அம்மா இப்படி தினசரி விளக்கேற்றி பிரார்த்தனை செய்து வருவதை கவனிக்கும் அவளது ஒரே மகள் (வயது 16) “அம்மா ஏன்மா இப்படி தினமும் பிரேயர் பண்றே? உருகுறே? இதுனால எதுனா பிரயோஜனம் இருக்கா என்ன?’ என்று கேட்கிறாள். அந்த சமயம் தனது மனதுக்கு தோன்றுவதை பதிலாக தனது மகளிடம் சொல்லி சமாளித்து வந்தார் இந்தப் பெண்.
அவரது மகள் நகரில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்துவருகிறாள். ஒரு நாள் வழக்கம்போல தனது மகளை அவள் பள்ளி பேருந்தில் ஏற்றி வழியனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்துவிடுகிறார்.
பேருந்து புறப்படுகிறது. இரண்டு மூன்று கி.மீ. தூரம் சென்ற பின்னர், பின்பக்கத்திலிருந்து ஒரு வினோத சப்தம் வருகிறது. பேருந்தின் சீரான ஓட்டத்தை அந்த சப்தம் கெடுப்பது மட்டுமின்றி, சற்று தூக்கி தூக்கி வேறு போடுகிறது. சற்று ஒதுக்குபுறமாக பேருந்தை நிறுத்தும் ஓட்டுனர், இறங்கி போய் என்னவென்று பார்க்கும்போது தான் தெரிகிறது பேருந்தின் பின்பக்க சக்கரங்களுக்கிடையே உள்ள இடைவெளியில் ஒரு பெரிய கல் ஒன்று சிக்கிக்கொண்டிருப்பது.
அதை அவர் அகற்ற முயல, கல் அசைந்துகொடுக்க கூட மறுக்கிறது. இவர் கல்லோடு போராடிக்கொண்டிருக்க, என்ன ஏது என்று பார்க்க கீழே இறங்கும் சில உயர் வகுப்பு மாணவர்கள், அந்த கல்லை அப்புறப்படுத்த உதவுகிறார்கள். அந்த கல் சிறிது அசைந்துகொடுத்ததே தவிர, அதை அகற்ற முடியவில்லை. இரண்டு பக்கமும் ரப்பர் என்பதால், பேருந்தின் அழுத்ததில் கல் நன்றாக சிக்கிக்கொண்டிருந்தது.
நேரமோ போய்க்கொண்டிருக்கிறது. பள்ளி துவங்கும் நேரமும் கிட்டத்தட்ட வந்துவிட்டது. சரி மாணவர்களை பள்ளியில் இறக்கிவிட்டுவிட்டு பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யும் டிரைவர் பேருந்தை மீண்டும் இயக்குகிறார்.
பேருந்து நல்ல வேகமெடுக்கிறது.
இங்கே பேருந்தின் உள்ளே, நேராக பின் சக்கரத்தின் மேலே உள்ள இருக்கையில் ஒரு மாணவி உட்கார்ந்திருக்கிறாள். சற்று தள்ளி, இரு சீட்கள் முன்னே அவளது தோழி. அங்கே அவள் அருகே ஒரு சீட் காலியாக இருக்க, தனது தோழியை கூப்பிடுகிறாள்.
“ஹேய்… இங்கே வந்து உட்கார் வா….. இங்கே இடம் காலியாயிருக்கு…!”
ப்ரெண்ட் பக்கத்துல உட்கார்ந்துகிட்டு ஜாலியா பேசிகிட்டு போகலாம் என்று நினைத்த அந்த மாணவி ஆவலாக அங்கே சென்று உட்கார்ந்துகொள்கிறாள். இருவரும் ஜாலியாக அரட்டையடித்தபடி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
ஒரு சில வினாடிகள் கழிந்திருக்கும்…. பேருந்தினுள் “டமார்ர்ர்ர்” என்கிற சத்தம்.
என்ன என்று பதறிப்போய் அனைவரும் சத்தம் வந்த திக்கு நோக்கி திரும்பி பார்க்க, சக்கரத்தில் சிக்கி கொண்டிருந்த அந்த கல், பேருந்தின் மட்கார்டை உடைத்துக்கொண்டு பேருந்தின் உள்ளே வந்து விழுந்திருக்கிறது.
அந்த கல்லை பேருந்தினுள் பார்த்தவர்கள் அனைவருக்கும் ஒரு கணம் அதிர்ச்சி.
என்ன நடந்தது என்றால், மிகவும் டைட்டாக சிக்கொண்டிருந்த அந்த கல், இவர்கள் அதை அப்புறப்படுத்த எடுத்த முயற்சிகளின் காரணமாக சற்று லூஸாகிவிட்டது. பேருந்து மறுபடியும் இயக்கப்பட்டு வேகமெடுத்தபோது சக்கரத்தின் சுழற்சியில் வெளியேறிய கல், அந்த FORCE ன் காரணமாக பேருந்தையே துளைத்து உள்ளே வந்து விழுந்துவிட்டது.
அப்போது தான் இடம் மாறி உட்கார்ந்த அந்த மாணவிக்கு எப்படி இருக்கும்? மிகப் பெரிய கருங்கல். அங்கு இவள் அமர்ந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யூகிக்க கூட முடியாது. நிச்சயம் முகமும் தாடையும் பெயர்ந்திருக்கும்.
கடைசி நேரம் தன்னோட ப்ரெண்ட் கூப்பிடாம போய் தான் இடம் மாறி உட்காராம இருந்திருந்தா என்னாகியிருக்கும்…. பயத்தில் மிரண்டு போன அந்த மாணவி அன்று முழுவதும் அதிர்ச்சி விலகாமல் காணப்பட்டாள். அன்று மதிய உணவை கூட சாப்பிடவில்லை.
மாலை வீட்டுக்கு வந்தவுடன், தன்னுடைய ஆசை மகள் என்னவோ போலிருப்பதையும் சகஜ நிலைமையில் அவள் இல்லை என்பதையும் கண்டுபிடித்துவிடுகிறாள் தாய். போதாக்குறைக்கு கொண்டு சென்ற மதிய உணவு வேறு அப்படியே இருக்கிறது.
“என்னம்மா ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்கே? ஏன் சாப்பிடலை?” பதறிப்போய் கேட்க, மகள் காலை பேருந்தினுள் நடந்த அனைத்தையும் விவரிக்கிறாள்.
இவருக்கு ஒரு கணம் தூக்கி வாரிப் போடுகிறது.
நேரே பூஜையறைக்கு சென்று சுவாமி படத்தின் முன் நின்று… “என் தெய்வமே நல்ல வேளை என் குழந்தைக்கு ஒன்னும் ஆகலை. ரொம்ப நன்றி” என்று பிரார்த்தனை செய்கிறார்.
அனைத்தையும் கவனித்துக்கொண்டிருக்கும் அந்த சிறுமியின் அப்பா, அவள் அருகே சென்று, “அம்மா ஏன் டெய்லி சாமிக்கு விளக்கேத்தி பிரேயர் பண்றாங்க? அதுனால என்ன யூஸ்?னு கேட்டியே…. இப்போ புரியுதா? உன்னை அந்த நேரம் இடம் மாத்தி உட்கார வெச்சது எது தெரியுமா? அம்மா இங்கே தினமும் பண்ற பிரேயர் தான்!” என்கிறார்.
“புரியுது டாடி… இனிமே நானும் டெய்லி பிரேயர் பண்ணுவேன்” என்கிறாள் அந்த மாணவி.
பள்ளி நிர்வாகத்திற்கு இந்த விஷயம் தெரிந்தவுடன், மாணவர்களிடமும் பெற்றோரிடமும் எதிர்பாராமல் நடைபெற்ற இந்த சம்பவத்தை பெரிதுபடுத்தவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்கள்.
மேலே நீங்கள் படித்தது நம் தள வாசகி ஒருவரின் வாழ்வில் உண்மையில் நடைபெற்றது.
தினமும் பிரார்த்தனை செய்வதோடல்லாமல் நமது பிரார்த்தனை கிளப்பில் பங்கேற்று பிறருக்காகவும் பிரார்த்தனை செய்துவருகிறார்கள்.
நேற்று நமக்கு போன் செய்த அந்த வாசகி நேற்று முடிவுகள் வெளியான பத்தாம் வகுப்பு தேர்வில் அவரது மகள் 440 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார் என்ற விபரத்தையும் நமக்கு தெரிவித்து, நமது பிரார்த்தனை கிளப் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக முதன் முதலில் பிரார்த்தனை செய்ததை நினைவு கூர்ந்தார். பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றியையும் தெரிவித்தார்
பிரார்த்தனை என்பது எப்போது எந்த ரூபத்தில் பலன் அளிக்கும் என்பதை எவராலும் கணிக்க முடியாது. மரத்தின் வளர்ச்சிக்கோ செடியின் வளர்ச்சிக்கோ நாம் ஊற்றும் நீர் போல பிரார்த்தனைகள் மனித வாழ்வின் முன்னேற்றத்துக்கு வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். நமது பிரார்த்தனைகள் என்றுமே வீண்போவதில்லை.
நமது பிரார்த்தனைகளை நாம் மறக்காலாம். ஆனால் இறைவன் மறக்க மாட்டான். நமது பிரார்த்தனைகள் ஒவ்வொன்றையும் அவன் குறித்துக்கொண்டு வருகிறான். அதுவும் பிறருக்காக நாம் செய்யும் பிரார்த்தனைகளை அவன் மறப்பதேயில்லை.
இந்த வார கூட்டு பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?
=============================================================
கடன் பிரச்னை & குடும்பத்தில் அமைதியின்மை
நான் தங்கள் வெப்சைட்டின் ரெகுலர் வாசகி. எனக்கு தெரிந்தவர் ஒருவர் கடன் பிரச்னையால் நிம்மதியின்றி தவித்து வருகிறார். அவர் பெயர் திரு.சண்முகம்.
மிக மிக அமைதியான இந்த மனிதர் தற்போது கடன் பிரச்னையில் மிகவும் அவதிப்படுகிறார். வரவுக்கேற்ற செலவு செய்யும் பக்குவம் தம் மனைவிக்கு இல்லை என்று வருத்தப்படும் அவருக்கு அவரது மன உளைச்சல் நீங்கி, கடன் பிரச்னை தீர நம் வாசகர்களை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன்.
– உங்கள் வாசகி
==============================================================
பெரியப்பாவுக்கு BRAIN STROKE – விரைவில் நலம் பெறவேண்டும்
நமது தள வாசகர் ஹரி ஹரசுதன் அவர்களின் பெரியப்பா திரு.சந்தானம் (72) என்பவர். அவருக்கு சமீபத்தில் BRAIN STROKE ஏற்பட்டு தற்போது கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.
அவர் பரிபூரண குணமடைந்து எஞ்சிய தமது வாழ்க்கையை குடும்பத்துடனும் சுற்றத்துடனும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் கழிக்க இறைவனை வேண்டுவோம்.
=============================================================
நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.
கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இதற்க்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.
=============================================================
பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.
அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.
(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)
பிரார்த்தனை நாள் : ஜூன் 2, 2013 ஞாயிறு
நேரம் : மாலை 5.30 – 5.45
இடம் : அவரவர் இருப்பிடங்கள்
=============================================================
உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…
உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!
உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.
E-mail : simplesundar@gmail.com Mobile : 9840169215
=============================================================
இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க:
http://rightmantra.com/?cat=131
=============================================================
நாம் வணங்கும் இறைவன் ஏதேனும் ஒரு ரூபத்தில் வருவான் என்பது நிஜம்…….. மனிதர்கள் கைவிட்டாலும் இறைவன் என்றுஎன்றும் கைவிடுவதில்லை…………………….. நம் செய்யும் பிரார்த்தனை கண்டிப்பாக பலன் உண்டு……
நன்றி சார் ………..
மனித மனங்கள் ஒரு ரேடியோ அலைவரிசை போல செயல்படுகிறது .நமது மனம்,ஆன்மா,சிந்தித்தல்,பிரார்த்தனை போன்றவை,ரேடியோ டவர் ஆகிய நமது மூளைக்கு செல்கிறது .
அது நல்ல எண்ணங்களாக இருப்பின் ,மறு வினாடியே சக்திஊட்டப்பட்டு நமது மூளையை விட்டு பிரபஞ்சதில் பரவ தொடங்குகிறது .
அந்த சக்தியானது எதன் சம்பந்தமாக நாம் ஜெபிக்கிறோமோ (பிரார்த்தனை,நமது கோரிக்கை)அதற்க்கான வேலையை சம்பந்தப்பட்ட நபருக்கு செய்யத்தொடங்குகிறது.
இந்த சக்தியானது நம்மையும் நமது பந்துக்களையும் மிகப்பெரிய கவசமாக காத்து,நாம் என்ன நினைக்கிறோமோ அந்த மாற்றத்தை நிகழ்த்தும் .
நாள்காட்டியில் ஒருதாளைக் கிழிக்கும்போதும் கையிருப்பு நாட்களில் ஒன்று கிழிக்கப்படுகிறது என்று உணர்ந்து ஒவ்வொரு நாளையும் கவனமாக எதிர்கொள்ள வேண்டும்..
” நல்லவைகளையே நினைப்போம் . நல்லவைகளையே அறுவடை செய்வோம் ”
\\\\இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை\\\
வழக்கம் போல், அற்புதமான கருத்து.
நன்றி மனோகரன்.
– சுந்தர்
பூஜை அறையில் பெண்கள், அதுவும் பெண் குழந்தைகளை விளக்கேற்றும்படி பணித்தல் மிக மிக நல்லது.
இது பற்றிய பதிவு ஒன்றை உங்களுக்கு மெயில் அனுப்பிஉள்ளேன். விரும்பினால் நீங்களே வாசகர்களுக்கு தெரியபடுத்தலாம்.
அற்புதமான தகவல். விரைவில் தனி பதிவாக அளிக்கிறேன்.
நன்றி.
– சுந்தர்
பிரார்த்தனையின் சிறப்பையும் மகத்துவத்தையும் விளக்க இதை விட சிறந்த சான்று இருக்க முடியாதென்று நினைக்கிறேன் !!!
மனம் ஒன்றி செய்யும் பிரார்த்தனை எப்போதும் பலனளிக்காமல் போனதில்லை !!!
பிரார்த்தனை நமக்கு எப்போதும் ஒரு பாதுகாப்பு அரணாக இருந்து மலை போல் வரும் துயரங்களை போடி பொடியாக்கும் வல்லமை பெற்றது என்பது இதன் மூலம் விளங்குகிறது !!!
எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டுவோம்!!!
வாழ்க வளமுடன் !!!
நமது பிராத்தனை கிளப்இன் முதல் பிராத்தனை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்தோம் அது நல்ல முறையில் பயன் அளித்து உள்ளது . நிறைய மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுத்து உள்ளார்கள் .எனது மகள் 446 மதிப்பெண் எடுத்திருக்கிறாள் . கூட்டு பிராத்தனை மிகவும் சக்தி வாய்ந்தது . நம் உடைய கூட்டு பிராத்தனை க்கு கிடைத்த மிக பெரிய பலன் அதேபோல் அனைவர்க்கும் உடல் நலமும் நல்ல மனநலமும் தர இறைவனை தொடர்ந்து அனைவரும் கூட்டு பிராத்தனை செய்வோம் . இந்த அறிய முயற்சியை தொடங்கிய சுந்தர் க்கு நன்றி .
கடவுளை நம்புவோரை எப்போதுமே அவர் கை விட மாட்டார் என்பது உண்மை தான் சுந்தர். திரு.சண்முகம் அவர்களின் கடன் பிரச்னை, மற்றும் அவரது மன உளைச்சல் நீங்கவும், திரு ஹரி ஹரசுதன் அவர்களின் பெரியப்பா திரு.சந்தானம் அவர்கள் பரிபூரண குணமடைந்து எஞ்சிய தமது வாழ்க்கையை குடும்பத்துடனும் சுற்றத்துடனும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் கழிக்கவும் நாம் அனைவரும் வேண்டுவோம். நிச்சயம் நல்லதே நடக்கும்.
சுந்தர்ஜி,
முதலில் பிரார்த்தனை செய்ய ஊக்குவித்த சுந்தர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்.
கூட்டு பிரார்த்தனை என்பது மிகவும் வலிமை மிக்கது , சக்தி வாய்ந்தது.
நான் இங்கு மகிழ்ச்சியாக தெரிவித்து கொள்வது என்னவென்றால் நம் தளத்தின் மூலம் பிரார்த்தனை செய்து
தீவிர புற்று நோயால் பாதிக்கப்பட்ட நபர் திரு சிவராமகிருஷ்ணன் காப்பாற்ற முடியாது என்ற நிலைமை மாறி குணமடைந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மேலும் குணமடைந்து உடல் நிலை தேற வாரா வாரம் அவருக்காக மிண்டும் மீண்டும் பிரார்த்தனை செய்து வருமாறு நம் தள வாசகர்களை கேட்டு சொல்கின்றேன்.
NANDRI