மும்பையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரின் மகள் சி.ஏ. தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற அதிசய நிகழ்வு நினைவிருக்கும். சில மாதங்களுக்கு முன்பு நம் தளத்தில் இது பற்றி விரிவான செய்தியும் பேட்டியும் அளித்திருந்தோம். (http://rightmantra.com/?p=2466)
இதோ பேப்பர் போடும் பையனாக வாழ்க்கையை துவங்கிய ஒருவர் விடா முயற்சியின் காரணமாக கோல்கட்டா ஐ.ஐ.எம்.மில் காலடி எடுத்து வைத்திருக்கும் அதிசய நிகழ்வு.
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும். (குறள் 611)
நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.
படியுங்கள். உங்கள் நட்பிடமும் சுற்றத்திடமும் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களுக்கு கல்லூரியில் படிக்கும் மகனோ மகளோ இருந்தால் அவர்களுக்கு இதை படித்து காட்டுங்கள்.
பிள்ளைகள் சாதனை படைக்க வாழ்த்துக்கள்!!!
பெங்களூரு முதல் கோல்கட்டா ஐ.ஐ.எம்., வரை : லட்சிய மனிதரின் சாதனை பயணம்
பெங்களூரு: சிறுவயதில் பேப்பர் போடும் பையனாக வாழ்க்கையைத்துவக்கி, கடுமையாக உழைத்து, தற்போது கோல்கட்டாவில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்தில் படிக்கவுள்ள பெங்களூருவைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது வாழ்க்கை, மனஉறுதிக்கும், தன்னம்பிக்கைக்கும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
சிவக்குமார். கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் மிகவும் ஏழ்மையான தனது குடும்பத்தை பொருளாதார ரீதியாக உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன், தனது 5வது வகுப்பு முதல் பேப்பர் போடும் தொழிலை மேற்கொண்டு வரும் தன்னம்பிக்கை மனிதர். தன்னுடைய வாழ்க்கை குறித்து சிவக்குமார் குறிப்பிடுகையில், “நான் எனது 5வது வகுப்பு படிக்கும் போதில் இருந்து பேப்பர் போடும் தொழிலை செய்து வருகிறேன். மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்த எனது குடும்பத்தை பொருளாதார ரீதியாக உயர்த்த எனக்கு ஒரு தொழில் தேவைப்பட்டது. பின்னர் எனது 10ம் வகுப்பு முதல் தனியாக ஏஜென்சி ஒன்றை எடுத்து தற்போது வரை பேப்பர் விநியோகம் செய்து வருகிறேன்” என்று தெரிவித்தார்.
அந்த வருமானத்தில் இன்ஜினியரிங் முடித்துள்ள சிவக்குமார், கேட் தேர்வு எழுதி தற்போது கோல்கட்டாவில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்தில் கல்வி பயில உள்ளார். “மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற எனது வேட்கைக்கு என் தொழில் என்றுமே தடையாக இருந்ததில்லை. ஏனெனில் நான் எனது தொழிலை விரும்புகிறேன். இதன் மூலம் எனது குடும்பத்தை சிறப்பாக கவனித்துக்கொள்வதால், ஒவ்வொரு இரவும் என்னால் நிம்மதியாக தூங்க முடிகிறது” என்கிறார் சிவக்குமார்.
சிவக்குமாரின் தாயார் ஜெயம்மாவுக்கு தனது மகன் குறித்து மிகவும் பெருமிதம். 5ம் வகுப்பிலிருந்து தற்போது வரை அவன் போராடிக்கொண்டிருக்கிறான். இந்தளவு அவன் முன்னேறியது குறித்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார் அந்த தாய்.
சிறுவயதில், வறுமை காரணமாக, குடும்பத்தினரால் படிப்பிற்கு உதவமுடியாத சூழல் வந்த போது, தனது படிப்பிற்கு உதவும்படி ஒருவரை அணுகியுள்ளார் சிவக்குமார். அவருக்கு சிவக்குமாருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்த போதும், சிவக்குமாருக்கு உடனடியாக உதவி செய்யாமல், அவர் கல்வி கற்கும் பள்ளிக்கு வந்து அவரது நடவடிக்கைகள் குறித்து முழுமையாக அறிந்து கொண்ட பின்னர், அந்த ஓராண்டிற்கான படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுள்ளார்.
எனது எதிர்கால நடவடிக்கை குறித்து சிவக்குமார் கூறுகையில், கோல்கட்டா ஐ.ஐ.எம்.,மில் தனது படிப்பை முடித்த உடன், எஜூகேட் இந்தியா பவுண்டேஷன் என்ற பெயரில் அமைப்பு ஒன்றை நிறுவி, அதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு கல்வி அளிப்பதே தனது லட்சியம் என்கிறார் இந்த லட்சிய மனிதர்.
(நன்றி : Dinamalar.com)
Newspaper vendor from Bangalore walks into IIM-Calcutta
BANGALORE: As the alarm goes off at 4am, N Shiva Kumar is up on his feet, stacking his bicycle with newspapers. He has to deliver them before the sun appears on the horizon. A habit since Class 6, Shiva’s life is set to change now. Come June 16, this newspaper-boy-turned-vendor will walk down the corridors of the Indian Institute of Management-Calcutta as a PGP student.
It sounds like a fairy tale, but the TOI vendor who cracked CAT 2012 has indeed grabbed a seat in the premier business school. Shiva, 23, an engineering student from Banaswadi, is the son of an illiterate mother and a father who was a truck driver. He started working as a newspaper delivery boy and for his debt-ridden family of four the Rs 150 he would bring home was a huge relief.
“Every morning people would come home asking my father to return the money he had borrowed. My father had a truck. But there were more liabilities than what he could earn with it. When I was in Class 3 or 4, I sold flowers that my mother strung into garlands by the roadside. It was only later that I found the job of newspaper boy,” said the 8th semester computer science student of Bangalore Institute of Technology.
Shiva managed the part-time job along with school. “I was studying in an ICSE school. In Class 9, I was asked not to come to school till I paid the fees. The next day, I approached the first customer I was delivering the paper to, Krishna Veda Vyasa, and requested him to fund me. He hesitated, and said he didn’t even know me. I asked him to do a background check, and he found I was the topper there. I requested him to pay one term’s fee, but he paid for the entire year. He continued funding me ever since. I owe it all to him,” he said.
He soon found an opportunity to be a vendor and started his own agency when in Class 10. “I’d learnt the tricks of the trade by then. My vendor had some 50 extra copies to sell and I took them from him. That’s how I started,” he said. The 50 copies have now grown to 500. “After school, I would take my cycle and identify new buildings and residents. I would approach them for business and ensured the papers reached before 6am. I had my own targets for a month,” he explained his marketing tactics. He still delivers the paper along with four of his delivery boys.
“It was hard work. I had to get up at 4am every day, deliver the papers and head to school. I had to skip breakfast to be on time, but would still be late. In college, I opted to sit in the last bench during the first hour so I could catch up on some sleep.”
IIM could not have rejected a seat for an aspirant like him. “After my family stabilizes, I want to start a charitable institution, Educate India, by which I can help the underprivileged gain some education. I could achieve this because someone helped me. In turn, I want to help at least 10 people,” he said. Shiva is taking an education loan to fund his IIM course.
At IIM-C, he plans to “work extremely hard” while he specializes in finance. It’s an attitude that has already made a mark on teachers and faculty members at his new school. “We are really impressed with the boy. He will certainly serve as an example to others and we will look forward to teaching him,” said Subir Bhattacharya, chairman of IIM-C’s post graduate programmes.
(Courtesy : Times of India, May 15, 2013)
முயற்சி என்றும் தோற்றதில்லை.
REAL HERO OF LIFE.
TREMENDOUS ARTICLE AND ITS REALLY MOTIVATING SUNDAR ANNA.
இந்த கட்டுரை படிக்கும் மாணவ, மாணவியர்க்கு ஒரு சிறந்த முன் மாதிரியாகவும் லட்சியம் உள்ள மாணவர்க்கு மேலும் உத்வேகத்துடன் செயல்பட டானிக் ஆகும். மாணவர்களுக்கு தேவையான சமயத்தில் தேவையான கட்டுரை. நன்றி.
மனதில் முழு நம்பிக்கையோடு விடாமுயற்சி செய்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு நண்பர் சிவகுமார் ஒரு நல்ல உதாரணமாக திகழ்கிறார் !!!
அவர் தமது லட்சியத்தை விரைவில் அடைந்திடவும்
அவரும் அவரது குடும்பத்தாரும் மனநிம்மதியுடனும் நல் ஆரோக்யத்துடனும் என்றென்றும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவன் என்றென்றும் துணை இருப்பாராக !!!
வாழ்க வளமுடன் !!!
இந்த மாதிரி கஷ்ட பட்டு முன்னேறும் மாணவனை பற்றி செய்திகளை முதல் பக்கத்தில் போடாமல் ipl காசு வாங்குனான் ,அழகிகளோடு கூத்தடிச்சான் நு அத தான் முதல் பக்கத்தில் போடுகிறார்கள் என்ன கொடும இது
\\சிவக்குமார் என்பவரது வாழ்க்கை, மனஉறுதிக்கும், தன்னம்பிக்கைக்கும் மிகப்பெரிய
எடுத்துக்காட்டாக விளங்குகிறது\\
சரியானநேரத்தில் மாணவர்களுக்கு பயனுள்ள கட்டுரை .
நமது தல வாசகர்கள் வீட்டில் நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் .
=============================================================
உங்கள் ஆழ்மனம் ஆற்றல்மிக்கதாக இருந்தால், தன்னம்பிக்கையும் நிலையானதாக இருக்கும். ஆழ்மனதின் ஆற்றல் குறையாமல் இருக்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழி, உங்கள் மனதில் ஒரு போதும் எதிர்மறை சந்தேகம் எட்டிப்பார்க்க அனுமதிக்காமல் இருப்பது தான்.
“தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் ”
—
மனதில் திடமான நம்பிக்கையுடன் கூடிய முயற்சி என்றுமே தோற்றதில்லை…! ஆயிரம் சோதனைகள் வந்தாலும், அனைத்தையும் தாங்கிக் கொண்டு இலக்கு நோக்கி முன்னேறும் மனப்பக்குவம் வந்துவிட்டால் நாம் அனைவரும் வெற்றியாளர்களே…!
—
“கடமையைச் செய்; பலனை எதிர்பார் ”
—
விஜய் ஆனந்த்
Awesome article..hats off to Mr Shiva.
What he has done is amazing..it again proves that “When there is a will , there is a way..”
“Champions don’t wait for things to happen, rather they make them happen..”
Had already read d news but was glad to find dis in our website…
And his intention to make others study is noble..he wants to not forget his past..and help others too..-a character which all of us should follow..
Getting into IIM’s is no easy task and that too dis champ did it with these huge obstacles-
“WHATEVER THE MIND CAN CONCEIVE AND BELIEVE, IT CAN ACHIEVE..”…
Sure that Shiva has mastered his mind because without the control over mind such a HIMALAYAN feat is not possible!!
Let GOD shower his blessings on Shiva and all those who wanna make a mark in their life..
Regards
R.HariHaraSudan.
“ HE WHO KNOWS THE SELF KNOWS ALL”
நல்ல ஒரு பதிவு
சுந்தர்ஜி,
உங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. தேடி தேடி நல்ல விஷயங்களை முண் உதாரணம் காட்டி நல்ல விதையை விதைகின்றீர்கள். இதை நம் வீட்டு குழந்தைகளுக்கு காட்டி அவர்களுக்கும் நம்பிக்கையை வளர்க்க வேண்டும்
வாழ்க வளமுடன்.
சூப்பர் சூப்பர்
புத்துணர்ச்சி………. .
இந்த பதிவு எனக்கு ஒரு அடி வைத்துது pola irunthadhu. Nandri!
மிகவும் அழகான கருத்துள்ள தன்னம்பிக்கை பதிவு. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதற்கு உதாரணம் திரு சிவகுமார் அவர்கள். அனைத்து மாணவ மனைவிகளுக்கும் இந்த பதிவு ஒரு சிறந்த tonic . சிவகுமாரின் லட்சியம் நிறைவேற எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்றி
உமா