Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, September 12, 2024
Please specify the group
Home > Featured > விழியில்லையானால் என்ன… இதோ இருக்கிறது வாழும் வழி! – UNSUNG HEROES 4

விழியில்லையானால் என்ன… இதோ இருக்கிறது வாழும் வழி! – UNSUNG HEROES 4

print
ம் கண்களை சற்று நன்றாக திறந்து நம்மை சுற்றி ஒரு முறை பார்த்தால் தெரியும்… நாம் எத்தனை பாக்கியசாலிகள் என்று! நம்மை சுற்றிலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலர் நமது கடைக்கண் பார்வையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். நாம் செய்யும் ஒவ்வொரு சிறு சிறு உதவி கூட அவர்களை பொருத்தவரை மிகப் பெரிய ஆறுதல். ஒரு மிகப் பெரிய வித்தியாசத்தை அவர்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தும் என்றால் மிகையாகாது.

suryakalaஇரண்டு வயதாக இருக்கும் போது அம்மை நோய் வந்து சூரியகலாவுக்கு பார்வை பறிபோனது. மறுபடியும் பார்வை கிடைக்கும் என்கிற நம்பிக்கையே இல்லாமல் தான் அவர் வாழ்ந்து வந்தார். ஆனால் இருபது ஆண்டுகள் கழித்து அவருக்கு மீண்டும் பார்வை கிடைத்தபோது அவர் அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை. 2013 ஆண்டு ஏப்ரல் மாதம் பம்மல் சங்கரா கண் மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சையில் அவருக்கு பார்வை கிடைத்தது.

சூரியகலா வேலூர் மாவட்டத்தை அடுத்து குடியாத்ததம் அருகே உள்ளே செம்பேடு என்னும் கிராமத்தை சேர்ந்தவர். பி.ஏ. ஆங்கில இலக்கியம் படித்துள்ள இவர் தற்போது பி.எட். படித்து வருகிறார்.  அதுமட்டுமல்ல, டைப் ரைட்டிங் ஹையர் & லோயர், கணிப்பொறி பயன்பாட்டில் டிப்ளமோ, டெலிபோன் ஆப்பரேட்டர் கோர்ஸ் இவையெல்லாம் கூட முடித்துள்ளார். (இவையெல்லாம் இவர் பார்வையில்லாதபோது படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.) சூர்யகலா இப்போது சென்னையில்  உள்ள ஒரு IT கம்பெனியில் வேலை செய்கிறாள். மாதம் ரூ. 9000/- சம்பளம்.

இந்த அற்புதம் யாராலே சாத்தியமாயிற்று?

தன்னலமற்ற சேவையில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு வரும் ‘ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன் அறக்கட்டளை’யின் நிறுவனர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்களால்.

ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவுவது, மருத்துவ உதவி தேவைப்படும் ஏழைகளுக்கு உதவுவது, வசதியற்ற குடும்பத்தை சேர்ந்த பெண்களின் திருமணத்திற்கு உதவுவது, மற்றும் அன்னதானம் உள்ளிட்ட பல அறப்பணிகளை தனது அறக்கட்டளை மூலம் இவர் செய்து வந்தாலும் அவற்றில் முதன்மையானது பார்வைத் திறன் சவால் கொண்ட மாணவிகளுக்கு உதவுவது.

P1000877

கிராமப்புறத்திலுள்ள வசதியற்ற குடும்பங்களை சேர்ந்த பார்வைத் திறன் சவால் கொண்ட சுமார் 14 மாணவிகள் நங்கநல்லூரில் உள்ள இவரது  நிலாச்சாரல் ஆஷ்ரமத்தில் மறுவாழ்வு பெற்றுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, தங்குவதற்கு இடம், கல்வி மற்றும் மருத்துவ உதவி ஆகிய அனைத்தையும் இந்த அமைப்பு மூலம் அளித்துவருகிறார் ராதாகிருஷ்ணன்.

யார் இந்த ராதாகிருஷ்ணன் ?

எதற்க்காக இந்த சேவையை அவர் செய்யவேண்டும்?

யார் இந்த ராதாகிருஷ்ணன் ? எதற்க்காக இந்த சேவையை அவர் செய்யவேண்டும்? நிலாச்சாரல் என்கிற பெயரை ஏன் தனது அமைப்புக்கு வைத்திருக்கிறார்?

Radhakrishnanசங்கீத பிதாமகர் செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயரின் மூத்த சகோதரர் சுப்ரமணிய ஐயரின் பேரன் இவர். கிண்டி உள்ளிட்ட நகரின் பிரதான இடங்களில் இந்தியன் வங்கி கிளைகளில் மேலாளராக பணியாற்றியிருக்கிறார். இவரது மனைவி ராஜேஸ்வரியும் வங்கி மேலாளராக இருந்தவர் தான். இவரது மகள் அனுஷாவுக்கு 12 வயது இருக்கும்போது எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு இறைவனடி போய் சேர்ந்துவிட்டார் ராஜேஸ்வரி. அவரது நினைவாக ‘ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன் அறக்கட்டளை’யை துவங்கி ஏழைப் பெண்களுக்கு இது போன்ற சேவைகள் செய்துவருகிறார்.

அவரது மனைவி ராஜேஸ்வரிக்கு ஆதரவற்ற பெண்களுக்கு நிறைய செய்ய வேண்டும் என்கிற ஆசை உண்டு. அவர் வாழ்ந்த காலத்தில் செய்தும் இருக்கிறார். அவர் மறைந்த பிறகு அவரது கனவை நனவாக்க வேண்டியே இந்த சேவையில் தம்மை ஈடுபடுத்தி வருகிறார் ராதாகிருஷ்ணன். நிறைந்த பௌர்ணமி நாளில் அவர் தம்மை விட்டு மறைந்ததால் இந்த இல்லத்துக்கு ‘நிலாச்சாரல்’ என்கிற பெயரை வைத்திருக்கிறார்.

இவரது அறக்கட்டளையின் பிரதான நோக்கம் பார்வையற்ற வறுமையில் வாடும் குடும்பங்களை சேர்ந்த கிராமப்புற மாணவிகளுக்கு மறு வாழ்வளிப்பது மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள இளம் விதவைகளின் குழந்தைகளுக்கு 100% முழுமையான கல்வியை தருவதும் தான்.

தவிர இந்தியா முழுவதும் உள்ள பார்வையற்ற மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஒரு மின்னணு-ஒலி நூலகத்தை (E-Audio Library) துவக்கும் யோசனையில் இருக்கிறார். அதாவது அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் போல எதிர்காலத்தில் அது வளரவேண்டும் என்று விரும்புகிறார். எத்தனை பெரிய பயணமும் ஒரு சிறிய அடியில் இருந்து தானே துவங்குகிறது?

இவரது இந்த திட்டத்திற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை செய்வதாக மாநில கல்லூரியின் (PRESIDENCY COLLEGE) மின்னணு நூலகத்தின் பொறுப்பாளாராக உள்ள பார்வைத்திறன் சவால் கொண்ட ஆங்கில உதவி பேராசிரியர் திரு.பிரசன்ன குமார் உறுதியளித்திருக்கிறார். அதே போல செங்கல்பட்டு அரசுக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் பார்வைத்திறன் சவால் கொண்ட திரு.நாகராஜன் என்பவர் 5000 நூல்களுக்கும் மேல் இந்த மின்னணு-ஒலி நூலகத்திற்கு பதிவு செய்து தந்துள்ளார். திரு.நாகராஜன் மாநில பார்வையற்ற பட்டாதாரிகள் & மாணவர் கூட்டமைப்பின் தலைவராவார்.

இதுவரை இந்த மின்னணு-ஒலி நூலகத்திற்காக சுமார் 15,000 நூல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அடுத்தாண்டு இதன் துவக்கவிழா நடைபெறும் எனத் தெரிகிறது.

Comp class

மாணவிகளுக்கு கணிப்பொறி வகுப்பும் உண்டு. இதற்காக பார்வையற்ற ஆசிரியர் ஒருவரை அமர்த்தி அவருக்கு ஒரு செஷனுக்கு ரூ.200/- வீதம் அளித்து இம்மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் கல்வி கற்பித்து வருகிறார் ராதாகிருஷ்ணன்.

இவரது டிரஸ்ட்டின் மூலம் உதவி பெற்று தற்போது பி.எட். படித்து வருகிறார் திரு.வெங்கலமூர்த்தி என்னும் இளைஞர். இது என்ன பெரிய விஷயம் என்கிறீர்களா? வெங்கலமூர்த்தி பிறவியிலிருந்தே இரு கண்களிலும் பார்வையற்றவர். இவரது உடன் பிறந்த சகோதரர்களில் ஒருவருக்கு மனவளர்ச்சி இல்லை, மற்றவருக்கு வாய் பேசவராது. இவர் தந்தை லோக்கல் லாரி ஷெட் ஒன்றில் சுமை தூக்கும் தொழிலாளியாக இருக்கிறார். இப்படிப் பட்ட குடும்பத்தில் இருந்து வந்த பார்வையற்ற வெங்கலமூர்த்தி தனது பி.ஏ. பட்டப்படிப்பில் எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? 66%.

IMG_20131014_075327
பார்வைத் திறன் சவால் கொண்ட திரு.வெங்கலமூர்த்தி கல்வி உதவி பெறுகிறார்!

இவரது மேல்படிப்புக்கு உதவுவது எத்தனை பெரிய தொண்டு..! அதை தான் ‘ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன் அறக்கட்டளை’ செய்திருக்கிறது.

 இந்த அழகான குழந்தைக்கு இரு கண்களிலும் பார்வை கிடையாது!

இந்த அழகான குழந்தைக்கு இரு கண்களிலும் பார்வை கிடையாது!

அருகே உள்ள படத்தில் நீங்கள் காணும் இந்த அழகான குழந்தையின் பெயர் சத்யப்ரியா. இவளுக்கு இரண்டு கண்களும் தெரியாது என்றால் நம்பமுடிகிறதா? இந்த குழந்தையின் பெற்றோர் இருவரும் பார்வையற்றவர்கள். வறுமையில் வாடுபவர்கள். பொம்மைகள், மிட்டாய்கள் இவைகளை விற்று தங்கள் வாழ்க்கை சக்கரத்தை ஓட்டி வருகின்றனர். பார்வையுடையை சராசரி பெற்றோரே தங்கள் பள்ளி செல்லும் குழந்தைகளை பார்த்துக்கொள்ள முடியாது தவிக்கின்றனர். இவர்கள் எப்படி பார்வையற்ற தங்கள் குழந்தையை படிக்கவைத்து பாதுகாப்பாக கவனித்துகொள்ளமுடியும்? சத்யப்ரியாவை தத்தெடுத்து, அவளது கல்லூரி படிப்பு வரை அவளது முழு படிப்பு செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளது ‘ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன் அறக்கட்டளை’. குழந்தை சத்யப்ரியா தற்போது LITTLE FLOWER CONVENT FOR BLIND ல் முதல் வகுப்பு படித்து வருகிறாள். அவள் வளர்ந்து ஆளாகும் வரை அவள் கல்வி செலவு முழுவதும் ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன் அறக்கட்டளையை சேர்ந்தது.

ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன் அறக்கட்டளையை சேர்ந்த பார்வையற்ற மாணவிகள் தங்கி படிக்கும் நிலாச்சாரல் ஆஷ்ரமத்தை சேர்ந்த பார்வையற்ற மாணவி பி.தனசூரியா திருவண்ணாமலை மாவட்டத்திலேயே முதல் மாணவியாக வந்து, முதலமைச்சர் கையால் பரிசும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேல்படிப்பு படித்து ஐ.ஏ.எஸ். அதிகாரியாக வர வேண்டும் என்பது தனசூரியாவின் ஆசை.  தனசூரியாவின் பெற்றோர் விவசாயத்தையே நம்பி வாழும் ஒரு சராசரி கிராமப்புற ஏழை பெற்றோர். கண் தெரியாத தங்களின் செல்ல மகளின் கனவை எப்படி நனவாக்குவது என்று அந்த ஏழைப் பெற்றோர் தவிக்க, அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியது ‘ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன் அறக்கட்டளை’.

அவளது ஐ.ஏ.எஸ். கனவை தெரிந்துகொண்ட நிலாச்சாரல் நிறுவனர் திரு.ராதாகிருஷ்ணன் தனசூரியவுக்கு இங்கு இடம் அளித்து, அவரை ராணி மேரிக் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் சேர்த்திருக்கிறார். ஆரம்பக் கல்வி முதல் பிளஸ் டூ வரை தமிழ் வழிக் கல்வியே படித்திருந்த தனசூரியா தற்போது பி.ஏ. ஆங்கில இலக்கிய வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? சராசரியாக 70%. சபாஷ்!!!!

மேலும் கிருஷ்ணம்மாள் ஜகன்னாதன் என்பவரின் LAFTI – LAND FOR TILLERS’ FREEDOM – ‘உழுபவர்களுக்கே நிலம் சொந்தம்’ இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஏழ்மையும் அறியாமையும் சூழ்ந்துள்ள கிராமங்களில் உள்ள வசதியற்ற குடும்பங்களுக்கு வட்டியில்லாத கடன்கள் (Interest Free Loan) ‘ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன் அறக்கட்டளை’யால் அளிக்கப்படுகிறது. ரூ.10,000/- கொடுத்தால் அதை ரூ.200/- வீதம் 50 மாதங்களுக்கு கட்டவேண்டும்.

DSC04734

இந்த வட்டியில்லா கடன் மூலம் தையல் மிஷின் உள்ளிட்டவைகளை வாங்கி கிராமப்புறத்தில் உள்ள ஏழை பெண்களுக்கு சுயவேலை வாய்ப்பு அமைத்து தரப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 40 பெண்கள் பயன்பெறுகிறார்கள். சுய தொழில் முனைவோர்கள் ஆகிறார்கள். இதை கடனாக இல்லாமல் இனாமாகவே கொடுத்துவிடலாம். ஆனால், கடனாக கொடுத்தால் தான் அதன் அருமை உணர்ந்து தொழிலை கற்றுக்கொள்ள ஆர்வம் கட்டுவர். பொறுப்புணர்வும் இருக்கும்.

DSC04738

தையல் மிஷின் மட்டுமல்ல பாய்கள் நெய்வதற்கு தேவையான அடிப்படை மூலப் பொருளான கோரைப் புற்கள் வாங்குவதற்கும் வட்டியில்லா கடனுதவி வழங்கப்படுகிறது. இதுதவிர 20 குடும்பங்களுக்கு கறவை மாடுகள் வாங்கவும் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதன் மூலம் அக்குடும்பங்கள் பால் விற்பனை செய்து வருவாய் ஈட்ட முடியும்.

இப்படி இந்த அறக்கட்டளைகளின் சேவைகளை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்…!

Mail id: mail2srrct@gmail.com | Website: www.srrct.org

===========================================================

நம் தளத்தின் தீபாவளி பணி !

திரு.ராதாகிருஷ்ணன்  அவர்களின் சேவையில் நம்மையும் இணைத்துக்கொள்ள விரும்பி அவரை தொடர்புகொண்டு, நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு வரும் தீபாவளிக்கு இம்மாணவிகள் அனைவருக்கும் உடை எடுத்துகொடுக்க நம் விருப்பத்தை தெரிவித்தோம். ஆனால் இந்த முறை மாணவிகளுக்கு போதுமான அளவு உடைகள் கிடைத்துவிட்டதாகவும் சென்ற வாரம் நவராத்திரியின்போது தான் அதை அவர்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி கூட நடைபெற்றதாகவும் கூறினார் திரு.ராதாகிருஷ்ணன்.  (அதன் புகைப்படங்கள் தான் நீங்கள் கீழே காண்பது).

WABCO-TVS நிறுவனத்தில் பணிபுரியும் காயத்ரி சுந்தர் அவர்கள் கடந்த நவராத்திரியை முன்னிட்டு மாணவிகளுக்கு வளையல், தோடு, மாலை ஆகியவை அடங்கிய FANCY SETS வழங்கியபோது எடுத்த படம்!

“வேறு என்ன வேண்டும் சொல்லுங்கள்” என்று கேட்டபோது, மாணவிகளுக்கு உள்ளாடைகள் தேவைப்படுவதாகவும் (INNER GARMENTS) அதை வாங்கி தந்தால் சௌகரியமாக இருக்கும் என்று கூறினார். நம் தளத்தின் பெண் வாசகியர் எவரையாவது மாணவிகளுடன் பேசச் செய்து, அவர்கள் இதர தேவைகள் மற்றும் உள்ளாடைகளின் அளவுகள் இவற்றை தெரிந்து கொள்ளும்படி கூறினார். எனவே நம் பணிகளில் துணை நிற்கும் வாசகிகளில் ஒருவரை இம்மாணவியரிடம் பேச வைத்து அவர்களது சரியான தேவைகளை குறித்த பட்டியலை தயார் செய்துவிட்டோம். அனைத்தும் வரும் தீபாவளிக்குள் அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

அம்பிகை வளர்த்த அறம் இது!
அம்பிகை வளர்த்த அறம் இது!

மேலும் மாணவிகளுக்கு என்ன தேவைப்படுகிறது என்று விசாரித்ததில், மாணவிகள் தீபாவளிக்கு அணிய வளையல், நெக்லஸ், தோடு ஆகியவை அடங்கிய FANCY ORNAMENT SET தேவைப்படுவதாகவும் கூறினார். இவை பேன்சி ஸ்டோர்களில் கிடைக்கும் என்று அதிகபட்சம் ஒரு செட் ரூ.100/- அல்லது ரூ.150/- க்கு கிடைக்கும் என்றும் கூறினார். நம் தளம் சார்பாக மாணவிகளுக்கு உள்ளாடைகளும், FANCY ORNAMENT SET களும் தீபாவளியை முன்னிட்டு வாங்கித் தருவதாக உறுதியளித்திருக்கிறேன்.

(இந்த பணியில் தம்மை இணைத்துக்கொள்ள விரும்புகிறவர்கள்  நம்மை தொடர்பு கொள்ளவும். தீபாவளிக்கு நாட்கள் குறைவாக உள்ளன.  E-Mail : simplesundar@gmail.com | M : 9840169215)

மாணவிகளின் படிப்பில் உதவ READERS மற்றும் SCRIBES தேவை!

இது தவிர இம்மாணவிகளுக்கு பாடங்களை படித்துக் காட்ட நங்கநல்லூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த READERS தேவைப்படுவதாக (குறிப்பாக பெண்களாக இருந்தால் சௌகரியம்) தெரிகிறது. பாடங்களை படித்துக் காட்டினால் போதும், அதை இம்மாணவிகள் தங்களிடம் உள்ள வாய்ஸ் ரெக்கார்டரில் பதிவு செய்துகொண்டு அவப்போது அதை கேட்டு கேட்டு கற்றுக்கொள்வார்கள். அதே போல தேர்வு எழுத SCRIBES தேவைப்படுவதாகவும் தெரிகிறது. உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இந்த தகவலை பாஸ் செய்து விழி இழந்தோர் வழி காண உதவுங்கள். அதை விட வேறு புண்ணியம் எதுவும் இருக்க முடியாது.

===========================================================

அடுத்த பதிவில்… நங்கநல்லூர் நிலாச்சாரல் ஆஸ்ரமத்திற்கு நாம் நேரில் சென்று மாணவிகளை சந்தித்து அவர்களுடன் அளவளாவிய நிகழ்வும், RIGHTMANTRA என்கிற பெயர் நம் தளத்திற்கு ஏன் சூட்டப்பட்டது, இதில் வரும் MANTRA என்றால் என்ன? இது பற்றியெல்லாம் அவர்களிடம் பேசிய நிகழ்வும், வருங்கால ஐ.ஏ.எஸ். அதிகாரி தனசூரியா, நாம் மேற்படி கேள்வி கேட்டவுடன் செய்தது என்ன என்பது பற்றியும் புகைப்படங்களோடு பார்ப்போம்!

===========================================================

UNSUNG HEROES மற்ற அத்தியாயங்களுக்கு:

http://rightmantra.com/?s=UNSUNG+HEROES&x=0&y=0

11 thoughts on “விழியில்லையானால் என்ன… இதோ இருக்கிறது வாழும் வழி! – UNSUNG HEROES 4

  1. டியர் ஸ்ரீ ராதாகிருஷ்ணன்

    நான் தங்களை பற்றி, திரு சேகர் (சிட்டி யூனியன் பேங்க், சென்னை)
    அவர்களிடம் சொல்லி உள்ளேன். தங்களின் இந்த மின் அஞ்சலையும்
    அவர்களுக்கு அனுப்பியுள்ளேன்.

    அவர்கள் தங்களை தொடர்பு கொள்வார்கள்.

    மிக்க அன்புடன்
    இரா. சேகரன் (அரசவனங்காடு)
    தற்போது சென்னையில்
    (ஹுமர் கிளப் அமைப்பு மூலமாக)

  2. திரு ,ராதாகிருஷ்ணன் அவர்கள் செய்து வரும் சேவை மிகவும் பாராட்டுக்குரியது அவருடைய இந்த சேவைக்கு நான் தலை வணங்குகிறேன்.கடவுள் இப்படிப்பட்டவர்களுக்கு எந்த குறையும் இல்லாமல் வைத்திருக்க வேண்டும் என எல்லாம் வல்ல அந்த இறைவனை பிராத்திக்கிறேன்..

  3. இனிய காலை வணக்கம் சார்

    மிகவும் அருமையான பதிவு

    நன்றி

  4. டியர் சுந்தர் ஜி

    இந்த விதமான தொண்டுகளை பொழுது நான் ஒன்றுமில்லை. கடவுள் அருள் வேண்டும்.

    bala

  5. திரு.ராதாகிருஷ்ணன் அவர்களின் சேவையை பாராட்ட வார்த்தைகளே இல்லை .விழி அற்றவர்களின் வாழ்வுக்கு ஒளி கொடுத்துள்ளார் . கரம் சேர்ப்போம் அவரின் சேவையில் .

  6. திரு ,ராதாகிருஷ்ணன் அவர்கள் செய்து வரும் சேவை மிகவும் பாராட்டுக்குரியது அவருக்கு எமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்

    நன்றி
    உமா

  7. திரு.ராதாகிருஷ்ணன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
    கண் தெரியாத பெண் மக்களுக்கு கண்ணாக இருக்கிறார்.
    மேலும் பல உதவிகள் இல்லாத மக்களுக்கு செய்து வருகிறார்.
    அவர் தன்னலமற்ற தொண்டு மேலும் சிறப்புற ஆண்டவனை வேண்டுகிறோம்.
    இந்த புனித பணியில் எங்களையும் சேர்த்து கொண்ட சுந்தர் சார் அவர்களுக்கு நன்றி.

  8. குரு வின் அணுக்ரம் எப்போதும் அவருக்கு கிடைக்க நான் பாரர்த்திகேறேன்

    பாலாஜி

  9. சுந்தர்ஜி,

    முதலில் திரு ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள். அவருடைய சேவைகளை பாராட்ட அளவே இல்லை. எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு எந்த குறையும் இன்றி தொண்டை ஆற்ற வழி வகுப்பார். எங்களால் முடிந்த உதவியை செய்ய என்றென்றும் கடமை பட்டு உள்ளோம்.

  10. சுந்தர்ஜி,

    திரு ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வணக்கங்கள். அவருடைய சேவைகளை பாராட்ட அளவே இல்லை. எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு எந்த குறையும் இன்றி தொண்டை ஆற்ற வழி வகுப்பார். எங்களால் முடிந்த உதவியை செய்ய என்றென்றும் கடமை பட்டு உள்ளோம். நம் வாசகர்கள் ஒன்று திரண்டு நம் தளம் மூலம் அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும்.

  11. டியர் சார்
    தங்கள் பணி என்றும் தொடரவேண்டும்
    எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்

    Madhavan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *