Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, September 12, 2024
Please specify the group
Home > Featured > திருவாசகம் முற்றோதலில் நடந்த அதிசயம் – வண்ணத்து பூச்சியாக வந்தது யார்?

திருவாசகம் முற்றோதலில் நடந்த அதிசயம் – வண்ணத்து பூச்சியாக வந்தது யார்?

print
சென்னை திருவேற்காட்டில் கடந்த ஜூன் 30 ஆம் தேதி சிவத்திரு.தாமோதரன் ஐயா அவர்கள் தலைமையில் திருவாசகம் முற்றோதல் நடந்தது. (முற்றோதல் = திருவாசகம் முழுவதையும் ஓதுவது).

முற்றோதல் தொடங்கி 9 ஆம் பதிகம் திருப்பொற்சுண்ணம்  பாடும்போது எங்கிருந்தோ பறந்து வந்த வண்ணத்து பூச்சி ஒன்று தாமோதரன் ஐயா அவர்களின் மடியில் அமர்ந்தது.

பொதுவாக வண்ணத்து பூச்சிகளை மனிதர்களின் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பார்ப்பது அரிது. அப்படியே அவை வந்தாலும் கண்ணிமைக்கும் நொடியில் அவ்விடத்திலிருந்து பறந்து போய்விடும். ஆனால் இந்த வண்ணத்துப் பூச்சி தாமோதரன் ஐயா அவர்கள் அசையாமல் அமர்ந்ததோடல்லாமல் பாடலுக்கேற்ப ஐயா தனது தொடையை வேகமாக ஆட்டும்போது கூட அவ்விடத்தை விட்டு அகலவில்லை.

பார்வையாளர்கள் அனைவரும் இந்த அரிய நிகழ்ச்சியை கண்டு “சிவ சிவ” என்றனர் பரவசத்தோடு.

சுமார் 40 நிமிடங்கள் வரை தாமோதரன் ஐயாவின் மடியில் அமர்ந்திருந்த அந்த வண்ணத்துப்பூச்சி பத்தாவது பதிகத்தில் திருக்கோத்தும்பி என்னும் பாடலில் பூமேல் அயனொடு மாலும் புகழ் அரிது என்னும் வரியை பாடும்போது ஒய்யாரமாக பறந்து சென்றது.

திருக்கோத்தும்பி என்றால் என்ன தெரியுமா? வண்ணத்துபூச்சி என்று அர்த்தம்.

பூமேல் அயனோடு
மாலும் புகலரிதென்
றேமாறி நிற்க
அடியேன் இறுமாக்க
நாய்மேல் தவிசிட்டு
நன்றாப் பொருட்படுத்த
தீமேனி யானுக்கே
சென்றூதாய் கோத்தும்பீ.

[அரசவண்டே! பிரமவிட்டுணுக்கள் தடுமாறவும், நான் இறுமாந்திருக்கவும், நாய்க்கு ஆசனமிட்டாற்போல என்னைப் பொருள்படுத்தி அடிமை கொண்ட நெருப்புப் போலும் திருமேனியை யுடைய சிவபெருமானிடத்தே சென்று ஊதுவாயாக.]

(வண்ணத்து பூச்சி பாடலை கேட்டு ரசித்துவிட்டு சென்ற வீடியோவை இத்துடன் இறுதியில் இணைத்திருக்கிறேன்)

அது சரி… வண்ணத்துப் பூச்சியாக வந்து சென்றது யார் ??????

அவன் அவன் அவன் ஒருவனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்!!!!

ஒன்றானவன்
உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில் மூன்றானவன்
நன்கான வேதத்தில் நான்கானவன்
நமச்சிவாய என ஐந்தானவன்
இன்பச்சுவைகளுக்குள் ஆறானவன்
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்
சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்
பத்தானவன் நெஞ்சில் பற்றானவன்
பன்னிருகை வேலவனை பெற்றானவன்
முற்றாதவன்
மூல முதலானவன்
முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்
ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன்
அவை ஒன்றுதானென்று சொன்னானவன்
தான் பாதி உமை பாதி கொண்டானவன்
சரிபாதி பெண்மைக்கு தந்தானவன்
காற்றானவன்
ஒளியானவன்
நீரானவன்
நெருப்பானவன்
நேற்றாகி இன்றாகி என்றைக்கும் நிலையான
ஊற்றாகி நின்றானவன்
அன்பின் ஒளியாகி நின்றானவன்

சாட்சாத் சிவபெருமானே வண்ணத்து பூச்சி வடிவுகொண்டு தாமோதரன் ஐயாவின் தொடையில் வந்தமர்ந்து அவரது பாடலை கேட்டுவிட்டு செல்கிறான் என்றால் அவர் எத்தனை பெரிய அடியாராக இருக்கவேண்டும்?

இப்போது புரிகிறதா கிடைக்கும் ஒரு ஞாயிறன்றும் கூட நாம் ஏன் சென்னையிலிருந்து குடியாத்தம் ஓடிச்சென்று தாமோதரன் ஐயாவை பார்க்கப்போகிறோம் என்று ?

குடியாத்தத்தில் ஞாயிறு (21/07/21013) அன்று திருவாசகம் முற்றோதல் நடைபெறும் இடம் : திருவள்ளுவர் மேனிலைப் பள்ளி, பலமநேரி சாலை, குடியாத்தம்.

நேரம் : காலை 8.00 முதல் மாலை 6.00 வரை.

இந்த முற்றோதல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பழனியில் இருந்து அன்னை ராஜம்மாள் அவர்களும் வரவிருக்கிறார். அவரையும் தரிசிக்கவே குடியாத்தம் செல்கிறோம்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திருவாசத் தேனை அள்ளி பருகிவிட்டு தாமோதரன் ஐயாவையும் அன்னை ராஜம்மாளையும் சந்தித்து ஆசிபெற்றுவிட்டு வர உத்தேசித்திருக்கிறோம். சிவனருள் அனைத்தையும் சாத்தியமாக்கவேண்டும்.

Video of Butterfly sitting on Damodharan Iyya’s lap

[ARTICLE END]

16 thoughts on “திருவாசகம் முற்றோதலில் நடந்த அதிசயம் – வண்ணத்து பூச்சியாக வந்தது யார்?

  1. மெய் சிலிர்க்க வைக்கும் பதிவு.
    என்னே ஒரு அதிசயமான நிகழ்வு.
    அந்த பரம்பொருளே தம் புகழ் பாடும் பக்தனின் குரல் கேட்க ஓடி வந்து அமர்ததது பட்டாம்பூச்சியின் வடிவத்தில்
    அப்படிஎன்றால் அய்யாவின் குரலில் தான் என்னே ஒரு காந்த சக்தி அந்த ஆகர்சிக்கும் சக்தி இருக்கிறது.

    ஒன்றானவன் பாட்டு மனதை உருக வைக்கிறது.
    வயதில் சிறியவராக இருந்தாலும் இப்படிப்பட்ட பதிவுகளை படிக்கும் போது உங்களை பற்றி மிகவும் பெருமைபடுகிறேன்.
    எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ வேண்டும்.

  2. மிகவும் ஆச்சர்யமாக உள்ளது சுந்தர். படிக்கவே மிகவும் பரவசமாக உள்ளது. பெரியவங்கள சந்திக்கும் பாக்கியம் தங்களுக்கு கிடைத்துள்ளது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. அவங்கள நீங்க சந்திச்சா நாங்க சந்திச்சது போல தானே. அவங்கள சந்திச்ச, அவங்க பத்தின பதிவுக்காக காத்திருக்கிறோம். மிக்க நன்றி சுந்தர்.

  3. சார் நல்லவர்களை பார்க்கும் பaக்கியம் உங்களூக்கு கிடைத்து உள்ளது
    பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும். இந்த பதிவை படிப்பதால் நாங்களும் நல்ல விசயங்களை தெரிந்து கொள்கிறம்
    அதன் பலனை பெறுகின்றோம்.
    selvi

  4. சிவனுக்கு எப்போதும் அவரை வணங்குவதை விட அவர் அடியார்களை வணங்குவது பிடிக்கும் என்பார்கள். அந்த வகையில் நீங்க பாக்கியசாலி. எப்படியோ உங்களால் நாங்களும் பாகியம் பெற்றோம். அதிசயமான ஆனால் நெகிழ வைக்கும் பதிவு.

  5. சுந்தர் சார்

    மிகவும் ஆச்சர்யமாக உள்ளது சுந்தர்

    ஆனால் நிஜம் இறைவனை நம்பினோறு கை விட படர் இதுவை சான்று சார், கண்டிப்பாக எதாவது ரூபத்தில் இறைவன் வருவான் சார் ..

    நன்றி சார்

  6. சிறிதும் இடைவேளி இல்லாமல்…..உணவருந்தாமல்…தொடர்ச்சியாக உட்கார்ந்த இடத்திலேயே தொடர் திருவாசகம் ஒதுவது பாரட்டுக்குறியது…… சிவபக்தன்

  7. இந்த தளத்தை நான் முதலில் சாதரணமாக படிக்க ஆரம்பித்தேன். ஆனால் இதில் உள்ள விஷயங்கள் மிகவும் மெய் சிலிர்க்க வைக்கிறது . நீங்கள் பிறவியின் பயனை பெற்றவர்கள் . இதை படிக்கும் நாங்கள் அந்த பயனை அடைவது எப்போது .

  8. பதிவை படிக்கும்போதே உள்ளம் எல்லை இல்லா ஆனந்தத்தில் திளைக்கிறது !!!

    திரு தாமோதரன் ஐயா அவர்கள்பற்றி மேலும் பல தகவல்களை தெரிந்து கொள்ள ஆவலோடு காத்திருக்கிறோம் !!!

    தென்னாடுடைய சிவனே போற்றி
    என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி !!!

  9. சுந்தர் ஐயா தங்களின் பணி போற்ற தக்கது. தாங்கள் தொடர்ந்து இந்த சேவையை செய்ய என் வாழ்த்துகள்.

  10. இதை போன்ற அற்புதமான “சிவானுபவம் ” கிடைக்க முற்பிறவிஇல் புண்ணியம் செய்து இருக்கவேண்டும்.

    ‘ வினையினால்’ அல்லல் உருபவர்கள்
    ( சனிபெயர்சி, ரகு, கேது திசைகளால் அல்லல்படுபவர்கள் ) . திருவாசக முற்றோதல் இல் கலந்து கொண்டால்.சிவன் அருள்ளால் நல்ல நிவாரணம் பெறலாம்.

    1. சிவபுராணம்

    “பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன்”

    “வல்வினையேன் தன்னை
    மறைந்திட மூடிய மாய இருளை”

    2. திரு உந்தியார்
    “தொல்லை வினை கெட உந்திபற”

    “சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தின் உள்”

    ளார் சிவன் அடிக்கீழ்ப்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து.

    பொருள்:

    சொல்லிய இப்பாடலின் பொருளினை உணர்ந்து சொல்லுபவர்கள்
    சிவபுரத்தில் இருக்கும் சிவபெருமானின் திருவடி நிழலுக்குச் செல்வார்கள்,
    பலராலும் புகழப்பட்டும், தொழப்பட்டும்

    ர .சுரேஷ்பாபு

  11. படிக்கும் போது மிகவும் பரவசமாக இருந்தது. மேலும் கே.பி.சுந்தரம்பாள் பாடிய வரிகள் காதில் ஒலித்தது. நன்றி

  12. மிக்க நன்றி இந்த பதிவை எங்களிடம் காமிததற்கு. சிவனை நினைபதே நம் பல ஜென்ம புண்ணியம். இங்கு இருப்பவர்கள் பார்பவர்கள் அனைவரும் சிவனை அடைய பல ஜென்மமாய் தவம் இருந்து இந்த ஜென்மத்ல் அவனை நம்மிடம் காட்டி இருக்கிறான். அடியார்கள் உடன் இருபதே என் போன்ற எளியோர்க்கு முக்தி.

    சர்வமும் சிவர்ப்பணம்!!!!

  13. உண்மையில் இந்த காட்சியை நேரில் கண்டவர்கள் புண்ணியம் செய்தவர்கள் மணிவாசகர் சொல்ல சொல்ல தானே எழுதிய திருசிற்றம்பலத்தான்,இந்த யுகத்தில் மணிவாசகர் தாமோதரன் அய்யாவாக அவதரித்து பாடுவதை கேட்க, தானே கோத்தும்பியாக வந்தார் போலும் (வண்ணத்துபூச்சி )

  14. ஐயா இருந்த காலத்தில் நாம் இருந்தோம் என்ற பெருமை

    இந்த பிறவிக்கு போதும் .

    நன்றி என் சிவனே

    ப.குப்பன்

  15. மிகவும் அருமையான பதிவு இந்த திருவாசக முற்றோதலில் நாம் கலந்து கொள்ளவிலையே என்று நாம் இந்த பதிவை படிக்கும் பொழுது தோன்றுகிறது. ஏனெனில் சிவனே கோத்தும்பி உருவில் ஐயாவின் மடியில் அமர்ந்திருக்கிறார்.
    இறை அருள் இருந்தால் தான் நாம் இந்த மாதிரி நிகழ்சிகளில் பங்கேற்க முடியும்.

    //நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க //

    ஓம் சிவசிவ ஓம்

    நன்றி
    உமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *