ஆலய வழிபாட்டில் ஆர்வமுள்ளவர்களும் ஆன்மீக அன்பர்களும் இந்த எளிமையான அடிப்படை விதிகளை ஓரளாவாவது தெரிந்துகொண்டு அவற்றை பின்பற்ற வேண்டும், இறையருளை முழுமையாக பெறவேண்டும் என்று கருதி தான் ‘ஆலய தரிசன விதிமுறைகள்’ பற்றிய பதிவை நமது தளத்தில் பல மாதங்களுக்கு முன்பே அளித்திருந்தோம்.
(Check : கோவில்களுக்கு செல்வதன் முழு பலனை அடைய… )
இருப்பினும் இணையத்தை பார்க்கும் வாய்ப்பு எல்லாருக்கும் கிட்டாது. எனவே சாமானிய மக்களும் அதை தெரிந்துகொண்டு ஆலய தரிசனத்தின் போது தெரிந்து தெரியாமலோ செய்யும் தவறுகளை திருத்திக்கொண்டு அவனருளை முழுமையாக பெறவேண்டும் என்று தான் அதை நோட்டீஸ் வடிவத்தில் அச்சடித்து முக்கிய ஆலயங்களில் விஷேட நாட்களில் விநியோகித்து வருகிறோம்.
இதுவரை ஆயிரக்கணக்கான நோட்டீஸ்கள் அச்சடித்து பல இடங்களில் விநியோகித்தாகிவிட்டது. முதலில் அலட்சியமாக அவற்றை பெற்று கொள்பவர்கள் அதில் உள்ள விஷயத்தை படித்தவுடன், மேலும் இரண்டு மூன்று பிரதிகள் வாங்கி செல்வது வழக்கம்.

நிற்க… இப்போது வேறு ஒரு முக்கிய விஷயத்துக்கு வருகிறேன்.
எடுப்பார் கைப்பிள்ளை!
சென்ற ஞாயிறு பழனி சென்றபோது, தண்டாயுதபாணி சுவாமி கோவில் இருந்த நிலைமையை பார்த்து கண்ணீர் வடிப்பதை தவிர வேறு வழியில்லாமல் போனது எங்களுக்கு. தமிழகத்திலேயே அதிக வருவாய் உடைய இந்த ஆலயம் பராமரிப்பின்றி எடுப்பார் கைப்பிள்ளை போல இருந்ததை கண்டு நெஞ்சம் துடித்துப் போனது.
செல்லும் வழி நெடுகிலும் குப்பைகள், அசுத்தங்கள்… பராமரிப்பின்றி காணப்பட்ட மலைப்பாதை … என்ன சொல்வது யாரிடம் போய் சொல்வது?
பழனியை பொறுத்தவரை சற்று ஸ்ட்ரிக்டாக நடந்துகொள்ளும் அதிகாரிகளை கடைக்காரர்கள் முதல் கோவில் ஊழியர்கள் வரை கூட்டணி சேர்ந்து, “இவர் இருந்தால் நாம சம்பாதிக்க முடியாது” என்று – பகீரத பிரயத்தனங்கள் செய்து – சம்பந்தப்பட்ட அதிகாரியை எப்படியும் பணியில் இருந்து தூக்கியடித்துவிடுகிறார்களாம்.
முருகன் தான் இதற்கு ஒரு தீர்வு கண்டு பழமையும் சிறப்பும் வாய்ந்த பழனியின் பெருமையை காப்பாற்ற வேண்டும்.

பொதுவாகவே நம் தமிழகத்தில் ஆலயங்கள் வருவாய்க்கு தக்கபடி பராமரிக்கப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டு உண்டு. ஆலயத்தின் வருவாய் ஆலயத்திற்கு பயன்படுத்தப்படாமல் வேறு விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. (தமிழ்நாட்டில் மட்டும் தான் இது நடக்கிறது!).
மேலும் கோவில்களின் உழவாரப்பணிக்கோ அல்லது ஆலய தரிசனத்திற்க்கோ செல்லும்போது அங்கு இருக்கும் உண்மை நிலையை நம்மால் எழுத முடிவதில்லை. அதில் பல நடைமுறை சங்கடங்கள் இருக்கின்றன. சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள் தங்களுக்கு மேல் உள்ள அதிகாரிகளுக்கு பயப்படுகிறார்கள். ஆகையால் நாம் எழுதும் போது அவர்களை மனதில் வைத்து கொஞ்சம் அடக்கியே வாசிக்கவேண்டியிருக்கிறது.
“இந்த ஆலயம் இப்படி இருக்கிறது. இன்னின்ன தேவைகள் இருக்கின்றன. நாம் இதையெல்லாம் செய்யவேண்டியிருக்கிறது” என்று கூட நம்மால் எழுத முடிவதில்லை. நமக்கு யாரிடமும் அச்சமில்லை என்றாலும் சம்பந்தப்பட்ட கோவில் அர்ச்சகர்கள் தங்களின் மேலதிகாரிகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையை மனதில் கொள்ளவேண்டியிருக்கிறது. ஆடி மாதத்தை முன்னிட்டு நலிவுற்ற அம்மன் ஆலயம் ஏதாவது ஒன்றை கண்டறிந்து அங்கு உழவாரப்பணி செய்ய விரும்பினோம். ஆனால் நமக்கு கிடைத்த அனுபவமே வேறு.
உண்மையில் போதிய பராமரிப்பின்றி ஒரு கோவில் காணப்பட்டாலும் அதைக்கூட வெளிப்படையாக எழுதமுடிவதில்லை. “அதுமாதிரியெல்லாம் எதுவும் எழுதிடாதீங்க சார்… எங்களுக்கு தான் பிரச்னை” என்று சம்பந்தப்பட்ட கோவிலில் நம்மை கேட்டுகொள்வதால் பல விஷயங்களை DOWNPLAY செய்தே எழுத வேண்டியிருக்கிறது.
அதாவது அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் போதிய வருவாய் மற்றும் பரமாரிப்பின்றி கோவில்கள் திகழ்வதை ‘இப்படி இருக்கு நிலைமை’ என்று எழுத முடிவதில்லை.
நாம் எழுத நினைக்கும் ஆனால் எழுத முடியாது தவிக்கும் விஷயங்களை வாசகர்கள் தாங்களாகவே யூகித்துக்கொள்ள வேண்டியதுதான்.
பழனியில் நம்மை முகம் சுளிக்க வைத்த காட்சிகள்….
பழனியில் தரிசனத்திற்காக நாம் வரிசையில் நின்றிருந்தபோது கண்ணுற்ற சில காட்சிகள் நம்மை திடுக்கிட வைத்தன.
நமக்கு முன் வரிசையில் தரிசனத்திற்காக காத்திருந்த சிலர் பிஸ்கட், சிப்ஸ், முறுக்கு, உள்ளிட்ட நொறுக்குத் தீனிகளை வெட்கமேயின்றி சாப்பிட்டு கொண்டிருந்தனர். மேலும் சிலர் கைகளில் லேஸ், குர்குரே பாக்கெட்டுகள் இருந்தன. அவர்கள் கோவிலுக்கு வந்தார்களா அல்லது பிக்னிக்கிற்கு வந்தார்களா என்று தெரியவில்லை. (இவற்றை எல்லாம் எப்படி கோவிலில் அனுமதிக்கிறார்கள்?)
நாம் நின்ற வரிசை சிறப்பு தரிசனத்திற்கான விஷேட வழி. அதில் இருந்த வரிசையிலேயே இந்த காட்சி என்றால் கெடுபிடிகள் அதிகம் இல்லாத தர்ம தரிசனத்தின் வரிசையில் என்னென்ன நடக்கும்… சாப்பிடுவார்கள்… என்று நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை.
கைக்குழந்தைகளை சுமக்கும் தாய்மார்கள் மற்றும் சின்னஞ்சிறு குழந்தைகள் மட்டுமே இது போன்ற தரிசன வரிசைகளில் காத்திருக்கும்போது ஏதாவது சாப்பிடலாம். வரிசையில் காத்திருக்கும் மற்ற சேவார்த்திகள் எதுவும் சாப்பிடலாகாது.
(திருப்பதி போன்ற நாள் கணக்கில் நின்று தரிசிக்கும் கோவில்களுக்கு இது பொருந்தாது! அங்கு ஆலய நிர்வாகமே சேவார்த்திகளுக்கு உணவு தருகின்றது!!)

கோவிலில் சாப்பிடக்கூடியது – கோவிலில் தரப்படும் பிரசாதம் மட்டுமே.
அதுவும் தரிசனத்தை நிறைவு செய்த பின்பு ஓர் ஓரத்தில் உட்கார்ந்து சாப்பிடவேண்டும். எந்த காரணத்தை கொண்டும் அந்த இடத்தை அசுத்தம் செய்யக்கூடாது.
(நமது ஆலய தரிசன விதிமுறைகள் தொடர்பான நோட்டீஸில் மேற்படி விஷயமும் சேர்க்கப்படும். அதாவது தரிசனத்திற்கு காத்திருக்கும்போது நொறுக்குத் தீனிகள் சாப்பிடக்கூடாது!)
பழனியில் நாம் தரிசனத்தை நிறைவு செய்த பிறகு பிரசாதம் சாப்பிட்ட கைகளை அலம்புவதற்கு தண்ணீர் குழாயை தேடி அலைந்த கதை மிகவும் கொடுமை. குறைந்த பட்சம் இந்த வசதியை கூடவா ஆலய நிர்வாகம் செய்யக்கூடாது?
=====================================
இதனிடையே வேறு ஒரு நல்ல விஷயத்தை உங்களிடம் சொல்லவேண்டும்.
நமது ‘ஆலய தரிசன விதிமுறைகள்’ நோட்டீசை பழனியில் முற்றோதல் நடைபெறும் திருமண மண்டபத்திற்கு வருகை தருபவர்களுக்கு கொடுக்கவேண்டும்…. ‘எவராவது அதற்கான செலவை ஏற்றுக்கொண்டால் மகிழ்ச்சி’ – என்று சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தேன்.
அதைப் பார்த்துவிட்டு நம்மை தொடர்புகொண்ட நண்பர் கோகுலகிருஷ்ணன் அதற்குரிய முழு செலவை தாம் ஏற்றுகொள்வதாக கூறி அடுத்த நாளே நமக்கு அந்த தொகையை அனுப்பிவிட்டார்.
இதனிடையே…பெங்களூரிலிருந்து நம்மை தொடர்புகொண்ட வாசகர் ஒருவரும் வேலூர் மாவட்டத்திலிருந்து தொடர்பு கொண்ட வாசகி ஒருவரும் தாமும் அந்த நோட்டீஸ் அச்சடிக்க உதவும் கைங்கரியத்தில் முறையே முழுமையாகவும் பகுதியாகவும் பங்கேற்க விரும்புவதாக கூறினர்.
‘ஆலய தரிசன விதிமுறைகள்’ நோட்டீஸ் தொடர்ந்து அச்சடிக்கப்பட்டு இது போன்ற நிகழ்ச்சிகள் & விசேட நாட்களில் கோவில்களில் விநியோகிக்கப்பட்டு வருகிறது என்பதால் அவர்களது தொகையை அதில் பயன்படுத்திக்கொள்வதாக கூறியிருக்கிறேன். (2013 ஜனவரி தொடங்கி இந்த ஏழு மாதத்தில் இதுவரை 20,000 நோட்டீஸ்களுக்கும் மேல் விநியோகித்திருப்போம்.)
அடுத்து சீர்காழியில் வரும் ஆகஸ்ட் 18 அன்று நடைபெறும் திருவாசகம் மாநாட்டிலும் அந்த நோட்டீஸ் விநியோகிக்கப்படவிருக்கிறது.
திருவாசகம் முற்றோதல் அடுத்து தமிழகத்தில் எங்கெங்கு நடைபெறவிருக்கிறது என்பது குறித்த விபரங்களை கீழ்கண்ட போஸ்டரில் பார்த்து தெரிந்துகொள்ளவும். அந்தந்த பகுதிகளில் உள்ள நம் தள வாசகர்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் மேற்படி முற்றோதல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிவனருள் பெறுவீர்களாக!
இதற்கிடையே… பழனியில் திருவாசகம் முற்றோதலுக்கு வந்தவர்களுக்கு நம் தளத்தின் ‘ஆலய தரிசன விதிமுறைகள்’ நோட்டீஸ் விநியோகித்தோம். தகுந்த இடத்தில் விநியோகித்தபடியால் அதற்கு வரவேற்பு அபாரமாக இருந்தது. பலர் நான்கைந்து நோட்டீஸ்களை வாங்கி சென்றனர்.
அடுத்த இரண்டு நாட்களில் நமக்கு ஒரு அலைபேசி வந்தது.
=====================================
பள்ளி மாணவர்களுக்கு பாடமாக மாறிய நமது ‘ஆலய தரிசன விதிமுறைகள்’ நோட்டீஸ்!
எங்கே ? எப்படி?? விபரங்கள் அடுத்த பதிவுகள் ஒன்றில்!
[END]
நான் இந்த வலைதளத்திற்கு வருவதற்கு முன் livingextra.com வாசகன் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நான் இந்த தளம் ஆரம்பம் முதல் பார்த்து வந்தாலும் எனக்கு சுந்தர் அவர்களிடம் பேசவேண்டும் என்றோ அவர்களுடன் {rightmantra.com} தோன்றவில்லை. அப்போது தான் ஆங்கிலவருடபிறப்பு தருணத்தில் பேரம்பாக்கம், நரசிம்மர் பெருமாள் ஆலயம், அதன் சிறப்புகள் குறித்த பதிவை அளித்திருந்ததை பார்த்துவிட்டு, குடும்பத்துடன் வருடபிறப்பு அன்று நாங்களும் பேரம்பாக்கம் சென்றபோது போது அவர் அங்கு விநியோகித்த ‘ஆலய தரிசன விதிமுறைகள்’ நோட்டீஸ் தற்சயலாக எனக்கு கிடைத்தது.
நோட்டீஸ் கிடைத்தவுடன் நானும்,எனது மனைவியும் படித்து முடித்து,சுந்தர் இங்கு வந்து சென்ற விவரத்தையும், அவர் பதிவு பார்த்துதான் இங்கு வந்துள்ளோம் என்ற விவரத்தை தெரிவித்தேன்.
இந்த நோட்டீஸ் தான் rightmantra.com என் குடும்பத்தினர் இணைந்தமைக்கு காரணம். இன்று பழனி போன்ற மிகப்பெரிய புண்ணிய நகரங்களை சென்று அடைந்துள்ளது, என்றால் எது நமது தளவாசகர்கள் அனைவருக்கும் கிடைத்துள்ள இறைவன் அங்கிகாரம் என்பது சரியாக இருக்கும்.
இந்த சீர்மிகு பணியல் சுந்தர்ஜி சேவை மகத்தானது .இந்த செயல் சிறக்க தன்னை அர்ப்பணித்து கொண்ட அன்பு உள்ளங்களுக்கு எனது பாராட்டுக்களும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .
வணக்கம் சுந்தர் சார்
சங்கடப்பட்டு தலை குனிய வேண்டிய விஷயம் சார், மலைக்கு நீங்க இவ்வளவு ஆதங்கபட்டால் இன்னும் கிரி வலப் பாதை, வின்ச் ஏரியா, ரோப் கார் ஏரியா இங்கையெல்லாம் நீங்க பார்கலை சார், சங்கட பட வேண்டிய விஷயம் நிறைய இருக்கு.
நான் பார்த்த அளவில் ஆண்கள் விட பல பெண்கள் பண்ற அநியாயம் ரொம்ப ரொம்ப அதிகம் சார்.
நம்ம Rightmantra.com மூலம் முடிந்த அளவு மாற்ற முயற்சி பண்லாம் சார்
நன்றி சார்..
நீங்கள் குறிப்பிட்ட அவலங்கள் பல சிறப்பான ஆலயங்களில் தான் அதிகம் நடைபெறுகிறது. இன்னும் திருவிழா நாட்களில் இதைவிட மோசம். கொடுமைன்னு ஒரு சில கோவிலுக்கு போனால் அங்கு உள்ள கொடுமையில் இறைபக்தி மறந்துவிடும். கேரளா போன்ற மற்ற மாநிலங்களில் இருக்கும் சட்ட திட்டங்களை நம் அற நிலையத்துறையும் கொண்டு வந்தால் நல்லது.
முற்றோதல் நிகழ்ச்சி நிரல் உபோயகமான தகவல். ஆனாலும் கோவை அந்த லிஸ்டில் இல்லை என்பது வருத்தம்.
சுந்தர் சார்,
பழனியில் நாம் தரிசனத்தை நிறைவு செய்த பிறகு பிரசாதம் சாப்பிட்ட கைகளை அலம்புவதற்கு தண்ணீர் குழாயை தேடி அலைந்த கதை மிகவும் கொடுமை. குறைந்த பட்சம் இந்த வசதியை கூடவா ஆலய நிர்வாகம் செய்யக்கூடாது?
சில ஆலயங்களில் தண்ணீர் குழாய் இருந்தாலும் அதை பயன் படுத்த மிக கவனம் தேவை…! அதன் அருகில் கூட செல்ல முடியாது….!
ஆலய தரிசன விதிமுறைகளை பற்றி மிக அழகாக சொல்லியதற்கு மிக்க நன்றி. எனக்கு தெரியத செய்திகளும் தெரிந்து கொண்டேன்.
நன்றியுடன் அருண்
தொன்மையும் பழமையும் வாய்ந்த இந்த திருத்தலத்தின் பரமரிப்புபற்றி ஒரு பகுதியைத்தான் சுந்தர் இங்கே குறிபிட்டுள்ளார் இன்னும் எராளமாக இருக்கிறது….
.
நிர்வாகம்தான் சரியில்லை என்றாலும் தரிசனதிருக்கு வரும் பக்தர்கள் குறைந்தபட்ச தூய்மையை கடைபிக்கவேண்டும்…ஆனால் இங்கு கூரியுள்ளதைபோல் நொறுகுதீனிகளால் குரங்குகளின் அட்டகாசமும் அதிகமாக உள்ளது….ஒரு இடத்தில் இருக்கும் குப்பைகளை எடுத்து ஆங்கங்கே சிதறி போட்டது மட்டும் இல்லது அதன் எச்சங்களையும் பக்தர்கள் நிற்கும் வரிசையில் போடுகிறது….
.
கோவிலும் மலைபதையும்தான் இப்படி இருக்கிறது என்றல் பழனி நகரும் அதே அலங்கலோமாக இருக்கிறது…..உதரணத்திற்கு சொல்லவேண்டும் என்றல் பேருந்து நிலையம் அருகே ஒரு நல்ல தேநீர்கடையை தேடி அலையும்போது தேநீர்கடையைவிட அதிகமான மதுபானக் கடைகள் (டாஸ்மாக்) அதுவும் அருகருகே இருப்பதை பார்க்கும் போது என்ன சொல்லவேண்டும் என்றே தெரியவில்லை…
.
மேற்படி இருந்தாலும்…அந்த பழனிமலை முருகனையும் அந்த திருவாசக முற்றோதல் நிகழ்ச்சியும் என் வாழ்நாளில் மரகமுடியது…அதுவும் முற்றோதலை கேட்கும் போது நம்மில் எழும் உணர்சிகளை வார்த்தைகளில் விவரிக்கமுடியாது….இந்த பொன்னான வாய்ப்பை எற்படுதிகொடுத்த இந்த தளத்துக்கும் சுந்தருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்…மேலும் இதுபோன்ற நிகழ்சிகளில் தொடர்ந்து கலந்துகொள்ள மிகவும் ஆவலாக உள்ளேன்…
.
நன்றியுடன்
மாரீஸ் கண்ணன்
திரு மனோகர் அவர்கள் சொன்னது போல் ஆலய தரிசன விதி முறைகள் இன்று பழனி போன்ற மிகப்பெரிய புண்ணிய நகரங்களை சென்று அடைந்துள்ளது, என்றால் அது நமது தளவாசகர்கள் அனைவருக்கும் கிடைத்துள்ள இறைவன் அங்கீகாரம்தான். பகவான் உங்கள் மூலம் எங்களை போன்றவர்களை வழி நடத்துகின்றார்.
நமது ‘ஆலய தரிசன விதிமுறைகள்’ நோட்டீஸ் பள்ளி மாணவர்களுக்கு பாடமாக மாறியதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.
NANDRI
நல்ல விஷயம் சார். ஊர் கூடி தேரே இழுத்தா தான் செல்லும். உங்களோட இன்னும் அதிகப்படியான நண்பர்களை இணைத்து (அணைத்து) சென்றால் இன்னும் பல செயல்களை சிறப்பாக செய்ய இயலுமே? இதில் உங்களுக்கு ஏதாவது தயக்கமா? உங்களின் பல பதிவுகளில்/ நிகழ்சிகளில் குறிப்பிட்ட நபர்களே அதிகம் தென் படுகிறார்கள், சேவையில் இணைய விரும்பும் மற்றும் பலரையும் இணைத்தால் மிக நல்லதாக இருக்கும் எனக் கருதுகிறோம். மற்றவை உங்கள் விருப்பதிருக்கு.
நீங்கள் இவ்வாறு கூறுவது எனக்கு வியப்பாக உள்ளது. நீங்கள் தளத்திற்கு புதிதாக வந்திருப்பவர் என்று கருதுகிறேன்.
ஆலய தரிசனம் ஆகட்டும், உழவாரப்பணியாகட்டும் இவை அனைத்திலும் நம் வாசகர்கள் இயன்றவரையில் கலந்துகொள்ளவேண்டும் என்று விரும்பி ஒவ்வொரு முறையும் அழைப்பு விடுக்கிறேன். தவிர தளத்தின் முகப்பில்
ஒவ்வொரு முறையும் SCROLLING வேறு அளிக்கப்படுகிறது.
உழவாரப்பணிக்கு செல்வது முதல் சமீபத்தில் குடியாத்தம் & பழனி ஆகிய ஊர்களுக்கு திருவாசகம் முற்றோதலில் கலந்து கொள்ள சென்றது வரை அனைத்தை பற்றியும் முன்கூட்டியே தளத்தில் தெரிவித்து வர விரும்புகிறவர்கள் தகவல் தெரிவிக்கும்படி கூறிவிட்டு தான் செல்கிறேன்.
என்னால் அழைப்பு மட்டும் தான் விடுக்க முடியும். முடிவு செய்யவேண்டியது சம்பந்தப்பட்டவர்கள் தான்.
எங்கள் பணிகள் அனைத்தும் வெளிப்படையானவை. கூடுமானவரை முன்கூட்டியே தளத்தில் அறிவிக்கப்பட்டே செய்யப்படுகிறது. ஆனால் நீங்கள் கூறும் குறிப்பிட்ட நண்பர்கள் மட்டுமே நம்முடன் இணைந்து பணி செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். மற்றவர்களுக்கு ஆர்வம் இல்லை என்று நான் கருதவில்லை. நடைமுறை சிக்கல்கள் தானே தவிர வேறு எதுவும் இல்லை.
இங்கே இப்போதே சொல்கிறேன்: அடுத்த உழவாரப்பணி வரும் 11/08/2013 ஞாயிறு அன்று நடைபெறும். எந்த கோவில் என்பதை விரைவில் சொல்கிறேன். விரும்புகிறவர்கள் கலந்துகொள்ளலாம்.
நன்றி!!!
– சுந்தர்
நண்பர் திரு Jaikumar V அவர்களே நீங்கள் இந்த தளத்திற்கு புதிது என்று நினைக்கிறன். நம் தளம் சார்பாக நடைபெறும் நிறைய உழவார பணிகளில் நிறைய பெண்கள் கூட பங்கு பெறுகிறார்கள்.
அணைத்து நிகழ்சிகளுக்கும் அறிவிப்பு வருகிறது அது போல் வலைத்தளத்தில் சுந்தர் தன் அலைபேசி எண்ணை கொடுத்து உள்ளார். விருப்பபடுபவர்கள் அவரை தொடர்பு கொள்ளலாம் ,அவர் தனிப்பட்ட முறையில் அனைவரையும் அழைக்க முடியாது
நண்பர்களே , வணக்கம்.
கோவில் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் மோசமான கார்யங்களால் அசுத்தப்படுவது உண்மைதான் , நிர்வாகம் அவற்றை முறைப்படுத்தவேண்டும் . ஆனால் அதனை செய்வதில்லை , மேலும் பக்தர்களும் முறையான பக்திமார்க்கம் அறியாத காரணத்தினால் அசுத்தப்படுத்துவதும் , கோவிலை ஒரு சந்திப்புக்களமாகவும் மாற்றிக்கொள்கிறார்கள் .
ஆலயம் தொழுதல் பற்றிய முறைகளை இங்கே காணுங்கள்
http://lifestyle-jothidam.blogspot.com/p/blog-page_01.html
சுந்தர் அவர்களே தங்களின் இந்த பதிவை படிக்கையில் மனம் சற்றே கணக்கிறது – பழனி போன்ற பிரசித்தி பெற்ற கோவில்களின் நிலையே இப்படி என்றால் மற்ற கோவில்களின் நிலை என்ன அன்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை – அதே சமையம் இதற்க்கு நேர் மாறாக கிராமப்புறங்களில் இருக்கும் சிறு கோவில்கள் கூட நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு பொலிவுடன் காட்சி அளிப்பதை மறுப்பதற்கில்லை – மனம் இருந்தால் மார்கம் உண்டு – நமது முயற்சியோடு பொதுமக்களின் ஒத்துழைப்பும் கோவில் நிர்வாகத்தின் பங்கும் இன்றியமையாதது – மனதில் உள்ள குப்பைகளை அகற்றவே அந்த பரமனடி தேடி வருகிறோம் – அவ்வாறு இருக்கையில் இவ்வுலகை காத்து ரட்சிக்கும் அந்த இறைவனின் இருப்பிடம் பாழ் பட நாம் அனுமதிக்கலாமா ? – உளவாரத்திருப்பணி போன்ற புண்ணிய காரியத்தினால் மட்டும்தான் இதற்கு ஒரு நல்ல விமோசனம் கிட்டும் – மேலும் கோவிலுக்குள் தனிமனித கட்டுப்பாடு மிக அவசியம் – உடுத்தும் உடை முதல் உபயோகிக்கும் வார்த்தை வரை கோவிலின் புனிதத்தன்மை பாதிக்காமல் பார்த்துக்கொள்வது அவசியம்
புனிதம் காப்போம்
புண்ணியம் சேர்ப்போம் !!!
தமிழ் நாட்டின் தலை சிறந்த கோவிலான பழனி இலா குடிக்க தண்ணீர் இல்லாத நிலைமை ? ஆலய நிர்வாகம் இதற்கு பொறுப்பேற்று நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவோம் …….
மன்னிக்கவும். நான் சொன்னது குடிக்க அல்ல. பிரசாதம் சப்பிட்டுவிட்டு கை அலம்ப.
– சுந்தர்