவளி நலப்பணிகளுகாக ரைட்மந்த்ரா வங்கிக் கணக்கில் செலுத்தியிருப்பதாக கூறி மின்னஞ்சல் அனுப்பினார். நல்லதை நினைத்தால் போதும்… இறைவன் அதை நிறைவேற்றித் தர தயாராக இருக்கிறான் என்பதை மற்றுமொருமுறை அனுபவப்பூர்வமாக உணர்ந்துகொண்டேன்.
அன்று மாலை போரூர் மார்க்கெட் அருகே உள்ள ரெடிமேட் கடை ஒன்றுக்கு குழந்தைகளை ஒரு பொறுப்பாளருடன் பிரேமவாசத்திலிருந்து அனுப்பிவைத்தார்கள். குழந்தைகள் கிளம்பிவிட்ட தகவலை என்னை தொடர்பு கொண்டு சொன்னார்கள். நான் அப்போது தான் அலுவலகத்தில் இருந்து கிளம்பி வந்துகொண்டிருந்தேன். “நான் வந்துகிட்டிருக்கேன். எப்படியும் வர்றதுக்கு இன்னும் அரை மணிநேரமாகும். குழந்தைகள் அதுவரைக்கும் டிரெஸ்ஸை செலக்ட் பண்ணட்டும். டோட்டல் தொகை கொஞ்சம் முன்னே பின்னே இருந்தா அதை பற்றி கவலைப்படவேண்டாம்னு சொல்லுங்க. நான் வந்து பார்த்துக்குறேன்” என்று கூறினேன்.
சொன்னபடி கடைக்கு சென்றபோது, ஆடைகள் தேர்வு செய்யப்பட்டு தயாராக இருந்தது. பிரேமவாசத்தின் சீருடைகள் மற்றும் ஆடைகள் பொறுப்பாளர் அந்த குழந்தைகளுடன் துணைக்கு வந்திருந்தார்.
“டிரெஸ்ஸை நான் தான் சார் செலக்ட் பண்ணினேன். கலர் மட்டும் குழந்தைங்க சாய்ஸ்” என்றார்.
இந்த குழந்தைகளுக்கு என்ன மாதிரி துணி வாங்கவேண்டும் என்று எப்படி தெரியும்…. விஷயம் தெரிந்தவர்கள் உடனிருந்து எடுத்து தருவது தான் சரி என்று பட்டது. “கரெக்ட் மேடம். நீங்க செலக்ட் பண்ணினது தான் சரி.”
ஐந்து குழந்தைகளுக்கு எடுத்தது போக பட்ஜெட்டில் கொஞ்சம் மீதி பணம் இருந்தது. இன்னும் ஒரு குழந்தைக்கு எடுத்துக்கொள்ளச் சொல்லி, மொத்தம் ஆறு குழந்தைகளுக்கு தீபாவளி டிரஸ் எடுக்கப்பட்டது.
டிரஸ் எடுத்தவுடனே குழந்தைகள் முகத்தில் கொள்ளை சந்தோஷம். நீங்கள் பார்த்து சந்தோஷப்பட இருக்கட்டுமே என்று அவர்கள் சற்று வெட்கத்துடன் சந்தோஷப்படுவதை படமெடுத்துக்கொண்டேன்.
தீபாவளியன்று மாலை பிரேமவாசத்திற்கு போன் செய்து வாழ்த்துக்கள் கூறினேன். நமக்கும் நம் வாசகர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றியும் கூறியவர்கள், குழந்தைகள் நாம் எடுத்து தந்த புத்தாடைகளை அணிந்து பட்டாசுகள் வெடித்துக்கொண்டிருப்பதாக சொன்னார்கள். புகைப்படங்களை அனுப்புவதாகவும் சொன்னார்கள்.
குழந்தைகள் நமது புத்தாடையுடன் எப்படியிருப்பார்கள் என்பதை தெரிந்துகொள்ள ஆவலாக காத்திருந்தேன். நேற்று இரவு புகைப்படங்கள் மின்னஞ்சல் வந்தது. படங்களை பார்த்ததும், அடடா இன்னும் ஒரு ஐந்து குழந்தைகளுக்கு சேர்த்து டிரெஸ் எடுத்து தந்திருக்கலாம் போல என்று தோன்றியது.
இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை நீங்களே பார்த்துவிட்டு சொல்லுங்கள்… இன்னும் ஒரு ஐந்து குழந்தைகள் இதே போன்று பட்டு பாவாடையுடன் சேர்ந்து நின்றால் எப்படி இருக்கும்?
ரைட்மந்த்ராவின் தீபாவளி அறப்பணிகளுக்கு உதவிய அனைவருக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம். இந்த குழந்தைகளின் புன்னகைக்கு காரணம் அவர்களே!
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே!
(ரைட்மந்த்ராவின் இதர தீபாவளி அறப்பணிகள் மற்றும் கொண்டாட்டங்கள் குறித்த செய்திகளும் புகைப்படங்களும் அடுத்தடுத்து வரும்!)
=================================================
From our archives…Also check :
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று சொல்வார்கள் ஆனால் இந்த குழந்தைகளின் சந்தோஷ சிரிப்பில் ஆயிரம் இறைவனை காணலாம்
கேட்டவுடன் செய்ய துடித்த உங்கள் மனதுக்கு நாங்கள் என்றென்றும் கடமை பட்டுள்ளோம்.
குழந்தைகள் முகத்தில் தெரியும் சந்தோசம் கடவுளின் சிரிப்பிற்கு சமமானது.
எல்லா குடும்பத்திலும் தீபாவளி மற்றும் பண்டிகை வரும், ஆனால் உங்கள் தீபாவளி தான் உண்மையான தீபாவளி.
நீங்கள் செய்யும் எல்லா காரியங்களும் உங்களுக்கு புகழ் சேர்க்கும்.
ஆண்டவன் என்றென்றும் உங்களுக்கு துணை நிற்க வேண்டுகிறோம்.
சுந்தர்ஜி
உங்களின் சேவை நாட்டிக்கு தேவை. கருணை உள்ளமே கடவுள் இல்லம்.உங்களை போல்
எல்லோரும் தங்களால் முடிந்த உதவி செய்ய முன் வரவேண்டும் .தங்களின் சேவை தொடர
வாழ்த்துகள்.
நெகிழ்ச்சியான பதிவு
குழந்தைகளின் முகத்தில் சிரிப்பையும் சந்தோசத்தையும் காணும்போது தான் மனதுக்குள் எத்துனை மகிழ்ச்சி
மனதில் எத்துனை துன்பங்கள் இருந்தபோதும் நொடிபொழுதில் மறக்க வைக்கும் வித்தை அந்த பிஞ்சு உள்ளங்களில் மிளிரும் மகிழ்ச்சியிலும் புன்னகையிலும் உள்ளது
அந்த பேரானந்தத்தை அனுபவித்த மேலும் அதற்க்கு காரணமாக இருந்த அத்துணை நல் உள்ளங்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் மற்றும் நன்றிகள்
ஒரு வருடத்தில் எத்தனையோ சுபதினங்கள் வருகிறது – அவற்றில் ஏதேனும் ஒரு நாளில் ஒவ்வொருவரும் இது போன்ற நற்காரியங்களை செய்வாரானால் அந்த குழந்தைகள் முகத்தில் இந்து பூக்கும் அந்த புன்னகை பூவானது என்றென்றும் வாடாமல் மணம் வீசும்
வாழ்க வளமுடன் !!!
சுந்தர்ஜி,
தாங்கள் செய்யும் சேவை மகத்தானது.ஒவ்வொரு குழந்தைகளின் முகத்திலும் தெரியும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. தங்களது சேவை மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.
நல்ல விஷயம் ஐயா!! தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். அந்த பணம் கொடுத்து உதவியவரின் (வர்களின்) பெயர்களையும் வெளியிடிருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். வாழ்த்துக்கள்.
இது போன்ற பணிகளுக்கு தோள் கொடுக்கும் பலர் தங்கள் பெயர்களை வெளியிடுவதை விரும்புவதில்லை. ‘நம் தளம் சார்பாக செய்யுங்கள். அது போதும் எங்கள் பெயர்கள் வேண்டாம்’ என்று கேட்டுக் கொள்ளும்போது என்ன செய்ய?
– சுந்தர்
Rightmantra going places!!
There s an old saying –“Judge people by their work”—if dis is the criteria then I am sure your work speaks a lot about U!!
As usual astonished by your deeds!!
KUDOS to Sundar anna..
And..as u said our noble intention is enough—rest all the ALMIGHTY wil take care!!
What a way to celebrate diwali!!
Thanks to all the RIGHTMANTRA members who made this possible!!
Regards
R.HariHaraSudan
“HE WHO KNOWS THE SELF KNOWS ALL”
சுந்தர்ஜி
கர்ணன் தான் செய்யும் தர்மம் தன வல கைக்கு கூட தெரிய வேண்டாம் என்று இட கை மூலம் தர்மம் செய்த நாடு நம் பாரத நாடு.
விளம்பரம் தேவை இல்லை.சேவை போதும்.
இந்த குழந்தைகளின் சிரிப்புதான் உண்மையான மத்தாப்பு …
Super sir. I really felt that I couldn’t do much for ur service. I wish God shall all keep us wealthy and healthy to service these god’s children. Next year we shall do better. Hats off to ur service.