அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் போன்ற மக்கள் லட்சக்கணக்கில் வந்து செல்லும் வருமானம் மிகுந்த கோவிலின் கோ-சாலை பசுக்கள் இறந்தது நிச்சயம் உணவுப் பற்றாக்குறையினால் இருக்க முடியாது. பராமரிப்பு இல்லாமையால் தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெளிவாக விளங்கும்.
பசுக்களின் மகத்துவத்தை அறியாதவர்களையும், மாலையானால் டாஸ்மாக் பாரில் தஞ்சம் புகுபவர்களையும் கோ-சாலையில் பணியமர்த்தியதாலும் தான் இந்த நிலை பசுக்களுக்கு ஏற்பட்டது என்பதே பலர் கருத்து.
நாட்டில் நிலவும் பல்வேறு அநீதிகளுக்கும் விபத்துகளுக்கும் குற்றங்களுக்கும் பசுக்கள் முறையாக போஷிக்கப்படாதே காரணமாக இருக்கமுடியும். எனவே மேற்படி தினமலர் நாளிதழ் செய்தியை படித்ததும் நமக்கு ஏற்பட்ட துயரத்திற்கு அளவேயில்லை. தீபாவளி கழிந்து நண்பர்களுடன் கலந்து பேசி இது தொடர்பான இறுதி முடிவை மேற்கொள்வதாக இருந்தோம்.
இந்நிலையில் சமீபத்திய ஜூனியர் விகடனில் இந்த கோசாலை தொடர்பான குளறுபடிகள் பற்றி தமிழக முதல்வரின் கவனத்துக்கு சென்றதாகவும், அவர் பதறிப்போய் உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டும் மேலும் இது தொடர்பாக 16 கட்டளைகள் பிறப்பித்துள்ளதாகவும் செய்தி வெளியானது.
இது தொடர்பாக நமக்கு மின்னஞ்சல் அனுப்பிய நண்பர்களுக்கு அந்த கட்டுரையை வெளியிட்டால் ஆறுதலாக இருக்கும் என்பதால் இத்துடன் ஜூனியர் விகடன் பக்கங்களை ஸ்கேன் செய்து தந்திருக்கிறோம்.
சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றி!
======================================================
போதிய உணவின்றி இறந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் பசுக்கள்!
திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான கோசாலையில், உணவு வழங்காததால் பசுக்களும், கன்றுகளும் இறந்தது, பக்தர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆண்டுதோறும் நடக்கும், இப்பிரச்னைக்கு முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பக்தர்கள் கொதிப்பு:சமீபத்தில், திருவண்ணாமலைஅக்னீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான கோசாலையில், உண்ண உணவின்றி, பசு, கன்றுகள் இறந்தது, நாடு முழுக்க உள்ள பக்தர்களை கொதிப்படைச் செய்துள்ளது.
இது குறித்து, இந்து முன்னணிமாவட்ட அமைப்பாளர், சங்கர் கூறியதாவது: கோசாலையில், 130க்கும் மேற்பட்ட பசுக்கள் இருந்தன. இவை பல, மாதங்களாக ஒருவேளை உணவுக்கு கூட வழியின்றி தவித்து வருவதாக, எங்களுக்கு தகவல் வந்தது. நேரில் பார்த்ததில் அதில் உண்மை என, தெரிய வந்தது. அதற்காக போராட்டம் நடத்தினோம். அதற்குள், ஐந்து பசுக்களும், மூன்று பச்சிளம் கன்றுகளும் இறந்து விட்டன. பிரேத பரிசோதனையில், அனைத்து மாடுகளும், உண்ண உணவின்றி, பிளாஸ்டிக் பைகளை தின்றதால் இறந்தன என்பது, தெரிய வந்தது. இதன் மூலம், அறநிலையத் துறை, பசியால் பசுக்கள் சாவதை வேடிக்கை பார்த்தது என்பது, வெட்ட வெளிச்சமாகி உள்ளன. இதே போல், சில ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சொந்தமான மாடுகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்த போது, உயர்நீதிமன்றம், பல்வேறு விதிமுறைகளுக்கு கோசாலைகளுக்கு விதித்தது. அதில், ஒன்றை கூட, அறநிலையத்துறை நடைமுறைபடுத்துவதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
‘கடமை’ அளவில்…:
பசுக்கள் இறந்ததன் எதிரொலியாக, திருவண்ணாமலை மண்டல இணை ஆணையர், பரஞ்சோதி, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். சென்னை மண்டல இணை ஆணையர் திருமகள், திருவண்ணாமலை மண்டல இணை ஆணையராக, கூடுதல் பொறுப்பு வகிப்பார் என, கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அனைத்து கோவில்களுக்கும் கோசாலை, நடத்துவதற்கான விதிமுறைகளை, அறநிலையத்துறை அனுப்பி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், இது போன்ற சம்பவங்கள் எழும் போது, செயல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்புவதோடு, பிரச்னை முடிந்து விட்டதாக, அறநிலையத்துறை எண்ணுகிறது. ஆனால், பிரச்னைகள் தீர்ந்தபாடில்லை.தமிழக முதல்வர், இப்பிரச்னையில் உடனடியாக தலையிட்டு, தீர்வு காண வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கை.கோவில் தரப்பினர், ‘இம்மாவட்டத்தில், போதிய அளவில் புல் கிடைக்கவில்லை. இருந்தாலும், முறையாக, வைக்கோல் வைக்கப்படுகிறது. பசுக்கள், கன்றுகள் இறந்ததற்கு காரணம், அவற்றுக்கு உடல்நிலை சரியில்லை’ என்றனர்.
பசுக்கள் மாயமானபோதே நடவடிக்கை எடுத்திருக்கலாமே!
திருச்செந்துார் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு காணிக்கையாக
பெறப்பட்ட, கால்நடைகளில் இருந்து, தனியார் கோசாலைகளுக்கு வழங்கப்பட்ட, 5,389 பசுக்கள் மாயமாகி உள்ளன’ என, தணிக்கைத் துறை ஆய்வில் தெரியவந்தது. அப்பசுக்கள், கசாப்பு கடைகளில் விற்கப்பட்டிருக்கலாம் என, பக்தர்கள் கருதினர்.இது குறித்து விரிவான செய்தி, ‘தினமலர்’ நாளிதழில், கடந்த ஆண்டு, நவம்பர், 29ல், வெளியானது.இது குறித்து, விளக்கம் கேட்டு, 30.12.12 தேதியில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தனபால், இணை ஆணையருக்கு கடிதம், எழுதினார். இதன் தொடர்ச்சியாக, தல ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், கோவிலுக்குச் சொந்தமான, 1,3,5,6 ஆகிய எண் கொண்ட, கோசாலைகளில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டது. மேலும், இக்கோசாலைகள், தங்களிடம் பதிவு பெற்ற, பிற கோசாலைகளுக்கு தாங்கள் பெற்ற, கால்நடைகளை பகிர்ந்து வழங்குவதில், தடை செய்யும் வகையில், சட்ட நெறிமுறைகள், வழிகாட்டுதல்கள் ஏதும் நடைமுறையில் இல்லாததாலும், இக்கோசாலைகளிடம் இருந்து கால்நடைகளை பெறும், பிற கோசாலைகள், பல மாவட்டங்களில் உள்ளதாலும், இக்கோசாலைகளின் நடவடிக்கையை, கண்காணிக்க முடியவில்லை என, இணை ஆணையர் தரப்பு ஒதுங்கிக் கொண்டது.இதுநாள் வரை, அறநிலையத்துறை தவறு இழைத்த அதிகாரிகள் மீதோ, கோசாலை நிர்வாகத்தையோ தண்டிக்கவில்லை. கடந்த ஆண்டே, அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், இந்நிலை வந்திருக்காது. எனவே, முதல்வர் இப்பிரச்னையில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, பக்தர்களின் கோரிக்கை.
(நன்றி : தினமலர்)
======================================================
03.11.2013 தேதியிட்ட ஜூனியர் விகடன் செய்தி :
(Double click on the image and it will open big. Again click to read the text!)
[END]
படிக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது.
பசுக்கள் பட்டினியால் இறந்தது எவ்வளவு பெரிய பாவம்
“பசுக்களின் மகத்துவத்தை அறியாதவர்களையும், மாலையானால் டாஸ்மாக் பாரில் தஞ்சம் புகுபவர்களையும் கோ-சாலையில் பணியமர்த்தியதாலும் தான் இந்த நிலை பசுக்களுக்கு ஏற்பட்டது ”
இது உண்மையான ஒன்றுதான்.
நாம் வேலை செய்யும் இடம் கோவில் செய்யும் வேலை தெய்வம் என்று அவர்கள் நினைத்திருந்தால் இப்படி நடந்து இருக்க மாட்டார்கள்.
இப்படி ஒரு நிகழ்ச்சி இனிமேலும் தொடர கூடாது.
Dear சுந்தர்ஜி
தங்கள் பதிவிற்கு நன்றி
உமா
கோ சாலையில் மாடுகள் இறந்ததற்கு கூட முதல்வர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் மற்ற நிர்வாகிகள் எல்லாம் என்ன செய்கின்றனர் நல்ல வேளை நம் முதல்வர் தெய்வ நம்பிக்கை மிக்கவர் என்பதனால் உடனே நடவடிக்கை எடுத்தார் இல்லை என்றால் இது தொடரும், பசுக்களை மஹா லக்ஷ்மியின் மறு அவதாரமாகதான் இந்து மதத்தில் நாம் வணங்குகிறோம் அதற்கே இந்த நிலை என்றால் வியாச முனிவர் சொன்னது போல் கலி காலம் பிறந்தால் பகட்டுக்கும், பணத்திற்கும், கவர்ச்சிக்கும் மனிதன் அடிமை ஆகி பகவானை மறந்து விடுவான் என்பது உண்மை ஆகிறது, இன்று தங்கள் தளத்தினால் என் போன்றவர்களுக்கும் (நான் ஜூனியர் விகடன் படிக்கவில்லை) இந்த செய்தியை முதல் முறையாக அறிய செய்ததற்கு நன்றிகள் பல நிச்சயம் நாங்களும் பகவானிடம் இனி இது போல் நடக்காமல் இருக்க வேண்டிக்கொள்கிறோம் மீண்டும் நன்றிகள் பல .
அட போங்க சார் பல கோவில்ல 10000 மேற்பட்ட பசுக்கள் காணோம் என்று செய்தி வந்தது ,அதை பற்றியே யாரும் வாய் திறக்க வில்லை என்ன செய்வது