Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, September 15, 2024
Please specify the group
Home > Featured > பசியோடிருந்த சுவாமி விவேகானந்தர் – உணவு அனுப்பிய ஸ்ரீ ராமபிரான் !

பசியோடிருந்த சுவாமி விவேகானந்தர் – உணவு அனுப்பிய ஸ்ரீ ராமபிரான் !

print
“நீ கஷ்டத்திலிருக்கும் போது ஆண்டவனை கூப்பிட்டால் அவன் உடனே  இறங்கி வந்து என்ன வேண்டும் உனக்கு என்று கேட்பான்- நீ தகுதியுடையவனாய் இருந்தால்!” – இப்படி ஒரு மேற்கோள் ஆன்மீகத்தில் வழக்கில் உண்டு. உண்மையினும் உண்மை இந்த மேற்கோள். நம்பமுடியவில்லையா? சுவாமி விவேகானந்தரின் வாழ்வில் நடைபெற்ற சிலிர்ப்பூட்டும் உண்மை சம்பவம் ஒன்றை கீழே படியுங்கள். இதை ஏற்கனவே படித்தவர்கள் கேள்விப்பட்டவர்கள் கூட மீண்டும் ஒரு முறை படிக்கலாம். மனதில் நம்பிக்கையும் சந்தோஷமும் ஏற்படுவது திண்ணம்.

சுவாமிஜியின் வாழ்வும் வாக்கும் நமக்கு சொல்லும் பாடங்கள் ஏராளம். ஏராளம். துவண்டுகிடக்கும் உள்ளங்களுக்கு எல்லாம் அருமருந்து அவர் வார்த்தைகள். கோவில் கருவறையை தவிர பிற இடங்களிலும் இறைவனை தேடும் எமது தேடலுக்கும் பயணத்துக்கும் காரணம் சுவாமிஜியே.

பிரேமவாசத்தில் முதல் கட்ட யூனிபார்ம் கொடுத்தது பற்றியும் அங்கு நடைபெற்ற நமது கூட்டு பிரார்த்தனை பற்றியும் விரிவான பதிவு எழுதிவருகிறேன். ஆகையால் வேறு பதிவு எழுத நேரம் கிட்டவில்லை.

நான் படித்து இன்புற்ற ஒரு கட்டுரையை இங்கு தருகிறேன். நீங்களும் இன்புறுவீர்கள் என நம்புகிறேன்.

நன்றி!

========================================================
ஸ்ரீ ராமபிரான் அனுப்பிய உணவு!

கோடைக்காலத்தில் ஒரு முறை சுவாமிஜி உத்தரப் பிரதேசத்தில் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவருடன் பயணம் செய்தான் வியாபாரி ஒருவன். சுவாமிஜியிடம் பணமோ வேறு எந்த வசதியுயோ இல்லை என்பதைக் கண்ட அவன் அவரை ஏளனத்துடன் பார்ப்பதும் கேலி செய்வதுமாக இருந்தான். ஒவ்வொரு நிலையத்தில் ரயில் நிற்கும் போதும் நன்றாகச் சாப்பிட்டான். தவறாமல் சுவாமிஜியைக் கேலி செய்தான். கடைசியாக தாரிகாட் என்ற இடம் வந்தது. அது மதிய வேளை. வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. நல்ல பசியும் தாகமும் சுவாமிஜியை வாட்டின. சுவாமிஜியிடம் ஒரு கமண்டலம் கூட இல்லை. ரயில் நிலையத்திலுள்ள கூரையின் கீழ் அமரச் சென்றார். சுமை தூக்கும் தொழிலாளி ஒருவன் அங்கே அவருக்கு இடம் தர மறுத்து விட்டான். எனவே அவர் வெயிலில் தரையில் அமர்ந்தார்.

அங்கும் அந்த வியாபாரி வந்து அவர் காணும்படி நல்ல இருக்கை ஒன்றில் அமர்ந்து கொண்டான். உணவு வரவழைத்து அவருக்கு முன்னாலேயே சாப்பிட்டான். இத்துடன் நில்லாமல் சுவாமிஜியிடம், ‘ஏய் சன்னியாசி! பணத்தைத் துறந்ததால் வந்த கஷ்டத்தைப் பார்த்தாயா? சாப்பிடவோ தாகத்தைத் தீர்த்துக் கொள்ளவோ உனக்கு வழியில்லை. என்னைப்போல் நீயும் ஏன் சம்பாதிக்கக் கூடாது? நன்றாகச் சம்பாதித்தால் வேண்டுமட்டும் அனுபவிக்கலாமே!’ என்று வம்பு பேசினான்.

திடீரென்று காட்சி மாறியது! அங்கே வந்தான் ஒருவன். அவனது கையில் ஒரு பொட்டலம். தண்ணீர், டம்பளர், இருக்கை போன்றவை இருந்தன. இருக்கையை ஒரு நிழலில் விரித்துவிட்டு நேராக அவன் சுவாமிஜியிடம் வந்தான். ‘சுவாமிஜி, நான் உங்களுக்காக உணவு கொண்டு வந்திருக்கிறேன். வாருங்கள்’ என்று அழைத்தான். சுவாமிஜி இதனைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

வந்தவன் மீண்டும் சுவாமிஜியிடம், ‘சுவாமிஜி, வாருங்கள் சீக்கிரம் வந்து சாப்பிடுங்க’ என்றான்.

சுவாமிஜி: ‘இதோ பாரப்பா, என்னை நீ வேறு யார் என்றோ தவறுதலாக நினைத்து அழைக்கிறாய். நான் உன்னைப் பார்த்ததுகூட இல்லை.’

வந்தவன்: ‘இல்லை சுவாமிஜி, நான் கண்ட துறவி நீங்கள் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லையே!’

சுவாமிஜி (வியப்புடன்): ‘நீ என்னைக் கண்டாயா? எங்கு கண்டாய்?’

வந்தவன்: ‘ நான் இனிப்புக் கடை வைத்திருக்கிறேன். மதிய உணவிற்குப் பிறகு வழக்கம் போல் சற்று கண்ணயர்ந்தேன். அப்போது ஸ்ரீராமர் என் கனவில் தோன்றினார். உங்களைக் காண்பித்து, “இதோ என் மகன் இரண்டு நாட்களாக எதுவும் சாப்பிடாமல் இருக்கிறான். உடனே எழுந்து பூரி, இனிப்பு எல்லாம் எடுத்துக் கொண்டு ரயில்நிலையத்திற்குப் போ” என்றார். நான் விருட்டென்று எழுந்தேன். அப்போது தான் அது கனவு என்பது புரிந்தது. எனவே அதனை ஒதுக்கித் தள்ளிவிட்டு மீண்டும் படுத்துத் தூங்கினேன். ஸ்ரீராமர் மீண்டும் வந்து என்னை உலுக்கி எழுப்பினார். அதன்பிறகு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. அவர் கூறியதுபோல் அனைத்தையும் தயாரித்து எடுத்துக் கொண்டு வந்தேன். நான் கனவில் கண்ட அதே நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். தொலைவிலிருந்தே உங்களை நான் கண்டு கொண்டேன். வாருங்கள், மிகவும் பசியாக இருப்பீர்கள். எல்லாம் ஆறிப்போகுமுன் சாப்பிடுங்கள்.’

இவை அனைத்தையும் கண்டு கொண்டிருந்தான் வியாபாரி. சாட்சாத் ஸ்ரீராமரே வந்து உணவு அனுப்பியிருக்கிறார் என்றால் அவர் எத்தகைய உயர்ந்த மகானாக இருப்பார் என்பதை எண்ணிப் பார்த்த அவனார் அதன்பிறகு தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை. உடனே எழுந்து ஓடோடி வந்து சுவாமிஜியின் திருப்பாதங்களில் விழுந்து மன்னிப்பு கேட்டான். சுவாமிஜி மௌனமாக அவனை ஆசீர்வதித்துவிட்டு சாப்பிடச் சென்றார்.

விவேகானந்தர் கூப்பிடாமலே இறைவன் உணவை கொடுத்து அனுப்புகிறான் என்றால் அவரது பக்தி எத்தகையது என்று நினைத்து பாருங்கள்! நமது பக்தியும் தகுதியும் எத்தகையது என்று எண்ணிப் பாருங்கள்!!

[END]

18 thoughts on “பசியோடிருந்த சுவாமி விவேகானந்தர் – உணவு அனுப்பிய ஸ்ரீ ராமபிரான் !

  1. சுந்தர் ஜி ,

    அரூமை.
    அவ்வளவு பெரிய மகான், சிறு புத்தி உடைய ஹீனர்களிடம் பட்ட பாட்டை படிக்கவே கஷ்டமாக இருந்தது.
    அப்பேற்பட்ட கடவுள் ஏன் அவரை நோயினால் இறக்க விட்டார் என்றே கேட்கத் தோன்றுகிறது. அதுவும் இள வயதில்?
    நான் சொல்வது தவறாகவே இருக்கலாம்.
    இரூப்பினும் கடவுள் அவரை நோயினின்று காப்பாற்றி இருக்கலாம்
    அல்லவா?

    தங்கள் அன்பு வாசகி,
    ஷகீலா.

    1. இதற்கு பதில் தெரிந்தால், அவரது குரு இராமகிருஷ்ணர் ஏன் புற்று நோயால் இறந்தார்? மகாகவி பாரதி ஏன் யானை தாக்கி இறந்தார்? கணித மேதை இராமானுஜன் ஏன் சிறு வயதில் இறந்தார்? போன்ற கேள்விகளுக்கும் பதில் சொல்லிவிடலாமே….

      சில கேள்விகளுக்கு பதில் இறைவன் ஒருவனுக்கு மட்டுமே தெரியும்!

      ஞானியர் பிறப்பிலும் சரி இறப்பிலும் சரி மிகப் பெரிய சூட்சுமங்கள் அடங்கியிருக்கின்றன. அவை இந்த சாதாரண அறிவுக்கு எட்டவே எட்டாது.

      மேலும் அவர்கள் மறைந்துவிட்டார்கள் என்று நான் கருதவில்லை. நூறாண்டுகள் கழித்தும் அவர்களை பற்றி பேசி அவர்கள் உபதேசித்தபடி வாழ விழைகிறோம் என்றால் அவர்கள் மறைந்துவிட்டார்கள் என்று எப்படி கருதுவது?

      நண்பர் சங்கர் சொல்வது போல… அழிந்தது அவர்களது உடல் தானே தவிர ஆன்மாவோ புகழோ அல்லவே?

      கிருமிகள் தின்னும் உடம்பு எப்போது அழிந்தால் என்ன?

      – சுந்தர்

      1. நோய் என்பது உடலுக்கு மட்டும்தானே அவரின் ஆன்மா என்றும் அழியாதது , அவர் ஆற்றிய தொண்டும் அவர் காட்டிய நல்நெறிகளும் என்றென்றும் நிலைத்திருக்கும்…

        உயிடுன் ( உடலுடன்) நீண்ட நாள் வாழ்வது முக்கியமா , குறைந்த ஆயுளிலும் நிறைவான சாதனைகளே என்றும் நிரந்தரம் அல்லவா

        சர்வம் கிருஷ்ணார்ப்பணம்

    2. அம்மா சகீலா அவர் அடைந்தது ஜீவா சமாதி.அவர் இறப்பதற்கு அறியாக 6 ஆண்டுக்கு முன் தான் இன்னும் 5 அல்லது 6 ஆண்டில் இறந்துவிடுவேன் எனக் கூரிஉல்லர்.மேலும் ராமகிருஷ்ணர் ”நரேன் தான் யார் என்பதே அறிந்துகொண்டால் இந்த உடலில் தங்க மாட்டன்” எனக் குக்ரினார்.உடல் வெறும் ஆடையே.

  2. மகான் ராமகிருஷ்ண பரமஹம்சர் சீடரான சுவாமி
    விவேகானந்தருக்கு ,
    ஸ்ரீராமரே வந்து உணவு அனுப்பியிருக்கிறார் .இது எவ்வளவு பெரிய பாக்கியம் .

    “சரஸ்வதி தேவி புதல்வன் அல்லவா”

    “ஜெய் ராம், ஸ்ரீ ராம், ஜெய ஜெய ராம் .சீதா ராம் ”

    வெரி குட் சுந்தர் ஜி

  3. நமது பக்தியும் தகுதியும் எத்தகையது என்றுஎண்ணிப் பாருங்கள்

    அரூமை. சுந்தர் ஜி ,

  4. ஷகிலா மேடம் ,

    கடவுள் செய்யும் அணைத்து காரியத்திற்கும் காரணம் உண்டு . அவர் உணவு தந்தாலும் அதற்கு முன்பு கஷ்டப்பட்டார் . அதை சிறிது காலம் மட்டும் பட்டால் போதும் என நினைத்திருக்கலாம் .

  5. An article that hits the nail on the coffin…best suited for today’s world when people just use god’s name and create hatred , other few who pray to him but do not do their duty, but still expect the almighty to help them out. Also today’s trend is to have a god photo / go to temple and do whatever wrong u can, thinking that almighty will save —what a grave misconception..!!
    Who will arise these souls from their deep slumber?? rite now don think anyone can—only swamiji should come again..
    Now is the time when OUR NATION needs SWAMIJI’s real guidance..pray that his SOUL blesses and guides us to glory..

    Regards
    R.HariHaraSudan.
    “ HE WHO KNOWS THE SELF KNOWS ALL”

  6. கடவுள் நல்லவர்களை சோதிப்பார் ஆனால் கைவிடமாட்டார்.. இது போன்ற சத்திய சோதனைகளை கண்டவர்களையே மகான்களாகவும் மஹா புருஷர்களாகவும் காண்கிறோம்.

  7. சிலிர்ப்பூட்டும் பதிவு !!!

    பக்தியை வெளிக்காட்டி கொள்ள வேண்டிய அவசியம் இனி இருக்காது என்று நம்புவோமாக !!!
    மெய்யான பக்தி உள்ளத்தில் இருந்தால் எல்லாம் வல்ல பரம்பொருளை நாம் எண்ணிய மாத்திரத்தில் ஓடோடி வந்து நம்மை காப்பான் என்பது எத்துனை மகத்தான உண்மை என்பது விளங்குகிறது !!!

    சுவாமிஜியின் பக்தி, சகிப்புத்தன்மை , பொறுமை , இரக்ககுணம் இவை நமக்கு கற்று கொடுக்கும் பாடம் ஏராளம் ஏராளம் !!!

    பக்தி கொண்டாடுவோம்
    தெய்வ பக்தி கொண்டாடுவோம் !!!

  8. நன்றாக உள்ளது. அவர் நாமம் என்றும் நிலைக்கும்

  9. டியர் சுந்தர்ஜி, சிறிது காலமாகவே நான் உங்களது வெப்சைட் படித்துகொண்டு வருகிறேன். மிகவும் அருமையாக உள்ளது. தவிர பயனுள்ளதாகவும் இருக்கிறது. கூடிய விரைவில் உங்களுடன் தொடர்பு கொள்வேன் . விவேகானந்தரை போல் எல்லாம் மகாத்மாக்கள் இனி எவரேனும் இந்தியாவிற்கு கிடைப்பாரா என்று ஏக்கமாக உள்ளது. ஆயினும் ஒன்று. மகான்கள் வாழும் காலத்தில் அவர்களை பலரும் சரியாக புரிந்து கொள்வதில்லை என்பது உண்மைதானே!

    1. நன்றி மோகன் அவர்களே.

      ஒரு விவேகானந்தர் என்ன, நூறு விவேகானந்தர்களை நான் சமீபத்தில் பார்த்தேன். பரவசம் அடைந்தேன்.

      விரைவில் விரிவான ஒரு பதிவில் விளக்குகிறேன். புகைப்படங்களுடன்.

      – சுந்தர்

  10. ஸ்ரீ இராம ஜெயம், அன்புச் சகோதரன் சுந்தர் தங்களின் இந்த மகத்தான மகனின் வாழ்க்கையில் நடந்த அற்புதத்தை வாசித்து கண்ணீர் சிந்தி ஆனந்தம் அடைந்தேன் சுவாமிஜின் அடியானாக என் வாழ்க்கை பயணத்தை மாற்ற திட்டமிட்டுள்ளேன் ஆனால் இதனைத் தொடர முடியாத அளவிற்கு வழிகாட்ட யாருமில்லை சுவாமி தங்களை அறிமுகப் படுத்தி இருக்கிறார் என்று நம்புகிறேன் தயவு தங்களின் தொடர்புக்காய் காத்திருக்கிறேன. நன்றியுடன் விவேகானந்தாரவி

    1. நன்றி ரவிச்சந்திரன் அவர்களே. நம் தளத்திலேயே சுவாமி விவேகானந்தர் தொடர்புடைய எண்ணற்ற பதிவுகள் உள்ளன. அவற்றை படிக்கவும்.

  11. நன்றி சுந்தர் அண்ணா,
    சுவாமிஜி அவர்களுடை தகவல்கள் படிக்கும்போது ஏதோ ஒரு மாற்றம் என்னுள் அவரை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் அண்ணா

  12. Vivekananthar is greatest man in all over the world. He was inspiring the lot of young generation .all are follow the Vivekananthar way.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *