Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, October 10, 2024
Please specify the group
Home > Featured > ஆலய தரிசனம் என்னும் அருமருந்து!

ஆலய தரிசனம் என்னும் அருமருந்து!

print
ஆலயங்களுக்கு செல்வது அதுவும் புராதன ஆலயங்களுக்கு செல்வது என்பது நமக்கு கவசம் போன்றது. 32 பற்களுக்கிடையே நாக்கு கடிபடமால் வாழ்வது எப்படியோ அப்படித்தான் நமது வாழ்க்கையின் போக்கும் இருக்கிறது. எண்ணற்ற துன்பங்களும் பிரச்னைகளும் நாம் அறிந்தோ அறியாமலோ நம்மை சூழ்ந்திருக்க, நாம் அவற்றில் சிக்காமல் லாவகமாக நமது வாழ்கை பயணத்தை தொடர இறைவனின் திருவருள் மிகவும் அவசியம்.

—————————————————————————————-

நின்னடியே வழிபடுவான் நிமலாநினைக் கருத
என்னடியா னுயிரைவவ்வே லென்றடற்கூற் றுதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடுநீர் சுமக்கும்
நின்னடியா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
– திருஞானசம்பந்தர்

பொருள் : திருநெடுங்களம் மேவிய இறைவனே, குற்ற மற்றவனே, நின் திருவடிகளையே வழிபடும் மார்க்கண்டேயன் நின்னையே கருதிச் சரண்புக அவனைக் கொல்லவந்த வலிமை பொருந்திய கூற்றுவனைச் சினந்து, `என் அடியவன் உயிரைக் கவராதே` என்று உதைத்தருளிய உன் பொன்னடிகளையே வழிபட்டு, நாள்தோறும் பூவும், நீரும் சுமந்து வழிபடும் உன் அடியவர்களின் இடர்களைக் களைந்தருள்வாயாக.
—————————————————————————————-

“ஆலயம் தொழுவது சாலவும் நன்று!”

“நன்று என்பது எது?” என்று பரமேஸ்வரனும் உமையவளும் கேட்டபோது அவ்வை சொன்னது இது.

ஆலயங்களுக்கு செல்வது அதுவும் புராதன ஆலயங்களுக்கு செல்வது என்பது நமக்கு கவசம் போன்றது. 32 பற்களுக்கிடையே நாக்கு கடிபடமால் வாழ்வது எப்படியோ அப்படித்தான் நமது வாழ்க்கையின் போக்கும் இருக்கிறது. எண்ணற்ற துன்பங்களும் பிரச்னைகளும் நாம் அறிந்தோ அறியாமலோ நம்மை சூழ்ந்திருக்க, நாம் அவற்றில் சிக்காமல் லாவகமாக நமது வாழ்கை பயணத்தை தொடர இறைவனின் திருவருள் மிகவும் அவசியம்.

“இப்படித் தான் எனது வாழ்க்கை இருக்கும். No problem. No worries” என்று எவராலும் அறுதியிட்டு கூற முடியாது. காரணம், மனித வாழ்க்கை அத்துனை நிச்சயமற்றது. ஒரு நொடியில் ஒரே ஒரு நொடியில் வாழ்க்கையே தலைகீழாக பலருக்கு மாறிய தருணங்கள் அநேகம் உண்டு அன்றாடம் உண்டு இந்த உலகில். செய்தித் தாள்களை பார்த்தால் புரியும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நமக்கும் நமது குடும்பத்தினருக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் எந்த வித துன்பங்களும் நேராது, நாமும் நமது லட்சியப் பயணத்தில் வெற்றி நடை போட்டு நிம்மதியுடனும் சந்தோஷமுடனும் வாழ ஆலய தரிசனம் அத்துனை முக்கியம்.

கடவுள் எங்கும் இருக்கிறார் எனும்போது அவரை ஆலயத்தில் போய் தொழ வேண்டிய அவசியம் என்ன என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். எங்கும் இறைவன், எதிலும் இறைவன் என்பதை உணர்ந்து ஒரு பரிபக்குவ நிலையில் உள்ள  மகா புருஷர்களுக்கு மட்டுமே மேற்படி கேள்வி பொருந்தும். நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு?

பூமிக்கடியில் எங்கும் தண்ணீர் உள்ளது. அப்படியிருக்கும் போது ஏன், தண்ணீரை நாம் பூமியில் துளையிட்டு அதை பைப்பில் ஏற்றி மேலே OVERHEAD TANK இல் சேர்த்து வைக்கிறோம்? நமது அவசரத்திற்கு தேவைப்படும்போது அதை பயன்படுத்தத் தானே? அது போலத் தான் திருவருளும்.

இறைவன் நிச்சயம் நாம கேட்கும்போது கேட்குறதை கொடுக்குறவன் தான். “வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்” என்று அதனால் தானே திருநாவுக்கரசர் பாடியிருக்கிறார். ஆனால், கேட்பதற்கு நமக்கு தகுதி வேண்டாமா? கோவிலுக்கு அனுதினமும் சென்று அவனை வழிபடுவதன் மூலம் அந்த தகுதியை நாம் வளர்த்துக்கொள்ள முடியும். நிறையே பேருக்கு தங்களுக்கு ஒரு தேவை அல்லது பிரச்னைன்னு வரும்போது தான் கடவுளோட ஞாபகமே வருது. மனுஷங்ககிட்டே தான் தேவை அறிந்து பழகுகிறோம் என்றால் கடவுளிடமுமா?

இறைவன் நிச்சயம் நாம கேட்கும்போது கேட்குறதை கொடுக்குறவன் தான். “வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்” என்று அதனால் தானே திருநாவுக்கரசர் பாடியிருக்கிறார். ஆனால், கேட்பதற்கு நமக்கு தகுதி வேண்டாமா?

நாம கேட்கும்போது அவன் தன்னோட அருளை தரனும் என்றால் நாம் அதற்கு தகுதி பெறவேண்டும்.

வங்கியில் பணம் போட்டு வெச்சிருந்தாத் தானே அவசரத்துக்கு போய் எடுக்க முடியும்? அக்கவுண்ட்ல பணமே இல்லாம எப்படி சார் எடுக்கிறது? பணமாவது பரவாயில்லே… கடனை உடனை வாங்கி நம்ம தேவையை அப்போதைக்கு சமாளிச்சிக்கலாம். ஆனா, திருவருள்? அது அவனா கொடுத்தாத் தான் உண்டு. அதை யாரும் கடன் கொடுக்க முடியாது.

எனவே புண்ணிய காரியங்களின் வாயிலாகவும் திருக்கோவில் தரிசனங்கள் வாயிலாகவும் நாம் இறைவின் திருவருளை சேமித்து வரவேண்டும். அப்போது தான் அதை சமயத்தில் உபயோகிக்க முடியும்.

கோவிலுக்கு செல்வதன் அவசியத்தை தாத்பரியத்தை நமது முன்னோர்களும் சமயப் பெரியவர்ளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் விரிவாக விளக்கியுள்ளார்கள். எனவே அந்த சப்ஜெக்டில் நான் டீப்பாக செல்ல விரும்பவில்லை.

கோவிலுக்கு செல்வதன் அவசியத்தை சொல்லவேண்டிய அதே நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்ல விரும்புறேன். பாப காரியங்களை கொஞ்சம் கூட கூசாம செய்துகிட்டு இந்தப் பக்கம் கோவிலுக்கு போறவங்களும் இருக்கத்தான் செய்றாங்க.

கோவிலுக்கு சென்று இறைவனை வழிபடுபவர்கள் சொல்லாலும் செயலாலும் எண்ணத்தினாலும் யாருக்கும் எந்த வித தீங்கும் செய்யவே கூடாது. அப்போது தான் உங்களுக்கு திருவருள் கிட்டும். பாப காரியங்கள் என்று கூறப்படுபவற்றை மறந்து கூட செய்ய கூடாது.

(பாப காரியங்கள் எவை எவை? கீழ்கண்ட பதிவை பார்க்க)

http://www.livingextra.com/2012/07/blog-post.html

ஓ.கே. கோவிலுக்கு செல்வது என்று முடிவு செய்துவிட்டீர்கள். எந்த நாள் எப்போது செல்வது?

தினசரி கோவிலுக்கு செல்வது நன்று. அப்படி தினசரி முடியாதவர்கள் வாரம் ஒரு முறை செல்வது நல்லது. தங்கள் ராசி நட்சத்திர பலன்களுக்கு ஏற்ப வாரத்தின் ஏழு நாட்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து சென்று வருவது சிறப்பு.

அல்லது தங்களுக்கு இயன்ற நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சென்று வருவது சிறப்பு. வாரம் ஒரு முறை தனியாகவும், மாதம் ஒரு முறை குடும்பத்துடனும் சென்று வருவதை வழக்கமாக கொள்ளலாம்.

சென்னைவாசிகள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். இந்த பரபரப்பான சென்னையிலும் அதை சுற்றிலும் தொன்மை வாய்ந்த ஆலயங்கள் பல இருக்கின்றன. திருவொற்றியூர் ஒற்றீஸ்வரர், மயிலை கபாலீஸ்வரர், திருவேற்காடு வேதபுரீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், திருநின்றவூர் இருதயாலீஸ்வரர், திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள்,  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோவில், என்று பல புராதன ஆலயங்கள் உண்டு.

மேற்படி ஆலயம் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து, வாரம் ஒருமுறை காலையோ மாலையோ ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செல்வதை வழக்கமாக கொள்ளவும். மறக்காம ஒரு ஜோடி நெய் விளக்கோ அல்லது எள் முடிச்சு போட்ட நல்லெண்ணெய் விளக்கோ (சனிக்கிழமையா இருந்தா) ஏத்துங்க. அப்புறம் பாருங்க உங்களைச் சுற்றி நடக்கும் மாற்றங்களை நீங்களே உணர்வீர்கள். தன்னம்பிக்கை, தைரியம், மனோதிடம் இதெல்லாம் உங்க கிட்டே கூடிக்கிட்டே போகும். எல்லாத்துக்கும் மேல ஒரு தேஜஸ் உருவாகும். (உங்களோட செயல்கள் சின்சியரா இருக்கும் பட்சத்தில்.)

இதையெல்லாம் ஞாபகம் வெச்சிக்கிற அதே நேரம் இன்னொரு விஷயமும் ஞாபகம் வெச்சிக்கோங்க. நல்லவனா இருப்பதைவிட மிகப் பெரிய ஆன்மிகம் எதுவுமில்லை. உங்கள் மேல் உள்ள தவறுகளை உணர்ந்து அவற்றை களையும் மனவுறுதி மேற்கொண்டு, பின்னரே கோவிலின் படிகளை மிதிக்கவும்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

TIPS : கோவிலுக்கு செல்லும்போது அர்ச்சனை செய்வது மிகவும் முக்கியம். அப்படி அர்ச்சனை செய்யும்போது உங்கள் பெயருக்கோ அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயருக்கோ, நண்பர்கள் பெயருக்கோ அர்ச்சனை செய்யவும். சுவாமி பெயருக்கு வேண்டாம். அர்ச்சனைக்கு கூறப்படும் ஸ்லோகத்தில் தோஷ நிவர்த்தி குறித்த பதமும் உண்டு. இறைவனுக்கு ஏது தோஷம்? எனவே, சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்வது தவிர்க்கப்படவேண்டிய ஒன்று.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

அடுத்த பதிவில்….

கோவிலில் நடந்து கொள்ளவேண்டிய முறைகள் மற்றும் இதர முக்கிய விஷயங்கள்

[END]

2 thoughts on “ஆலய தரிசனம் என்னும் அருமருந்து!

  1. இந்த பதிவை படிப்பதற்கும் , தற்போதைய பதிவை படிப்பதற்கும் எவ்வளவு வித்யாசங்கள். தங்களின் எழுத்து நடை தற்பொழுது மிளிர்கிறது .

    வாழ்க …. வளமுடன்

    உமா வெங்கட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *