Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, September 12, 2024
Please specify the group
Home > Featured > நற்பலன்களை வாரி வழங்கும் பித்ருக்களுக்குரிய மஹாளய புண்ணிய காலம் – மஹாளய SPL 1

நற்பலன்களை வாரி வழங்கும் பித்ருக்களுக்குரிய மஹாளய புண்ணிய காலம் – மஹாளய SPL 1

print
ந்த வாழ்வில் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் யாவும் நமது முற்பிறப்பு பாப புண்ணியத்துக்கு ஏற்பவே அமையும். நம்பினாலும் நம்பாவிட்டாலும் உண்மை இதுவே. அப்படி நமக்கு கிடைக்கவேண்டிய நற்பலன்களை சரியாக பெற்றுத்தருவதில் பித்ருக்கள் எனப்படும் நம் முன்னோர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். இந்த வாழ்வில் நாம் அவசியம் செய்ய வேண்டிய கடமைகளுள் பிதுர் காரியங்களும் ஒன்று. பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமையை செய்ய தவறினால் அவர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும். சுபகாரியத் தடை, மகப்பேறின்மை, தொடரும் விபத்துக்கள், தீராத நோய் இவற்றுக்கெல்லாம் பித்ரு தோஷமும் ஒரு முக்கிய காரணமாகும். மேற்படி துர்பலன்களால் அவதிப்படுவோர்களுக்கு அருமருந்தாக அமைந்திருப்பது தான் இந்த மஹாளய புண்ணிய காலம்.

வரும் செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 4 வரை மஹாளய காலமாகும். இந்த காலகட்டம் பித்ருக்களுக்கு உரிய காலமாகும். பித்ரு தோஷத்தினால் அவதிப்படுபவர்கள் இந்த காலகட்டத்தை அவசியம் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

உங்கள் அனைவருக்கும் பயன்படும் விதமாக நமது தளத்தில் அடுத்தடுத்து மஹாளய சிறப்பு பதிவுகள் வரவிருக்கின்றன. இந்த மகாளய காலகட்டத்தில் என்னென்ன செய்யவேண்டும், எப்படி செய்யவேண்டும், இந்த காலகட்டத்தை பயன்படுத்திக்கொண்டு பித்ருக்களை சாந்தி செய்வது எப்படி உள்ளிட்ட தகவல்கள் இடம்பெறவிருக்கின்றன.

இந்த தகவல்களை உங்கள் சுற்றத்துடனும் நட்பு வட்டங்களுடனும் பகிர்ந்துகொண்டு அவர்களும் பலன் பெற உதவுங்கள்.

சென்ற ஆண்டு இதே நேரம் மகாளய அமாவசையையோட்டி நமது தளத்தில் சிறப்பு பதிவுகள் வெளியிடப்பட்டது நினைவிருக்கலாம். (இறுதியில் அந்த பதிவுகளின் முகவரியை தந்திருக்கிறேன்.)

==========================================================

பொள்ளாச்சியை சேர்ந்த ஸ்ரீ அருணாச்சல அக்ஷர மணமாலை சேவை மையத்தின் நிறுவனர் நண்பர் பாலசுப்ரமணியம் அவர்களை உங்களுக்கு நினைவிருக்கலாம்.  (http://rightmantra.com/?p=5965)

இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, மஹாளயம் பற்றி பேச்சு எழுந்தது. சென்ற ஆண்டு நாம் மஹாளயத்தை முன்னிட்டு அளித்த சிறப்பு பதிவுகளை பற்றி கூறி, இந்த ஆண்டும் நம் வாசகர்களுக்கு அதே போல உபயோகமாக ஏதாவது பதிவளிக்க எண்ணியிருப்பதாக கூறினேன். அப்போது அவர் மஹாளயத்தின் சிறப்புக்களை பற்றிய சில பத்திரிகை செய்திகளை நமக்கு நகலெடுத்து கூரியர் அனுப்புவதாகவும் அதை தளத்தில் வெளியிடுமாறும் கேட்டுக்கொண்டார். இதையடுத்து எனது முகவரியை அவருக்கு அனுப்பியிருந்தேன். சொன்னபடி அடுத்த நாளே நமக்கு சில பத்திரிகை நகல்களை அனுப்பியிருந்தார். கிடைப்பதற்கரிய அந்த பொக்கிஷங்கள் நம்மை தேடி வந்தது ரமணரின் நல்லாசியே என்றால் மிகையாகாது.

இன்றைய கரூர் பயணத்தின் போது எதற்கும் இருக்கட்டுமே என்று அந்த கட்டிங்குகளை எடுத்துக்கொண்டேன். இங்கு கரூர் வந்தவுடன், முதல் வேலையாக பேருந்து நிலையம் அருகே ஒரு பிரவுசிங் சென்டரில் அதை கொடுத்து தட்டச்சு செய்து வைக்கும் படியும், மதியம் வருவதாகவும் கூறிவிட்டு சென்றுவிட்டேன்.

சொன்னது போலவே, சில வேலைகளை முடித்துக்கொண்டு, நெரூர் செல்வதற்காக பேருந்து நிலையம் வந்தேன்.அதற்குள் இங்கு நாம் டைப் செய்ய கொடுத்திருந்ததில் ஒரு கட்டுரை தயாராக இருந்தது. அதில் முதல் கட்டுரையை இங்கு அளிக்கிறேன்.

மற்ற கட்டுரைகள் + நமது நென்மேலி அனுபவம் (புகைப்படத்துடன்) ஒவ்வொன்றாக மஹாளய ஸ்பெஷலாக அளிக்கப்படும். மகத்தான சேவைக்கு நம்மை ஆளாக்கிய நண்பர் பாலசுப்ரமணியம் அவர்களுக்கு என் நன்றிகள்.

மஹாளய வழிபாடு தொடர்பாக நம் வாசகர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் எழுந்தாலோ அல்லது ஏதேனும் வழிகாட்டுதல் தேவையென்றாலும் நம்மை தயங்காது தொடர்புகொள்ளவும்.  உங்களுக்காக உதவ காத்திருக்கிறோம்.

==========================================================

மகத்தான பலன் தரும் மஹாளயம்!

மனிதர்கள் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து என வலியுறுத்துகிறது இந்து மதம். அவை பிதுர்யக்ஞம், தேவயக்ஞம், பூதயக்ஞம் (பசு, காக்கைக்கு உணவு அளிப்பது) மனித யக்ஞம் (சுற்றத்தார், பிச்சைக்காரர்கள், துறவிகள் ஆகியோர

மனிதர்கள் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து என வலியுறுத்துகிறது இந்து மதம். அவை பிதுர்யக்ஞம், தேவயக்ஞம், பூதயக்ஞம் (பசு, காக்கைக்கு உணவு அளிப்பது) மனித யக்ஞம் (சுற்றத்தார், பிச்சைக்காரர்கள், துறவிகள் ஆகியோருக்கு உணவு அளிப்பது), வேத சாஸ்திரங்களைப் பயில்வது ஆகியவை. இவற்றுள் பிதுர் யக்ஞம் மிகவும் புனிதமானது எனக் கருதி முன்னோர் அதனைக் கடைபிடித்து வந்ததுடன் நம்மையும் மேற்கொள்ள அறிவுறுத்தினர். தென்புலத்தார் வழிபாடு என இதன் சிறப்பை வள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.

“தென்புலத்தார் தெய்வம் விருந்துஒக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை”

என்று இல்லறத்தானின் கடமையாக வலியுறுத்தியுள்ளார்.

இறை விருப்பப்படி மானிடருக்கு ஆசி கூறி நல்வாழ்வுக்கு வழிகாட்டும் அதிகாரம் படைத்தவர்கள் தேவர்களும், பித்ருக்களும்!

பித்ருக்களின் ஆராதனைக்கு மஹாளயம் என்று பெயர். பொதுவாக புரட்டாசி மாதம், தேய்பிறை பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள பதினைந்து திதிகளே (நாட்களே) மஹாளய பட்சமாகும். நமக்கு இந்த உடலைக் கொடுத்தவர்கள் தாய், தந்தையர். நம்மை ஆளாக்க, தாங்கள் அனுபவித்த கஷ்டங்களைப் பொருட்படுத்தாமல் நற்கதி அடைந்த அவர்களுக்கும், முன்னோர்களுக்கும் வருடத்தில் 365 நாட்களும் செய்ய வேண்டிய தர்ப்பணங்களை சரிவரச் செய்யாததற்கான பிராயச்சித்தமாகவும் மஹாளயபட்ச தர்ப்பண முறை உள்ளது.

இந்த மஹாளயபட்ச தினங்களாகிய பதினைந்து நாட்களிலும் பித்ரு தேவதைகள் எம தர்மனிடம் விடைபெற்றுக்கொண்டு தங்கள் குடும்பத்தினருடன் தங்கி விடுவர் என்பர். எனவேதான் இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ (திதி) அல்லது எள்ளும் தண்ணீருமாகவோ (தர்ப்பணம்) அளிக்க வேண்டும் என்றார்கள்.

அவர்களும் அதன் மூலம் திருப்தியடைந்து, நமக்கு அருளாசி வழங்குகின்றனர். நோயற்ற வாழ்வினை வழங்குகிறார்கள். தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் (திதி) செய்யாதவர்கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம் செய்ய வேண்டும். தகுந்த நபர்களை வைத்துக் கொண்டு முறைப்படி செய்ய முடியாதவர்கள், அரிசி, வாழைக்காய், தட்சிணை போன்றவற்றைக் கொடுத்தாவது பித்ருக்களை இந்த மஹாளயபட்சத்தில் திருப்தி செய்ய வேண்டும்.

சிறுகச் செய்தாலும், பித்ரு காரியங்களை மனப்பூர்வமாக சிரத்தையாகச் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். வசிஷ்ட மகரிஷி, தசரதர், யயாதி, துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், கார்த்தவீர்யார்சுனன், ஸ்ரீராமர், தர்மர் முதலானோர் மஹாளயம் செய்து பெரும் பேறு பெற்றனர் என்கின்றன புராணங்கள். மும்மூர்த்தி உருவில் உலகுக்கே குருவாக வந்த ஸ்ரீதத்தாத்ரேயரும் வேதாளம் பற்றிக்கொண்ட துராசாரன் என்ற அந்தணனுக்கு சாப விமோசனமாக புரட்டாசி மாதம், கிருஷ்ண பட்சத்தில் மஹாளயம் செய்யுமாறு வழிகூறினார்.

மஹா-கல்யாணம், ஆலயம் -இருப்பிடம் என்ற பொருளில் கல்யாணத்திற்கு இருப்பிடமாயிருப்பதால் மஹாளயம் என்று பெயர் வந்ததாகவும் கருதலாம். திருமணப் பிராப்தி அதாவது கல்யாணத்தை விரும்புகிற மனிதன் மஹாளயம் செய்ய வேண்டும். “மஹாளயம் செய்யாதவனுக்கு மங்களம் உண்டாகாது” என்பது பழமொழி.

இனம்புரியாத நோய்கள், உடற்குறையுடன் பிறக்கும் குழந்தைகள், குடும்பத்தில் தள்ளிப் போகும் திருமணங்கள், செய்யும் காரியங்களில் தடைகள் – குழப்பம், பெற்றோர்களை அவர்கள் வாழ்நாளில் சரிவர கவனிக்காமை போன்ற குறைகளுக்கு ஒரு சிறந்த, எளிய பரிகாரம் இந்த மஹாளய பட்ச நாட்களில் பித்ரு தேவதைகளை பூஜை செய்வதுதான். இந்த பித்ரு பூஜையை ஆறு, நதிக்கரைகளிலோ, குளக் கரைகளிலோ, முடியாவிட்டால் இல்லத்தில் இருந்தபடியோ செய்யலாம்.

இவ்வருடம் வருகிற செப்.20 ஆம் தேதி மஹாளய பட்சம் ஆரம்பம். அக்டோபர் 4 மஹாளய அமாவாசை. இந்த தருணத்தில் நீத்தார் கடனை நீக்கமற செய்வோம். நீங்காத பேறு பெறுவோம்.

மஹாளய பட்ச தர்ப்பண பலன்கள்!

பிரதமை : செல்வம் பெருகும் (தனலாபம்)

துவிதியை : வாரிசு வளர்ச்சி (வம்ச விருத்தி)

திருதியை : திருப்திகரமான இல்வாழ்க்கை (வரன்) அமையும்

சதுர்த்தி : பகை விலகும் (எதிரிகள் தொல்லை நீங்கும்)

பஞ்சமி : விரும்பிய பொருள் சேரும் (ஸம்பத்து விருத்தி)

சஷ்டி : தெய்வீகத் தன்மை ஓங்கும் (மற்றவர் மதிப்பர்)

சப்தமி : மேலுலகோர் ஆசி

அஷ்டமி : நல்லறிவு வளரும்

நவமி : ஏழுபிறவிக்கும் நல்ல வாழ்க்கைத் துணை

தசமி : தடைகள் நீங்கி விருப்பங்கள் நிறைவேறும்

ஏகாதசி : வேதவித்யை, கல்வி, கலைகளில் சிறக்கலாம்

துவாதசி : தங்கம், வைர ஆபரணங்கள் சேரும்

திரியோதசி : நல்ல குழந்தைகள், கால்நடைச் செல்வம், நீண்ட ஆயுள் கிட்டும்

சதுர்த்தசி : முழுமையான இல்லறம் (கணவன் – மனைவி ஒற்றுமை)

அமாவாசை : மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசி கிட்டும்

நன்றி : எஸ். வெங்கட்ராமன், தினமணி | ஆதாரம்: யஜூர் வேத ஆபஸ்தம்ப தர்ப்பணம்

==========================================================

Also check  (from our archives):

மஹாளய அமாவாசையும் நமது ஏழு தலைமுறையும் – அரிதினும் அரிய உண்மைகள்!

கண்களை குளிரவைத்த வேதபுரீஸ்வரர் & உள்ளத்தை குளிர வைத்த பசுக்கள்! மஹாளய அனுபவம்!!

==========================================================

 

 

12 thoughts on “நற்பலன்களை வாரி வழங்கும் பித்ருக்களுக்குரிய மஹாளய புண்ணிய காலம் – மஹாளய SPL 1

  1. ஐயா,

    நானும் எவ்ளோவோ பிரார்த்தனை செய்து பார்த்தும் விட்டேன் கோவில்களுக்கும் சென்று பார்த்துவிட்டேன் ஆனால் எதுவும் நடக்கமாட்டேன் என்கிறது.

    1. கீழ்கண்ட பிரார்த்தனை பதிவுகளில் உள்ள கதைகளை படித்து பாருங்கள். நிச்சயம் உங்கள் எண்ணங்களில் ஏதேனும் மாற்றம் ஏற்படும். அதுவும் முதலில் அளித்துள்ள லிங்கில் உள்ள கதையை அவசியம் படிக்கவும்.

      http://rightmantra.com/?p=4499

      http://rightmantra.com/?p=4209

      http://rightmantra.com/?p=6095

      http://rightmantra.com/?p=5981

  2. ஈழத்தில் உறவுகளை இழந்தவர்கள் நிச்சமாக இந்த கடமை செய்தே ஆகவேண்டும் .

    உங்கள் பதிவு உலக தமிழரர்களுக்கும் பலன் அளிக்கும்.

    வாழ்க வளமுடன்.

  3. கரூர் நெரூர் என்றால் சதாசிவ ப்ரம்மனந்தாள் அதிஷ்டான விஜயமா ? கொடுத்துவைத்த்தவர் நீங்கள் . நானும் முயற்சிக்கிறேன் முடியவில்லை

    1. நண்பர் சம்பத் குமார் அவர்களின் புண்ணியத்தில் சதாசிவ பிரம்மேந்திராள் அதிஷ்டானத்தை நேற்றைக்கு மாலை தரிசித்தாயிற்று. என்ன சொல்ல… ஆத்மானுபவம்…!

      – சுந்தர்

  4. சுந்தர் சார்,என்னுடைய தகப்பனார் அவர்களுடைய முன்னோர்களுக்கு திதி ஏதும் கொடுக்கவில்லை ஆனால் நான் அவர்களுக்காக திதி கொடுக்க விரும்பினால் என் தகப்பனாருடைய முன்னோர்களுக்கு திதி கொடுக்கவேண்டுமா?அல்லது தாயாருடைய முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டுமா?ஏதாவது சிம்பிளா இருந்தா தயவு செய்து சொல்லுங்களேன்..

    1. நீங்கள் இருவழி முன்னோர்களுக்கும் திதி கொடுக்கலாம். தவறு இல்லை. உங்களை போன்றவர்களுக்கு உதவுவதற்காகத் தான் இந்த மஹாளயம் வந்துள்ளது. நாம் கூறப்போகும் வழிமுறைகள் பின்பற்றி கூடவே சௌகரியப்படும் என்றால் நென்மேலியில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோவிலில் திதி கொடுக்கலாம். http://rightmantra.com/?p=1998

      – சுந்தர்

  5. Hearty thanks for your valuable article.. We will get peaceful and meaningful life by this site..
    I am thinking like this is not only a site but also it is one of my family member.. It is my soul mate..

  6. சுந்தர் சார்,

    சிரார்த்தம் , தர்ப்பணம் இரண்டிற்கும் உலா வேறுபாடு என்ன என்று தெளிவு படுத்தவும் …

    1. இது குறித்து நம் வாசகி உஷா அவர்கள் http://rightmantra.com/?p=5919 என்ற பதிவில் கமெண்ட் பகுதியில் மிக தெளிவாக விளக்கியிருக்கிறார். இருப்பினும் உங்களுக்காக இங்கே மற்றோர் முறை சற்று விரிவாக சொல்கிறேன்.

      சிரார்த்தம், திவசம் என்றால் காலம் சென்ற முன்னோர்களின் நினைவு நாளன்று (திதி) அவர்களுக்கு பிரியமான உணவு, உடைகளைப் படைத்து வணங்கிப் பின்னர் அதனை ஏழைகளுக்கு தானமாக வழங்குதல் ஆகும்.

      ஆனால் தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு முறையான தர்ப்பண மந்திரங்களைச் சொல்லி வார்த்து பித்ருக்களை திருப்தி செய்தல் என்று பொருள்.

      தர்ப்பணம் செய்ய அந்த வேத மந்திரங்கள் தெரிந்த வேதியர் தான் வேண்டும் என்பதில்லை செய்பவர்களுக்கு அந்த மந்திரங்கள் மற்றும் வழிமுறைகள் தெரிந்திருந்தால் போதும்.

      சிரார்த்தம் செய்விக்க உபாத்தியார் ஒருவரும் அன்னமிட தகுந்த நபர்களும் தேவை. சிரார்த்தத்தில் குறிப்பிடத் காய்கறிகள் மட்டுமே சேர்க்கவேண்டும்.

      – சுந்தர்

      1. நன்றி சுந்தர் சார் , எனது நீண்ட கால சந்தேகத்தை தெளிவுபடுத்தியதற்கு .

  7. பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *