Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, October 10, 2024
Please specify the group
Home > Featured > What is the difference between SIGHT & VISION?

What is the difference between SIGHT & VISION?

print
ம் தளத்தில் இளம் விதவைகளின் குழந்தைகளை படிக்கவைப்பது, கல்வியில் சிறந்து விளங்கும் ஆனால் கண் பார்வையற்ற கிராமப்புற மாணவிகளை அடையாளம் கண்டு அவர்கள் கல்வியை தொடர உதவி செய்வது, அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது உள்ளிட்ட பல மகத்தான சேவைகளை செய்து வரும் நங்கநல்லூர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்களை பற்றியும் அவர் நிர்வகித்து வரும் ‘ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன் அறக்கட்டைளை’ மற்றும் நிலாச்சாரல் ஆஷ்ரமம் ஆகியவை குறித்தும் விரிவான பதிவை பார்த்தோம். (http://rightmantra.com/?p=7525)

நிலாச்சாரலில் தங்கி புனர்வாழ்வு பெற்று வரும் பார்வைக் குறைப்பாடுடைய கல்லூரி மாணவிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு நம் தளம் சார்பாக INNER GARMENTS மற்றும் FANCY JEWELS KIT தருவது என்று முடிவான அடுத்த நிமிடம் (ஆடைகளை ஏற்கனவே சிலர் வாங்கித் தந்துவிட்டனர்) முதலே அது குறித்த ஏற்பாடுகளில் இறங்கினோம். வேறு என்ன வேண்டும் சொல்லுங்கள் எங்களால என்ன முடியுமோ செய்றோம் என்றேன்.

DSC04883

“இவங்களுக்காக PROJECT / THESIS எழுதுறதுக்கு நிறைய பேப்பர் தேவைப்படுது. A4 ஷீட்ஸ் ஒரு பாக்கெட் வாங்கித் தந்தீங்கன்னா ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்.” என்றார் திரு.ராதாகிருஷ்ணன்.

“உங்களோட E-AUDIO LIBRARY க்கு ஏதாவது தேவையா?” என்று கேட்டேன். சற்று தயங்கினார். “பரவாயில்லே சார்… பெரிய அளவுல எதுவும் முடியாவிட்டாலும் எங்களால் இயன்ற பங்கை செய்கிறோம்” என்றேன்.

“PLAIN CDs நிறைய தேவைப்படும். புக் கேக்கிற BLIND STUDENTSக்கு புக்குக்கு பதிலா CDல தான் ரெக்கார்ட் பண்ணி தருவோம்!” என்றார்.

“DONE SIR… அப்புறம் வேற என்ன வேணும் சொல்லுங்க…..”

“தீபாவளியன்னைக்கு வந்திருந்து இவங்க கூட கொஞ்ச நேரம் ஸ்பெண்ட் பண்ணி மத்தாப்பு, பட்டாசு எல்லாம் வெடிச்சீங்கன்னா… இவங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும். பார்வை தெரியாதவங்க என்பதால் இவங்களுக்கு பட்டாசு வெடிக்க ஆசை இருந்தாலும் வெடிக்க முடியாது.”

“ஓ.கே. சார்… இந்த முறை என்னோட தீபாவளி அவங்க கூடத் தான். DON’T WORRY!” என்றேன். இல்லத்தின் பிற தேவைகள் பற்றி ராதாகிருஷ்ணன் அவர்களிடம் கேட்டபோது, “நீங்கள் ஒரு முறை நேரில் வாங்க சார்… நம்ம இல்லத்தையும் பார்த்தமாதிரி இருக்கும்…ஸ்டூடண்ட்ஸ் கிட்டே இண்டராக்ட் பண்ண மாதிரியும் இருக்கும்” என்றார்.

இதையடுத்து, கடந்த ஞாயிறு காலை உழவாரப்பணியை முடித்துவிட்டு வந்து மதியம் சற்று ஓய்வெடுத்துவிட்டு மாலை நங்கநல்லூர் சென்றோம். நங்கநல்லூர் சப்வே அருகிலேயே நமக்காக காத்திருந்து நம்மை அழைத்து சென்றார் திரு.ராதாகிருஷ்ணன்.

நங்கநல்லூர் சர்வமங்கள நகரில் உள்ள இவரது வீட்டில் மாடியில் உள்ள மிகப் பெரிய டபுள் பெட்ரூம் போர்ஷனை நிலாச்சாரலுக்கு கொடுத்துள்ளார் ராதாகிருஷ்ணன். நாம் சென்ற நேரம் 7 மாணவிகள் இல்லத்தில் இருந்தனர். மேலும் மூன்று மாணவிகள் படிக்க சென்றிருந்தனர். ஒரு மாணவி தனது தாயாருக்கு ஆப்பரேஷன் என்பதால் ஊருக்கு சென்றிருந்தார். இருவர் அவர்கள் கல்லூரி ஹாஸ்டலில் தங்கி படிக்கின்றனர். (வந்து செல்வது அவர்களுக்கு கடினமாக இருக்கும். ஆகையால் வார இறுதிகளில் மட்டும் அவர்கள் இங்கே வருவர்!)

நாம் சற்று நேரம் அவருடன் பேசிக்கொண்டிருந்தோம். இங்கு பெண்களை பார்த்துக்கொள்ளும் முத்தம்மா என்கிற அம்மாவை நமக்கு அறிமுகம் செய்துவைத்தார்கள். முத்தம்மா திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர். முத்தம்மாவின் கணவர் ஒரு விவசாயி. மகள் கட்டிடத் தொழிலாளி. 5 வயதில் பேத்தி இருக்கிறாள். இந்த இல்லத்தை பொறுத்தவரை, இங்கேயே இருந்து மாணவிகள் அனைவரையும் பார்த்துக்கொள்வது மற்றும் அவர்களுக்கு சமைப்பது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்வது முத்தம்மா தான்.

திரு.ராதாகிருஷ்ணன் அவரை அறிமுகம் செய்து வைத்ததும் “நீங்கள் செய்து வரும் பணி மிகப் பெரியது அம்மா…” என்று கூறி அவர்களின் கால்களில் வீழ்ந்து ஆசிபெற்றேன். அனைத்து அறைகளையும் சுற்றி பார்த்தோம்.

ஹாலில் ஒரு தம்பதியினர் வந்திருந்து மாணவிகளுக்கு அவர்கள் பாடம் சம்பந்தமாக ஏதோ சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தனர். கணவன், மாணவிகளுக்கு அவர்கள் எழுத்துப் பணியில் உதவிக்கொண்டிருந்தார். மனைவி ஒரு மாணவியிடம் பாடம் சம்பந்தமாக உரையாடிக்கொண்டிருந்தார்.

சேவை செய்ய கோடிகள் தேவையில்லை! மனம் மட்டுமே போதும்!!

உள்ளே ஒரு அறையில் ஒரு மாணவிக்கு ஒரு பெண் ரீடராக வந்திருந்து பாடங்களில் எழுதி உதவிக்கொண்டிருந்தார்.

DSC04878
ரம்யா (இடது புறம்) ஒரு பார்வையற்ற மாணவிக்கு படிப்பில் உதவுகிறார்

“இவர் பெயர் ரம்யா. சாப்ஃட்வேர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார் இவர். தனது ஒய்வு நேரத்தில் இங்கு வந்து, இங்குள்ள மாணவிகளுக்கு ரீடராக இருந்து உதவுகிறார்” என்று கூறி நமக்கு அறிமுகப்படுத்தினார் திரு.ராதாகிருஷ்ணன்.

இந்த வயதில் அதுவும் ஐ.டி. துறையில் பணிபுரியும் இவர் வார இறுதியில் இங்கு வந்து பார்வையற்ற ஒரு மாணவிக்கு கல்விப் பணிகளில் உதவுவதை என்னவென்று சொல்வேன்… எப்படி சொல்வேன்… பார்க்கவே மனதுக்கு இதமாக சந்தோஷமாக இருந்தது.

ரம்யாவை பார்க்க நேர்ந்ததே நான் செய்த புண்ணியம் என்று தான் சொல்லவேண்டும். இப்படி ஒரு பெண்ணை பெற்றதற்கு ரம்யாவின் பெற்றோருக்கு நம் தளம் சார்பாக ஒரு ராயல் சல்யூட். “ரம்யா… உங்கள் பணி மேன்மேலும் தொடர, உங்கள் தொண்டுள்ளம் மற்றவர்களுக்கும் பரவ இந்த தளம் சார்பாக வாழ்த்துக்கள்”.

ரம்யாவை போன்று அக்கம்பக்கத்தில் உள்ள பலர் இவரது இந்த சேவையில் தங்களையும் இணைத்துக்கொண்டு தங்களால் இயன்ற சிறு சிறு உதவிகளை இம்மாணவிகளுக்கு செய்து வருகின்றனர். தினமும், பஸ்ஸில் இவர்கள் கல்லூரிக்கு சென்று வரும்போது, டிரைவர் சரியாக இவர்களை பார்த்து கவனத்துடன் ஏற்றிக்கொண்டு செல்கிறார். இவர்கள் குறித்த நேரத்தில் பேருந்து நிறுத்தத்திற்கு சென்றுவிடுகின்றனர். என்றாவது ஒரு நாள் தாமதமானால், ஓரிரு நிமிடங்கள் நின்று இவர்களை ஏற்றிக்கொண்டு செல்கின்றனர். அதே போன்று பாரிமுனையில் இருந்து பேருந்தை எடுக்கும்போது இம்மாணவிகளில் ஒருவருக்கு டிரைவர் மிஸ்டு கால் கொடுத்துவிடுவார். இவர்கள் சரியாக கல்லூரியில் இருந்து கிளம்பி குவீன் மேரீஸ் பஸ் ஸ்டாப்பிங்கில் வந்து நின்று விடுவர். பஸ் வரும்போது சரியாக பஸ்ஸை பிடித்து இவர்கள் இருட்டுவதற்குள் வந்து சேர்ந்துவிடுகின்றனர். எத்தனை பெரிய சேவை?

அதே போன்று அக்கம் பக்கத்தில்லுள்ளவர்கள் தங்கள் வீட்டில் தங்கள் குழந்தைகள் உண்பதற்கு பஜ்ஜி, போண்டா, முறுக்கு, சோமாஸ் போன்ற பட்சணங்கள் செய்தால் அவைகளை ஒரு டப்பாவில் போட்டு இவர்கள் அனைவரும் சாப்பிடுவதற்கு தங்கள் குழந்தைகளிடம் கொடுத்து அனுப்புவார்களாம். புண்ணியத்திற்கு புண்ணியம். குழந்தைக்கு நல்ல விஷயம் சொல்லிக் கொடுத்தது போல ஆச்சு. இவர்களிடம் பட்சணங்கள் கொடுக்க வரும் குழந்தைகள் இவர்களை பற்றி அறிந்துகொள்ளும்போது தாங்கள் எந்தளவு சௌகரியங்களை அனுபவித்து வருகிறோம் என்பதை நினைத்து பார்த்து, அதன் அருமை உணர்ந்து நடந்துகொள்கிறார்களாம்.

இப்போதும் சொல்கிறேன்… பலர் தங்கள் குழந்தைகள் படிப்பில் படு சுட்டியாக இருக்கிறார்களா என்பதை மட்டுமே பார்த்து அதையே ஒரு அளவுகோலாக வைத்து வளர்க்கிறார்கள். பிள்ளைகளை அப்படி வளர்ப்பதால் எதிர்காலத்தில் எந்த பயனும் இல்லை. அவர்கள் வளர்ந்து பெற்றோரை காப்பாற்றுவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே பிள்ளைகளுக்கு படிப்பினூடே இது போன்ற நல்ல விஷயங்களை சொல்லிக் கொடுத்து அவற்றை அவர்களை கொண்டே செய்ய வைத்து வழக்கப்படுத்தி வளர்ப்பது நல்லது. (மேற்கு மாம்பலம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் நாம் மார்கழி மாத உற்சவத்தின் போது ஆற்றிய உரை – பிள்ளைகளுக்கு என்ன சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்? http://rightmantra.com/?p=3898)

அடுத்து மாணவிகள் மத்தியில் திரு.ராதாகிருஷ்ணன் நம்மை அறிமுகப் படுத்தி, “சார் www.rightmantra.com அப்படிங்கிற ஒரு வெப்சைட் நடத்திட்டு வர்றார். அதுல நிறைய நல்ல விஷயம் பதிவு பண்ணிட்டு வர்றார். உங்க கிட்டே கொஞ்சம் பேசணும்னு சொல்றார். பேசுங்க. அவர்கிட்டே ஏதாவது கேட்கனும்னா தயங்காம கேளுங்க. உங்களுக்கு இனி ரெகுலரா உதவப்போகிறவர்களுள் சாரும் ஒருத்தர். தீபாவளிக்கு உங்க எல்லாருக்காகவும் INNER GARMENTS & FANCY JEWEL KITS ஐ அவரும் அவரோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து வாங்கித் தரப்போறாங்க. தவிர உங்களுக்கு தேவைப்படுற வேற பொருட்களும் சார் வாங்கித் தரப்போறார்!” என்று பலவாறாக எடுத்துக்கூறினார்.

மாணவிகளுடன் பரஸ்பர அறிமுகங்கள் முடிந்த பின்னர்… சகஜமாக பேச ஆரம்பித்தோம்.முக்கிய விஷயங்களை மட்டும் இங்கு உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

DSC04898“உங்களுக்கு பார்வை கிடையாது என்கிற காரணத்தினால் வாழ்க்கையில் எத்தனையோ பேர் உங்கள் புறக்கணித்திருப்பார்கள். அவமதித்திருப்பார்கள். ஏன் உங்கள் குடும்பத்தினர் மத்தியில் கூட ஒரு கட்டத்தில் உங்களை பாரமாக கருதியிருக்கக்கூடும். அவர்கள் அத்தனை பேர் மத்தியிலும் நீங்கள் வாழ்ந்து காட்டவேண்டும். வாழ்ந்து காட்டுவதைவிட பழிவாங்கும் செயல் வேறு எதுவும் இல்லை. வாழ்ந்து காட்டுங்கள். உங்களை அவமதித்தவர்களுக்கும் நல்லதையே செய்யுங்கள். திருவருள் துணை நின்று உங்களை வழிநடத்தும். நிறைவேறுமா நிறைவேறாதா என்பதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒவ்வொருவரும் வாழ்வில் ஒரு உயர்ந்த உன்னத லட்சியத்தை வைத்துக்கொள்ளுங்கள். அதை நோக்கியே உங்கள் ஒவ்வொரு செயலும் அமையவேண்டும். அப்போது அதற்குரிய வழிகள் தானாகவே ஏற்படும். லட்சியத் தீ நமக்கு கனன்று எரிய ஆரம்பித்துவிட்டால், இப்படி பிறந்துவிட்டோமே என்கிற சுயபச்சாதாபம் ஏற்படாது!” – ஏதோ எனக்கு தெரிந்த நான் பின்பற்றும் சில தன்னம்பிக்கை ஃபார்முலாக்களை அவர்களுக்கு சொல்லிக்கொண்டிருந்தேன்.

WHAT IS THE DIFFERENCE BETWEEN SIGHT & VISION?

என் வாழ்க்கையில் எனக்கு ஒரு புதிய பாதையை காட்டியதில் முக்கிய பங்கு வகித்த பார்வைத்திறன் சவால் கொண்ட சாதனையாளர் திரு.இளங்கோ அவர்களை பற்றி அவர்களுக்கு எடுத்துக்கூறி அவர் வாழ்க்கையில் நடைபெற்ற சில முக்கிய தன்னம்பிக்கையூட்டும் சம்பவங்களை எடுத்துக்கூறி அவர் எப்படி விதியை தனது மதியால் வென்றாரோ அதே போல நீங்களும் வெல்லவேண்டும் என்று கூறினேன். ஒரு நாள் இளங்கோ அவர்களை இவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பதாக கூறினேன். அந்த நாளுக்காக காத்திருப்பதாக கூறினார்கள்.

தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கையில்… “சரி… WHAT IS THE DIFFERENCE BETWEEN SIGHT & VISION? உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டேன்.

மாணவிகள் சற்று யோசித்தார்கள். திடீரென்று நான் இப்படி ஒரு கேள்வியை கேட்டதில் சற்று திணறினார்கள். தவிர அவர்களை பொறுத்தவரை நான் புதியவன். எனவே சற்று கூச்சப்பட்டார்கள்.

“SIGHT என்றால் அது ஒரு பிரதிபலிப்பு. ITS JUST A REFLECTION. அவ்வளவே. ஆனால் VISION என்றால் அது தான் பார்வை. அகப்பார்வை. ஒருவர் தனக்கு SIGHT இல்லையென்றால் வருத்தப்படவேண்டியதில்லை. ஆனால் VISION இல்லையென்றால் நிச்சயம் வருத்தப்படவேண்டும். வெட்கப்படவேண்டும். உங்களை பொறுத்தவரை உங்கள் அனைவரிடமும் ஒரு VISION உள்ளது. கண்கள் இல்லையென்றாலும் உண்மையில் நீங்கள் தான் பார்வையுள்ளவர்கள். ஆனால், பலர் கண்ணிருந்தும் குருடர்களாய் இந்த சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்!” என்றேன். நம் உரையை அவர்கள் மிகவும் ரசித்தார்கள்.

ஒவ்வொருவரும் என்னவாக விரும்புகிறார்கள் என்று கேட்டு தெரிந்துகொண்டேன். தனசூரியா ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி வெற்றி பெற்றே தீருவது என்று ஒரு வெறியோடு இருக்கிறார்.

RIGHTMANTRA.COMன்னு பேர் வெச்சேன் தெரியுமா?

அவர்களோடு மேலும் சற்று நேரம் சுவாரஸ்யமாக உரையாட விரும்பினேன். “எங்க வெப்சைட்டுக்கு ஏன் RIGHTMANTRA.COMன்னு பேர் வெச்சேன் தெரியுமா?” நாம் கேட்க கனத்த மௌனம் நிலவியது. நம் தளம் பற்றியோ அதன் பணிகள் பற்றியோ இவர்கள் முன்பின் அறிந்திருக்கவில்லை. தற்போது தான் தெரியும். எனவே சற்று யோசித்தார்கள். “தெரியலே சார்… நீங்களே சொல்லுங்க” என்பது போல உதட்டை பிதுக்கினார்கள்.

“சரி… ஓ.கே. MANTRA அப்படினா என்னன்னு தெரியுமா?”

“மந்திரம்… ஸ்தோத்திரம்… ஸ்லோகம்…. தியானம்” அப்படி இப்படி என்று ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த ஒரு பதிலை கூறினார்கள்.

“MANTRA என்பது சமஸ்க்ருத, தமிழ் வார்த்தை மட்டும் அல்ல. அது உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஒரு ஆங்கில வார்த்தை. OXFORD DICTIONARY, MACMILLAN DICTIONARY உள்ளிட்ட பல ஆங்கில அகராதிகளில் MANTRA என்னும் வார்த்தைக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. MANTRA என்றால் FORMULA என்கிற ஒரு அர்த்தமும் உண்டு. சரியான வாழ்க்கைக்கு தேவையான சரியான வழியை அதாவது ஃபார்முலாவை (RIGHTWAY FOR THE RIGHT LIFE) காட்டும் தளம் என்பதால் இதற்கு RIGHTMANTRA என்று பெயர் வைத்திருக்கிறேன்!”

நம் விளக்கத்தை கேட்டதும் ஒரு புது விஷயத்தை தெரிந்துகொண்டதை எண்ணி அவர்களுக்கு அத்தனை சந்தோஷம்.

தனசூரியாவின் கைகளில் இருப்பது BRAILLE DICTIONARY
தனசூரியாவின் கைகளில் இருப்பது BRAILLE DICTIONARY

நாம் பேசிக்கொண்டிருக்கும்போதே தனசூரியா உள்ளே சென்று பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் BRAILLE DICTIONARY கொண்டு வந்து அதில் அந்த வார்த்தையை தேடினார். அவருக்கு தான் அதில் எத்தனை ஆர்வம் என்று வியந்தேன்.

“எந்த சூழ்நிலையிலும் உங்கள் ஐ.ஏ.எஸ். கனவை விடாது பற்றியிருந்து அதை அடையவேண்டும். நிலாச்சாரலுக்கு பெருமை சேர்க்க வேண்டும்!” என்றேன்.

“உங்க எல்லாருக்கும் ஒரு முக்கிய விஷயம்…. வர்ற தீபாவளியை உங்களோடத் தான் ஸ்பென்ட் பண்ணப்போறேன். நாமெல்லாம் சேர்ந்து பட்டாசு மத்தாப்பு வெடிக்கப்போறோம்.” – நான் சொன்னது தான் தாமதம். அவர்கள் முகத்தில் ஏற்பட்ட அந்த பரவசத்தை பார்க்கவேண்டுமே… அத்தனை சந்தோஷம் அவர்களுக்கு.”உங்களுடன் சேர்ந்து பட்டாசு வெடிக்கப்போகிறேன்” என்று சொன்னதற்கே இத்தனை சந்தோஷம் என்றால் கொண்டாடும்போது அவர்களுக்கு எத்தனை சந்தோஷமாக இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

DSC04901

“டிசம்பர் 8, ஞாயிற்றுக் கிழமை ரைட்மந்த்ரா சார்பாக பாரதி விழா நடக்கப்போகுது. மேடையில் உங்களோட ரோல் ஏதாவது ஒரு வகையில இருக்கணும். உங்களால என்ன செய்ய முடியும்னு யோசிச்சு சொல்லுங்க” என்றேன். அனைவரும் அத்தனை வேகமாக “ஒ.கே. சார்” என்றார்கள் கோரஸாக. பாரதி என்றதும் தான் அவர்களுக்கு எத்தனை சந்தோஷம் தெரியுமா?

“கூடிய விரைவில் தீபாவளிக்கு முன்னர் எங்கள் வாசகர்களுடன் உங்களுக்கு தேவைப்படுற பொருட்களை வாங்கிக்கொண்டு உங்களை வந்து சந்திக்கிறேன்!” என்று கூறி விடைபெற்றேன்.

[END]

3 thoughts on “What is the difference between SIGHT & VISION?

  1. Happy morning to Sundarji and Right mantra team

    Your Right Mantra definition is very good. The meeting arranged by you yesterday with Nila Charal team is very fantastic. Yesterday was a great day for us for spending such a wonderful time with them. My pranam to Mr.Radhakrishnan Sir.
    Regards
    Uma

  2. நேற்று ஒரு நல்ல விசயத்திற்கு நேரத்தை பயன்படுத்த வைத்த
    சுந்தர் சார் அவர்களுக்கு என் நன்றி.
    nilacharal ஆசிரமத்தில் உள்ள அனைவரும் தனக்குள் ஒரு திறமையை வைத்து கொண்டு கல்லூரியில் படிக்கிறார்கள்.
    அவர்களிடம் உள்ள எதையும் positive ஆக நினைக்கும் குணம் எனக்கு மிகவும் பிடித்தது.
    நமது prayer club திரு.கோமகன் அவர்களை எடுத்து சொல்லிய உடன் அவர்கள் முகத்தில் அப்படி ஒரு சந்தோசம்.
    நமக்காக அனைவரும் ஒவ்வொரு பூக்களுமே பாட்டை சேர்ந்து பாடி நம்மை சந்தோசம் சொல்ல வைத்தார்கள்.
    நமக்காக பிரார்த்தனை நேரத்தில் பிரார்த்தனை செய்தார்கள்.

  3. i am sure you and other members of our website will have a meaningful and a very memorable Deepavali. May your presence light lamps and remove the darkness in their (Nila Chaaral resident’s) life. With Best Wishes. C.R

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *