Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, November 8, 2024
Please specify the group
Home > Featured > விஸ்வரூப தரிசனம் என்றால் உண்மையில் என்ன?

விஸ்வரூப தரிசனம் என்றால் உண்மையில் என்ன?

print
சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது இது. என் தங்கை அப்போது ஸ்ரீவில்லிப்புதூரில் இருந்தார். தங்கை வீட்டிற்கு ஒரு முறை சென்றபோது ஒரு நாள் அதிகாலை ஆண்டாள் கோவிலுக்கு விஸ்வரூப தரிசனத்திற்கு சென்றிருந்தேன். அப்போது மார்கழி மாதம் என்று நினைக்கிறேன். என்னுடன் சேர்த்து ஒரு 20 அல்லது 25 பேர் விஸ்வரூப தரிசனத்திற்கு காத்திருந்தனர்.

தரிசனத்திற்கு காத்திருந்தவர்களில் சுமார் 15 பேர் கண் பார்வையற்றவர்கள். அந்த காலை நேரத்திலும் அவர்கள் விஸ்வரூப தரிசனத்திற்கு வந்திருந்தது என்னை வியக்கவைத்தது. நாங்கள் இங்கே நின்றிருக்க, எங்களுக்கு எதிர் வரிசையில் அவர்கள் நின்றிருந்தனர்.

விஸ்வரூப தரிசனம் என்றால் அதிகாலை முதல் தரிசனம் என்று பொருள். அதாவது இறைவனை அவன் திருமஞ்சனத்திற்கு முன்னர் அவனது முந்தைய தினத்தின் அலங்காரத்தில் தரிசிப்பது. (‘திருமஞ்சனம்’ என்னும் சொல், இறை உருவங்களுக்கு நடைபெறும் நீராட்டுதலைக் குறிக்கும்.)

Sri-RanganAtha-Temple

அப்போது என் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ஒருவர் அர்ச்சகரிடம், “ஸ்வாமி… நாங்கள் விஸ்வரூப தரிசனத்திற்கு வந்திருக்கிறோம் என்றால் அது யதார்த்தமானது. திரை விலக்கப்பட்டதும் எங்களால் பகவானையும் பிராட்டியாரையும் பார்க்க முடியும். ஆனால் பார்வையற்ற இவர்களும் வந்திருக்கிறார்களே…? அதுவும் இந்த காலை வேளையில்? இவர்களால் எதுவும் பார்க்க முடியாதே… அப்படியிருந்தும் வந்திருக்கிறார்களே… இதன் தாத்பரியம் என்னவோ?” என்று ஏதோ தனக்கு தோன்றியதை கேட்டுக்கொண்டிருந்தார்.

அர்ச்சகர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் எனக்கு ஏற்பட, அவர்களுக்கு சற்று பக்கத்தில் சென்று நின்றுகொண்டேன்.

“நீங்கள் நினைப்பது தவறு. நம்மை விட பகவானை அவர்கள் அதிகம் உணரமுடியும். சாதரணமாக பக்தர்கள் சென்று ஆலயங்களில் இறைவனை பார்பதை ‘தரிசனம்’ என்கிறோம். அதாவது நாம் சென்று இறைவனை பார்ப்பது தரிசனம். ஆனால் இறைவன் நம்மை பார்ப்பது விஸ்வரூப தரிசனம். காலை முதன்முறை தனக்கு முன் இருக்கும் திரை விலக்கப்பட்டதும், தன்னை பார்க்க யார் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று இறைவன் பார்ப்பார். அவரது அருட்பார்வை நேரடியாக நம் மீது விழும். அது தான் விஸ்வரூப தரிசனத்திற்கு உள்ள சிறப்பு. இப்போது இந்த விஸ்வரூபத்தில் பகவானை இவர்கள் பார்க்கமுடியாவிட்டாலும் பகவான் இவர்களை பார்ப்பார் அல்லவா? இறைவனை நாம் பார்க்க முடியாவிட்டாலும் இறைவன் நம்மை பார்க்கட்டும் என்று இவர்கள் வந்திருக்கிறார்கள்!” என்றார்.

Lord Siva

எப்பேர்ப்பட்ட தத்துவம்… எப்பேர்ப்பட்ட உண்மை….! காலஙகாலமாக கோவிலுக்கு செல்பவர்களுக்கு கூட விஸ்வரூப தரிசனத்தின் பொருள் தெரியுமா என்று தெரியாது. ஆனால் பார்வையற்றவர்கள் ஒரு பேருண்மையை உணர்ந்து அவனை சேவிக்க வந்திருக்கிறார்கள் என்பதை எண்ணி உருகினேன்.

எனவே இறைவனின் அருட்பார்வை தங்கள் மீது விழவில்லையே என்று ஏங்குபவர்கள், உங்கள் பகுதியில் உள்ள தொன்மையான ஆலயத்தில் தினசரி விஸ்வரூப தரிசனத்திற்கு சென்று வாருங்கள். விரைவில் அவனது அருட்பார்வை உங்கள் மீது விழுந்து உங்கள் துன்பங்கள் யாவும் ஒரு முடிவுக்கு வரும் என்பது உறுதி.
குறிப்பு : இன்னும் இரண்டு மாதத்தில் மார்கழி மாதம் வரவிருக்கிறது. மார்கழி மாதம் தினசரி தவறாமல் கோவிலுக்கு சென்றால் வருடம் முழுதும் கோவிலுக்கு சென்ற புண்ணியம் கிட்டும். அப்படியென்றால் மார்கழி மாதம் முழுதும் இறைவனின் விஸ்வரூப தரிசனத்தை கண்டால் அதன் பலன் என்ன என்று யூகித்துக்கொள்ளுங்கள். எனவே தான் மற்ற நாட்களில் ஆலயங்களுக்கு சென்று இறைவனை தரிசிக்க முடியாதவர்கள் மார்கழி மாதத்தை தவறவிடக்கூடாது. சாதாரண நாட்களில் கூட அனைத்து ஆலயங்களிலும் விஸ்வரூப தரிசனம் உண்டு என்றாலும் மார்கழி மாதம் காலை 5.00 – 5.30 க்குள்  விஸ்வரூப தரிசனம் கிடைக்கும். அதாவது சூரிய உதயத்திற்கு முன்பு.

சென்ற மார்கழி முழுதும் நாமும் நண்பர் மாரீஸ் கண்ணனும் நந்தம்பாக்கம் கோதண்டராமர் கோவிலுக்கு தினசரி அதிகாலை சென்ற வந்தது நினைவிருக்கலாம். (மாரீஸ் கண்ணன் தற்போது அலுவலகத்தில் ப்ரோமோஷன் மேல் ப்ரோமோஷன் பெற்று எங்கோ சென்றுவிட்டார்!)

[END]

11 thoughts on “விஸ்வரூப தரிசனம் என்றால் உண்மையில் என்ன?

  1. அட! அட! அட! எப்பேர்பட்ட தத்துவம்
    நிஜமாக எனக்கு விஸ்வரூப தரிசனம் என்றால் தெரியாது.
    நாம் ஆண்டவனை பார்ப்பதற்கும் அவர் நம்மை பார்பதற்க்கும் உள்ள வித்தியாசம் என்று தான் எனக்கு உரைத்தது.
    என்னை படைத்தவனின் மலர் அலங்காரத்தில் என் கண்கள் சொக்கியது. இந்த பதிவிற்காக உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

  2. Nice article!!
    Hope to go to temples dis time without fail!!lets see!!
    And..
    Finishing touch super!!
    Maarees anna getting double promotion….ellarum ida note pannungappa …note pannunga!!
    Regards
    R.HariHaraSudan
    “HE WHO KNOWS THE SELF KNOWS ALL”

  3. விஸ்வரூப தரிசனம் என்ரால் இதுவரை எனக்கு தெரியாது .. உங்கல் பதிவின் மூலம் தெரிந்துகோண்டேண் ..ஆனால் மார்கயிமாத தரிசனம் பெற்றுல்ளேன்..
    உன்மயில் இரவனை நாம் கான்பதை விட இரைவனின் பார்வை நம்மேல் விழ வேண்டும் என்பதெ உன்மையான பிரார்த்தனை..

    பயனுல்ல பதிவினை இட்டமைக்கு நன்ரிகல்..

  4. சுந்தர்ஜி
    விஸ்வரூப தரிசனத்திற்கு உண்மையான பொருள் இன்று தான் தெரிந்து கொண்டேன். விஸ்வரூப தரிசனம் நாம் இறைவனை காண்பதில் உள்ள மகிழ்ச்சி விட இறைவன் நம்மை காண்பதில் உள்ள மகிழ்ச்சி பெரிது.

  5. வணக்கம் சார்

    விஸ்வரூப தரிசனம் என்றால் என்ன தெரியாது சார் தெரிந்து கொண்டேன் ..

    மிக அருமையான பதிவு

  6. விஸ்வ ரூப தரிசனத்தின் உண்மையான அர்த்தத்தை இன்றுதான் நம் தளத்தின் மூலம் தெரிந்துகொண்டேன். மனிதர்களாகிய நாம் இறைவனை ஏற்றுக்கொள்கிறோமா என்பதைவிட இறைவன் நம்மை ஏற்றுக்கொள்கிறானா என்பதுதான் முக்கியம் என்பதை இந்தப்பதிவு உணர்த்துகிறது. அருமையான விளக்கம்.

  7. விஸ்வரூப தரிசனம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என எண்ணியிருந்தேன். மிகச்சரியாக அதைபற்றிய விளக்கத்தை பார்த்தவுடன் …………….சொல்ல தெரியவில்லை.

  8. அன்று தொடங்கிய அந்த விஸ்வரூப தரிசனம் இன்று வரை தொடர்ந்தாலும் அதன் முழுமையான அர்த்தம் இப்பொழுதுதான் தெரிகிறது. விஸ்வரூபம் தரிசனம் இறைவன் நம்மை காணும் தரிசனம் என்பது எவ்ளவு உண்மை என்பதை சுந்தர் தன் கடைசி வரியில் குறிபிட்டுள்ளார். அந்த பெருமாளின் கருணையால் எனக்கு அலவலகத்தில் நல்ல முன்னேறற்றம் மட்டும் அல்லாது வெள்ளி நாடு செல்லவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வரும் திங்கள் அன்று அந்த பெருமாளின் கருணையால் Hong Kong செல்லவுள்ளேன். ஆகையால் நண்பர்கள் அனைவும் வரும் மார்கழி மாதத்தை நன்கு பயன்படுதிகொள்ளவும். (சில மாதங்களுக்கு முன்னர் ஏற்கனவே துபாய் சென்று வந்தேன். அது பற்றி இங்கும் கமெண்ட் பகுதியில் கூட குறிப்பிட்டுள்ளேன்.

    அந்த ஆண்டவன் கருணையால் இந்த அறிய வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த சுந்தருக்கு என் நன்றியை உருதக்கி கொள்கிறேன்

    1. மாரீஸ், வெள்ளிநாடு என்று நீங்கள் தவறுதலாக குறிப்பிட்டாலும் அது உண்மை தான். (Hong Kong is a richest nation). வாழ்த்துக்கள்.

      – சுந்தர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *