“உங்களை நம்பி உங்களுக்காக ஒரு விழா” பதிவிற்கு நான் எதிர்பார்த்ததை விட ஒரு நல்ல ரெஸ்பான்ஸை தந்திருக்கிறீர்கள். உங்களது அன்புக்கும் ஆதரவிற்கும் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று தன்னலமற்ற சேவையை உங்களுக்கு தொடர்ந்து தருவது தான் நான் செய்யக்கூடிய நன்றியாக இருக்கும்.
பல வாசகர்கள் இந்த விழாவில் கலந்துகொள்ளவும், சிறப்பு விருந்தினர்களை நேரில் பார்க்கவும், அவர்கள் பேசுவதை கேட்கவும் மிகவும் ஆவலாக இருக்கிறார்கள். அதே நேரம் சிலருக்கு பணம் கொடுத்தால் போதும் நிகழ்ச்சிக்கு நாம் போகவேண்டிய அவசியம் இல்லை என்கிற எண்ணம் இருக்கிறது. அது தவறு. நான் உங்களிடம் முதன்மையாக எதிர்பார்ப்பது (சென்னையில் வசிப்பவர்கள்) நிகழ்ச்சியில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டும், ஒப்பற்ற சான்றோர்களை நேரில் பார்க்க வேண்டும், அவர்கள் பேசுவதை கேட்கவேண்டும் என்பதே தவிர பணம் அல்ல. நீங்கள் செய்யும் பொருளுதவி இரண்டாம் பட்சம் தான்.
அனைவரும் சிரமமின்றி குடும்பத்துடன் வரவேண்டும் என்பதற்காகத் தான் ஞாயிற்றுக் கிழமை ஏற்பாடு செய்திருக்கிறேன். குடும்பத்தோடு பங்கேற்று பயன்பெறுங்கள்.
சிவனருளால் இம்முறை விழாவிற்கு கூட்டம் சற்றும் அதிகமாக வரும் என்று எதிர்பார்க்கிறேன். ஆகவே அரைமணிநேரம் முன்னதாகவே வந்து, நாற்காலிகளில் அமரும்படி கேட்டுக்கொள்கிறேன். போதுமான வசதிகளை விசாலமான அந்த ஹாலில் நாம் செய்திருந்தாலும் தாமதமாக நீங்கள் வந்தால் அமருவதற்கு இடம் கிடைக்க சிரமம் இருக்கலாம்.
புத்தக ஸ்டால்கள் இடம்பெறுவதால் சற்று முன்னர் வந்தால் உங்களுக்கும் மேலே குறிப்பிட்ட நூல்களை வாங்குவதற்கு வசதியாக இருக்கும்.
விழா நடைபெறும் நாள் : செப்டம்பர் 29ம் ஞாயிறு மாலை 5.30 – 8.00. (5.15 pm முன்பாக வந்து நாற்காலிகளில் அமர்ந்துவிடுங்கள்).
இடம் : அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோவில், பி.டி.ராஜன் சாலை, கே.கே. நகர் (சிவன் பார்க் அருகே), சென்னை – 600 078.
பஸ் ரூட் : 5E, 11G, 11H, 12G, 17D, 18M, M18M, 37D, 49, 49A, G70 | பஸ் ஸ்டாப் : சிவன் பார்க்
ஆண்டு விழாவை முன்னிட்டு எப்போதும் ஞாயிறு மாலை 5.30 – 5.45 நடைபெறும் நம் வாராந்திர பிரார்த்தனை கிளப்பின் பிரார்த்தனை இந்த வாரம் மட்டும் 6.00 மணிக்கு கடவுள் வாழ்த்து பாடல்கள் பாடி முடித்தவுடன் நடைபெறும். கோரிக்கைகள் மேடையில் வாசிக்கப்பட்டு சிறப்பு விருந்தினர்களை வைத்து நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திலேயே பிரார்த்தனை செய்யப்படும். இதற்கு முன்னர் பிரார்த்தனைகளை சமர்பித்திருந்தவர்களுக்கும் சேர்த்து விஷேட பிரார்த்தனை நடைபெறும்.
இது நம் குடும்ப விழா. எனவே ஞாயிறு அன்று உங்கள் தனிப்பட்ட நிகழ்ச்சிகளை அன்று தவிர்த்துவிட்டு நம் குடும்ப விழாவில் கலந்துகொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த விழாவிற்கு டெல்லி, செகந்திராபாத், பெங்களூர், உதய்பூர், மும்பை, திருச்சி, மதுரை, நெல்லை, சேலம், வேலூர், கோவை, ஸ்ரீவில்லிப்புத்தூர், ஓசூர் என பல இடங்களில் இருந்து வாசகர்கள் வருகிறார்கள். பெண் வாசகர்கள் உட்பட பலர் வெளியூர்களில் இருந்தெல்லாம் குடும்பத்தோடு வரவிருக்கிறார்கள். எனவே சென்னையில் இருக்கும் நம் வாசகர்கள் அவசியம் இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நிகழ்ச்சியில் சர்ப்ரைஸாக ஒரு சிறப்பு விருந்தினர் கலந்துகொள்வதாக கூறியிருக்கிறார். “அழைப்பிதழில் பெயரை போடவேண்டாம்… ஆனால் நிச்சயம் நான் கலந்துகொள்கிறேன். பேசுகிறேன்.” என்று கூறியிருக்கிறார். அவர் பேசுவதை அவசியம் நீங்கள் கேட்கவேண்டும். அவர் யாரென்று தெரிந்தால் அவருக்காக இன்னும் பலர் வரக்கூடும். இருப்பினும் அவரிடம் கொடுத்த வாக்குறுதிக்காக ரகசியம் காக்கிறேன்.
தவிர விழாவில் கலந்துகொள்ளும் நம் வாசகர்கள் அனைவருக்கும் நம் தளம் சார்பாக ஒரு எளிய பரிசு வழங்கப்படும். எளிய பரிசு என்றாலும் பரிசை பார்த்தாலே உங்கள் அகமும் முகமும் மலரும் என்பது உறுதி. (நோ…நோ… யூகிக்காதீர்கள். நிச்சயம் உங்கள் யூகத்திற்கு அப்பாற்ப்பட்டதாகத் தான் அந்த பரிசு இருக்கும்!)
மேற்படி நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்தில் காமதேனு பப்ளிகேஷன்ஸ், அம்மன் பதிப்பகம், சாய்குமார் பப்ளிகேஷன்ஸ், ஞானத்திரள் ஆகியவற்றி ஸ்டால்கள் இடம்பெறவிருக்கின்றன. மகா பெரியவா அவர்களை பற்றி திரு.சுவாமிநாதன் எழுதிய ‘மகா பெரியவா’ புத்தகம் கிடைக்கும். தவிர திரு.சுவாமிநாதன் அவர்கள் எழுதிய வேறு பல நூல்களும், திரு.அம்மன் சத்தியநாதன் அவர்கள் எழுதிய இராகவேந்திர மகிமை 9 பாகங்கள் உள்ளிட்ட அம்மன் பதிப்பகத்தின் தரமான இதர நூல்கள் கிடைக்கும். அதே போல், ‘திருக்கோவில் தகவல் களஞ்சியம்’ திரு.சாய்குமார் அவர்கள் எழுதிய பல்வேறு வந்தாரை வாழவைக்கும் வைணவத் தலங்கள், பாடல் பெற்ற சைவத் தலங்கள் ஆகிய திருக்கோவில் வழிகாட்டி நூல்களும் கிடைக்கும்.
‘தேவார முரசு’ திரு.சிவக்குமார் அவர்களின் சொற்பொழிவு சி.டி.க்களும், அவர் நடத்தும் ‘ஞானத் திரள்’ இதழும் கூட கிடைக்கும். இந்த நூலுக்கு சந்தா செலுத்த விரும்புகிறவர்கள் அங்கு சந்தா செலுத்தலாம்.
==============================================
ரைட் மந்த்ராவுக்கு என்று தனி வங்கிக் கணக்கு!
உங்கள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி.
ஆஸிட் வீச்சினால் வீச்சினால் பாதிக்கப்பட்ட செல்வி.வினோதினிக்கு நிதி உதவி துவங்கி, பிரேமவாசம் குழந்தைகளுக்கு சீருடை, விளையாட்டு பொருட்கள், விசேட நாள் கிழமை மற்றும் பண்டிகை காலங்களில் சேவாலயா, பிரேமவாசம், திருவள்ளுவர் குருகுலம் உள்ளிட்ட காப்பகங்களில் உள்ள ஆதரவற்ற ஊனமுற்ற குழந்தைகளுக்கு அன்னதானம், இனிப்புக்கள், கோ-சாலை மற்றும் கோவில் பசுக்களுக்கு தீவனம், வருவாய் குன்றிய கோவில்களில் புனருத்தாரனத்துடன் கூடிய உழவாரப்பணி என்று நம் தளம் எத்தனையோ அறப்பணிகளை நம் தனிப்பட்ட செலவிலும் உங்களின் மகத்தான பங்களிப்பு மற்றும் ஆதரவு மூலமாகவும் செய்து வருகிறது.
இப்படி இந்த தளம் சார்பாக மேற்கொள்ளும் பணிகளுக்கு நீங்கள் உதவிடும்போது என் பர்சனல் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி வந்தீர்கள். சமூக பணிகளுக்கு பெறப்படும் தொகை பர்சனல் கணக்கில் சேருவதை நான் விரும்பவில்லை. நம் பணிகள் விரிவடைந்துவிட்டதாலும் பொறுப்புக்கள் அதிகமாகிவிட்டதாலும் இந்த தளம் மேற்கொள்ளும் பணிகள் மற்றும் சேவைகளுக்கென்று ஒரு தனி வங்கி கணக்கு இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதி நண்பர்களின் ஆலோசனைகளுக்கிணங்க ரைட்மந்த்ராவுக்கு என்று தற்போது தனிக்கணக்கு ஒன்று துவக்கி இருக்கிறேன்.
இந்த கணக்கை துவக்குவதற்கு நான் முன்பே முயற்சிகள் செய்தேன். ஆனால், MINIMUM BALANCE எனப்படும் குறைந்த பட்ச வைப்பு தொகை அதிகமாக இருந்த காரணத்தால் பணத்தை அதில் முடக்கிட விரும்பாமல் விட்டுவிட்டேன். ஆனால் தற்போது நான் கணக்கை துவக்கியிருக்கும் AXIS BANK கிளை, RURAL ஏரியாவுக்குள் வருவதால் MINIMUM BALANCE தொகை நகர்ப்புறத்தை விட மிகவும் குறைவு.
“இப்படி ஒரு தளம் நடத்துகிறேன். நாங்கள் மேற்கொள்ளும் பணிகளுக்கு என்று வங்கிக் கணக்கு தேவை” என்று கூறியவுடன் பூவிருந்தவல்லி ஆக்சிஸ் வங்கியின் முதன்மை மேனேஜர் கிருஷ்ணா அவர்கள் முன்னின்று அனைத்து உதவிகளையும் செய்து, கணக்கை துவக்கி தந்திருக்கிறார். நம் தளத்தையும் பணிகளையும் வெகுவாக பாராட்டினார். நம் ஆண்டு விழாவிற்கும் வருவதாக கூறியிருக்கிறார். அவருக்கு என் நன்றி!!
இந்த ஆண்டு விழா தொடர்பாகவும், நமது தளத்தின் பணிகள் மற்றும் இதர சேவைகள் தொடர்பாகவும் உதவிட விரும்புகிறவர்கள் இந்த வங்கிக் கணக்கிற்கு இனி தங்கள் நன்கொடைகளை செலுத்தலாம். இதில் செலுத்தப்படும் தொகை யாவும் சமூக & ஆன்மீக பணிகள், கோ-சேவை, உழவாரப்பணி, விசேட நாட்களில் செய்யப்படும் அன்னதானம், மற்றும் இதர அறப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182
தொகையை செலுத்திய பின்பு, மறக்காது நமக்கு simplesundar@gmail.com, rightmantra@gmail.com மின்னஞ்சல் அனுப்பவும். அல்லது 9840169215 என்ற மொபைல் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும்.
இந்த தளம் தொடர்பான உங்கள் நம்பிக்கைகள் மற்றும் எதிர்ப்பார்ப்புக்கள் அனைத்தையும் நானறிவேன். உங்கள் எண்ணப்படியே நம் தளம் வளர்ந்து ஒவ்வொரு விஷயத்திலும் உங்கள் உள்ளக்கிடக்கையை பிரதிபலித்து நீங்கள் முன்னின்று செய்ய நினைக்கும் சேவைகள் அனைத்தையும் செய்து தனது லட்சிய பயணத்தை என்ன இடையூறு வந்தாலும் தொடரும் என்று உறுதி கூறுகிறேன்.
என்றென்றும் நன்றியுடன்,
சுந்தர், www.rightmantra.com
==============================================
நமது ஆண்டு விழாவிற்க்கு வரும் வி ஐ பி க்களை பார்க்கவும் ,அவர்களது பொன்னான வார்த்தைகலை கேட்கவும் , மிகவும் ஆவலுடன் உள்ளோம் ,அந்த வார்த்தைகள் எங்களுக்கு மீண்டும் ஒரு புத்துணர்ச்சியை தரும் எங்களது வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் எண நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம் …
இந்த ஏற்பாட்டை தனி ஒரு மனிதனாக இருந்து ஏற்பாடு செய்திருக்கும் திரு சுந்தர் சார் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்கின்றேன் …நன்றி ..
சுந்தர்ஜி
நம் தளம் சார்பாக வங்கி கணக்கு தொடங்கி உள்ளது நம் தளத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று. இனி உங்கள் சேவையில் தங்களை இணைத்துக்கொள்ள விரும்பவர்களுக்கு மிக வசதியாக இது அமையும்.
தளத்தின் ஆண்டுவிழா சமயத்தில் இது ஒரு மகிழ்வான செய்தி. நன்றி
சுந்தர் ஜி,
எதிர் காலத்தில் நம் ரைட் மந்திரா அறக்கட்டளையாக ஆவதற்கு இது முதல் முயற்சியாக இருக்க வேண்டுகிறேன். கடவுள் நமக்குள் இடும் கட்டளைபடி நடக்கும் வரை நம்மை எந்த துன்பமும் அணுகாது. எல்லா நல்ல முயற்சிகளிலும் உங்கள் உடன் இருக்க கடவுளை பிரார்த்திகிறேன் .
சென்ற வருடம் பாரதி விழா நடத்தியபொழுது நம் வளர்ச்சி இருக்கும் என்று தெரியும் ஆனால் இன்று நாம் பெற்று இருக்கும் வளர்ச்சி அதைவிட அதிகம் இதில் நண்பர்களாகிய எண்களின் பங்களிப்பு சிறிது தான் என்றாலும் மிக பெருமையாக உள்ளது ,சுந்தர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நாம் நல்ல செயல்களில் ஈடுபடும்போது நம்முடன் துணை நிற்பவரே உண்மையான நண்பர்கள். அந்த வகையில், உங்களை போன்றவர்கள் ரைட் மந்த்ரா என்னும் ஆலயத்தில் தூணாக இருந்து காத்து வந்தீர்கள்.
இந்த தளம் ஓராண்டு பூர்த்தி செய்திருப்பதில் உங்களை போன்ற நண்பர்களின் பங்கு அளப்பரியது.
– சுந்தர்
நண்பர் Rabeek அருமையான கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
” நண்பர்கள் அனைவரும் குடும்பத்துடன் விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன் “.
“நிகழ்ச்சியில் சர்ப்ரைஸாக ஒரு சிறப்பு விருந்தினர் கலந்துகொள்வதாக சுந்தர் ஜி கூறியிருக்கிறார்.
இதனால் சுவாரசியம் மேலும் ஆவலை தூண்டுகிறது.
சுந்தர் ஜி உங்களை SUSPENSE நாயகன் என்று பட்டம் கொடுக்கலாம் .
இன்று கூட SUSPENSE நாயகன் ஒரு சொற்பொழிவை அனுபவிகின்றார் . கைபேசி பேசும் போது ketkindathu .
விழா நாளை ஆவலுடன் எதிர்பார்க்கும் ….
-மனோகர்
வெரி குட் move . இட் இஸ் வெரி useful டு our readers .
டியர் சுந்தர்,
வங்கி கணக்கு தொடங்கி உள்ளது தளத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று. இது தளத்தின் சேவையில் தங்களை இணைத்துக்கொள்ள விரும்பவர்களுக்கு மிக வசதியாக இது அமையும்.
மற்றும் தளத்தின் ஆண்டுவிழா சிறப்பாக நடக்க கடவுளை பிரார்த்திகிறேன் .
இது ஒரு மகிழ்வான செய்தி.
நன்றி
நீங்கள் கொண்ட லட்சியபயணத்தில் இடையுறு என்பதே இருக்காது. இறைவனின் ‘உரு’ தான் என்றைக்கும் வாழும். அதுவே நம்மை எல்லாம் ஆளும்.சரியான நேரத்தில் ‘மக்கள் நேயம்’ தனது பங்களிப்பை மனமுவந்து முன்வைக்க இறைவன் கட்டளை செய்வார். லட்சிய நம்பிக்கையுடன், ‘ஓம்’.
மிக்க மகிழ்ச்சி சுந்தர சார், விழாவில் கலந்து கொள்ள முடியாமல் இருக்கும் நாங்கள், விழாவினை பற்றிய பதிவினை காண ஆவலாக உள்ளோம். பிறர் வாழ உதவும் நீங்கள் எல்லா வளமும், நலமும் பெற வாழ்த்துகிறோம். உங்கள பணியில் எங்களையும் இணைத்துக்கொள்வோம். விழாவினை சிறப்பாக நடத்த எங்கள் வாழ்த்துக்கள் சுந்தர் சார்.
வங்கி கணக்கு தொடங்கி உங்கள் தெளிவு மற்றும் அதன் அற்பணிப்பை காட்டுகிறது கூடிய சீக்கிரம் மற்றவர்கள் செய்வது போல் (income tax ) வரி விலக்கு போல் செய்தால் நன்றாக இருக்கும் (அதன் சிக்கல் நானறியேன்)
தளத்தின் ஆண்டு விழா சிறப்பாக நடைபற வாழ்த்துக்கள்
அதிலும் விருது வழங்கும் அந்த முயற்சி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
மற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் இதிலாவது கலந்துகொள்ளனும், எனது பங்களிப்பை கொடுக்கவேண்டும் என்று நினைத்தேன் ஆனால் கடவுளின் விருப்பம் வேறாக உள்ளது
எல்லாம் நன்மைக்கே
டியர் ஹரி சிவாஜி, செப் 29 அன்று நடைபெறும் உங்கள் நிச்சயதார்த்தம் இனிதே நடைபெற வாழ்த்துக்கள்.
– சுந்தர்
சுந்தர் சார் வணக்கம்…தங்கள் ப்ணி மிகவும் போற்றுதலுக்குரியது…மென்மேலும் தொடர எல்லாம் வல்ல இறையருள் துணை புரியட்டும்…இது நம்ம குடும்ப விழா கண்டிப்பாக கலந்து கொள்வேன்…மேலும் நமது தளத்திற்கான பேங்க் கணக்கு என்பது எதிர்காலத்தில் பல நல்ல உள்ளங்களின் பங்களிப்பிற்க்கு ஏதுவாக இருக்கும்….தங்கள் அரிய பணி தொடரட்டும்…வாழ்த்துகள்….
வாழிய பல்லாண்டு ……தனி அக்கௌன்ட் தொடங்கி இருட்பது மிக்க நல்லது…..
என்னால் முடிந்த உதவிகளை கண்டிப்பாக நம் தளத்திற்கு செய்வே ன் …..
இதனை இதனால் இவன் முடிக்கும் எண்டாய்ந்து அதனை அவன் கண் விடல்….’சுந்தர் சார் ” இந்த தெய்வீக பணியை ஆண்டவன் உங்கள வழிநடதத சொல்லி இருகான் ….உங்க பின்னாடி நாங்க வழிநடபோம்
சிவாய நம
சிவன், பிள்ளையார், நரசிம்மர் , காட்டூர் மலை கோயில் கால பைரவர் அருளும் எப்போதும் உங்களுக்கு உண்டு
SURPRISE SUNDARJI ,
இந்த ஒரு வருடத்தில் தாங்கள் சந்தித்த சாதனையாளர்கள், உழவாரப்பணி , அற செயல்கள் , பிரேமவாசம், திருவள்ளுவர் குரு குளம், பிரார்த்தனை கிளப் என்று தளம் வளர்ச்சியடைய தனி ஒரு மனிதனாக தங்கள் மேற்கொண்ட முயற்சிகள், தங்களை தவிர யாராலும் இயலாது. தினசரி அவரவர்கள் இன்று என்ன ரைட் மந்த்ரா ARTICLE என்று ஆவலோடு எதிர்பார்க்கும் அளவுக்கு தளம் வளர்ச்சி அடைந்துள்ளது என்றால் மிகையாகாது.இந்த தளத்தின் வாசகர்கள் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் நன்மை அடைந்து இருக்கின்றார்கள் என்றே கூற வேண்டும். இந்த தளத்தோடு நாங்கள் இணைந்தது நாங்களும் ஏதோ ஒரு வகையில் புண்ணியத்தை செய்து இருந்கின்றோம் என்றே கூற வேண்டும். இப்படி எல்லோர் மனத்திலும் ஆழமாக பதிந்து விட்ட தாங்கள் 16 வகை செல்வங்களும் பெற்று நீடூழி வாழ்க என்று வாழ்த்துகின்றேன்.
மென் மேலும் நற் பணிகள் தாங்கள் செய்ய உங்கள் வழி நடக்க கடமை பட்டு உள்ளோம். வங்கி கணக்கு தொடங்கி உள்ளது தளத்திற்கு மிகவும் அவசியமான ஒன்று. இது தளத்தின் சேவையில் தங்களை இணைத்துக்கொள்ள விரும்பவர்களுக்கு மிக வசதியாக இது அமையும். இந்த சேவையில் முடிந்த வரை என்னுடைய பங்களளிப்பு என்றென்றும் இருக்கும்.
நன்றி.
சுந்தர் சார்,
ஆண்டு விழா சிறப்புடன் நடைபெற மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
நன்றியுடன் அருண்
வாழ்த்துக்கள் சுந்தர்…