மனிதகுலத்துக்கு தான் வலியுறுத்தும் அறச்செயல்களை, புண்ணிய காரியங்களை தானே முன்னின்று செய்து, நமக்கு சிறந்த உதாரணங்களாக திகழ்கின்றனர் நாம் வணங்கும் தெய்வங்கள். அவதாரங்களின் நோக்கம் தீமையை ஒழிப்பது மட்டுமில்லை. இதுகூடத்தான். அதாவது தான் சொல்வதை தானே முன்னின்று செய்து காட்டுவது.
அம்பிகை தனது பல்வேறு அவதாரங்களில் முப்பத்திரண்டு வகை அறங்களை வளர்த்த செய்தியைக் கச்சியப்பரின் தமிழ்க் கந்த புராணம் சுட்டிக்காட்டியுள்ளது. ‘தர்ம வர்த்திநீ ’- தர்மத்தை வளர்ப்பவள். தேவி, அறங்களைப் பேணி வளர்ப்பவள். எனவே, அவளை, ‘அறம் வளர்த்த நாயகி’ என்று போற்றினர்.
பெரும்பாலான அறங்கள் மனித சமுதாயத்திற்காகச் செய்யும் நற்பணிகளே ஆகும்.
அப்படி அம்பிகை வளர்த்த முப்பத்திரண்டு அறங்கள் என்னென்ன என்று முனைவர் கே.சந்தானராமன் என்பவர் ஒரு விழாவில் கூறியதை தொகுத்து தந்திருக்கிறேன்.
நம்மால் இயன்ற அறங்களை நாமும் செய்வோம். சுயநலம் களைவோம், இறையருள் பெறுவோம்.
தர்மோ ரக்ஷதி; ரக்ஷித! (தர்மத்தை நீங்கள் காப்பாற்றினால் தர்மம் உங்களை காப்பாற்றும்!!)
அம்பிகை வளர்த்த முப்பத்திரண்டு அறங்கள் வருமாறு:-
1.அநாதையர் விடுதி அமைத்தல்
2.ஓதுவார்க்கு உணவு அளித்தல்-மாணவர்களுக்கு உணவு அளித்தல்.
3.துறவிகளுக்கு உணவு அளித்தல்
4.பசுவுக்குப் புல் கொடுத்தல்
5.சிறைக் கைதிகளுக்கு உணவு அளித்தல்
6.இரப்பவர்க்கு ஈதல்
7.தின்பண்டங்கள் அளித்தல்
8.ஆதரவற்றவர்களுக்கு உணவு அளித்தல்
9.மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு உதவுதல்
10.குழந்தைகளை வளர்த்தல்
11.தாயை இழந்த பிள்ளைகளுக்குப் பாலளித்தல்
12.ஆதரவற்றவர்களின் உடலை அடக்கம் செய்தல்
13.ஆதரவற்றவர்களுக்கு உடை கொடுத்தல்
14.சுண்ணப்பொடி கொடுத்தல்
15.நோயாளிகளுக்கு மருந்து வாங்கிக் கொடுத்தல்.
16.சலவைத் தொழிலாளியின் கூலியை உடனே கொடுத்தல்
17.சவரத் தொழிலாளியின் கூலியை உடனே கொடுத்தல்
18.கண்ணாடி கொடுத்தல்
19.தோடு கொடுத்தல்
20.கண்ணுக்கு மருந்து கொடுத்தல்
21.தலைக்கு எண்ணெய் கொடுத்தல்
22.மாதர் நலம் பேணுதல்
23.துன்பப்படுபவர்களுக்கு உதவுதல்
24.தண்ணீர்ப் பந்தல் வைத்தல்
25.குளம் தோண்டுதல்-பராமரித்தல்
26.பூஞ்சோலை அமைத்தல்
27.மடம் கட்டுதல்
28.பசு உராய்ஞ்சிக்கல் நிறுவுதல்
29.விலங்குகளுக்கு உணவு அளித்தல்
30.எருது பேணுதல்
31.கொலைக்குச் செல்லும் உயிர்களை வாங்கிக் காத்தல்
32.வரன் தேடிக் கொடுத்து உதவுதல்
படிக்கும்போதே இவ்வளவு சந்தோஷமா இருக்கே இவைகளை செய்தா எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்?
இந்த அறங்கள் தற்காலத்தில் சற்று வேறுபட்ட பெயரில் அல்லது முறையில் பலராலும் செய்யப்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக, பல பொது நலப்பணி அமைப்புகளால் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. பண்டிகை நாள்களிலும், தேசியத் திருவிழா நாள்களிலும் கைதிகளுக்கு இனிப்பு வழங்குகின்றனர். அறங்கள் எக்காலத்திற்கும் பொதுவானவை என்பது இதனால் தெளிவாகிறது.
திருவையாற்றில் அம்பிகை ‘அறம் வளர்த்த நாயகி’ (தர்மசம்வர்த்தினி) என்ற பெயருடன் இருந்து அருள் பாலிக்கிறாள். எத்தனை அழகான பெயர் நம் அன்னைக்கு…! இந்த பெயரை படிக்க நேர்ந்ததே ஒரு வகையில் பாக்கியம் தான்! நலம் தரும் விஷயம் தான்!! இன்னொரு முறை மனப்பூர்வமாக படியுங்கள். – ‘அறம் வளர்த்த நாயகி’ (தர்ம சம்வர்த்தினி)
“ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டமெல்லாம் உய்ய அறம் செய்யும்” சிறப்பை அபிராமி அந்தாதி உரைக்கிறது.
நமது துன்பங்களையும் துயரங்களையும் தூக்கி தூர போட்டுவிட்டு, மேற்படி அறச்செயல்களை செய்து பிறர் நிறைவில் பெருமிதத்தை காண்போம். நம் துன்பம் தானே தொலைந்துவிடும்.
=========================================================
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் யார் தெரியுமா?
திருமழிசை ஒத்தாண்டீஸ்வரர் கோவிலில் தினசரி இறைவனை பூஜை செய்யும் பேறு பெற்ற சச்சிதானந்த குருக்கள்!
90 வயதை கடந்த இவர் காளிகாம்பாள் கோவில் சாம்பசிவ குருக்களின் மூத்த சகோதரர். பேரன், பேத்தி, கொள்ளுப் பேரன், பேத்தி என பல தலைமுறைகளை கண்டவர். கடந்த பல ஆண்டுகளாக திருமழிசை கோவிலில் கைங்கரியம் செய்து வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு இங்கு நமது உழவாரப்பணி நடைபெற்றபோது நமது குழுவினரின் பணியை மிகவும் பாராட்டி ஆசீர்வதித்தார் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. (http://rightmantra.com/?p=5494)
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமையேற்க சொல்லி இவரை கேட்டுக்கொள்ள வியாழனன்று மாலை நண்பர் மோகனுடன் திருமழிசை சென்றிருந்தோம்.
பெரியவர் திரு.சச்சிதானந்த குருக்களை பார்த்து விஷயத்தை விளக்கி அனுமதி பெறுவதற்குள் போது போதுமென்றாகிவிட்டது. இடையே பலவித கசப்பான அனுபவங்களை சந்திக்க நேர்ந்தது. ஒரு பொது நோக்கத்திற்காக செயலாற்றும்போது சந்திக்கும் அவமதிப்புக்களை எல்லாம் நான் பொருட்படுத்துவேனா என்ன? (இடையில் ஆறுதலாக முருகப் பெருமானின் மாலை நமக்கு அணிவிக்கப்பட்டது சுவாரஸ்யம்!)
திரு.சச்சிதானந்த குருக்கள் அவர்களுடன் நமக்கு ஏற்கனவே நல்ல அறிமுகம் இருந்திருந்தாலும் அவரின் முதுமை காரணமாக நம்மை பார்த்தவுடன் சட்டென்று அவருக்கு நினைவுக்கு வரவில்லை. மேலும் இவருக்கு செவிகளில் கேட்கும் திறன் குறைவு. எனவே நாம் வந்த நோக்கத்தை இவருக்கு புரிய வைக்க மிகவும் சிரமப்பட்டோம். கடைசியில் அவரது மகன் கணேச குருக்கள் தான் உதவிக்கு வந்தார்.
அனைத்தையும் விளக்கியவுடன், “அப்பாவை கோவில்லேயே அந்த நேரத்துல பிரார்த்தனை பண்ணச் சொல்றேன். கவலைப்படாதீங்க.!” என்றார்.
நாம் வந்த நோக்கம் பெரியவருக்கு ஓரளவு புரிந்தவுடன் தான் நாம் நினைத்த மரியாதையை (சால்வை அணிவித்தது) அவருக்கு செய்ய முடிந்தது செய்ய முடிந்தது. நமது தளத்தின் சார்பாகவும் உங்கள் சார்பாகவும் அவருக்கு ஒரு அன்புப் பரிசு அளிக்கப்பட்டது.
நமது நட்சத்திரம் என்ன என்று விசாரித்தவர், சொன்னவுடன் “உங்களுக்கு நேரம் நல்லாயிருக்கு இப்போ… கவலைப்படாதீங்கோ” என்று கூறி நம்மை ஆசீர்வதித்தார்.
எப்படியோ இறுதியில் நாம் என்ன விஷயமாக சென்றோமோ அது கந்தன் அருளால் திருமழிசை கோவிலில் அவன் சன்னதி முன்பாகவே நிறைவேறியது.
(வரும் ஞாயிறு மதியம் மீண்டும் சென்று பெரியவரை பார்த்து, பிரார்த்தனை பதவின் நகலை அளித்து ஆசிபெற்றுவிட்டு வரவிருக்கிறோம். முடிந்தால் நம் பிரார்த்தனையும் ஞாயிறு மாலை திருமழிசை ஒத்தாண்டீஸ்வரர் சன்னதியில் தான் நடைபெறும்.)
இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?
=========================================================
குழந்தை நன்றாக பேச வேண்டும்; பேச்சு திறன் வர வேண்டும்
என் மகன் டி.சி. சிவசண்முகத்துக்கு 2 வயது நெருங்குகிறது. இன்னும் அவனுக்கு பேச்சு வரவில்லை. எங்கள் செல்வத்தின் மழலைக் குரலை கேட்க முடியாது கலங்கித் தவிக்கிறோம். இந்தக் குறை தீர்ந்து, அவன் நன்றாக பேச வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
– அன்புடன்,
தேவராஜன், காஞ்சிபுரம்.
=========================================================
தாய் நலம் பெற வேண்டும்
என் அம்மா திருமதி. மீனாக்ஷி அவர்கள் மதுரை வேலம்மாள் ஆஸ்பத்திரியில் 8.10.13 நெஞ்சுவலிக்காக ICU வார்டில் அனுமதிக்பட்டு தற்போது நார்மல் வார்டில் இருக்கிறார்கள். வயிறு பெரிதாக இருப்பதால் பித்த பையில் கல் இருக்ககூடும் என்று எல்லா பரிசோதனையும் செய்கிறார்கள்.
அவர்கள் நல்லபடியாக குணமடைய பிரார்த்தனை செய்யுமாறு வேண்டிகொள்கிறேன்.
– பரிமளம்,
மேடவாக்கம், சென்னை
=========================================================
நாட்டுக்காக போராடியவர் நலம் பெறவேண்டும்
அனைவருக்கும் வணக்கம்.
நமது பிரார்த்தனை கிளப்பில், இந்த வாரம், தன் உயிரை துச்சமென நினைத்து தீவரவாதிகளை பிடிக்க முயற்ச்சித்து (புத்தூர் சம்பவம்). அதனால் படுகாயம் அடைந்து தற்போது மருத்துவமனயில் தீவர சிகிச்சையில் உள்ள சிறப்பு படை காவல் துறை ஆய்வாளர் திரு லக்ஷ்மணன் அவர்கள் விரைவில் பூரண குணமடைய நமது தளம் சார்பாக பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன்.
நன்றி,
ஜெ.சம்பத்குமார்
=========================================================
நம் பொது பிரார்த்தனை
ஆந்திராவில் அமைதி திரும்பவேண்டும்
ஆந்திராவில் பிரிவினை கோரிக்கை தீவிரமடைந்து அதனால் அங்கு பதட்டம் நிலவுவது நீங்கள் அறிந்ததே. ஆந்திராவை பிரிக்கவேண்டும் என்று ஒரு சாராரும், பிரிக்க கூடாது என்று மற்றொரு சாராரும் போராட்டம் செய்ய, கடந்த சில வாரங்களாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
எப்போதும் போராட்டம், வன்முறை, ரயில் மறியல் என்று நடைபெறுவதால் மக்கள் அன்றாட பணிகளை கூட நிம்மதியாக செய்ய முடியாமல் தவிக்கின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருமலை இந்த பிரச்னையால் வெறிச்சோடி காணப்படுவது வருத்தத்திற்குரிய விஷயம். இந்த பிரச்னையை அறிவுப்பூர்வமாக அணுக மனமின்றி அரசியல்வாதிகள் இதில் அரசியல் ஆதாயம் பெற துடிப்பதே பிரச்னை இந்தளவு முற்றிப்போக காரணம்.
விரைவில் இந்த பிரச்னைக்கு ஒரு தீர்வு ஏற்பட்டு அம்மாநில மக்கள் சந்தோஷமாக வாழ இறைவனை பிரார்த்திப்போம்.
=========================================================
பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:
உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை சொல்லை பிரார்த்தித்துவிட்டு கூடவேஇங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.
=========================================================
திரு.தேவராஜன் அவர்களின் குழந்தை சிவசண்முகத்துக்கு பேச்சு குறைபாடு நீங்கி, விரைவில் அவன் மழலைக்குரலில் பேசுவதை அவன் பெற்றோர் கண்டு ஆனந்தப்படவும், நம் தளத்தின் தீவிர வாசகியரில் ஒருவரான திருமதி.பரிமளம் அவர்களின் தாயார் மீனாக்ஷி அம்மா அவர்கள் உடல் உபாதையிலிருந்து மீண்டு நலம்பெறவும், நோய்நொடியின்றி அவர்களது எதிர்காலம் அமையவும், தீவிரவாதிகளிடமிருந்து நாட்டை காக்கும் முயற்சியில் காயமுற்று சிகிச்சை பெற்றுவரும் காவல்துறை ஆய்வாளர் திரு.லக்ஷ்மணன் விரைவில் பரிபூரண நலமடையவும் இறைவனை பிரார்த்திப்போம். தளத்தில் காவலர் திரு. லக்ஷ்மணன் அவர்களின் நலனுக்காக கோரிக்கை வைத்த சம்பத் குமார் அவர்களுக்கு நன்றி.
கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இதற்க்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.
நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!
============================================
பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.
அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.
(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)
பிரார்த்தனை நாள் : அக்டோபர் 13, 2013 ஞாயிறு நேரம் : மாலை 5.30 – 5.45
இடம் : அவரவர் இருப்பிடங்கள்
=============================================================
உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…
உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!
உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.
E-mail : simplesundar@gmail.com Mobile : 9840169215
=======================================================
பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131
=======================================================
சென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : ‘வேத அத்யபகர்’ சத்தியமூர்த்தி ஸ்வாமி
//////////”திருவையாற்றில் அம்பிகை ‘அறம் வளர்த்த நாயகி’ (தர்மசம்வர்த்தினி) என்ற பெயருடன் இருந்து அருள் பாலிக்கிறாள். எத்தனை அழகான பெயர் நம் அன்னைக்கு…! இந்த பெயரை படிக்க நேர்ந்ததே ஒரு வகையில் பாக்கியம் தான்! நலம் தரும் விஷயம் தான்!! //////
சத்தியமான வார்த்தைகள்.
மிக்க நன்றி
மனிதன் வளர்த்த 32 அறங்களை பற்றி தெரிந்து கொண்டோம்.
இவற்றில் பல நார்மல் வாழ்க்கையில் மனித சமுதாயத்தல் செய்யக்கூடியதே. நம்மால் பின்பற்ற் முடியும்.
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் திரு. சச்சிதானந்த குருக்கள். அவர் வயதிலும் அனுபவத்திலும் முதிர்தவர்.
அவருடைய ஆசி நமக்கு கிடைக்க கடவுள் அனுகிரகம் பண்ணி உள்ளார்.
எனது அம்மாவின் உடல் நிலைக்காக பிரார்த்தனை பதிவு வெளியிட்ட சுந்தர் சார் அவர்களுக்கு என் நன்றி.
CT ஸ்கேன் ரிசல்ட் வந்த பிறகு தான் எதுவும் சொல்லமுடியும் என்று டாக்டர் சொல்லி உள்ளார்.
நம் பதிவில் வெளியிட்ட பிறகு அவர் நல்லபடியா வீடு திரும்புவர் என்ற நம்பிக்கை உள்ளது.
மேலும் திரு தேவராஜன் அவர்கள் குழந்தை பேசவும், திரு லக்ஷ்மணன் விரைவில் குணமடையவும் பிரார்த்திப்போம்.
90 வயதை கடந்த இவர் காளிகாம்பாள் கோவில் சாம்பசிவ குருக்களின் மூத்த சகோதரர். பேரன், பேத்தி, கொள்ளுப் பேரன், பேத்தி என பல தலைமுறைகளை கண்ட. கடந்த பல ஆண்டுகளாக திருமழிசை கோவிலில் கைங்கரியம் செய்து வருகின்றவர் பிரார்த்தனைக்கு தலைமை தாங்குவது நாம் செய்த புண்ணியமே அன்றி வேறு எதுவும் இல்லை. அவருக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். எந்த ஒரு பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் பிறர் நலன் கருதி வாரா வாரம் ஒரு வேத வித்துகளை தேடி அலைந்து தாங்கள் செய்யும் இந்த உதவி உங்களை என்றென்றும் காக்கும்.சொல்ல வார்த்தைகளே இல்லை.
திரு.தேவராஜன் அவர்களின் குழந்தை சிவசண்முகத்துக்கு பேச்சு குறைபாடு நீங்கி, விரைவில் அவன் மழலைக்குரலில் பேசுவதை அவன் பெற்றோர் கண்டு ஆனந்தப்படவும், நம் தளத்தின் தீவிர வாசகியரில் ஒருவரான திருமதி.பரிமளம் அவர்களின் தாயார் மீனாக்ஷி அம்மா அவர்கள் உடல் உபாதையிலிருந்து மீண்டு நலம்பெறவும், நோய்நொடியின்றி அவர்களது எதிர்காலம் அமையவும், தீவிரவாதிகளிடமிருந்து நாட்டை காக்கும் முயற்சியில் காயமுற்று சிகிச்சை பெற்றுவரும் காவல்துறை ஆய்வாளர் திரு.லக்ஷ்மணன் விரைவில் பரிபூரண நலமடையவும் இறைவனை பிரார்த்திப்போம்.
திரு.தேவராஜன் அவர்களின் குழந்தை சிவசண்முகத்துக்கு பேச்சு குறைபாடு நீங்கி, விரைவில் அவன் மழலைக்குரலில் பேசுவதை அவன் பெற்றோர் கண்டு ஆனந்தப்படவும், நம் தளத்தின் தீவிர வாசகியரில் ஒருவரான திருமதி.பரிமளம் அவர்களின் தாயார் மீனாக்ஷி அம்மா அவர்கள் உடல் உபாதையிலிருந்து மீண்டு நலம்பெறவும், நோய்நொடியின்றி அவர்களது எதிர்காலம் அமையவும், தீவிரவாதிகளிடமிருந்து நாட்டை காக்கும் முயற்சியில் காயமுற்று சிகிச்சை பெற்றுவரும் காவல்துறை ஆய்வாளர் திரு.லக்ஷ்மணன் விரைவில் பரிபூரண நலமடையவும் இறைவனை பிரார்த்திப்போம். –
சுந்தர்ஜி,
முப்பத்தி இரண்டு அறம் என்பவை எவை எவை என அறிந்துகொள்ள உதவியதற்கு நன்றி. இவற்றில் சில நம் தளம் சார்பாக நடைப்பெற்றது. இன்னும் பல அறங்களை நம்மால் முடிந்த அளவு நம் தளம் சார்பாக நடைபெற அனைவரும் கூட்டாக முயற்சி எடுக்க வேண்டும். தனித்தனியாக செய்வதைவிட கூட்டாக செய்தால் பலனும் அதிகம். பெரிய அளவிலும் செய்யலாம்.
இந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும், வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்த திரு சச்சிதானந்த குருக்கள் அவர்களுக்கு நன்றி. அனைவரும் நலம் பெற நாமும் அவரோடு பிரார்த்திப்போம்.
ஸ்ரீ மஹா பெரியவா அனைவர்க்கும் அனுகிரகம் செய்வார் என்ற நம்பிக்கையுடன் நன்றி.
திருக்கோலக்கா [சீர்காழிக்கு அருகில் உள்ளது] சப்தபுரீசுவரர் ஓசைகொடுத்த நாயகி திருகோயில் :
உமையம்மை அளித்த ஞானப்பாலை உண்ட பிறகு சம்பந்தர் இறைவன் மீது தலந்தோறும் சென்று பதிகங்களைப் பாடிட புறப்பட்டார். திருக்கோலக்கா தலம் வந்தார். கையால் தாளமிட்டுக் கொண்டு பாடினார். கைநோக தாளமிடுவதைக் கண்ட திருக்கோலக்கா இறைவன் சம்பந்தருக்கு திருவைந்தெழுத்துப் பொறிக்கப்பெற்ற பொற்றாளம் கொடுத்தார். அந்த தாளத்திற்கு உமையம்மை ஓசைக் கொடுத்தார். இதனால் திருக்கோலக்கா இறைவன் திருத்தாளமுடையார்[சப்தபுரீசுவரர்] என்றும், அம்மை ஓசைக்கொடுத்த நாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். தொனியைத் தந்தமையால் கண்வ மகரிஷி, அம்பிகையை ‘தொனிப்பிரதாம்பாள்’ என்றார். அகத்தியனோ, ‘ஓசை ஈந்த மாகாளி’ என்றார்.மந்தாகினி என்ற அந்தணகுல பெண் ஒருத்திக்கு ஒரே மகன் விஸ்வநாதன் .பேசும் சக்தி, கேட்கும் சக்தி அறவே அற்றவன். அந்த மாது, இக்கோயிலுக்கு வந்து, ஆனந்த புஷ்கரணி எனப்படும் பொய்கையில் நீராடி, இறைவனை ஆராதித்து, தல விருட்சமாம் கொன்றை மரத்தையும் பிரார்த்தித்தாள். அன்று இரவே விஸ்வநாதன், ‘‘அம்மா தாகம் தீர ஏதேனும் தா’’ என்றான்.இப்படி பேச்சிழந்த பையன் பேசக் கேட்டு மகிழ்ந்த தாய், ‘பொற்றாளம்’ செய்து கோயிலுக்குத் தந்து தன் பிரார்த்தனையை செய்தாள்.
வாய் பேச முடியாதவர்கள் இங்கு வந்து ஓசை நாயகியிடம் வேண்டி, அம்மன் பாதத்தில் தேனை வைத்து அர்ச்சனை செய்து அதை எடுத்து சாப்பிட்டு வர வேண்டும். கண்டிப்பாக வெகு விரைவில் பேச்சு வரும்..
மிக்க நன்றி விஜய் பெரிய சுவாமி அவர்களே.
நண்பர்களே, விஜய் பெரிய சுவாமி அவர்கள் கூறியிருக்கும் தகவல்களை பயன்படுத்திக்கொண்டு குறைகளை நீங்கப் பெறுங்கள். ஆறம் போற்றி நலமோடு வாழுங்கள்.
(விஜய் பெரிய சுவாமி நம் நண்பர் & தள வாசகர். நம் ஆண்டுவிழாவிற்கு வந்திருந்தார்!)
– சுந்தர்
திருச்சிற்றம்பலம்[ஊமை, திக்குவாய்க் குழந்தைகள் நலம் பெற: மாணிக்கவாசகர் தில்லையில் நல்கிய திருச்சாழல்]திக்குவாய் கோளாறு நீங்கவும் பேச்சுத்திறமை மேம்படவும் ஓத வேண்டிய பதிகம் மாணிக்கவாசகர் தில்லையில் ” பூசுவதும் வெண்ணீறு ” என்ற பாடலைப் பாடி ஊமைப் பெண்ணொருத்தியை பேச வைத்தார்
பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டடென்னை
ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ.
என்னப்பன் எம்பிரான் எல்லார்க்குந் தானீசன்
துன்னம்பெய் கோவணமாக் கொள்ளுமது என்னேடீ?
மன்னுகலை துன்னுபொருள் மறைநான்கே வான்சரடாத்
தன்னையே கோவணமாச் சாத்தினன்காண் சாழலோ.
கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்லாடை
தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடீ
தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினும்
காயில் உலகனைத்துங் கற்பொடிகாண் சாழலோ.
அயனை அனங்கனை அந்தகளைச் சந்திரனை
வயனங்கள் மாயா வடுச்செய்தான் காணேடீ
நயனங்கள் மூன்றுடை நாயகனே தண்டித்தால்
சயமன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய் சாழலோ.
தக்கனையும் எச்சையும் தலையறுத்துத் தேவர்கணம்
தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ?
தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்தருளி அருள்கொடுத்தங்கு
எச்சனுக்கு மிகைத்தலைமற் றருளினன் காண் சாழலோ.
அலரவனும் மாலவனும் அறியாமே அழலுருவாய்
நிலமுதற்கீழ் அண்டமுற நின்றதுதான் என்னேடீ?
நிலமுதற்கீழ் அண்டமுற நின்றிலனேல் இருவருந்தம்
சலமுகத்தால் ஆங்காரந் தவிரார்காண் சாழலோ.
மலைமகளை யொருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி
சலமுகத்தால் அவன்சடையிற் பாயுமது என்னேடீ?
சலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம்
பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாஞ் சாழலோ.
கோலால மாகிக் குரைகடல்வாய் அன்றெழுந்த
ஆலாலம் உண்டான் அவன்சதுர்தான் என்னேடீ?
ஆலாலம் உண்டிலனேல் அன்றயன்மால் உள்ளிட்ட
மேலாய தேவரெல்லாம் வீடுவர்காண் சாழலோ.
தென்பா லுகந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன்
பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் காணேடீ
பெண்பா லுகந்திலனேற் பேதாய் இரு நிலத்தோர்
விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ.
தானந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை
ஆனந்த வெள்ளத் தழுத்துவித்தான் காணேடீ
ஆனந்த வெள்ளத் தழுத்துவித்த திருவடிகள்
வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ.
நங்காய் இதென்னதவம் நரம்போ டெலும்பணிந்து
கங்காளந் தோள்மேலே காதலித்தான் காணேடீ
கங்காளம் ஆமாகேள் காலாந்த ரத்திருவர்
தங்காலஞ் செய்யத் தரித்தனன்காண் சாழலோ.
கானார் புலித்தோல் உடைதலைஊண் காடுபதி
ஆனா லவனுக்கிங் காட்படுவார் ஆரேடி?
ஆனாலும் கேளாய் அயனுந் திருமாலும்
வானாடர் கோவும் வழியடியார் சாழலோ.
மலையரையன் பொற்பாவை வாள்நுதலான் பெண்திருவை
உலகறியத் தீவேட்டான் என்னுமது என்னேடீ
உலகறியத் தீவேளே தொழிந்தனனேல் உலகனைத்துங்
கலைநவின்ற பொருள்களெல்லாங் கலங்கிடுங்காண் சாழலோ.
தேன்புக்க தண்பனைசூழ் தில்லைச்சிற் றம்பலவன்
தான்புக்கு நட்டம் பயிலுமது என்னேடீ?
தான்புக்கு நட்டம் பயின்றிலனேல் தரணியெல்லாம்
ஊன்புக்க வேற்காளிக் கூட்டாங்காண் சாழலோ.
கடகரியும் பரிமாவும் தேரும்உகந் தேறாதே
இடபம்உகந் தேறியவா றெனக்கறிய இயம்பேடீ
தடமதில்கள் அவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ.
நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை
அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் காணேடீ
அன்றாலின் கீழிருந்தங் கறமுரைத்தான் ஆயிடினுங்
கொன்றான்காண் புரமூன்றுங் கூட்டோ டே சாழலோ.
அம்பலத்தே கூத்தாடி அமுதுசெயப் பலிதரியும்
நம்பனையுந் தேவனென்று நண்ணுமது என்னேடீ?
நம்பனையும் ஆமாகேள் நான்மறைகள் தாமறியோ
எம்பெருமான் ஈசாவென் றேத்தினகாண் சாழலோ.
சலமுடைய சலந்தரன்தன் உடல்தடிந்த நல்லாழி
நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடீ?
நலமுடைய நாரணன்தன் நயனம்இடந் தானடிக்கீழ்
அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ.
அம்பரமாம் புள்ளித்தோல் ஆலாலம் ஆரமுதம்
எம்பெருமான் உண்டசதுர் எனக்கறிய இயம்பேடீ
எம்பெருமான் ஏதுடுத்தங் கேதமுது செய்திடினும்
தம்பெருமை தானறியாத் தன்மையன்காண் சாழலோ.
அருந்தவருக் காலின்கீழ் அறமுதலா நான்கினையும்
இருந்தவருக் கருளுமது எனக்கறிய இயம்பேடீ?
அருந்தவருக் கறமுதல்நான் கன்றருளிச் செய்திலனேல்
திருந்தவருக் குலகியற்கை தெரியாகாண் சாழலோ.
திருச்சிற்றம்பலம்