Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Monday, November 4, 2024
Please specify the group
Home > All in One > அழுக்கு உடையில் ஜவ்வாது வாசனை!

அழுக்கு உடையில் ஜவ்வாது வாசனை!

print
ந்த அவசர உலகில் தான் எத்தனை எத்தனை மனிதர்கள்?

பயனற்ற விஷயங்களில் நேரத்தை வீணடித்து, அதையும் பெருமை பேசுகிறவர்கள் ஒரு புறம்.

தனது முன்னேற்றம், தங்கள் குடும்பத்தின் முன்னேற்றம் இந்த இரண்டும் மட்டுமே இந்த உலகில் கவனம் செலுத்தக்கூடிய விஷயங்கள்.. மத்ததையெல்லாம் “அந்த பகவான் பார்த்துப்பான்” என்று சுயநல சிந்தனையோடு வாழ்பவர்கள் மறுபுறம்.

அடுத்தவர்களை கெடுத்து பலவித வன்செயல்களில் ஈடுபட்டு தங்கள் வாழ்க்கை சக்கரத்தை ஒட்டிகொண்டிருக்கும் வஞ்சகர்கள் கூட்டம் ஒருபுறம்.

அனைத்தையும் குறை சொல்லிக்கொண்டு அதே சமயம் ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடாமல் டேபிளை குத்திக்கொண்டிருப்பவர்கள் மற்றொருபுறம்.

அட போங்கப்பா… சுயநலமற்ற பொதுநலம் விழையும் நல்லவர்களை தேடவேண்டியிருக்கிறது. இருக்கும் ஒரு சில நல்லவர்களின் கைகளையும் இறைவன் கட்டி வைத்திருக்கிறான்.

செவ்வாய் கிரகத்துல மனுஷங்க இருக்காங்களான்னு தேடுறாங்களாம்… அட முதல்ல பூமியில இருக்காங்களான்னு பாருங்கப்பா… என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

உலகமே சுயநலம் சார்ந்து இயங்கிக்கொண்டிருக்கிறது. தங்கள் வேலைகளை கவனிக்கவே இங்கு பலருக்கு நேரம் போதவில்லை.

இந்த சூழலில் திருவண்ணாமலையை  சேர்ந்த திரு.மணிமாறன் என்கிற இளைஞரை பற்றி சென்ற வாரம் ‘குங்குமம்’ வார இதழில் படித்தேன்.  என்ன சொல்வது? படித்’தேன்’… சிலிர்த்’தேன்’… பிரமித்’தேன்’…!!!

இப்படிப்பட்டவர்கள் இந்த உலகில் இன்னும் நடமாடுவதால் தானோ என்னவோ எத்தனையோ அநீதிகளை கண்டும் பூமி மாதா இன்னும் வெடித்து சிதறாமல் பொறுமையாக இருக்கிறாள் போல.

இந்த நான்கு பக்க கட்டுரை நெடுகிலும் எண்ணற்ற நீதிகள், வாழ்வியல் உண்மைகள் பொதிந்துகிடக்கின்றன. “சேவை செய்ய பணம் தேவையில்லை. நேரமும் மனமும் தான் தேவை” என்று திரு.மணிமாறன் கூறியிருப்பதை கவனியுங்கள்.

கட்டுரையில் திரு.மணிமாறன், ஃபிளாட்பாரத்தில் பரதேசிகள் ரூபத்தில் தான் கண்ட ஞானிகளை பற்றி சொல்லியிருக்கிறார் பாருங்கள்… வாவ்…. !! REALLY INTERESTING!!!!

HATS OFF TO YOU மணிமாறன் அவர்களே… உங்களை எண்ணி பெருமைப்படுகிறோம். YOU ARE A REAL HERO!

இந்தப் பதிவை தயார் செய்துவிட்டு பப்ளிஷ் செய்ய நினைத்த தருணம்… இப்பேர்ப்பட்ட ஒரு மனிதரை தொடர்புகொண்டு நன்றி கூறி நமது தளம் சார்பாக வாழ்த்துக்களை சொல்வோம் என்று தோன்றியது.

நான் ஏற்கனவே கூறியிருக்கிறேனே… மனித மனம் அளப்பரிய சக்தியை கொண்டது. ஒன்றை அடையவேண்டுமென்று ஒரே குறிக்கோளுடன் முயற்சித்தால் நீங்கள் எதை அடைய நினைக்கிறீர்களோ அது உங்கள் வீட்டு வாசலில் வந்து விழும்.

மணிமாறனின் அலைபேசி எண் ஒரு சிறிய முயற்சிக்கு பின்னர் கிடைத்தது. நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு அவரது சேவையை பற்றி நான்கு வார்த்தை கூறி நன்றியும் பாராட்டும் தெரிவித்தேன். பாராட்டினாலே கூச்சப்படுகிறார். என்னுடன் பேசும் நேரம் கூட எங்கோ யாருக்கோ உதவ ஓடிக்கொண்டிருக்கிறார் என்று புரிந்தது.

சிறிது நேரம் தான் பேசினேன். ஆனால் நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம்.

நல்லோர் நட்பு கிடைத்தால் என்ன செய்வேன் என்று தெரியுமல்லவா? பொறுத்திருந்து பாருங்கள்!

படிப்பதற்கு உகந்தவை பக்தி நூல்கள் மட்டுமல்ல. மணிமாறன் போன்ற தன்னலம் கருதா உத்தமர்களின் வரலாறும் தான்.

===================================================

===================================================

===================================================

(குங்குமத்தில் வெளியான கட்டுரையின் ஸ்கேன் பக்கங்களை தந்திருக்கிறேன். DOUBLE CLICK ON THE IMAGE TO ZOOM & READ THE TEXT)

(சுந்தரகாண்டம் நூல் கேட்டவர்களுக்கு : உங்களுக்கு புத்தகங்களை அனுப்பியவுடன் மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிப்பேன். எனவே தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாறவேண்டாம். இன்றைக்கு தான் ஒரு நான்கு பேருக்கு அனுப்பியிருக்கிறேன். அடுத்தடுத்து அனைவருக்கும் ஒரு மூன்று நாட்களுக்குள் அனுப்பிவிடுவேன். நன்றி.)

[END]

12 thoughts on “அழுக்கு உடையில் ஜவ்வாது வாசனை!

  1. என்ன சொல்லுவதென்றே புரியவில்லை. மிகவும் பிரம்மிப்பாக இருக்கிறது. இந்த காலத்தில் பெற்ற தாய் தந்தயர்கே சேவை செய்ய தயங்குகிறார்கள், இவரை என்ன வென்று சொல்ல. எல்லாம் திருவண்ணாமலை சிவபெருமானின் சித்தம்.

  2. சார், ஒரு அருமையான பதிவு.
    படிக்கும் பொது இப்படியும் உதவி செய்ய மனிதர்கள் இருக்கிறார்கள் என்று என்னும் போது திகைப்பாக இருக்கு.
    மற்றவர்கள் பேசுவதை காதில் போட்டுகொள்லாமல் உதவும் இவர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
    இவர் சித்தர்களை பார்த்த, சில சித்தர்களுக்கு பணிவிடை செய்த பாக்கியசாலி.
    நன்றி சார். அபூர்வ மனிதரை அடையாளம் காட்டியதற்கு

  3. சுந்தர்ஜி.

    இவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பேட்டி எடுங்கள்..

    இவருக்கு நம்மால் இயன்ற உதவி செய்ய விரும்புகிறேன்.

    தொடர்பு கிடைத்தால் பகிருங்கள்..

  4. கடவுளின் பக்கம் இருக்கிறார் … நான் எல்லாம் செல்லா காசு

    மிக்க நன்றி … நம் உள்ளத்தை தூய்மையாக ஒரு அற்புத பதிவு ..

  5. \\\ மனித மனம் அளப்பரிய சக்தியை கொண்டது. ஒன்றை அடையவேண்டுமென்று ஒரே குறிக்கோளுடன் முயற்சித்தால் நீங்கள் எதை அடைய நினைக்கிறீர்களோ அது உங்கள் வீட்டு வாசலில் வந்து விழும். \\\ மீண்டும் மீண்டும் படித்து மனதில் ஆணித்தனமாக நிறுத்திவிட்டேன் .

    -நன்றி
    சேவை செய்வதற்கு பணம் அவசியமில்லை.மனமிருந்தால் போதும் .சரியான சாட்டையடி.

    அருணிமா சின்ஹா ராதா ரிஜென்ட்டில் சந்தித்து அருணாச்சலேஸ்வரர் போட்டோ அளித்து அமர்க்களம் .

    இன்று அருணாச்சலேஸ்வரர் தலமான திருவண்ணாமலை மணிமாறனை பாராட்டுவது மிக மிக பொருத்தம் .

  6. சந்தோசம். படித்தவுடன் மனதினில் நிறைய யோசிக்க வைத்தது இந்த பதிவு. கடவுள் எங்கும் எல்லோரிடத்திலும் நீக்கமற நிரம்பி இருக்கிறார் என்பது நன்கு நீருபனமாகிறது. இந்த மாதிரி அன்பு உள்ளங்களோடு நாமும் இணைவோம்.

    நன்றி
    ப.சங்கரநாராயணன்

  7. இந்த பதிவினை படிக்கும்போது மாதா அமிர்தானந்தமயி அவர்களின் அருள்வாக்கு நினைவில் வருகிறது:

    கடவுளை நேசிப்பது என்றால் வேறு ஏதும் அல்ல.உலகிலுள்ள அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுவதே கடவுளை நேசிப்பதாகும்.

    மணிமாறன் இப்போது ஒரு கடவுளாகவே தெரிகிறார். வாழ்க அவரது தொண்டு.

    மனம் ஒன்றி விட்டால் நம் செயலில் கடினம் தெரிவதில்லை .. உலகை விசாலமான மனத்துடன் நோக்குங்கள். ..சின்மயானந்தர்

    வாழும் காலத்திலேயே நல்லதை செய்து விடுங்கள்… திருவள்ளுவர்

    அன்பே சிவம்

  8. அழுக்கு உடையில் ஜவ்வாது வாசனை – நறுமணம் அவர்களது தூய உள்ளத்திலிருந்து வருகிறது. பாபா படத்தில் ஒரு வசனம் வரும் – இந்த அழுக்கு சாமி திவ்யானந்த பாரதியா? இவர்களை போன்றவர்களில் சிலரின் பரப்ரம்ம நிலையை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். நாம் அவர்களிடம் பேச முயற்சித்தாலும் அவர்கள் பேச மாட்டார்கள். பணம் கொடுத்தால்கூட அது அவர்களுக்கு புரியாது. அவர்களுக்கு தேவை நம் மணிமாறன் போன்றவர்கள்தான். அவருடன் இப்போது இன்னும் சிலர் சேர்ந்திருக்கிறார்கள் என்பது நல்ல விஷயம். வித்யாசமான பதிவிற்கு நன்றி சுந்தர்.

  9. மனித உருவில் மனிதாபிமானம் ஆங்காங்கே இருப்பதை காணும்போது சமூக அவலங்களை கண்டு நொந்து புண்ணாய் போன மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது !!!

    பரபரப்பான இந்த உலகினில் தன்னை சரி செய்து கொள்ளவே நேரம் இல்லாத போது மற்றவர் துயரை தம் துயர் என கருதி அவர்களுக்காக வருந்தும் இதயம் அந்த பரம்பொருள் வாழும் ஆலயம்!!!

    முடிந்த வரை மனசாட்சிக்கும் மற்றவர்க்கும் துரோகம் நினைக்காமல் நம்மால் முடிந்த உதவியை வறியவர்க்கும் துன்பப்படுபவர்க்கும் முழுமனதோடு செய்வதன் மூலமாக கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும் கிடைக்காத மன நிம்மதியையும் செல்லும் வழிக்கு புண்ணியத்தையும் பெற முடியும் !!!

    மணிமாறனின் இந்த மகத்தான தொண்டு மென்மேலும் பெருகிடவும் அவர்தம் வாழ்வில் எல்லா வளமும் பெற்று அவர் தம் குடும்பத்தாருடன் குறைவில்லா மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்திடவும் எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு என்றென்றும் துணை நின்று அருள் புரிய வேண்டுகிறேன் !!!

    வாழ்க வளமுடன் !!!

  10. மிகவும் அருமையான பதிவு . திரு மணிமாறனின் சேவை உள்ளம் அளப்பற்கரியது. சேவை செய்வதற்கு பணம் பெரிதல்ல . நேரமும் மனமும் இருந்தால் போதும் என்ற வரிகள் வைர வரிகள். நாட்டில் மணிமாறனை போன்ற நல்ல உள்ளங்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். திரு மணிமாறனுக்கு நம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். அவரது தொண்டுள்ளம் மேலும் மேலும் சிறக்க வாழ்த்துகள். அவர் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இறைவன் அருள் புரிய வேண்டும்.

    தாங்கள் ரைட் மந்த்ராவில் மணி மாறனைப் பற்றி பதிவு செய்ததற்கு நன்றிகள் பல.

    நன்றி
    உமா

  11. திரு. மனிமாரன் பற்றிய பதிவு இன்று தான் படிக்க முடிந்தது. மிகப்பெரிய ஒரு தொண்டை சத்தமில்லாமல் கூட செய்ய முடியும் என்று நிரூபித்து கொண்டிருப்பவர் மணிமாறன் அவர்கள். என்ன ஒரு சகிப்பு தனமாயில் இந்த சிறு வயதில். நம் எல்லாம் காசை நோக்கி ஓடுவதுதான் வாழ்க்கை என்று நினைத்து கொண்டு இருக்கிறோம், (நான் எல்லோரையும் சொல் வில்லை) ஆனால், கடவுளின் படைப்பாக இருக்கும் ஒதுக்க பட்ட மனிதர்களுக்கு செய்யும் சேவையே பெரிது என்று ஏழ்மையில் இருந்தாலும் இறைவனின் அரவணைப்பில் இருக்கும் மணிமாறன் இந்த சமுதாயத்தின் மிக பெரிய சொத்து. மக்கள் சேவையே மகேசன் சேவை. ஒரு நிரூபணம் இந்த கட்டுரை (தவறு) இதிகாசம். சுந்தர காண்டம் படித்தால் நம் பாவம் போக்க படும் பாவத்தை இந்த பதிவே போக்கி விடும் என்று தான் தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *