“எனக்குள் ஒரு மிகப் பெரிய போராட்டம் நடந்துகிட்டுருக்கு செல்லம்”
“என்ன தாத்தா அது?”
“இரண்டு ஓநாய்களுக்கிடையேயான கடும் சண்டை அது.”
“என்னது ஓநாயா?”
“ஆமாம்… ஒரு ஓநாய் அசிங்கமாகவும் கொடூரமாகவும் இருக்கிறது. அதனிடம் காமம், கோபம், பொறாமை, சுயபச்சாதாபம், ஏமாற்றம், தாழ்வுமனப்பான்மை, தற்பெருமை, ஆணவம், சுயநலம் போன்ற அருவருக்கத்தக்க குணங்கள் இருக்கிறது!!!”
“ஆனால் இன்னொரு ஓநாய் அமைதியாகவும் அழகாகவும் இருக்கிறது. அது அனைவருடனும் நட்போடு இருக்கிறது. ஒவ்வொரு கணமும் நம்பிக்கையுடன் இருக்கிறது. நல்லதையே நினைக்கிறது. அடக்கத்துடன் வாழ்வை எதிர்நோக்குகிறது. நன்றி, கருணை, துணிவு, நம்பிக்கை, விடாமுயற்சி போன்ற அருங்குணங்களை கொண்டு வாழ்கிறது.”
“இந்த இரண்டு ஒநாய்களுக்கிடையே சண்டை நடக்கிறது. இந்த ஓநாய் சண்டை என்னிடம் மட்டுமல்ல ஒவ்வொரு மனிதனின் மூளையிலும் அவ்வப்போது நடந்துகொண்டுதானிருக்கிறது…….”
(இதைத் தான் கவியரசர் கண்ணதாசன் ‘பாதி மனதை தெய்வம் இருந்து பார்த்துக்கொண்டதடா… மீதி மனதை மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா’ என்று எழுதினார்.)
“அப்போ… தாத்தா, ரெண்டுல எந்த ஓநாய் ஜெயிக்கும்?” பேரன் ஆவல் அடங்காமல் கேட்க…. தாத்தா புன்னகைத்தபடி பதில் சொல்கிறார்…. “நீ எதற்கு அதிகம் தீனி போடுகிறாயோ அது!”
நல்லதுக்கும் தீயதுக்கும் நம் மனதில் நடக்கும் போராட்டத்தில் ஏதாவது ஒன்று வெற்றி பெறுவது இப்படித் தான். தீய எண்ணங்களும் தீய குணங்களும் அந்த கெட்ட ஓநாய் போன்றது.
அதை ஒருபோதும் நம் மனதை ஆக்ரமிக்க அனுமதிக்கவே கூடாது. தீய எண்ணங்களை நினைக்க நினைக்க அந்த கெட்ட ஓநாய்க்கு நாம் தீனி போடுவது போல. நீங்கள் தீனி அதிகம் போட போட அதற்க்கு அசுர பலம் வந்துவிடும். பிறகு அதன் போக்கில் நாம் செல்லவேண்டியிருக்கும். அதன் போக்கில் நாம் சென்று விட்டால், அது விழுந்து எழுந்திருக்கும் இடங்களில் நாமும் விழுந்து எழ வேண்டியிருக்கும்.
அதே சமயம், நல்ல எண்ணங்களும் நல்ல சொற்களும் என்றுமே நம்மை சரியான பாதைக்கே அழைத்து செல்லும். எனவே எப்போதும் நல்லதையே நினைத்தபடி இருக்கவேண்டும். அவை மனதிற்கு மிகப் பெரிய பலத்தை தருவதுடன் நம்மை நல்லவற்றை நோக்கி இழுத்து செல்லும்.உங்கள் மனதில் சண்டையிடும் ஓநாய்களில் எந்த ஓநாய்க்கு தீனி போட்டு ஜெயிக்க வைப்பது என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்!
(நேற்று பிள்ளையார் சதுர்த்தி விடுமுறை நாள் என்பதால் MONDAY MORNING SPL இன்று அளிக்கப்படுகிறது!)
=====================================
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….
http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
=====================================
வெற்றியின் திறவுகோல் நல்லெண்ணமாகும்.!
நல்ல எண்ணங்களை விதைத்து , நல்லவற்றை அறுவடை செய்வோம்.!!
நமக்கு நல்லதே நடக்கும். .!
யார் ஒருவர் எப்போதும் தீமையைப் பற்றியே பேசுகிறாரோ,
அவரைத் தேடி தீமையே வரும். .!!!
பொறாமை என்பது கொடிய நோய்யை விடக் கொடியது – நல்லதை செய்தால்
நன்மை கிடைக்கும்.
அதேபோல் நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும்..!!
இதுதான் இயற்கையின் நியதி…. .!!
வெற்றியின் திறவுகோல் நல்லெண்ணமாகும்..!
நல்லதே நினைப்போம்… நல்லதே நடக்கும்…!!
சுவையான கதையுடன் அருமையான விளக்கம் .
morning spl recharge done
-மனோகர்
சுந்தர் சார்,
monday morning spl தவறி மறுநாள் வந்தாலும் அதன் சிறப்பு மாறாது. நல்ல பொருள் அடக்கம்,
நன்றியுடன் அருண்.
இனிய காலை வணக்கம் சார்
சுவையான கதையுடன் அருமையான விளக்கம் சார்
நன்றி
“/// ஒரு ஓநாய் அசிங்கமாகவும் கொடூரமாகவும் இருக்கிறது. அதனிடம் காமம், கோபம், பொறாமை, சுயபச்சாதாபம், ஏமாற்றம், தாழ்வுமனப்பான்மை, தற்பெருமை, ஆணவம், சுயநலம் போன்ற அருவருக்கத்தக்க குணங்கள் இருக்கிறது!!!”
“ஆனால் இன்னொரு ஓநாய் அமைதியாகவும் அழகாகவும் இருக்கிறது. அது அனைவருடனும் நட்போடு இருக்கிறது. ஒவ்வொரு கணமும் நம்பிக்கையுடன் இருக்கிறது. நல்லதையே நினைக்கிறது. அடக்கத்துடன் வாழ்வை எதிர்நோக்குகிறது. நன்றி, கருணை, துணிவு, நம்பிக்கை, விடாமுயற்சி போன்ற அருங்குணங்களை கொண்டு வாழ்கிறது.”////
ஆனால் சுந்தர் சார், இந்த உலகத்தில் நீங்கள் கூறிய கெட்ட குணங்களுடன் உள்ள ஓநாய்கள்தான் அதிகம். அதற்க்கான வாய்ப்பும் இந்த உலகில் அதிகம் கொட்டி கிடக்கிறது ..
அமைதியாகவும் அழகாகவும் அனைவருடனும் நட்போடு ஒவ்வொரு கணமும் நம்பிக்கையுடன் இருக்கும் ஓநாய்கள் மிக குறைவு …ஆனால் இப்படிப்பட்ட ஓநாய்கள் அந்த சுயநலம் பிடித்த ஓநாய்களிடமிருந்து தப்பி சந்தோசமாக வாழ்வது என்பது பெரிய போராட்டமாகவே உள்ளது …இத படத்தில் காட்டியுள்ளது போல …
நீங்கள் சாலையோரங்களில் பார்த்திருக்கலாம் ஒரு நாயை பல நாய்கள் சேர்ந்து கடிப்பதை. ஆனால் ஆளுக்கு ஒரு நாய் என சண்டை இடுவதில்லை ..
இப்படித்தான் ஒரு வெறிபிடித்த நாய்க்கு துணையாக பல வெறிபிடித்த நாய்கள் சேர்ந்து விடுகிறது (இனம் இனத்தோடல்வா சேரும்)…
நல்ல ஓநாய்கள் அந்த வெறிபிடித்த ஓநாய்க்கு மண்டியிட்டு செல்லவேண்டிய சூழ்நிலை உள்ளதை என்னால் மறுக்க முடியாது ….அப்படிப்பட்ட வெறிபிடித்த நாய்களுக்கு தன் உரிமையை விட்டுக் கொடுத்து சென்றால் மட்டுமே இந்த அப்பாவி ஓநாய்கள் உயிர் வாழ முடியும்.. என்ன செய்வது இதுவும் ஒரு இறைவனின் திருவிளையாடல் தானே ..
நாய் நம்மை கடித்துவிட்டால் நாம் நாயை திருப்பி கடிப்பதில் என்ன பயன் ..
கருத்து :-தீய எண்ணங்களும் தீய குணங்களும் அந்த கெட்ட ஓநாய் போன்றது. அதை ஒருபோதும் நம் மனதை ஆக்ரமிக்க அனுமதிக்கவே கூடாது. -(துஷ்டரை கண்டால் தூர விலகு) அருமையான கருத்துக்களுக்கு நன்றிகள் ..
ஆழமுள்ள கருத்து. எண்ணம் போல் வாழ்வு.
உண்மை என்னவென்றால் எதைப் படித்தும் யாரும் திருந்த மாட்டார்கள். மனிதர்களில் பெரும்பான்மையோர் சுயநலம் மிக்கவர்கள். அப்படி உண்மையில் திருந்தி இருந்தால், ஏன் இவ்வளவு கலகம்? திருட்டு, பொய், கொள்ளை, கொலை, பித்தலாட்டம்? ரொம்ப கேட்டால், தனிப்பட்ட மனிதர் திருந்தினால் இந்த உலகம் மாறும் என்பார்கள். ஆனால் இத்தனைக் காலத்தில் எத்தனை சதவீதம் பேர் மாறியிருக்கிறார்கள்? எத்தனை சட்டங்கள்? என்ன நடந்தது? மாற வேண்டியது நமது “கல்வி” முறை. எந்த கல்வியாவது நம்முடைய குழந்தைகளுக்கு “நல்லறிவை” போதிக்கிறதா? பிறருக்கு உதவுவது பற்றி விதைக்கிறதா? சமூக ஒற்றுமைக்கு என்ன செய்துள்ளது? நீங்கள் உதவுவது நல்ல பணி. ஆனால், அந்த விதைகள் நல்ல ஆல மரமாகிறதா? நாட்டிற்கு பயன் தரும் மனிதர்களாக மாறுகிறார்களா? என யார் உறுதிப்படுத்துவது? ஒருவரே, பல விஷயங்கள் செய்ய இயலாது. ஆனால் பலர் உருவானால் நம் நாடு சுபிட்சமடையும். அதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை எல்லோருக்கும் உண்டு.
சுந்தர்ஜி
நல்ல ஓநாயை போல் நல்ல எண்ணங்களை அதிகம் வளர்த்துகொள்வது என்பது இன்றைய வாழ்வில் கடினம்தான். ஆனாலும் நம் தளம் போல் ஆன்மிகத் துணை இருந்தால் ஓரளவு வளர்த்துகொள்ளலாம். பாதி மிருகம் + பாதி தெய்வம் = மனிதன் என்பது மறுக்க முடியாத உண்மை. மீதி தெய்வத்தை காணுதலில் தான் வாழ்வின் வெற்றி உள்ளது. நம் மனதை பற்றிய அழகான பதிவு. நன்றி
வணக்கம் சார்
லேட்டா வந்தாலும் லேடஸ்ட வருவேன் என்பது மாதிரி ஒரு நல்ல கருத்துடன் வந்துள்ளது.
மனித மனதை ஓநாய் கதை மூலம் நல்ல மனம் என்று சொல்லப்பட்டுள்ளது.
நாணயத்திற்கு இரு பக்கம் போல நம் மனதிற்கும் உண்டு தானே.
எல்லா சமயத்திலும் நாம் இழுத்த இழுப்புக்கு வருமா? என்னதான் பக்குவமாக எடுத்து சொன்னாலும் கேட்க வேண்டுமே?
நீங்க சொன்ன அத்தனை குணங்களுக்கும் நடுவில் நாம் நம் நல்ல குணங்குளுடன் போராட வேண்டித்தான் உள்ளது.
ஆனால் நம் நல்ல குணங்களுடன் போராட போராட இறுதியில் நம் பேச்சை நம் மனம் கேட்குமாறு ஆகிவிடும். நம் நல்ல மனம் ஜெயிக்கும்.
Fact Fact Fact,
New morning New Hope
Thank you sir..
ஒவ்வொரு மனதனுக்குள்ளும் ஒரு மிருகம் இருந்து நம்மை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது – சந்தர்ப்பம் கிடைக்கையில் அது எல்லா தடைகளையும் தகர்த்தெறிந்து நம்மையும் நமது நிம்மதியையும் விழுங்கி விஸ்வரூபம் எடுக்கும் – நம்மில் அதன் ஆதிக்கம் ஒரு சில வினாடிகளே என்றாலும் அதன் விளைவு சில நேரங்களில் பல ஆண்டுகள் கூட நம்மை தாக்கி நமது தூக்கத்தை தூக்கி எரியும் – இந்த மிருகத்தை அடக்கிட ஒரே வழி நல்ல சிந்தனை, நல்ல நட்பு , இறை பக்தி , த்யானம் முதலியவற்றை நமக்குள் அனுமதித்து உறுதியுடன் அந்த மிருகத்தை நம்மை நெருங்க விடாமல் விரட்டுவது தான்
நல்லதே நினைப்போம்
நல்லதே நடக்கும் என்று நம்புவோம் !!!
வாழ்க வளமுடன் !!!