சுந்தரகாண்டத்தின் மகிமையை பற்றி சில தொடர் பதிவுகளை அளித்து ‘சுந்தரகாண்டத்தை தினசரி படித்து வாருங்கள். உங்கள் பிரச்னைகள் அனைத்தும் பஞ்சாய் பறந்துவிடும்’ என்று சில வாரங்களுக்கு முன்பு சொல்லியிருந்தேன். தேவைப்பட்டால் வாங்கி அனுப்புகிறேன் என்றும் கூறியிருந்தேன். இதையடுத்து நம் வாசகர்கள் பலர் அந்நூலை அனுப்புமாறு நம்மை கேட்டுக்கொண்டார்கள். இதுவரை பலருக்கு அனுப்பியிருக்கிறேன். யார் யார் அதற்கு பணம் கொடுத்தார்கள் யார் கொடுக்கவில்லை என்கிற கணக்கை கூட நான் பார்க்கவில்லை. காரணம் அந்நூலுக்கு வாசகர்கள் அனுப்பும் தொகை முழுதும் கோவில் பசுக்களுக்கு தீவனம் வாங்கித் தரும் தொகையில் சேர்க்கப்படுகிறது. (நூல் கிடைக்காதவர்கள் நமக்கு தெரியப்படுத்தவும்.)
எத்தனை பேர் தற்போது சுந்தரகாண்டத்தை தினசரி தவறாமல் படித்துக் கொண்டிருப்பீர்கள் என்று தெரியவில்லை.
ஆனால் இதோ நூலை படித்த நம் தளத்தின் ரெகுலர் வாசகி ஒருவர் தனது அனுபவத்தை எழுதியிருக்கிறார்.
உடல் நலிவுற்று படுக்கையில் வீழ்ந்து ‘இனி உயிர் பிழைப்பாரா?’ என்று கருதிய பெற்ற தாய் சுந்தர காண்டத்தின் மகிமையால் மீண்டும் பழைய பொலிவோடு எழுந்து தினசரி வேலைகளை செய்துவருகிறார் என்று இந்த வாசகி குறிப்பிட்டுள்ளார்.
இவர் எந்தளவு அந்த நூலை கிடைப்பதர்கரிய ஒரு பொக்கிஷமாக கருதினார் என்று எனக்கு தெரியும். எந்தளவு முழு நம்பிக்கையுடன் ஆர்வத்துடன் – எது வந்தபோதும் கலங்காது – படித்துவந்தார் என்றும் எனக்கு தெரியும்.
அவரது நம்பிக்கைக்கும் பக்திக்கும் அனுமன் அளித்த பரிசு இது. சுந்தரகாண்டத்தின் மகிமையை இதைவிட எவராவது விளக்கமுடியுமா?
==============================
வணக்கம் சுந்தர் சார்….
இன்று என் அம்மா பரிபூரணமாக குணம் அடைந்து விட்டார்கள். சார் அம்மா கையால் சாப்பிட்டு எத்தனை நாள் ஆச்சு தெரியுமா. நேற்று சமைத்து விட்டார்கள். இன்று என்னை வந்து பஸ் ஏத்தி விட்டு போனங்க சார்.
அம்மா ரொம்ப கஷ்டபட்டுங்க சார். நான் கும்பிட்ட தெய்வம் கைவிடலே, அதே போல் தக்க தருணத்தில் கிடைத்த சுந்தரகாண்டம் என்னை கை விடலே சார். என்னோட பல கோரிக்கைகள் இருந்தாலும் என் முதல் கோரிக்கை அம்மா பரிபூரணமா குணம் அடைந்து பழைய மாதிரி இருக்குனும் என்பது தான் சார். நிஜமா சார் அம்மா சுயநினைவு இழக்கும் போது கண்டிப்பா இறந்து விடுவாங்கன்னு டாக்டர் சொன்னாங்க அதையும் தாண்டி என் அம்மா உயிரோட இருக்காங்கன்னா ஆச்சிரயம் தான் சார். ஆனா என்னோட 13 ஸர்கத்திலே குணம் அடைந்து விட்டாங்க சார். உங்களுக்கு நன்றி சொல்லனும். நன்றி சொல்ல கடமைபட்டு இருக்கேன்.. எனக்கு எப்படி EXPLAIN பன்னறது தெரியலே மன்னிக்கவும்.. எத்தனாயிரம் கோடி தடவ நன்றி சொன்னாலும் பத்தாது சார்.
– தங்கள் வாசகி
திண்டுக்கல் மாவட்டம்
================================================
அடுத்து இதோ மற்றொரு வாசகரின் அனுபவம்….
கீழ்காணும் கந்தன் என்னும் நண்பர் நீண்ட நாட்களாக நம் வாசகர். நண்பர் ரிஷியின் www.livingextra.com மூலம் நம்மை பற்றி அறிந்து நமது வாசகரானவர்.
தனியார் தொலைகாட்சி நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். சமீபத்தில் நம்மை தொடர்புகொண்டு தனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை சொன்னார். சொன்னதோடு மட்டுமல்லாமல் தன கைப்பட கடிதம் எழுதி அதை ஸ்கேன் செய்து அனுப்பியிருந்தார்.
அவரிடம் பேசும்போது புரிந்தது அவர் பெருமாளின் தீவிர பக்தர் என்பது. வேங்கடவனின் பரிபூரண அருளை பெற்றவர் அவர் என்பது அவர் விளக்கிய சில சம்பவங்களை வைத்து புரிந்துகொண்டேன்.
தற்போது இவர் தனது ஊரில் அம்மன் கோவில் ஒன்றை புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகம் செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.
அவர் விளக்கிய ஒரு சம்பவத்தையும் அவர் நமக்கு எழுதிய கடிதத்தையும் கீழே தருகிறேன்.
இவரின் அனுபவத்திலிருந்து ஒன்றே ஒன்று தெளிவாக புரிந்துகொள்ளலாம். தனது மெய்யன்பர்களை இறைவன் ஏதேனும் ஒரு வடிவில் அடிக்கடி ஆட்கொள்கிறான். அருள்செய்கிறான். அதை உணரும் பக்குவம் மட்டும் நமக்கு இருந்தாலே போதும்.
மாதம் ஒருமுறையேனும் திருப்பதி – திருமலை செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார் இவர். இவர் ஒரு முறை சென்றபோது, திருப்பதியின் அந்த வசீகரத்தில் மயங்கி, “இங்கே ஏதாவது கூட்டிப் பெருக்குற வேலை கிடைத்தால் கூட போதும். இங்கேயே செட்டிலாகிவிடலாம்” என்று நினைத்தாராம்.
சற்று நேரத்தில் ஆலயத்தின் ஊழியர் ஒருவர் இவரிடம் வந்து CASH COUNTER வசூல் தொகைக்கு சாட்சி கையெழுத்து போட வரமுடியுமா என்று கேட்க, (PADAK MONEY) இவருக்கு விதிர்த்துவிட்டதாம். கூட்டி பெருக்க நினைத்தால் தனக்கே சாட்சி கையெழுத்தை போட வருமாறு ஸ்ரீனிவாசன் அழைக்கிறானே என்று இவர் உருகிவிட்டாராம். திருப்பதியில் உண்டியல் நிரம்பி அதை அப்புறப்படுத்தும்போது அப்போது வரிசையில் இருக்கும் இரு நபர்களிடம் சாட்சி கையெழுத்து வாங்குவார்கள். அதே போல CASH COUNTER தினசரி வசூலுக்கும் சாட்சி கையெழுத்து வாங்குவார்கள். இது திருமலையில் உள்ள வழக்கம். அந்த நேரம் கண்ணில் படும் பக்தர்களை கொண்டு சாட்சி இந்த சாட்சி கையெழத்து வாங்குவார்கள். இது ஒரு கிடைப்பதர்க்கரிய மிகப் பெரிய பாக்கியம். ஏழுமலையானின் வருவாய்க்கே சாட்சி கையெழுத்து போடுவதென்றால் சும்மாவா?
இறைவனை நோக்கி நாம் ஓரடி எடுத்து வைத்தால் அவன் நம்மை நோக்கி நூறடி எடுத்து வைப்பான் என்று நாம் அடிக்கடி சொல்வது எத்தனை உண்மை என்று இப்போது புரிகிறதா?
அந்த ஒரு அடியில் தான் இருக்கிறது அத்தனையும். ஆணவமோ, அவனை சோதித்து பார்க்கும் எண்ணமோ, வீண் படாடோபமோ, எதுவுமே இருக்க கூடாது. இருக்க வேண்டியதெல்லாம் அவன் மீது தூமையான தன்னலமற்ற எதிர்பார்ப்பு அற்ற அன்பு ஒன்று மட்டுமே.
எம்மனாஎன் குலதெய்வமே என்னுடைய நாயகனே
நின்னுளேனாய்ப் பெற்றநன்மை இவ்வுலகினில் ஆர்பெறுவார்
நம்மன்போலே வீழ்த்தமுக்கும் நாட்டிலுள்ள பாவமெல்லாம்
சும்மெனாதே கைவிட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே.
– நாலாயிரத் திவ்ய பிரபந்தம்
=====================================================
சுந்தர்ஜி,
நான் முதன் முதலாக கடந்த 2011 ஆம் வருடம் முதன் முதலாக மந்த்ராலயம் சென்றேன். தேதி நினைவில்லை. அங்கு சென்று சுவாமி தரிசனத்திற்காக ரூ.500/- டிக்கெட் எடுத்தேன். எப்படி தரிசனம் செய்வது, எங்கு நிற்பது, யாரை பார்ப்பது – ஒன்றுமே புரியவில்லை.
துங்கபத்ரா நதிக்கரையில் குளித்துவிட்டு பஞ்சமுக ஆஞ்சநேயரை தரிசித்துவிட்டு மந்த்ராலயம் வரும் வழியில் வெங்கடேசப் பெருமாள் ஆலயம் என்று ஒரு வழிகாட்டு பலகை தென்பட்டது. நான் ஒரு பெருமாள் பித்தன் என்றே சொல்லலாம். குருராஜரை தரிசிக்கும் முன் அந்த தலைவர் பெருமாளை தரிசிக்கலாம் என்று பெருமாள் ஆலயம் சென்றேன். அங்கு சென்ற பொது தான் அந்த பெருமாள் தினசரி ராகவேந்திர சுவாமிகளால் பூஜிக்கப்பட்டவர் என்று தெரிந்துகொண்டேன். மெய்சிலிர்த்தது. அப்பெருமால் மிகவும் உயரம் குறைவு. சுமார் 3 அடி தான் உயரம் இருக்கும். அந்த உருவம் என் கனவில் வந்தது போலிருந்தது.
அப்போது அங்கு மாலை வேளை பூஜை சிறப்பாக நடைபெற்றுகொண்டிருந்தது. அங்கே ஒருவர் தமிழில் சிலருடன் பேசிக்கொண்டிருக்க, அவரை அணுகி குருராஜரை தரிசிக்க விளக்கம் கேட்டேன். அவர் அனைத்தையும் விளக்கி, தினமும் இரவு ரத பூஜை உள்ளது. அதில் தவறாமல் கலந்துகொள்ளுங்கள் என்று கூறி அறிவுரை வழங்கினார்.
கடந்த 28/07/2013 அன்று நான் என் குடும்பத்துடன் மந்த்ராலயம் சென்றிருந்தேன். வந்தவுடன் தங்கள் தளத்தை ஒப்பன் செய்தால் குருராஜரை பற்றிய பதிவு இருந்தது.
(http://rightmantra.com/?p=5851)
சந்தோஷத்தில் மனம் துள்ளியது. மேலும் பிரார்த்தனைக்கு திரு.அம்மன் சத்தியநாதன் அவர்கள் தலைமை ஏற்றிருப்பது கண்டேன். அம்மன் சத்தியநாதன் வேறு யாருமல்ல மந்த்ராலயத்தில் எனக்கு வழி காட்டி விளக்கினாரே அவர் தான் என்பதையும் அறிந்துகொண்டேன். குருராஜரின் கருணையை எண்ணி வியந்தேன்.
இதை தங்களுக்கு தெரியப்படுத்த வேண்டியே இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
அன்புடன்,
கந்தன்
9840047085
மணலி
=====================================================
டியர் சுந்தர் ஜி
நன்றிகள் பல கோடி.
நம்பினார் கெடுவதில்லை இது நான்குமறை தீர்ப்பு – இதை நாம் மற்றவர்களின் அனுபவத்தின்மூலம் உணரும்போது நம்முடைய நம்பிக்கை இன்னும் கூடுகிறது. இது போன்ற அற்புதங்கள் பற்றி நமக்கு தெரிந்தவர்களிடம் பகிர்ந்துகொள்ளும்போது சொல்ல தெரியாத ஒரு உணர்வு நம்மை ஆட்கொள்கிறது. இனி பிழைக்க மாட்டார் என்று மருத்துவர்கள் கைவிட்டபின் ஒருவர் எழுந்து நடந்து தன அன்றாட வேலைகளை மீண்டும் செய்கிறார், அதுவும் அவர் நம் பாசம் மிகுந்த தாய் என்றால் எப்படி இருக்கும். சொல்ல வார்த்தைகள் இருக்காது. இறைவனுக்கு நன்றிதான் சொல்லமுடியும். நம் வாசகர் விஷயத்தில் சுந்தர் (சுந்தர காண்டம்) மூலம் நடந்த அற்புதம் நமக்கு புதிய நம்பிக்கை அளிக்கிறது. எல்லா புகழும் இறைவனுக்கே.
சுந்தர் அண்ணா சுந்தர கண்டத்தின் சக்தியை இன்றுதேரிந்துகொண்டேன் நன்றி
வணக்கம் சுந்தர் சார்
எதிர் பார்கவ இல்லை சார்..
நன்றி நன்றி நன்றிகள் பல கோடி சார்…
உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் கடவுளின் மேல் குறிப்பாக சுந்தரகாண்டத்தின் சக்தியின் மேல் மிகப் பெரும் நம்பிக்கையை மற்றவர்களுக்கு ஊட்டும். உங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொள்ள அனுமதித்தமைக்கு வாசகர்கள் சார்பாக நன்றி!
– சுந்தர்
சுந்தர்ஜி,
சுந்தர காண்டத்தின் மகிமையினை சாட்சியாக கொடுத்ததில் மிக்க மகிழ்ச்சி. திரு கந்தன் அவர்களின் மூலம் மீண்டும் ஒருமுறை குருராஜரின் மகிமையை படிக்கும் பாக்கியம் பெற்றேன். மேலும் திருவேங்கடவனின் அருள் பெற்ற திரு கந்தன் அவர்கள் நம் த(ள) லத்திற்கு வருகை புரிந்ததும் இறையருள் நமக்கு துணை புரிவதற்கு ஒரு சாட்சியே. அனைத்திற்கும் மூலமான சுந்தர்ஜிக்கு மீண்டும் நன்றி
சுந்தர காண்டத்தின் மகிமையையும் அது நிகழ்த்திய அற்புதத்தையும் நம்மோடு பகிர்ந்து கொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் மிக்க நன்றி !!!
நண்பர் கண்டன் அவர்களின் அனுபவங்கள் மனதை சிலிர்க்க வைப்பதாக உள்ளது – எல்லோருக்கும் எளிதில் கிட்டாத அறிய பேறு
பரவட்டும் பக்தி மனம்
நிகழட்டும் அற்புதங்கள்
வாழ்க வளமுடன் !!!