Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, December 7, 2024
Please specify the group
Home > Featured > தேனினும் இனிய ‘திருவாசகம்’ முற்றோதல் சென்னையில் நடக்கிறது!

தேனினும் இனிய ‘திருவாசகம்’ முற்றோதல் சென்னையில் நடக்கிறது!

print
திருவாசகம் முற்றோதல் பற்றிய பதிவுகளை பார்த்து பரவசப்பட்ட நம் வாசகர்கள் பலர் முற்றோதல் சென்னையில் நடைபெற்றால் கலந்துகொள்ள வசதியாக இருக்கும் என்று தங்கள் ஏக்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

இதோ… அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும்பொருட்டு சிவனருளால் சென்னையில் வரும் அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி) அன்று அரும்பாக்கம் மங்களாம்பிகை சமேத மங்களீஸ்வரர் திருக்கோவிலில் முற்றோதல் ஏற்பாடாகியுள்ளது.

முகவரி : மங்களீஸ்வரர் திருக்கோயில், (வைஷ்ணவா கல்லூரி எதிரில்), பூந்தமல்லி நெடுஞ்சாலை, அரும்பாக்கம், சென்னை – 600106.

திருக்கழுக்குன்றம் சதாசிவ பரப்பிரம்ம சிவனடியார் கூட்டத்தின் தலைவர் திரு.தாமோதரன் ஐயாவின் தலைமையில் இந்த முற்றோதல் நடைபெறவுள்ளது. சென்னையை சேர்ந்த ‘ஓம் டிரஸ்ட்’ என்கிற ஆன்மீக சேவை அமைப்பு, அதன் தலைவர் திரு.அக்னி.எஸ்.பாலாஜி என்பவர் மூலம் இந்த முற்றோதலை ஏற்பாடு செய்துள்ளது.

வாசகர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டு திருவாசகத் தேன் பருகி எல்லாம் வல்ல சிவபெருமானின் அருளை பெறுவீர்களாக.

கருத்தரித்துள்ள தாய்மார்கள் (கர்ப்பிணிகள்) இதில் கலந்துகொள்ள விரும்பினால் – பிரயாணம் அனுமதிக்கும் சூழலில் அவர்கள் இருந்தால் – தகுந்த துணை மற்றும் பாதுகாப்புடன் முற்றோதலின் இறுதியில் கலந்துகொண்டு (சுமார் 1 மணிநேரம்) திருவாசகத் தேன் பருகுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

திருவாசகத்தின் பெருமை

திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் சிவபெருமானே வேதியர் வடிவில் குருவாக வந்து திருவாதவூரருக்கு உபதேசம் அருளினார். அந்த உபதேசம் பெற்றதுமே திருவாதவூரர் பாடியதுதான் திருவாசகம். “நமசிவாய வாழ்க; நாதன் தாள் வாழ்க’ என்று முதன்முதல் பாடியதுதான் “சிவபுராணம்’ எனப்படும் திருவாசகத்தின் முதற்பகுதி. இதனைக் கேட்டு மகிழ்ந்த சிவபெருமானே திருவாதவூரரை “மாணிக்க வாசக’ என்று தன் திருவாயால் அழைத்தார்.

திருவாசகத்தின் ஒரு பகுதியாகிய திருவெம்பாவை இருபது பாடல்களையும் மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் பாடியருளினார். அது கேட்டு மகிழ்ந்த ஈசன், “மணிவாசக, பாவை பாடிய வாயால் கோவை பாடு’ என்று திருவருளாணை பிறப்பித்தார்.

திருவாசகம் தமிழில் பாடப்பெற்ற பக்தி நூல். இறைவன்மீது பாடிய துதிப் பாடல்கள். மணிவாசகர் உலகத்து உயிர்களுக்காக இறைவனிடம் அழுது அழுது, தொழுது தொழுது பாடியது.

“வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து என்
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே’

என்று திருவாசகம் பற்றி கூறியிருக்கிறார் வள்ளலார்.

ஆங்கில அறிஞர் திரு.ஜி.யு.போப்பின் ஆகச்சிறந்த படைப்பாகக் கருதப்படுவது அவரது திருவாசக மொழிபெயர்ப்பு. திருவாசகத்தை போப் மொழிபெயர்க்க ஊக்கப்படுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியானது. தனது முதுமைக்காலத்தில் இங்கிலாந்து திரும்பிய போப் ஒரு நாள் தன் நண்பரிடம் திருவாசகத்தின் பெருமையை விவரித்திருக்கிறார். அதனைக்கேட்டு பரவசமடைந்த நண்பர், ” நீ கண்டிப்பாக திருவாசகத்தை ஆங்கிலத்தில் பதிப்பிக்க வேண்டும்” என்று வற்புறுத்தி இருக்கிறார். அதற்கு போப் தனது முதுமையினைக் குறிப்பிட்டு, அது நீண்ட நெடிய பணி அவ்வளவு காலம் நான் உயிரோடிருப்பேன் என்று நம்பிக்கையில்லை எனக் கூறியிருக்கிறார். அதற்கு போப்பின் நண்பர்” ஒருவர் தன்னை உன்னதமான பணியில் ஈடுபடுத்திக் கொள்வதுதான் நீண்டகாலம் வாழ்வதற்குண்டான வழி.நீ கண்டிப்பாக இப்பணியினை நிறைவேற்றுவாய் என்று ஊக்கப்படுத்தி இருக்கிறார்”. அதன் பின்னர் மொழிபெயர்ப்பினை துவக்கிய போப் தனது எண்பதாவது வயதில் இப்பணியினை முடித்திருக்கிறார்.தனது 80ஆவது பிறந்தநாளன்று எழுதிய கடித்தத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“I date this on my eightieth birthday. I find by reference that my first Tamil lesson was in 1837. This ends, as I suppose, a long life devoted to Tamil studies. It is not without deep emotions that I thus bring to a close my life’s literary work.”

அதன்பின் ஜி.யு.போப் 1908-ல் தனது 88ஆவது வயதில் மரணமடைந்தார். மரணமடைவதற்கு முன் தன் கல்லறையை எழுப்ப ஆகும் செலவில் ஒரு பகுதி தமிழர்களிடமிருந்து வசூலிக்கப்படவேண்டும் என்றும் தனது கல்லறையின் மீது “A Student of Tamil” என்று செதுக்கப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அயல்நாட்டினரே இப்படி திருவாசகத்தின் பெருமையை உணர்ந்து அதை கொண்டாடியிருக்கின்றனர் என்றால் நாம் செய்ய வேண்டியது என்ன என்று சற்று யோசித்து பாருங்கள்…!

[END]

16 thoughts on “தேனினும் இனிய ‘திருவாசகம்’ முற்றோதல் சென்னையில் நடக்கிறது!

  1. தாமோதரன் அய்யா அவர்களின் திருவாசகம் முற்றோதல் பற்றி படித்துவிட்டு அதன் வீடியோவை தேடி பார்த்தேன் பரவசப்பட்டேன். நன்றி ஜி

  2. அன்புடன் இனிய காலை வணக்கம்

    நம்ம எப்பவுமே நம்முடைய சிறப்பை அறியாமல் , வெளிநாட்டவர் அதை புகழந்த பின்னர் தான் நாம் அதன் சிறப்பை போற்றுவோம் ….

    நம் சைவ சமயத்தில் உள்ள 12 திருமுறைகள் சிறந்த, அரிய நூல்கல். அதை நாம் போற்றி , அறிந்து , புரிந்து , உணர்ந்து , காப்பற்ற வேண்டும் …நம் இளைய தலைமுறைக்கும் இந்த உணர்வை புகட்ட வேண்டும் …..

    திருச்சிற்றம்பலம்
    நமசிவாய வாழ்கc

  3. திருவாசகத்தேன் பருக அழைப்பு விடுத்தமைக்கு நன்றி சார்.
    என்னை போல் பலரும் எப்போது சென்னையில் நடைபெறும் என்று எதிர்பார்த்து கொண்டு இருந்த அனைவரும் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கொள்வார்கள். நன்றி

  4. சுந்தர் சார்,

    நல்ல செய்தி சொல்லியதற்கு மிக்க மகிச்சி. இன் நிகச்சியை பற்றி இதுவரை நான் கேட்டது இல்லை. மிகவும் ஆவலுடன் இருக்கிறேன்.

    நன்றியுடன் அருண்.

  5. சுந்தர்ஜி,

    முற்றோதலை நான் கேட்டதில்லை . தங்கள் பதிவை பார்த்துதான் முற்றோதலின் பெருமையை உணர்ந்தேன். அந்த ஒரு நாளை எண்ணி ஆவலுடன் காத்து இருக்கின்றேன்.

    நன்றி.

  6. “திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் ” என்பது பழமொழி. சென்னை பக்தர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. எங்கள் கோவை மாவட்டத்திலோ அதனை சுற்றி உள்ள இடங்களிலோ நடந்தால் நானும் கலந்து கொள்ள விருப்பமாய் உள்ளேன். எல்லாம் அவன் அருள். நன்றி

  7. “வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை
    நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
    தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து என்
    ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே’
    சுந்தர் அண்ணா ,
    தேன் போன்ற இனிய பொருளை நாவால் சுவைத்தால் மட்டும் சுவையை உணர முடியும் என்பதல்ல. தேன் தமிழை நாவால் பாடி காதால் அதை கேட்டாலும் , தேன் சுவைத்தது போன்ற உணர்வு கிட்டும் போல, இந்த திருவாசக வரிகளை கேட்கும் போது.
    நன்றி.

  8. அன்புடன் இனிய காலை வணக்கம்

    நம்ம எப்பவுமே நம்முடைய சிறப்பை அறியாமல் , வெளிநாட்டவர் அதை புகழந்த பின்னர் தான் நாம் அதன் சிறப்பை போற்றுவோம் ….

    நம் சைவ சமயத்தில் உள்ள 12 திருமுறைகள் சிறந்த, அரிய நூல்கல். அதை நாம் போற்றி , அறிந்து , புரிந்து , உணர்ந்து , காப்பற்ற வேண்டும் …நம் இளைய தலைமுறைக்கும் இந்த உணர்வை புகட்ட வேண்டும் …..

    திருச்சிற்றம்பலம்
    நமசிவாய வாழ்கc

  9. அந்த ஒ ரு நாளை எண்ணி ஆவலுடன் காத்து இருக்கின்றேன் சுந்தர்ஜி, நன்றி. திருச்சிற்றம்பலம் நமசிவாய வாழ்கக

  10. இராமலிங்க சுவாமிகள் திருவாசகத்தை தமது வழிபடு நூலாக ஏற்றுக்கொண்டார் . மாணிக்கவாககர் பற்றி தமது ஐந்தாம் திருமுறையில் 10 பாடல்கள் பாடியுள்ளார்கள்..அதில் இன்னொரு பாடலையும் பதிவு செய்கின்றஎன் பாருங்கள். தேசகத்தில் இனிக்கின்ற தெள்ளமுதே மாணிக்க வாசகனே ஆனந்த வடிவான மாதவனே மாசகன்ற நீ திருவாய் மலர்ந்த தமிழ் மாமறையின் ஆசகன்ற அனுபவம் நான் அனுபவிக்க அருளிதியே . யாருமே நினைத்து பார்க்க முடியாத தூ ய அன்பு கலந்த பத்தியினால் (பத்தி என்பதற்கு இப்படியும் விளக்கம் கூ றலாம் என்பர். பத்தி — இறை நிலையை அடையவேண்டும் என்ற ஆர்வம்,துடிதுடிப்பு, காதலாகி கண்ணீர் மல்க வேண்டுதல், தொண்டு செய்தல் ,சரணாகதி ஆகியவை சேர்ந்தது தான் ) . இறைவனைக் கண்டு ,மகிழ்ந்து , அனுபவித்து தாம் பெற்ற தெய்வீக அனுபவங்களையும் ,இறை இயல்புகளையும் பாடலாக வடித்துள்ளார். மாணிக்கவாசகர் பெருமானார் பெற்ற அந்த அனுபவகங்களை தாமும் பெற வேண்டும் என்கிறார்.. இன்னும் சொல்ல போனால் ஒவொரு பாடலும் இராமலிங்க சுவாமிகளை ஈர்த்த மகிழ்வை மிக அருமையாக பாடி உள்ளார்.

  11. நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்
    தாயிற் சிறந்த தயாவான தத்துவனே

    “திருவாசகம் இங்கு ஒருகால் ஓதின் கருங்கல் மனமும் கரைந்துருகும்” என்கின்றார் சிவப்பிரகாச அடிகள்.

    மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம் 51 பகுதிகளையும் 658 பாடல்களையும் கொண்டுள்ளது. தேவார மூவர் எண்சீர்க்கு மேற்பட்ட அடிகளையுடைய பாடல்களைப் பாடவில்லை. பன்னிருசீர் அடிகளால் விருத்தப் பாடல்களைப் பாடிய முதல்வர் மாணிக்கவாசகரே. எம்பாவை, அம்மானை, பொற்சுண்ணம், கோத்தும்பி, தெள்ளேணம், சாழல், பூவல்லி, உந்தி, தோணோக்கம், ஊசல் ஆகிய நாட்டுப்புறச் சாயல் மிக்க இலக்கிய வகைகளைப் பக்தியைப் புலப்படுத்தப் பயன்படுத்திய சிறப்பும் இவருக்குண்டு..சைவசமயக் குரவர் நால்வரில் அப்பரும் சம்பந்தரும் செய்த சமயத்தொண்டு ஒருவகை, சுந்தரரும் மாணிக்கவாசகரும் செய்த சமயத்தொண்டு வேறொரு வகை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். அப்பரும் சம்பந்தரும் தமிழ்நாட்டில் புறப்பகையை எதிர்த்துச் சைவத்தை நிலைநிறுத்த வேண்டியிருந்தது. சுந்தரர் மாணிக்கவாசகர் ஆகியோருக்குப் புறச் சமயத்தாரோடு மோத வேண்டிய தேவை இல்லை.

    மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
    நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை
    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

    திருச்சிற்றம்பலம்

  12. சமீப காலங்களாக திருவாசகம் முற்றோதல் நடைபெற்று வருகிறது. திருவாசகத்தை முற்றிலும் ஓதுதல் முற்றோதல். 658 பாடல்களையும் தொடர்ந்து 6 மணி நேரம் பாடுவது ஆகும்.இதில் 51 பதிகங்கள் உள்ளன.பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகளில் இருந்து ஒவ்வொரு பாடல் பாடப்படுகிறது. அடுத்து திருவாசகம் முழுமையும் படிக்கப்படுகிறது. அதற்கு அடுத்து எட்டாம் திருமுறையில் திருக்கோவையாரில் 1 பாடல் அதன்பின் 9 ஆம் திருமுறையிலிருந்து 12 ஆம் திருமுறை வரை திருமுறைக்கு ஒரு பாடல் வீதம் பாடப்படுகிறது. அத்துடன் முற்றோதல் நிறைவு பெறுகிறது.

    சிவபுராணம் படித்தால் மனக்கவலைகள் யாவும் மறைந்து அமைதியும் ஆனந்தமும் உண்டாகும். செல்வம் பெருகும். ..

    விரோதிகளை அடங்கச் செய்து வெற்றியை நல்கும் பதிகம் ,”திருவுந்தியார்” …..

    ஊமை, திக்குவாய் முதலியன நீங்கி நன்கு பேச ,”திருச்சாழல்” படிக்கவேண்டும்…

    திருவெம்பாவை பாடி திருமணத்தடைகள் நீங்கி விரைவில் திருமணம் …

    மக்கட்பேறு இல்லாதவர்கள் ,”கோயில்மூத்த திருப்பதிகம்” படித்தால் குழந்தைபாக்கியம் கிடைக்கும். ..

    திருமணம்., மணிவிழா., புதுமனை புகுவிழா போன்ற நிகழ்ச்சிகள் நடத்தும் அன்பர்கள் தங்கள் இல்லங்களில் முற்றோதல்கள் வைக்கிறார்கள்.

    திருவாடுதுறை ஆதினம் நடத்திய சைவ சித்தாந்த வகுப்பில் தேவாரம் பயின்ற பலரும் திருவாசக முற்றோதல்களில் பங்கேற்கிறார்கள்.

  13. திருவாசகத்தேன் பருக அழைப்பு விடுத்தமைக்கு நன்றி .
    என்னை போல் பலரும் எப்போது சென்னையில் நடைபெறும் என்று எதிர்பார்த்து கொண்டு இருந்த அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வார்கள். நன்றி
    இதை போன்ற அற்புதமான “சிவானுபவம் ” கிடைக்க முர்பிரவியல் புண்ணியம் செய்து இருக்கவேண்டும்.
    சிவன் அருள் வேண்டுபவர்கள் , வினையினால் அல்லல் உருபவர்கள் ( சனிபெயர்சி, ரகு கேது திசை களால் அல்லல் படுபவர்கள்) . திருவாசக முற்றோதல் இல் கலந்து கொண்டால். நல்ல நிவாரணம் பெறலாம்.
    1. சிவபுராணம்
    “பொல்லா வினையன் புகழுமாறு ஒன்றுஹறியான்”

    “வல் வினையன் தன்னை மரைஇந்துதீட மாய இருளை ”

    2. திரு உந்தியார்
    “தொல்லை வினை கெட உந்திபற”

    “சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின் உள்”

    ளார் சிவன் அடிக்கீழ்ப்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து.

    பொருள்:

    சொல்லிய இப்பாடலின் பொருளினை உணர்ந்து சொல்லுபவர்கள்
    சிவபுரத்தில் இருக்கும் சிவபெருமானின் திருவடி நிழலுக்குச் செல்வார்கள்,
    பலராலும் புகழப்பட்டும், தொழப்பட்டும்

    ர .சுரேஷ்பாபு

  14. 15-03-2014ல் சென்னை கோயம்பேட்டில் திருவாசகசித்தரின் முற்றோதுதல் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *