குழந்தைகள் விஷமம் செய்தால் அந்த காலத்தில் எப்படி அதட்டுவார்கள் தெரியுமா? “உன் கல்யாணக் கையை வெச்சிகிட்டு சும்மாயிருக்க மாட்டே?”, “உன் கிருஷ்ண குறும்பை நிறுத்து முதல்லே” என்று தான். குழந்தைகளை வைவதில் கூட எத்தனை ஒரு பாசிடிவ் அப்ரோச் பாருங்கள். ஏனெனில் குழந்தை விஷமம் தாங்காது நாம் அதை ஏதேனும் திட்டப் போக அப்படியே பலித்துவிடும் வாய்ப்பிருக்கிறது.
இப்பொழுதும் என் வீட்டில் மளிகை சாமானுக்குரிய பணத்தை ஒவ்வொரு மாதமும் அம்மாவிடம் லேட்டாகத் தான் தருகிறேன். (அதுல தானே நாம் கை வைக்க முடியும்?). அது போன்ற நேரங்களில் வீட்டில் மளிகை பொருட்கள் காலியாகிவிடும். அப்படி காலியாவதை கூட என் அம்மா அழகாக சொல்வார்கள். “வீட்ல மளிகை சாமான்லாம் நிறைஞ்சிருக்குடா. சீக்கிரம் வாங்கி போடு!!” என்று.
நல்லவிஷயங்களை பேசுவதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துவதற்காகத் தான் வள்ளுவர், ‘இனியவை கூறல்’ என்னும் அதிகாரத்தையே தந்திருக்கிறார். நல்ல விஷயங்களை பேசுங்கள் அது நிச்சயம் நடக்கும் என்கிறார். வள்ளுவர் வார்த்தைக்கு மறுமொழி உண்டோ?
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின். (குறள் 96)
(பொருள் : பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.)
“துடைச்சு குடுத்துட்டேன்… எல்லாத்தையும் இழந்துட்டேன்… தரித்திரம் பிடிச்சிடுச்சு …. நான் எங்கே போவேன்… என் கிட்டே இல்லை… அது வரவே வராது…. அவன் தரமாட்டான்…. கையை விரிச்சிட்டேன்…. வீட்டில ஒன்னும் இல்லை….” இது போன்ற அன்றாடம் சிலர் உபயோகிக்கக் கூடிய எதிர்மறை சொற்களை நீங்கள் மறந்தும் கூட உச்சரிக்கவேண்டாம்.
பகுத்தறிவு வேடம் பூண்டு மீறி உச்சரித்தவர்கள் நிலை என்னவானது என்பதை கீழே தந்திருக்கும் சோ அவர்களின் கட்டுரை மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.
சென்ற வாரம் ஒரு நாள்….. குமுதம் இதழை படித்துக்கொண்டிருந்தேன். பத்திரிக்கையாளரும் நடிகருமான ‘சோ’ அவர்கள் குமுதத்தில் தன்னுடைய திரையுலக அரசியல் அனுபவங்களை ‘அண்ணே வாங்கண்ணே’ என்ற பெயரில் தொடராக எழுதி வருகிறார். அதில் இந்த வாரம் அவர் ‘அவநம்பிக்கையான வார்த்தைகளை தவிர்க்கணும்’ என்ற தலைப்பில் சில முக்கிய விஷயங்களை தனது திரையுலக அனுபவத்திலிருந்து குறிப்பிட்டுள்ளார். அனைவரும் படித்து தங்கள் நட்புக்கும் சுற்றத்துக்கும் பகிர்ந்துகொள்ளவேண்டிய ஒன்று இது. (படித்தவுடன் நீங்கள் நிச்சயம் அதை செய்வீர்கள்!!) அந்தளவு மிகப் பெரிய விஷயங்களை அனுபவப்பூர்வமாக திரு.சோ. சொல்லியிருக்கிறார்.
சோ அவர்களின் சில கொள்கைகளில் எனக்கு உடன்பாடு கிடையாது. மற்றபடி அவர் ஒரு மிகச் சிறந்த எழுத்தாளர் என்பதிலோ அல்லது சாஸ்திர சம்பிராதயங்களை நன்கறிந்தவர் என்பதிலோ அறிவாளி என்பதிலோ எவருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ‘மகாபாரதம் பேசுகிறது’ என்கிற தலைப்பில் ‘துக்ளக்’கில் தொடரே அவர் எழுதியிருக்கிறார் என்றால் அவரது KNOWLEDGE பற்றி நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு (குறள் 423)
இந்த வாரம் அவர் குமுதத்தில் எழுதியிருக்கும் அத்தியாயத்தில் அவநம்பிக்கையான சில வார்த்தைகளை விளையாட்டாக கூட சொல்வது எந்தளவு சம்பந்தப்பட்டவர்களை படுகுழியில் தள்ளியிருக்கிறது என்பதை மிக அற்புதமாக விளக்கியிருக்கிறார். மேலும், மற்றவர்கள் பேசத் தயங்கிய அவநம்பிக்கையான வசனங்களை மார் தட்டிக்கொண்டு முன்னின்று பேசிய பகுத்தறிவுவாதி ஒருவர் காணாமல் போன விபரத்தையும் குறிப்பிட்டிருக்கிறார்.
படியுங்கள். பகிர்ந்துகொள்ளுங்கள். முக்கியமாக உங்கள் மனைவியிடம் அல்லது அம்மாவிடம். அவர்களுக்கு தெரியும் இதன் முக்கியத்துவம். (குமுதத்தை வாங்க விரும்பினால் இன்றே வாங்கிவிடுங்கள். நாளை புது இதழ் வந்துவிடும். உங்கள் வசதிக்காக அட்டையை கூட ஸ்கேன் செய்து இணைத்துள்ளேன்!)
Double Click the image to ZOOM and READ
====================================
====================================
Double Click the image to ZOOM and READ
====================================
Double Click the image to ZOOM and READ
====================================
DOUBE CLICK TO ZOOM & ENLARGE THE SCAN IMAGES
[END]
சூப்பர் சுந்தர் !!.மேலே குறிப்பிட்டுள்ள அத்துணை அவசொற்களும் இன்றைய சூழ்நிலைகளில் மிகவும் சாதரணமாக நிறைய பேர் உபயோகிறார்கள். அது எவ்வளவு பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது நன்றாக புரிகின்றது.
நம் வாசகர்கள் எல்லோரும் இதை பின்பற்றி சுற்றத்தாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
நன்றி !!
நல்ல பதிப்பு!
நேர்மறை எண்ணங்கள் மட்டும் அல்ல நேர்மறை சொல்லாடலும் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது !
பெரியவர் சோ அவர்களின் அனுபவ பகிர்வும் நண்பர் சுந்தரின் நல்ல எண்ணமும் எல்லோருக்குள்ளும் மாற்றம் உண்டாக்கட்டும் !
அன்புடன்
முத்து – திருவெறும்பூர்
nallathu nadakkattum…..
Very good article ,thanks for sharing .
நாம் சொல்லும் சொற்களுக்கு சொல்பவர்க்கும் அந்த சூழ்நிலைக்கும் ஏற்றபடி பலன் கண்டிப்பாக இருக்கிறது. எப்படி நல்ல மந்திரங்கள் நம்மை தெய்வத்திடம் அழைத்து செல்கிறதோ அதைபோல் எதிர்மறை சொல்லும் பலன் தரும். இதை என் சொந்த வாழ்விலும் நான் உணர்ந்து மாற்றி இருக்கிறன். பெரும்பாலும் கோபத்தில் தான் இதுமாதிரி நடக்கும். இந்த பதிவு எல்லோர்க்கும் தற்போது மிக தேவை யான பதிவு. அவசர யுகத்தில் அவசரமாக பேசி அவசரமாக விளைவும் அனுபவிக்க வேண்டியதுதான். நிதர்சனமான உண்மையை சொன்ன சோவுக்கும் அதை எங்களிடம் சேர்பித்த சுந்தருக்கும் நன்றி
சுந்தர் சார், it is very good article. keep it up.
அருமையான பதிவு. நன்றி சுந்தர்.
திரு.சோ அவர்களின் அனுபவத்திலிருந்து அவர் மற்றவர்களிடம் நிறைய கற்றுக்கொண்டுள்ளார் என்பது புரிகிறது. அவச்சொற்களை தவிர்ப்பது மிகவும் அவசியம் என்பதை என் அனுபவத்தில் நானும் பலசமயம் உணர்ந்திருக்கிறேன். நமக்கு தெரிந்தவர்களிடம் நாம் அவசியம் பகிர்ந்துகொள்ளவேண்டிய பதிவு. நன்றி சுந்தர்.
நல்ல சொற்களே!!! உன்னை பகவானிடத்தில் கொண்டு சேர்க்கும் பாதையாக அமையும்….
-Uday
சுந்தர் சார்
அனைவரும் அவசியம் பகிர்ந்துகொள்ளவேண்டிய நல்ல பதிப்பு!
நன்றி சார் ..
நல்லதொரு பதிவை கொடுத்த மைக்கு நன்றி. எத்தனை அருமையான மனிதர்கள் சினி பீல்டில் இருந்திருக்கிறார்கள்!!
சுந்தர் சார்,
சூப்பர். நல்ல விசயங்களை சோ அவர்களிடம் இருந்து குமுதம் வெளியிடு செய்திருக்கிறது. அதை நீங்கள் மிக அருமையாக எங்களுக்கு கொடுத்தது. சூப்பர்.!
நன்றியுடன் அருண்.
சுந்தர்ஜி,
டைட்டில் போட்டோ ரொம்பவும் அழகாக உள்ளது.
நெகடிவ்வான வார்த்தைகளை விளையாட்டுக்கு கூட பயன்படுத்த கூடாது. சத்தியமான உண்மை.
நான் கேட்டு தெரிந்ததை இங்கு பகிர்ந்து கொள்கின்றேன்.
——————————————————————————————————
ஒரு முறை மஹா பெரியவாளிடம் ஒரு தம்பதிகள் கண்ணீர் விட்டு அழுது கொண்டே இருந்தனர்.ஏம்பா அழறே என்று வாஞ்சையுடன் கேட்க. நான் என்ன பாவம் செய்தேன். ஏன் எனக்கு இப்படி ஒரு சோதனை என் பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்து ஒரு வருடத்திற்குள் ஆம்படையான் போய்ட்டான் என்னால தாங்க முடியல என்று விம்மி அழுகின்றார். அதற்க்கு மஹா பெரியவா நீதாண்டா காரணம். நீ என்ன சொல்லி உன் பெண்ணை திட்டி கொண்டு இருந்தாயோ அதன் படி நடந்து விட்டது என்றார்.அதிர்ச்சியாக தலையில் அடித்து கொண்டு அழுத அவரை சமாதானம் செய்து கவலை படாதே வேறு ஒரு கல்யாணம் பண்ணி கொண்டு சௌக்கியமாக இருப்பாள் இனிமேலாவது இந்த மாதிரி அமங்கல சொற்களால் திட்டுவதை நிறுத்து என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார்.
===============================================================
எனவே நாம் தெரியாமல் அன்றாடம் உபயோகிக்கும் வார்த்தைகளை அறவே நிறுத்தி விட வேண்டும்.
நன்றி
அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய ஒன்று.
நன்றி.
– சுந்தர்
ஆக்கபூர்வமான பதிவு !!!
தன் எண்ணத்திற்கு மாறாக ஒருவர் நடக்கும்போது, நமக்கு பிடிக்காத செயலை வழிய வந்து செய்யும்போது எரிச்சலும் ஆத்திரமும் பிறக்கிறது – இதுபோன்ற சூழ்நிலைகளை கையாள தெரிந்தவர்கள் அதனை மிக லாவகமாக யார் மனமும் கோணாமல் கையாள்வார்கள் – ஒன்று அந்த இடத்தை விட்டு சென்றுவிடுவார்கள் மற்றொன்று அமைதியாக இருந்து நிலைமையை கூர்ந்து கவனிப்பார்கள் – தீய எண்ணங்களையும் சொற்களையும் மனதாலும் நம்மை அண்டவிடாமல் பார்த்துக்கொள்வதன் அவசியத்தை இந்த பதிவு மிக அழகாக விளக்கியுள்ளது !!!
வாழ்க வளமுடன் !!!
நான் ரொம்ப நாள் கழித்து, இங்கு உள்ள பதிவுகளை படித்தேன்
மனது பல நாட்கள் பல உளைச்சல் குழபங்க்ளால் மனது அலைபாய்ந்து கொண்டு இருந்தது… மானத்தில் ஒரு இறுக்கம் ஒரு வெறுப்பு
பல மாதங்கள் இதே நிலைமை
இன்று கூட மனதில் ஒரு கற்பனை போர் நடந்து கொண்டு இருந்தது
ஆனால் இன்று எதோ ஒரு காரணத்திற்காக நான்
எதேர்ச்சையாக இந்த பதிவை படிக்க நேர்ந்தது
நான் எவளவு பெரிய தவறை செய்து வந்துள்ளேன் என்பதை இந்த பதிவு உணர்த்துகிறது
இப்படி கடும் சொல் பேசாமல் இருக்க முடியுமா தெரியவில்லை
முயற்சிக்கிறேன் ….
என்னை பாதித்த, என்னை மாற்றிய, நான் நம்பும் விஷயங்களையே இங்கு பெரும்பாலும் பதிவு செய்கிறேன்.
நீங்கள் குறிப்பிடும் இந்த பதிவு (சோ அவர்கள் கூறியிருப்பது) என்னை மிகவும் சிந்திக்க வைத்தது. குறிப்பாக தங்கவேலு அவர்கள், ஒரு வார்த்தை பலிப்பதற்கு ஒருவர் மகானாகத் தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. சொல்லக்கூடிய நேரமும் முக்கிய பங்குய் வகிக்கிறது. எனவே அப்போதும் நல்ல வார்த்தைகளையே பேசவேண்டும் என்று கூறியிருந்தது என் கண்களை திறந்தது.
நான் ஏற்கனவே எப்படி என்று உங்களுக்கு தெரியும். I MEAN எந்தளவு ஒரு பாசிட்டிவ்வான ஆள் என்று. இதை படித்தது முதல் 100% பாசிடிவ்வான ஆளாக மாறிவிட்டேன்.
– சுந்தர்
சுந்தர் அவர்களே நமது வீடுகளில் எப்போதும் இருக்கும் க்ருஹலக்ஷ்மி பற்றியும் சிறிது தகவல்கள் தந்தால் நன்றாக இருக்கும்..
ஏனென்றால் நானும் சிலர் சொல்ல கேட்டுள்ளேன். நமது வீடுகளில் இது போன்ற வார்த்தைகள் கேட்காமல் பார்த்து கொள்ளவேண்டுமென்று.. ஆனால் இப்போதெல்லாம் தொலைகாட்சி சீரியல்களில் வரும் வார்த்தைகள் நெகடிவ் ஆனா வார்த்தைகள் மட்டுமே..இதை போன்ற வார்த்தைகள் வரும்போதாவது அதனை மாற்றி வேறு சானெல் பார்க்கலாமே என்று கூறினால்.. நமது வீடுகளில் கூட கேட்பதில்லை..
இதனை பற்றி ஒரு பதிவு இட்டால்.. நன்றாக இருக்கும் என்பது.. அடியேனின் தாழ்ந்த கருத்து..
நிச்சயம். நன்றி.
– சுந்தர்
திரு சுந்தர் அவர்களுக்கு நன்றி , நன்றி , நன்றி ,
நான் ஒரு முறை குல தெய்வம் செர்ச் செய்கியல் ரைட் மன்ற .கம வந்தது மஹா பெரியவ சொன்ன குலதெய்வம் குறித்து அறிந்ட்து என் மணைவிஎடமும் மற்றும் நண்பர்களிடமும் பகிரிந்து கொண்டு இர்ருககிரன் நன்றி
அருமையான பதிவு