Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 15, 2024
Please specify the group
Home > Featured > உங்கள் இழப்பு மற்றவர்களுக்கு லாபமாக இருக்கட்டும் – காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்!

உங்கள் இழப்பு மற்றவர்களுக்கு லாபமாக இருக்கட்டும் – காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்!

print

ன்று காந்தி ஜெயந்தி. தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள். காந்தியை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமலேயே அவரை விமர்சிப்பது ஃபேஷனாகிவரும் காலகட்டம் இது. பரவாயில்லை. அப்படியாவது காந்தியின் பெயரை நான்கு உதடுகள் உச்சரிக்கட்டும்.

காந்தியின் வாழ்க்கையே ஒரு முன்மாதிரி தான். மற்றவர்கள் விஷயத்தில் அப்படி அல்ல. நம் விஷயத்திலும் அது உண்மையல்ல. நாம் சொல்வது ஒன்று. செய்வது ஒன்று.

‘என் வாழ்க்கையே என் செய்தி’ என்று காந்தி சொன்னார். அனேகமாகக் காந்தியின் சமகாலத்தவர்களான எவராலும் ‘என் வாழ்க்கையே என் செய்தி’ என்று கூற முடியவில்லை. சர்ச்சிலால் முடியவில்லை. ரூஸ்வெல்டால் முடியவில்லை. என் வாழ்க்கையே என் செய்தி எனச் சொல்ல ஸ்டாலினுக்குக் கண்டிப்பாகச் சாத்தியமில்லை. இது ஒரு அபூர்வமான விஷயம். நம் காலத்தின் பெருந்தலைவர்களில் யாருடைய சுயசரிதை முக்கியமானதும் அர்த்தமுள்ளதும் என்றால் அது காந்தியின் சுயசரிதைதான்.

நண்பர் டாக்டர்.சுனில் அவர்களின் GANDHITODAY.IN தளத்தில் திரு.பா.ராகவன் கூறிய ஒரு விஷயத்தையும், காந்தியடிகள் வாழ்வில் நடைபெற்ற – நான் கேள்விப்பட்ட – ஒரு சம்பவத்தையும் தருகிறேன்.

அனைவருக்கும் காந்தி ஜெயந்தி நல் வாழ்த்துக்கள் !!

=======================================

காந்தி ஒரு பொது சொத்து – எப்படி?

 

காந்தியை எனக்குப் பிடிக்கும்.

அவரை விமர்சிப்பதும், பிடிக்காது என்று சொல்லுவதும் ஒரு நாகரீகம் ஆகியிருக்கும் காலத்தில் இந்த ஒரு வரி கருத்து இலேசான புன்னகை வரவழைக்கலாம். உண்மையில், அத்தகையவர்களை பார்க்கும் போது பரிதாபமே ஏற்படுகிறது. என்னளவில் காந்தி என்றால் வழுக்கை தலையும் போக்கை சிரிப்பும் கொண்டு புகைப்படங்களில் சிரிக்கும் கிழவர் அல்லர். அவர் எழுதி வைத்துவிட்டு போயிருக்கும் சுமார் பதினாறாயிரம் பக்கங்கள்.

தன்னைத்தானே விதைத்துகொண்டு தானே முளைவிட்டு ,முட்டி மோதி மேலெழுந்து வந்து காற்றில் அலையும் ஒரு காட்டு கொடி போலத்தான் அவரது சிந்தனைகள் எனக்கு தோற்றமளித்தன . வேரிலிருந்து உச்சாணி காம்பில் துளிர்ந்திருக்கும் கட்ட கடைசி இலை வரை மருத்துவ குணம் கொண்ட மூலிகை கொடி அது.

ஒரு மனிதன் வாழ்நாள் முழுவதும் மானுடக்குலத்தின் நலனுக்காகவே சிந்தித்து இருக்கிறான் என்பது எப்பேர்பட்ட விஷயம்! ஏன் நம்மால் அதை, அதன் முழுபரினாமத்துடன் உணர முடியாமல் போய்விட்டது?

இந்தியாவை பொறுத்த வரை காந்தி ஒரு பொது சொத்து. யார் வேண்டுமானாலும் சேதப்படுத்தலாம் என்றாகிவிட்டது. ஒரு மாறுதலுக்கு காந்தி ஜெயந்தி அல்லாத நாளில் கூட அவர் சிலையின் மீது படிந்து கிடக்கிற எச்சங்களை துடைத்து சுத்தபடுத்தலாம் என்று நினைத்தேன் , அதனால் இவற்றை எழுதினேன்.

பிரச்சாரம் என் நோக்கமில்லை. எனக்கு அது முடியவும் முடியாது. ஆனால் நமது வாழ்க்கைக்கு சம்பந்தமில்லாத எது ஒன்று பற்றியும் அவர் சிந்தித்ததில்லை,

காலத்தால் கொள்ளை கொண்டு போகமுடியாத மிக சில அப்பூர்வமான சிந்தனையாளர்களுள் ஒருவர் அவர்.

(பா.ராகவன் @ Dr.Suneel’s www.gandhitoday.in)

=======================================

காந்தியடிகள் போல எவரும் சிந்திக்கவும் முடியாது, செயலாற்றவும் முடியாது. அவருக்கிருந்த சமயோசித அறிவு வேறு எவருக்கும் சாத்தியமேயில்லை என்பதை உணர்த்தும் நிஜ சம்பவம் ஒன்றை கீழே தந்திருக்கிறேன்.

ஒற்றை செருப்பை வைத்துக்கொண்டு என்ன செய்தார் காந்தி?

காந்தி ஒரு சமயம் ரயிலில் ஒரு ஊருக்கு அவசரமாக சென்றுகொண்டிருந்தார். ஒரு ரயில் நிலையத்தில் தண்ணீர் குடிக்க இறங்கி, ஏறும்போது பிளாட்பாரத்தில் அவர் செருப்புகளில் ஒன்று கழன்று விழுந்துவிட்டது.

இறங்கி செருப்பை எடுத்துக்கொண்டு மறுபடியும் ஏற முடியாது. ஏனெனில் ரயில் கொஞ்ச கொஞ்சமாக வேகமெடுக்கிறது. ஒவ்வொரு அணாவையும் காந்தி மதிப்பவர் என்றாலும் தன் ஒருவனின் ஒரு செருப்பாக்காக ரயிலை நிறுத்த அவர் விரும்பவில்லை. சற்றும் தாமதிக்காமல் தன் காலில் இருந்த மற்றொரு ஜோடி செருப்பையும் அவர் முதல் செருப்பு விழுந்த இடத்தை நோக்கி வீசி எறிந்தார்.

ஒரு செருப்பு போய்விட்டது. மற்றொரு செருப்பு இருந்தும் பயனில்லை. பிளாட்பாரத்தில் விழுந்த ஒரு செருப்பை வைத்துக்கொண்டு அதை கண்டெடுத்தவன் என்ன செய்யப்போகிறான்? அவனுக்கும் அது பயன்படாது. அதனால் தான் மற்றொரு செருப்பையும் காந்தி வீசி எறிந்தார். (அப்போதெல்லாம் கிராமப்புற சரசாரி இந்தியனுக்கு செருப்பு சற்று அபூர்வமான பொருள் தான்!)

தனக்கு இழப்பு ஏற்பட்டாலும் அந்த இழப்பு மற்றவர்களுக்கு பயன்படுவதாக இருக்கவேண்டும் என்ற பரந்த மனப்பான்மையே அவரை மகாத்மா என்று அழைக்க காரணமாகியது.

காந்தி இடத்தில் நாம் இருந்தால் என்ன செய்திருப்போம் என்று யோசித்து பாருங்கள். ஒன்று பேப்பரில் அதை சுருட்டி எவருக்கும் தெரியாமல் வீட்டில் கொண்டு வந்து வைப்போம். அல்லது அதை எவருக்கும் பயன்படா வண்ணம் ரயிலிலேயே போட்டுவிட்டு வந்துவிடுவோம். சரி தானே?

நம் அன்றாட வாழ்விலும் இது போன்று அடிக்கடி நடந்துகொண்டு தானிருக்கின்றன. அப்போது நாம் செய்வது என்ன ஒரு கணம் சிந்தித்து பாருங்கள். நாம் மனது வைத்தால் நமக்கு ஏற்படக்கூடிய இழப்பு மற்றவர்களுக்கு லாபமானதாக அமையச் செய்ய முடியும்.

பூஜை புனஸ்காரங்கள் மட்டும் வழிபாடு அல்ல. இதுவும் ஒரு வகையில் வழிபாடு தான்.

[END]

7 thoughts on “உங்கள் இழப்பு மற்றவர்களுக்கு லாபமாக இருக்கட்டும் – காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்!

  1. நல்ல செய்தி சுந்தர் சார்!
    நாம் மனது வைத்தால் நமக்கு ஏற்படக்கூடிய இழப்பு மற்றவர்களுக்கு லாபமானதாகவும் செய்ய முடியும், மேலும் மற்றவர் இழப்பை நம்மால் முடிந்தவரை ஈடு செய்யவும் முடியும்.

    நம் தள வாசகர்களுக்கு காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்!

  2. வணக்கம் சார்

    காந்தி ஜெயந்தி அன்று காந்திஜி பற்றி மிகவும் அருமையான தகவல் கொடுத்து இருக்கேங்க சார்

    நன்றி

  3. நண்பர்கள் அனைவருக்கும் இனிய காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள் ,ஜெய்ஹிந்த்

  4. சுந்தர்.ஜி
    காழ்ப்பு நிறைந்த மனங்கள் இணையத்தில் உலவும் சூழலில் காந்தி பெரும் ஆசுவாசம் அளிக்கிறார்..தளத்த்ஜை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி..

  5. சுந்தர் சார்,

    நல்ல ஒரு செய்தி. அதிலும் குறிப்பாக “என் வாழ்க்கையே என் செய்தி’ என்று காந்தி சொன்னார் என்பதை எடுத்து கூறி இருப்பது மிக அருமை.

    நன்றியுடன் அருண்.

  6. வேரிலிருந்து உச்சாணி காம்பில் துளிர்ந்திருக்கும் கட்ட கடைசி இலை வரை மருத்துவ குணம் கொண்ட மூலிகை கொடி அது. அருமையான வார்த்தை சார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *