Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, September 12, 2024
Please specify the group
Home > Featured > யாருக்கு தேவை தண்ணீர்?

யாருக்கு தேவை தண்ணீர்?

print

ல்வேறு துன்பங்களை கடந்து பெறும் வெற்றி இருக்கிறதே அதற்கு நிகரானது இந்த உலகில் எதுவும் இல்லை. எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் ‘நாம் வணங்கும் தெய்வம் நம்மை கைவிடாது… நிச்சயம் காப்பாற்றும்’ என்கிற நம்பிக்கையை மட்டும் நாம் இழக்காமல் இருந்தால் போதும். “நான் கடவுளை முழுமையாக நம்பினேன். என் கோரிக்கையை அவர் நிறைவேற்றவில்லை” என்று நினைப்பது கூடாது.  நீங்கள் முழுமையாக நம்புவது உண்மையானால் உங்கள் மனதில் அவநம்பிக்கை தோன்றவே தோன்றாது.

கால நேரம் பார்த்து கருணை செய்வதில் கடவுளுக்கு நிகர் கடவுளே.

திரு.அம்மன் சத்தியநாதன் அவர்கள் எழுதிய ‘ஸ்ரீ ராகவந்திர மகிமை’ என்கிற நூலின் இரண்டாம் பாகத்திலிருந்து ஒரு அற்புதமான விளக்கத்தை இங்கு தருகிறேன்.

=======================================

யாருக்கு தேவை தண்ணீர்? நீங்களே சொல்லுங்கள்!

ஸ்ரீ ராகவேந்திர மகாத்மியத்தை படிக்கும் கேள்வியுறும் அனைவருக்கும் ஒரு ஐயம் ஏற்படுவது உண்டு. தன்னை நம்பாதவர்க்கு உடனேயும் நம்புகிறவர்களுக்கு பல சோதனைகளை தந்து கடைசியில் அருள்பாலிக்கிறார் ராயர் என்பது தான் அது. இது மேலோட்டமான பார்வை. உண்மை இதுவல்ல.

நான்கு பேர் நடந்து வருகிறார்கள். நல்ல வெயில். தண்ணீர் தாகம் நா வரள்கிறது. அக்கம் பக்கத்தில் வீடுகளோ கிணறோ எதுவும் இல்லை. தூரத்தில் வழிப்போக்கன் ஒருவனிடம் கொஞ்சம் நீர் இருப்பதை அறிந்து ஓடுகிறார்கள்.

அப்போது ஒருவன், “எதுக்குடா ஓடனும்? அவனாவது நமக்கு தண்ணீர் தர்றதாவது?” என்கிறான்.

“கேட்டுத் தான் பார்ப்போமே. கிடைத்தால் லாபம் என்கிறான் இன்னொருவன்.”

“நமக்கு நீர் கிடைக்கவேண்டும் என்றிருந்தால் அவன் தராவிட்டாலும் வேறு ஏதேனும் வழிகளில் கிடைக்கும்” என்கிறான் மற்றொருவன்.

இப்படியாக பலவாறாக பேசிக்கொண்டு அந்த வழிபோக்கனிடம் சென்றபோது இவர்களில் ஒருவன் மயங்கி விழுந்தான்.

உடனே அந்த வழிப்போக்கன், தன் வசமிருந்த தண்ணீரை மயங்கியன் முகத்தில் தெளித்து அவன் மயக்கம் தெளிந்தவுடன் அருந்துவதற்கு சற்று நீரும் கொடுத்தான்.

மயங்கி விழுந்தவன் தான் “இவனெல்லாம் எங்கே தரப்போகிறான்” என்று சலித்துக்கொண்டவன். ஆனால் அவனுக்கு தான் முதலில் தண்ணீர் தந்து முதலுதவி செய்து பிறகு தான் மற்றவர்களுக்கு கிடைத்தது.

நான்கு பேருக்கும் தானே தண்ணீர் தாகம். மயங்கி விழுந்தவனுக்கு எதற்கு முதலில் தரவேண்டும் என்று நாம் கேட்போமா? கேட்பது தான் நியாயமாகுமா?

அவ்வாரே ஸ்ரீராயர் தன் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கும் அருள்வார். நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கும் அருள்வார்.

நம்பிக்கை இல்லாதவர்க்கு எதற்கு முதலில் அருளவேண்டும் என்றால் மேலே சொன்ன மயக்கமடைந்தவனைப் போலத் தான் இவனும். பல்வேறு மாயையால் மயக்கமுற்றவனைத் தான் முதலில் தெளியவைக்கவேண்டும். அவனுக்கு தான் முதலுதவி தேவை.

(நன்றி : ஸ்ரீ ராகவேந்திர மகிமை – 2 ஆம் பாகம்)

=======================================

எனது ரோல் மாடல் !

மேலே கூறிய கதையில் வந்த மயக்கமடைந்தவனைப் போலத் தான் நானும் நெடுங்காலம் மயக்கத்திலிருந்தேன். தன்னை மறந்த நிலையில் விழுந்து கிடக்கும் ஒருவனைப்  போலத் தான் என் நிலை இருந்தது. பிறந்த கடமைதனை மறந்து களிப்புற்றிருந்தேன்.

ஆனால் பாறைக்கு நடுவே வேரைப் போல பாவங்களுக்கு நடுவே என்னையறியாது நான் செய்த புண்ணிய செயல்களே இறைவன் என்னை தடுத்தாட்கொண்டு ஒரு மகத்தான பணியின் பால் என்னை திருப்புவதற்கு காரணமாக அமைந்தது.

அப்படி என்னையறியாமல் நான் செய்து வந்த புண்ணிய செயல் என்ன தெரியுமா?

‘ஸ்ரீ ராகவேந்திர மகிமை’ என்னும் ராகவேந்திர சுவாமிகளின் திவ்ய சரித்திரத்தை, பக்தர்கள் வாழ்வில் அவர் நிகழ்த்திய நிகழ்த்தி வரும் அற்புதங்களை கூறும் நூல் தொகுப்பை படித்தது தான்.

இந்நூல் இதுவரை ஒன்பது பாகம் வெளிவந்துள்ளது. இந்த நூலின் ஆசிரியர் திரு.அம்மன் சத்தியநாதன் அவர்களை கடந்த பல வருடங்களாக நானறிவேன்.

தற்போது நினைப்பதையெல்லாம் வார்த்தைகளால் என்னால் வடிக்க முடிகிறது; அதை படிப்பதற்கும் நான்கு பேர் இருக்கிறீர்கள் என்றால் அதற்கு காரணம் இந்நூல் தான். ஆண்டுக்கணக்கில் இவரது எழுத்தை படித்து படித்து அந்த நடை நம்மிடம் ஏற்படுத்திய பாதிப்பு தான் இன்று நமக்கு வரும் சரளமான நடை. இந்நூலை கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக – அதாவது இதன் முதல் பாகத்திலிருந்து படித்து வருகிறேன்.

(ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் மீது நமக்கு பக்தி ஏற்பட்டது எப்படி? மகா பெரியவாவுக்கும் ராகவேந்திர சுவாமிகளுக்கும் உள்ள தொடர்பு… உள்ளிட்டவைகளை தெரிந்துகொள்ள http://rightmantra.com/?p=2436 என்ற பதிவை பார்க்கவும்.)

திரு.அம்மன் சத்தியநாதன் அப்போது ராயப்பேட்டை அஜந்தா அருகே குடியிருந்தார். வெளியான பாகம் படித்து முடித்தவுடன் “அடுத்த பாகம் எப்போது வருகிறது?” என்று அடிக்கடி இவருக்கு ஃபோன் செய்து ஆவலுடன் கேட்டபடி இருப்பேன். அந்நூலின் மேல் அப்படி ஒரு தீராக்காதல் எனக்கு. இப்படி ஒவ்வொரு பாகமும் அது வெளியாகி சந்தைக்கு வரும் முன்னர் நான் போய் இவரை இல்லத்தில் சந்தித்து வாங்கிவிடுவேன். அதே போல ஒவ்வொரு வருடமும் புத்தக சந்தைக்கு சென்று இவரையோ அல்லது இவரது இல்லத்தரசியையோ சந்தித்து பேசி இவரது நூல்களை வாங்கிவிடுவேன்.

இடது புறம் பொன்னாடையுடன் காணப்படுபவர் தான் திரு.அம்மன் சத்தியநாதன்

பக்தியின் பக்குவத்தை நான் இன்று சற்று அனுபவிக்கிறேன் என்றால் அதற்கு காரணம் இந்த நூல் தொகுப்பு தான்.

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனப் பிரவேசம் செய்து 350 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்றும் நிகழ்த்தி வரும் அற்புதங்கள் தான் எத்தனை எத்தனை… தடுத்தாட்கொள்வது, சோதித்து பின்னர் சாதனையாளராக்குவது, நோய்களை தீர்ப்பது, சகல  சௌபாக்கியங்களை தருவது, திருமணத்திற்கு உதவுவது, ஊமையை பேசவைப்பது, குருடரை பார்க்கவைப்பது, ஒன்றுமில்லாதவனுக்கு அருள் செய்து அவனை கோடீஸ்வரனாக்கி அழகு பார்ப்பது என்று அவரின் மகிமைகளை சலிக்க சலிக்க படித்தவன் நான்.

எத்தனையோ பேரை எப்படி எப்படியோ அருள் செய்து கைதூக்கிவிட்டவர் தனது திவ்ய சரித்திரத்தை எழுதியவரை மட்டும் விட்டுவிடுவாரா?

மேலே படியுங்கள்…..

ஸ்ரீ ராகவேந்திர மகிமை நூலை எழுத ஆரம்பித்த திரு.அம்மன் சத்தியநாதன், அப்படியே ஒரு பதிப்பகத்தை துவக்கி வேறு பல ஆன்மீக நூல்களும் எழுதி வெளியிட ஆரம்பித்தார். பல பக்தி ஆன்மீக நூல்கள் பதிப்பிக்கப்பட்டன. இன்றைக்கு நூற்றுக்கணக்கான தரமான ஆன்மீக நூல்களை இவரது பதிப்பகம் வெளியிட்டு வருகிறது.

‘ஸ்ரீ ராகவேந்திர மகிமை’ நூலுக்கு கிடைத்த அபார வரவேற்பையடுத்து நூல் ஒவ்வொரு பாகமாக வெளியிடப்பட்டு இதுவரை ஒன்பது பாகம் வெளியாகிவிட்டது. (ஒரு நூல் குறைந்தது 500 பக்கங்கள் இருக்கும்.)

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் திவ்ய சரித்திரத்தை தவிர இதில் பாதிக்கும் மேல் பக்தர்கள் வாழ்வில் ஸ்ரீ ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதங்கள் தான் CONTENT என்றால்  சுவாமிகள் எத்தனை எத்தனை அற்புதங்களை நிகழ்த்தியிருப்பார் என்று யூகித்துக்கொள்ளுங்கள்.

எளிமையாக ஆரம்பித்த திரு.அம்மன் சத்தியநாதனின் பதிப்பகப் பயணம் போகப் போக வளர்ச்சியடைந்தது.  இடையிடையே பல்வேறு சோதனைகளை இவர் சந்திக்காமலில்லை. இருப்பினும் ராகவேந்திரரின் பரிபூரண கருணா கடாக்ஷம் அவருக்கு இருந்தபடியால் அனைத்தையும் வென்று இன்று பதிப்பகத் துறையில் ஒரு முக்கிய இடத்தில் இருக்கிறார். அன்பான மனைவியும், சாட்சாத் கலைமகள், அலைமகள் போல இரண்டு மகள்களும் உள்ளனர்.

‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்’ நூல் வெளியீட்டு விழாவில்….

இந்த வளர்ச்சி ஒரே இரவில் ஏற்பட்டதல்ல. சுமார் 25 ஆண்டு கால உழைப்பின் பலன் அது. ராகவேந்திரர் இருப்பார் எல்லாம் கொடுப்பார் என்று மந்திரத்தில் மாங்காய் எதிர்பார்த்து இவர் சும்மா உட்காரவில்லை. ஒவ்வொரு பாகத்தையும் ஒன்றை ஒன்று விஞ்சி சிறப்பாக எழுதவேண்டி ராகவேந்த்ரரின் அவதாரம் தொடர்பான பல இடங்களுக்கு பயணம் மேற்கொண்டார். அல்லும் பகலும் பல ஆராய்ச்சிகள் செய்தார். பல நூல்கள் படித்தார். அதன் விளைவு தான் இன்று அவர் சுவைத்து வரும் வெற்றிக்கனி.

சகல சௌபாக்கியங்களுடன் கூடிய படிப்படியான வளர்ச்சி என்றால் அது திரு.அம்மன் சத்தியநாதன் அவர்களுக்கு ஏற்பட்டது தான். அவரை கடந்த பலவருடங்களாக கவனித்து வந்தவர்களுக்கு அது தெரியும்.

தன்னையே அனுதினமும் நினைத்து தனது வரலாற்றை மகாத்மியத்தை ஒய்வு ஒழிச்சலின்றி எழுதிய பக்தருக்கு தனக்கு எதிரிலேயே இறுதியில் இடம் தந்து அமரவைத்துவிட்டார் குருராஜர்.

திருவல்லிக்கேணி ராகவேந்திர சுவாமிகளின் பிருந்தாவனத்திற்கு எதிரே இவரது விஸ்தாலமான  ‘அம்மன் பதிப்பகம்’ ஷோரூம் சொந்த கட்டிடத்தில் இயங்கிவருகிறது. பக்திநூல்கள், சி.டி.க்கள், பூஜை சாமான்கள், உள்ளிட்ட அனைத்தும் இங்கு கிடைக்கும். தவிர திருவல்லிக்கேணியிலேயே அவருக்கு சொந்தமான ஃபிளாட் ஒன்றில் பதிப்பகத்தின் அலுவலகம் இயங்கி வருகிறது.

பதிப்பகத் துறையில் எதிர்காலத்தில் ஈடுபட்டு முத்திரை பதிப்பதே என் லட்சியம். அந்த வகையில் இவர் தான் எனக்கு நேரடி ரோல்மாடல் என்று கூறலாம்.

தன்னுடைய அறிவையும் ஆற்றலையும் ஆக்கப்பூர்வமான வழிகளில் செலுத்தி மற்றவர்களின் நன்மைக்கு பயன்படுத்தி அதை வைத்து வாழ்வில் உயர்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படி உயர்ந்தவர்களுள் இவரும் ஒருவர். இப்போது தெரிந்திருக்குமே திரு.அம்மன் சத்தியநாதன் அவர்களை எனது ரோல்மாடல் என்று ஏன் குறிப்பிட்டேன் என்று.

சென்ற ஆண்டு இறுதியில் – ராகவேந்திரர் அவதரித்த தலமான புவனகிரியில் – ஸ்ரீ ராகவேந்திர மகிமை நூலின் 9 ஆம் பாகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொள்ளும்படி திரு.சத்தியநாதன் நமக்கு அழைப்பு விடுத்திருந்தார். தவிர்க்க இயலாத காரணங்களினால் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை.

இராகவேந்திர மகிமை 9-ஆம் பாகம் நூலை பெறும்போது…

அடுத்து அயனாவரம் ராகவேந்திர சுவாமி பிருந்தாவனத்தில் திரு.சத்தியநாதன் எழுதிய ‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்’ நூல் உள்ளிட்ட வேறு சில நூல்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது. பக்தியிற் சிறந்த சான்றோர்களும் ஆன்றோர்களும் பங்கேற்க வெகு விமரிசையாக நடைபெற்ற அந்த விழாவிற்கு சென்றிருந்தேன். ‘ஸ்ரீ ராகவேந்திர மகிமை’ 9 ஆம் பாகம் நூலை வாங்கினேன். பின்னர் நம் தளத்தின் சார்பாக அச்சிடப்பட்ட காலண்டரையும் அவருக்கு பரிசளித்தேன்.

சில நாட்களுக்கு முன்பு திரு.சத்தியநாதன் அவர்களை தொடர்புகொண்டு, நமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி இதுவரை பிரார்த்தனைக்கு தலைமையேற்றவர்களை பற்றியும் விளக்கினேன். அடுத்து வரவிருக்கும் பிரார்த்தனைக்கு தலைமையேற்கவேண்டும் என்று இவருக்கு அழைப்பு விடுத்தேன். மிக்க மகிழ்சியுடன் உடனே ஒப்புக்கொண்டார்.

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் திவ்ய சரித்திரத்தை மகாத்மியத்தை எழுதியடோடல்லாது அவரது உபதேசப்படி வாழ்ந்து வரும் சாதனையாளர் ஒருவர் நமது பிரார்த்தனை கிளப்பிற்கு தலைமை ஏற்பது நாம் செய்த பாக்கியம். அந்த குருராஜரின் சித்தம்.

இந்த வார கோரிக்கைகளை பார்ப்போம்…

==========================================

I love India….

Dear Sundar,

I am a big fan of you and your RightMantra activities. I need a great favour from you through the Praarthana Club.

Currently I am working in Saudi Arabia and staying with my family (wife and 2 kids) here. As my family has no interest in staying in this country anymore, I would like to look out for better offers in Dubai or India (Bangalore, Hyderabad or Chennai). I would like the Praarthana Club members to pray for the same. May all your life be filled with peace and joy.

Thanks
Raman
Saudi Arabia

==========================================

Get well soon Ammaa…

Dear Anna,

My periyammaa admitted in Apollo hospital for heart and lung problem.

she is in ICU.. kindly add for dis week’s prayer.
Name-Lakshmi Age-64.

Suffering from pulmonary disease–infection in heart and lungs.. currently in ICU-APOLLO HOSPITAL

Regards
Hariharsudhan

==========================================

லட்சியத்தில் வெல்லவேண்டும்

என் நண்பர் திரு.சிட்டி அவர்கள் மிகப் பெரிய லட்சியத்துடன் – பல்வேறு லௌகீக தேவைகளை துறந்து – அல்லும் பகலும் உழைத்து வருகிறார். தனது லட்சியத்தில் அவர் வெற்றி பெற்று, எல்லாவித இன்பங்களையும் அவர் பெறவேண்டும், அவர் பெற்றோர் மனம் குளிரவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

==========================================

இந்த வார பிரார்த்தனையின் போது பழனியில் நாம் திருவாசகம் முற்றோதலில் அன்னை ராஜம்மாள் மற்றும் தாமோதரன் ஐயா ஆகியோருடன் இருப்போம். அங்கிருந்தபடியே பிரார்த்தனை நேரத்தில் அவர்களுடன் சேர்ந்து பிரார்த்தனையில் ஈடுபடவிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

தவிர இந்த வார பிரார்த்தனைக்கான் கோரிக்கையை சமர்பித்திருக்கும் ஹரிஹரசுதன் ராகவேந்திர சுவாமிகளின் பக்தர். ஹரிஹரசுதனின் கோரிக்கை இதில் இடம்பெற்றது திட்டமிட்டு நடக்கவில்லை. ராயரின் விருப்பம். ஏனெனில் இன்று வரைக்கும் பிரார்த்தனைக்கு தலைமையேற்க இருப்பவர் யார் என்று எவருக்கும் நான் சொல்லவில்லை. (சஸ்பென்ஸ் கருதி).

அடுத்து நண்பர் சிட்டி. நட்பு என்கிற சொல்லுக்கு உதாரணமாய் திகழ்பவர். இவரை பற்றி நேரம் வரும்போது நான் சொல்கிறேன். சற்று நிறையவே. சிட்டி அவர்கள் என்னை விட வயதில் மிகச் சிறியவரானாலும் பக்குவத்தில் எனக்கு மூத்த சகோதரனை போல.

ஒரு மிக பெரிய லட்சியத்துக்காக தன்னை ஒடுக்கிக்கொண்டு பேஸ்புக், அலைபேசி, முதலியவற்றை துறந்து உழைத்துக்கொண்டிருக்கிறார். அவரது லட்சியத்தில் அவர் மாபெரும் வெற்றி பெற்று நினைத்ததை அடைய வேண்டும் என்பதே நம் விருப்பம்.

எந்திரத்தனமான வாழ்க்கையில் எத்தனை நாள் தான் உழல்வது?

அடுத்து நம் வாசகர் திரு.ராமசுப்ரமணியன். கடந்த வாரம் தான் தனது மகனுக்கு பிறந்தநாள் என்று கூறி பிரேமவாசத்தில் குழந்தைகளுக்கு உணவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து எனக்கு பணம் அனுப்பியிருந்தார். இவர் கேட்ட தேதியில் குறித்த நேரத்தில் பிரேமவாசம் குழந்தைகளுக்கு வடை பாயசத்தோடு உணவு கொடுக்க ஏற்பாடானது. இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் சம்பந்தப்பட்ட புகைப்படங்களையும் இரசீதையும் அனுப்பியிருந்தேன்.

எல்லோரும் இங்கிருந்து அரபு நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று செட்டிலாகி பணத்தை குவிக்கவேண்டும் என்று துடிக்க இவர் அங்கிருந்து இங்கு வந்து தமிழ்நாட்டில் செட்டிலாகவேண்டும் என்று துடிக்கிறார். அதன் காரணத்தை அறிய முடிகிறது. நாமெல்லாம் ஒருவகையில் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். கைநிறைய சம்பாத்தியம், நெடிதுயர்ந்த கட்டிடங்கள், பளப்பளா சாலை, ஷாப்பிங் மால்கள், பொழுதை கழிக்க எண்ணற்ற கேளிக்கைகள் – இவை வேண்டுமானால் மேல் நாடுகளில் தடுக்கி விழுந்தால் இருக்கலாம். ஆனால் நமது ஆன்மாவுக்கு நிம்மதி அளிக்ககூடிய நமது தாய் மடி போன்ற திருக்கோவில்கள் அங்கு உண்டா? நினைத்த நேரத்தில் நினைத்த பக்தி நூல்கள் வாங்க முடியுமா? கோவில்களுக்கு செல்ல முடியுமா? சொந்த பந்தங்களை பார்க்க முடியுமா?

எந்திரத்தனமான வாழ்க்கையில் எத்தனை நாள் தான் உழல்வது. பசிக்கு உணவு வாங்க பணம் நிறைய தேவை தான். ஆனால் எத்தனை பசியிலும் அந்த பணத்தை சாப்பிட முடியாதே?

திரு.ராமசுப்ரமணியன் அவர்கள் தாய்நாடு திரும்பி இங்கு நல்ல வேலை கிடைத்து வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

=============================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpg

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்க்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

=============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

பிரார்த்தனை நாள் : ஜூலை 28, 2013 ஞாயிறு

நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================
இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131
=======================================================

11 thoughts on “யாருக்கு தேவை தண்ணீர்?

  1. சுந்தர் சார்

    தங்களுடைய அறிவையும் ஆற்றலையும் தாங்கள் ஆக்கப்பூர்வமான வழிகளில் கொண்டு செல்ல உந்துதலாய் இருந்த திரு.அம்மன் சத்தியநாதன் அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம் சார்.

    உங்கள் ரோல் மாடல் மிகவும் அருமை சார் ..

    நன்றி நன்றி சார்..

  2. திரு.ராமசுப்ரமணியன் அவர்கள் தாய்நாடு திரும்பி இங்கு நல்ல வேலை கிடைத்து வாழ்வாங்கு வாழ்வதற்கும், ராகவேந்திரா சுவாமிகளின் பக்தர் திரு. ஹரிஹரசுதன் அவர்களின் பெரியம்மா திருமதி. லக்ஷ்மி அவர்கள் பூரண குணமடையவும், உங்கள் நண்பர் திரு. சிட்டி அவர்கள் தனது லட்சியத்தில் வெற்றி பெற்று, எல்லாவித இன்பங்களையும் அவர் பெறவேண்டும், அவர் பெற்றோர் மனம் குளிரவேண்டும் என்றும் நமது தளத்தின் சார்பாக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.

  3. என் குடும்பத்துக்காக பிரார்த்தனை செய்யும் அனைத்து நல்லுள்ளனகளுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

  4. சுந்தர் சார் உங்கள் லட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள்

  5. சுந்தர்ஜி,

    ரோல் மாடல் ஆக தேர்ந்து எடுத்த அம்மன் சத்தியநாதன் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். மிகவும் பொருத்தமான ஒருவரை தான் ரோல் மாடல் ஆக எடுத்து கொண்டு உள்ளீர்கள். வெற்றி கூடிய விரைவில்……….

    இன்று பிரார்த்தனையில் இடம் பெற்றுள்ள
    திரு.ராமசுப்ரமணியன் அவர்களுக்கு இங்கு நல்ல வேலை கிடைக்க வேண்டியுய்ம் பக்தர் திரு. ஹரிஹரசுதன் அவர்களின் பெரியம்மா திருமதி. லக்ஷ்மி அவர்கள் பூரண குணமடையவும், உங்கள் நண்பர் திரு. சிட்டி அவர்கள் தனது லட்சியத்தில் வெற்றி பெற்று, எல்லாவித இன்பங்களையும் அவர் பெறவேண்டும், அவர் பெற்றோர் மனம் குளிரவேண்டும் என்றும் நமது தளத்தின் சார்பாக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம். –

    நன்றி

  6. சுந்தர் சார்,

    உங்களின் ரோல் மாடல் திரு.அம்மன் சத்தியநாதன் அய்யாவாக இருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது.

    நன்றியுடன் அருண்.

  7. சுந்தர்ஜி , முன்பு ஒரு பதிவில் (http://rightmantra.com/?p=3610) குறிப்பிட்டபடி குருராஜரும் நம் தளத்தை ஆசீர்வாதம் செய்துவிட்டார் என்பதற்கு உதாரணமான மற்றோர் பதிவு இது. தம் பரம பக்தரான திரு அம்மன் சத்தியநாதன் அவர்களை நம்மோடு இணைத்தது வைத்தவர் சுந்தர் மூலம் சாட்சாத் குருராஜர் தான் என அடியேன் எண்ணுகிறேன்.

    திரு அம்மன் சத்தியநாதன் அவர்கள் “கடவுளை நம்பினோர் கைவிடபடமாட்டார் ” என்பதற்கு ஒரு ரோல் மாடல். அது போல் சுந்தரும் எதிர்காலத்தில் ஒரு ரோல் மாடல் ஆவார் என நினைக்கிறேன். ஏனென்றால் அவர் நமக்கு இத்தனை பதிவுகள் போட்டு நம்மை நல்ல உள்ளங்களின் மத்தியில் சேர்க்க எத்தனை பாடுபடுகிறார். நன்றி சுந்தர்ஜி என்பது என்னை பொறுத்தமட்டில் மிக குறைவு. நலமோடு வளமோடு அவர் வாழ குருராஜர் ஆசீர்வதிக்கட்டும்.

    ஏன்னென்றால் பதிவுகளை படித்து விமர்சனம் செய்யவே நமக்கு சிரமமாக உள்ளது. அவர் பல்வேறு பணிகளுக்கு இடையில் நமக்காகவும் சேர்த்து எப்படி பணிபுரிகிறார் என்பது அவரும் கடவுளும் மட்டுமே அறிந்த செய்தி. முடிந்தால் அனைவரும் மந்திராலயம் சென்றால் நன்றாகதான் இருக்கும். நன்றியாகவும் இருக்கும்

  8. Hi Sundarji,

    Thanks so much for your love and care towards me. I don’t think so that I have done anything much – to you, to people and to the world so far – compared with you and the great team of Rightmantra.

    Yet, you have taken me as far higher than the actual. Thanks once again.

    Most of them are helping silently towards the needy through Rightmantra. I’m indeed happy for those people and Sundarji and God who made him as a vehicle to do good to the needy.
    ***
    About the author Amman Satyanathan, because of him only, I became an ardent devotee of Sri Ragavendra after reading his books – ‘Ragavendra Mahimai’ from part 1 to 9.

    And sure, one day, you will also become like him – as a great publisher and author of good and most valuable books. My sincere wishes for that.
    ***
    And Thanks once again for all the lovely hearts who will be praying for us. I will also pray for my friend Hari’s mom and Raman as well.
    ***
    **Chitti**.
    Thoughts becomes Things.

    1. CHITTI sundar anna is predicting the future!!
      Thats the amount of confidence HE HAS ON YOU!!!
      And I am sure you will uphold it in STYLE!!
      And ma wishes to MA GOOD FRIEND !!
      ROCK ON CHITTI!!
      REMEMBER THE DEAL WE MADE ON DEC 31 2012!!
      Lets rock!!

  9. By the grace of GURU RAGHAVENDRA , my periamma has been discharged from hospital on last Saturday.
    Thanks everyone for their timely prayers..will be grateful for it always!!Blessed to have such people who pray for others!!
    And the article was a co-incidence—what else can i ask for!!!ALL GURU ‘S GRACE!!!
    And I am pretty sure that CHITTI will rock in his endeavour towards his goals because HE KNOWS THE SECRET to attain them!!
    And this article has answered few doubts that were arising in ma mind–!!!thanks for SUNDAR anna..
    Couldnt catch up with our articles till now—but will do it from now—
    “late ah vandalum latest ah varuvomla!!!”
    Regards
    R.HariHaraSudan.
    “HE WHO KNOWS THE SELF KNOWS ALL”

  10. குருராயரின் மகிமை பற்றி அறிந்துகொள்ள மற்றுமொரு அருமையான நூலை பற்றி விளக்கியமைக்கு மிக்க நன்றி !!!

    எல்லோருடைய பிரார்த்தனைகளும் நிறைவேறி
    எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று
    மனநிம்மதியோடும் நீண்ட ஆரோக்யத்தோடும் வாழ
    அந்த பரம்பொருள் அருள் புரிவாராக !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *