Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, November 5, 2024
Please specify the group
Home > Featured > கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்…

கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்…

print
இந்த புகைப்படங்களில் காணப்படும் இந்த பள்ளி செல்லும் குழந்தைகளின் அற்புதமான மிடுக்கான தோற்றத்தின் பின்னணியில் நமது தளம் இருக்கிறது என்பது நாம் அனைவரும் பெருமிதம் கொள்ளக்கூடிய ஒரு விஷயம் என்றால் மிகையாகாது.

சென்னை போரூர்-குன்றத்தூர் சாலையில் கெருகம்பாக்கத்தில் அமைந்துள்ள ‘பிரேமவாசம்’ – மனநலம் குன்றிய & மாற்றுத்திறன் வாய்ந்த குழந்தைகள் காப்பகத்தில் உள்ள பள்ளி செல்லும் சுமார் 140 குழந்தைகளுக்கு நம் தளம் சார்பாக சீருடைகள் மற்றும் ஸ்கூல் பேக் வாங்கித் தரப்பட்டன.

(இங்கு நீங்கள் புகைப்படத்தில் பார்ப்பது பல்வேறு காரணங்களால் அநாதரவாக விடப்பட்ட குழந்தைகள். பிரேமவாசம் சார்பாக இவர்கள் அருகிலுள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்கவைக்கப்படுகின்றனர். இவர்கள் தவிர இடம் பெயர முடியாத நிலையில் பல குழந்தைகள் அங்கு உள்ளனர். அவர்களுக்கு அங்கேயே பிசியோதெரபி சிகிச்சை மற்றும் இதர பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.)

நம் தள  வாசகர்கள் பலர் இந்த அரும் பணியில் தங்களை இணைத்துக்கொண்டு இந்த குழந்தைகளின் அத்தியாவசியத் தேவையை நிறைவேற்றியிருக்கிறார்கள்.

இது தொடர்பான எளிய ஒப்படைப்பு நிகழ்ச்சிகள் (HANDING OVER CEREMONY) நம் தள வாசகர்கள் சிலர் முன்னிலையில் பிரேமவாசத்தில் சென்ற வாரம் நடைபெற்றது.

பள்ளி சீருடைகள் தவிர SCHOOL BAGS, கேரம் போர்ட், செஸ் கிட், ஃபுட் பால், கிரிக்கெட் பேட் & பால், பொம்மைகள்,  KNOWLEDGE & IQ GAMES KIT, ரிமோட் கார் உள்ளிட்ட குழந்தைகள் விளையாட்டு சாமான்களை அக்குழந்தைகளுக்கு வாங்கி தந்திருக்கிறோம். குழந்தைகள் அவற்றை பெறும்போது அடைந்த சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

நமது தளவாசகர்களுக்கு நன்றி தெரிவித்து கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்றது. பல நெகிழ்ச்சியான சம்பவங்கள் அது சமயம் நடைபெற்றன. புகைப்படத்துடன் அது பற்றிய விரிவான பதிவு விரைவில் வரும்.

இந்நிலையில் அக்குழந்தைகள் நாம் வழங்கிய சீருடைகளை அணிந்துகொண்டு  பைகளை மாட்டிக்கொண்டு ஆர்வமுடன் பள்ளி செல்லும் அந்த கண்கொள்ளாக்காட்சியை பிரேமவாசத்திலிருந்து அவர்களே புகைப்படம் எடுத்து நமக்கு அனுப்பியிருக்கிறார்கள். தவிர உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள்.

இந்த தளத்தின் ஆசிரியராக நாம் மிகவும் மனம் குளிர்ந்த நெஞ்சம் நெகிழ்ந்த தருணங்களில் இதுவும் ஒன்று.

என்ன சொல்ல… உங்களை போன்றவர்களின் உறவுகளை எமக்கு தந்த இறைவனுக்கு தான் முதலில் நன்றி சொல்லவேண்டும்.

இந்த அருந்தொண்டில் தம்மை இணைத்துக்கொண்ட அன்பு வாசகர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். முழுவிபரங்களும் புகைப்படங்களும் இது தொடர்பான பதிவில் இடம்பெறும்.

(இவை தவிர இக்குழந்தைகளுக்கு வேறு தேவைகளும் உள்ளன. மேலும் உங்கள் பிறந்த நாள், திருமண நாள், முன்னோர்கள் நினைவு நாள் ஆகியவற்றின் போது இங்குள்ள குழந்தைகளுக்கு உணவை ஸ்பான்சர் செய்யலாம்.)

ஒரு குழந்தையின் சிரிப்பிலேயே இறைவனை காணலாம் எனும்போது இங்கே பல குழந்தைகளின் சிரிப்புக்கு காரணமாக திகழ்ந்த தன்னலம் கருதா கருணை உள்ளம் கொண்ட நம் வாசகர்களை என்ன சொல்லி பாராட்டுவது…. எப்படி நன்றி கூறுவது என்று தெரியவில்லை.

இந்த அரும்பணியில் கருவியாக நாம் செயல்பட உதவியமைக்கு உங்களுக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும்.

பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட சேவை செய்யும் கரங்கள் புனிதமானவை என்பதை மற்றொரு முறை நிரூபித்துவிட்டீர்கள். அனைவருக்கும் நன்றி.

பெரியதோ … சிறியதோ…

பெரியதோ சிறியதோ தங்களால் இயன்ற பங்களிப்பை அளித்து இந்த அருந்தொண்டில் தம்மை இணைத்துக்கொண்ட வாசக அன்பர்களுக்கு ஒன்றே ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.  கவியரசு கண்ணதாசன் அவர்கள் ‘சாந்தி நிலையம்’ திரைப்படத்திற்காக எழுதிய அற்புதமான பாடல் ஒன்றின் பாடல் வரிகள் மற்றும் வீடியோவை கீழே தந்திருக்கிறேன்.

படியுங்கள்…. எத்தகைய ஒரு மகத்தான் சேவையை நீங்கள் செய்திருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு புரியும்.

கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்

கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம்

ஒரு மனிதன் வாழ்வே இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்
படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்

கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம்

கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது
காசும் பணமும் ஆசையும் யார் தந்தது
கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது
காசும் பணமும் ஆசையும் யார் தந்தது

எல்லையில்லா நேரம் நிலமும் நான் தந்தது
எங்கும் சொந்தம் என்னும் எண்ணம் ஏன் வந்தது
இறைவனுக்கே இது புரியவில்லை
மனிதரின் கொள்கை தெரியவில்லை

ஒரு மனிதன் வாழ்வே இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்
படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்

கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம்

பள்ளிக்கூடம் செல்லும் வழியில் கடவுள் நின்றானாம்
பச்சை பிள்ளை மழலை மொழியில் தன்னை கண்டானாம்
பள்ளிக்கூடம் செல்லும் வழியில் கடவுள் நின்றானாம்
பச்சை குழந்தை சிரிப்பில் தன்னை கண்டானாம்
உள்ளம் எங்கும் செல்லம் பொங்கும் அன்பை கண்டானாம்
உண்மை கண்டேன் போதும் என்று வானம் சென்றானாம்

கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா என்றாராம்


[END]

7 thoughts on “கடவுள் ஒரு நாள் உலகை காண தனியே வந்தாராம்…

  1. ‘பிரேமவாசம்’ குழந்தைகள் நாம் வழங்கிய சீருடைகளை அணிந்துகொண்டு ,பைகளை மாட்டிக்கொண்டு ஆர்வமுடன் பள்ளி செல்லும் அந்த கண்கொள்ளாக்காட்சிக்கு , முழுமுதல் காரணமான சுந்தர் அவர்களுக்கு நம் தளம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன் .
    சுந்தர் ஜி சொன்னது போல் இந்த தளத்தின் வாசகராக எம்மை ஈர்த்தத்தில் ,மிகவும் மனம் குளிர்ந்த நெஞ்சம் நெகிழ்ந்த தருணங்களில் இதுவும் ஒன்று.

    பள்ளி சீருடைகள் தவிர SCHOOL BAGS, கேரம் போர்ட், செஸ் கிட், ஃபுட் பால், கிரிக்கெட் பேட் & பால், பொம்மைகள், KNOWLEDGE & IQ GAMES KIT, ரிமோட் கார் உள்ளிட்ட குழந்தைகள் விளையாட்டு சாமான்களை ,சுந்தர் ஜி வாங்கிவந்து சேர்த்து வழங்குது சாமானிய செயல் அல்ல .இறைவன் அருள் அவருக்கு பரிபூரணமாக உள்ளது .

    பெரியதோ சிறியதோ தங்களால் இயன்ற பங்களிப்பை அளித்து இந்த அருந்தொண்டில் தம்மை இணைத்துக்கொண்ட வாசக அன்பர்களுக்கு நன்றிகள் .

    இது போன்று நமது தளம் சார்பாக தொண்டுகள் தொடரும் என்று தெரிவித்துள்ளார் வரவேற்கிறேன் .

    நன்றி,
    வாழ்த்துக்கள் .
    =============================================================

  2. ஒரு நாள் உலகை காண தனியே வந்த கடவுளுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் படைத்த சுந்தர் சார் கண்ணில் பட்டார்.
    அவர் மூலம் எங்கள் நெஞ்சங்களை நிறைக்க வைத்த கடவுளுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும்.
    குழந்தைகளை uniform போட்டு போட்டோ பார்த்ததும் கண்ணில் ஆனந்த கண்ணீர் திரையிட்டது .
    ராமனுக்கு அணில் உதவியது போல என்றாலும் மிக மன நிறைவாக இருந்தது.
    இதுபோல இன்னும் பல நல்ல நிகழ்வுகளை செய்து சிகரம் தொட என் வாழ்த்துக்கள்
    .
    கள்ளம் இல்லா வெள்ளை உள்ளம் நீ கொண்டது
    பிரேமா வாசம் மழலை சிரிப்பு நீ வென்றது

  3. என்ன ஒரு சிரிப்பு அந்த குழந்தைகள் முகத்தில்.காண கண் கோடி வேண்டும்.மனம் மிகவும் நிறைவாக இருந்தது. ஆனால் கண்கள் பனித்தது. ஏதோ எங்களுக்கும் அணில் போல் உதவ பங்களித்தமைக்கு சுந்தர் சாருக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் மிகையாகாது.

    தம்பி கிடைத்ததை பெரும் பாக்கியமாக கருதுகின்றேன். அய்யா நீ நீடூழி வாழ வாழ்த்துகின்றேன்.

  4. இது போல் இன்னும் நம் தளம் சார்பாக நிறைய செய்ய வேண்டும் அதற்க்கு கடவுள் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கடவுளை பிராத்திக்கிறேன்

  5. டியர் சார்

    உங்கள் பணி வெற்றி அடைய வாழ்த்துகள்

  6. இது போல் இன்னும் நம் தளம் சார்பாக நிறைய செய்ய வேண்டும் அதற்க்கு கடவுள் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கடவுளை பிராத்திக்கிறே – See more at:

  7. பதிவை படிக்கும்போதே மனதிற்குள் எல்லை இல்லாத ஆனந்தம் ஊற்றெடுப்பதை உணர முடிந்தது !!!

    குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
    குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று – என்ற சொல் மெய்பித்துவிட்டது!!!

    இந்த மகத்தான பணியில் தம்மை இணைத்துக்கொண்ட அத்துணை நல் உள்ளங்களுக்கும் எவ்வளவு நன்றி கூறினாலும் பாராட்டினாலும் தகும் !!!

    எத்தனையோ பொருளாதார சுமை மற்றும் கஷ்டங்களுக்கு நடுவே தம்மால் இயன்ற உதவிகளை செய்த நண்பர்கள், பிரேமவாசத்தில் உள்ள இறைவனின் செல்லகுளந்தைகள் விரைவில் பூரண உடல் மற்றும் மனநலம் பெற்று என்றென்றும் வாழ்வில் மகிழ்ச்சியுடன் வாழ அவர்களுக்காக என்றென்றும் பிரார்த்திப்போம் !!!

    வாழ்க வளமுடன் !!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *