ஐயா உங்கள் நினைவை போற்றி உங்கள் தியாகத்தை இன்று நினைவு கூர்கிறோம்.
வாழ்க காமராஜர் புகழ்!
அவரது பிறந்தநாளையொட்டி அவரை பற்றிய பதிவை அளித்தே தீரவேண்டும் என்று விரும்பி நமது முகநூலில் நண்பர் ஒருவர் பகிர்ந்த அற்புதமான தகவலை அப்படியே தருகிறேன்.
கட்டுரையாளர் முதல்வரியில் உங்களுக்கு விடுத்திருக்கும் சவாலையே நானும் உங்களுக்கு விடுக்கிறேன்.
=========================================
எடை பார்க்கும் இயந்திரத்தில் ஏற மறுத்த காமராஜர் – ஏன் தெரியுமா?
இனி இப்படி ஒருவரை நாம் பார்க்க முடியுமா ? இதை படித்து உங்கள் கண்களில் கண்ணீர் வருவதற்கு நான் உத்திரவாதம் அளிக்கின்றேன்
சம்பவம் 1
காமராஜர் முதல்வராக இருந்தப் பொழுது , அவரது அமைச்சரவையில் பங்கு பெற்ற முன்னாள் ஜனாதிபதி ஆர் . .வெங்கட்ராமன் . ஒரு முறை விருதுநகரில் இருந்த காமராஜரின் வீட்டிற்கு கோடை காலத்தின் பொழுது சென்றிருந்தார் . அப்பொழுது அங்கு காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள் பனை ஓலை விசிறியால் விசிறிக் கொண்டிருந்தார் . உடனே தன்னுடைய சொந்த செலவில் ஒரு மின் விசிறியை வாங்கி வந்து , அதை இயக்குவதைப் பற்றி அவரிடம் சொல்லிக் கொடுத்து விட்டுப் போனார் . பிறகொரு சமயம் வீட்டிற்குப் போன போது மின் விசிறியைப் பார்த்துவிட்டு விசாரித்த காமராஜர் , எத்தனையோ தாய்மார்கள் பனை ஓலை விசிறியால் தான் விசிறிக் கொள்ளும் பொழுது , உனக்கு மட்டும் வெங்கட்ராமன் மின் விசிறி ஏன் வாங்கித் தந்தார் ? முதல் அமைச்சரின் அம்மா என்பதால் தானே . இது கூட சலுகை லஞ்சம் மாதிரி தான் என்று சொல்லி விட்டு அந்த மின்விசிறியை விருது நகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு எடுத்துக் கொண்டு போகச் சொல்லிவிட்டார் .
சம்பவம் 2
டெல்லியில் உலகக் கண்காட்சி நடந்த சமயம் , அதன் துவக்க வ்ழாவுக்கு அன்றைய பிரதமர் நேருவுடன் காமராஜரும் சென்றிருந்தார் . தற்பொழுது பேரூந்து நிலையங்களிலும் இரயில் நிலையங்களிலும் வெகு சாதாரணமாகக் காணப் படுகிற எடை பார்க்கும் எந்திரம் அந்தக் கண்காட்சியில் அறிமுகமாகியிருந்தது . நேரு எந்திரத்தில் ஏறி நின்று . காசு போட்டு எடை பார்த்தார் . மத்திய அமைச்சர்கள் பலரும் அவ்வாறே செய்தனர் … காமராஜர் மட்டும் சற்றே ஒதுங்கி நின்றிருந்தார் . நேரு அவரையும் எடை பார்க்கும் படி கட்டாயப் படுத்தினார் . அவரோ மறுத்துவிட்டார் . சுற்றி நின்றிருந்தவர்களுக்கு ,திகைப்பு பிரதமர் சொல்லியும் காமராஜர் மறுக்கிறாரே என்று .
அப்பொழுது நேரு சொன்னார் ; “காமராஜர் எதற்கு மறுக்கின்றார் என்று எனக்குத் தெரியும், இந்த எந்திரத்தில் ஏறி நின்று போடும் காசு கூட இபொழுது இவரிடம் இருக்காது” ,என்றார் பிறகு , காமராஜருக்கு தானே காசு போட்டு எடை பார்த்தார் நேரு .
சம்பவம் 3
தன்னுடைய பெயரை பயன் படுத்தி தனது குடும்பத்தினர் எந்த தவறான காரியத்திலும் ஈடு படக் கூடாது என்று காமரஜார் மிகவும் கண்டிப்பாக இருப்பார் . இதனாலேயே தனது தாயாரை தான் முதல்வரான பிறகும் விருது நகரிலேயே தங்க .வைத்தார் . ஒரு முறை ஒரு காங்கிரஸ் பிரமுகர் , காம்ரஜாரின் தாய் சிவகாமி அம்மாள் அவர்களை விருது நகரில் சந்தித்த பொழுது … அவர் மிகவும் வருத்ததுடன் சொன்னது : ” என்னை எதுக்காக இங்கயே விட்டு வச்சிருக்கான்னே தெரியல . , என்னையும் மெட்ராசுக்கு அழைச்சிக்கிட்டா நான் ஒரு மூலையில் ஒன்டிக்கப் போறேன் ” என்று சொல்ல . அதை அந்த பிரமுகர் காமராஜரிடம் தெரிவிக்க , அதற்கு காமராஜர் சொன்ன பதில் :
” அடப்போப்பா , எனக்கு தெரியாதா அம்மாவை கொண்டு வந்து வச்சிருக்கணுமா வேணாமான்னு ? . அப்படியே கூட்டிட்டு வந்தா தனியாவா ?வருவாங்க அவங்க கூட நாலு பேரு வருவான் . அப்புறமா அம்மாவை பாக்க , ” ஆத்தாவை பார்க்கன்னு பத்து பேரு வருவான் . இங்கேயே டேரா போடுவான் . இங்க இருக்குற டெலிபோனை யூஸ் பண்ணுவான் . முதலமைச்சர் வீட்டிலிருந்து பேசறேன்னு சொல்லி அதிகாரிகளை .மிரட்டுவான் எதுக்கு வம்புன்னு தான் அவங்களை விருது நகர்லயே விட்டு வச்சிருக்கேன் “”””” என்றார் …..
சம்பவம் 4
காமராஜரின் குடும்பத்தினர் அதிகாரப் பூர்வமாக கலந்துக் கொண்ட ஒரே பொது நிகழ்ச்சி அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சி தான் . அவரது உடலுக்கு ஈமச்சடங்குகளை காமராஜரின் சகோதரி மகன் ஜவஹர் வைதீக முறைப் படி செய்ய . அவரது சிதைக்கு அவரது தங்கை பேரன் கனகவேல் தீ ..மூட்ட . தலைவா என்ற குரல் விண்ணை பிளக்க … அங்கு வந்திருந்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அழுகையை அடக்க முடியாது கை கொண்டு வாய் பொத்தி .கதறினார்
(நன்றி : Kishore Kswamy | https://www.facebook.com/pages/தமிழ்ப்-பற்றாளர்கள்)
==================================
கல்வி என்பது மேட்டு குடி மக்களுக்கு மட்டுமே கிடைத்து வந்ததை மாற்றி , கல்விக்கண்ணை ஏழை எளிய மக்களுக்கு திறந்து வைத்து சமூகம் முன்னேற வழி காட்டியவர் கர்ம வீரர் காமராஜர். இன்று நாமெல்லாம் பேசுகின்ற தொலை நோக்கு பார்வையை கொண்டிருந்தவர் – மக்களின் சேவகனாக – மக்களைப்பற்றியே சதா சர்வ காலமும் நினைத்து கொண்டு திட்டங்கள் தீட்டியவர் – ஏழையின் உணமையான பங்காளனாக – எளிமையையே தன் வாழ் முழவதும் கொண்டிருந்தவர் – காவல் துறையில் அரசியல் தலையீட்டை அறவே இல்லாமல் பார்த்து கொண்டவர் – அரசியலில் தூய்மைக்கு இலக்கணம் வகுத்தவர் – தன்னிகரில்லாத தனி பெரும் தலைவர் காமராஜர். அவர் வாழ்ந்த அதேகாலத்தில் வாழ்ந்தோம் என்பதே நமக்கெல்லாம் பெருமை. அவரின் புகழ் இந்த வையகம் உள்ள வரை இருக்கும்.
Dr.R.Raveenthiranaath Nehru Ph.D. – Vilathikulam Pudur,இந்தியா
(தினமலர் இணையத்தில் காமராஜர் பற்றி வெளியாகியுள்ள பிறந்த நாள் சிறப்பு கட்டுரையில் நான் படித்த அற்புதமான பின்னூட்டம் இது!)
==================================
எளிமை, கருணை, வீரம், பணிவு, பண்பு, தூய்மை, தியாகம், தேசப்பற்று இவையெல்லாம் ஒருங்கே அமைந்த தியாக உள்ளம் கொண்ட தலைவர்களை இப்பொழுது கான்பது என்பது மிக மிக அரிதாகவே உல்லது.
அப்படி நூறில் ஒருவர் இருந்தாலும் அவர்களும் சில அரசியல் புள்ளிகளால் மிரட்டப்படுகின்ரனர்,
காந்தி, பெரியார், அண்ணா, எம். ஜி,ஆர், போன்ற மகா கருனை உள்ளம் படைத்த மனிதர்களை இந்த நாம் வாழும் பூமியில் வாழ்ந்தார்கள் என்பது மிகவும் பெருமை கொள்ள வேண்டிய விசயம்.
அப்படிப்பட் மாமனிதர்களின் புகைபடத்தை தன் கட்சி கொடியில் இணைத்துக்கொண்டு, சில அரசியல் கட்சிகள் ஆதாயம் தேட நினைப்பது என்பது மிகவும் வேதனை படவேண்டிய விஷயம்
நீதி,நியாயம்,நேர்மை,சுயனலமின்மை,தர்மம்,இவை எல்லாம் அழிந்து, அதர்மம், எப்போ, தலை ஓங்குகிறதோ அப்போது நான் இந்த உலகத்தில் அவதரிப்பேன் என பகவான் கிருஷ்ணர் கீதையில் சொன்னது போல இது கலியுகமா போச்சு…
காமராஜர் பிறந்தநாளையொட்டி அவரை பற்றிய பதிவை அளித்து அவரை கௌரவித்தமைக்கு நன்றி
கர்ம வீரர் காமராஜர் அவர்களிடம் இருந்த அத்தனை அரிய குணங்களும் அவரிடம் இயல்பாக இருந்தவை. இல்லாமை என்பதை தன வாழ்க்கையில் உண்மையிலேயே அனுபவித்தவர். காலத்தின் கோலம் எந்த மக்களுக்கு அவர் நன்மைகள் செய்தாரோ, அவர்களே கர்ம வீரரை தேர்தலில் தோற்கடிக்கவும் செய்தனர். எப்பொழுது காமராஜர் தோற்றாரோ அப்போதே தமிழக அரசியல் தோற்றுவிட்டது.
இப்படி ஒருவர் நம்மிடையே வாழ்ந்தார் என்பதே நமக்கு பெருமை. என்னால் முடிந்தவரை அவரிடம் இருந்த எளிமையை பின்பற்ற முயற்சிக்கிறேன். இவரை இன்னும் நினைவில் வைத்துக்கொண்டு நல்ல பதிவை கொடுத்ததற்கு நன்றி சுந்தர்.
வணக்கம், வாழ்க வளமுடன், மிக்க நன்றி ஐயா, கர்ம வீரர் காமராஜரை போல் இன்னொருவர் நம் பாரத பூமி இல் பிறக்க
வேண்டும்.
காமராஜர் மாதிரியான நல்ல தலைவர்களை இனி இந்த நாடு எப்பொழுது பார்க்கும்….இவரைப் போன்ற தலைவர்கள் வாழ்ந்த நாட்களில் நான் பிறக்கவில்லை என்று வருத்தமாக இருக்கிறது…இன்றைய சூழலில் அரசியலும், அரசியல்வாதிகளும் மாற வேண்டுமானால் காமராஜர் போன்ற நல்ல அரசியல்வாதிகள் , தலைவர்கள் வர வேண்டும்….அப்பொழுது தான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு உலக அரங்கில் தலை நிமிரும்…..!
—
“கடமையைச் செய்; பலனை எதிர்பார்”
—
விஜய் ஆனந்த்
\\அவர் வாழ்ந்த அதேகாலத்தில் வாழ்ந்தோம் என்பதே நமக்கெல்லாம் பெருமை. அவரின் புகழ் இந்த வையகம் உள்ள வரை இருக்கும்\\.
காமராஜர் பிறந்தநாளையொட்டி அவரை பற்றிய பதிவை அளித்து ,அவரை நினைவு படுத்தியமைக்கு நன்றி .
-மனோகர்
படிக்கும்போதே மனது என்னவோ போல் உள்ளது…..
கண்ணீர் வந்துவிட்டது …….
இன்றைய ஊழல் மிகுந்த அரசியலை ஆட்சியாளர்களை நினைத்துப்பாரும்.
இவர்களையெல்லாம் ஆண்டவன் மிக நன்றாக வைத்திருக்கிறான். அதற்கும் மேல் நம் மக்கள் இவர்கள் நம் நாட்டிற்கு செய்து கொண்டிருக்கும் துரோகங்களை மறந்து போய் விடுகிறார்கள்.
நாம் கர்ம வீரர் காமராஜருக்கு செய்யும் உண்மையான வணக்கம் என்னவென்றால் நல்லாட்சி மலர ஒவ்வொருவரும் முனைய வேண்டும்.
அதுதான் நம்மையும் நம் இந்திய திருநாட்டையும் பாதுகாப்பு, வளர்ச்சி / முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும். பிரித்தாளும் கொள்கைகளையும் மதவாதம் என்ற பொய் பிரச்சாரத்தையும் வைத்து மக்களை ஏமாற்றப் பார்க்கும் அரசியல் கட்சிகளிடம் ஏமாறாதீர்கள். நம் நாட்டின் எதிர்காலம் இப்போது நம் அனைவர் கையிலும்.
Kamarajar is a political god
சுந்தர் சார்,
கர்ம வீரரை பற்றி எங்களுக்கு தெரியாத செய்தியை அவரது பிறந்த நாள் அன்று இந்த பதிவு கொடுத்தற்கு மிக்க நன்றி.
அய்யா காமராஜர் அவர்கள் மீண்டும் இந்த மண்ணில் பிறந்து எங்களை வழி நடத்த வேண்டுகிறேன்.
karmaviirarin narpanbu vaalga……nandri sundarji.
Thanks Noble! Best Wishes!!
– Sundar
உலகத்திலே மிகச்சிறந்த தலைவர் இருந்ததும் தமிழகம் தான்; மிக மோசமான அரசியல்வாதிகள் இருப்பதும் தமிழகம் தான்.
ஒருவேளை காமராஜர் போன்ற தலைவர்களை வீழ்த்தியதன் பாவம்தான என்று தெரியவில்லை இன்று வரை தமிழகத்தை வழிநடத சரியான தலைவன் அமையவில்லை.
காமராஜரின் இறுதி சடங்கு வைதிக முறைப்படி நடந்துள்ளது என்ற தகவலை கூறிய சுந்தர்ஜிக்கு நன்றி.
மேலும் ஒரு கேள்வி சுந்தர்ஜி காமராஜர் அவர்கள் நாத்திகவாதியா?
வஸி, இது விஷயமாக ஆராய்ந்தபோது காமராஜரின் இன்னொரு பரிமாணத்தை கண்டு வியந்தேன். அவர் நாத்திகருமல்ல ஆத்திகருமல்ல. நடுநிலைவாதி.
நாத்திகர் ஆத்திகர் இருவருக்குமே நான் சேவை செய்வதால் ஒரு பக்கம் சார்ந்திருக்ககூடாது என்றாராம்.
– சுந்தர்
இப்படி பட்ட ஒரு தன்னிகரில்லா தலைவரை கூட தோற்கடித்த பாவம் தான் இன்னும் தமிழன் எங்கு போனாலும் உதை வாங்கி வருகிறான் போல
அருமையான கட்டுரை
தன்மான கொள்கையோடு
அரசியலுக்கும் அரசியல்வாதிக்கும் இலக்கணம் வகுத்து
தமது இறுதி மூச்சு வரை நேர்மை ஒன்றையே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்த அந்த கர்ம வீரர் தன்னிகரில்லாத ஒப்பற்ற தலைவர்
மேற் கூறப்பட்டுள்ள சம்பவங்களில் கர்மவீரர் கையாண்ட விதத்தை அவர் கூறிய வார்த்தைகளை இன்றைய சுயநல அரசியல்வாதிகளில் எவரேனும் ஒருவருக்காவது கூறும் தைரியம் இருக்குமா என்பது சந்தேகமே
அரசியல் வியாபாரம் ஆகிவிட்ட இன்றைய சூழலில் திருடுவதில் குறைவாக திருடுபவர்களை தேர்வு செய்ய வேண்டிய துர்பாக்ய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்
ஐயா கர்மவீரரே
மறுபிறவி என்று ஒன்று இருக்குமானால்
நீங்கள் மீண்டும் இம்மண்ணில் பிறந்து இந்த நாட்டை காப்பாற்றுங்கள்
நம்பிக்கையோடு காத்திருக்கும் சாமானியர்களில் ஒருவன் !!!
இவர் போன்ற தன்னல மற்ற தலைவரை இனி காண்பதும் அரிது; பிறத்தலும் அரிது
இன்று காமராஜர் பிறந்தநாளில் போன வருட பதிவையும் படிக்க நேர்ந்தது. பதிவு மிக அருமை. இந்த மாதிரி தலைவரை இனிமேல் நாம் எங்கே பார்க்க போகிறோம் என்று மனம் ஏங்குகிறது நாம் அவர் காலத்தில் வாழ்தோம் என்று பெருமை பட்டுக்கொள்ள வேண்டியது தான்
நன்றி
உமா