“இதையெல்லாம் எதுக்கு என்கிட்டே சொல்றே? என்ன என்னை பார்த்த பிளம்பர் மாதிரி இருக்கா? நாளைக்கு என்னோட ஆபீஸ்ல முக்கியமான மீட்டிங் இருக்கு. அதுக்கு பிரசன்டேஷன் ரெடி பண்ணனும். ஆளை விடு…”
சில நாட்கள் கழிந்தது….
“டியர் என்னோட ஸ்கூட்டர் பஞ்சராகியிருக்கு… வெளியே எங்கேயும் போகமுடியலே… அதே போல கிச்சன்ல எக்சாஸ்ட் ஃபேன் சரியா வேலை செய்யலே… அதை சரி பண்ணி தரமுடியுமா?”
“என்ன என்னை பார்த்தா பஞ்சர் ஒட்டுறவன் மாதிரியும், எலக்ட்ரீசியன் மாதிரியும் இருக்கா? நானே ஆபீஸ்ல 1008 வேலை பார்த்துட்டு டயர்டா வர்ரேன்…. போவியா….” – இம்முறையும் அதே பதில்.
அவனுக்கு பாடம் கற்பிக்க முடிவு செய்கிறாள் மனைவி.
அடுத்தநாள் பணிமுடித்து வரும்போது, வீட்டில் அனைத்தும் சரி செய்யப்பட்டிருப்பதை தெரிந்துகொள்கிறான்.
“எப்படி….?” என்று கேட்கிறான்.
“எல்லாம் தெரிஞ்ச ஒரு ஆளை வரவழைச்சேன்… அவன் எல்லாத்தையும் சரி பண்ணிகொடுத்துட்டு போய்ட்டான்…”
எங்கே பில் தாறுமாறாக போயிருக்குமோ என்ற கவலையில்…. “எவ்ளோ ஆச்சு இதுக்கெல்லாம்????”
“எனக்கு பணம் எதுவும் வேண்டாம். பசிக்குது… சாப்பிட ஏதாவது சான்ட்விச் பண்ணி கொடுங்க இல்லே அழகான உங்க உதட்டாலே எனக்கு மூணு முத்தம் கொடுங்க போதும்னு சொன்னான் அவன்!”
கணவன் சற்று கலவரமாகி, “நீ என்ன சான்ட்விச் பண்ணி கொடுத்தே டியர்….?”
மனைவி சொன்னாள்….. “என்னை என்ன பேக்கரில வேலை செய்றவன்னு நினைச்சீங்களா?”
=============================================================
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….
http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
=============================================================
[END]
அருமை நச் பதில் …..
சுந்தர்ஜி
ரியலி சூப்பர்
ஹாப்பி மார்னிங் டு ரைட் மந்தர ரிடர்ஸ்
உமா
ஹி ஹி ..படிக்கும்போதே காமடியாக உள்ளது ஆனால் சிந்திக்கும் வகையிலும் உள்ளது சுந்தர் சார் ..
இந்த முறை உழவாரப்பனிக்கு என்னால் கலந்துகொள்ள முடியவில்லை..அவசரமாக மருத்துவமனை செல்ல வேண்டிய சூழ்நிலை.. என் தகப்பனாருக்கு மருத்துவமனைக்கு சென்று பாரத்ததில் தற்போது நலமாக உள்ளார் ..
என்ன செய்வது எல்லாம் அவன் செயல் .
முதன்முதலா நான் ரொம்ப சிரித்த ரசித்த ‘மண்டே ஸ்பெசல்’. நன்றி ஜி. என்னைபோல எத்தனைபேரோ …மகிழ்ச்சி பொங்கட்டும்.
\\\\\\\வீட்டையும் கொஞ்சம் கவனிங்க பாஸ்\\\\\
தலைப்பே அசத்தல் . கதை போகும் போக்கு மிகுந்த விறுவிறுப்புடன் சுந்தர் ஜி தங்களின் நளினம் ஆபாரம்…?
மிகுந்த சிரமப்பட்டு நாகரிகமாக முடித்தவிதம் அருமை .
” recharge done ”
-மனோகர்