நன்றி!
=====================================================================
வாழ்க்கையை ஏன் பிறவிப் பெருங்கடல் என்று கடலோடு ஒப்பிட்டு பெரியோர்கள் சொன்னார்கள் தெரியுமா? இதில் நீந்தி பத்திரமாக கரைசேர்வது என்பது அத்தனை சுலபம் அல்ல. ஆயிரம் பேர் இந்த கடலில் இறங்குகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் 50 பேர் கரை சேர்ந்தாலே பெரியவிஷயம் தான்.
‘கரை சேர்வது’ என்பது இந்த இடத்தில் பரந்த அர்த்தம் கொண்டது. புயலடிக்கும் கடலில் கூட நீந்தி கரைசேர்ந்துவிடலாம். ஆனால் சுறாக்களும் திமிங்கலங்களும் நிரம்பிய இந்த பிறவிப் பெருங்கடலில் நீந்தி கரைசேர்வது என்ன அத்துணை சுலபமா? கண்ணுக்கு தெரிந்த சுறாக்கள் என்றால் கூட பரவாயில்லை. உயிர் இருக்கும் வரை போரிடலாம். ஆனால் பல சுறாக்கள் கண்ணுக்கு தெரியாத சுறாக்கள் தானே? பலர் இப்படித் தான் போராடிக்கொண்டிருக்கிறோம். ஏதாவது ஒன்று பிடித்துக்கொள்ள கிடைக்காதா என்று பரிதவிக்கிறோம். அவரவர் நல்வினைக்கும் பக்திக்கும் பக்குவத்துக்கும் ஏற்ப உதவிக்கரங்கள் நீள்கின்றன. அவற்றை பிடித்துக்கொண்டு எப்படியாவது தப்பித்துவிடுகிறோம்.
இந்த பெருங்கடலில் நாம் போராடுகிறோம் என்று தெரிந்து போராடுகிறவர்கள் ஒருவகை என்றால்…. தன்னை சூழ்ந்திருக்கும் ஆபத்துக்கள் பற்றி அறியாமல் அதில் உழன்று கிடப்பவர்கள் மற்றொருவகை. சுறாக்கள் காலை பற்றி இழுக்கும்போது தான் இவர்களுக்கு சுயநினைவு வரும். கடவுளின் ஞாபகம் வரும். அதுவரை…. அவர்கள் தன்னிலையை உணரவே மாட்டார்கள்.
சரி… எதற்கு இந்த பெருங்கடல் உதாரணம்?
அதை பதிவின் இறுதியில் சொல்கிறேன்….!
முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பு இவரை தரிசிக்காமல் யாம் எடுப்பதில்லை. எம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் இவர் உடனிருந்து கைதூக்கி விட்டுருக்கிறார். கடந்த மூன்று வருடங்களாக ஒவ்வொரு புத்தாண்டின்போதும், இவரின் அவதாரத் திருநாளின்போதும் இவரை தரிசித்துவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறேன்.
ஒவ்வொரு முறையும் இவரை தரிசித்துவிட்டு வரும்போது ஏதாவது ஒரு முக்கிய திருப்பம் எம் வாழ்வில் நடைபெறுவதை கண்கூடாக கண்டிருக்கிறேன்.
சோதனைகளை தருவதில் இவருக்கு நிகர் இவரே. ஆனால் அவை யாவும் அளப்பரிய நன்மைகளை நமக்கு செய்யும் என்பது தான் இதில் விசேஷமே.
அவர் வேறு யாருமல்ல…. திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே நரசிங்கபுரத்தில் எழுந்தருளி அருள்பாளித்துவரும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் தான்.
பிரச்னைகளை இவரிடம் கொண்டு சென்றால் இவர் அதை ஒத்திப்போடுவதில்லை. அடுத்த நொடி தீர்ப்பு எழுதப்பட்டுவிடும்.
ஏனெனில் ‘நாளை என்பதில்லை என் நரசிம்மனிடத்தில்’.
இவர் எழுதும் தீர்ப்பு நமக்கு உடனே தெரியாது. காலம் தான் தெரியவைக்கும்.
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வ்தோ முகம்
ந்ருஷிம்ஹம் பீஷணம் பத்ரம்
ம்ருத்யூர் ம்ருத்யம் நமாம்யஹம்
இன்று நரசிம்ம ஜெயந்தி. வைகாசி மாதம் சுவாதி நட்சத்திரத் திருநாளில் கொடூரன் இரண்யனை வதம் செய்ய, பக்தன் பிரகாலதனின் வாக்கை காப்பாற்ற, தர்மத்தை நிலைநாட்ட எம்பெருமான நரசிங்க வடிவில் அவதரித்த திருநாள்.
பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் (நரசிங்கபுரம்) ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோவில் விஜயம்!!
நரசிங்கபுரம் என்று எல்லோரும் அன்பாக அழைக்கப்படும் இந்த ஊர்ச் சிறப்பு, தண்ணீருக்கு என்றுமே பஞ்சம் ஏற்பட்டதில்லை. மூன்று போகமும் பயிர் செய்யும் வசதி இருக்கிறது. சென்னையில் இருந்து மேற்குத் திசையே சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த ஊரின் பரப்பளவு சுமார் 150 ஏக்கர் ஆகும். இது ஒரு தன்னிறைவு அடைந்த ஊராட்சி ஒன்றியமாகும். இங்கு சுமார் 3000 குடும்பங்கள் வசிக்கிறது.
டூ-வீலரில் செல்பவர்கள் இடைவிடாத பயணத்தை தவிர்த்து, வழியில் ஓரிரு இடங்களில் நிறுத்தி இளைப்பாறுதல் அவசியம்.
கோவில்கள் தவிர, யோகதா சத்சங்க சொஸைட்டியின் தியான மந்திர், ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனம் என இந்த பாதையில் பல உள்ளன.
பேரம்பாக்கம் செல்லும் வழி நெடுக, பல புராதன கோவில்கள் உள்ளன. இவற்றையெல்லாம் பார்க்கவேண்டும் என்றால் ஒரு நாள் இரு நாள் போதாது. மேலே நீங்கள் காண்பது மப்பேடு சிங்கீஸ்வரர் திருக்கோவில்.
இயற்கையின் மடியில் விரிந்துள்ள பச்சைக் கம்பளம் போன்ற இவ்வூரில் அருள்பாலிக்கிறார் மரகதவல்லி சமேத ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மர்.
விஜயநகர அரசர்களால் 600 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது இவ்வூர். இங்கு எழுதருளியிருக்கும் நரசிம்மரின் பெயரிலேயே இவ்வூர் அழைக்கப்படுகிறது. சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூருக்கு முன்பாக பிரியும் அரக்கோணம் சாலையில் 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பேரம்பாக்கம்.
பேரம்பாக்கம் ஊர் செல்லும் வழியே ரம்மியமான இயற்கை காட்சிகளை கொண்டது தான்.
செல்லும் வழி நெடுக இரு பக்கமும் கிராமங்கள் என்பதால் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் சாலையை அவ்வப்போது கடக்கும். எனவே வாகனங்களில் செல்பவர்கள் எச்சரிக்கையுடன் செல்லவேண்டும்.
இரண்டு வெவேறு தருணங்களில் (இரண்டு புத்தாண்டுகளுக்கு) பேரம்பாக்கம் சென்று வந்த படங்களை இங்கு இணைத்திருக்கிறேன். அதில் ஒன்று நல்ல மழை பொழிந்து ஓய்ந்து தருணம். அதன் வித்தியாசத்தை புகைப்படத்திலேயே பார்க்கலாம். எங்கும் பசுமை… செழிப்பு தான்.
நண்பர்களுடன் கடந்த புத்தாண்டு அன்று இங்கு சென்று வந்தது மறக்கக முடியாத அனுபவம்.
இங்கு மூலவர் சன்னதியில், சுமார் 7அடி உயரம் உள்ள ஸ்ரீ நரசிம்மன், மஹாலக்ஷ்மியை மடியில் அமர்த்தி சாந்த சொரூபியாய் காட்சி தருகிறார். இங்கே தாயார் பெருமானை அணைத்தபடி காட்சி தருகிறார். இது வேறெங்கும் காணக்கிடைக்காத காட்சியாகும். பின் இரு கரங்களில் சக்கரமும், சங்கும் ஏந்தி, வலக்கரம் அபயஹஸ்தமாகவும், இடக்கரம் தாயாராகிய மஹாலக்ஷ்மியை அணைத்தும் மந்தகாசப் புன்னகையுடன் காட்சி தருகிறார் பெருமாள். அழகிய திருமண்காப்பு நெற்றியில்.
தாயாரோ, “என் குழந்தைகளை பெருமானின் கோபாக்னியிலிருந்து காப்பாற்றவே இப்படி மடியில் அமர்ந்திருக்கின்றேன்” என்று சொல்லாமல் சொல்வது போல் நாணத்துடன் புன்னகை பூக்கிறார்.
சாதாரணமாக நரசிம்மரின் கோவில்களில் தாயார் அமிர்தவல்லி அல்லது நரசிங்கவல்லி என்றே அழைக்கபடுவார். ஆனால் இக்கோவிலில் ஐந்தடி உயரத் தாமரையின் மேல் அமர்ந்து மரகதவல்லி எனும் திருநாமத்துடன் அருள்புரிகிறார்.
விசேட நாட்களில் சர்க்கரை பொங்கல், சாம்பார் சாதம் என பவித்ரமான பிரசாதம் இங்கு உண்டு. கேட்க கேட்க தருவார்கள்.
கோவிலின் சிறப்புக்கள்
* திருமணம் தடைபடும் பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தால், உடனே திருமணத்தடை நீங்கி திருமண தோஷம் நீங்கி, மகிழ்ச்சி பொங்கும் என்பது நம்பிக்கை.
கோயில் பெயர் :- ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயம்
மூலவர் :- ஸ்ரீ லட்சுமி நரசிம்மா
உற்சவர் :- ஸ்ரீ பிரகலாத வரதர்
தாயார் :- ஸ்ரீ மரகதவல்லி தாயார்
தல விருட்சம் :- வடகலை, பாஞ்சரார்த்தம்
பழமை :- 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது
திரு விழா :- ஆனி பிரம்மோட்சவம்
தரிசனம் முடித்து பலிபீடம் அருகே வந்தால், பரபரப்புக்களில் இருந்து விடுதலை பெற்று தனிமையில் அமர்ந்து தியானம் செய்ய அழகிய தியான மண்டபம் உள்ளது. மிகப் பெரிய நரசிம்மர் திருவுருவப்படம் நடுநாயகமாக வைக்கப்பட்டுள்ளது.
கோவிலை விட்டு வெளியே வந்து சற்று திரும்பினால், அங்கு ஒரு சன்னதி ஒன்று உண்டு. பார்ப்பதற்கு ஊர் எல்லையம்மன் கோவில் போல தோற்றமளிக்கும் இது ஒரு சிறிய யோக நரசிம்மர் சன்னதி. ‘மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிது’ என்பதற்கேற்ப சக்தி வாய்ந்தவர் இவர்.
சரி… பதிவின் ஆரம்பத்தில் கூறிய பெருங்கடல் உதாரணம் ஏன்?
இந்த நிராயுதபாணி அனைத்தையும் தாண்டி இன்று இந்த கடலில் நம்பிக்கையுடன் இலக்கை நோக்கி நீந்திக்கொண்டிருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் யார் தெரியுமா?
அவர் ஒருவர் தான்.
“எல்லாம் முடிந்து போயிற்று… இனி என்ன இருக்கிறது?” என்ற முடிவுக்கு வந்த எனக்கு, உத்வேகத்தை அளித்து ஒரு புது உலகத்தை காண்பித்து, புதுப் புது நண்பர்களை அறிமுகம் செய்து, இப்படியும் கூட நல்ல மனிதர்கள் உன்னை சுற்றி இருக்கிறார்கள் பார் என்று அனுதினமும் எனக்கு உணர்த்தி வருகிறார் என் நரசிம்மர். இதை விட வேறு என்ன வேண்டும் எனக்கு?
அவர் இல்லையேல், நான் இன்று உங்களிடையே இல்லை. இந்த தளமும் இல்லை.
அவரை நாடிச் செல்லுங்கள். அவர் கால்களை பற்றிக்கொள்ளுங்கள்! உங்களையும் இரட்சிக்க காத்திருக்கிறார்..!!
எல்லாரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ இந்த நரசிம்ம ஜெயந்தி திருநாளில் அவரை மனமார பிரார்த்திக்கிறேன்.
(நாடு முழுவதும் இன்று ‘நரசிம்ம ஜெயந்தி’ கொண்டாடப்பட்டாலும் இந்த ஆலயத்தை பொறுத்தவரை இவர்களின் கிராம பஞ்சாக்கப்படி நாளை தான் நரசிம்ம ஜெயந்தி. எனவே நாளை காலை பேரம்பாக்கம் சென்று நரசிம்மரை தரிசிக்க எண்ணியிருக்கிறேன். திருவருள் துணை புரிய வேண்டும்!)
…………………………………………………………………………
கோவில் நடை திறப்பு நேரம்
காலை : 7.30 AM TO 12.00 AM | மாலை: 4.30 PM TO 08.00 PM
(*விஷேட நாட்களில் மாறுபடும்)
முகவரி :
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி சேவா சபா ட்ரஸ்ட்,
நரசிங்கபுரம் அஞ்சல், பேரம்பாக்கம் வழி,
திருவள்ளூர் மாவட்டம், அஞ்சல் எண் 631402.
கைபேசி எண் :9442585638.
சென்னை பூவிருந்தவல்லியிலிருந்து நரசிங்கபுரத்திற்கு நேரடி பேருந்து வசதி (591 C) உள்ளது. தவிர திருவள்ளூர், ஸ்ரீ பெரும்புதூர் ஆகிய ஊர்களில் இருந்தும் பேருந்து மூலம் வரலாம்.
…………………………………………………………………………
[END]
ஸ்ரீ நரசிம்ஹர் ஜெயந்தி ஆன இந்த இனிய நாளில் இந்த பதிவினை படித்ததே மஹா புண்ணியமாக கருதுகிறேன்.
நன்றி ஜி
ப.சங்கரநாராயணன்
சுந்தர் சார் உங்களுக்கும் மற்றும் உங்கள் நண்பர்களுக்கும் நரசிம்ம ஜெயந்தி வாழ்த்துக்கள்.
பிறவி பெருங்கடல் நீந்தி கரை சேர ஒரு பதிவினை அளித்தமைக்கு நன்றி சார்.
இனி என்ன செய்யது எந்த பக்கம் திரும்பினாலும் கண்ணை கட்டி விட்டது போல் உள்ளது உன்னை தவிர வேறு நாதி இல்லை உன்னை சரணடையவே வந்துள்ளேன் என்று மனம் பேதலித்து பஸ்ஸில் நானும் என் அம்மா இருவரும் போகும் போது ஒரு பஸ் ஸ்டாப்பில் ஒரு விநாடி என் கண்ணில் பட்ட வாசகம் “நிச்சயம் நடக்கும் ” என்ற வாசகம் தான் அதன்பின் மனநிம்மதியுடன் தரிசனம் பண்ணிவிட்டு வந்தோம். வேண்டுதல் நடக்க லேட் ஆனாலும் அதன்பின் என் வாழ்க்கையில் முன்னேற்றம் தான். எதை எப்போது நமக்கு கொடுக்க வேண்டுமோ அப்போது கண்டிப்பாக கொடுப்பார்.
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திய சுந்தர் அவர்களே உங்களுக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் தகும் !!!
இந்த விஷேஷ நன்நாளின் நமக்கு திவ்ய தரிசனம் கிடைத்தது நாம் செய்த புண்ணியம் !!!
புகைப்படங்கள் அனைத்தும் கண்களுக்கு குளிர்ச்சியை தருவதாக உள்ளது !!! அதுவும் கத்திரி வெயில் தகிக்கும் இந்த வேலையில் !!!
வாழ்க வளமுடன் !!!
சென்றவாரம் நான் குடும்பத்துடன் திவ்ய தரிசனம் செய்தேன் .
நான் திருப்பதி சென்று வந்த திருப்தி கிடைத்தது .
சுந்தர் ஜி இந்த பதிவில் அனைத்தும் தெளிவாக குறிப்பிட்டுள்ளார் .
நண்பர்கள் தங்கள் குடும்பத்துடன் நேரம் கிடைக்கும் போது சென்று வரவும் .
மிகவும் ரம்யமான அமைதியான இடம்.
ஆலயத்தின் முகப்பில் மாட்டுத்தொழுவம் அமைத்து பராமரித்து வருகிறார்கள் .தாங்கள் செல்லும் போது அகத்த்க்கீரை கொடுக்கலாம் .
நாளை காலை நானும் குடும்பத்தோடு சென்று தரிசிக்க எண்ணியிருக்கிறேன். நான் திருவள்ளூரிலிருந்து வருவதால் எனக்கு கொஞ்சம் பக்கம் தான். அங்கு சுந்தர்ஜியை சந்திப்பேன்.
சுந்தர்ஜி,
கொள்ளை அழகு , மிகவும் ரம்யமாக உள்ளது.காண கண் கோடி வேண்டும். நேரில் பார்த்தது போல் உள்ளது. நரசிம்ம ஜெயந்தி அன்று நேரில் கொண்டு வந்து நிறுத்தியமைக்கு நன்றி. நாளை எங்களுக்கு கொஞ்சம் வேண்டி கொள்ளுங்கள். ( சொல்ல வேண்டாம் உங்களுக்கே தெரியும்)
உங்கள் பதிவுகள் அத்தனையும் அருமை.மிக்க நன்றி.
வாழ்க்கையை கடலோடு ஒப்பிட்டு அதிலிருந்து எப்படி மீலவேண்டும் என
வழியும் சொல்லியுல்லீர்கல்.படிக்கும்பொதெ ஒரு புத்துனர்சி வருகிரது.
“நாலை என்பதில்லை நரசிம்மனிடத்தில்”இந்த வாசகம் வாழ்க்கையில் துவண்டு போன மனிதர்க்கு துலிர் விடும் வாசகம்.மிக அருமை..
நம் தலத்தில் நீண்டநாளாக எதிர்பார்த்த பதிவு இது….சரியான சந்தர்பத்தில் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி…..நம் பிறவியை பெருங்கடலோடு ஒப்பிட்டு ஆரம்பித்துள்ளது இந்த பதிவு…
.
என் வாழ்கையில் மறக்கமுடியாத இரண்டு புத்தாண்டுகள் இந்த ஆலயத்தில் தரிசனம் செய்த பாக்கியத்தை எற்படுதிகொடுத்த இந்த தளத்திருக்கு நன்றிகள்….
.
மறக்க முடியாத முற்றிலும் புதிய அனுபவம்…..வழிநெடுகிலும் பசுமை நிறைந்த இந்த ஆலயத்திற்கு செல்லும் வழி என் கிராமத்திற்கு சென்று வந்த அனுபவத்தை எற்படுத்யுள்ளது என்பது மறக்க முடியாத உண்மை.
.
மேலே உள்ள புகைபடத்தில் (23 ஆம் படம்) கோவிலின் கோபுரம் எனது கைபேசியில் கடந்த புத்தாண்டு அன்று சென்றபோது எடுத்த புகைப்படம்….நீண்ட நாட்களாக எனது wallpaper ஆக இதைத்தான் வைதுருந்தேன்…(இப்பொழுது அதே தினத்தில் இந்த ஆலய தரிசனம் முடித்துவிட்டு திரும் வழியில் மப்பேடு சிங்கீஸ்வரர் திருக்கோவில் சென்றபோது எடுத்த கோபுரத்தின் புகைப்படத்தை வைத்துள்ளேன்…)
.
நாளை என்பது எனபது இல்லை நரசிம்மனிடம் இல்லை எனபது ஒரு முறை ஆல்யதிருக்கு சென்று வந்தவர்களுக்கு நன்கு தெரியும்..
.
ஒரு முறை சென்று வாருங்கள்….ஆலயதின்பலன் மற்றும் இந்த பரபரப்பு எந்திர சென்னை வாழ்கையில் இருந்து ஒரு அமைதியான மனநிம்மதி கிடைக்கும் எனபதில் ஐயம் இல்லை….
,
ஒரு பசுமையான மலரும் நினைவுகளை அசைபோடவைதமைக்கு மீண்டும் நன்றிகள் சுந்தர்….
.
மாரீஸ் கண்ணன்
சுந்தர் சார், நேற்று இந்த பதிவை படித்தேன். கண்டிப்பாக இத்திருத்தலம் செல்ல வேண்டும் என்று எண்ணினேன். ஆனால், உங்களை இத்திருத்தலத்தில் இன்று சந்திப்பேன் என்று சற்றும் எதிர் பார்க்கவில்லை. நன்றி.
நினைத்தால் போதும். நடத்திவைப்பான் அவன்.
ஒரு வாசகராக உங்களை அங்கு சந்தித்தபோது மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.
– சுந்தர்
Very very good dharshan of Lord Narasimha,that too on the day of his birthday (Narsimha Jayanthi on 13/05).Thank you very much sir…
பதிவு போன வருட பதிவாக இருந்தாலும் நரசிம்ஹ ஜெயந்தி அன்று நரசிமரை உங்கள் பதிவின் மூலம் பார்த்ததில் மற்றற்ற மகிழ்ச்சி. நானும் என் மகனும் பேரம்பாக்கம் நரசிம்மர் கோவிலுக்கு நம் தள வாசகர்களுடன் ஜனவரி 1 2014 அன்று தர்சன் செய்த முதல் கோவில் இது. படங்கள் மிகவும் அருமை/, நாங்கள் நேரில் சென்று வந்த உணர்வு
நரமிமர் நம் எல்லோருக்கும் இந்த இனிய நாளில் அருள் வழங்கட்டும்
நன்றி
உமா
அருமையான பதிவு .
சுந்தர் சார் காலை வணக்கம்
தங்கள் பதிவு மிகவும் அருமை
அருமையான தகவல்
நன்றி
சுந்தர் சார்.
தங்கள் பதிவு மிக மிக அருமை.
நன்றி.
அருமை …சிவாய சிவ …நரசிம்ம சிவனே …சட்டை நாதா ……
சார் நான் நரசிம்ஹரை என் அப்பாவாக நினைத்து நாளும் வணங்குபவள். உங்கள் பதிவு எனக்கு மிகவும் பக்தியை அதிக படுத்துகிறது. தயவு செய்து மேலும் நரசிம்ஹரை பற்றி கூறுங்கள். நரசிம்ஹரை வழிபட்டால் அசைவம் உண்ணுவதை நிருதிவிடவேண்டுமா, என் அப்பனை இன்னும் எப்படியெல்லாம் வணங்க வேண்டும்? ஜெய ஜெய நரசிம்ஹ ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ
ஜெய ஜெய நரசிம்ஹ ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ ஜெய ஜெய நரசிம்ஹ ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ ஜெய ஜெய நரசிம்ஹ ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ ஜெய ஜெய நரசிம்ஹ ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ ஜெய ஜெய நரசிம்ஹ ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ ஜெய ஜெய நரசிம்ஹ ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ ஜெய ஜெய நரசிம்ஹ ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ ஜெய ஜெய நரசிம்ஹ ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ ஜெய ஜெய நரசிம்ஹ ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ
Avoid non-vegetarian foods please. Rest, I will mail you in detail. thanks.
– Sundar
டியர் சுந்தர்ஜி
இன்று கோவில் தரிசனம் கிடைத்தது
நன்றி
அன்புள்ள சுந்தர் சார்
நானும் எனது குடும்பதிணர்களும் கண்டந்த வெள்ளி கிழமை (03.04.2015)
நகரசிங்கபுரம் சென்று ஸ்ரீ நரசிம்மாஹ் பெருமாள் தரிசனம் பெற்றோம் . இதற்கு காரணமான உங்கள்ளுகும் உங்கள் வெப்சைட் கும் மிக்க நன்றி.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி.
நன்றி சார்.