அதற்கு பிறகு பல ஆண்டுகள் ஓடிவிட்டபோதும் அவரை நினைவு கூர்ந்ததில்லை. ஆனால் ரைட்மந்த்ரா நடத்திக்கொண்டிருக்கும் புண்ணியமோ என்னவோ, அவரது பிறந்த நாளான இன்று அவரைப் பற்றி நிச்சயம் ஏதாவது ஒரு பதிவை அளித்து விடவேண்டும் என்று முடிவு செய்ததில் அவரைப் பற்றி பல அறிய விஷயங்களை நீண்ட நெடிய ஆராய்ச்சியில் தெரிந்துகொண்டேன்.
என்ன சொல்வது ? எப்பேர்ப்பட்ட தியாகம்…எப்பேர்ப்பட்ட வீரம். மிகப் பெரும் செல்வந்தராக சீரும் சிறப்புமாக வாழவேண்டியவர் நம் சுதந்திரத்துக்காக தன் சொத்துக்களை எல்லாம் இழந்து இறுதியில் வறுமையில் வாடி தன் இன்னுயிரை ஈந்த கதையை படித்த பின்னர் கண்களில் நீர் துளிர்த்தது.
1930 களில் தமிழகத்து பில்கேட்ஸ்ஸாக இருந்திருக்க வேண்டியவர் நம் சுதந்திரத்துக்காக போராடிய ஒரே குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டு சிறைச் சாலைகளில் புழுப் பூச்சிகளும், கல்லும், மண்ணும் கலந்திருந்த மோசமான உணவும், கேழ்வரகு கூழும் சாப்பிட வைக்கப்பட்டார். மாடுபோல் அல்ல, மாடாகவே உழைத்தார் சிதம்பரனார்.
ஆனால் இன்று அவரது குடும்பத்தினர் வறுமையில் சிக்கி தவிக்கின்றனர்.
சென்ற வாரம் என் முகநூலில் நண்பர் சந்திரசேகரன் ஒரு செய்தியை பகிர்ந்திருந்தார். படித்துவிட்டு நெஞ்சே வெடித்துப் போனது.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கல்வி உதவியை எதிர்பார்க்கும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் வாரிசு
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யின் கொள்ளுப் பேத்தி முத்து பிரம்ம நாயகி உயர் கல்விக்காக உதவியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரது தந்தை தினக்கூலி வேலை செய்யும் ஏழை. பொறியியல் படிப்புக்கு அவரது தகுதி மதிப்பெண் 1,130 / 1,200
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
செக்கிழுத்த செம்மலின் வாரிசு இப்படி கல்வி உதவி கூட அல்லல் பட்டுக்கொண்டிருக்க சர்வ வசதியுடன் என்ஜீனியரிங் படிக்கும் நம் இளைஞர்களோ முகநூலில் மிக மிக பிஸியாக இருக்கிறார்கள். தகுதியற்றவர்களையும் உடலை விற்பவர்களையும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி மகிழ்வதில். இந்த நாடு எப்படி உருப்படும்?
சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினர் இப்படி கஷ்டப்பட்டுக்கொண்டிருக்க, அரசாங்கமோ திரைப்பட அமைப்புக்களின் ஆடம்பர விழாக்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் இருந்து நன்கொடை அளிக்கிறது.
ஒப்பற்ற சுதந்திர போராட்ட தியாகி ஒருவரின் வாரிசு கூலி வேலை செய்துவரும் நாட்டில் நாம் தினந்தோறும் கோவில்கள் கட்டுவதாலும் கும்பாபிஷேகங்கள் செய்வதாலும் என்ன பயன்?
படித்தவுடன் முத்து பிரம்ம நாயகியின் பாதுகாவலராக இருக்கும் பெண் ஒருவரிடம் பேசினேன். முத்து பிரம்ம நாயகிக்கு தனிப்பட்ட முறையிலும் நம் தளம் சார்பாகவும் நாம் கல்வி உதவி தொகை அளிக்க விரும்புவதாக சொன்னேன். ஆனால் வங்கியில் கடனுதவி கிடைத்துவிட்டது என்றும் அந்த செய்தி முகநூலில் சற்று தாமதமாக பதியப்பட்டதாகவும் கூறினார். வ.உ.சி.யின் குடும்பத்தினருக்கு உதவும் பொன்னான் வாய்ப்பு நமக்கு கிடைக்கவில்லையே என்று ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும் மறுப்பக்கம் அவருக்கு கல்வி உதவிக் கடன் (?!) கிடைத்தது சற்று ஆறுதலாக இருந்தது.
இந்திய சுதந்திர போராட்ட வீரர்களில் நேதாஜியை நான் எந்தளவு மதிக்கிறேனோ அதே அளவு வ.உ.சி. அவர்களையும் பகத் சிங்கையும் மதிக்கிறேன்.
இன்று வ.உ.சி. அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு எப்படியும் ஒரு பதிவை போட்டுவிட்டு தான் படுக்கவே செல்லவேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.
வரும் வழியில் வ.உ.சி.யின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு சில போஸ்டர்களை பார்க்க முடிந்தது. பரவாயில்லை…நம்ம ஆளுங்கள் இன்னும் இவரை ஞாபகம் வெச்சிருக்காங்க என்று மனம் சந்தோஷப்பட்டது.
கே.கே.நகர் சிவன் பார்க் அருகே வரும்போது, வ.உ.சி. அவர்களின் பிறந்த நாளையொட்டி அங்கு வைக்கப்பட்டிருந்த மிகப் பெரிய டிஜிடல் பேனரை பார்த்தேன். தகுதியற்றவர்களுக்கே இதுவரை இது போன்ற மிகப் பெரிய பேனர்களை பார்த்து பழக்கப்பட்ட எனக்கு, செக்கிழுத்த செம்மலுக்கு வைக்கப்பட்டிருந்த பேனரை பார்த்தவுடன் ஒரு கணம் சிலிர்ப்பாக இருந்தது. அப்படியே பைக்கை ஓரங்கட்டிவிட்டு புகைப்படம் எடுத்தேன்.
சிலிப்பு அடுத்த நொடி ஏமாற்றமாக மாறியது. காரணம், அவரை தங்கள் ஜாதி என்று உரிமைக் கொண்டாடி ஒரு அமைப்பு அந்த பேனரை வைத்திருந்தது. சுதந்திர போராட்ட தியாகிகளையும் கூட ஜாதியை வைத்தா சொந்தம் கொண்டாடுவது? இது அவர்களுக்கு செய்யப்படும் இழுக்கல்லவா? என்றைக்கு திருந்தப் போகின்றனர் இந்த ஜாதி அமைப்புக்களும் ஜாதி ஒட்டு அரசியல்வாதிகளும் ?
சர்வேஸ்வரா… நீ தான் இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும்.
====================================================
செப்டம்பர் 5 – வ.உ.சி. பிறந்த நாள் சிறப்பு பதிவு
சிறையில் செக்கிழுத்துக்கொண்டே ஆன்மீகப் பணியும் தமிழ்ப் பணியும் செய்த வ.உ.சி.
கப்பலோட்டிய தமிழன் என்று பெரிதும் புகழப்பட்டவர் வ.உ.சி. சுதந்திரப் போராட்டத்தில் அவரது பங்கு பெரியது.
அத்தகைய வீரப் பெருமகன் ஒருமுறை ஜீவாவின் குருகுலத்திற்கு வருகை தந்தார். அவரை ஜீவா பெரிதும் மகிழ்வுடன் வரவேற்றார். அன்று மாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் வ.உ.சி. தலைமை தாங்கினார். ஜீவா அந்த கூட்டத்தில் வீர உரை நிகழ்த்தினார். புதுமைக் கவிஞன் பாரதியை, ஜீவாவின் பேச்சில் வ.உ.சி. கண்டு மகிழ்ந்தார். பின்னர் பேசிய வ.உ.சி. தனது உரையில், “”அஞ்சுபவர்களும் கெஞ்சுபவர்களும் ஒருக்காலும் சுதந்திரத்தைப் பெறவே முடியாது. ஜீவாவைப் போலச் சிலர் இருந்தால் போதும் நாடு விடுதலை பெற்றுவிடும்” என்று பெரிதும் பாராட்டினார்.
“மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதும்
நூலோர்கள் செக்கடியில் நோவதும் காண் கிலையோ!
மாதரையும் மக்களையும் வன்கண்மையால் பிரிந்து
காதல் இளைஞர் கருத்தமிழ் காணாயோ! ” – மகாகவிபாரதியர்.
கப்பலோட்டிய தமிழன், தென்னாட்டுத் திலகர், செக்கிழுத்த செம்மல் என்று மக்களால் போற்றப்படும் தளபதி வ.உ.சி. நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் என்னும் சிற்றூரில் உலகநாத பிள்ளைக்கும் பரமாயி அம்மையாருக்கும் 1872 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் நாள் பிறந்தார்.
1900 ஆம் ஆண்டு தூத்துக்குடிக்குச் சென்று வழக்கறிஞர் தொழில் செய்தார். தமது 23 ஆவது வயதில் திருச்செந்தூர் சுப்பிரமணியப் பிள்ளை அவர்களின் புதல்வி வள்ளியம்மை என்பவரை மணந்தார். அந்த அம்மையார் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஓராண்டிலேயே இயற்கை எய்திவிட்டார். பின்பு அவ்வம்மையாரின் குடும்பத்திலேயே மீனாட்சி என்ற பெண்ணை மணம் புரிந்து கொண்டார்.
தூத்துக்குடிக்கும் இலங்கைக்கும் இடையில் வாணிகப் பொருட்களை பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியின் கப்பல்களே ஏற்றுமதி, இறக்குமதி செய்து வந்தன. பிரிட்டிஷ் கப்பல் கம்பெனியின் கொட்டத்தை அடக்க எண்ணி தூத்துக்குடி வணிகர்களின் ஆதரவோடு 1906 ஆம் ஆண்டு சுதேசி கப்பல் கம்பெனி ஒன்றைத் தோற்று வித்தார்.
முதலில் ஷாலைன் ஸ்டீம்ஸ் கம்பெனியிடம் குத்தகைக்குக் கப்பல்களை எடுத்து இயக்கினார். இதையறிந்த வெள்ளையர்கள் அந்தக் கம்பெனி முதலாளியை மிரட்டி கப்பல்களின் குத்தகை ஒப்பந்தத்தை இரத்து செய்ய வைத்தனர். இதனால் சிதம்பரனார் கொழும்புக்குச் சென்று கப்பல் ஒன்றைக் குத்தகைக்கு எடுத்து வந்தார். பின்பு சொந்தமாகக் கப்பல் வாங்கிட முடிவு செய்து பம்பாய் சென்று கப்பல் வாங்கி வந்தார். அக்கப்பலின் பெயர் ‘காலியா ‘ என்பதாகும்
சுதேசிக் கப்பல் கம்பெனிக்கு பிரிட்டிஷ் அரசு பல வகையிலும் தொல்லை தந்து அழித்து விட வேண்டுமென்று செயல் பட்டது. ஆதே நேரத்தில் சுதேசிக் கப்பல் கம்பெனியின் பங்குதாரர்கள் சிதம்பரனாரை அரசியலிலிருந்து விலகிக் கொள்ளும்படி வற்புறுத்தினார்கள். அவர்கள் மக்களின் சுதேசி உணர்வைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் ஆசையுடன் முதலீடு செய்த பணக்காரர்கள் அவர்களது குறிக்கோள் இலாபம் ஒன்று மட்டுமே, ஆனால், சிதம்பரனாரின் குறிக்கோள் கப்பல் வைத்து சுதேசியம் வளர்ப்பதாகும். ஏனவே, அரசியலை விட்டு விலகும் பேச்சுக்கு இடமில்லை என்று சிதம்பரனார் மறுத்து விட்டார். இலாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட பங்கு தாரர்கள் சுதேசிக் கப்பல் கம்பெனியின் காரியதரிசி பதவியிலிருந்து விலகிவிடுங்கள் என்று வற்புறுத்தினார்கள். தான் கண்போல காத்து வந்த சுதேசிக் கப்பல் கம்பெனியின பதவியிலிருந்த விலகி முழு மூச்சாக அரசியலில் தீவரமாக ஈடுபடலானார்.
திருநெல்வேலியில் 1908 ஆம் ஆண்ட தேசாபிமான சங்கம் நிறுவப்பட்டது. சுதந்திரப் போராட்டத்தை ஆதரித்தும் , பொது மக்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் எனவும், பொதுக் கூட்டங்கள் மூலம் சிதம்பரனாரும், சுப்ரமணிய சிவாவும் தீவர பிரச்சாரம் செய்தனர்.
“ஆளப்பிறந்த மக்கள் அடிமைகளாக வாழ்வதா ? பண்டம் விற்க வந்த வணிகக் கூட்டம் பாரத நாட்டை, ஆள்வதென்றால், அதை நாம் பார்த்திருப்பதா? முப்பது கோடி மக்களை ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்த ஜந்து லட்சம் வெள்ளையர்கள் ஆள்வதென்றால் இதைவிட அவமானம் வேறென்ன இருக்க முடியும்?” என்று அனல் தெறிக்க உரை நிகழ்த்தி சிதம்பரனார் பொது மக்களிடம் சுதந்திர உணர்வை ஊட்டினார்.
“பேச்சுரிமை உண்டு, தாய் நாடு வாழ்க என்று முழக்கமிடுவது குற்றமா? எங்கள் நாட்டு வாணிபம் வளம்பெற கப்பல் ஓட்டுவது குற்றமா? நாங்கள் முப்பது கோடி மக்களும் ஒன்றுபட்டு உங்களை எதிர்ப்பதென்ற முடிவுக்கு வந்து விட்டோம். இனியும் அடக்கு முறைகளால் ஆள்வது ஆகாத காரியம் சுட்டுக் கொல்வதல்ல, சதையைத் துண்டு துண்டாக வெட்டி எடுத்து வேதனைப் படுத்தினாலும் எங்கள் முடிவு மாறாது. இதயத்தே வளரும் சுதந்திரப் பற்றும் மாயாது இது திண்ணம் ” என்று மாவட்ட ஆட்சியர் விஞ்சு துரைக்கு சிதம்பரனார் பதிலடிக் கொடுத்தார். ஆத்திரமடைந்த மாவட்ட ஆட்சியர் திருநெல்வேலி மாவட்டத்தை விட்டு உடனே வெளியேறச் சம்மதிக்க வேண்டுமென்றும் , அரசியல் போராட்டத்தில் ஈடுபடுவதில்லை என்றும் எழுதித் தர வேண்டும் என சிதம்பரனாரை எச்சரித்தார். அடிமை சாசனம் எழுதிக் கொடுக்க முன்வராமல் தன் மீது நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் எனத் துணிச்சலாக அறிவித்தார். உடனே மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் சிதம்பரனாரும் சுப்பிரமணிய சிவாவும் கைது செய்யப்பட்டனர்.
சிதம்பரனார் கைது செய்யப்பட்டவுடன் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. பள்ளிகளிலிருந்தும், கல்லூரிகளிலிருந்தும் மாணவர்கள் வெளியேறிப் போராட்டம் செய்தனர். சிதம்பரனாரையும் சுப்பிரமணிய சிவாவையும் விடுதலை செய்யக் கோரி பொதுக் கூட்டங்களும், ஊர்வலங்களும் நடைபெற்றன. நகரம் முழுவதும் கலவரம் வெடித்தது. காவல்படை குவிக்கப்பட்டது கலவரக்காரர்களைத் துணை மாவட்ட ஆட்சியர் ஆஷ் துரை தனது கைத்துப்பாக்கியால் சுட்டார். இதில் 4 பேர் மரணமடைந்தனர். 3 பேர் காயமடைந்தனர். மூன்று நாள் கலவரம் நீடித்தது.
அரசை நிந்தனைப்படுத்தி பேசியதாகவும், சுப்ரமணிய சிவாவுக்கு உணவளித்து உதவியதாகவும் காவல் துறையினர் வழக்கு போட்டனர். இரண்டு மாதம் வழக்கு நடைபெற்றது. சிதம்பரனார் தரப்பில் மகாகவி பாரதியார் உள்பட பல சான்றோர்கள் சாட்சி கூறினார்கள். ஆனாலும், வெள்ளையர் அரசாங்கம் சிதம்பரனாருக்கு அரசு நிந்தனைக் குற்றத்திற்காக இருபதாண்டுக் கடுங்காவல் தண்டனையும், சுப்பிரமணிய சிவாவுக்கு உடந்தையாக இருந்ததற்காக இருபதாண்டுக் கடுங்காவல் தண்டனையும் அளித்து , நாற்பது ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டுமெனத் தீர்ப்பளித்தது. தீர்ப்பில் சிதம்பரனார் பெரிய ராசத் துரோகி, அவரது எலும்புக் கூட ராஜ விசுவாசத்துக்கு விரோதமானது. சுப்பிரமணிய சிவா அவரது கையில் அகப்பட்ட ஒரு கோல், திருநெல்வேலி கலவரத்திற்கு இவர்கள் தான் காரணம் என்று கூறப்பட்டது. சிதம்பரனாருக்கு அளிக்கப்பட்ட தண்டனையைக் கண்டித்து எழுதிய பத்திரிக்கைகளின் ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டனர்.
சிறையில் இருந்த நாட்களிலேயே தமிழ் இலக்கிய இலக்கணங்களில் கவனம் செலுத்தத் தொடங்கிய வ.உ.சி. அவர்களால் தமிழன்னைக்குக் கிடைத்த அணிகலன்கள் பல.
• திருக்குறள் மணக்குடவர் உரைபதிப்பு
• மனம் போல் வாழ்வு (மொழி பெயர்ப்பு தத்துவ நூல்)
• அகமே புறம் (தத்துவம்)
• மெய்யறம் (ஆன்மீகப்புரட்சி நூல்)
• திருப்பொய்கையார் இன்னிலை (பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. அதன் உரைநூல்)
• தொல்காப்பியம் இளம்பூரணர் உரைபதிப்பு
• வலிமைக்கு மார்க்கம் (மொழிபெயர்ப்பு நூல்)
• சாந்திக்கு மார்க்கம் (தத்துவம்)
• சிவஞானபோத உரை (சைவ சித்தாந்த உரை நூல்)
• மெய்யறிவு (அற நூல்)
சான்றிதழ்
“சிதம்பரம்பிள்ளையின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்”
1908ஆம் ஆண்டு சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்த தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே எழுதியுள்ள வரிகளே இவை. வ.உ.சி.யின் விடுதலை வேட்கைக்கும் வேகத்துக்கும் இதனை விடச் சிறந்த அங்கீகாரத்தை வேறு எவரும் தந்துவிட முடியாது.
சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு நாற்பதாண்டு தண்டனை பத்து ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. மேலும், பிரிவு கவுன்சிலுக்கு மேல், முறையீடு செய்து பத்தாண்டுத் தண்டனையை ஆறாண்டுக் கடுங்காவல் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. சிதம்பரனார் தனது தண்டனைக் காலத்தை கோயம்புத்தூர், கண்ணனூர் சிறைச் சாலைகளில் புழுப் பூச்சிகளும், கல்லும் ,மண்ணும் கலந்திருந்த மோசமான உணவும், கேழ்வரகு கூழும் சிதம்பரனாருக்குக் கொடுத்தனர். மாடுபோல் அல்ல, மாடாகவே உழைத்தார் சிதம்பரனார். சிறையில் செக்கிழுத்தார். இந்திய விடுதலைக்காகச் சிறைச் சாலையில் சொல்ல முடியாத துயரங்களையும், கொடுமைகளையும் அவமானங்களையும் அனுபவித்தார். 1912-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிதம்பரனார் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
ஆங்கிலேயர்களைக் கடுமையாக எதிர்த்ததால், அவரது வழக்கறிஞர் பட்டம் பறிக்கப்பட்டு, அவரை சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து வெளிவந்த பின், அவர் ஏழ்மையான வாழ்க்கையே வாழ்ந்து வந்தார். ஆனால், தனது கடன்களைத் திருப்பி செலுத்தாததால், அவர் தனது வாழ்வின் இறுதி வரை வறுமையில் வாழ்ந்து வந்தார். அவரது இறுதி மூச்சை, தூத்துக்குடியிலுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் அலுவலகத்தில், நவம்பர் 18, 1936 அன்று விட்டார்.
(தயாரிப்பில் உதவிய தளங்கள் : Dinamani.com, voclifehistory.blogspot.in, tamilthamarai.com)
[END]
சுந்தர் சார் நானும் சிறு வயதில் பள்ளியில் படிக்கும்போது எனக்கு இவரை பற்றிய பாடம் வந்தது. ஆனால் எனக்கு வரலாறு மண்டையில் நுழையாது என்பதற்காக இவர்களிபற்றிய பாடங்களை கட்டாய மனப்பாடம் செய்யவேண்டிய சூழ்நிலை அந்த சிறு வயதில். பின்பு கால ஓட்டத்தில் ‘கப்பலோட்டிய தமிழன்’ படத்தை பார்த்தபின்பு இவர்கள் நம் நாட்டிற்க்காக எவ்வளவு துன்பத்தை அனுபவித்தார்கள் என்பதை புரிந்துகொண்டேன்…
ஆங்கிலேயர்கள் ஒரு புதிய பொருளை கண்டுபிடித்தால் அதற்கு அவர்கள் காப்புரிமை பெற்றுவிடுகிறார்கள். அதன்மூலம் அவர்களின் தலைமுறை அவர்களுக்கு நன்றி தெரிவித்து பெருமைபட்டுகொள்கிறது… இந்த சுதந்திர தியாகிகளுக்கு மட்டும் ஏன் இல்லை இந்த காப்புரிமை சட்டம்?
இது இந்த சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் குற்றமா?இல்லை இது இண்றைய அரசியல் வாதிகளின் தன்னுடைய சுயநலத்தைபற்றியே சிந்தித்து பொதுநலனை மறந்துவிட்டதின் குற்றம்.
ஆனால் நம் நாட்டில்தான் அவர்களின் பெயரை மட்டும் பயன்படுத்திக்கொண்டு அவர்களின் குடும்பத்தை கண்டுகொள்ளமல்விட்டுவிட்டு தான் மட்டும் எப்படி செல்வம் கொழிப்பது என்பதை ரூம் போட்டு யோசிக்கிறது !..
சுதந்திர நாளன்று ,இன்றைய ஒருசில அரசியல் வாதிகள் வா ஊ சி பாரதி, போன்றோர்கலால்தான் சுதந்திரகாற்றை சுவாசிக்கின்றோம் ,என்று பேசுகிறார்கள் …அப்படிப்பட்ட சுதந்திரத்தை வாங்கி தந்த அந்த மகா மனிதர்களின் வாரிசுகள் இன்று இந்த அரசாங்கத்திடம் எதிர்பார்ப்பது என்ன? என்பதை ஒரு கணம் கூட யோசிப்பது இல்லை..
கோடி கோடியாய் பணம் வாங்கிகொண்டு ஒருவர் சொல்லி கொடுப்பதை அப்படியே 10 டேக் ,15 டேக் வாங்கி நடிப்பவர்களுக்கு நடித்தபின் நன்றாக நடித்துவிட்டார்கள் என பதக்கங்கள் வேறு, சன்மானம் வேறு… இதில் காட்டும் அக்கறை இவர்களின் மேல் ஒரு துளிகூட காட்டுவதில்லை.
ஏதாவது ஒரு பத்திக்கை நிருபர் இவைகளை தேடிச்சென்று மீடியாவில் ஒளிபரப்பினால் ,அவர்களை அடுத்த நாள் அழைத்து தன் மானத்தை காத்துக்கொள்ள ஒரு சிறு மரியாதை செய்வார்கள் நம் அரசியல் செல்வங்கள் ..அப்படி சுதந்திர போராட்ட தியாகிகளையும்,அவர்களுடைய வாரிசுகளையும் தேடித்தான் கண்டுபிக்கவேண்டியுள்ளது நம் நாட்டில் ..வெட்கப்படவேண்டிய விஷயம் …
என்று கிடைக்கப்போகுதோ? உண்மையான சுதந்திரம்!!!!!!!!!!!!!!!!!..
என்மனம் குமுறுதுபா நம்மின மக்கள் நம் government. மேலயும் வெறுப்புதான் வருகிறது
இதற்கே இப்படி குமுறுகிறீர்களே… இதை படியுங்கள்… ரத்தக் கண்ணீர் வரும்….
http://rightmantra.com/?p=11086
gverment is help
டியர் சார்
படிக்கும்போதே நெஞ்சம் வெடித்து விடும் போல் உள்ளது.
இவர் போன்ற தியாகத் திருமகன்களை கொண்டாட வேண்டிய நாம், சற்றும் தகுதி இல்லாதவர்களை கொண்டாடி வருகிறோம்….பிரபல திரைப்பட நடிகர்களின் பிறந்தநாளை விரல் நுனியில் வைத்திருக்கிறோம்….நம்மில் எத்துனை பேருக்கு அப்துல் கலாம் பிறந்தநாள் தெரியும்..நேதாஜி பிறந்தநாள் தெரியும், வ.உ.சி பிறந்தநாள் தெரியும்…! இன்று சொகுசாக, சுதந்திரமாக நாம் வாழ்வதற்கு தன் உயிர் துறந்த நம் முன்னோர்களை என்றும் நினைவில் இருத்துவது நம் கடமை. ஜெய்ஹிந்த் …..!
—
வ.உ.சி.யின் கொள்ளுப் பேத்தி முத்து பிரம்ம நாயகி உயர் கல்விக்காக நம் தளம் சார்பில் உதவ நினைத்த உங்கள் நல் எண்ணத்திற்கு நன்றிகள்….
—
“கடமையைச் செய்; பலனை எதிர்பார்”
—
விஜய் ஆனந்த்
இவரை போன்ற நல்லவர்களின் குடும்பத்தை கவனிக்காமல் விட்டதன் விளைவு தான் நம் நாடு இன்று இப்படி அதல பாதாளத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது
BAANER வைத்து வ உ சி தங்கள் ஜாதி என்று காட்ட நினைதவர்கலாவது அவரது குடும்பத்திற்கு உதவி புரிந்து இருக்கலாம்
நல்ல ஆத்மாக்கள் என்றும் வாழ்வார்கள் ,அய்யா வ .உ .சி போல!
டியர் சார்
மை நேம் இஸ் வைதீஸ்வரன்
i miss ur no
if possible u send ur மொபைல் no
thanks
regards
vaitheeswaran
Sundar 9840169215
நெஞ்சை உருக்கும் கட்டுரை
இருக்கும் போது தவித்த வாய்க்கு தண்ணீர் குடுக்காமல் செத்த பின்பு அவர் தம் கல்லறையில் பாலை ஊற்றும் விசித்தரமான உலகம் இது
செக்கிழுத்த செம்மல் பட்ட துயரங்களையும் அவர் தம் வாரிசுகளின் தற்போதைய நிலையையும் மற்றும் எத்தனையோ உயிர்களை தியாகம் செய்து பெற்ற (?) இந்த சுதந்திரத்தின் இன்றைய நிலைமையையும் எண்ணிப்பார்க்கையில் மனம் கணக்கிறது
சாகும் தருவாயில் இருக்கும் சுதந்திரத்தை மீட்டு புத்துயிர் அளிக்க வேண்டிய மிக முக்கியமான பொறுப்பு இன்றைய இளைய தலைமுறையினரிடம் உள்ளது
நல்லதே நினைப்போம்
நல்லதே நடக்கட்டும் !!!
ஐயா வ.வு.சி ஐயாவோட குடும்ப சம்பந்தமான விலாசம் இல்லனா பொதுப்படையான phone number இருந்தா கொடுங்கய்யா இந்த facebook போன்ற இணையதலத்துல கொடுத்தா எல்லாருக்கும் செய்தி தெரிஞ்சி யாராவது உதவுவங்கு
I am interested to support the great personalities descendant’s education
Please share details to my email I’d. ashokb23@gmail.com
Share the account number and other details, so that interested people can support her…
அவர் நேரடி தொடர்பு எண் என்னிடம் இல்லை. அவர் உறவினர்கள் எந்தவித தகவலையும் தர மறுக்கிறார்கள். விபரங்கள் கிடைத்தால் நிச்சயம் பகிர்ந்துகொள்கிறேன்.
– சுந்தர்
வணக்கம் தாங்கள் இந்த செய்தி வெளிவிட்டதர்க்கு மிக்க நன்றி …….மட்றும் தாங்கள் சொன்ன இந்த செய்தி கேட்டு நானும் தொடர்பு கொண்டேன் அந்த குடும்பத்தினரை அவர்களுக்கு அய்யா வ உ சி அவர்களின் சுத்தமான ஆத்மா வின் ஆதரவில் ஸ்டேட் பேங் மூலம் நிதி உதவி பெற்று தற்போது நல்ல கல்லூரியில் ,கோவை யில் BE இரண்டாம் ஆண்டு நன்றாகவே படித்து கொண்டுள்ளார் படிப்பு முடிந்தவுடன் சமந்தபட்ட வங்கியில் நல்ல வேலை வாய்ப்பும் செய்வதாக அந்த குடும்பத்தில் கூறியுள்ளார்கள் ஆதலால் மிக அன்போடும் பணிவோடும் நான் கேட்டுகொள்வது யாரும் அவர்கள் தொடர்பு எண்ணுக்கு தயவு செய்து தொடர்பு கொள்ள வேண்டாம் இது அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் தயவு செய்து இந்த செய்தியை இணையதளத்தில் சொல்ல சொன்னதால் தான் நான் சொல்லுகிறேன் ..மீண்டும் மீண்டும் தயவு செய்து தவறாக புரிந்து கொள்ளவேண்டாம் ……………… வாழ்க அய்யா வ உ சி அவர்களின் புகழ் …….
Dear Sir
I am trying to help could u please send her mail id and detail. I want to help directly to client
regards
senthil
sbrenergy@gmail.cm
Please send her email. I can do my contribution
kannan
anithkan@yahoo.com
Tragic. How can I help the patriot’s descendant.
Vishu
உலகம் அப்படி தான்…. விடுங்கள் ……….நம்மால் முடிந்ததை செய்வோம் …….நான் உதுவுகிரெஅன் என்னால் முடிந்தவரை ………
jkeaglediaries@ஜிமெயில்.com
நானும் ரொம்ப பெருமபடுற.
I am trying to help her can any one send her email id or her phone no……..
iam wiiling to lend a help for her……give her mail ID and number….
Could you please share the contact details of the family. I will try to help them out.
Regards,
Saravanan M
+91 8861063668
குலத் யு ப்ளீஸ் ஷேர் தி காண்டக்ட் தேடைல்ஸ் ஒப் பாமிலி . . இ வில் ட்ரை டு ஹெல்ப் தெம் அவுட் சின்னையன் :-9367122523
I too like to support for this. I have good respect on VOC
I am ready to help our beloved leaders varisu.
Dear Sir,
Kindly contact us we can help.Natarajan.govindasamy@gmail.com
Thanks & Regards,
Natarajan G