Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, September 12, 2024
Please specify the group
Home > Featured > பிரார்த்தனையால் ஆயிரக்கணக்கான வீரர்கள் தப்பிய அதிசய நிகழ்வு & நமக்காக பிரார்த்திக்கப்போகும் அன்னை !

பிரார்த்தனையால் ஆயிரக்கணக்கான வீரர்கள் தப்பிய அதிசய நிகழ்வு & நமக்காக பிரார்த்திக்கப்போகும் அன்னை !

print

ரண்டாம் உலகப்போரின்போது நடந்த சம்பவம் இது. நாஜிக்களின் வலையில் டன்கிர்க் என்னும் பிரெஞ்ச் நாட்டு கடற்க்கரை பகுதியில் நேசநாட்டு படைகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான படை வீரர்கள் & பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர். தப்பிச் செல்லும் அனைத்து வழிகளும் நாஜிக்களால் அடைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுவிட்டன.

நேசநாட்டு படை அவர்களை மீட்க உள்ளே வரமுடியாதபடி அந்த கடற்பகுதியை ஜெர்மனியின் போர்கப்பல்கள் காவல் காத்தன. சிக்கிக்கொண்ட அனைவரையும் கொன்று குவிக்க ஹிட்லர் உத்தரவிட, அடுத்த நாள் மனித இண்டம் காணாத ஒரு மாபெரும் யுத்தப் படுகொலையை எதிர்பார்த்து உலகமே கிடுகிடுத்துபோனது. எவருமே உயிருடன் திரும்ப வாய்ப்பில்லாததால் சிக்கிக்கொண்ட வீரர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் – பெரும்பாலானவர்கள் இங்கிலாந்து நாட்டினர் – தங்கள் சொந்தங்களுக்கு நேரப்போகும் கொடுமையை நினைத்து பதறிப்போயினர்.

அவர்களை காப்பாற்ற ஆயிரக்கணக்கான படகுகளையும் போட்டுகளையும் மிதவைகளையும் இங்கிலாந்து அனுப்பினாலும் வானிலை சீராக இருந்ததால் மீட்க வருகிறவர்கள் மீது நாஜிக்கள் தங்கள் நீர்மூழ்கிகள் மூலமாகவும் போர்கப்பல்கள் மூலமாகவும் விமானங்கள்  மூலமாகவும் குண்டு வீசும் அபாயம் இருந்தது.

என்ன செய்வதென்று அனைவரும் தவித்த அந்த தருணம் மக்களிடம் வானொலியில் உரையாற்றிய அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சில் “நம்மிடம் ஒரே ஒரு நம்பிக்கை தான் உள்ளது. அவர்களுக்காக நாம் பிரார்த்திப்போம்” என்றார்.

சிக்கிகொண்ட வீரர்களுக்காக பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் மக்கள் இரவு பகலாக பிரார்த்தனை செய்தனர். அப்போது தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. அனைவரும் ஆச்சரியப்படும்விதமாக அன்று இரவு டன்கிர்க் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் தட்ப வெப்ப நிலை மாறியது. அந்த பகுதிகளை திடீரென பனி மூட்டம் சூழ்ந்தது. அப்போது அது பனிக்காலமும் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பனி மூட்டத்திற்கு நடுவே பிரெஞ்ச் கால்வாயை பிரிட்டனின் மீட்பு கப்பல்கள் வேகமாக கடந்தன. பனி மூட்டத்திற்கு இடையே மீட்பு கப்பல்கள் சென்றதால் நாஜிக்களால் அவற்றை கண்டுபிடிக்க இயலவில்லை மேலும் தங்கள் போர் விமானங்களையும் இயக்க முடியவில்லை.

தொடர்ந்து அதிரடியாக மீட்பு பணிநடைபெற்று மொத்தம் ஒன்பது நாட்களில் சுமார் 30,000 க்கும் மேற்பட்ட வீரர்கள் உட்பட சுமார் 3,30,000 மக்கள் நாஜிக்களிடம் இருந்து காப்பாற்றப்பட்டனர். மீட்பு படைகள் திரும்பியதும் பனி மூட்டமும் காணாமல் போய் தட்ப வெப்ப நிலையும் சீரானது. இதை DUNKIRK MIRACLE என்று அழைக்கிறார்கள்.

இது குறித்து பல நூல்களும் வெளிவந்துள்ளன.

பிரார்த்தனையில் ஈடுபடும் மக்களின் தகுதியை தவிர மக்களை நல்ல வழியில் வழிநடத்தி செல்லும் அரசனின் தகுதியும் இங்கு முக்கிய அம்சமாக விளங்கியது. எனவே அற்புதம் நிகழ்ந்தது.

பிரார்த்தனைக்கு எப்பேர்ப்பட்ட வலிமை என்பதை பார்த்தீர்களா?

இந்த வார பிரார்த்தனை கிளப்பில் புதிதாக சேர்ந்திருப்பவர் யார் தெரியுமா?

“திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்” என்று கூறுவார்கள். அப்படிப்பட்ட திருவாசகத்திற்கு என்றே தம்மை அர்பணித்துக்கொண்ட அன்னை இவர். பழனியை சேர்ந்த இவரது பெயர் ராஜம்மாள்.  ஆங்கில கலப்பு இல்லாமல் அழகாக சொற்பொழிவு ஆற்றும் திறன் கொண்ட ராஜம்மாள் திருவாசகம் பற்றி யார் எங்கு பேசக்கூப்பிட்டாலும் போய் இலவசமாக பேசிவிட்டு வருவார், யாரைப் பார்த்தாலும் அழகிய திருவாசகம் புத்தகம் ஒன்றை பரிசளிப்பார்.

Photograph Courtesy : Dinamalar.com

ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பாடு அதுவும் எளியவர்கள், அடியவர்கள் யாருடனாவது பகிர்ந்து கொள்கிறார், தனக்கான உணவை தானே தயாரித்துக் கொள்கிறார். மேடையில் அமர்ந்து திருவாசகம் சொல்ல ஆரம்பித்தால் சப்பணமிட்டு போட்ட காலைக்கூட பிரிக்காமல் 13 மணி நேரம் எப்படி உட்கார்ந்தாரோ அதே நிலையிலேயே பேசிமுடிக்கும் தெம்பும், திராணியும் உள்ள இவருக்கு தற்போது எண்பது வயதாகிறது.ஆனாலும் ஒரு கணமும் சோர்ந்து இருக்காது சுறு,சுறுவென ஏதாவது செய்து கொண்டே இருக்கிறார்.

பழுத்த சிவப்பழம் போல காட்சி தரும் ராஜம்மாளை ஒரு பெண் துறவியாகவே கருதி பழநியில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவர் மீது மிகுந்த மதிப்பு கொண்டு “பழநி அம்மா’ என்றே வணங்கி அழைக்கின்றனர்.

இவரைப் பற்றி நேற்று நண்பர் ஒருவர் நமக்கு அனுப்பிய தினமலர் இணையத்தின் கட்டுரை ஒன்றின் மூலம் நமக்கு தகவல் கிடைத்தது. உடனே அவரை தொடர்பு கொண்ட போது அவரது மகள் திருமதி.உமையாள் நம்மிடம் பேசினார். நமது தளத்தை பற்றி எடுத்துக்கூறி அன்னையிடம்  பேசவேண்டும் என்றும் ராஜம்மாள் அவர்கள் நமது பிரார்த்தனை கிளப்பில் இணையவேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.

இதையடுத்து அன்னையிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. மீண்டும் ஒருமுறை பிறவிப் பயனை பெற்றேன் என்று தான் சொல்லவேண்டும். பிரார்த்தனை கிளப் பற்றி கூறியபோது “என் குழந்தைகளுக்காக நான் இதுகூட செய்யமாட்டேனா?” என்றார். எல்லோரையும் குழந்தைகள் போல பாவிக்கும் நிச்சயம் இவர் அந்த காரைக்காலம்மையே தான். இப்படிப்பட்ட அன்னை நமது பிரார்த்தனை கிளப்பில் இணைந்தது நாம் செய்த பாக்கியம்.

இவரை பற்றிய முழு தகவல்களும் பிற விபரங்களும் நாளை தனி பதிவாக அளிக்கப்படும்.

இந்த விஷயத்தில் நமக்கு முழு உதவி புரிந்த இவரது மகள் திருமதி.உமையாள் அவர்களுக்கும் அன்னையை பற்றி செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

திருமதி.உமையாளிடம் பேசும்போது தாமோதரன் என்கிற சிவனடியாரை சந்திக்க நம்மை குடியாத்தம் செல்லும்படி கேட்டுக்கொண்டார். திருவாசகம் பாட திரு.தாமோதரன் அவர்கள்  வரும் ஞாயிறு குடியாத்தம் வருவதாகவும் அன்னை ராஜம்மாளும் அவரை சந்தித்து திருவாசகம் ஓதல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருவதாகவும் கூறினார்.

எனவே அன்னையை நேரில் சந்திக்க ஞாயிறு காலை குடியாத்தம் செல்லவிருக்கிறேன். நம்முடன் வரவிருப்பமுள்ளவர்கள் உடனடியாக நம்மை மின்னஞ்சல் மூலம்தொடர்புகொள்ளவும் .

இந்த வார கூட்டு பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

===================================================================
மழலை வளர வேண்டும்; வளர்ச்சியில் சிறக்க வேண்டும் !

நம் தள வாசகர் திருமதி. மைதிலி மனோகரன் என்பவர் தமது 4 வயது மகன் நவீனுக்கு AUTISM என்ற வளர்ச்சி குறைபாடு இருப்பதாகவும் அவனுக்காக பிரார்த்தனை செய்யும்படியும் கேட்டிருக்கிறார்.
===================================================================

நல்லவருக்கு சோதனை போதுமே இறைவா….!

அதே போல, நமது நெருங்கிய நண்பர், நம் தளத்தின் வாசகர் நமது பணிகளில் உதவுபவர் இவர்.

அவரின் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்துவிட்டது. விவாகரத்து வழக்கு மற்றும் அது தொடர்பான விசாரணைகளால் நிம்மதியின்றி தவிக்கிறார். வழக்கு விசாரணைகளில் இருந்து இவருக்கு முழு விடுதலை கிடைத்து, நல்லதொரு வாழ்க்கைத் துணை அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

சோதனை தந்த பக்குவமோ என்னவோ ஆன்மீகத்தின் பக்கமும் சேவையின் பக்கமும் முழுமையாக திரும்பிவிட்டார். சிறந்த சிவபக்தரான இவர், தனிப்பட்ட முறையில் பல அறப்பணிகள, திருப்பணிகளை செய்துவருகிறார்.

இவருக்கு இப்படி ஒரு பிரச்னை இருப்பதை சமீபத்தில் தான் தெரிந்துகொண்டேன். நமது தளத்தின் பணிகளிலும் துணை நின்று வையம் செழிக்க உதவுபவருக்கு இப்படி ஒரு பிரச்னை இருக்கலாமா?

=========================================================

http://rightmantra.com/wp-content/uploads/2013/04/Mahaperiyava-36.jpg

திருமதி. மைதிலி மனோகரன் அவர்களின் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள ஆட்டிசம் குறைபாடு நீங்கி அக்குழந்தை நல்ல முறையில் வளரவும் நம் நண்பருக்கு பிரச்னைகளிநின்று விடுதலை கிடைத்து நிம்மதியான ஒரு திருமண வாழ்க்கை இனி அமையவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

நாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்!!!

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்க்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

=============================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

பிரார்த்தனை நாள் : ஜூலை 21, 2013 ஞாயிறு

நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=======================================================
இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131
=======================================================

11 thoughts on “பிரார்த்தனையால் ஆயிரக்கணக்கான வீரர்கள் தப்பிய அதிசய நிகழ்வு & நமக்காக பிரார்த்திக்கப்போகும் அன்னை !

  1. சுந்தர் சார்..

    நல்ல பதிவு..

    கிரி சுத்தும் போது மதிப்பிற்குரிய பாட்டி அம்மாவிடம் சில முறை ஆசிர்வாதம் வாங்கி இருக்கன் சார் ..

    நம் தள வாசகர்களுக்கு கண்டிப்பா பிரத்தினை செய்யப்படும் பிரத்தினை என்றுஎன்றும் வீண் போனது இல்லை..

    நன்றி சார்..

  2. “திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்”
    எத்தனை பெரிய உண்மையான வார்த்தை.
    ஒவ்வொரு சொற்பொழிவுக்கும் பணம் வாங்கும் பலர் இருக்கும் போது அம்மா செய்வது தன்னலமற்ற சேவை.
    அம்மா அவர்கள் தெய்வத்திற்கு சமம்.
    இந்த வார பிரார்த்தனையில் அந்த ஈசனே அம்மா உருவத்தில் நம்முடன் பிரார்த்தனை செய்ய போகிறார்கள். மிகவும் மகிழ்ச்சி
    குழந்தை குறைபாடு நீங்கி சரியாகவும், உங்கள் நண்பருக்கு நல்ல வாழ்க்கை துணை அமையவும் நம் தள நண்பர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்

  3. பழனி அம்மாவின் பிரார்த்தனைக்கு நிச்சயம் பலன் உண்டு. என் குழந்தைகளுக்காக நான் இது கூட செய்யமாட்டேனா என்று கூறுவதிலேயே அவருடைய அன்பு தெரிகிறது. அவரது மகள் திருமதி உமையாள் அவர்களுக்கும், அவரை தேடிபிடித்த சுந்தருக்கும் நன்றி.

  4. நன்றி சுந்தர் சார்.
    என் மகனுக்காக பிராத்தினை செய்வதுக்கு நன்றி.

  5. “என் குழந்தைகளுக்காக நான் இதுகூட செய்யமாட்டேனா?”என்று எல்லோரையும் குழந்தைகள் போல பாவிக்கும் நிச்சயம் இவர் அந்த காரைக்காலம்மையே தான். சத்தியமான உண்மை. நாளுக்கு நாள் நம் பிரார்த்தனைகளை நடமாடும் தெய்வங்களே நின்று செய்யும் போது கை விட்டு விடுவாரா என்ன?

    இந்த வாரம் பிரார்த்தனையில் இடம் பெற்றுள்ள
    திருமதி. மைதிலி மனோகரன் அவர்களின் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள ஆட்டிசம் குறைபாடு நீங்கி அக்குழந்தை நல்ல முறையில் வளரவும் நம் நண்பருக்கு பிரச்னைகளிநின்று விடுதலை கிடைத்து நிம்மதியான ஒரு திருமண வாழ்க்கை இனி அமையவும் எல்லாம் வல்ல இறைவனை மனதார வேண்டுவோம்.

  6. இந்த வார பிரார்த்தனை கிளப்பில் புதிதாக சேர்ந்திருக்கும் – திருமதி ராஜம்மாள்..அவரைபற்றி படித்தவுடன்.சந்தோசமாக உள்ளது திருவாசகம் பாடிய திரு வாயால் ஒரு வாசகம் சொல்லி பிரார்தனை செய்தால் நிச்சயம் அது நிறைவேரியே திரும்…அவர்களுடைய அந்த முகமே,தெய்வ கடாட்சமாக உல்லது .. நாளுக்கு நாள் நம் தளத்திற்கு…இப்படிப்பட்ட கருனை உல்லம் கொண்ட மனிதர்கள் கிடைப்பது… வாசகர்கலாகிய நாங்கல் புன்னியம் செய்திருக்கின்றோம் போலும்..

    இப்படிப்பட்ட..மனிதர்களை எங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் உங்களுக்குத்தான்.எங்கலுடைய கோடான கோடி நன்றிகள் சுந்தர் சார்..

    இந்த வார பிரார்த்தனையில் இடம் பெற்ற நம் தள வாசகர் திருமதி.மைதிலி மனோகரனின் 4 வயது மகன் நவீனுக்கு AUTISM வளர்ச்சி குறைபாடு சரியாகவும்.. அதே போல, நமது நெருங்கிய நண்பர் நண்பருக்கு பிரச்னைகளினின்று விடுதலை கிடைத்து நிம்மதியான ஒரு திருமண வாழ்க்கை இனி அமையவும் எல்லாம் வல்ல இறைவனை மனமார வேண்டுவோம். -மற்றது அவன் கையில்..

  7. “நம்மிடம் ஒரே ஒரு நம்பிக்கை தான் உள்ளது. அவர்களுக்காக நாம் பிரார்த்திப்போம்”

    \\ஒன்பது நாட்களில் சுமார் 30,000 க்கும் மேற்பட்ட வீரர்கள் உட்பட சுமார் 3,30,000 மக்கள் நாஜிக்களிடம் இருந்து காப்பாற்றப்பட்டனர். மீட்பு படைகள் திரும்பியதும் பனி மூட்டமும் காணாமல் போய் தட்ப வெப்ப நிலையும் சீரானது. இதை DUNKIRK MIRACLE என்று அழைக்கிறார்கள்\\.

    பிரார்தனை பதிவிற்கு பொருத்தமான ,ஆதாரப்பூர்வமாக
    நிறுபித்தது மகிழ்ச்சி .
    இன்று அனைவரும் சனி பிரதோஷ நேரத்தில் பிரார்த்தனை செய்கிறோம்.இது விரைவான பலனைத்தரும் .

    பிரார்தனை கிளப்பில் பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் விரைவில் நல்ல முன்னேறற்றம் கிடைக்கும் .

    மகிழ்ச்சி நம் வாழ்வில் நிலைத்திட அருணாச்சலேஸ்வரர் அருள்புரிவாராக ….

  8. சுந்தர்ஜி, நீங்கள் ரொம்ப கொடுத்து வைத்தவர். எத்தனை அற்புதமான உள்ளங்களை சந்திக்கவும் நம்மோடு இணைக்கவும் கடவுள் உங்களை பயன்படுத்துகிறார். அந்த தாய் பார்ப்பதற்கு காரைக்கால் அம்மை போல் தான் உள்ளார். உங்களோடு ரைட் மந்திரா வில் இணைய நாங்களும் சிறிது கொடுத்து வைத்து உள்ளொம் .

  9. கூட்டு பிராத்தனையின் பலன் பற்றி தெரிந்திருந்தாலும் அதை பற்றி முழுமையாகவும் அதன் தனிசிறபுபற்றியும் தெரிந்து கொள்ள இந்த ஒரு பதிவு நல்ல வாய்ப்பை அளித்துள்ளது என்பதை மறுக்கமுடியாது…
    .
    அந்த காரைக்கால் அம்மையாரை பார்க்கும் பாக்கியம் கிடைகவிட்டலும் இந்த அம்மையாரை பார்க்கும் புண்ணியம் உங்களுக்கு கிடைத்தது நீங்கள் செய்த புண்ணியம் தவிர வேறொன்றும் இல்லை….எல்லோருக்ம் கிடைக்காது…..சுந்தர் நம் தள வாசகர்கள் சார்பாக ஒரு வேண்டுகோள்….முடிந்தால் நம்தலத்தின் ஆண்டு விழாவில் இந்த அம்மையாரை சிறப்பு விருந்தினராக அழைக்க வேண்டுகிறன்….
    .
    மாரீஸ் கண்ணன்

    1. ஏற்கனவே பேசி எல்லாம் முடிவு பண்ணியாச்சி மாரீஸ். விரைவில் முழு தகவல்கள்
      – சுந்தர்

  10. தகவல்களுக்கு மிக்க நன்றி !!!
    பழனி அம்மா அவர்களை காணும்போது எனக்கு அந்த அவ்வை பாட்டி நினைவுக்கு வருகிறார்
    அந்த பழனி வாழ் பாலகுமாரன் அவர்களுக்கு என்றென்றும் துணை நின்று காத்திட வேண்டிடுவோம் !!!

    கோரிக்கைகள் நிறைவேறிடவும்
    மனக்கவலைகள் நீங்கி மகிழ்ச்சியோடு வாழ்ந்திடவும்
    எல்லாம் வல்ல பரம்பொருளை சரணடைவோம் !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *