Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, October 10, 2024
Please specify the group
Home > Featured > பிறந்தநாளன்று நாம் செய்ய வேண்டியது என்ன? செய்யக் கூடாதவை என்ன?

பிறந்தநாளன்று நாம் செய்ய வேண்டியது என்ன? செய்யக் கூடாதவை என்ன?

print
ம் பிறந்த நாளின் முக்கியத்துவத்தையும், நட்சத்திரப்படி ஒருவர் தன் பிறந்தநாளை கொண்டாடுவதன் அவசியத்தையும் சென்ற பதிவில் பார்த்தோம். இந்த பதிவில் ஒருவர் பிறந்தநாளன்று செய்யவேண்டியவைகளையும் செய்யக்கூடாதவைகளையும் பார்ப்போம்.

ஒருவர் பிறந்த நாள் என்பது அவரது ஆயுளை இறைவன் மேலும் நீட்டித்து வழங்கும் நாளாகும். இறைவனின் நேரடி பார்வை அன்று நம்மீது இருக்கும். எனவே பிறந்தநாளை ஒருவர் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு இறையருளுக்கு பாத்திரமாகவேண்டும்.

DSC03653

பிறந்தநாளன்று ஒருவர் செய்யவேண்டியது என்ன ?

1) காலையில் சீக்கிரம் எழுந்து எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும்.

2) புத்தாடைகள் இருப்பின் அவற்றை பெரியோரிடம் தந்து குங்குமம் வைத்து வாங்கி அணியலாம். (ஆடைகளில் தோஷம் ஏதேனும் இருந்தால் குங்குமம் வைப்பது மூலம் அவை நீங்கிவிடும்).

3) பெற்றோர் மற்றும் மூத்தோரின் கால்களில் விழுந்து ஆசி பெறவேண்டும்.

4) அவர்கள் கையால் இனிப்புக்களை பெற்று அதை உண்ணவேண்டும்

5) குல தெய்வத்தின் கோவிலுக்கு செல்லவேண்டும்.

DSC03676

6) ஆலயத்தில் உங்கள் பெயர் ராசி நட்சத்திரப்படி அர்ச்சனை, அபிஷேக, ஆராதனைகள் செய்யவேண்டும்.

7) கூடுமானவரை உங்கள் நட்சத்திரத்துக்குரிய பரிகாரத் தலத்திற்கு சென்று அர்ச்சனை செய்யவும். (அவசியம் தரிசிக்க வேண்டிய 27 நட்சத்திரங்களுக்குரிய பரிகாரத் திருத்தலங்கள்!)

8) வீட்டிலும் கோவில்களிலும் முடிந்த எண்ணிக்கையில் விளக்கேற்றவேண்டும்.

9) ஏழைகளுக்கு அன்னதானம், வஸ்திர தானம் உள்ளிட்ட தர்ம காரியங்கள் செய்யலாம். (தவிர ரத்த தானம், கண் தானம், உடல் தானம் போன்ற மிகுந்த புண்ணியம் தரக்கூடிய தானங்களை கூட செய்யலாம்.)

10) அன்று ஆயுஷ் ஹோமம் செய்வது நன்று.

12) கோ-பூஜை செய்வது சாலச் சிறந்தது. கோ-பூஜை செய்ய இயலாதவர்கள் பசுவுக்கு உணவளிக்கலாம்.

12) புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ள விரும்பினாலோ அல்லது புதிய வகுப்பில் சேர விரும்பினாலோ அன்று அதை செய்யலாம்.

13) அலுவலகத்தில் புதிய பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளலாம்.

14) புதிய சொத்துக்கள் வாங்கலாம்.

15) வாகனங்கள் வாங்கலாம்

16) புதுமனைப் புகு விழா (கிரஹப் பிரவேசம்) செய்யலாம்.

DSC02531

17) உபநயனம் செய்துகொள்ளலாம்

18) பெற்றோர்களோ, ஆசிரியர்களோ, நண்பர்களோ அளிக்கும் பரிசுகளை ஏற்றுக்கொள்ளலாம். நல்ல எண்ணத்துடன் எந்த வித எதிர்பார்ப்புமின்றி அந்த பரிசு கொடுக்கப்படவேண்டும். ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.

19) இராமாயண, மகாபாரத, இதிகாசங்களை படிக்கலாம். பக்தி நூல்களை, ஸ்தோத்திரங்களை படிக்கலாம்.

பரபரப்பான வாழ்க்கையில் உழல்பவர்கள் அன்றைக்கு அலுவலகத்திற்கு ஒரு நாளோ அறைநாளோ விடுப்பு எடுத்துக்கொண்டால் மேற்கூறியவைகளை பதட்டமின்றி செய்யமுடியும்.

பிறந்த நாளன்று செய்யக்கூடாதவை :

1) புதிய மருந்து உட்கொள்வது கூடாது.

2) திருமணம் செய்துகொள்வது கூடாது

3) சீமந்தம், வளைகாப்பு செய்யக்கூடாது

4) சாந்தி முஹூர்த்தம் வைத்துக்கொள்ளக்கூடாது

5) அசைவ உணவு சாப்பிடுவது அல்லது அசைவ உணவு விருந்தளிப்பது கூடாது.

6) கேக்கில் மெழுகுவர்த்தி ஏற்றுதல், அதை வாயால் ஊதி அணைத்தல் கூடவே கூடாது. (அன்றைய நாளில் விளக்கேற்ற வேண்டுமே தவிர அணைக்கக் கூடாது.)

7) வம்பு தும்பு வழக்கு, வாதம், சண்டை ஆகியவற்றில் ஈடுபடுவதை அன்று நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

8) முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் அன்று தங்களுக்கு கீழ் உள்ளவர்களை தண்டிக்கக் கூடாது. முடிந்தால் அவர்களை மன்னிக்கலாம்.

9) தங்களின் புதிய சொத்துக்கள், பரிசுகள், வருவாய் ஆகியவை குறித்து தம்பட்டம் அடித்துக்கொள்ளுதல் கூடவே கூடாது.

மொத்தத்தில் இறைவன் நம்முள் நுழையும் நாளான நம் பிறந்தநாளன்று கேளிக்கைகளை தவிர்த்துவிட்டு அன்றைய தினத்தை ஆத்ம சுத்திக்காக ஒதுக்கிடவேண்டும். இப்படி செய்தால் இறையருளுக்கு பரிபூரணமாக பாத்திரமாவதுடன் நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செலவத்தையும் நல்லோர் நட்பையும் ஒருவர் பெறலாம்.

பல ஆண்டுகளாக ஆங்கில முறைப்படி தங்கள் பிறந்தநாளை கொண்டாடியவர்கள் திடீரென்று அவற்றை மாற்றிக்கொண்டு கொண்டாடுவது சிரமாக இருக்கலாம். ஆனால் அந்த சிரமங்கள் அனைத்தும் நமது நன்மைக்கும், உண்மையான முன்னேற்றத்துக்குமே என்பதை உணர்ந்து இவைகளை நடைமுறைப்படுத்துங்கள். மனமிருந்தால் மார்க்கமுண்டு. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

எல்லாரும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ குருவருளும் திருவருளும் என்றென்றும் துணை நிற்கும்.

(SPECIAL CREDITS : இந்த பதிவை எழுதும்போது எனக்கு ஏற்பட்ட சில சந்தேகங்களை ஜோதிடர் திரு.நாராயணன் அவர்கள் தீர்த்து வைத்ததோடல்லாமல் சில குறிப்புக்களையும் தந்து உதவினார். அவருக்கு என் நன்றி!

அதே போல அனைத்தையும் எழுதிய பின்னர், மஹா பெரியவாவின் ஆத்யந்த பக்தையும் நம் பிரார்த்தனை பதிவுக்கு சமீபத்தில் தலைமையேற்று பிரார்த்தனை நடத்தித் தந்தவருமான நொச்சியம் திருமதி.ராஜலக்ஷ்மி விட்டல் மாமியை தொடர்பு கொண்டு பிறந்த நாளை ஒருவர் கொண்டாடும் வழிமுறைகளை பற்றி கேட்ட போது நாம் எழுதி வைத்திருந்த விஷயங்களையே அவரும் கூறினார். “மஹா பெரியவாவும் இவைகளைத் தான் வலியுறுத்தினார்” என்றும் கூறி இந்த பதிவை ஆசீர்வதித்தருளினார். அவருக்கும் என் நன்றி!!)

நமது பதிவுகள் & புகைப்படங்கள் கடும் உழைப்பிலும், தீவிர ஆராய்ச்சியிலும், தேடலிலும் விளைபவை. நமது தளத்தின் பெயரை – RIGHTMANTRA.COM – அளிக்காமல் இங்குள்ள பதிவுகளை எடுத்தாளக்கூடாது என்று காப்பி & பேஸ்ட் செய்பவர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!

====================================================

Also check :

உங்கள் பிறந்த நாளின் முக்கியத்துவம் உங்களுக்கு தெரியுமா?

====================================================

[END]

13 thoughts on “பிறந்தநாளன்று நாம் செய்ய வேண்டியது என்ன? செய்யக் கூடாதவை என்ன?

  1. காத்து கொண்டு இருந்தேன் இந்த பதிவுக்கு. மிகவும் நன்றி. வாழ்த்துக்கள். வள்ளி

  2. மிக பயனுள்ள கட்டுரை. இன்று பெரும்பாலும் தங்கள் பிறந்த நாளை ஆங்கில முறை படி கொண்டாடி வருகின்றனர்.அது தவறு என்பதை சுட்டி காட்டி.நட்சத்திர முறை படி கொண்டாட வேண்டும் என்பதை காரண காரியத்துடன் விளக்கியமை அருமை. நன்றி

    மோகன் முருகப்ரியன்.

  3. தெரியாத பல விசயங்களை தெரிவித்து உள்ளீர்கள் நன்றி

  4. Dear Sundarji,

    It was a very good news from your side. Till now i didn’t knew the importance of birthdays and henceforth i will follow the same.Thanks for your valuable message .

    Thanks & Regards

    Harish.V

  5. சார் வணக்கம்

    எதிர் பார்த்து இருந்தன் சார்

    மிக்க நன்றி சார்

  6. சுந்தர்ஜி
    அனைவரின் நலனுகாக தாங்கள் தேடி தேடி அளித்த ஒரு உன்னத பரிசு.
    எந்திரமாகிவிட்ட இந்த காலத்தில் உங்கள் வேலை பளுவின் நடுவில் அனைவரின் நலனுகாக தினம் பயனுள்ள கட்டுரை அளித்த நம் சுந்தர்ஜி ஒரு ராயல் சல்யுட்.
    மஹா பெரியவா அவர்களின் ஆசீர்வதம் எப்போதும் தங்களுக்கு உண்டு.

  7. சுந்தர்,

    ரத்த தானம், கண் தானம், உடல் தானம் கூட செய்தால் மிக நன்றாக இருக்கும்.

    1. நன்றி. இவைகளையும் சேர்க்க நினைது மறந்துவிட்டேன். நினைவூட்டியமைக்கு நன்றி.
      – சுந்தர்

  8. Dear சுந்தர்ஜி

    Very important article for Right Mantra Readers. So far we did’nt know about the do’s and don’ts on Birth day. Through your article, we understand the importance of Birthday. Thanks a lot. MayGod Bless you always .

    Regards
    Uma

  9. Dear Sir,

    Till today we use to celebrate the birthday on date along with lighting the
    candles and cutting the cake.

    Thanks for your article. Henceforth i will celebrate on star as your said.

    With warm Regards
    Suma

  10. மிக நல்ல கட்டுரை எல்லோரும் கட்டாயம் படிக்கவேண்டும் மெழுகு வத்தி கொளுத்துவோரே இனிமேல் koluthi அணக்கதீர்கள் kumararaja

  11. பிறந்த நாளன்று மற்ற நண்பர்கள் உறவினர்களிடமிருந்து வரும்/ பெறும் வாழ்த்துக்களுக்கு மறக்காமல் நன்றி தெரிவிக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *