(திரு.தங்கவேல் அவர்கள் அப்படி என்ன சாதித்தார்? சினிமாவில் மட்டுமே சாத்தியப்பட்டதை நிஜத்திலும் சாதித்து காட்டியுள்ள ஒரு நிஜ ஹீரோ!)
தனி ஒரு மனிதனாக போராடி ஒரு கிராமத்திற்கு தங்கவேல் அவர்கள் மகத்தான காரியங்களை செய்யும்போது, நாம் நிச்சயம் அந்த கிராமத்திற்கு நமது விழாவின் போது ஏதாவது செய்யவேண்டும் என்று நம் விருப்பத்தை தெரிவித்தோம். தொடர்ந்து நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் மின் வசதியற்ற கிராமம் என்பதால் சுமார் 30 குடும்பங்களுக்கு அங்கு எமர்ஜென்சி சோலார் விளக்குகள் வாங்கித் தருவது என்று முடிவாது. (ஒரு விளக்கின் விலை சுமார் ரூ.600/-) 30 விளக்குகள் மொத்தம் தேவை என்று கணக்கிடப்பட்டது.
ஆனால், “30 விளக்குகளும் நான் ரைட்மந்த்ரா சார்பாக வாங்கித் தருகிறேன்” என்று திரு.ஜெ.பி. அவர்களிடம் என்னால் தைரியமாக சொல்ல முடியவில்லை. ஆண்டுவிழா செலவுகளுக்கே கடைசி நேரத்தில் தான் ஓரளவு பணம் கிடைத்தது. எனவே எந்த தைரியத்தில் நான் 30 விளக்குகளை வாங்கித் தருகிறேன் என்று சொல்வது. எனவே சற்று தயங்கினேன். என் தயக்கத்தை புரிந்துகொண்ட திரு.ஜெ.பி. “மொத்த விளக்குகளையும் நீங்கள் வாங்கித் தரவேண்டாம். 15 விளக்குகள் வாங்கித் தந்தால் போதும். மீதி 15 விளக்குகளை எங்களின் டிரஸ்ட் சார்பாக நான் வாங்கித் தந்துவிடுகிறேன்” என்றார்.
எனக்கு அது சரியெனப்பட்டது. ஆனால், அந்த பாதித் தொகையை கூட என்னால் புரட்ட முடியவில்லை. எனவே அடுத்த நாள் அவரிடம், “சார்… நிகழ்ச்சிக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கு. அதுக்குள்ளே என்னால நிச்சயம் ஃபுல் அமௌண்ட்டை ரெடி பண்ணி விளக்குகளை வாங்க முடியாது. கடைசி நேரத்தில் தான் பணம் வரும்னு நினைக்கிறேன்.. மேலும் இப்போ ஆர்டர் செஞ்சா எனக்கு வர்றதுக்கு 5 வொர்கிங் டேஸ் ஆகும். வேணும்னா ஒரு 5 விளக்கை ஆர்டர் பண்றேன். அதை ஸ்டேஜ்ல வெச்சு தங்கவேல் சார் கிட்டே கொடுப்போம். மீதி 25 விளக்குகளை நம்ம பங்க்ஷன் முடிஞ்சவுடனே ஒரு வாரத்திலோ அல்லது ரெண்டு வாரத்திலோ தங்கவேல் சாரோட தருமபுரி முகவரிக்கே அனுப்பிடுறேன்.” என்றேன்.
FLIPKART ல் முதல் முறையாக சற்று காஸ்ட்லி ஐட்டங்களை ஆர்டர் செய்கிறேன். அது சரியாக வந்து சேர்கிறதா என்று வேறு பார்க்கவேண்டுமே என்கிற சந்தேகம் வேறு எனக்கு.
“உங்கள் யோசனை தான் சரி. நிகழ்ச்சியில் 5 விளக்குகளை ஒப்படைப்போம். மீதி விளக்குகளை பின்னர் பார்த்துக்கொள்ளலாம்” என்றார் ஜெ.பி.
தொடர்ந்து விழாவுக்கான ஏற்பாடுகளில் மூழ்கிவிட்டோம். விழாவில் கலந்துகொள்ள தனது கிராம மக்கள் சிலருடன் தர்மபுரியில் இருந்து திரு.தங்கவேல் வந்திருந்தார். தனது பணிகளில் துணை நிற்பவர் என்று தனது சித்தப்பாவை அறிமுகப்படுத்தி வைத்தார்.
நிகழ்ச்சியில் திரு.தங்கவேல் அவர்களுக்கு மகாத்மா காந்தி விருதும் சான்றிதழும் தரப்பட்டது. மேடையில் தங்கள் ஊரை சேர்ந்த சில ஆண்களை அறிமுகப்படுத்திய திரு.தங்கவேல் அவர்கள் அனைவரும் குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டதாக கூறினார்.
தொடர்ந்து ஏற்கனவே பேபின்ன மருதஹள்ளி கிராமத்திற்கு விளக்குகள் தரப்பட்டது. பேபின்ன மருத ஹல்ளி கிராமத்திலிருந்து சம்பந்தப்பட்ட பயனாளிகளே வந்திருந்து விளக்குகளை பெற்றுக்கொண்டனர்.
சோலார் விளக்குகள் குட்டி விவேகானந்தர் செல்வன் சபரி வெங்கட்டின் திருக்கரங்களால் வழங்கப்பட்டது. கிராம மக்கள் ஒவ்வொருவரும் சபரி வெங்கட்டின் கால்களில் வீழ்ந்து வணங்கி விளக்குகளை பெற்றுக்கொண்டு சென்றது கண்கொள்ளா காட்சி.
(யார் இந்த சிறுவன் சபரி வெங்கட் ? கடவுள் வரம் தருவதாகச் சொன்னால் என்ன கேட்பாய்? பார்வையற்ற குழந்தை சொன்ன பதில்!)
இதோ விழா நிறைவடைந்து மூன்று வாரத்தில் மீதி விளக்குகள் அனைத்தும் ஆர்டர் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு போய் சேர்ந்துவிட்டது. வரும் தீபாவளியை திரு.ஜெ.பி. அவர்கள் பேபின்னமருதஹள்ளி கிராமத்தில் அம்மக்களுடன் கொண்டாடவிருக்கிறார். அப்போது அவ்விளக்குகள் அவர்களிடம் முறைப்படி ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.
ரைட் மந்த்ரா வாசகர்களின் உதவியோடு இந்த தீபாவளிக்கு மின்வசதியில்லாத கிராமத்து இல்லங்களில் இருள் நீங்கி ஒளி வரப்போகிறது. குறிப்பாக அவ்வீடுகளில் உள்ள பள்ளி குழந்தைகள் பாடம் படிக்க அவ்விளக்குகள் தான் பெரிதும் உதவப்போகிறது. இந்த அரும்பணிக்கு துணை நின்ற ரைட்மந்த்ரா வாசகர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
சில நாட்களுக்கு முன்னர், தங்கவேல் அவர்களிடம் பேசியபோது கிராம மக்கள் சார்பாக நம் தளத்திற்கும் வாசகர்களுக்கும் தங்களின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவ்க்கும்படி கூறினார். அவர் மேலும் கூறுகையில், “தன்னலமின்றி சமுதாயத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தாலே போதும். ஆண்டவன் எவரையாவது கருவியாக்கி அதை நிறைவேற்றித் தருவான். அந்த வகையில் இக்கிராமத்திற்கு ஒளியேற்றவேண்டும் என்று நான் விரும்பியபோது எண்ணங்களின் சங்கமத்தையும் ரைட் மந்த்ராவையும் இறைவன் அனுப்பி இந்த மகத்தான அதை நிறைவேற்றி தந்துள்ளான். இந்த மக்களை நான் பல விஷயங்களில் வெளிச்சத்திற்கு கொண்டு வர விரும்பினேன். ஆனால் அதற்கெல்லாம் அடிப்படை கல்வி தான். அந்த கல்விக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் ஒவ்வொரு வீட்டிற்கு விளக்கு கிடைத்தது மிக்க சந்தோஷம்” என்றார்.
ஒரு எமர்ஜென்சி சோலார் லேம்ப் தானே அதற்க்கு இத்தனை பெரிய வார்த்தைகளா என்று எவரும் கருத வேண்டாம். அந்த விளக்கின் அருமை அந்த மக்களுக்கு தான் தெரியும். அந்த ரூ.600/- க்கு அவர்கள் 6 நாட்கள் உழைக்கவேண்டும்.
================================================
* திரு.தங்கவேல் அவர்கள் கூறுவது முற்றிலும் உண்மை. தன்னலமின்றி பிறருக்கு உதவ வேண்டும் என்று நாம் நினைத்தாலே போதும். அந்த எண்ணத்தை நிறைவேற்ற இறைவன் எவரையாவது நம்மிடம் அனுப்பி வைப்பான். இதை நான் பல முறை உணர்ந்திருக்கிறேன். சமீபத்தில் கூட. இந்த தீபாவளிக்க்கு நாம் அறப் பணிகளை செய்ய விரும்பினோம். ஆனால் நினைத்தவற்றை உடனே செயல்படுத்தும் அளவிற்கு நமக்கோ, நம் தளத்திற்கோ பொருளாதார வசதி இல்லை. ஆனால் ‘உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்” என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப நல்ல விஷயங்களை செய்ய நினைத்தோம். இறைவன் திருவுள்ளம்…. எதிர்பாராத இடங்களில் இருந்தெல்லாம் உதவிகள் வந்து அவற்றை செய்ய முடிந்தது. விபரங்கள் விரைவில்….!!
================================================
நமது தளத்தின் பணிகள் மற்றும் இதர சேவைகள் தொடர்பாகவும் உதவிட விரும்புகிறவர்கள் இந்த வங்கிக் கணக்கிற்கு இனி தங்கள் நன்கொடைகளை செலுத்தலாம். இதில் செலுத்தப்படும் தொகை யாவும் சமூக & ஆன்மீக பணிகள், கோ-சேவை, உழவாரப்பணி, விசேட நாட்களில் செய்யப்படும் அன்னதானம், மற்றும் இதர அறப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
தொகையை செலுத்திய பின்பு, மறக்காது நமக்கு simplesundar@gmail.com, rightmantra@gmail.com மின்னஞ்சல் அனுப்பவும். அல்லது 9840169215 என்ற மொபைல் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும்.
இந்த தளம் தொடர்பான உங்கள் நம்பிக்கைகள் மற்றும் எதிர்ப்பார்ப்புக்கள் அனைத்தையும் நானறிவேன். உங்கள் எண்ணப்படியே நம் தளம் வளர்ந்து ஒவ்வொரு விஷயத்திலும் உங்கள் உள்ளக்கிடக்கையை பிரதிபலித்து நீங்கள் முன்னின்று செய்ய நினைக்கும் சேவைகள் அனைத்தையும் செய்து தனது லட்சிய பயணத்தை என்ன இடையூறு வந்தாலும் தொடரும் என்று உறுதி கூறுகிறேன்.
என்றென்றும் நன்றியுடன்,
சுந்தர், www.rightmantra.com
==============================================
ரைட் மந்த்ரா ஆண்டுவிழா & விருதுகள் – வீடியோ – Part 1
ரைட் மந்த்ரா ஆண்டுவிழா & விருதுகள் – வீடியோ – Part 2
================================================
[END]
வணக்கம் சார்
மிகவும் அருமையான பதிவு சார்..
நன்றி
///இந்த தீபாவளிக்கு மின்வசதியில்லாத கிராமத்து இல்லங்களில் இருள் நீங்கி ஒளி வரப்போகிறது. குறிப்பாக அவ்வீடுகளில் உள்ள பள்ளி குழந்தைகள் பாடம் படிக்க அவ்விளக்குகள் தான் பெரிதும் உதவப்போகிறது.
தன்னலமின்றி பிறருக்கு உதவேண்டும் என்று நாம் நினைத்தாலே போதும். அந்த எண்ணத்தை நிறைவேற்ற இறைவன் எவரையாவது நம்மிடம் அனுப்பி வைப்பான். ////
வாழ்த்துக்கள்.
இனிய காலை வணக்கம்.
திரு தங்கவேல் அவர்களுக்கு எனது பணிவான வண்ணக்கங்கள் . அவரது சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
சுந்தர்ஜி ரைட் மந்த்ரா வாசகர்களுக்கு எனது ராயல் salute
நன்றி
உமா
ஆண்டுவிழாவின் ஹை-லைட் தங்கவேல் சார் சார்பாக அவரின் ஊர் மக்கள் நிறைய பேர் வந்து சிறப்பித்தார்கள். 90% எல்லோரும் குட்டி தம்பியின் தாடையை பிடித்து கொஞ்சியும் சிலர் காலில் விழுந்து வணங்கியும் விளக்குகளை வாங்கியது கண் கொள்ளா காட்சியாக இருந்தது.
தங்கவேல் சார் சொன்ன மாதிரி நல்ல காரியம் செய்ய நல்லதை நினைத்தாலே அவை தானாக நடந்துவிடும்.
விளக்குகள் அனைத்தும் இந்த நல்லதொரு தீபாவளி நாளில் அவர்களுக்கு ஒப்படைக்கும் எண்ணங்களின் சங்கமம் திரு ஜே.பி சார் அவர்களுக்கு நம் தளம் சார்பாக வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.
திரு தங்கவேல் சேவை மேலும் தொடர எங்கள் வாழ்த்துக்கள்.
திரு தங்கவேல் சேவைக்கு ஒரு ராயல் வணக்கம்.நம் நாட்டில் தங்கவேல் அவர்களை போல் ஒரு சிலர் இருப்பதால் நாட்டில் மழை பெய்கிறது. அவர்கள் சேவை சீரக்க வாழ்த்துக்கள்
மீண்டும் ஒருமுறை நமது ஆண்டு விழாவை நேரில் பார்த்ததுபோல் உல்லது இந்த பதிவு ..
நண்பர் சந்திரசேகர் சொன்னது போல் மீண்டும் ஒருமுறை நமது ஆண்டு விழாவை நேரில் கண்டது போல், சுந்தர் ஜி அவர்களின் எழுத்து நடை அருமை .
விழாவிற்கு வரமுடியாதவர்கள் vedio லிங்க் அருமை .தங்கவேல் அவர்களின் உரை அருமை .குட்டி விவேகானந்தர் உரை மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டிருக்க ஆவல் தூண்டுகிறது .
அடுத்த பதிவிற்காக {ஆண்டு விழா தொடர்பான } ஆவலுடன் .
-மனோகர்