திருவாசகம் முற்றோதலில் கலந்துகொண்டு அதை கேட்பதே ஒரு இனிமையான அனுபவும். அதுவும் சிவனருட் செல்வர் திரு.தாமோதரன் அவர்களின் திருவாசகம் முற்றோதல் என்றால் கேட்கவேண்டுமா? மனதிற்குள் அலட்சியமோ அல்லது வேறு ஏதேனும் எண்ணம் இருப்பவர்களோ ஒரு முறை – ஒரே ஒரு முறை – திரு.தாமோதரன் ஐயா அவர்களின் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் திருவாசகம் பாடுவதை ஒரு அரை மணிநேரம் கவனித்து பாருங்கள். கேட்டுப் பாருங்கள். என்னை விட நீங்கள் அதிகம் அதை பற்றி பேச ஆரம்பித்துவிடுவீர்கள்.
காலை ஊர்வலம் முடித்து வந்து உட்கார்ந்தால் மாலை முடிக்கும் வரை அந்த இடத்தை விட்டு எழுந்திருக்காமல், சாப்பிடாமல், முழுமையாக பாடுவது என்பது சாதாரண மனிதர்களால் இயலக்கூடிய விஷயம் அல்ல. சிவனருள் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். அதுவும் நேரம் செல்ல செல்ல அந்த குரலின் கம்பீரமும் இனிமையும் கூடிக்கொண்டே செல்வதை என்னவென்று விவரிப்பது ?
ஆரம்பத்தில் திருவாசகம் முற்றோதல் என்றால் என்ன என்பது பற்றி எனக்கு தெளிவான ஒரு புரிதல் இல்லை. திருவாசகத்தை முழுமையாக உட்கார்ந்து பாடுவார்கள். என்ன தான் பக்தியிருந்தாலும் ஒரு இரண்டு மணிநேரம் மூன்று மணிநேரம் கேட்கலாம்… ஒரு நாள் முழுக்க உட்கார்ந்து கேட்க முடியுமா? சலிப்பாக இருக்குமே என்றெல்லாம் தோன்றியது.
ஆனால் பழனி அனுபவம் அந்த எண்ணம் எவ்வளவு தவறு என்று புரியவைத்தது. திருவாசகத்தின் பெருமையை அங்குலம் அங்குலமாக உணர்ந்து ரசித்தேன்.
மனிதன் (திருவள்ளுவர்) மனிதர்களுக்குக் கூறியது திருக்குறள். தெய்வம் (கண்ணன்) மனிதனுக்கு (அர்ச்சுனன்) கூறியது கீதை; மனிதன் தெய்வத்திடம் கூறியது திருவாசகம்; ஆம்… மாணிக்கவாசகர் கூற கூற சாட்சாத் அந்த கயிலைநாதனே தன் கைப்பட எழுதியது தான் திருவாசகம். திருவாசகம் இயற்றி முடிக்கப்பட்டதும் மாணிக்கவாசகர் திருச்சிற்றம்பலவாணரின் ஜோதியுள் கலந்து இறைநிலை அடைந்துவிட்டார். அதன்பின் என்ன நடந்தது?
சுமார் 350 ஆண்டுகளுக்குமுன் கர்நாடகப் போர் நடந்தபோது அதில் புகழ் பெற்ற கோவில்கள் மற்றும் கலைப்பொருட்கள் அழிக்கப்பட்டன. இந்த சீரழிவிலிருந்து தப்பிக்க சிதம்பரம் அம்பலத்தாடுவார் சுவாமிகள் மடத்திலிருந்த திருவாசகப் பெட்டகம், நடராசர் திருவுருவச் சிலை, மற்றும் மாணிக்கவாசகர் திருமேனி ஆகியவை புதுவை கொண்டு வரப்பட்டன. அன்று முதல் அங்குள்ள அம்பலத்தாடுவ் ஆர் மடத்தில் முறைப்படி பூஜிக்கப்பட்டு வருகிறது.
“பன்னிரு திருமுறைகளில் திருமந்திரம் சிறப்புடையது. (10-ஆவது திருமுறை). ஆனால், அதைவிட சிறப்புடையதும் சிகரமானதும் திருவாசகமே’ என்று குறிப்பிட்டுள்ளார் வாரியார் சுவாமிகள். அவர் திருவாசகத்தை சிகாமந்திரம் (தலைமை மந்திரம்) என்பார்.
பழனி திருவாசகம் முற்றோதலில் கலந்துகொள்ள நாம் சென்றபோது திருவாசகம் என்பது வெறும் பாடல் அல்ல – அது ஒரு LIFESTYLE MANTRA – சூத்திரம் என்பதை புரிந்துகொண்டோம். ஐயா தாமோதரன் பாடப் பாட அந்த வரிகளுக்கு ஏற்றார் போல ஒருவர் அழகாக அபிநயம் பிடித்து ஆடுவார். பார்க்க கண்கொள்ளா காட்சி அது.
இறுதியில் பெண்கள் பங்குபெறும் கும்மியும் உண்டு. புகைப்படங்களை இணைத்திருக்கிறேன். பாருங்கள். எத்தனை அழகு… எத்தனை நேர்த்தி… புகைப்படங்களை பார்க்கும்போதே உங்களுக்கு நெஞ்சில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியும் பரவசமும் தோன்றுகிறது என்றால் நேரில் அனுபவித்த எனக்கு எப்படி இருந்திருக்கும்? இப்படி கூட ஒரு சந்தோஷம் இருக்குமா வாழ்வில்? இதையெல்லாம் அனுபவிக்காது எது எதையோ இன்பம் என்று நினைத்து ஓடினோமே… இறைவா… என்னை மன்னித்துவிடு…. என்று தான் மனம் தவித்தது.
கும்மியடிக்கும் காட்சியை கண்டவுடன் அதன் முழு அழகையும் உங்களுக்காக காமிராவில் படம் பிடிக்க மாடிக்கு ஓடினேன். அங்கு சென்று டாப் ஆங்கிளில் எடுத்த புகைப்படம் தான் மேலே காண்பது.
ஆட்டிஸம் பாதித்த குழந்தைகள், உடல் குறைபாடுடைய குழந்தைகள், வாழ்வில் அடுத்தடுத்து பிரச்னைகள் என துன்பத்திலேயே உழல்பவர்கள், தொடர்ந்து ஒரு சில முற்றோதலில் கலந்துகொண்டு திருவாசகத் தேன் பருகினால் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்பது உறுதி.
குறிப்பாக குழந்தையை கருவில் சுமக்கும் தாய்மார்கள் அவசியம் முற்றோதலில் கலந்துகொண்டு கேட்கவேண்டும். பிறக்கும் குழந்தை ஆரோக்கியத்துடன் பிறப்பது மட்டுமின்றி சைவ சிந்தனையில் ஊறிய குழந்தையாகவும் பிறக்கும்.
பழனியில் நடைபெற்ற முற்றோதலில் கலந்துகொண்டு திருவாசகத்தின் முழு பரிமாணத்தையும் கண்டு வியந்த போது குறிப்பாக பெண்கள் கும்மியடிக்கும் அந்த காட்சியை பார்த்த பிறகு தளத்தில் இது பற்றி பதிவு செய்து, நம் வாசகர்களில் எவர் இல்லத்திலேனும் கர்ப்பவதிகள் இருந்தால் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளவேண்டும் என்று நினைத்திருந்தேன்.
பழனியை அடுத்து சீர்காழி முற்றோதலிலும் கலந்துகொண்டுவிட்டேன். ஆனால் பதிவெழுத நேரம் கிட்டவில்லை. முழுமையாக அனுபவித்து எழுத வேண்டும் என்பதால் ஒத்திப்போட்டுக்கொண்டே வந்தேன்.
இந்நிலையில், ஓசூரை சேர்ந்த நம் தள வாசகர் திரு.கிரிதரன் என்பவர் (பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிகிறார் இவர்) நம்மை தொடர்பு கொண்டு, நமது தளத்தில் திருவாசகம் முற்றோதல் பற்றி நாம் அடிக்கடி அளித்துவரும் பதிவுகளின் காரணமாக இம்மாத துவக்கத்தில் ஓசூரில் சோமேஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நடைபெற்றபோது தாம் அதில் கலந்துகொண்டதாகவும் அந்த இனிய நாளை தம்மால் மறக்க முடியாது என்றும் கூறினார். மேலும் முற்றோதலின் இறுதியில் எட்டு மாத கர்ப்பிணியான தமது மனைவியும் கலந்துகொண்டதாகவும், ஒரு மணிநேரத்திற்கும் மேல் வயிற்றில் உள்ள சிசுவுடன் அவர் துணைவி திருவாசகத் தேன் பருகியதாகவும் கூறினார்.
நம் தள வாசகர்களின் குடும்பத்தில் உள்ள கர்ப்பவதிகள் திருவாசகத் தேன் பருகினால் நல்லது என்று நாம் பதிவளிக்க எண்ணியிருந்த நேரத்தில் ஒரு வாசகர் அதை செய்துவிட்டதாக நம்மிடம் கூறியபோது நாம் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
அவரது அனுபவத்தை அப்படியே ஒரு மின்னஞ்சலாக அனுப்புமாறு கேட்டுக்கொண்டேன். இதோ அனுப்பியிருக்கிறார். போனசாக ஓசூர் முற்றோதலில் எடுத்த புகைப்படங்கள் சிலவற்றையும் அனுப்பியிருக்கிறார்.
நண்பரின் மின்னஞ்சலில் இருந்த எழுத்துப் பிழைகளை மட்டும் திருத்தி தந்திருக்கிறேன். அவர் உணர்வு உங்களுக்கு சரியாக புரியவேண்டும் என்பதால் அதில் அதிகம் நாம் கைவைக்கவில்லை. அப்படியே விட்டுவிட்டேன்.
================================================
ஓசூரில் நம் வாசகர் திருவாசகத் தேன் பருகிய அனுபவம்
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.
அடியேன் மென்பொருள் பொறியாளர், சற்று ஆன்மிக பற்று உள்ளதால் ஒரு சமயம் இணையத்தில் உலாவும் பொது இறைவன் அருளால் Rightmantra.com பார்க்க நேரிட்டது.
அன்று முதல் இன்றுவரை தினசரி தவறாமல் வாசித்து வருகிறேன். தினம் தினம் பக்திக் கதைகள், நீதிக்கதைகள், சுய முன்னேற்றம், ரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு,etc., அருமை அருமை.
ஒரு நாள் திரு.சுந்தர் திருவாசகம் முற்றோதல் விழாவுக்காக பழநி சென்று வந்தது பற்றி கூறியிருந்தார். மேலும் வேறு எங்கு எங்கு நடக்கும் என்பதை விளக்கும் விதமாக ஒரு நோட்டீஸை ஸ்கேன் செய்து அளித்திருந்தார். அதில் செப்டம்பர் 1 ஓசூர் என்றும் கூறப்பட்டிருந்தது. அதை அடியன் பார்க்க நேரிட்டது. ஆனால் ஓசூரில் எந்த இடம் என்று அந்த அறிவிப்பில் இல்லை. சற்று ஏமாற்றும் அடைந்தாலும் இறைவன் அருளால் எங்கு நடக்கும் என்று தெரிந்துவிடும் என்று காத்திருந்தேன்.
ஒரு பிரதோஷம் அன்று அடியன் எம்பெருமான் ஓசூரில் உள்ள சிவன் கோவில் செல்ல நேரந்துது அங்கு ஓர் அறிவிப்பில் “திருவாசகம் முற்றோதல் விழா” இடம் தெரிந்தது. இனம் புரியாத பரவசம் எனக்குள் ஏற்பட்டது …அன்று முதல் அடியேன் மிகுந்த ஆரவத்துடன் அந்த நாளுக்கு காத்திருந்தேன்.
அந்த நாள் 1-09-2013 காலை 7 மணிக்கு அடியேன் “சோமேஸ்வரர் கோவில் (இங்கு மூலஸ்தானத்தில் மூன்று லிங்கங்கள் உள்ளது இதன் சிறப்பு) “திருவாசகம் முற்றோதல் விழா ” நடக்கும் இடம் சென்று அடைந்தேன். அங்கு இருந்து சற்று தூரத்தில் முதல் கடுவுளன பிள்ளையார் கோவில் இருந்து சிறது நேரத்தில் நடராஜர், பார்வதி அம்மா மற்றும் மாணிக்க வாசகர் உடன் ஊர்வலம் ஆரம்பித்தது …. திரு .தாமோதரன் ஐயா, சிவன் அடியார்கள், பக்தர்கள், நாதஸ்வரம் மற்றும் பல மேளதாளங்கள் முழங்க உடன் ஊர்வலம் சென்று திருவாசகம் முற்றோதல் விழா நடக்கும் இடம் அடைந்தோம்….
காலை 9.30 மணிக்கு “திருவாசகம் முற்றோதல் விழா” திரு .தாமோதரன் ஐயா அவர்களின் கம்பீர காந்த குரலில் ஆரம்பித்தது… இரவு 7.30 மணி வரை “ 51 – திருவாசகம் பதிங்கள் – 656 பாடல்கள் பாடினார் “ சற்றும் ஈர்ப்பு குறையாத திரு.தாமோதரன் ஐயா அவர்களின் காந்த குரலில் “திருவாசகம் முற்றோதல் விழா” நிறைவுபெற்றது. இடை இடையே சிறிது தண்ணீர் மட்டும் பருகினார். அவருடன் இருந்த மற்ற சில ஓதுவார்கள் தேநீர் அருந்தினார்கள். ஆனால் தாமோதரன் ஐயா குடிக்க ஒரு வாய் தண்ணீர் மட்டும் அருந்தியதோடு சரி. முடியம் போது தாமோதரன் ஐயா அவர்களின் குரல் காலை பொழுதை விட கணீரென்று இருந்தது. இதை பார்க்கும் பொது எம்பெருமான் சிவபெருமான் அருள் இல்லாமல் ஆகாது என்று தோன்றியது.
மாலை 5 மணிக்கு அடியேனின் அன்பான துணைவி (8 மாத கர்ப்பணி) அதனால் அதுனுள் உள்ள ஆத்மாவும் நிச்சயம் பயன் பெற்றிருக்கும்) கலந்துகொண்டார்கள் … அனைவரும் திருவாசகம் என்ற அமுதை பருகிக்கொண்டிருந்தோம். இந்த அனுபவம் என் வாழ்நாளில் மிகப்பெரியது…. என் பிறவி பயன் பெற்றது போல் உணர்கிறேன்…..
உங்கள் ஊரில் நடந்தால் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்பது இந்த அடியானின் மனமார்ந்த வேண்டுகோள். அடியார்களின் மத்தியில் இருந்தால் போதும் நல்ல பயன் பெற……
திரு.சுந்தர் அவர்களை வாழ்த்துகிறேன். வாழ்க உங்கள் பணி, வளர்க உங்கள் தொண்டு.
வாழ்க வையகம் வாழ்க நலமுடன். வாழ்க அறமுடன்..வளர்க அருளுடன்.
திருச்சிற்றம்பலம்
அன்பன்,
கிரிதரன் வெங்கடாச்சலம்
ஓசூர்
================================================
தாமோதரன் ஐயாவின் திருவாசகம் முற்றோதல் சென்னையில் நடைபெற்றால் கலந்துகொள்ள வசதியாக இருக்கும் என்று நம் வாசகர்கள் பலர் கருத்து தெரிவித்திருந்தனர். இதோ…சென்னையில் வரும் அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி) அன்று அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி எதிரே உள்ள மங்களாம்பிகை சமேத மங்களீஸ்வரர் திருக்கோவிலில் முற்றோதல் நடைபெறவுள்ளது. கலந்துகொண்டு திருவாசகத் தேன் பருகி எல்லாம் வல்ல சிவபெருமானின் அருளை பெறுவீர்களாக.
================================================
வேண்டுகோள் – கிரிவலம் செல்வோர் கவனத்திற்கு : இன்று திருவண்ணாமலை நம் தளம் சார்பாக அச்சிடப்பட்ட ஆண்டுவிழா & தினசரி பிரார்த்தனை நோட்டீஸ், இன்று கிரிவலத்தையொட்டி திருவண்ணாமலையில் விநியோகிக்க ஏற்பாடாகியுள்ளது. அதை இங்கு நம்மிடம் பெற்றுக்கொண்டு, திருவண்ணாமலையில் உள்ள நண்பர் ஒருவரிடம் சேர்ப்பிக்கவேண்டும். அவர் அதை பக்தர்களிடம் விநியோகிப்பார். இன்று கிரிவலம் செல்லும் நம் வாசகர்கள் எவரேனும் அந்த நோட்டீஸை திருவண்ணாமலை எடுத்து செல்லவேண்டும். இதில் உதவ விரும்புகிறவர் உடனடியாக நம்மை தொடர்புகொள்ளவும். நன்றி. சுந்தர் 9840169215
================================================
உண்மையான பிரார்த்தனைக்கு வலிமை அதிகம் . அனுபவத்தினை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி … சார்.
திருச்சிற்றம்பலம்
நமசிவாய வாழ்க
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
இன்றைய நாள் உற்சாகமும், உத்வேகமும்
தரும் நாளாக உங்களுக்கு அமையட்டும்..
யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் …
சென்னை வாசகர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்பது இந்த அடியானின் மனமார்ந்த வேண்டுகோள்.கலந்துகொண்டு திருவாசகத் தேன் பருகி எல்லாம் வல்ல சிவபெருமானின் அருளை பெறுவீர்களாக.
இந்த அறிவிபக்கு நண்பர் சுந்தர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல மற்றும் வாழ்த்துக்கள்
வாழ்க வளர்க உங்கள் பணி.. வளர்க உங்கள் தொண்டு…
வாழ்க வையகம் வாழ்க நலமுடன்
வாழ்க அறமுடன்..வளர்க அருளுடன்..
திருச்சிற்றம்பலம்
நமசிவாய வாழ்க
முற்றோதல் பதிவு எப்போது போட்டாலும் என் கண்களும் சிந்தையும் திரையை விட்டு அகலாது.
சென்னையில் முற்றோதல் விழா தகவல் கொடுத்த உங்களுக்கு கோடி நன்றிகள்.
முழுமையான மங்களீஸ்வரர் திருக்கோவிலில் முகவரி கொடுக்க முடியுமா சுந்தர் , அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி தெரியும் ஆனால் இந்த கோவில் பற்றி தெரியவில்லை , உதவுங்கள்
திருவாசகத்தேன் பருக அழைப்பு விடுத்தமைக்கு நன்றி .
என்னை போல் பலரும், எப்போது சென்னையில் நடைபெறும் என்று எதிர்பார்த்து கொண்டு இருந்த அனைவரும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வார்கள். நன்றி
இதை போன்ற அற்புதமான “சிவானுபவம் ” கிடைக்க முற்பிறவிஇல் புண்ணியம் செய்து இருக்கவேண்டும்.
‘ வினையினால்’ அல்லல் உருபவர்கள்
( சனிபெயர்சி, ரகு, கேது திசைகளால் அல்லல்படுபவர்கள் ) . திருவாசக முற்றோதல் இல் கலந்து கொண்டால்.சிவன் அருள்ளால் நல்ல நிவாரணம் பெறலாம்.
1. சிவபுராணம்
“பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன்”
“வல்வினையேன் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை”
2. திரு உந்தியார்
“தொல்லை வினை கெட உந்திபற”
“சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்”
ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.
பொருள்:
சொல்லிய இப்பாடலின் பொருளினை உணர்ந்து சொல்லுபவர்கள்
சிவபுரத்தில் இருக்கும் சிவபெருமானின் திருவடி நிழலுக்குச் செல்வார்கள்,
பலராலும் புகழப்பட்டும், தொழப்பட்டும்
ர .சுரேஷ்பாபு
அருமையான அனுபவம்
பதிவை படிக்கையில் ஒரு முறையாவது அந்த அமிர்தத்தை பருகும் வாய்ப்பு நமக்கு கிட்டாதா என்று மனம் ஏங்கி தவிக்கிறது
மற்றொருமுறை நிச்சயம் இந்தியா வந்தால் தேனை தேடிசெல்லும் எறும்பு போல வாய்ப்பு கிடைக்கையில் அதனை கண்டிப்பாக பயன்படுத்திகொள்வேன்
எல்லாம் வல்ல இறைவன் அதற்கு அருள்புரிந்து காத்து ரக்ஷிப்பாராக !!!