வரும் செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி ஆன்மீக, சுயமுன்னேற்ற கருத்துக்களை பதிவு செய்துவரும் நம் www.rightmantra.com இணையதளத்தின் முதலாம் ஆண்டு விழா நடைபெறவிருக்கிறது. தேசியத்தையும், தெய்வீகத்தையும், தன்னம்பிக்கையையும் இணைக்கும் பல்வேறு பயனுள்ள நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்ப்பட்டு வருகின்றன. விழாவின் ஒரு அங்கமாக சுதந்திர போராட்ட வீரர் புரட்சியாளர் பகத்சிங் அவர்களின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி + மாறுவேடப் போட்டி நடைபெறவிருக்கிறது. இதற்கான ஸ்க்ரீனிங் டெஸ்ட் (தகுதி தேர்வு) வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி கீழே அளிக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும்.
மாணவர்கள் அது சமயம், சுதந்திர போராட்ட வீரர் புரட்சியாளர் பகத்சிங் அவர்களைப் போல வேடமணிந்து வந்து, ‘பகத்சிங் கண்ட கனவு’ என்கிற தலைப்பில் சுமார் 6 நிமிட அளவில் உரையாற்ற வேண்டும். இந்த தகுதித் தேர்வில் வெற்றி பெறும் மாணவர் செப்டம்பர் 29 அன்று நடைபெறும் ஆண்டுவிழாவில் பேச அழைக்கப்படுவார். அது சமயம், அம்மாணவருக்கு ரைட்மந்த்ரா விருதும் சான்றிதழும் சான்றோர் முன்னிலையில் வழங்கப்படும்.
இந்த போட்டியில் பங்கேற்க கட்டணம் எதுவும் இல்லை. மாணவர்கள் மத்தியில் தேசப்பற்றை வளர்த்து, ஒப்பற்ற சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகங்களை நினைவு கூர்வதன் பொருட்டே இப்போட்டி www.rightmantra.com இணையத்தால் நடத்தப்படுகிறது. தகுதிப் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்கள் பெயர், பள்ளியின் பெயர் மற்றும் வகுப்பு ஆகியவற்றை கீழ்காணும் மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி போட்டியில் பங்கேற்க பதிவு செய்து கொள்ளவேண்டும். (அல்லது rightmantra@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியும் பதிவு செய்யலாம்.)
தகுதி தேர்வில் பங்குபெறும் மாணவர்கள் அனைவருக்கும் ‘பங்கேற்பு சான்றிதழ்’ PARTICIPATION CERTIFICATES வழங்கப்படும்.
தங்கள் பள்ளிகளில் படிக்கும் தகுதி வாய்ந்த மாணவர்களை தேர்வு செய்து மேற்படி தகுதி போட்டியில் கலந்துகொள்ள ஆவன செய்யும்படி ஆசிரியர்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சென்னையில் உள்ள முக்கிய பள்ளிகளுக்கு இது குறித்த தகவல் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த தகுதிப் போட்டியில் சென்னை தவிர வெளியூர்களில் இருந்து வந்து மாணவர்கள் எவரேனும் கலந்துகொள்ள விரும்பினால் அவர்கள் சௌகரியம் மற்றும் போக்குவரத்து வசதி இடம் கொடுக்குமானால் தாரளாமாக கலந்துகொள்ளலாம். அவசியம் பெற்றோரில் ஒருவரை அழைத்துவரவேண்டும்.
தகுதி போட்டி நடைபெறும் நாள் : செப்டம்பர் 22, ஞாயிறு 2013 | நேரம் : மதியம் 2.30 முதல் மாலை 5.00 மணிவரை
| இடம் : அருள்மிகு சக்திவிநாயாகர் கோவில், பி.டி.ராஜன் சாலை, (சிவன் பார்க் அருகே), கே.கே.நகர், சென்னை-78.
இணையதளம் : www.rightmantra.com | மின்னஞ்சல் : rightmantra@gmail.com | *அலைபேசி : 9840169215
(*அலைபேசியில் தொடர்பு கொள்ள விரும்புகிறவர்கள் மாலை 7 மணிக்கு மேல் தொடர்புகொள்ளவும்.)
விழா மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துக்கள் !!!