Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, October 6, 2024
Please specify the group
Home > Featured > உறங்கிக் கொண்டிருந்த சுதந்திர வேட்கையை தன்னுயிரை தந்து தட்டி எழுப்பிய மாவீரன் வாஞ்சிநாதன்!

உறங்கிக் கொண்டிருந்த சுதந்திர வேட்கையை தன்னுயிரை தந்து தட்டி எழுப்பிய மாவீரன் வாஞ்சிநாதன்!

print
தியாகத்தின் திருவுருவம் அஞ்சாநெஞ்சன் மாவீரன் வாஞ்சிநாதனின் நினைவு நாள் இன்று. எந்த ஒரு நாட்டில் மக்கள் தேசபக்தியும் தெய்வபக்தியும் கொண்டு ஒழுகுகின்றனரோ அந்நாடு எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கும் என்பது ஆன்றோர் வாக்கு. நம் வாசகர்கள் தன்னம்பிக்கை, தெய்வநம்பிக்கை இவை மட்டுமல்லாது சிறந்த தேசபக்தி கொண்டவர்களாகவும் விளங்கவேண்டும் என்பதே நம் விருப்பம். எனவே தான் நாட்டின் விடுதலைக்காக உழைத்த உத்தமர்களை அவர்கள் பிறந்த நாளின்போதும் நினைவு நாளின் போதும் இயன்றவரை மறக்காது பதிவு செய்கிறோம்.

தாம் வாழ்ந்த காலத்தில் தன்னலம் கருதாது வாழ்ந்து சுதந்திரத்துக்காக தமது இன்னுயிரை ஈந்த அந்த உத்தமர்களை என்றும் மறவோம். ஜெய் ஹிந்த்!

‘பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே’

என்பது புரட்சி கவிஞன் பாரதியின் வாக்கு.

தமிழகத்தின் பகத்சிங் மாவீரன் வாஞ்சிநாதன் பற்றி விசேஷ பதிவு ஒன்றை நாம் அளிக்க விரும்பினோம். நேரமின்மையால் முடியவில்லை. தினமணி இணைய தளத்திலும் வெப்துனியா தளத்திலும் படித்த கட்டுரைகளை இணைத்து சற்று சுருக்கி இங்கே தருகிறோம்.

மனு கொடுப்பவர் போல் ஆஷ் துரையை சந்தித்து உளவு பார்த்த வாஞ்சிநாதன்!

நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டத்தில் தமிழகத்தின் பங்கு கணிசமானது. தமிழகத்தில் சுதந்திரத் தீயை மக்கள் மத்தியில் வளர்த்த செம்மல்கள் என்று எடுத்துக் கொண்டால் நீண்டதொரு பட்டியலை தயாரிக்கலாம்.

இத்தகையோர் வரிசையில், கலெக்டர் ஆஷ் கொலைக்கு காரணமான ‘வீரன் வாஞ்சிநாத’னுக்கும் முக்கிய இடம் உண்டு.

சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு ரயில் பயணம் செய்திருக்கிறீர்களா? திருநெல்வேலிக்கு சற்று முன்னால், மணியாச்சி என்றொரு ரயில் நிலையம் வரும். இப்போது உறக்கத்தின் பிடியில் அமைதியாக இருக்கும் அந்த நிலையம், சென்ற நூற்றாண்டில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு வீர வரலாற்றைத் தன்னுள்ளே கொண்டு, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு அறைகூவல் விட்ட ஒரு ரயில் நிலையமாகத் திகழ்ந்தது.

திருநெல்வேலியிலும் அந்த மாவட்டத்தின் இன்னும் சில பகுதிகளிலும், குறிப்பாக வீரகேரளம்புதூர் போன்ற ஜமீன் தொடர்பான சில இடங்களில் வரவேற்பு வளைவுகள் அழகு காட்டி நம்மை வரவேற்கும். அவை பார்ப்பதற்கு சாதாரணமான கல் கட்டிடம்போல் தோன்றினாலும், அதனுள்ளும் ஒரு செய்தி அடங்கியிருக்கிறது. மணியாச்சி ரயில் நிலையத்திற்கும் இந்த வரவேற்பு வளைவுகளுக்கும் ஒரு தொடர்பு உண்டு. அது – வீர இளைஞர்களின் சுதந்திர தாகத்தால் எழுந்த தொடர்பு.

இந்த வரவேற்பு வளைவுகளில் ஒரு செய்தி காணப்படும். – ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் பிரிட்டிஷ் காலனியின் ஏக சக்ரவர்த்தியாக முடிசூட்டி, அவர் இந்தியாவுக்கு வருவதை வரவேற்று, ஜமீனின் ராஜவிசுவாசத்தை வெளிப்படுத்தும் வகையில் கட்டப்பட்ட வரவேற்பு வளைவு என்பதுதான் அந்தச் செய்தி. இதற்கும் மணியாச்சிக்கும் என்ன தொடர்பு? மணியாச்சி ரயில்நிலையத்தில் அப்போதைய திருநெல்வேலி கலெக்டராக இருந்த ஆஷ்துரையை சுட்டுக் கொன்றுவிட்டு, அங்கிருந்த கழிப்பறைக்குள் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட வாஞ்சிநாதன் என்ற வீர இளைஞனின் சட்டைப் பையில் இருந்த கடிதம் ஒரு செய்தியைச் சொல்லும்.

ஆம்! ஒருபுறம் தங்கள் சுயநலன்களுக்காக, பிரிட்டிஷ் காலனி அரசைத் துதி பாடி ஒரு கூட்டம் இருந்த போது, தங்கள் சொந்த பந்தங்களைத் துறந்து, வாழ்வை இழந்து, ஒவ்வொரு கணமும் அஞ்சியஞ்சி வாழ்நாட்களைக் கழித்த தேசபக்த இளைஞர்களும் இங்கேதான் இருந்தார்கள். இந்த இருபிரிவினரின் எண்ணங்களையும் வெளிப்படுத்துபவைதான் இந்த இரு செய்திகளும்! சுயநலவாதிகள் காலத்தால் காணாமல் போய்விடுவார்கள். ஆனால் செயற்கரிய செயல் செய்த அந்த தேசபக்த இளைஞனைத்தான் நூறாண்டுகள் கடந்தும் இன்றும் நாம் நினைவில் கொண்டுள்ளோம். அந்த இளைஞனின் வீர வரலாற்றை சிந்தித்துப் பார்ப்போம்..

நெல்லை அருகே உள்ள செங்கோட்டையில், 1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர்- ருக்மணி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார், சங்கரன் என்ற இயற்பெயரைக் கொண்ட வாஞ்சிநாதன்.

செங்கோட்டையில் தனது பள்ளிப் படிப்பை முடித்த வாஞ்சி, வ.உ.சிதம்பரம், சுப்ரமணிய சிவா போன்ற தலைவர்களின் பேச்சால் பெரிதும் கவரப்பட்டார். இதனால் சுதந்திர உணர்வானது அவரது இளம் ரத்தத்தில் இயல்பாக ஊறியது.

தனது கல்லூரிப் படிப்பை திருவனந்தபுரத்தில் முடிக்கும்போது, வாஞ்சிநாதனுக்கு பொன்னம்மாள் என்பவர் மணம் முடித்து வைக்கப்பட்டார். இதன் பிறகு புனலூர் வனத்துறையில் அவருக்கு வேலை.

ஆனால், ஆங்கிலேயர்களின் கொடுங்கோல் ஆட்சிமுறை, வாஞ்சிநாதனின் மனதை பணியில் ஒட்டச் செய்யாமல் சுதந்திரப் போரின் பக்கம் திருப்பியது.

புதுச்சேரில் இருந்த பிரெஞ்சு அரசு ஆங்கிலேயருக்கு எதிராக வாஞ்சியின் போராட்டத்திற்கு பக்க பலமாக இருந்தது. தனது சுதந்திரத் தாகத்திற்கு இடையூறாக இருந்த அரசுப் பணியை உதறித் தள்ளி, முழுமூச்சாக ஆங்கிலேயர்களுக்கு எதிராக களமிறங்கினார் வாஞ்சி.

1908 மார்ச் 9 ஆம் தேதி பாரத தேசமெங்கும் ஸ்வராஜ்ய தினம் கொண்டாட ஏற்பாடானது. அந்த சந்தர்ப்பத்தில் தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்த சுப்பிரமணிய சிவா, பல கூட்டங்களில் ஆங்கில ஆட்சிக்கு எதிராகவும், சுயாட்சிப் பிரச்சாரமும் செய்து வந்தார். வ.உ.சியும் சுப்பிரமணிய சிவாவும் கைகோர்க்க, தூத்துக்குடி வீறு கொண்டு எழுந்தது. இதனால் ஆத்திரப்பட்ட ஆஷ்துரை, அடக்குமுறைகளைக் கையாண்டதோடு, இவர்கள் இருவரையும் பற்றி திருநெல்வேலி கலெக்டருக்கு அறிக்கை அனுப்பினார். அதைத் தொடர்ந்து திருநெல்வேலிக்கு அழைக்கப்பட்ட இவர்கள் இருவரும் வஞ்சகமாக கலெக்டரால் சிறையிலடைக்கப்பட்டனர். திருநெல்வேலி முழுதும் கலவரம் பரவியது. கலவரத்தை அடக்க, துப்பாக்கிச் சூடும் வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டன. குறிப்பாக சுதேசி என்ற பேச்செடுத்தாலே அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது.

வ.உ.சியும் சுப்பிரமணிய சிவாவும் கைகோர்க்க, தூத்துக்குடி வீறு கொண்டு எழுந்தது. இதனால் ஆத்திரப்பட்ட ஆஷ்துரை, அடக்குமுறைகளைக் கையாண்டதோடு, இவர்கள் இருவரையும் பற்றி திருநெல்வேலி கலெக்டருக்கு அறிக்கை அனுப்பினார். அதைத் தொடர்ந்து திருநெல்வேலிக்கு அழைக்கப்பட்ட இவர்கள் இருவரும் வஞ்சகமாக கலெக்டரால் சிறையிலடைக்கப்பட்டனர். திருநெல்வேலி முழுதும் கலவரம் பரவியது. கலவரத்தை அடக்க, துப்பாக்கிச் சூடும் வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டன.

இதில் மிகத் தீவிரமாக இறங்கிய தூத்துக்குடி சப்-கலெக்டர் ஆஷ்துரையின் அதிவேக செயல்பாடுகளால் திருப்தியுற்ற பிரிட்டிஷ் நிர்வாகம், அவரை திருநெல்வேலி கலெக்டராக பதவி உயர்வு அளித்து, அவர் செயல்களை நியாயப் படுத்தியது. அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி கலெக்டராக பதவி பெற்ற ஆஷ்துரை, முன்னைக் காட்டிலும் தீவிரமாக செயலில் இறங்கினார். எங்கெல்லாம் சுதேசிச் சிந்தனையாளர்கள் இருக்கிறார்களோ, எங்கெல்லாம் சுதேசிப் பிரச்சாரம் நடக்கிறதோ அவர்கள் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டனர். ஏற்கனவே வ.உ.சி மற்றும் சுப்பிரமணிய சிவா இவர்களின் கைதுக்கும், சுதேசிக் கப்பல் கம்பெனியின் அழிவுக்கும் காரணமாக இருந்த கலெக்டர் ஆஷ் மீது கோபத்தில் இருந்த பாரதமாதாசங்க உறுப்பினர்கள், இப்போதைய நிகழ்வுகளினால் மேலும் கொதிப்படைந்தனர். தங்களுக்குள் ரகசியக் கூட்டம் போட்டு, கலெக்டர் ஆஷைக் கொல்ல வேண்டும் என்று முடிவெடுத்தனர். அதுமட்டுமே அவர்களுடைய விருப்பம் இல்லை; ஆங்கில ஆட்சி அகன்று சுயாட்சி நடைபெற வேண்டும் என்பதே அவர்களின் கனவாக இருந்தது. ஒருநாள் செங்கோட்டையில் வாஞ்சியின் இல்லத்தில் நடந்த கூட்டத்தில் இந்த எண்ணங்கள் உறுப்பினர்களிடம் விதைக்கப்பட்டன.

வாஞ்சியின் வீட்டு வாசலில் பெரிய கொடிமரத்தின் கீழே பாரதமாதா படம் வைக்கப்பட்டு, கொடி மரத்தில் பாரதமாதா கொடி பறந்தது. உறுப்பினர்களிடையே வாஞ்சி இப்படிப் பேசினார்….

“சகோதரர்களே! இந்த பரந்த பாரத தேசத்தின் தென் கோடியிலுள்ள நமது செங்கோட்டையில் பறக்கும் பாரதமாதாவின் கொடியானது சீக்கிரத்திலேயே பாரத தேசமெங்கும் வெற்றிக் கொடியாகப் பறக்க வேண்டும். வடக்கே பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த யுத்தத்தில் சத்தியமே ஜெயித்த அந்த குருக்ஷேத்திர பூமியில், இன்று ஆங்கிலேயர்கள் நம் பாரத மாதாவையும் நம்மையும் அடிமையாக்கி ஆட்சி புரிகின்றனர். அன்று அந்த யுத்த பூமியில் தர்ம யுத்தம் நடந்தது. அதில் அதர்மம் அழிந்து தர்மம் நிலைத்தது. அன்று அது நடந்தது உண்மையானால், இன்று செங்கோட்டையில் பறக்கும் இக்கொடி வருங்காலத்தில் அங்கேயும் பறக்க வேண்டும்! இது சத்தியம்” என உணர்ச்சி கரமாகப் பேச, உறுப்பினர்கள் அனைவரும் “வந்தேமாதரம்” என்று கோஷமிட்டனர்.

வாஞ்சி சொன்னது போல் இறுதியில் அதுதான் நடந்தது. பாரத தேசத்தின் தென்கோடியில் இருக்கும் ஒரு செங்கோட்டையில் ஏற்றப்பட்ட பாரதக் கொடி, வட பாரதத்தின் டில்லி செங்கோட்டையில் ஒரு நாள் கொடி ஏறியது. ஆனால் ஆயுதப் புரட்சி மூலம் காரியத்தைச் சாதிக்கத் திட்டமிட்ட இந்த வீர இளைஞர்களின் வழியில் அல்லாமல் காந்தியின் அஹிம்சைக் கொள்கையால் இறுதியில் ஏறியது. ஆனால் அதற்குக் கடந்து வந்த வருடங்கள் சுமார் 32. பாரதமாதா சங்கத்தினர், அப்போதைய ஆனந்த வருடத்திற்குள், அதாவது 1915க்குள் தென்னகத்தில் ஆயுதப் புரட்சி மூலம் வெள்ளையரை விரட்டி சுயாட்சி நிலவச் செய்ய திட்டமிட்டனர். ஆனால் வாஞ்சியின் ஆஷ்கொலை முடிவுக்குப் பிறகு, பாரதமாதா சங்கம் வெள்ளையரால் நசுக்கப்பட்ட பின்னால் 32 ஆண்டுகள் கழிந்து அமைதி வழியில் டெல்லி செங்கோட்டையில் சுதந்திரக் கொடி ஏறியது.

ஆம்! வாஞ்சியின் செயல், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இனி ஆங்கிலேயர்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பில்லை என்ற அச்ச உணர்வு தோன்றியது. அதன் காரணத்தால் முன்னிலும் வேகமாக சுதேசியம் பேசுவோர் ராணுவ பலத்தால் அடக்கி ஒடுக்கப்பட்டனர். இந்த அளவுக்கு ஆங்கிலேயரை ஆட்டங்காணச் செய்த வாஞ்சி என்ன செய்தார்…

ஆம்! வாஞ்சியின் செயல், பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இனி ஆங்கிலேயர்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பில்லை என்ற அச்ச உணர்வு தோன்றியது. அதன் காரணத்தால் முன்னிலும் வேகமாக சுதேசியம் பேசுவோர் ராணுவ பலத்தால் அடக்கி ஒடுக்கப்பட்டனர்.

செங்கோட்டையிலிருந்து புதுவைக்குச் சென்ற வாஞ்சி, அங்கே கவிபாரதியார், வ.வே.சு ஐயர் போன்றோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டார். தனிநபர் கொலை மூலம் சுயாட்சி பெறும் சிந்தனை கொண்டிருந்த வீரசாவர்க்கரின் சித்தாந்தங்களை ஏற்று செயல்பட்டுக் கொண்டிருந்தார் வ.வே.சு ஐயர். அவர் அப்போதுதான் பிரான்சிலிருந்து திரும்பியிருந்தார். அவர், வீரன் வாஞ்சிக்கு துப்பாக்கி சுடப் பயிற்சி அளித்து, தன்னுடைய கொள்கைகளின் அடிப்படையில் வாஞ்சியைத் தயார் செய்தார். அதன் பிறகு புதுவையிலிருந்து செங்கோட்டைக்குத் திரும்பிய வாஞ்சி, தன் நண்பர்கள் துணையுடன் திருநெல்வேலிக்குச் சென்று ஆஷ் துரையை உளவு பார்க்கச் சென்றார்.

அதற்கிடையில் பாரத மாதா சங்கத்தின் பேரில் ஒரு கொலை மிரட்டல் கடிதமும் ஆஷுக்கு அனுப்பப்பட்டது. அதனால் கொதிப்படைந்த ஆஷ், திருநெல்வேலியை தீவிரமாகக் கண்காணிக்கச் சொன்னான். அந்த நிலையில் மனு கொடுப்பவர் போல் கலெக்டரைச் சந்தித்து அவருடைய நடவடிக்கைகளையும் அடையாளத்தையும் அறிந்து வந்தார் வாஞ்சி. ஒரு வாரம் கழித்து ஆஷ்துரை கொடைக்கானலுக்கு ஓய்வு எடுக்கப்போவதைத் தெரிந்துகொண்டு, அந்த சந்தர்ப்பத்தையே சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள எண்ணினார் வாஞ்சிநாதன்.

திருநெல்வேலியிலிருந்து கிளம்பி, மணியாச்சி ரயில் நிலையத்தில் வேறு வண்டி மாறக் கிடைத்த சந்தர்ப்பத்தில் சன்னல் வழியே கலெக்டர் ஆஷை துப்பாக்கியால் குறிபார்த்தார். அதனால் பதறிய ஆஷ், தன் தொப்பியை வீசியடித்தார்.

திருநெல்வேலியிலிருந்து கிளம்பி, மணியாச்சி ரயில் நிலையத்தில் வேறு வண்டி மாறக் கிடைத்த சந்தர்ப்பத்தில் சன்னல் வழியே கலெக்டர் ஆஷை துப்பாக்கியால் குறிபார்த்தார். அதனால் பதறிய ஆஷ், தன் தொப்பியை வீசியடித்தார். ஆனால் கண நேரத்தில் தன் கையிலிருந்த துப்பாக்கியால் ஆஷைச் சுட்டுவிட்டு, தப்பியோடிய வாஞ்சி, மக்களிடமிருந்தும் போலீஸாரிடமிருந்தும் தப்பிப்பதற்காக அங்கிருந்த ஒரு கழிவறைக்குள் புகுந்து கொண்டார். பாரதமாதா சங்கத்தில் எடுத்துக் கொண்ட உறுதிமொழிப்படி, தான் போலீஸில் சிக்கி அதன்மூலம் சங்கத்தையும் நண்பர்களையும் காட்டிக் கொடுத்து அவர்கள் கையால் இறக்கக் கூடாது என்று எண்ணினார். அதனால் தன் வாயில் அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் வாஞ்சி.

வடநாட்டில் பகத்சிங் செய்த செயலுக்கு சுமார் 20 வருடங்களுக்கு முன் அப்படியொரு தீரச் செயல் செய்த சுதந்திரப் போராளி வாஞ்சிநாதன், எளிய குடும்பத்தில் பிறந்தவர். அவர் தந்தை ரகுபதி ஐயர் செங்கோட்டையில் உள்ள கோயிலில் பூசை செய்து வந்தார். வாஞ்சி புனலூரில் காட்டிலாகாவில் வேலை பார்த்து அந்த வருமானத்தில் குடும்பம் நடந்து வந்தது. ஆனால் வெள்ளையரிடம் கைகட்டி நிற்பதா என்ற எண்ணம் தோன்றி, அந்த வேலையையும் உதறிவிட்டு, நாட்டின் சுதந்திரத்தைப் பற்றிச் சிந்திதார் வாஞ்சி. தன் மனைவி திருவனந்தபுரத்தில் பிரசவத்துக்காகச் சென்றபிறகு மீண்டும் அவளைப் பார்ப்பதற்குக் கூடச் செல்லவில்லை. அவருக்கு நாடே வீடாக மனத்தில் தோன்றியது. வாஞ்சிநாதன் இறந்துபோன செய்தி அவருடைய மனைவி பொன்னம்மாளுக்கு தெரிவிக்கப்படவே இல்லை. அதனால் தன் கணவர் சுதந்திரப் போராட்டத்தில் எங்கோ தலைமறைவாக இருந்துகொண்டு வேலை செய்து கொண்டிருக்கிறார் என்று எண்ணினார் பொன்னம்மாள்.

வாஞ்சிநாதன் இறந்துபோன செய்தி அவருடைய மனைவி பொன்னம்மாளுக்கு தெரிவிக்கப்படவே இல்லை. அதனால் தன் கணவர் சுதந்திரப் போராட்டத்தில் எங்கோ தலைமறைவாக இருந்துகொண்டு வேலை செய்து கொண்டிருக்கிறார் என்று எண்ணினார் பொன்னம்மாள்.

ஆனால் மாதங்கள் பல கடந்த பிறகு அவருக்கு செய்தி சொன்னபோது அவர் அதை நம்பவில்லை. காரணம், அவர் வாஞ்சியின் பூதவுடலைப் பார்க்கவில்லை, மேலும் வாஞ்சியின் இறுத்தச் சடங்கிற்கு, மனைவியின் கையால் பெற்றுச் செய்யவேண்டிய சடங்குகள் எதையும் செய்யவில்லை. அதனால் அவர் தாம் இறக்கும் வரையில் பூவும் பொட்டும் வைத்துக் கொண்டு, சுமங்கலியாகவே வாழ்ந்து முடித்தார். அதனால் எல்லோரும் அவரை சுமங்கலி மாமி என்றே அழைத்தனர்.

நாட்டுக்காக உயிர் துறந்த வாஞ்சியின் செயலில் மரியாதை கொண்டிருந்த வீரப் பெருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், தீபாவளிக்கு புடவை எடுத்து சமர்ப்பித்து, பொன்னம்மாளின் பாதங்களில் விழுந்து வணங்கி ஆசி பெறுவதை வழக்கமாக்கிக் கொண்டார். வீரனின் மனைவியாக பொன்னம்மாளின் தியாக வாழ்வைப் போற்றியவர் பசும்பொன் திருமகனார்.

ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும். அந்தக் கனவை நிறைவேற்ற ஒவ்வொருவருமே ஏதேனும் செய்து வருகிறோம். ஆனால் நாட்டைப் பற்றிய சிந்தனையும் வீட்டைப் பற்றிய எண்ணமும் இருந்தால், அதை மீறி தம் சுயநலன் பற்றியே சிந்தித்தால் உலகு அவர்களை எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்காது. அவர்கள் வரலாற்றிலே பதியப்படாமல், பிறந்து மறைந்து போன கோடிக்கணக்கான ஜனத்திரளில் அவர்களும் சேர்ந்து விடுவர். வீட்டைப்பற்றி சிந்திக்காது ஒவ்வொரு கணமும் நாட்டின் நினைவாகவே இருந்த வாஞ்சிக்கும் ஆசைகள் இருந்திருக்கின்றன. அவற்றை அவரே ஒரு சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாட்டுக்காக உயிர் துறந்த வாஞ்சியின் செயலில் மரியாதை கொண்டிருந்த வீரப் பெருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், தீபாவளிக்கு புடவை எடுத்து சமர்ப்பித்து, பொன்னம்மாளின் பாதங்களில் விழுந்து வணங்கி ஆசி பெறுவதை வழக்கமாக்கிக் கொண்டார்.

ஒருமுறை செங்கோட்டை அழகப்ப பிள்ளையை வாஞ்சி, திருநெல்வேலியில் வைத்து சந்தித்தார். அந்தச் சந்திப்பின்போது, வாஞ்சிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்து போனதை எண்ணி வருந்தி அவருக்கு ஆறுதல் சொன்னார் அழகப்ப பிள்ளை. அதற்கு வாஞ்சி, “பிள்ளைவாள்! உலகில் பிறப்பதும் இறப்பதும் அவரவர்களுடைய கர்ம வினை. இதைப் பற்றி கவலைப்படவே கூடாது! நம் சுதேச முயற்சி எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.

“வாஞ்சி நாம் எடுத்துக் கொண்ட பிரமாண வாக்கைக் காக்க ஒவ்வொருவரும் துடிக்கிறார்கள். ஆனால் நீலகண்ட சுவாமிகளிடமிருந்தோ உன்னிடமிருந்தோ சங்கத்தாருக்கு எந்தவித உத்திரவும் வரவில்லையே என்றுதான் காத்திருக்கிறார்கள்” என்றார் அழகப்ப பிள்ளை.

“பிள்ளைவாள்! நீலகண்டனிடமிருந்து எவ்விதமான பதிலும் வராது. அவன் வடக்கே சென்றுவிட்டான். அவன் உத்திரவுக்குக் காத்திருந்து பயன் இல்லை. நாம் பிரமாணங்கள் எடுத்துக் கொண்டதுபோல், வெள்ளையரை நாட்டை விட்டு ஒழித்துக் கட்ட அவரவர் மனச்சாட்சி படி தீவிரமாக இருக்க வேண்டும்” என்றார்.

அதற்கு பிள்ளை, “வாஞ்சி ஆரம்பம் முதல் இன்றுவரை நாம் ஒற்றுமையாக இருந்துதான் எல்லாக் காரியங்களையும் செய்து வருகிறோம். இனியும் அப்படித்தான் நடப்போம்” என்றார். அப்போது வாஞ்சி செங்கோட்டை நண்பர்களைப் பற்றி, விசாரிக்கும்போது சாவடி அருணாசலம்பிள்ளையைப் பற்றி விசாரித்தார். அருணாசலம் பிள்ளை டாக்டர் படிப்பிற்காக கல்கத்தாவிற்குச் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும், தானும் பரோடா கலாபவனில் எஞ்சினீரிங் படிப்புக்குச் செல்ல விரும்புவதையும் கூறினார் அழகப்ப பிள்ளை.மனத்திற்குள் சிரித்துக் கொண்ட வாஞ்சிநாதன்…

“எல்லோருமாகச் சேர்ந்து நம் பாரத தேசம் சுதந்திரம் அடைந்ததும் தொடர்ந்து தேசத்திற்காகப் பாடுபடுவார்கள் என்று எண்ணினேன். ஆனால் நாடு விடுதலை அடைவதற்கு முன்பாகவே நமது தோழர்கள் தனித் தனியாகப் பிரிந்து, உத்தியோகத்திற்கும் படிப்பிற்குமாகச் சென்று விட்டால், பிறகு நாட்டிற்காக யார் எப்படி உழைக்க முடியும்? ஆகவே நானும் காளிதேவியின் முன்பு எடுத்துக் கொண்ட பிரதிக்ஞைப்படி, ஆங்கிலேயர்களை ஒழித்துவிட்டு, எங்கேயாவது போய்வர முடிவு செய்யப்போகிறேன்! அது அநேகமாக அமெரிக்காவாக இருக்கும்…” என்று தன் ஆசையை வெளிப்படுத்தினார்.

சுதேசக் கொள்கையில் பற்றுக்கொண்டிருந்த வாஞ்சிக்கு இப்படியும் ஒரு ஆசை இருந்திருக்கிறது.

1911 ஜூன் 17 சனிக்கிழமையன்று இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் அழியாத ஒருபக்கத்தை எழுதிச் சென்ற வாஞ்சிநாதன் போன்ற தியாக உள்ளம் கொண்டவர்களும் இந்திய விடுதலைக்கு ஒரு காரணமாக இருந்தார்கள் என்பதை நாம் நினைவில் கொள்வோம்.

இளம் வயதிலேயே தான் கொண்ட லட்சியத்திற்காக வாஞ்சிநாதன் தனக்குத்தானே முடிவுரை எழுதிக் கொண்டார். ஆனால், தமிழகத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்களிடம் உறங்கிக் கொண்டிருந்த சுதந்திர வேட்கை, அன்று தனது துயிலைக் கலைத்தது.

சும்மா வரவில்லை சுதந்திரம் என்பதை இன்றைய இளைய தலைமுறையினருக்கு இச்சம்பம் நிச்சயம் உணர்த்தியிருக்கும். வாஞ்சிநாதனின் வாழ்க்கை வரலாறு நிச்சயம் அவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் என நம்பலாம்!

(நன்றி : tamil.webdunia.com & செங்கோட்டை ஸ்ரீராம், Dinamani.com)

9 thoughts on “உறங்கிக் கொண்டிருந்த சுதந்திர வேட்கையை தன்னுயிரை தந்து தட்டி எழுப்பிய மாவீரன் வாஞ்சிநாதன்!

  1. வாஞ்சி மேற்கொண்டது அடிமைத்தனத்திலிருந்து இந்தியாவை விடுவித்து சுதந்தர இந்தியாவை காண்பது தான் .

    தியாக செம்மல் வாஞ்சிநாதனுக்கு நேரடி வாரிசுகள் யாரும் இல்லை என்றாலும், நூறாண்டுக்குப் பிறகு நாம் அனைவருமே அவரது வாரிசுகள்தான் .அன்னாரின் 103 வது நினைவுநாளில் நாமும் தேசத்தின் பாதுகாப்பு நலனுக்காக உறுதிஏற்ப்போம் .

    “ஜெய் ஹிந்த்”

    “ஜெய் ஹிந்த்”

    “ஜெய் ஹிந்த்”

  2. நாமும் தேசத்தின் பாதுகாப்பு நலனுக்காக உறுதிஏற்ப்போம்.

    “ஜெய் ஹிந்த்”

  3. தியாகத்தின் திருவுருவம் அஞ்சாநெஞ்சன் மாவீரன் வாஞ்சிநாதனின் நினைவு நாலாகிய இன்ரு அவரை நினைவுகூர்ந்து கௌரவித்தமைக்கு
    நன்றீகள்…

  4. வீரர் வாஞ்சிநாதனை பற்றிய அருமையான கட்டுரைக்கு நன்றி சுந்தர். வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார், மாபெரும் வீரர் மானம் காத்தோர் சரித்திரம் தனிலே நிற்கின்றார். என்னைபோன்றவர்களுக்கு அவ்வப்போது நாட்டைபற்றி நினைக்க ரைட்மந்த்ரா ஒரு மிகபெரிய தூண்டுகோல். இன்றைய சூழலில் வீட்டிற்க்கு ஒரு வாஞ்சிநாதன் தேவை. நான் சொல்வது தன்னலமில்லாமல் தேச நலனை கருத்தில் கொண்டு செயல் புரிய இளைஞர்கள் வேண்டும் என்கிற நோக்கத்தில். மற்றபடி அவர்கள் ஆயுதத்தை கையில் எடுக்கவேண்டிய அவசியம் இல்லை. தேச பக்தி, கடவுள் பக்தி மற்றும் கடின உழைப்பு – இதுதான் இன்றைய தேவை.

  5. ஒரு மாவீரனின் வீர வரலாற்றை அறிந்து கொள்ள செய்தமைக்கு மிக்க நன்றி !!!

    இத்துனை கஷ்டப்பட்டு பெற்ற சுதந்திரத்தின் இன்றைய நிலையை நினைத்தால் மனம் மிகவும் வருந்துகிறது !!!

    இது நம் நாட்டுக்கு உண்டான சாபமோ என்று எண்ண தோன்றுகிறது !!!

    இன்றைய தேதியில் எந்த செய்தித்தாளை படித்தாலும் அதில் 90% அராஜகங்களும் அட்டூழியங்களும் கொலை கொள்ளை கற்பழிப்பு துரோகம் என கெட்ட செய்திகளே ஆதிக்கம் செலுத்துகின்றன !!!

    என்றாவது ஒரு நாள் இந்த தேசத்தில் உண்மையான மக்களாட்சி மலரும் !!! மக்களின் நலனை மட்டுமே மனதில் கொண்ட நல்லுள்ளம் கொண்டவர்கள் வருவார்கள் அவர்களை மக்கள் உலகுக்கு அடையாளம் காட்டுவார்கள் என்று நம்புவோம் !!!

    ஜெய் ஹிந்த் !!!

  6. வாஞ்சிநாதன் போன்ற பல வீரர்களின் தியாகத்தால் தான் நாம் இன்று சுதந்திர காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். அவர்களின் தியாகத்தைப் போற்றிட வேண்டிய நாம் அவர்களை கொஞ்சம் கொஞ்சமாய் மறந்து கொண்டு வருகிறோம். இன்று காந்தியைப் பற்றித் தெரிந்த பலருக்கும் வாஞ்சிநாதன் போன்றவர்களைப் பற்றி அவ்வளவாகத் தெரிவதில்லை. (என் அனுபவம் : என் உறவினரின் 8-ஆம் வகுப்புப் படிக்கும் மகளுக்கு வ.உ.சி விடுதலை வீரர் என்று தெரிந்திருக்கிறது. ஆனால் அவர் ஆங்கிலேயரை எதிரித்து கப்பல் ஓட்டியதும், செக்கிழுத்ததும் தெரியவில்லை.கேட்டால் பாடத்தில் இல்லையாம்.)

    இது போன்ற நிலை மாற வேண்டும். ஒவ்வொருவரும் நம் சுதந்திர வரலாற்றையும், விடுதலை வீரர்களையும் தெரிந்து போற்ற வேண்டும். ..வந்தே மாதரம்,

    “கடமையைச் செய்; பலனை எதிர்பார்”

    விஜய் ஆனந்த்

  7. பிரமாதம் சுந்தர் .. இது போல் நம் தமிழ் நாட்டில் சுதந்திரத்துக்காக எத்தனையோ தியாக வரலாறு உள்ளன…. அவை எல்லாம் பெரும்பாலும் மறக்க பட்டவை அல்ல புறக்கணிக்க பட்டவை …
    தமிழ் திரை உலகமும் , தெய்வத்திரு. சிவாஜி கணேசனும் இல்லையென்றால், அநேக தமிழர்க்கு இன்று வரை கட்டபொம்மன் , குமரன் , சிதம்பரனார் போன்றோரை பற்றி தெரியாமலே போயிருக்கும் — இதான் நிதர்சனமான உண்மை.

  8. அப்துல் கலாம் அய்யா அவர்களை பற்றியும் வெளிடலாமே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *