இந்த சூழ்நிலையில், பிறவியிலிருந்தே இரு கண்களும் பார்வையற்று, ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, தனது விடா முயற்சியால் 1 to 10 வது, அதற்கு பின்னர் ரெகுலர் சிலபஸில் +1, +2 பின்னர் கல்லூரியில் B.A., M.A., பின்னர் சென்னை பலகலைக்கழகத்தில் M.Phil என கல்வி பயின்று, பட்டங்கள் பெற்று, இசை, பாட்டு, பின்னணி குரல், ஆளுமைப் பயிற்சி, என பல்துறைகளில் தேர்ச்சி பெற்று இன்று ACE PANACEA SOFT SKILLS PVT. LTD. என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனராக (CHIEF MANAGING DIRECTOR) இருக்கிறார் 37 வயது நிரம்பிய இந்த நிஜ ஹீரோ இளங்கோ.
தன்னம்பிக்கை நாயகன்!
நமது தளத்தின் பேட்டிக்காக இந்த தன்னம்பிக்கை நாயகனை நானும் நண்பர் விஜய் ஆனந்தும் அவரது அடையார் அலுவலகத்தில் சந்தித்தோம். நாம் சென்றபோது அவர் ஒரு TRAINING SESSIONல் இருந்தார். ஆகவே சிறிது நேரம் காத்திருந்தோம். காத்திருந்த நொடிகளில் அவரது அலுவலக வரவேற்பறையை புகைப்படமெடுத்தோம். அந்த இடம் முழுக்க ஒரு வித பாசிட்டிவ் வைப்ரேஷன் பரவியிருப்பதை உணரமுடிந்தது.
ஒரு சின்ன டெஸ்ட் – எனக்கு!
அவரது செக்ரட்டரியுடன் அவரைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அடுத்த பத்தாவது நிமிடத்தில் வந்துவிட்டார் இளங்கோ. எழுந்து நின்று அவருக்கு கைகொடுத்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டோம். யாரிடமாவது கைகுலுக்கினால் கைகளை சும்மா கடமைக்கே என்று இல்லாமல் இறுக்கமாக பிடித்து கைகுலுக்கவேண்டும். அதை வைத்து தான் முக்கியஸ்தர்கள் நம்மை பற்றி ஒரு முதல் மதிப்பீட்டிற்கு வருவார்கள். இது எனக்கு தெரியுமென்பதால் நான் கெட்டியாக கைகுலுக்க, அவர் அதை விட கெட்டியாக என் கைகளை பிடித்து குலுக்கினார்! (எப்பூடி…!!)
எங்கள் உரையாடல் பேட்டி போலல்லாமல் மிக மிக ஃபார்மலாக அமைந்தது. வாழ்க்கையில் இவர் சந்தித்த சவால்கள், அதை இவர் எதிர்கொண்ட விதம், கடந்து வந்த பாதை, இவரது PASSION ஆதங்கம் உள்ளிட்ட பல விஷயங்களை பற்றி மனம் விட்டு பேசினோம். சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றியும் அவரது படப் பாடல்கள் பற்றியும் இவர் அனைத்து விபரங்களையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார். “நெஞ்சே உன் ஆசை என்ன?” பாடல் பற்றி இவர் சொன்ன ஒரு தகவல் நம்மில் பலருக்கு தெரியாது. ஒவ்வொரு பாடலைப் பற்றியும் எங்களது பேச்சு திரும்பும்போது அந்தந்த பாடலை சில வரிகள் பாடிக்காட்டினார். இவர் ஒரு சிறந்த பாடகரும் கூட என்பதால் கேட்பதற்கு இனிமையாக இருந்தது.
நாங்கள் இதுவரை சந்தித்த பிரபலங்களில் முதன்மையானவராக உங்களை தான் கருதுகிறோம்” என்று கூறி வாங்கி சென்ற பொக்கேவை அவருக்கு கொடுத்தோம். புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். மறக்காது “நன்றி…. நன்றி” என்று கூறினார்.
எங்கிருந்து வருகிறோம், எங்கு வேலை பார்க்கிறோம் என்பது உள்ளிட்ட பொதுவான விஷயங்களை கேட்டறிந்தார். நமது தளத்தை பற்றியும் அதன் செயல்பாடு மற்றும் நோக்கம் ஆகியவற்றை பற்றியும் சுருக்கமாக அவருக்கு கூறினேன். பொறுமையாக அனைத்தையும் கேட்டுக்கொண்டார்.
நமது தளம் சார்பாக கடந்த ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சிகள் குறித்து கூறினேன். ஆச்சரியப்பட்ட அவர் தனது பாராட்டுக்களை தெரிவித்தார். கிழக்கு பதிப்பகத்தின் சார்பாக அவரை ஒரு புத்தகம் எழுதித் தருமாறு அணுகியிருக்கிறார்கள் என்ற செய்தியை கூறினார். வாழ்த்துக்கள் தெரிவித்தோம்.
நானும் நண்பர் விஜய் ஆனந்தும் எப்படி ஒருவருக்கொருவர் அறிமுகமானோம் என்று கேட்டார். “BIRDS OF A FEATHER FLOCK TOGETHER” என்ற வாக்கியத்திற்க்கேற்ப, ஒரே சிந்தனை ஒரே குறிக்கோள் என்ற அடிப்படையில் எங்கள் நட்பு ஏற்பட்டதாக கூறினேன். ஆமோதிப்பது போல பலமாக சிரித்தார்.
80 களின் ரஜினி திரைப்படங்களுக்கு தான் ஒரு மிகப் பெரிய விசிறி என்று குறிப்பிட்ட திரு.இளங்கோ, ரஜினியின் கிளாஸ் படங்களின் மிகப் பெரிய விசிறி என்பது புரிந்தது.
(திரு.இளங்கோ சிறு வயதில் சூப்பர் ஸ்டாரை சந்தித்த அனுபவத்தை கூறியிருக்கிறார். புகைப்படத்தை இணைத்திருக்கிறேன். மறக்காமல் படிக்கவும் & ரசிக்கவும்.)
நாம் : “தீவிர உரையாடலுக்குள் நாம் நுழைவதற்கு முன்பு, உங்களை பற்றி நான் தெரிந்து கொண்டது எப்படி என்று கூறுகிறேன் சார்”
திரு. இளங்கோ : “ஓ… முதல்ல அதை சொல்லுங்க” என்றார் ஆர்வமாக!
நாம் : “WWW.LIVINGEXTRA.COM என்ற ஒரு வெப்சைட் மூலம் உங்களைப் பற்றி தெரிந்துகொண்டேன். IT’S A WONDERFUL, USEFUL & MOTIVATIONAL WEBSITE. அந்த வெப்சைட்டின் தீவிர விசிறி நான். முழுக்க முழுக்க ஆன்மீகம் மற்றும் சுயமுன்னேற்ற கருத்துக்கள், கட்டுரைகள் என பாசிட்டிவான விஷயங்கள் இடம்பெறும் ஒரு தளம் அது. அந்த தளத்தில் இடம்பெற்ற ஒரு கட்டுரை மூலம் உங்களைப் பற்றி தெரிந்துகொண்டேன் சார்!”
திரு. இளங்கோ : “ஓ… கிரேட்…. கிரேட்…” என்றார் மகிழ்ச்சி ததும்ப!
நாம் : “உங்களை பத்தி என்னோட ரீடர்ஸுக்கு நீங்களே கொஞ்சம் சொல்லுங்க சார்….”
உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியான மனிதன் – நான் தான்!
திரு. இளங்கோ : “மகிழ் மகிழ்வி என்பதையே தாரக மந்திரமாக வைத்து, மக்களுக்கு ஒரு உந்து சக்தியாக இருக்கவேண்டும் என்பதை ஒரு இலக்காக வைத்து வாழ்ந்துகொண்டிருக்கும் சாதாரண மனிதன் நான். உலகத்திலேயே மிகவும் மகிழ்ச்சியான மனிதன் யாரென்று கேட்டால் அது நான் தான். அந்த எண்ணம் எப்போதும் என் ரத்த நாளங்களில் ஊடுருவி பின்னிப் பிணைந்து வழி நடத்துகிறது. அந்த எண்ணத்தை நான் பேசுபவர்களிடமும் மாற்ற முடிகிறது என்பது தான் எனது பலம். திறமை.”
300 பயிற்சியாளர்கள் & ஊழியர்களின் ஊதியத்துக்கு பொறுப்பு
“என்னுடைய தொழில் என்று சொன்னால், ACE PANACEA SOFT SKILLS PVT. LTD. என்ற நிறுவனத்தின் தலைவர். இங்குள்ள 300 பயிற்சியாளர்கள் & ஊழியர்களின் ஊதியத்துக்கு நான் பொறுப்பு. தவிர 50 இசைக்கலைஞர்கள் – அவர்களுக்கான நிகழ்ச்சிகளையும் ஊதியத்தையும் ஏற்பாடு செய்து தரவேண்டிய பொறுப்பு, மற்றும் பல்வேறு விளம்பரப் படங்கள் மற்றும் அது சம்பந்தமான பணிகளை பல்வேறு பணியாளர்களுக்கு ஏற்படுத்தி தருவதும் எனது பொறுப்பு.
அதாவது பயிற்சி, இசை, மற்றும் விளம்பரப் படங்கள் ஆகிய மூன்றும் தான் எனது தொழில். பயிற்சி என்று சொன்னால், நிறுவனங்களுக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கவேண்டிய பணி. என்ன பயிற்சி? TECHNICAL SKILLS அதாவது துறை சார்ந்த திறமைகளை வளர்த்துக்கொள்ள உதவுவது மட்டுமின்றி, ஆளுமை திறன் குறித்தும் பயிற்சியளிப்பது.
அதாவது இன்றைய சராசரி மாணவனும், மாணவியும் மிகுந்த அறிவு படைத்தவர்களாக இருக்கிறார்கள். அதாவது அவர்களது துறை சார்ந்த அளவில். ஆனால் அவர்களுக்கு COMMUNICATION SKILLS, SELF-CONFIDENCE, SELF-EVALUATION, ATTITUDE போன்றவை தெரிவதில்லை. இப்படி அன்றாட வாழ்க்கையில் நமக்கு தேவையான மேற்க்கூறிய SKILLS ஐ சரியாக கையாள்வது உள்ளிட்ட பல விஷயங்களை குறித்து மாணவர்களுக்கும் கார்பரேட் ஊழியர்களுக்கும் பயிற்சியளிக்கிறோம்.
இது தவிர நாம் அன்றாட வாழ்க்கையில் இருக்கக்கூடிய பணம். அந்த பணத்தை எப்படி மேலாண்மை செய்வது? MONEY MANAGEMENT என்று சொல்லக்கூடிய திறன். அதாவது நம்மிடம் இருக்கக் கூடிய பணத்தை எப்படி செலவு செய்வது என்பது குறித்த பயிற்சி. அப்புறம் CRISIS MANAGEMENT. சிக்கல்கள் வரும்போது அதை எதிர்கொள்ளக்கூடிய பயிற்சி. அதாவது சொல்லிக்கொண்டு வராத சிக்கல்கள். எதிர்பாராமல் வரக்கூடிய சிக்கல்கள்.
‘உணர்வுகளை புத்திசாலித்தனமாக கையாள்வது எப்படி?’ என்பது குறித்து கார்பரேட் நிறுவனங்களில் அனைத்து பிரிவினருக்கும் பயிற்சியளிக்கிறோம். அதாவது டாப் லெவல் மானேஜ்மென்ட் முதல் எண்டரி லெவல் வரை அனைவருக்கும் பயிற்சியளிக்கிறோம். இதில் முக்கியமாக EMOTIONAL INTELLIGENCE குறித்து பயிற்சியளிக்கிறோம். அதாவது உணர்வுகளை புத்திசாலித்தனமாக கையாள்வது எப்படி என்பது குறித்த பயிற்சி.
நாம் : “இன்னைக்கு எல்லோருக்கும் தேவைப்படுற ஒன்னு சார் அது” என்றோம் இடைமறித்து.
திரு. இளங்கோ : “அதாவது உணர்வுகளை புத்திசாலிதனமாக கையாள்வது என்பது வேறு. கட்டுபடுத்துவது என்பது வேறு”
நாம் : “ரெண்டுக்கும் என்ன சார் DIFFERENCE ?”
திரு. இளங்கோ : “கட்டுப்படுத்துவது என்பது எப்போதுமே வெற்றி பெறாது. IT WILL ALWAYS GO IN VAIN. இந்தப் பக்கம் அமுக்கி வெச்சா அந்தப் பக்கம் அது வெடிச்சிட்டு போயிடும். பந்தை தண்ணீரில் அமுக்கி வைப்பது போலத் தான் அது. ‘தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து’னு சொல்வாங்களே… அப்படி… உங்காளு படத்துல கூட அப்படி ஒரு வரி வருதே…”
உன்னை யாரும் ஓரங்கட்டித் தான் வெச்சாலும் தம்பி வாடா பந்து போலத் தான்!
நாம் : “யெஸ் சார்! சந்திரமுகியில ‘தேவுடா தேவுடா’ பாட்டுல வரும். பூப்பந்தை யாரும் நீரில் பொத்தி தான் வெச்சாலும் பந்து வரும் தண்ணி மேல தான். உன்னை யாரும் ஓரங்கட்டித் தான் வெச்சாலும் தம்பி வாடா பந்து போலத் தான்!”
திரு. இளங்கோ : “ஆம்…. கரெக்ட்…. எதுக்கு அதை சொன்னேன்னா… அந்த மாதிரி உணர்வுகளை கட்டுப்படுத்தும்போது, அமுக்கி வைக்கும்போது, suppressed emotions take a very bad shape…… in an ugly form. ஆனால் கையாள்வது என்பது observing it and then exercising your sense of not control but your rule over it. இந்த EMOTIONAL MANAGEMENT குறித்து நாங்கள் எங்கள் நிறுவனத்தில் பயிற்சி அளிக்கிறோம்.
இந்த EMOTIONAL MANAGEMENT பயிற்சி பெற்றால் என்ன கிடைக்கும் என்றால், ஒரு சுமூகமான சூழல் ஏற்பட்டு பாதிக்கும் மேல் பிரச்னைகள் தீர்ந்துவிடும். தவறு நடந்தால் தவறைத் தான் பார்ப்பார்களே தவிர தவறு செய்தவர்களை அல்ல. So, அல்டிமேட்டாக இதன் மூலம் உற்பத்தி திறன் அதகரிக்கும்.
வாழ்க்கை இரண்டு வகை — உணர்வுப் பூர்வமான வாழ்க்கை & அறிவுப் பூர்வமான வாழ்க்கை. அதாவது உணர்வுப் பூர்வமான வாழ்க்கையை தான் நம்மில் 80% வாழ்கிறோம். அறிவுப் பூர்வமான வாழ்க்கையை அல்ல. நமக்கு பிடிச்சது செய்யனும். ஓகே. ஆனால் பிடிச்சதெல்லாம் செய்யக்கூடாது. WE SHOULD HAVE A CHECK OVER OUR DESIRES AND WISHES.
சின்ன வயசுல இருந்தே இன்றைய இளைஞர்களுக்கு சொல்லவேண்டிய விஷயம் என்னன்னா… நமக்கெல்லாம் ATTITUDE KNOWLEDGE SKILLS இது மூனும் வேணும் என்பது தான். ASK அப்படின்னு ஷார்ட் ஃபார்ம்ல வெச்சிக்கலாம். நாம இப்போ அதிகமா கான்சண்ட்ரேட் பண்றது KNOWLEDGE ல மட்டும் தான். SKILLS குறித்து குறைவா தான் கவனம் செலுத்துறோம். ATTITUDE பத்தி யாருமே கவலைப்படுறதே இல்லே.
“எஸ்… சார்… இப்போ ஸ்டூடண்ட்ஸ் எல்லாருக்கும் நல்லா படிக்கணும்… நல்ல மார்க் எடுக்கணும்… நல்ல வேலைல சேரனும்… இது தான் குறிக்கோளா இருக்கு. நம்ம கிட்டே இருக்குற குறைகள் என்ன? நம்ம அணுகுமுறைகள்ல ஏதாவது தப்பு இருக்கா? நாம MORAL ETHICS படி வாழறோமா? நம்மை சுத்தி என்ன நடக்குது, நாடு எங்கே போகுது? ETC. ETC., இதைப் பத்தியெல்லாம் தெரிஞ்சிக்கிற ஆர்வம் சுத்தமா இல்லே.”
திரு. இளங்கோ : “சுந்தர்… ஒரு சின்ன கரெக்ஷன்… நல்ல படிக்கணும்… நிறையா சம்பாதிக்கணும்… குறைவா வேலை செய்யனும்…. இது தான் இப்போ எல்லோரோட டார்கெட்”
(அனைவரும் சிரிக்கிறோம்)
(மீண்டும் தொடர்கிறார் இளங்கோ)
திரு. இளங்கோ : “சரி… நாம பேசிகிட்டிருந்த விஷயத்துக்கு வருவோம்… நம்மோட கல்வி மற்றும் சமுதாய முறையிலேயே யாரை மதிக்கணும்னு சொல்லித் தர்றாங்கன்ன – நல்லா படிக்கிறவன, நல்லா சம்பாதிக்கிறவன் இவனை தான் மதிக்கச் சொல்லி கற்று தர்றாங்க… மத்ததுக்கு மதிப்பு கிடையாது. இந்தப் பையன் ரொம்ப நல்ல பையன் அப்படின்னு சொல்லி மதிக்க கற்று தர்றது ஸ்கூல்லயோ காலேஜ்லயோ ரொம்ப ரொம்ப அபூர்வம்.”
எனவே இன்றைய மாணவர்களுக்கும் நிறுவன ஊழியர்களுக்கும் தேவையான மனவள பயிற்சிகளை அளிப்பது தான் எனது பணி. எனது நிறுவனத்தின் பணி.
சாதனையாளர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகை சவாலை சந்தித்து தான் மேலே எழுகிறார்கள்
நாம் : நீங்கள் செய்திருக்கும் சாதனை – பார்வையற்ற நிலையிலும் இன்று நீங்கள் அடைந்திருக்கும் இந்த உயரம் – பார்வை அமையப் பெற்ற ஏன் எல்லா வசதிகளும் அமையப்பெற்ற நபர்கள் கூட செய்வது அரிது. அப்படியிருக்கும் சூழ்நிலையில், உங்களை இந்த சாதனைப் பயணத்திற்கு தூண்டியது எது? நிச்சயம் இதற்க்கு பின்னணியில் ஏதேனும் சம்பவம் இருக்கும். அது பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்.
திரு. இளங்கோ : (சிறிது நேரம் யோசிக்கிறார்)…. நான் என்ன நினைக்கிறேன்னா… நான் மட்டுமில்லே… சாதனையாளர்கள் அநேகம் பேர் அதாவது கிட்டத்தட்ட 98% பேர் ஏதாவது ஒரு வகையில், ஒரு சவாலை சந்திச்சி தான் மேலே வர்றாங்க. BORN WITH SILVER SPOON ன்னு சொல்வாங்கே அது போல, எல்லா வசதிகளும் நிரம்பியிருந்து, எந்த வித உடல் குறைப்பாடும் இல்லாம இருந்து சாதிச்சவங்கன்னு பார்த்தா மிக மிகச் சிலர் தான். நல்ல குடும்பத்துல இருந்து வந்து எந்த சிக்கலும் இல்லாம, எந்த பிரச்னையும் இல்லாம சாதிச்சவங்க ரொம்ப ரொம்ப ரேர். காரணம், எல்லாம் சரியா இருக்கும்போது உங்க மூளை மந்தமாயிடும். பிரச்சனைகள் இருக்கும்போது தான் உங்க ப்ரெயின் நல்ல வேலை செய்யும்.
(இதை தாங்க தலைவர் எஸ்.ரா.வோட பாராட்டு விழாவுல சொன்னாரு. ஞாபகம் இருக்கா?)
உதாரணத்துக்கு தமிழ் மீதியத்துல படிச்சவங்களுக்கு இங்க்லீஷ்ல நல்லா பேசுறதுக்கு வாய்ப்பிருக்கு.
நாம் : கரெக்ட் சார்…. அப்துல் கலாம்லே இருந்து நிறைய சாதனையாளர்கள் தமிழ் மீடியம்ல படிச்சவங்க தான். துரதிஷ்டவசமா நான் இங்க்லீஷ் மீடியம் சார்…
திரு. இளங்கோ : நான் வந்து இங்க்லீஷ் மீடியம்…. கிடையாது. தமிழ் மீடியம் தான். பத்தாம் வகுப்பு வரைக்கும் தமிழ் மீடியம் தான்.
திரு. இளங்கோ : அதுக்காக தமிழ் மீடியத்துல படிச்சவங்க எல்லாரும் நல்லா இங்க்லீஷ்ல பேசுவாங்கன்னு சொல்ல முடியாது. தமிழ் மீடியத்துல படிச்சவங்களுக்கு அதுக்கான உத்வேகம் நிறையா இருக்கும். உதாரணத்துக்கு கால் கொஞ்சம் அடிபட்டிருக்கும்போது தான் நல்லா ஒடனும்னு தோணும். அது போலத் தான் இதுவும்.
நாம் : கரெக்ட் சார். உடம்பு நல்லாயிருக்கும்போது உடம்பை ஃபிட்டா வெச்சிகிறது பத்தி யோசிச்சதே கிடையாது நான். நடுவுல கொஞ்சம் நாள் உடம்பு சரியில்லாம ஹாஸ்பிடல்ல இருந்தேன். அப்போ தான் உடம்பை நல்லா பார்த்துக்கனும்கிற ஞானோதயமே வந்துச்சு.
திரு. இளங்கோ : ஸ்கூல் டு காலேஜ் அப்புறம் காலேஜ் டு கேரியர் அப்புறம் கேரியர் டு இப்போ இருக்குற நிலைமை. மொத்தம் மூணு ஸ்டேஜ்.
ஸ்கூல் டு காலேஜ்ல என்ன சவால்னா தமிழ் மீடியம் என்பது சவாலா இருந்தது. இருந்தாலும் அக்கவுண்டன்ஸியிலும் காமர்ஸிலும் 200/200 ஸ்கோர் பண்ணினேன். 10 ஆம் வகுப்புல மாவட்ட அளவுல முதல்ல வந்தேன். இதெல்லாம் தமிழ் மீடியத்துல படிக்கும்போது தான் சாதிச்சது. ஸ்கூல்ல நடக்கும் பேச்சுப் போட்டி உள்ளிட்ட ஆங்கிலத்துல நடக்குற போட்டிகள் அனைத்திலும் கலந்துக்குவேன். அதுல பரிசு வாங்குறேனோ இல்லையோ கட்டாயம் கலந்துக்குவேன். பல சமயம் ஆறுதல் பரிசு கூட வாங்காம தோத்திருக்கேன். பல முறை மனப்பாடம் பண்ணிட்டு போய் ஸ்டேஜ்ல நிக்கும்போது மறந்து போய், முதல் நாலு வரியோடு பரிதாபமா பேச்சை முடிச்ச சந்தர்ப்பங்கள் எல்லாம் உண்டு. அதையெல்லாம் தாண்டி தான் இந்த நிலைமைக்கு வந்திருக்கேன்.
நாம் : அப்போ எப்படித் தான் எப்போத் தான் இது சாத்தியமாச்சு?
திரு.இளங்கோ : அடுத்தடுத்த முயற்சிகள்ல தான். ஒரு செயல் சரியா வரலியா… அதை திரும்ப செய்ங்க. அப்போவும் வரலியா திரும்ப திரும்ப செய்ங்க. அதுக்கப்புறமும் வரலியா திரும்ப திரும்ப திரும்ப செய்ங்க. இப்படி உங்களுக்கு அது சாத்தியமாகுற வரைக்கும் செய்ங்க. இது தான் என்னோட ATTITUDE. சின்ன வயசுல இருந்தே நான் ஒரு திங்கிங் HUMAN BEING. யாராவது ஏதாவது சொல்லிட்டாங்கன்னா.. அதாவது திட்டிடாங்கன்னா… உக்காந்து யோசிப்பேன். ஏன் இப்படி சொன்னங்க… நாம என்ன தப்பு பண்ணினோம்…நாம ஏன் அழுவனும்? நாம் அழக்கூடாது…. அப்படின்னு யோசிப்பேன். தவிர என்னோட அப்பா அம்மா படிக்காதவங்க என்பது…. எனக்கு மிகப் பெரிய…. (மௌனம்)
நாம் : மைனஸ் பாயின்ட்…?
திரு.இளங்கோ : இல்லே…. மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட்.
(இப்படித்தான் சந்திப்பு முழுக்க ஒரே twist வெச்சு பேசினார் இவர். பல இடங்கள்ல நான் வழிஞ்சது தான் மிச்சம்!)
திரு. இளங்கோ : படிச்சவங்களா இருந்திருந்தாங்கன்னா அவங்களோட விருப்பத்தை என் மேல திணிச்சி என் எதிர்காலத்தை ஸ்பாயில் பண்ணியிருப்பாங்க…. படிக்காதவங்க என்பதால் என்னை சுதந்திரமா விட்டாங்க.
அப்புறம் காலேஜ் லைஃப். லயோலா காலேஜ். அது ஒரு மிகப் பெரிய உலகம். இங்கிலீஷ்ல மட்டும் தான் பேசுவோம் அப்படின்னு சொல்ற ஸ்டூடண்ட்ஸ் ஒரு வகை. இங்க்லீஷ்ல பேசத் தெரியலேன்னாலும் பேசாம வாயை மூடிகிட்டு இருப்போம் அப்படின்னு நினைக்கிற ஸ்டூடண்ட்ஸ் ஒரு வகை. படிக்காம எப்போ பார்த்தாலும் காண்டீன், சினிமா, பார்க், பீச்னு சுத்துக்கிட்டு இருக்குற ஸ்டூடண்ட்ஸ் ஒரு வகை. மூணு விதமான க்ரூப் இப்படி அங்கே. எனக்கு மூணு விதமான ஸ்டூடண்ட்ஸ் கூடவும் சேர்றதுக்கு வாய்ப்பு இருந்தது. எல்லார் கூடவும் பழகிப் பார்த்துட்டு நான் யார் கூட ஜெல் ஆனேன்னா இந்த முதல் வகை ஸ்டூடண்ட்ஸ் – இங்க்லீஷ்ல மட்டும் தான் பேசுவோம்னு முடிவு பண்ணியிருக்கிற ஸ்டூடண்ட்ஸ். காரணம் என்னோட ENGLISH FLUENCY ஐ டெவெலப் பண்ணிக்கணும்னா அதுக்கு ஒரே வழி, இங்க்லீஷ்ல பேசுற ஸ்டூடண்ட்ஸ் கூடவே இருக்கிறது, அவங்க கூட பேசுறது, பழகுறதுன்னு முடிவு பண்ணினேன். பேசிப் பழகினாத்தான் மொழி வரும். சித்திரமும் கைப் பழக்கம்…. (மௌனம்)
நாம் : செந்தமிழும் நாப் பழக்கம் !
திரு.இளங்கோ : இல்லே.. இங்க்லீஷும் நாப்பழக்கம் (பழமொழியை திருத்தி சொல்கிறார்).
(அறை முழுதும் சிரிப்பு)
திரு.இளங்கோ : இங்க்லீஷ் மட்டுமில்லே… எந்த மொழியும் பேசிப் பழகினாத்தான் வரும். அப்போ இங்க்லீஷ்ல பேசணும்னு சொன்னா பேசுறவங்களோட இருந்தாத்தானே முடியும்? அவனோட ATTITUDE பத்தி நான் கவலைப்படலே. எனக்கு அதைப் பற்றி அக்கறையும் இல்லே. அவங்களோட LANGUAGE SKILL ஐ என்னோட LANGUAGE SKILL ஐ டெவெலப் பண்ணிக்க ஒரு பிளாட்பாரமா யூஸ் பண்ணிக்க முடிவு செஞ்சேன். அதுக்கப்புறம் காலேஜ் கல்சுரல் அசோஸியேஷன், டிபேட் சொஸைட்டி, இதிலெல்லாம் பார்டிசிபேட் பண்ணினேன். லயோலா காலேஜ் லைட் மியூசிக் பேன்ட் ஒன்னு இருந்தது. அதுல சிங்கரா பார்டிசிபேட் பண்ணுவேன். நாங்க போகாத பங்க்ஷன் இல்லே. கலந்துக்காத கல்சுரல்ஸ் இல்லே. ஸ்கூல்ல படிக்கும்போதே நான் ஜூனியர் ஆர்கெஸ்ட்ராவுல நான் ஒரு சிங்கர். அதனால என்னோட பாட்டு திறமையும் நல்லா வளர்ந்துச்சு.
லயோலாவுல M.Sc. ல தமிழ்நாடளவில் தங்க மெடல். 1994ல் காலேஜை விட்டு வெளியே வந்தபோது சிறந்த மாணவராக லயோலா காலேஜ் நிர்வாகம் அவார்ட் கொடுத்து பாராட்டியது.
அப்புறம் மெட்ராஸ் யூனிவர்சிடியில ‘ஆங்கிலத்தை எப்படி கற்றுத் தருவது?’ என்கிற தலைப்பில் ரிசர்ச் பண்ணி அதுல M.Phil முடிச்சேன். பின்னர் சி.பி.எஸ்.இ. ஸ்கூல் ஒண்ணுல ஆசிரியப்பணி. வாரயிறுதிகளில் மற்ற ஆசிரியர்களுக்கு கற்றுத்தருவது குறித்து வொர்க்க்ஷாப்புகள் நடத்துவேன். அப்புறம் குருநானக் காலேஜ்ல லெக்சரர். மறுபடியும் மெட்ராஸ் யூனிவர்சிடியில லெக்சரர்.
ஒரு கட்டத்துக்கு மேல இந்த 9 TO 4 ஜாப் பிடிக்காம அந்த வேலையை ரிசைன் பண்ணிட்டு சொந்தமா கம்பெனி ஆரம்பிச்சேன். இது ஒரு டர்னிங் பாய்ண்ட்.
நாம் : நீங்க ஸ்கூல்ல படிக்கும்போது நடந்த மறக்க முடியாத சம்பவம் ஏதாச்சும் சொல்லுங்களேன்?
திரு.இளங்கோ : 10 வது முடிச்சவுடனே பிளஸ் 1 அட்மிஷனுக்காக நான் ஒரு மெட்ரிகுலேஷன் ஸ்கூலுக்கு போனேன். இது மாதிரி VISUALLY IMPAIRED ஸ்டூடண்ட்ஸ் யாரையும் அவங்க சேர்த்துகிட்டது கிடையாது. நல்ல ரேங்க் எடுத்திருந்ததாலே எனக்கு நம்பிக்கை இருந்திச்சு. பிரின்சிபால் பார்த்துட்டு சொன்னாரு, “நல்ல ரேங்க் எடுத்திருக்கே. ஓகே. ஆனா, உங்களை மாதிரி மாணவர்களை எங்களுக்கு ஹேண்டில் பண்ண தெரியாது. ஸாரி… நீங்க வேற எங்காவது பாருங்க” அப்படின்ன சொன்னாரு.
எனக்கு அப்போதைக்கு வேற எந்த ஸ்கூல்லயும் சேர முடியாத ஒரு சூழ்நிலை. என்னால அலைய முடியாது வேற. “சார்… எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. நான் நல்லா படிச்சி, நல்ல ரேங்க் வருவேன்” அப்படின்னேன்.
“படிக்கிறதை பத்தியே பிரச்னை இல்லேப்பா. நீ நல்லா படிப்பே என்பது உன்னோட சர்டிஃபிகேட்ஸை பார்த்தாலே தெரியுது. அது இல்லே பிரச்னை. HOW WILL YOU MANAGE? அதாவது பிளஸ் 1 கிளாசஸ் எல்லாம் 3 வது ஃப்ளோர்ல இருக்கு. இன்னொரு கிளாஸ் அந்த பில்டிங்கல நாலாவது ப்ளோர்ல இருக்கு. எப்படிப் போவே அங்கெல்லாம்?” அப்படின்னு கேட்டாரு.
நான் சொன்னேன் “ஸ்டெப்ஸ் ஏறி போறதுக்கு கால் தான் நல்ல ஸ்ட்ராங்கா இருக்கணும் சார். எனக்கு கண் தானே தெரியாது? என்னோட கால் ரெண்டும், நல்லா ஸ்ட்ராங்கா இருக்கு. அது போதும் சார் எனக்கு” என்றேன். என்னோட பதிலால ரொம்ப இம்ப்ரெஸ் ஆன அவர், எழுந்து வந்து என் தோளை தட்டிகொடுத்து, “ஓ.கே. இந்த ஸ்கூல்ல உன்னை சேர்த்துக்குறேன்” என்றார். நானும் நல்லா படிச்சி எல்லா டெஸ்ட்லயும் எக்ஸாம்லயும் பர்ஸ்ட் வந்தேன். அதுக்கப்புறம், காலேஜ், யூனிவர்சிடி அப்படின்னு என்னோட கல்வி வளர்ந்துச்சு.
இப்போ என்ன நடந்துகிட்டு இருக்குன்னா ஆயிரக்கணக்கான பேர்கள் கிட்டே என்னோட ஆட்டோகிராஃப் இருக்கு.
(கைகளை தட்டுகிறோம்!)
வெல்டன் சார்… வெல்டன்…. ஹார்ட்லி இந்த பேட்டி எடுக்குறதுக்கு ஜஸ்ட் ரெண்டு நாள் முன்னாடி தான் உங்களை பத்தி தெரிஞ்சிகிட்டேன். தெரிஞ்சவுடனே, உங்களை சந்திக்கிற ஆர்வம் வந்துச்சு. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். உங்க கூட இருக்குறவங்க உங்களைப் பத்தி தெரிஞ்சி வெச்சிருக்கிறதை விட நான் அதிகம் தெரிஞ்சி வெச்சிருப்பேன்
(சிரிக்கிறார்)
நாம் : உங்களை மாதிரி பார்வையில்லாத சிறப்பு திறனாளி யாராவது சாதனை பண்ணினவங்க உங்களுக்கு இன்ஸ்பிரேஷனா இருந்திருக்காங்களா?
திரு.இளங்கோ : இல்லே… அப்படி யாரும் எனக்கு தெரிஞ்சி இல்லே. எனக்கு நான் தான் இன்ஸ்பிரேஷன். ஆனா, ஸ்கூல் படிக்கும்போது ஹெல்லன் கெல்லரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவங்களுக்கு பார்வையில்லே, காது கேட்காது, வாய் பேசவும் முடியாது. பேசுறவங்க உதட்டை தொட்டு பார்த்துட்டு அவங்க பேசுறதை புரிஞ்சிக்குவாங்க.
(ஹெல்லன் கெல்லர் தான் பார்வையற்றவர்களில் முதன் முதலாக டிகிரி பட்டம் பெற்றவர். கூடுதல் விபரங்களுக்கு தயவு செய்து http://en.wikipedia.org/wiki/Helen_Keller என்ற முகவரியை செக் செய்யவும்).
இவங்ககிட்டே இருந்த ஒரு பிளஸ் பாயிண்ட் என்னன்னா இவங்களுக்கு இருந்த வசதி. நல்ல பேக்ரவுண்ட். அவங்க அப்பா அம்மா இவங்களை கவனிச்சிக்கிறதுக்குன்னே தனியா ஒரு டீச்சரை அப்பாயின்ட் பண்ணினாங்க. அதுக்காக பார்வையில்லாம ஆன வசதியோட இருக்குறவங்க எல்லாரும் அவங்களை மாதிரி வருவாங்கன்னு நான் சொல்லலே. It depends on their will power.
பார்வையற்றோர்கள் ஓரளவு சிரமங்களை குறைத்துக்கொண்டு சராசரி வாழ்க்கை வாழ உதவும் கருவிகள் (GADGETS) அங்கு பயன்பாட்டில் அதிகம் உண்டு. சொல்லப் போனால் பார்வையற்றோர்களுக்கென்றே விசேஷ நியூஸ் பேப்பர்கள் அங்கு காலை மாலை என இரு வேளையும் வெளிவருகிறது. இங்கே அந்தளவு டெக்னாலஜி வரலே. அதுல கொஞ்சம் தான் வந்திருக்கு. இங்கேயும் அந்த மாதிரி வர வெக்கலாம். ஆனால், அது ரொம்ப எக்ஸ்பென்சிவ். READING MACHINE ஒன்னு இருக்கு. அதுல எல்லா லேங்குவேஜும் படிச்சி நமக்கு சொல்ற வசதி இருக்கு. ஆனா, என்னன்னா நம்மோட கரன்சிக்கு அதோட மதிப்பு என்ன தெரியுமா? ரூ.5,00,000/-
நாம் : எல்லாராலயும் இதை வாங்க முடியாது…
திரு.இளங்கோ : எல்லோராலயுமா? நீங்க வேற EDUCATION INSTITUTIONS ஆல கூட வாங்க முடியாது… இங்கே ப்ளைண்டுக்காக ஸ்பெஷல் ஸ்கூல்ஸ் வெச்சிருக்காங்களே… அவங்களே கூட வாங்க மாட்டேங்குறாங்க… சாமானியன் எப்படி வாங்க முடியும்?
So, இங்கே இருக்குற அரசாங்கங்கள் என்ன செய்யலாம்னு சொன்னா… நான் சொல்றது மத்திய அரசாங்கம் & மாநில அரசாங்கம் ரெண்டும் தான்… பார்வையற்றோர்களுக்கான இந்த அடிப்படை வசதிகள், மற்றும் கருவிகள் இதெல்லாம் அவங்களுக்கு மலிவா கிடைக்குறதுக்கு ஏற்பாடு செய்யலாம். அதுக்கு மானியம் கொடுக்கலாம்.
நாம் : எது எதுக்கோ மானியம் கொடுக்குறவங்க… இதை புறக்கணிக்கிறது அநியாயம் சார்….
திரு.இளங்கோ : நினைச்சி பாருங்க…தமிழ்நாட்டுல்ல மொத்தம் பார்வையற்ற சிறப்பு திறனாளிகள் எத்தனைப் பேர் இருப்பாங்க? மிஞ்சி மிஞ்சிப் போனா சில ஆயிரம் பேர் இருப்பாங்க… மொத்த இந்தியாவுலன்னு சொன்னா ஜஸ்ட் ஒரு 2 லட்சம் பேர் இருப்பாங்களா? அவங்களுக்கு இதெல்லாம் மானியத்துல கொடுத்தா எவ்ளோ நல்லா இருக்கும். கவர்மெண்ட் போடுற பட்ஜெட்ல இதுக்காக ஜஸ்ட் ஒரு கொசு அளவு செலவு செஞ்சா போதுமே…. செய்ய மாட்டேங்குறாங்க.
நாம் : சிம்பிள் சார்… பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அன்னைக்கே சொல்லிட்டாரு… “இன்னும் பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால் பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா…” அப்படின்னு… இதுல அவர் தூக்கம்னு சொல்றது தூங்குறதை இல்லே. செயலாற்றாமல் இருப்பதைத் தான்.
திரு.இளங்கோ : கரெக்ட். இந்த செயலாற்றாம இருக்குறதுக்கு காரணம் என்னன்னா… இதுல அவங்களுக்கு ‘அரசியல் லாபம்’ அதாவது POLITICAL MILEAGE இல்லே.
நாம் : இதுவே ஒரு ஜாதி சங்கம் இல்லே ஜாதிக் கட்சியா நீங்கல்லாம் இருந்தீங்கன்னா…. நல்ல சப்போர்ட் பண்ணுவாங்க…..
திரு.இளங்கோ : ஒவ்வொரு ஜாதிக்காரனும் கொடுக்குற புள்ளி விபரத்தை பார்க்கும்போது தமிழ் நாட்டோட பாப்புலேஷன் மட்டுமே சுமார் 100 கோடியை தாண்டும்.
(அனைவரும் சிரிக்கிறோம்)
திரு.இளங்கோ : அது மட்டுமில்லே… பார்வையற்ற சிறப்புத் திறனாளிகள் எல்லோருக்கும் இது பற்றி விழிப்புணர்வு இல்லே… நம்மோட வாழ்க்கையை ஓரளவு சுலபமாக்குறதுக்கு இன்னின்ன கருவர்கள் தொழில்நுட்பங்கள் இருக்குது என்பது பற்றிய அடிப்படை KNOWLEDGE கூட அவங்களுக்கு இல்லே…
நாம் : உங்களோட இன்ஸ்பிரேஷன் யார் சார்?
திரு.இளங்கோ : என்னுடைய இன்ஸ்பிரேஷன் & நண்பர் அப்படின்னா இவரை வேணும்னா சொல்லலாம். திரு.சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். என்னுடைய நெருங்கிய நண்பர் அவர்.
நான் தான் எனக்கு ரோல் மாடல்!
நாம் : அதாவது உங்களை கவர்ந்த தேசியத் தலைவர்கள் சாதனையாளர்கள் இப்படி… யாராச்சும்? அதாவது ரோல் மாடல்?
(திரு.இளங்கோ பதில் கூறாமல் ஆழ்ந்து யோசிக்கிறார்)
நாம் : என்ன சார் யோசிக்கிறீங்க? நாடு அந்த நிலைமையிலயா இருக்கு? ஒருத்தரை கூட உங்களால சொல்ல முடியலையா?
(அனைவரும் சிரிக்கிறோம்)
திரு.இளங்கோ : என்னுடைய செஷன் எல்லாத்துலயும் என்னை கேட்க்க கூடிய காமன் கேள்வி இது… உங்க ரோல் மாடல் யாரு என்று. அதுக்கு நான் சொல்லக்கூடிய பதில் – எனக்கு நிறைய துறைகள்ல பரிச்சயம் இருக்கு. SINGING, VOICE-OVER, PUBLIC SPEAKING இந்த மூனுல மட்டும்னு பார்த்தீங்கன்னா கூட ஒவ்வொரு துறைக்கும் குறைஞ்சது ஒரு அஞ்சு பேர் இன்ஸ்பிரேஷனா இருக்காங்க. ஆனா, டோட்டலா ரோல் மாடல் என்கிற பதத்துக்கு பார்த்தீங்கன்னா.. எனக்கு யாரும் இல்லே. ஏன்னா நான் தான் எனக்கு ரோல் மாடல்.
நாம் : சூப்பர்….
திரு.இளங்கோ : காரணம் என்னன்னா… நான் என்னை ரோல் மாடலா வெச்சிருக்கும்போது தான் விழுறதுக்கு பயப்படமாட்டேன்…. விழுந்தா எழுந்திருக்கிறதுக்கும் தயங்கமாட்டேன்.
திரு.இளங்கோ : நீங்க கேட்க்கிறதால சொல்றேன்… ஜோதிராம் பூலேன்னு ஒருத்தரு. மகாராஷ்டிராவை சேர்ந்த சமூக சீர்த்திருத்தவாதி. பெரியார் மாதிரின்னு வெச்சிக்கோங்களேன். அவரை பத்தி அதிகம் யாருக்கும் தெரியாது. அவரை வேணும்னா என்னோட ரோல் மாடல்னு சொல்லலாம்.
நாம் : உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?
திரு.இளங்கோ : எனக்கு என் மேல நம்பிக்கை இருக்கிறது.
நாம் : நீங்க தான் சார் மிகப் பெரிய ஆன்மீகவாதி. எப்படின்னு பார்த்தா…சுவாமி விவேகானந்தர் சொல்படி நீங்க மிகப் பெரிய ஆன்மீகவாதி. சுவாமி விவேகானந்தர் என்ன சொல்லியிருக்கிறார்னா….
“எவன் ஒருவன் தன்னை பரிபூரணமாக நம்புகிறானோ அவன் தான் மிகப் பெரிய ஆன்மீகவாதி. எவன் தன்னை நம்பவில்லையோ அவன் தான் உண்மையில் கடவுள் மறுப்பாளன்!” – சுவாமி விவேகானந்தர்
“He is an atheist who does not believe in himself. The old religion said that he was an atheist who did not believe in God. The new religion says that he is an atheist who does not believe in himself.”
― Swami Vivekananda
திரு.இளங்கோ : சரியான கருத்து. என்னுடைய உள்ளுணர்வை பிரதிபலிக்கும் ஆணித்தரமான வார்த்தைகள்.
யாரோட பாதையிலும் நான் போக விரும்பலே… நான் போற இடமெல்லாம் பாதையா மாறனும்
நாம் : அடுத்து எங்க கேள்வி ஒன்னு… ரஜினி சார் படங்கள் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவரை பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?
திரு.இளங்கோ : எனக்கு 70 களின் கடைசி மற்றும் 80 களின் ரஜினியை ரொம்ப பிடிக்கும். குறிப்பாக ‘தனிக்காட்டு ராஜா’ படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்னு. அந்த படத்துல அப்பாவுக்கும் பையனுக்கும் நடுவே, ஒரு கான்வர்சேஷன் நடக்கும்.
—————————————————————————————
மேஜர் சுந்தர்ராஜன் : சூரி நீ எந்தப் பாதையில போக விரும்புறேன்னு தெரிஞ்சிக்கலாமா?
ரஜினி : (ஹா..ஹா…ஹா) பலமாக சிரிக்கிறார் “யாரோட பாதையிலும் நான் போக விரும்பலே… நான் போற இடமெல்லாம் பாதையா மாறனும் யார் நிழல்லயும் நான் இளைப்பாற விரும்பலே… அதே சமயம் என்னோட நிழல்ல சோம்பேறிகள் யாரும் இளைப்பாற விடமாட்டேன்…
—————————————————————————————
(எனக்கு இந்த டயலாக் மறந்துப் போச்சு… இவர் கரெக்ட்டா ஞாபகம் வெச்சி சொல்லும்போது அவரது பல்துறை அறிவைப் பற்றி பிரமிப்பு ஏற்பட்டது.)
திரு.இளங்கோ : எனக்கு ரொம்ப பிடிச்ச டயலாக் இது. யாரோட பாதையிலும் நான் போக விரும்பலே… நான் போற இடமெல்லாம் பாதையா மாறனும்… இந்த ரஜினியின் பன்ச்தந்திரம் புக்ல கூட வந்திருக்கும்னு நினைக்கிறேன். அந்த டயலாக்கை அவர் சொல்லும்போது அந்த கான்ஃபிடன்ஸ் நல்லா முகத்தில தெரியும்.
எனக்கும் சரி… என்னோட வேவ்லெங்க்த்தில் எத்தனையோ பேர் இருக்கிறாங்க… அவங்களுக்கும் சரி… பிடிச்ச ஹீரோன்னு சொன்னா ரெண்டே ரெண்டு பேர் தான். ஒன்னு ரஜினி… இன்னொன்னு கமல்.
சூப்பர் ஸ்டாரை சந்தித்த போது…
நாம் : ரொம்ப சந்தோஷம் சார். இது மூவி சைட். அதாவது அவரோட ஆன்-ஸ்க்ரீன் பர்சோனா. ஓ.கே. ஆனா ரஜினி சாரைப் பத்தி உங்களோட பர்சனல் ஒபீனியன் என்ன? அவரோட off-screen பர்சனாலிட்டி பத்தி உங்க ஒப்பீனியன் என்ன?
திரு.இளங்கோ : நான் ரஜினி சாரை நேர்ல மீட் பண்ணியிருக்கேன். அப்போ நான் ஸ்கூல் படிச்சிகிட்டிருந்தேன். என் நண்பர்களோட அவர் வீட்டுக்கு போனேன். ஒரு CASUAL விசிட் தான். எல்லாரும் அவர் கூட ஃபோட்டோ எடுத்துக்கிட்டோம். எங்க எல்லாரையும் அவர் மனைவி லதாவுக்கு அறிமுகப்படுத்தி வெச்சார். என்னை பத்தி தெரிஞ்சவுடனே… என் பக்கத்துல வந்து என் கையை பிடிச்சிட்டு உட்கார்ந்தார். நான் பேசுறதை பொறுமையா கேட்டார். ரொம்ப நல்ல மனிதர். இது நடந்து அடுத்தவாரம் புன்னகை மன்னன் ஷூட்டிங்கல கமல்ஹாசனை கூட மீட் பண்ணினோம்.
நாம் : வாவ்… குட்…
(இரண்டு படங்களிலும் சூப்பர் ஸ்டாருக்கு அருகில் நிற்கும் சிறுவன் யார் தெரிகிறதா? அது வேறு யாருமல்ல…நம் பதிவின் நாயகன் திரு.இளங்கோ!!)
திரு.இளங்கோ : ரஜினி கிட்டே பிடிச்ச இன்னொரு விஷயம் என்னனு சொன்னா… அவர் தமிழர் கிடையாது. மொழியால்… பிறப்பால்… தமிழர் கிடையாது. ஆனா.. தனக்கென ஒரு ஸ்டைல் ஏற்படுத்திக்கிட்டு அவர் பேசும் தமிழை மக்களை ஏத்துக்க வெச்சார் பாருங்க… இது இனிமே யாருக்கும் சாத்தியமில்லே. அவர்கிட்டே அந்த கேர் இருந்திச்சு. நாம் நல்லா பேசனும் அப்படிங்கிற ஒரு கேர் இருந்திச்சு. ஒரு உதாரணம் சொல்லனும்னா அவரோட ஸ்ரீ ராகவேந்திரர் படத்துல சின்ன வயசு வேங்கடநாதனா வர்றதுல இருந்து க்ளைமேக்ஸ்ல மஹா சமாதி ஆகுறவரைக்கும் தூய தமிழ்லயே பேசி நடிச்சிருப்பாரு. அந்த வகையில அவர் ரொம்ப கிரேட். அந்த டெடிகேஷன் பாராட்டப் படவேண்டிய விஷயம். எக்ஸ்ட்ரா ஆர்டினரி பெர்ஃபாமன்ஸ் அது.
‘நான் போட்ட சவால்’ – நெஞ்சே உன்னாசை என்ன – பாடல் நிகழ்த்திய சாதனை!
‘பொல்லாதவன்’, ‘நான் போட்ட சவால்’…. இதெல்லாம் என்னால மறக்க முடியாத படம். அதுவும் நான் போட்ட சவாலை எப்படி மறக்கமுடியும்… அந்த படத்துல வர்ற, ‘நெஞ்சே உன்னாசை என்ன’ பாட்டை என்னால மறக்க முடியாது… இப்போ கூட ஸ்டேஜ்கள்ல நான் பாடுற இன்ஸ்பிரேஷன் ஸாங்ல அது முக்கியா இருக்கும். என்ன ஒரு பாட்டு….
(அந்த பாடலை அழகாக பாடிக் காட்டுகிறார்).
அந்த பாடலை பாடிய டி.எல்.மகராஜன் என்னோட ஃப்ரெண்டா இருக்கிறார் இப்போ. அந்த பாட்டுக்கு ஒரு சிறப்பு என்னன்னா… சிங்கப்பூர், மலேசியா, சிலோன்… உள்ளிட்ட நாடுகள்ல… உள்ள ரேடியோவில் படம் ரிலீசானதுல இருந்து எட்டு வருஷம் தொடர்ச்சியா டாப் டென் ஸாங்ஸ்ல முதல் இடத்துலயே இருந்திச்சு. குறிப்பா சிங்கப்பூர் ரேடியோவுல… நான் சொல்றது 8 வருஷம் தொடர்ச்சியா… இது எந்த ஸாங்கும் பண்ணாத ரெக்கார்ட்.
நாம் : நான் நடத்துவது ரஜினி சார் தொடர்புடைய ஒரு வெப்சைட்டா இருந்தாலும், உங்களை மாதிரி சாதனையாளர்களை நாங்க தேடி வந்து பேட்டி எடுக்குறது இப்போ என்னோட் அடுத்த லெவல் முயற்சி. இப்போ நீங்க சொன்ன இந்த ஒரு தகவல்… இந்த சந்திப்புக்கே ஒரு ஸ்பெஷல் அட்ராக்ஷன் சேர்த்துடிச்சு. மிகத் தீவிர ரஜினி ரசிகர்களுக்கு கூட இந்த விபரம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எங்கள் சூப்பர் ஸ்டார் நடிச்ச ஒரு படத்தோட பாட்டு அதுவும் டூயட் ஸாங் கிடையாது… ஒரு மோடிவேஷனல் ஸாங் … வானொலியில அதுவும் அயல்நாடுகள்ல இப்படி ஒரு சாதனை படைச்சது என்பதை கேள்விப்படும்போதும் எனக்கு ஏற்பாடும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. ரொம்ப தேங்க்ஸ் சார்.
திரு.இளங்கோ : ‘பாட்ஷா’, ‘அண்ணாமலை’க்கு அப்புறம் ரஜினி சார் பண்ணின படங்கள் மேல எனக்கு பெரிய அபிப்ராயம் கிடையாது. அதே சமயம்… அவர் எக்ஸ்ட்ரா ஆர்டினரி மூவீஸ்லாம் பண்ணியிருக்கிறார். ‘எங்கேயோ கட்டகேட்ட குரல்’, ‘புவனா ஒரு கேள்விக்குறி’….
நாம் : ‘ஆறிலிருந்து அறுபது வரை’….
திரு.இளங்கோ :யெஸ்… ‘புவனா ஒரு கேள்விக்குறி’… இந்த ‘புவனா ஒரு கேள்விக்குறி’ பட ஷூட்டிங்கப்போ நடந்த பல விஷயங்களை சிவக்குமார் சார் என்கிட்டே நிறைய ஷேர் பண்ணியிருக்கிறார். சிவக்குமார் சார் என்னோட நெருங்கிய நண்பர். டேக் சொன்னவுடனே ரஜினி அவர் பாட்டுக்கு ஸ்பீடா வசனத்தை பேசிட்டு போயிடுவாராம். “ஏன்… ஏன் இவ்ளோ ஃபாஸ்டா பேசுறீங்க ரஜினி…? கொஞ்சம் மெதுவா மெதுவா” அப்படின்னு சிவக்குமார் சொல்வாராம். அதுக்கு அவரு “ஓகே… ஓகே….!” என்பாராம். இப்படித் தான் ஷூட்டிங் முழுக்க ஒரே கலகலப்பா இருக்குமாம்.
நாம் : WHAT ABOUT ‘ஆறிலிருந்து அறுபது வரை’…. சார்? ஏன் கேட்கிறேன்னா அந்த படத்துல வர்ற மாதிரி தான் நிஜத்துல நானும்.. அதே போல பிரிண்டிங் பிரஸ்ல தான் வேலை பார்க்குறேன். கிட்டத்தட்ட அதே மாதிரி தான் என்னோட LIFE STYLE ம் கூட. அதனால கேட்கிறேன்…
திரு.இளங்கோ : Oh…. ‘ஆறிலிருந்து அறுபது வரை’ படத்துல ஒரு பாட்டு… இப்போ கேட்டா கூட I WILL START MEDITATING… மார்வெலஸ் மூவி. MATCHLESS PERFORMANCE.
நாம் : ‘கண்மணியே காதால் என்பது கற்பனையா காவியமா’
திரு.இளங்கோ : நோ…அதில்லே… அதுவும் நல்ல பாட்டு தான்… ஆனா நான் சொல்ற பாட்டு… “வாழ்க்கையே வேஷம் இதில் பாசமென்ன நேசமென்ன.. காலத்தின் கோலம் புரிந்தது ஞானி தானே நானும்”
(பாடிக் காட்டுகிறார். அவருடைய கணீர் குரலில் பாடலை கேட்பது ஒரு சுகமான அனுபவம்.)
திரு.இளங்கோ : அப்புறம் ‘நான் மகன் அல்ல’…. என்னோட ஸ்டேஜ் ஸாங்ல மாஸ்டர் பீஸ் ஸாங். மாலை சூடும் வேளை… அந்தி மாலை சூடும் வேளை… அப்புறம் ‘ஜானி’, ‘காளி’, ‘முள்ளும் மலரும்’ இதெல்லாம் மாஸ்டர் பீஸ் இல்லையா…
நாம் : ‘கை கொடுக்கும் கை’…?
திரு.இளங்கோ : Ya.. கை கொடுக்கும் கை…. அப்புறம் கே.பி.டைரக்ஷன்ல ‘தில்லு முள்ளு’ – ராகங்கள் பதினாறு உருவான வரலாறு… அதுவும் எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு… ஜானி படத்துல ஸாங் சான்சேயில்ல…ஸ்டெனோ ரீட்டா பாட்டு… வாவ்… மார்வெலஸ் ஸாங். அதே மாதிரி ‘முள்ளும் மலரும்’ செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்… இதுவும் என்னோட் ஸ்டேஜ் மாஸ்டர் பீஸ்…
அப்புறம் அவருக்குன்னே எழுதின பாட்டு… “ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லே…” என்ன அப்படியே இருந்திருக்கலாம் அவரு. நடுவுல கொஞ்சம் அவரை கெடுத்துட்டாங்க… (ஆதங்கப்படுகிறார்!)
நாம் : கரெக்ட் சார்…
திரு.இளங்கோ : அது தான் அவருக்கு சரியான ரூட்… எனக்கொரு கட்சியும் வேண்டாம்.. கொடியும் வேண்டாம்… அந்த ஸ்டைல்லய அவர் கடைசி வரைக்கும் இருந்திருக்கலாம் என்பது என் ஒப்பீனியன்.
இளமை ஊஞ்சலாடுகிறது, நினைத்தாலே இனிக்கும்… இதெல்லாம் ஒ… எப்படி மறந்தேன். ‘அவள் அப்படித்தான்’… மறக்க முடியாத படம். படம் இன்னைக்கெல்லாம் கூட பார்த்துகிட்டே இருக்கலாம். செம கான்ட்ராஸ்ட் காரக்டர். விபூதி பட்டை, குங்குமம் இதெல்லாம் வெச்சிகிட்டு விஸ்கி கிளாஸ் வெச்சிருப்பாரு படத்துல ரஜினி…
நாம் : இதெல்லாம் எப்படி சார் அவ்ளோ கரெக்டா சொல்றீங்க? யாராச்சும் பார்த்து சொல்வாங்களா?
திரு. இளங்கோ : பேசுறது… கேட்கிறது.. எல்லாம் தான். சிலசமயம்… பல சமயம்… இதெல்லாம் நாமா புரிஞ்சிக்கிறது தான்.
இன்னொன்னு என்னன்னா.. நீங்க படம் பார்க்கும்போது எந்தளவு புரிஞ்சிக்கிறீங்களோ அந்தளவு என்னாலயும் புரிஞ்சிக்க முடியும். ரசிக்க முடியும். இதுக்கு முக்கிய காரணம் என்னன்னா… நம்மோட படங்கள் எல்லாம்… நான் சொல்றது இந்திய சினிமாக்கள் எல்லாம் பொதுவா டயலாக் ஓரியண்டட் தான். காட்சிகளை மட்டுமே வெச்சு படத்தை புரிய வெக்கிற ஸ்டைல் இங்கே இன்னும் சரியா வரலே. ஹாலிவுட் படத்துல எல்லாம் அது சர்வசாதாரணமா இருக்கும். ஒரு ஸீனை மிஸ் பண்ணிட்டா கூட படம் புரியாது…
ஓகே. விஷயத்துக்கு வருவோம். ரஜினி படங்கள்ல எனக்கு பிடிச்ச படங்கள்னு சொன்ன நான் மேலே சொன்ன படங்கள் தான். மற்றபடி அவருக்கு இருக்கிறது ஒரு பெரிய மாஸ் இமேஜ். இதெல்லாம் விட்ருவோம். நானெல்லாம் வளரும்போது… ரஜினி, கமல் ரெண்டு பேரும் மிகப் பெரிய தாக்கம். அப்போல்லாம் இப்போ இருக்குற மாதிரி எண்டர்டெயின்மென்ட்ஸ் கிடையாது. ஒரே எண்டர்டெயின்மென்ட் சினிமா தான். பாட்டு தான்.
நாம் : என்னோட வெப்சைட் ரீடர்ஸ்க்கு – ரஜினி ரசிகர்களுக்கு – என்ன சொல்ல விரும்புறீங்க?
திரு. இளங்கோ : திரைப்பட கதாநாயகர்கள், கலைஞர்கள்… இருக்கட்டும்… பட்
நிஜக் கதாநாயகர்களை தேடி கண்டுபிடிச்சி, அவங்க வாழ்க்கையை – அவங்க சாதனையை – பிறருக்கு எடுத்துக் கூறும் உங்களோட இந்த முயற்சி பாராட்டுக்குரியது.
நாம் : தேங்க் யூ சார்… THIS IS INDEED A BIGGEST COMPLIMENT FOR US.
திரு. இளங்கோ : இது எனக்காக நான் சொல்லலே… உண்மையில் இது தேவையான விஷயம். நமக்கு அருகிலேயே வாழ்ந்துக்கிட்டு நாம ஈஸியா பார்க்க முடிகிற… ஈஸியா ஃபாலோ பண்ண முடிகிற… விமர்சனம் பண்ண முடிகிற தூரத்துல இருக்குற இந்த மாதிரி நபர்களை உங்க வாசகர்களுக்கு அடையாளம் காட்டுகிற முயற்சி பாராட்டுக்குரியது. அவங்களுக்கும் பயன்தரக்கூடியது.
கஷ்டப்படும் எல்லாரும் முன்னுக்கு வருவாங்கன்னு சொல்ல முடியாது…… அது சரியான வாதமா இருக்க முடியாது. 80 வயசு பெரியவர் ஒருத்தரு நாள் முழுக்க வண்டி இழுக்குறாரு… அவர் கூட தான் கஷ்டப்படுறாரு. காலைல இருந்து வெயில்ல அலையுறாரு… சொந்தமா கடை வெச்சிருக்கிறவங்க… பால் வியாபாரம் பண்றவங்க.. இப்படி எல்லாரும் கஷ்டப்படுறவங்க தான். காலைல நாலு மணிக்கு எழுந்திருச்சு… ராத்திரி பத்னொரு மணி வரைக்கும் கஷ்டப்படுற எத்தையோ பேர் இருக்காங்க. அவங்க என்ன சாதிசிருப்பாங்க? மிஞ்சி மிஞ்சி போனா… பிசினசை டெவலப் பண்ணியிருப்பாங்க… இல்லே இன்னொரு பிரான்ச் ஆரம்பிச்சிருப்பாங்க. அதை தாண்டி சாதனைன்னா என்னல்லாம் இருக்கு? அதை தான் நீங்க வெளியே கொண்டு வர ட்ரை பண்றீங்க.
நாம் : கரெக்ட் சார்…
திரு. இளங்கோ : இப்போ என்னை பார்த்தீங்க…அடுத்து சக்சஸ்ஃபுல் பர்சன்ஸ் நிறைய பேர் இருக்காங்க. அவங்களை பார்க்கப் போவீங்க… இந்த மோடிவேஷன் எல்லாருக்கும் பரவும்… எனக்கு ஒரு கதை ஒரு அனுபவம். அது மாதிரி நீங்க சந்திக்கிற ஒவ்வொரு சாதனையாளர்களுக்கும் ஒவ்வொரு கதை ஒரு அனுபவம். என்னை பார்த்தீங்க… என்கிட்டே SELF-CONFIDENCE அதாவது தன்னம்பிக்கை பத்தி தெரிஞ்சிக்கிடீங்க. அடுத்து இன்னொருத்தரு.. அவர் கிட்டே திட்டமிடுதல்… PLANNING பத்தி தெரிஞ்சிக்குவீங்க. வேற ஒருத்தரு… அவர் கிட்டே பொறுமை…PATIENCE, அப்புறம் PRESENCE OF MIND, அப்புறம் வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்திக்கொள்வது. இப்படிப் பல பல. அது உங்க ரீடர்ஸ்க்கு ரொம்ப உபயோகமா இருக்கும். அதை நாம் அடாப்ட் பண்ணிக்கிட்டா, நமக்கு எது சரியா இருக்கும்.. நாம எப்படி உழைக்கலாம் என்பது பற்றி அவங்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும்.
இப்படி உங்க முயற்சிகளோட ரிசல்ட் எங்கே போய் முடியும்னு சொன்னா… இதை பார்க்குற இளைஞர்கள் அட்லீஸ்ட் கொஞ்ச பேருக்காவது இது பாதிப்பை ஏற்படுத்தும். இந்த ONLYSUPERSTAR.COM வெப் ஸைட்டை பார்த்ததுலயிருந்து தான் நான் மாறியிருக்கேன். அதை பார்த்துட்டு தான் நான் என் பிளானோட டிராஃப்டை மாத்தி வொர்கவுட் பண்ணி இப்படி வந்திருக்கேன்னு ஒரு 5 வருடங்கள் கழிச்சி யாராவது ஏதாவது பேட்டில சொன்னா அது உங்களுக்கு பெரிய சக்சஸ்.
நாம் : இது கண்டிப்பா நடக்கும் சார். உங்களோட வாழ்த்துக்கள் எங்களுக்கு என்றைக்கும் வேண்டும் சார்.
திரு. இளங்கோ : ரஜினி ஃபேன்ஸ்க்கு நான் என்ன சொல்றேன்னா… சினிமாவை சினிமாவா பாருங்க.
நாம் : இதையேத் தான் ரஜினியும் ரசிகர்களுக்கு ஆரம்பத்துலயிருந்து சொல்றாரு சார்!
திரு. இளங்கோ : இன்றைய சினிமாப்படி நல்ல நண்பர்கள் யாருன்னா ஒன்னா உக்கார்ந்து தண்ணியடிசிகிட்டே மாமா, மச்சான்னு கூப்பிட்டுகிட்டா அவங்க தான். அது தான் நட்போட உச்சம். காலேஜ்னா லெக்சரரை கிண்டல் பண்றது, கிளாஸுக்கு கட் அடிக்கிறது, பையன் பொன்னை லவ் பண்றது இது தான். இதை தாண்டி திங் பண்ணவே மாட்டேங்குறாங்க.
நாம் : இதை பத்தி பேசினா பேசிக்கிட்ட போகலாம் சார்…
நாம் : அப்புறம் ஒரு முக்கியமான கேள்வி. வாழ்க்கையில எதிர் நீச்சல் போட்டு போட்டு சோர்ந்து போயிருப்பவங்களுக்கு நீங்க சொல்றது என்ன சார்?
திரு. இளங்கோ : எதிர் நீச்சல் போடுற சமயத்துல பிரச்னை வந்தா என்ன பண்ணலாம்னு சொன்னா… மறுபடியும் எதிர்நீச்சல் போடுங்க… மறுபடியும் பிரச்னை வருதா… மறுபடியும் எதிர்நீச்சல் போடுங்க… அது தான் ஒரே வழி!
அப்புறம் சிறய வருத்தமா இருந்தாலும் சரி… நம்மால தாங்கிக் கொள்ள முடியாத பேரிழப்பாயிருந்தாலும் சரி… அதாவது ஒரு CATASTROPHE அப்படின்னு சொல்வாங்க… சில சமயம் பிரச்னைகள் சுனாமி போல வரும்… அந்த மாதிரி சந்தர்ப்பங்களிலும் சரி… அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரத்துக்கு மேல அது நம்மளை டாமினேட் பண்ண விடக்கூடாது.
இதுல நாம தெளிவா இருந்திட்டோம்னா பாதிப் பிரச்னை ஸால்வாயிடும். இங்கே தான் அந்த EMOTIONAL CONTROL இல்லே இல்லே EMOTIONAL MANAGEMENT ஐ அப்ளை செய்யனும். அப்போ வெளிச்சம் தெரிய ஆரம்பிச்சுடும். வெளிச்சம் தெரியலேங்கிறது தான் பிரச்னையே. வெளிச்சம் தெரிய ஆரம்பிச்சவுடனேயே பிரச்னைகளுக்கு தீர்வும் தென்படும். கலங்கிய மனசில் எந்த தீர்வும் தென்படாது. நான் சொல்ற இந்த முறைல மனசுல ஒரு தெளிவு ஏற்படும். அப்புறமா நாம நிதானமா யோசிச்சி தீர்வை தேடலாம்.
இந்த SELF-IMPROVEMENT புக்ஸ் & கட்டுரைகள் படிக்கிறது, இதெல்லாம் கூட நல்ல பழக்கம் தான். சினிமா நட்சத்திரங்களைப் பற்றிய வதந்திகளையும், கிசுகிசுக்களையும், அவங்க எங்கே போறாங்க…வர்றாங்க… அவங்களுக்கு இருக்கிற AFFAIRS என்ன? எத்தனை? இதெல்லாம் தெரிஞ்சிக்க செலவு பண்ற நேரத்தை இந்தப் பக்கம் திருப்பினாலே நமக்கு பாதி வெற்றி தான்.
நல்ல விஷயங்களை நோக்கி கவனத்தை திருப்பி லட்சியத்தை அடையறதுக்கு நிறைய வழிகள் இருக்கு. புக்ஸ் படிக்கலாம். AUTO-SUGGESTION, VISUALIZING TECHNIQUE இப்படி நிறைய இருக்கு…
நாம் : இந்த VISUALIZING TECHNIQUE தான் சார் நான் இப்போ ஃபாலோ பண்றேன்…
திரு. இளங்கோ : குட்… குட்… நீங்க காலைல எழுந்திருக்கிறதுல இருந்து எல்லாம் விஷயங்களும் நம்பிக்கை ஊட்டுவது சம்பந்தமா இருக்கலாம். நீங்க பார்க்குற எல்லாமே பாசிட்டிவ்வான விஷயங்கள் இருக்கணும். உங்களோட மொத்த ENVIRONMENT ம் பாசிட்டிவ்வா இருக்கணும். அப்போ உங்களை எதுவும் பாதிக்காது.
(அடுத்ததாக நாம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் ஒரு பிரச்னை குறித்து கேள்வி கேட்டோம். முதல் பாகத்தில் இந்த கேள்வியை மட்டும் குறிப்பிட்டு, அடுத்த பாகத்தில் விடையை பார்க்கலாம் என்று கூற்யிருந்தேன்!)
நாம் : “சார்… நாம் ஒழுங்கா சரியா நம்ம வேலையை கரெக்டா பார்த்துகிட்டிருந்தாலும், நம்மளை நோக்கி சில வேண்டாத பிரச்னைகள் வருதே… அதை எப்படி எடுத்துக்கிறது? உதாரணத்துக்கு கரெக்டா ரூல்ஸ் எல்லாம் ஃபாலோ பண்ணி நாம் ஒழுங்கா ஹைவேஸ்ல போய்கிட்டிருக்கோம்… அதுக்கு நாம பொறுப்பு. ஒ.கே. ஆனா, எதிர்ல ஒருத்தன் எந்த ரூல்ஸையும் ஃபாலோ பண்ணாம, குடிச்சிட்டு தாறு மாறா வண்டி ஓட்டிகிட்டு வந்து நம்ம மேலே மோதி ஆக்சிடென்ட் பண்ணிட்டு, தப்பு நம்ம மேல தான்னு ARGUE பண்ணினா அதை எப்படி சார் எடுத்துக்குறது?”
திரு. இளங்கோ : அதாவது நம் ஆதிக்கம் இல்லாமல், நாம் எந்த வகையிலும் தலையீடு இல்லாமல் ஆனால் நம்மை பாதிக்ககூடிய விஷயங்களை எப்படி எடுத்துக்கொள்வதுன்னு கேக்குறீங்க… இதெல்லாம் பழைய விஷயம். இருந்தாலும் சொல்றேன்….
அதெல்லாம் உங்களை பாதிச்சதாகவே நீங்க நினைக்கக்கூடாது. நீங்க பாட்டுக்கு போய்கிட்டே இருக்கணும். எதிர்பாராம நடக்குற நிகழ்வுகளால தான் வாழ்க்கையே இண்ட்ரஸ்டிங்கா இருக்குன்னு நினைக்கிறவன் நான். எல்லாரும், ஐ லைக் யூ ன்னு சொல்லும்போது, ஒருத்தன் மட்டும் ஐ டோன்ட் லைக் யூ ன்னு சொல்லும்போது தான் இண்ட்ரஸ்டிங்கா இருக்கும். அவனுக்கு என்ன பதிலடி கொடுக்கலாம்.. எப்படி கவுண்டர் கொடுக்கலாம்னு யோசிக்கிறவன் நான். இன்னொரு விஷயம்… பிரச்னைகளே இல்லேன்னா வாழ்க்கையே இல்லையே…
சாதிக்கிறவன் எப்பவுமே ஒவ்வொரு பிரச்னையையுமே ஒரு வாய்ப்பாகத் தான் பார்ப்பான். தோல்வியாளன் ஒவ்வொரு வாய்ப்பையுமே கூட ஒரு பிரச்னையாத் தான் பார்ப்பான்! இந்த திங்கிங் தான் வெற்றியாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்கும் உள்ள வித்தியாசம். So, next time if some problem knocks at your doors, see that as an opportunity. Life will change the way you want!!
ஒரு அஞ்சு வருஷம் கழிச்சி… நீங்க இப்படித் தான் இருப்பீங்க. உங்க வெப்சைட் இந்த ஸ்டேஜ்ல இவ்வளவு உயரத்துல இருக்கும் அப்படின்னு தெரிஞ்சி போச்சுன்னா… என்னாகும்? YOU WILL STOP WORKING. எதுவும் பண்றதுக்கு இண்ட்ரஸ்ட்டே இருக்காது. கடுப்பாயிடும். “சுந்தர் அந்த அஸைன்மெண்ட்டை இன்டர்வியூவை முடிக்கலியாப்பான்னு யாராச்சும் கேட்டா…. “போப்பா… நீ வேற… அடுத்த அஞ்சு வருஷத்துல நான் எந்த உயரத்துல இருப்பேன்னு எனக்கு தெரியுமே” அப்படித்தான் சொல்வீங்க… So, எதிர்பாராம நடக்குற நிகழ்வுகள் & விபத்துகளால் தான் வாழ்க்கையே சுவாரஸ்யமாகுது. நாம் சாதிக்கிறதுக்கு வழியும் ஏற்படுத்தப்படுது!
(இவர் சொன்ன பதில் எனக்கு மிகவும் திருப்தி தந்ததையடுத்து பலமாக கைகளை தட்டுகிறேன். இவர் சொல்வது சரி தான். எனக்கு ஏற்பட்ட எதிர்பாராத நிகழ்வுகள் தானே என்னை இந்தளவு கொண்டுவந்திருக்கிறது! அந்த வகையில் விபத்தை ஏற்படுத்தியவர்களுக்கு மிகப் பெரிய நன்றி!!!)
நாம் : “Wonderful perspective… Beautiful answer sir” நமது வியப்பை மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டோம்.
சந்திப்பு முடியும் தருவாயில் ஒரு சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. உண்மையில் பார்வையற்று இருப்பது இவரா? அல்ல நாமா? என்று! நாம தான்னு நான் நினைக்கிறேன்!!
சந்திப்பு நிறைவடையும் கட்டத்தை நெருங்கியதை அடுத்து, ரஜினியின் ‘பன்ச்’தந்திரம் நூலை இவருக்கு பரிசளித்தோம். நூலை படித்துவிட்டு நிச்சயம் தமது FEEDBACK ஐ தெரிவிப்பதாக கூறினார்.
நாம் : “உங்களை மீட் பண்ணினது என்னோட வெப்சைட் ஹிஸ்டரியில மிகப் பெரிய திருப்பு முனை. இதுவரை நடந்த என்னோட சந்திப்புக்களில் இது முதன்மையானதுன்னு சொல்வேன். அதுமட்டுமல்ல பயனுள்ளதும் கூட. எங்களுக்காக நேராம் ஒதுக்கி தந்தது பேசினதுக்கு ரொம்ப நன்றி சார்.”
சென்ற ஆண்டு திரு.கிட்டி மற்றும் பி.சி.பாலசுப்ரமணியம் அவர்களை சந்தித்தது எனக்கு மிகப் பெரும் திருப்புமுனை என்றால் இந்த ஆண்டு இவரை சந்தித்து மிகப் பெரிய LEAP. GIANT. LEAP. எனக்கு மட்டுமல்ல…. நமது தளத்திற்கும் தான்!
நம்பிக்கையுடன் சென்றோம். வாழ்க்கையில் எதையும் சந்திக்கூடிய சாதிக்கக்கூடிய புதிய மனிதர்களாக திரும்பினோம்!!
என்னை வழிநடத்தும் இறைவனுக்கு நன்றி!! நன்றி!! நன்றி!!
நீங்களும் இவரது சேவையை உங்கள் நிறுவனத்துக்கு / கல்லூரிக்கு பயன்படுத்திக்கொள்ளலாமே!!
என்ன நண்பர்களே, திரு.இளங்கோவின் கருத்துக்களை படித்தீர்களா? நீங்களும் இவரது சேவையை உங்கள் நிறுவனத்துக்கு / கல்லூரிக்கு பயன்படுத்திக்கொள்ளலாமே!!
தாம் ஒரு பார்வையற்ற சிறப்புத் திறனாளி என்ற காரணத்திற்க்காக எந்த ஒரு வாய்ப்போ சலுகையோ அவருக்கு வழங்கப்படுவதை திரு.இளங்கோ விரும்புவதில்லை. அதே சமயம் அவரது திறமை மீது மதிப்பும் நம்பிக்கையும் வைத்து தன்னை அப்ரோச் செய்வதையே இவர் பெரிதும் விரும்புகிறார். அதற்கு முற்றிலும் தகுதியானவர் இவர் என்பதை நாம் சொல்லவும் வேண்டுமோ?
நம் தள வாசகர்களில் கார்பரேட் கம்பெனிகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் சாஃப்ட்வேர் ஊழியர்கள் தங்கள் நிறுவனங்களில் வாழ்வியல் திறன்களை ஏற்படுத்துதல், இலக்கை நிர்ணயித்தல், ஆளுமைத் திறனை வளர்த்தல், ENGLISH FLUENCY போன்ற பயிற்சிகளுக்கு இவரது நிறுவனத்தை அணுகலாம்.
மேலும், சுய-முன்னேற்றம், தன்னம்பிக்கை, உற்பத்தித் திறன், போன்ற பல்வேறு தலைப்புக்களில் இவர் கார்பரேட் (CORPORATE MEETINGS) மற்றும் பொது மீட்டிங்குகளில் (PUBLIC GATHERING) உரை (PUBLIC SPEECH) நிகழ்த்துவார். அதற்க்கும் நீங்கள் இவரை அணுகலாம்.
மேலும், இவர் சொந்தமாக இசைக் குழு ஒன்றையும் நடத்தி வருகிறார். இது BLIND-ORCHESTRA அல்ல. THEME BASED பாடல்களை கார்பரேட் மற்றும் குடும்ப சுப நிகழ்ச்சிகளிலும், இக்குழுவினர் இசைக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் நிகழ்ச்சிகளுக்கு இவரே நேரில் சென்று பாடுகிறார்.
இவர் வடிவமைத்த TRAINING MODULE மூலமாக தேர்ச்சி பெற்ற சுமார் 300 பயிற்சியாளர்கள் கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு பயிற்சியளிக்கிறார்கள்.
இது தவிர நிறுவன ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் SPOKEN ENGLISH பயிற்சியும் அளிக்கிறார்.
மேலும் விபரங்களுக்கு http://acea2z.com/ என்ற தளத்தை செக் செய்யவும்.
Thank you very much for the great post…
Thank you very much
திரு.இளங்கோவின் கருத்துக்களை படிக்கும் அனைவருக்கும் தன்னம்பிக்கை தானாகவே வளரும் .
நானும் கொஞ்சம் அதிகமாகவே recharge செய்து கொள்கிறேன் .
தேங்க்ஸ் for good and great போஸ்ட்……
இது வரை 5 முறை படித்த பதிவு இது. படிக்க படிக்க பிரமிப்பு ஊட்டும் பதிவு இது . ஒவொரு வரியும் வைர வரிகள்..
//எனக்கு யாரும் இல்லே. ஏன்னா நான் தான் எனக்கு ரோல் மாடல். -//
மிகவும் அருமையான சாதனையாளர் திரு இளங்கோ.
அவர் தான் 10 ம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வியில் படித்து ஆங்கில புலமையை வளர்த்து கொண்டு இருப்பதை பார்த்தால் மிகவும் பிரம்மிப்பாக உள்ளது. நான் தான் 10ம் வகுப்பு வரை தமிழ் மீடியம் படித்து என் லைப் ஸ்பாயில் ஆனது என நினைத்தேன். இந்த பதிவு எனக்க inspiration ஆக உள்ளது , என்னை நான் முன்னேற்றி கொள்ள காலம் கடந்து விடவில்லை
அழகிய பதிவிற்கு நன்றிகள் பல
உமா வெங்கட்