தன்னுடைய பிரச்னை குறித்து நண்பர் ஒருவரிடம் சொன்னபோது அவர் பக்கத்து நகரில் உள்ள பிரபல முதியோர் மற்றும் அனாதை குழந்தைகள் இல்லத்துக்கு சென்று அங்குள்ள நிர்வாகியை சந்தித்து பேசும்படியும் அப்படி பேசினால் உங்களுக்கு ஒரு விடை கிடைக்கும் என்று கூறினார்.
நண்பர் குறிப்பிட்ட அந்த ஆதரவற்றோர் இல்லத்துக்கு சென்றபோது – வாழ்க்கையில் வழியேதும் இல்லாமல் அங்கு அடைக்கலம் பெற்றிருந்தாலும் அங்கிருப்பவர்கள் அனைவர் முகத்திலும் – பணிபுரிபவர் உட்பட – அனைவரிடத்திலும் ஒரு வித சாந்தி ஒரு மனநிறைவு இருப்பதை பார்க்கிறார்.
அதன் நிர்வாகியை பார்த்து தனது பிரச்னையை இந்த செல்வந்தர் சொன்னவுடன், அவர் தனது அலுவலகத்தில் தரையை துடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பெண்ணை அழைத்தார்.
அந்த பெண்ணை பார்க்கும்போது வறுமையிலும் மனநிறைவோடு மகிழ்ச்சியோடு இருப்பவர் போல இருந்தார்.
“இவங்க தான் இங்கே தரையை துடைச்சு சுத்தம் பண்றவங்க. இவங்க வாழ்க்கையில தொலைஞ்சு போன ‘சந்தோஷம்’ என்பதை எப்படி கண்டுபிடிச்சாங்க என்பதை அவங்களே சொல்வாங்க…” என்று நிர்வாகி கூற அப்பெண் பேச ஆரம்பித்தார்.
என்னோட கணவர் ஆறு மாசத்துக்கு முன்பு புற்று நோயால இறந்துட்டார். என்னோட ஒரே மகன் கார் டிரைவரா வேலை பார்த்தான். மூணு மாசத்துக்கு முன்னாடி அவனோட முதலாளியை வெளியூர் கூட்டிகிட்டு போகும்போது நடந்த விபத்துல அவனும் இறந்துட்டான். வாழ்க்கையே சூனியம் ஆயிடுச்சு. என்னால் தூங்க முடியலே… சாப்பிட முடியலே…. யாரையும் பார்த்து ஒரு சின்ன புன்முறுவல் கூட செய்ய முடியலே… என்னத்துக்கு இப்படி ஒரு வாழ்க்கை போய்சேர்ந்துடலாமான்னு கூட தோணிச்சு. பூச்சி மருந்து வாங்கிட்டு வரலாம்னு கடைக்கு போனேன்.
போயிட்டு வரும்போது மழையில நனைஞ்ச நாய்க்குட்டி ஒன்னு என்னை ஃபாலோ பண்ணிகிட்டே என் கூட வந்தது. ரொம்ப சின்ன குட்டி அதுங்குறதால எனக்கு விரட்டிவிட மனசில்லை. உள்ளே போய்கொஞ்சம் பாலை கொண்டு வந்து அதுக்கு கொஞ்சம் ஒரு தட்டுல ஊத்தி கொடுத்தேன். ரொம்ப பசியோட இருந்ததால எல்லாத்தையும் அது நக்கி குடிச்சிடுச்சு. அப்புறம் என்னோட் காலை வந்து நக்கி கொடுத்து வாழை ஆடி நன்றி சொல்லிச்சு. ரொம்ப நாள் கழிச்சு என் முகத்துல சிரிப்பு வந்தது. மெலிதா சிரிச்சேன்.
ஒரு சின்ன நாய்குட்டிக்கு பாலை கொடுத்ததுக்கே நமக்கு இப்படி ஒரு சந்தோஷம் வருதுன்னா என்னை சுற்றி இருக்கும் மனிதர்களுக்கு உதவுவதன் மூலம் நாம எவ்ளோ மகிழ்ச்சியா இருக்க முடியும்னு தோணிச்சி.
பக்கத்து வீட்டுல படுத்த படுக்கையா இருந்த ஒரு பாட்டிக்கு பழம், பால் இதெல்லாம் கொண்டு போய் கொடுத்து அவங்களை பார்த்துட்டு வந்தேன். அவங்களால பேசமுடியலேன்னாலும் என்னை நன்றியோட பார்த்தாங்க. என்னோட எதிர் வீட்டுல ஒரு வயதான தம்பதிகள் இருக்காங்க. அவங்களால அடிக்கடி வெளியே போகமுடியாது. நான் மார்கெட் போகும்போது அவங்களுக்கும் சேர்த்து காய்கறி வாங்கிட்டு வர்றேன்னு சொல்லி வாங்கி வந்துகொடுத்தேன்.
இப்படி என்னை சுற்றி யாருக்காவது என்னால் முடிந்த சின்ன சின்ன உதவிகளை செஞ்சிட்டு வர்றேன். அது மூலமா அவங்களுக்கு கிடைக்கும் சந்தோஷத்தை பார்த்து நான் சந்தோஷப்பட ஆரம்பித்தேன். இன்னைக்கு என்னை போல நிம்மதியா சாப்பிடுற, சந்தோஷமா தூங்குறவங்க யாரும் இருக்காங்களான்னு எனக்கு தெரியாது. ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியிலும் பெருமிதத்திலும் கழியுது.
ஆம்… என் வாழ்க்கையில் தொலைந்து போன சந்தோஷத்தை மற்றவர்களுக்கு கொடுப்பதன் மூலம் நான் திரும்ப பெற்றேன். ” என்று அந்த பெண் முடிக்க….
இதை கேட்டுக்கிட்டுருந்த அந்த பணக்காரர் அப்படியே அந்த பெண் காலில் விழுந்துவிட்டார்.
“அம்மா நீங்க வயசுல சின்னவரா இருக்காலாம்… ஆனா என்னோட குரு. பணத்தால வாங்க கூடிய எல்லாம் என்கிட்டே இருக்கு. ஆனால் அதே பணத்தால பணத்தால வாங்க முடியாத நிம்மதி, சந்தோஷம், தன்னிறைவு, மனஅமைதி, போன்றவை எதுவுமே என் கிட்டே இல்லை. ஆனா உங்ககிட்டே அதெல்லாம் இருக்கு… மனிதர்களை பத்தி நான் என்னைக்குமே நினைச்சு பார்த்ததில்லை. பணம் மட்டுமே என்னோட குறியா இருந்தது. இனி என்னை சுற்றியிருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது தான் எனது முதல் லட்சியம்.
நிர்வாகியிடம் திரும்பினார்….
“இந்தாங்க இந்த இல்லத்துக்கு என்னோட முதல் டொனேஷன்” என்று கூறி செக்கை எடுத்து ஒரு பெரிய தொகையை எழுதிக் கொடுத்தார்.
காரை ஸ்டார்ட் செய்தபோது, மகிழ்ச்சியின் அந்த ஸ்பரிசத்தை உணரத் துவங்கினார்.
=====================================
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….
உங்கள் வளர்ச்சியை தடுக்கும் நபரை கண்டுபிடிக்கலாமா?MONDAY MORNING SPL 2
குப்பை வண்டிகள் உங்கள் நாளை ஆக்ரமிக்க அனுமதிக்கலாமா? MONDAY MORNING SPL 1
=====================================
[END]
மகிழ்ச்சியான வாழ்விற்கு எளிமையான வழியை காட்டியிருக்கிறது இந்தப்பதிவு. சந்தோஷத்திலேயே மிகப்பெரிய சந்தோஷம் மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதுதான். இன்னொரு நல்ல பதிவிற்கு நன்றி சுந்தர்.
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. (339)
ஒருவன் செயலில்லாமல் தூங்குவதைப் போன்றது சாக்காடு: அவன் மீண்டும் உறக்கத்திலிருந்து விழித்துக் கொள்வது போன்றதே பிறப்பு.
=============================================================
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு. (336)
நேற்று இருந்த ஒருவன், இன்று இல்லை என்னும் நிலையாமையாகிய பெருமையை உடையதுதான் இந்த உலகம் ஆகும்.
-எங்கள் தமிழ் தாத்த திருவள்ளுவர்
=============================================================
நம்மைப் பாதுகாப்பவன் கடவுள். அந்தக் கடவுளுக்கு நன்றி சொல்லும் விதத்தில் தினமும் இரவு தூங்கப்போகும்முன், அவனது திருநாமத்தை உச்சரிக்க வேண்டும். கோவிந்தா, நாராயணா, நமசிவாய, வெற்றி வடிவேலா, கருப்பசுவாமியே’அம்மா ‘அப்பா என்று உங்களுக்கு எந்த தெய்வத்தின் மீது பிரியமோ, அந்த நாமத்தைச் சொல்லுங்கள்.
தினமும் செத்து பிழைக்க உதவும் இறைவனுக்கு செலுத்தும் நன்றிக்கடன் இதுதான்.
நமது தேவைக்கு போக மீதி பணமோ,பொருளோ,உணவோ etc ..மற்றவருக்கு, தானம் செய்து மற்றவர்களின் மகிழ்வில் பங்கேர்ப்போம், என்று நமக்கு recharge manday spl ல் சூப்பர்.
I really loved this article.
**
By Monday morning, most of them would be so tensed on going to office after resting for the whole day. But you have made all of us so relaxed.
**
I’m very happy about it. Thanks so much.
**
And more over, attaching the right pic with the article matters more. your pic simply conveys what we have and how much more we have while comparing others in the world who’re struggling to have food even 2 times a day or even less.
**
உங்களை நினைத்து மிகவும் பெருமைபடுகின்றேன்.
***
**சிட்டி**.
Welcome BOSS!!
I MEAN D NEW BOSS!!..m sure you would have got the Situation I meant!!
Glad to see you back CHITTI!!
Keep putting in your thoughts!!
நமக்குள் ஏற்கனவே இருக்கும் சந்தோஷத்தை மீண்டும் நாமே கண்டுபிடிக்க உதவும் ஒரு பதிவு. நன்றி சுந்தர்ஜி
சுந்தர் சார்
மிகவும் அருமையான பதிவு சார்
நன்றி
பணம் மட்டுமே சந்தோசம் என்று நினைப்பவர்கள் அதிகம்.
ஒரு சின்ன நாய்குட்டி அந்த பெண்ணின் தற்கொலை எண்ணத்தை மாற்றி அவள் முகத்தில் புன்னகை வரவைத்தது.
அது அவள் சந்தோசத்திற்கும் அவளின் உதவும் குணத்திற்கும் வழி செய்தது.
என் வாழ்க்கையில் தொலைந்து போன சந்தோஷத்தை மற்றவர்களுக்கு கொடுப்பதன் மூலம் நான் திரும்ப பெற்றேன்.என்று கூறினாள்.
monday morning spl 3 super
Romba periya vishayatha ivlo simple ah solitinga anna..!!
More over than giving peace, these kinds of good deeds will add to our KARMA!!
Once we take care of our KARMA—we can achieve anything we want…!!
And how do we take care of KARMA—ITS BY OUR ACTIONS..
And ACTIONS are controlled by WHAT WE THINK!!
So…
“WHAT U THINK U BECOME”…
Enna Chitti and Sundar anna correct ah??
Regards
R.HariHaraSudan.
“HE WHO KNOWS THE SELF KNOWS ALL”
Yes, you’re right. “Thoughts becomes Things”. Else Swami Vivekananda would go wrong. That’s impossible.
And thanks for your support.
***
**சிட்டி**.
எங்களுக்காக நேரம் ஒதுக்கி அருமையான பதிவுகளை வழங்கும் சுந்தர் அவர்களுக்கு மிக்க நன்றி .
“பணத்தால பணத்தால வாங்க முடியாத நிம்மதி, சந்தோஷம், தன்னிறைவு, மனஅமைதி, போன்றவை”…
//
“தொலைந்து போன சந்தோஷத்தை மற்றவர்களுக்கு கொடுப்பதன் மூலம் நான் திரும்ப பெற்றேன்”
//
மனதில் பதிக்கப்பட வேண்டியது !
அன்புடன்
முத்து – திருவெறும்பூர்
மனதை வருடும் அருமையான பதிவு சுந்தர்…எவ்ளோ பெரிய விஷயத்தை மிகசதரானமாக கூறியுள்ளீர்கள்….
.
மாரீஸ் கண்ணன்
சுந்தர் சார்,
அந்த நாய்குட்டி போலத்தான் இந்த வெப் சைட் எனக்கு மறுவாழ்வு கிடைத்தாய் நான் இப்பொழுது நினைக்கிறேன்.
செல் போன் மூலம் உங்களிடம் பேசவேண்டும் என்று நினைக்கிறன். எந்த நேரத்தில் உங்களை அழைப்பது.
நன்றியுடன் அருண்.
இரவு 10 மணிக்கு மேல் அழைத்தால் விரிவாக பேசலாம். நன்றி.
– சுந்தர்
நன்றி சுந்தர் சார்
அருமையான பதிவு !!!
இந்த வாழ்க்கையில் பணத்தால் வாங்க முடியாத பல அறிய பொக்கிஷங்கள் இருக்கத்தான் செய்கின்றன !!!
மனதில் சுமைகள் கூடிப்போய் வாழ்க்கையில் விரக்கதி உச்சத்தில் இருக்கும்போதெல்லாம் அருகில் உள்ள முதியோர் இல்லங்களுக்கோ அல்லது ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தைகள் வாழும் இல்லங்களுக்கோ சென்று வந்தால் நம்மை அந்த இறைவன் எவ்வளவு உயந்த இடத்தில் வைத்திருக்கிறான் என்பதும் நாம் இவ்வுலகில் பிறந்ததற்கான உண்மையான காரணம் புரியும் !!!
வாழ்வோம்
வாழவைப்போம் !!!