Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, December 8, 2024
Please specify the group
Home > Featured > அதிசயத்தை எதிர்பார்க்கிறது தப்பில்லீங்க…. ஆனா….

அதிசயத்தை எதிர்பார்க்கிறது தப்பில்லீங்க…. ஆனா….

print
பிரார்த்தனை நிகழ்ந்தவுடன் நாம் அனைவரும் ஒரு உடனடி மாற்றத்தை அதிசயத்தை எதிர்பார்க்கிறோம். தவறில்லை. ஆனால்….

சரி கீழே நான் சொல்ற உண்மை சம்பவத்தை படிங்க. இதுல இருந்து ஏதாவது உங்களுக்கு புரியுதான்னு பாருங்க….

தோல்வியிலும் நன்றி

அவர் அரசியல் கட்சி ஒன்றில் முன்னணி தலைவர். வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள வேட்பாளர்களில் நிச்சயம் அவரும் ஒருவர். ஒரு முறை பொதுத் தேர்தல் வந்தது. அவரும் அவர் கட்சியை சார்ந்தவர்களும் அவரது வெற்றிக்காக மிக கடுமையாக உழைத்தனர். அவர் வெற்றி வாய்ப்பு உறுதி என்றே பேசப்பட்டது. இந்நிலையில் எதிர்பாராமல் வீசிய அலை ஒன்றில் அவரும் அவர் கட்சியை சார்ந்த பலரும் படுதோல்வி அடைந்தனர்.

யார் வென்றாலும் தோற்றாலும் நாம் எப்படியும் வென்றுவிடுவோம் என்று நினைத்துக்கொண்டிருந்த இவருக்கு அவரது தோல்வி ஜீரணிக்க முடியாததாக இருந்தது. அந்த அதிர்ச்சியில் இருந்து அவர் வெளியே வரவே பல நாட்கள் ஆனது. இருப்பினும் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, அவர் செய்த முதல் காரியம் என்ன தெரியுமா?

தான் தோற்றுவிட்ட போதும், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க சென்றது தான். இரண்டு நாட்கள் முழுமையாக செலவிட்டு, தொகுதி முழுக்க சுற்றி சுற்றி வந்து தமக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். தோற்ற நிலையிலும் தங்கள் மீது கோபம் கொள்ளாது இப்படி நன்றி தெரிவிக்க வரும் இவரது செயல் அந்த தொகுதி மக்களை உண்மையில் மிகவும் நெகிழ வைத்துவிட்டது.

அதே சமயம், ஜெயித்ததாக சொல்லப்பட்டவர் அதற்கு பிறகு அந்த தொகுதி எட்டிக்கூட பார்க்கவில்லை. மக்கள் இதை மறக்கவில்லை.

அடுத்த தேர்தலில் வட்டியும் முதலுமாக இவர் வெற்றிபெற்றார். அதற்கு அடுத்த வந்த தேர்தல்களிலும் வெற்றி இவருக்கே. இன்றும் தாம் நிற்கும் தொகுதிகளில் எந்த அலை அடித்தாலும் அதில் தப்பி எப்படியோ ஜெயித்துவிடுகிறார்.

இவர் யார் எந்த தலைவர் எந்த கட்சி என்கிற ஆராய்ச்சிக்கு தயவு செய்து போகவேண்டாம். என் நோக்கம் அதுவல்ல. இந்த சம்பவம் உணர்த்தும் பாடம் மற்றும் போதிக்கும் நீதி மிக மிக வலிமையானது.

இதன் மூலம் நான் என்ன சொல்ல வர்றேன்னு உங்களுக்கு புரியுதா?

இந்த சம்பவத்துக்கும் நம்ம பிரார்த்தனைக்கும் என்னங்க தொடர்பு?

அதை நான் சொல்லமாட்டேன். புரிந்துகொள்ளுங்கள் அவ்வளவுதான். புரிந்துகொள்கிறவர்கள் பாக்கியசாலிகள்.

இந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா?

======================================================================

நண்பர்களே…

அ) எனது மகள் ஜெயஸ்ரீ பி. காம் படித்து முடித்து விட்டு தற்போது எம். பி. ஏ. முதல் வருடம் படிக்கின்றாள். அவளுக்கு நல்ல கம்பெனியில் வேலை கிடைக்க வேண்டும் என்பது அவளுடைய நீண்ட நாள் ஆசை. ஆனால் நிறைவேறவில்லை. எங்கு சென்றாலும் முட்டு கட்டை. போன மாதம் விப்ரோ INTERVIEW செலக்ட் ஆகி ஹோல்ட்-இல் உள்ளது. விரைவில் அவளுக்கு வேலை கிடைக்க வேண்டி பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ஆ) எங்கள் relative திருமதி சாந்த லக்ஷ்மி கிட்னி failure  ஆகி டயாலிசிஸ் செய்து வருகின்றார்கள். (வயது 65) அவர்களும் பூரண குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்ய வேண்டும்

நன்றி,
உஷா,
குரோம்பேட்டை

======================================================================

Dear Readers,

My husband name is Sathiyanathan. We are in Ranipet – Vellore district. More than 5 years we don’t have child. Please pray in Sunday prayer for blessing of earlier child to us and also please pray for ALL childless couple to have a child early with GOD’s grace.

With best regards

SANGEETHA

======================================================================

Dear Sir

I am Rajesh.V. I am doing business (Trading Industrial Products ) for more than 15 years and from 2009 – Recession period  i am facing financial problem and even though  business  potential is there due to collection problem and shortage of working capital and interest paying and i not in position to over come depts problem. please pray for me.

Regards

Rajesh.V
Chennai

======================================================================

குரோம்பேட்டியை சேர்ந்த நம் தள வாசகர் திருமதி.உஷா அவர்களின் மகள் ஜெயஸ்ரீக்கும் நல்ல இடத்தில் அவர்கள் விரும்பிய வண்ணம் உத்தியோகம் கிடைக்கவும், அவர்கள் உறவினர் திருமதி. சாந்த்லக்ஷ்மி அவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிறுநீரக கோளாறு விரைவில் குணமாகவும், ராணிப்பேட்டையை சேர்ந்த நம் வாசகர் திருமதி.சங்கீதா-சத்தியநாதன் தம்பதிகளுக்கு அவர்கள் விரும்பும் வண்ணம் அழாகான குழந்தை ஒன்று ஆரோக்கியத்துடன் பிறக்கவும், நம் வாசகர் திரு.வி.ராஜேஷ் அவர்களுக்கு தொழிலில் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக பெருகியுள்ள கடன்கள் தீர்ந்து அவரது பொருளாதார நிலை சுபிட்சமடையவும் இறைவனை பிரார்த்திப்போம்.

நமது பிரார்த்தனைகளை இறைவனிடம் கொண்டு சேர்த்து பலன் பெற்று தரவேண்டிய பொறுப்பு நாம் என்றும் வணங்கும் மகா பெரியவா அவர்களையே சாரும். அவரது திருவடிகளில் இந்த பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கின்றோம்.

கூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இதற்க்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.

================================================================

பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.

அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.

(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)

பிரார்த்தனை நாள் : ஏப்ரல் 21, 2013 ஞாயிறு

நேரம் : மாலை 5.30 – 5.45

இடம் : அவரவர் இருப்பிடங்கள்

=============================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E-mail : simplesundar@gmail.com    Mobile : 9840169215

=============================================================

7 thoughts on “அதிசயத்தை எதிர்பார்க்கிறது தப்பில்லீங்க…. ஆனா….

  1. /////தான் தோற்றுவிட்ட போதும், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க சென்றது தான். இரண்டு நாட்கள் முழுமையாக செலவிட்டு, தொகுதி முழுக்க சுற்றி சுற்றி வந்து தமக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். தோற்ற நிலையிலும் தங்கள் மீது கோபம் கொள்ளாது இப்படி நன்றி தெரிவிக்க வரும் இவரது செயல் அந்த தொகுதி மக்களை உண்மையில் மிகவும் நெகிழ வைத்துவிட்டது.//////

    எவன் ஒருவன் எந்த நிலையுலும்,தன் கோரிக்கையை தொடர்ந்து வைக்கின்ராணோ,மனிதனிடத்திலு சரி ,கடவுலிடத்திலும் சரி,அவனுடைய தொடர் முயர்சின் காரனமாக அவனுக்கு வெட்ற்றி கிட்டும் ,

    தெய்வத்தால் ஆஹாதெனினும்,முயர்சி தன் மெய் வருத்த கூலிதரும்..

    பதிவுக்கு நன்ரி…

  2. எல்லோரும் நலம் பெற கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொள்வோம். நன்றி.

  3. “Let us rise up and be thankful, for if we didn’t learn a lot today, at least we learned a little, and if we didn’t learn a little, at least we didn’t get sick, and if we got sick, at least we didn’t die; so, let us all be thankful.” -Buddha
    ***
    //////////”ஆண்டவன் உங்களுக்கு கொடுக்கவேண்டியதை தாமதப்படுத்துறான்னு நீங்க நினைச்சா… அதுக்கு நிச்சயம் ஏதாவது காரணம் இருக்கும். நீங்க நினைக்கிறதைவிட மிகச் சிறப்பான ஒன்னை உங்களுக்கு கொடுக்குறதுக்காகத் தான் இருக்கும். எனவே அவசரப்படாம அவன் மேல் பொறுமையும் நம்பிக்கையையும் வைத்து நீங்கள் பாட்டுக்கு உங்கள் கடமையை செஞ்சிகிட்டு வாங்க. மத்ததை நேரம் கனியும்போது அவன் பார்த்துக்குவான்.”//////////
    ***
    மேலே உள்ள புத்தரின் பொன்மொழியையும், சுந்தர் அவர்களின் முன்பதிவின் சாராம்சமும் இணைத்தால், இந்த பதிவிற்கு உரிய சாராம்சத்தை நாம் தெரிந்து கொண்டு விடலாம்.
    ***
    நம்முடைய கர்ம என்னதான் இருந்தாலும் இப்பிறவியில் நம்முடைய தீவிர பக்தியும், அவன் மேல் நமக்கு உள்ள உறுதியான நம்பிக்கையும், இவ்வாழ்வில் நாம் கடைபிடிக்கும் நன்னடைதையும் அதனை குறைத்து நாம் இழந்ததை விட ஒருபடி மேல கிடைக்க உதவியாக இருக்கும். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன.
    ***
    இந்த பதிவிற்கு மிக்க நன்றி. எல்லாரும் எல்லா வளமும் பெற எனது பிரார்த்தனை இருக்கும்.
    ***
    **சிட்டி**.

  4. பிரார்த்தனைகள் நிறைவேற மனம் உருக வேண்டுவோம் !!!

  5. \\ உலகம் நமக்கு ஆதரவாக இருக்கும் என்ற எண்ணம் வேண்டும். நமக்கு வெற்றி பெறுவோம் என்று நினைக்க ஆரம்பித்தால் வெற்றி நிச்சயம்\\

    கூட்டுப் பிரார்த்தனையில் எப்போதும் இணைந்திருப்போம் .

    simple & சூப்பர் சுந்தர்ஜி .

  6. சுந்தர்ஜி,

    வாழ்கையில் சோர்ந்து போகாமல் வெற்றி நமக்கே என்று சிந்திக்க தொடங்கி விட்டால் வெற்றி நிச்சயம்.

  7. சுந்தர்.. அரசியல் தலைவரை உதாரணம் சொல்லி, மனசில் நம்பிக்கையை விதைத்திருக்கிறீர்கள். சுவையாக இருக்கிறது. இது பலன் தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *