தவிர இன்று காலை அலுவலகம் செல்வதற்கு முன்பு, திருவேற்காடு – பெருமாளகரத்தில் உள்ள பசு காப்பகத்திற்கு சென்றோம். மகாளயத்தையொட்டி அங்கு பசுக்களின் உணவுத் தேவைகள் குறித்து விசாரித்தபோது வைக்கோலுக்கு பதில் தீவனம் வாங்கித் தந்தால் நன்றாக இருக்கும் என்று அவர்கள் கூறவே, உடனே திருவேற்காடு கோவில் அருகில் இருக்கும் மளிகைக் கடை ஒன்றுக்கு சென்று நம் கைப்பட தீவனத்தை வாங்கி பசு மடத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இங்கு இதற்கு முன்பு, வைக்கோலும் தீவனமும் வாங்கித் தந்திருக்கிறோம். தற்போது மகாளயத்தை ஒட்டி இரண்டு மூட்டைகள் தீவனம் நம் தளம் சார்பாக அளிக்கப்பட்டுள்ளது. நாளை காலை (மகாளய அமாவாசையை முன்னிட்டு) பசுக்களை பார்த்து அகத்திக் கீரைகள் வழங்கிவிட்டு அப்படியே எந்தை வேதபுரீஸ்வரரை தரிசிக்கவிருக்கிறோம்.
நீங்களும் நாளை சிவாலயம் சென்று பரமேஸ்வரனை தரிசித்துவிட்டு கோ-சேவையில் உங்களால் இயன்ற அளவு ஈடுபடுத்திக்கொள்ள வேண்டுகிறேன். ஆலயத்தில் உள்ள பசுக்கள் தான் என்றில்லை சாலைகளில் ஏதேனும் பசுவைக் கண்டால் கூட அவற்றுக்கு உணவளிக்கலாம்.
உங்கள் பித்ருக்களுக்கு சென்று சேரவேண்டிய உணவுக்கு நாளை பசுக்கள் தான் REPRESENTATIVES.
============================================
நாளை மகத்துவம் மிக்க மகாளய அமாவாசை
நாளை மகத்துவம் மிக்க மகாளய அமாவாசை. நாளையுடன் பித்ருக்களுக்குரிய மகாளய காலம் நிறைவடைகிறது. பெற்றோர்களை கவனிக்கத் தவறியவன், அவர்களை கடைசி காலத்திலாவது கவனித்து பழியை தவிர்க்க முயற்சி செய்வதில்லையா? அது போல, இந்த 14 நாட்களும் எதுவும் செய்யாதவர்கள் நாளையாவது ஏதேனும் செய்து, பித்ருக்களை மனம் குளிரச் செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.
மகாளயம் குறித்தும் பித்ரு தோஷ பரிகாரம் குறித்தும் தொடர் பதிவுகள் அளித்து வந்துள்ளோம். பித்ருக்களை சாந்தி செய்ய என்ன விதமான பரிகாரங்களை செய்யலாம் என்று இந்த பதிவுகளை பார்த்தாலே உங்களுக்கு புரியும்.
தற்போது மகாளய அமாவாசை பற்றி ஒரு சிறிய பதிவு. புண்ணியம் மிக்க இந்த நாளை தவறவிடாதீர்கள்.
மகாளய அமாவாசை மகிமை
சூரியன் கன்னி ராசிக்குள் செல்லும்போது, அதாவது புரட்டாசி மாதம், எமதர்மராஜன் பிதுர்க்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில் நமது முன்னோர்களும் இறந்து போன ரத்தசம்பந்த உறவுகளும் அந்தந்த உறவினரைகுடும்பத்தினரை காண ஆசையுடனும், மகிழ்ச்சியுடனும் நம்மை காணவருவார்கள்.
அந்த நேரத்தில் அவர்களை நாம் வணங்கினால் மனமகிழ்சியோடு ஆசீர்வாதம் செய்வார்கள். இந்நாள் மிகவும் புண்ணியமான மகாளய அமாவாசை நாள். முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம்.
இந்நாளில் தீர்த்தத்தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க வேண்டும். இந்த புண்ணிய தினங்களில் பித்ருக்கள் வழிபாடு மிகச் சிறந்த பலனை கொடுக்கும். கருடபுராணம், விஷ்ணு புராணம் போன்ற புராணங்களில், “ஒருவருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும், முடியாதவர்கள் காகத்திற்கு அன்னம் வைக்கலாம். பசுவுக்கு அகத்திகீரை, பழம் கொடுக்க வேண்டும் என்கிறது.
மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பாவனி கூடுதுறை உள்ளிட்ட புண்ணிய நீர் நிலைகளில் ஏராளமானோர் புனித நீராடி மூதாதையர்களுக்கு பித்ரு பூஜை செய்து வழிபடுவார்கள்.
மகாளயம் என்றால் என்றால் என்ன?
மகாளயம் என்றால் மகான்கள் வாழும் இடம் என்று பொருள். பட்சம் என்றால் அரைமாதம் அதாவது 15 நாள் என்று அர்த்தம். மகாளயபட்சம் வரும் 15 நாட்களுமே மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த 15 நாட்களும் நாம் பித்ருக்களை ஆராதித்தால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.
பூலோகத்தில் 15 நாட்கள் தங்கி இருக்கும் நாட்களில் கோவில் தீர்த்தங்களில் உள்ள தெய்வீக சக்திகளை பித்ருக்கள் எடுத்துச் செல்வார்கள். அந்த சமயத்தில் நாம் பித்ருக்களுக்கு அன்னமிட்டு வழிபாடு செய்யும்போது, பித்ருக்கள் மிகவும் மனம் குளிர்ந்து அந்த தெய்வ சக்திகளை நமக்கு கொஞ்சம் பரிசாக தந்து விட்டுச் செல்வார்கள்.
மகாளயபட்ச 15 நாட்களும் நாம் கொடுக்கும் தர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் மூலம் பித்ருக்களுக்கு கூடுதல் பலன்களையும், ஆத்மசக்தியையும் கொடுக்கும். அந்த சக்தியை பெறும் பித்ருக்கள் அவற்றை மகாவிஷ்ணுவின் பாதங்களில் சமர்ப்பிப்பதாக ஐதீகம்.
ஆக நாம் செய்யும் பித்ருதர்ப்பணங்கள், சிரார்த்தங்கள் நம் முன்னோருக்கு மட்டுமின்றி, நாம் வணங்கும் மகாவிஷ்ணுவையும் சென்று அடைகிறது. எனவேதான் மகாளய அமாவாசை மற்ற எல்லா அமாவாசை நாட்களையும் விட உயர்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த 15 நாட்களில் மகாளயபட்ச வழிபாட்டை இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு எங்கும் கிடையாது. எல்லாமே உங்கள் இஷ்டம்தான். உங்கள் குல வழக்கப்படி தர்ப்ப ண வழிபாடுகளை எப்படி கொடுப்பார்களோ…. அந்த வழக்கப்படியே செய்யலாம்.
தர்ப்பணம், சிரார்த்தம் கொடுப்பதில் சாதி, மத, குல பேதங்கள் எதுவும் பார்க்க வேண்டியதில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்க்ள. மகாளய அமாவாசை நாளில் மகாவிஷ்ணுவின் ஆசீர்வாதம் பித்ரக்களை தேடி வரும்.
அந்த ஆசீர்வாதத்தை பித்ருக்களும் நம்மிடம் நேரடியாக எடுத்து வரக்கூடும். எனவே மகாளயபட்ச நாட்களில் பித்ருக்களை வழிபாட்டு, விஷ்ணுவின் அருளை பெறத் தவறாதீர்கள்.
(நன்றி : MAALAIMALAR.COM)
============================================
மிகவும் பயனுள்ள ஒரு பதிவிற்கு நன்றி சுந்தர். பலருக்கும் நற்பயன் கொடுக்ககூடிய நல்ல விஷையங்களை பகிர்ந்துகொள்வதன்மூலம் உங்களுக்கும் புண்ணியம்.
மஹாளய அமாவாசை என்றால் என்ன என்று தெரியாமல், அதை தெரிந்துகொள்ளவும் முயற்சி செய்யாமல் இருந்த எனக்கு, இது ஒரு நல்ல படிப்பினை. பூவோடு சேர்ந்த நாறும் மணம் பெரும் என்பதுபோல் சுந்தரோடு கிடைத்த நட்பு எனக்கு பயன் தருகிறது. சத்சங்கம் என்பது இதுதான்.
பசுக்கள தான் ஒரு நாட்டின் ஆதாரம் . ஏன்னென்றல் பசு கோமாதாவின் அம்சம் இவ்வாறு பசு கன்று ஈன்ற செய்தியை கேட்பதும் பார்ப்பதும் பரம பவித்திரமான புண்ணியம் நல்கும் விஷயம்.. இந்த புகைப்படங்களை பார்க்கும் போது நாமும் அவரவர் வசிக்கும் பகுதிகளில் – இது போன்ற செயல்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும் – என்ற எண்ணம் வருகிறது. இதற்கு வசதி தேவை என்பதை விட மனசு தான் வேண்டும். பசுவுக்கு அகத்திக் கீரையும் வாழைப் பழங்களும் வாங்கி தர கொஞ்சம் பணம் போதும்.
பசுக்கள காப்போம் நாட்டை காப்போம்
sundar சார்
மிகவும் அருமையான பதிவு சார்
நன்றி
Very good and usual information. Your service will guide so many people.