Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, June 14, 2024
Please specify the group
Home > Featured > தேடி வந்த தொண்டன் லட்சத்தில் ஒருவன் இந்த மதுசூதனன்!

தேடி வந்த தொண்டன் லட்சத்தில் ஒருவன் இந்த மதுசூதனன்!

print
மது ரைட் மந்த்ரா ஆண்டுவிழாவில் நெஞ்சை நெகிழவைக்கும் எத்தனையோ சம்பவங்கள் நடைபெற்றன. வந்தவர்களே இதற்கு சாட்சி. ஒவ்வொருமுறையும் இது போன்ற விழா நடத்தி முடிக்கும்போது தளம் அடுத்த கட்டத்திற்கு செல்வது போல, மனமும் அடுத்த கட்டத்திற்கு செல்கிறது. இது போன்ற விழாக்களை நடத்தி முடிக்கும்போது எத்தனை அனுபவம், எத்தனை பக்குவம்!

ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன்.

நிகழ்ச்சி நடைபெறும் மண்டபத்தை மதியம் 3 மணிக்கு எங்கள் கைகளில் ஒப்படைத்த பிறகு, மேடை அமைப்பு, ஒலிப்பெருக்கி வசதி, பேனர் கட்டுவது, சேர்களை வரிசையில் போடுவது என அனைத்து ஏற்பாடுகளையும் நானும் நண்பர்களும் செய்துகொண்டிருக்கிறோம். நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது. விழா துவங்க ஒரு மணிநேரமே இருக்கிறது. பாதி வேலை முடியவில்லை. எனக்கு ஒரே பதட்டம். திருமண விழாக்களில் பெண்ணின் தகப்பனுக்கு எப்படி இருக்குமோ அப்படி ஒரு பதட்டம்.

சேர்களை எடுத்துப் வரிசையில் போடும் போது, ஒருவர் எங்களுடன் சேர்ந்து அவரும் சேர்களை எடுத்து போட்டுகொண்டிருந்தார்.

“நீங்க யார் சார்? தெரிஞ்சிக்கலாமா?” என்றேன் அவரை அறிந்து கொள்ளும் ஆவலில்.

“நானும் உங்க வாசகர் தான் சார். ரைட்மந்த்ராவை ரெகுலரா படிக்கிறேன். நிகழ்ச்சியை பத்தி ஆர்டிகிள் பார்த்துட்டு வந்தேன். கொஞ்சம் சீக்கிரம் வந்தா உங்களுக்கு உதவி செய்யலாமேன்னு வந்தேன்” என்றார்.

அவரது கைகளை பற்றி, “ரொம்ப தேங்க்ஸ்… ரொம்ப தேங்க்ஸ்” என்றேன். அவர் பேரைக்கூட பதட்டத்தில் நான் கேட்க மறந்துவிட்டேன்.

அவர் யார் என்ன என்று எனக்கு தெரியாது. தன்னை என்கிட்டே வெளிப்படுத்திக்க கூட அவருக்கு தோணலை. நான் கேட்டதுனால தன்னை பத்தி என்கிட்டே சொன்னார். தன் வீட்டு விழா மாதிரி முன்னரே வந்து எங்கள் பணிகளில் உதவுகிறார். இதை இதைத் தான் நான் இந்த பண்பை தான் நான் ரைட்மந்த்ரா வாசகர்களிடம் எதிர்பார்க்கிறேன்.

ரைட் மந்த்ரா ஆண்டு விழா என்பது என்னுடைய பர்சனல் விழா அல்ல. இது ஒரு பொதுவிழா. நாட்டுக்காக வாழ்ந்து நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த பகத்சிங், தசரத் மஞ்சி ஆகியோரை நினைவுகூரும் விழா. தன்னலமற்ற சேவை செய்பவர்களை கௌரவிக்கும் விழா. சான்றோகளை பேசவைத்து அதை கேட்டு நாம் ஆனந்தப்படும் ஒரு விழா.

எப்போது தளத்தில் ‘அனைவரும் வருக’ என்று சொல்லிவிட்டேனோ அப்போதே அனைவருக்கும் அழைப்பு விடுத்தாகிவிட்டது. இணையம் பார்க்க முடியாத, பார்க்க தெரியாத, சிலரை நேரில் அழைக்க நினைத்தும் முடியவில்லை. எனவே அவர்களுக்கு கூரியர் மூலம் அனுப்பினேன்.

வேறு சிலருக்கு அவர்கள் வயது மற்றும் அனுபவம் கருதி நேரில் சென்று அழைக்க நினைத்தேன். அதுவும் முடியவில்லை. கூரியரிலும் மின்னஞ்சலிலும் அழைப்பு அனுப்பினேன். ஆனால்….

உங்களுக்கே தெரியும்… வேலை பார்த்துக்கொண்டே என்னுடைய ஃப்ரீ டயத்தை முழுக்க முழுக்க இந்த தளத்திற்காக ஒதுக்கி பணியாற்றி வருவது. (சினிமாவையெல்லாம் நான் பார்த்தே பல மாதங்கள் ஆச்சுங்க.) அலுவலகத்தில் வேலையில் இருக்கும்போது விழா பற்றி எவரிடமும் பேச முடியவில்லை. மாலை வேளைகளில் விழா ஏற்பாடுகளை நான் தனியாளாக தான் செய்துகொண்டிருந்தேன். ஆகையால் அப்போதும் பேசமுடியவில்லை. சனிக்கிழமை நண்பர்கள் விஜய் ஆனந்தும் குட்டி சந்திரனும் களம் இறங்கி பல வேலைகளை செய்து முடித்தார்கள். இல்லையென்றால்… நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

நிகழ்ச்சி குறித்து சிலரிடம் பேசும்போதே யூகித்துவிட்டேன் அவர்கள் வரமாட்டார்கள் என்பதை. ‘நிச்சயம் வருவார்கள்’ என்று எதிர்பார்த்த சிலர் வராமல் போனது அதிர்ச்சி தான். காரணத்தை ஆராய நான் விரும்பவில்லை. அவர்கள் கொடுத்து வைத்தது அவ்வளவே என்பதை நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அறிவார்கள். சிலர் நாளை திருவாசகம் முற்றோதல் வருவதால் அதற்கு போய்க்கொள்ளலாம் என்று விட்டுவிட்டனர்.

சரி…வந்தவர்களை பத்தி பேசுவோம்.

புகைப்படத்தில் இருப்பவரை பாருங்கள். இவர் பெயர் மதுசூதனன். இவருக்கு இடுப்புக்கு கீழே செயல்பாடு கிடையாது. நமது விழாவில் கலந்துகொள்ள விரும்பி, தனது தாயாருடன் வந்திருந்தார். பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கும் இவர், SCRIBE எனப்படும் துணையை வைத்து தான் தேர்வுகளை எழுதினர். இவர் இப்படி ஒரு குறைபாட்டுடன் பிறந்ததால் இவரது தந்தை இவரையும் இவரது தாயாரையும் அப்படியே விட்டு விட்டு எங்கோ போய்விட்டார்.

நிகச்சியில் இவர் கலந்துகொண்டே தீரவேண்டும் என்று விரும்பியதால் மிகுந்த சிரமத்திற்கு இடையே இவரை இவரது தாயார் அழைத்து வந்தார். முதல் மாடியில் இருந்த விழா அரங்கிற்கு படிக்கட்டில் ஏறி வந்தார். இவர் தட்டு தடுமாறி படிக்கட்டில் ஏறி வருவதை பார்த்தவுடன் பதறிப்போய் ஓடிச் சென்று நண்பர்கள் தாங்கி பிடித்து அரங்கிற்குள் அழைத்து வந்தனர்.

அவரை சௌகரியமாக அமரச் செய்தோம். முழு நிகழ்ச்சியையும் அமர்ந்து ரசித்தார். (இவரை போன்ற ஒருவர் நிகழ்ச்சி முழுக்க அமர்ந்து ஒவ்வொரு நொடியையும் ரசித்து பார்த்ததே லட்சம் பேர் பார்த்த திருப்தியை எனக்கு தந்துவிட்டது!)

மேடையில் நாம் இருக்கும்போது அவரது தாயார் மீனலோசினி நம்மிடம் வந்து, பிரார்த்தனையின் போது மதுசூதனனின் பெயரை குறிப்பிட்டு அவர் குணமடைய பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

இது வரை பிரார்த்தனை சமர்பிக்கப்பட்ட அனைவருக்கும் சேர்த்து ஒரு பொது பிரார்த்தனை தான் நான் செய்வதாக இருந்தது. இருப்பினும் இந்த நிலையிலும் நமது நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்பி நம்மை நாடி வந்து பிரார்த்தனை கோரிக்கை வைக்கிறார் என்றால், அது நம் குருமார்களின் விருப்பமேயன்றி வேறொன்றாக இருக்க முடியுமா?

எனவே சிறப்பு பிரார்த்தனை நடைபெறும் முன்பு, மதுசூதனனை பற்றி எடுத்துக்கூறி, அவர் விரைவில் பரிபூரண குணமடைய அனைவரையும் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொண்டோம்.

அவர் தாயார் நிகழ்சியின் இறுதியில் நம் கைகளை  பிடித்து, கண் கலங்கியபடி நன்றி கூற, இத்தனை சிரமத்திற்கு இடையேயும் நிகழ்ச்சிக்கு வந்திருந்து முழு நிகழ்ச்சியிலும் தொடர்ந்து இருந்தமைக்கு – சிறப்பு விருந்தினர்களுக்கு அளிக்க நாம் வைத்திருந்த விஷேட பரிசை (பிரேம் செய்யப்பட்ட தினசரி பிரார்த்தனை பாடல்) மதுசூதனனுக்கு அளித்தோம்.

மதுசூதனனை மேடையில் ஏற்றி சிரமப்படுத்த கூடாது என்பதற்காக சிறப்பு விருந்தினர்கள் திரு.சுவாமிநாதன், மற்றும் அம்மன் சத்தியநாதன், திரு.ஜெ.பி. மற்றும் திரு.ராஜேந்திரன் ஆகியோர் கீழே இறங்கி வந்து இணைந்து மதுசூதனனுக்கு அந்த பரிசை அளித்தனர்.

திரு.சுவாமிநாதனும், அம்மன் சத்தியநாதன் அவர்களும் இனைந்து பாடல்களை பாடி மதுசூதனனை ஆசீர்வதிக்க, அவரது தாயார் மீனலோசினி அவர்கள் நெகிழ்ச்சியில் அழுதே விட்டார்.

மேடையில் நின்றுகொண்டிருந்த நம்மை நோக்கி வந்து “சார்… என் குழந்தைக்கு இன்னைக்கு இத்தனை பெரியவர்களோட வாழ்த்துக்களும்  குருமார்களோட ஆசீர்வாதமும் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கலை. அவங்களுக்கு கிடைச்ச ஃபிரேம் போட்ட பிரார்த்தனை படம் என் குழந்தைக்கும் கிடைச்சது ரொம்ப சந்தோஷம்!” என்று நம்மிடம் கூறி நெகிழ்ந்தார்.

இறுதியில் பார்வைத் திறன் சவால் கொண்ட (பார்வையற்றவர்களை இப்படித் தான் அழைக்கவேண்டும்) தெய்வீகக் குழந்தை – குட்டி விவேகானந்தர் சிறுவன் சபரி வெங்கட்டுடன் மதுசூதனன் அளவளாவி – இருவரும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டது கண்கொள்ளா காட்சி.

நேற்று இரவு தனது தாயாரின் துணையுடன் மதுசூதன் அனுப்பிய கமெண்ட் என்ன தெரியுமா?

========================================
அன்புள்ள சுந்தர்ஜி

எனக்காக கூட்டு பிரார்த்தனை செய்தமைக்கு மிக்க நன்றிகள். நான் நினைthukuda பார்க்கவில்லை  இவ்வளவு பெரியவர்களையும், இன்றைய சுவாமி விவேகனந்தரையும்  ஒர் சேர பார்த்ததில் எனக்கு மிக்க சந்தோசம். விழாவிற்கு வந்த பெரியவர்கள் ஆசியுடன் ரைட் மந்த்ரா தினசரி பிரார்த்தனை மடலை கொடுத்தது தெவிட்டாத இன்பம். ஆனாலும் குழந்தை விவேகனந்தர்(சபரி வெங்கட்) நிச்சயம் பார்வை கிடைக்க வேண்டும் என்று நான் குருவிடம் அந்த இடத்திலேயே பிரார்த்தனை செய்ய ஆரம்பித்து விட்டேன் நான் அடுத்த நிகழ்ச்சிக்கு நடந்து வர வேண்டும் என்று ரைட் மந்த்ரா கூட்டு பிரார்த்தனை தொடர்ந்து செய்யும் படி கேட்டுகொள்கிறேன் மேடையில்  பேச நினைத்ததை இன்னைய தளத்தின் மூலம் அனுப்பியுள்ளேன்

அன்புடன்
மதுசூதனன்
========================================

சபரி வெங்கட் பார்வைத் திறன் சவால் கொண்டவர் என்பதே நமக்கு ஒரு விஷயமாக படவில்லை (காரணம் அக்குழந்தையின் ஞானம்). அதை பற்றி நாம் யோசிக்கவும் இல்லை. அவனுக்கு விரைவில் பார்வை தெரியவேண்டும் என்று அவன் பெற்றோரை தவிர எத்தனை பேர் பிரார்த்தனையின் போது பிரார்த்தித்தார்களோ தெரியவில்லை.

ஆனால் “இடுப்புக்கு கீழே செயல்பாடே கிடையாது” என்கிற நிலையிலும், கண் தெரியாத அந்த குழந்தை சபரி வெங்கட்டுக்காக “நான் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்துவிட்டேன்” என்று கூறும் மதுசூதனன் எங்கே… நம்மை பற்றி பற்றி மட்டுமே கவலைப்பட்டு நம் பிரச்னை தான் இந்த உலகிலேயே பெரிது என்று கவலைப்படும் நாம் எங்கே ? இறைவா எங்களை வெட்கப்படவைத்துவிட்டாய்.  யார் இங்கே ஊனமுற்றவர்கள் என்று புரியவில்லை.

மகா பெரியவாவின் அதிஷ்டானத்திற்கு மதுசூதனனை விரைவில் அழைத்து செல்வதாக அவர் தாயார் மீனலோசினி அவர்களிடம் கூறியிருக்கிறேன். நான் மகா பெரியவாவை சந்திக்க அதிஷ்டானம் செல்ல நினைக்கும்போதெல்லாம் ஏதாவது தடை வரும். இப்போது தான் காரணம் புரிகிறது. “நீ வர்றது ஒன்னும் பெருசில்லைடா… நீ வரும்போது மதுசூதனனை அழைச்சிட்டு வரனும்” என்று மகா பெரியவா கூறுகிறார் போல!

உத்தரவு குருவே!

“என் கடன் பணி செய்து கிடப்பதே. உங்கள் கடன் என்றும் எங்களை காப்பதே!”

விழாவுக்கு தான் ஒருவன் வந்திருந்து, இறுதி வரை இருந்து ரசித்து, எங்களையும் கண்கலங்க வைத்து லட்சம் பேர் வந்த மன நிறைவை எங்கள் குழுவினருக்கு அளித்துவிட்டான் மதுசூதனன். உண்மையில் இவன் லட்சத்தில் ஒருவன்! ஆம்… லட்சத்தில் ஒருவன் இந்த மதுசூதனன்!

===========================================
ஒரு வேண்டுகோள் !

நம் ஆண்டு விழா ஏற்பாடுகளை, அதன் தரத்தை, நேர்த்தியை புகைப்படங்களில் ஓரளவு பார்த்திருப்பீர்கள். வந்த அனைவரும் அதை உணர்ந்தார்கள். எல்லா விழாக்களையும் போல இதற்கும் செலவுகள் கூடுதலாகி கடைசி நேரத்தில் பட்ஜெட் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டது. நிச்சயம் உதவுதாக சொன்ன சிலரால் அவர்கள் சூழ்நிலையின் காரணமாக உதவ முடியவில்லை. மேலும் சிலர் அளித்த தொகை, நடைமுறை சிக்கல் காரணமாக இன்னும் எனக்கு வந்து சேரவில்லை. எனவே வீடியோ + புகைப்படங்களுக்கு பாதி தொகை தான் கொடுத்திருக்கிறேன். எனவே நண்பர்கள் மனமுவந்து போதுமான நிதியளித்து உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இந்த ஆண்டு விழா தொடர்பாகவும், உதவிட விரும்புகிறவர்கள் ரைட்மந்த்ராவுக்கு என்றே புதிதாக துவக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் உங்கள் பணத்தை செலுத்தவும். ரைட் மந்த்ரா வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விபரங்கள்…இந்த பதிவில் உள்ளது.

http://rightmantra.com/?p=7025

தொகையை செலுத்திய பின்பு, மறக்காது நமக்கு simplesundar@gmail.com, rightmantra@gmail.com மின்னஞ்சல் அனுப்பவும். அல்லது 9840169215 என்ற மொபைல் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும்.

நன்றி,
– சுந்தர், Rightmantra.com
===========================================

[END]

16 thoughts on “தேடி வந்த தொண்டன் லட்சத்தில் ஒருவன் இந்த மதுசூதனன்!

 1. உண்மையில் மதுசூதனன் தம்பியை பற்றி தாங்கள் எழுதயுள்ளது நெஞ்சை நெகிழவைக்கும் சம்பவம் தான். நிச்சயம் அவருக்காக நாம் செய்த பிரார்த்தனை நம் மகா பெரியவா ஆசிர்வததினால் விரைவில் அவருக்கு குணமடையும்.
  நம் அடுத்த விழாவிற்கு அவர் நடந்தே வருவார்.
  கண்களை நிறைய வைக்கும் தருணம். தனக்கு இப்படி இருக்கும் போடும் அவர் நம் விவேகனந்தர் அவர்களுக்கு பிரார்த்தனை செய்தது பாராட்டுதற்கு உரியது.

 2. சுந்தர்ஜி
  ஆண்டுவிழாவிற்கு வரமுடியாவிட்டாலும் விழா எதிர்பார்த்ததைவிட நல்லபடியாக நடந்து இருக்கிறது என உங்கள் இரு பதிவுகளின் மூலம் அறிந்து மிகுந்த மகிழ்ச்சி. எங்களுக்கு கொடுத்து வைக்காவிட்டாலும் மதுசூதனன் போன்ற நல்ல உள்ளங்கள் கலந்து கொண்டது குறித்து நமக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவர் நலம் பெற நிச்சயம் வேண்டுவோம். மேலும் ஆண்டுவிழா குறித்த சுந்தர்ஜி அவர்களின் கைவண்ணத்தில் வெளிவரும் பதிவுகள் அனைத்தும் படித்து நேரில் வராததை ஈடுகட்டிகொள்கிறென்.

  அடுத்த ஆண்டு நம் தளம் இன்னும் சிறப்பாக விழா கொண்டாடும் என்பதில் ஐயமில்லை. அடுத்த விழாவாக நம் தளம் சார்பாக உங்கள் திருமணம் விரைவில் நடக்கட்டும் என வேண்டுகிறேன். அதற்காவது நாங்கள் வர இறைவன் அருளட்டும்.
  உங்களை பெற்ற தாய் தந்தையர்க்கும் என் நன்றிகள். நன்றி

 3. சுந்தர்ஜி,
  மதுசுதனனுக்காக பிரார்த்தனை திடீர் அறிவிப்பு செய்தமைக்காக தங்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். தங்களுடைய இந்த பதிவு என் கண்களில் நீரை வர வைத்து விட்டது.

  எனக்கு அவர்களை வெகு ஆண்டுகளாக தெரியும். யதேச்சையாக பேசும்போது ஆண்டு விழாவை பற்றி சொல்லி இருந்தேன். முடிந்தால் கலந்து கொள்வதாக சொல்லி இருந்தார்கள். அவர்கள் வருவது குறித்து சரியான தகவல் எனக்கு தெரியாததால் எனக்கு உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. அந்த குழந்தையை வளர்க்க அவர்கள் எவ்வளவு கஷ்டபட்டர்கள் என்று சொல்லி மாளாது. அவனது தாய் கருவில் சுமந்த நாள் 10 மாதம் என்றால் இடுப்பில் சுமந்த வருடம் 15.
  மதுசூதனின் சித்தி என்னுடைய தோழியாவாள். டிரெயின் தோழி.
  ( தோழி என்றால் மிகையாகாது சகோதரி என்றே கூற வேண்டும்)
  காலை வேலையில் டிரெய்னில் கூட்டங்களுக்கு இடையே அந்த குழந்தையை இடுப்பில் சுமந்து கொண்டு ஸ்பெஷல் ஸ்கூல் படிக்க வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நம் தள பிரார்த்தனையில் கலந்து கொள்ள வேண்டும் என்பது மகா பெரியவாளின் ஆசியாகதான் இருக்க வேண்டும். நிச்சயம் மகா பெரியவர் அவனை
  அடுத்த ஆண்டு விழாவிற்குள் நடக்க வைத்து விடுவார் என்ற நம்பிக்கை உள்ளது.

  மதுசுதன் highlight ஆக வேண்டும் என்பது மஹா பெரியவாளின் சித்தம் போல. அவன் தன்னை விட சபரி வெங்கட் பார்வை கிடைக்க வேண்டும் என்பதில் ஆவலாக உள்ளான். மகா பெரியவர் இரண்டு பேரையும் குறை தீர வழி காட்டுவார்.

 4. மதுசுதன் விரைவில் குணமடைந்து வீர நடை போடுவார். அதற்குரிய தன்னம்பிக்கையும், தைரியமும் அவரிடம் நிறையவே காண முடிகிறது. தன் நலம் பாராமல் பிறர் நலம் வேண்டுவோரை (சபரிக்காக இவர் பிரார்த்தனை செய்தது) மகா பெரியவா வழி நடத்துவார். மது சூதனனை நேரில் கண்டது போல் இருந்தது உங்கள் பதிவு. வாழ்த்துக்கள் சுந்தர் சார்.

 5. ///////////விழாவுக்கு தான் ஒருவன் வந்திருந்து, இறுதி வரை இருந்து ரசித்து, எங்களையும் கண்கலங்க வைத்து லட்சம் பேர் வந்த மன நிறைவை எங்கள் குழுவினருக்கு அளித்துவிட்டான் மதுசூதனன். உண்மையில் இவன் லட்சத்தில் ஒருவன்! ஆம்… லட்சத்தில் ஒருவன் இந்த மதுசூதனன்!//////

  சுந்தர் நீங்கள் எழுதிய உங்கள் ஆண்டு விழா நிகழ்ச்சி தொகுப்பை படித்து மிகவும் பரவசம் அடைந்தேன். என்னினும் நீங்கள் முடித்துள்ள விதம் ஒரு முதிர்ந்த பக்குவமுள்ள ஒரு மாமனிதனாக நீங்கள் (இந்த ரைட் மந்திர ஆரம்பித்த பிறகு) எனக்கு தென்படுகிறீர்கள். விழாவிற்கு வர இயலாமைக்கு என்னை மன்னிக்கவும்.

 6. நமக்கு ஏதாவது பிரச்சனை இருக்கிறது என்றால் ,நாம் அதை பத்தி தான் யோசிப்போம் ஆனால் தனக்காக அடுத்தவர்கள் வேண்டுகிறார்கள் என்றாலும் தான் ஒரு தெய்வீக குழந்தைக்காக வேண்டும் மனம் என்பதே பெரியது இந்த மனம் ஒன்று போதும் மதுசூதனன் பரிபூரண குணம் அடைவார் அடுத்த ஆண்டு நம் விழாவில் நம் கூட மாட வேலை செய்து நமக்கு உதவுவார்

 7. சுந்தர்… கண்கள் கசிகின்றன இந்த பதிவை படித்ததும். தங்கள் தொண்டும் அன்பும் உழைப்பும் என்றும் தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்

  1. தங்களை போன்றவர்களின் ஆசியும் குருமார்களின் அனுக்ரஹமும் தான் சார் எங்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை!

   மிக்க நன்றி!!

   – சுந்தர்

 8. சுந்தர் சார்,

  சொல்ல வார்த்தை இல்லை. மிகவும் அற்புதம். நானும் மதுசுதனிடம் பேசிகொண்டிருந்தேன். அவனின் பேச்சுத்திறன் எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. நிச்சயம் மகா பெரியவரின் ஆசியுடன் அவன் நடக்க வேண்டும். நம் சபரிக்கும் பார்வை கிடைக்கட்டும்.

  நன்றியுடன் அருண்.

 9. எங்கோ மூலையில் முடங்கிக் கிடக்காமல் ஒரு தேடலோடு வலம் வருகிற மதுசூதனன் மற்றும் குழந்தை சபரி வெங்கட் இருவரும் பிறப்பின் இலக்கினை எட்டுவர் என்பது அவர்களின் முகங்களில் தெரிகிறது. இருவரும் இன்னும் பலருக்கு முன்மாதிரியாகத் திகழ்வர் என்பதில் ஐயமில்லை. “ரைட் மந்த்ரா” – இணையம் உள்ளவரை இருக்கவேண்டும் – இந்த நானிலம் பயனுற வாழ்வதற்கே!

 10. We appreciate the courage and confidence of our brother Madhusudanan .Although being phisically disabled ,he came forward to pray for the blind child .It expresses his genuine and noble character .He is such a splendid ,increadible and devoted child .We the sisters ,of Madhusudanan pray to the almighty to shower his blessings on him .Hatsoff to Madhu ….Three cheers for him ….hip hip …hurray

 11. ஆன்றோர்களும் சான்றோர்களும் கலாந்துகொண்ட ஒரு அற்புத விழாவில் எங்களை கலந்துகொள்ள செய்தது மட்டும் இல்லாமல் மேடையேற்றி அந்த சான்றோர்களின் ஆசிர்வததையும் வாழ்த்தையும் பெற்றுத்தந்த இந்த தளத்துக்கும் உங்களுக்கும் எங்களினின் மனமார்ந்த நன்றிகள் சுந்தர்….விழவைபற்றி குறிப்பிட்டு சொள்ளவவேண்டும் என்றால்…..முத்துமாலையில் எந்த முத்து சிறந்தது என்பதை எப்படி சொல்லமுடியும்….
  ,
  இதுபோன்ற விழாக்கள் தொடர்ந்து நடைபெறவேண்டும் அதில் எங்களின் பங்களிப்பு இருக்கவேண்டும் என்று உங்களை வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறோம்.
  .
  மாரீஸ் கண்ணன்

 12. மிகவும் நெகிழ வைத்த ஒரு நிகழ்ச்சி. விழா ஏற்பாடு செய்தவருக்கு
  வாழ்த்துக்கள்.

 13. இந்த உலகில் ஒரு ஒரு உயிரின் பிறப்பிருக்கும் ஒரு காரணம் உண்டு இன்று உங்களது பாதை அந்த அர்பணிப்பு இந்த அடுத்த கட்ட வளர்ச்சி
  எல்லாம் இறைவனின் விருப்பம்
  விழா சிறப்பாக முடிக்க உதவிய நண்பர்களுக்கும் அந்த இறைவனுக்கும் நன்றி
  மதுசூதனின் சித்தி அவர்களை பார்த்தால் ஆச்சர்யமாக உள்ளது இவுளுகம் உருள்வதற்கு இவர்களே காரணம்
  தளத்தின் அடுத்த கட்ட நிகழ்ச்சிக்கு என்னை ஆண்டவன் அழைத்து செல்வான் என்று நம்புகிறேன்

 14. வணக்கம் ,

  மதுசூதனன் அவர்களை சிறு வயது முதல் எனக்கு நன்றாக தெரியும் , அவர் தன் தாயை போலவே எப்போதும் தன்நம்பிக்கையோடு இருப்பவர் , நான் நடத்தி வரும் தொண்டு நிறுவனத்திற்காக அவரின் தாயார் மரியாதைக்குரிய மீனலோசினி அவர்கள் பெரும் உறுதுணையாக எந்த விதமான பலனும் எதிர்பார்க்காமல் இன்றுவரை செயல்பட்டு வருகிறார்.

  ரைட் மந்த்ரா ஆண்டுவிழாவில் மதுசூதனன் அவர்களுக்கு கலந்து கொண்டார் என்ற செய்தியை கேள்விப்பட்டதும் மகிழ்ச்சி அடைந்தேன் . மேலும் , சிறப்பு விருந்தினர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பு பரிசு ( பிரேம் செய்யப்பட்ட தினசரி பிரார்த்தனை பாடல் ) ஒன்றும் அவருக்கு வழங்கப்பட்டது என்ற செய்தி உள்ளபடியே மன நிறைவினை எனக்கு தந்தது .

  மதுசூதனன் அவர்களை ஆண்டுவிழாவில் சிறப்பித்தது , அவருக்கு உளவியல் ரீதியான ஒரு நம்பிக்கையையும் , அவரின் தாயாருக்கு ஆறுதலையும் தந்து இருக்கும் என்று உறுதியாய் சொல்லமுடியும் .

  மதுசூதனன் உற்சாகத்தோடும் , இறைவனின் ஆசியோடும் இனி வரும் நாட்களில் இயங்குவார் என்பதில் இருவேறு கருத்து இருக்கமுடியாது .

  மதுசூதனன் மற்றும் சிறுவன் சபரி வெங்கட் அவர்கள் மீது அக்கறை கொண்டு செயல்படும் ரைட் மந்த்ரா வின் , நிர்வாகிகளுக்கும் , களப்பணியாளர்களுக்கும் என் நன்றிகள்.

  தம்பி மதுசூதனன்
  தம்பி சபரி வெங்கட் ஆகிய இருவரும்

  நிச்சயம் தடைகளை தகர்ப்பார்கள்
  நாளை , புதிய வரலாறு படைப்பார்கள்

  என்ற உறுதியான நம்பிக்கையோடு

  ஆர் . எஸ் . அற்புதம்

 15. நான் முதன் முதலாக ரைட் மந்த்ரா வாசகி ஆவதற்கு காரணம் இந்த அருமையான ஆண்டுவிழா பதிவு தான். மது சூதணனை பற்றி படிக்கும் போல் நம் கண்கள் கசிகின்றன. நம் பாரதி விழாவில் மதுசூதனனை பார்த்தேன். வரும் ஆண்டு விழா விழும் மதுசூதனனையும் சபரி வெங்கட்டையும் எதிர்பார்க்கிறோம்

  fantastic !!!!

  நன்றி
  உமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *