Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, December 8, 2024
Please specify the group
Home > Featured > ரொம்ப யோசிக்காதீங்கப்பு ….. SOLUTIONS ARE VERY SIMPLE !

ரொம்ப யோசிக்காதீங்கப்பு ….. SOLUTIONS ARE VERY SIMPLE !

print
து ஜெர்மனியில் உள்ள ஒரு உயர் தர பெர்ஃப்யூம்  தயாரிக்கும் நிறுவனம். தினமும் ஆயிரக்கணக்கான யூனிட்டுகளை தயாரித்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்பனைக்கு அனுப்புவார்கள்.

ஒரு முறை, தான் வாங்கிய பேக்கில் பெர்ஃப்யூம் இல்லையெனவும், வெறும் பாக்ஸ் தான் இருந்தது எனவும் கஸ்டமர் ஒருவர் புகார் கூறினார். அடுத்தடுத்து நாட்களில் மேலும் சிலர் இதே போல புகார் கூறவே… காலி பாக்ஸ்கள் எப்படியோ விற்பனைக்கு சென்ற யூனிட்டுகளில் கலந்துவிட்டதை கண்டுபிடித்தார்கள். கம்பெனி நிர்வாகம் இந்த பிரச்னையை அசெம்ப்ளி செக்ஷனுக்கு கொண்டு சென்றது. அவர்கள் தீவிரமாக ஆராய்ந்து பேக்கேஜிங்கின் போது தான் இந்த தவறு நடக்கிறது என்று கண்டறிந்தார்கள்.

நிறுவனம் அதன் முதன்மை என்ஜீனியர்களை அழைத்து பிரச்னையை உடனே தீர்க்கும்படியும் இல்லையேல் கம்பெனியின் பெயர் மார்கெட்டில் ரிப்பேராகிவிடும் என்று கூறி பணியை முடுக்கிவிட்டனர்.

என்ஜினீயர்கள் மூன்று நாட்கள் தீவிர ஆராய்ச்சிக்கு பிறகு ஒரு எக்ஸ்-ரே மிஷினை நிர்மாணித்து அதுனுடன் இரண்டு மானிட்டர்களை இணைத்து கன்வேயர் பெல்ட் வழியாக எக்ஸ் ரே மிஷினுக்குள் யூனிட்டுகள் சென்று வரும் என்றும் அப்போது பெட்டி காலியாக இருந்தால் மானிட்டரில் கண்டுபிடித்து அவற்றை அப்புறப்படுத்திவிடுவார்கள் என்றும் கூறினார்கள்.

ஒரு வழியாக பிரச்னைக்கு தீர்வு கிடைத்ததே என்று கம்பெனி நிர்வாகம் இதை ஒப்புக்கொள்ள, லட்சக்கணக்கில் செலவு செய்து இதற்கென பிரத்யேக எக்ஸ்-ரே மெஷின் ஒன்றை இம்போர்ட் செய்து, தனி அறை வைத்து அனைத்தையும் நிர்மாணித்தது. இந்த புதிய செக்யூரிட்டி சிஸ்டத்தை கவனிப்பதற்கு என்றே மூன்று பேர் பிரத்யேகமாக நியமிக்கப்பட்டனர்.

ஓரிரு நாட்கள் சென்றது… அந்தக் கம்பெனியின் கடை நிலை ஊழியர் ஒருவர் சுத்தம் செய்வதற்காக அந்த புதிய டிப்பார்ட்மெண்ட்டுக்கு  வந்தபோது, எதற்கு இந்த ஏற்பாடு என்று அங்கிருந்த என்ஜீனியர்களை கேட்க, அவர்கள் நடந்ததை கூறினார்கள்.

“இப்ப்பூ….. இவ்ளோ தானா? இதுக்கு போயா இவ்ளோ செலவு பண்ணீங்க? கன்வேயர் பெல்ட்டில் யூனிட் பேக் ஆகி வரும்போது அதுக்கு முன்னால ஒரு பெரிய இண்டஸ்ட்ரியல் ஃபேனை ஓடவிடுங்க… காலியா வர்ற சென்ட் பாட்டில் தானா காத்துல பறந்து அந்தப் பக்கம் போய் விழுந்துடும்…. சரக்கு இருக்குற யூனிட் மட்டும் அப்படியே பாஸ் ஆகிப் போகும்… அவ்ளோ தான்… ப்ராப்ளம் சால்வ்ட்.!” என்று கூற அதை கேட்ட என்ஜீனியர்கள் மயக்கம் போட்டு விழுந்ததை சொல்லவும் வேண்டுமா என்ன?

ஆங்கிலத்தில் இதை ‘Thinking out of the box’ என்பார்கள். அதாவது எதையும் (குறிப்பாக எந்தப் பிரச்னையையும்) வித்தியாசமான, முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் – எவரும் சிந்திக்காத வகையில் – சிந்திப்பது.

இதைத் தான் ஷிவ் கேரா சற்று மாற்றி WINNERS DON’T DO DIFFERENT THINGS. BUT THEY DO THINGS DIFFERENTLY என்று சொன்னார்.

ஒ.கே. – கதை பிடிச்சிருந்ததா?

இந்த சின்னக் கதைல ஒரு கார்பரேட் கம்பெனிக்கு தேவையான நீதிகள் முதல் நம் அன்றாட வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் வரை நிறைய நீதிகள இருக்கு…..!

உங்களுக்கு தெரிஞ்ச நீதியை கொஞ்சம் சொல்லுங்க பார்க்கலாம்!

நன்றி!

12 thoughts on “ரொம்ப யோசிக்காதீங்கப்பு ….. SOLUTIONS ARE VERY SIMPLE !

  1. ரொம்ப ரொம்ப அருமையான கதை…ஒரே வட்டத்துக்குள் தான் நம்மில் பெரும்பாலானோர் சிந்தித்து வருகிறோம்..மாற்றுவழிகளை, புதுமையான வழிகளைத் தேடி நாம் செல்லத் தயங்குகிறோம்..சிலருக்குத் தயக்கம், சிலருக்கு பயம்..அதையும் தாண்டி, இந்தக் கதையில் வருவது போல் SMART THINKING உள்ளவர்கள் தடைகளை சுலபமாகத் தாண்டி விடுகிறார்கள்…!

    கதையை நான் மிகவும் ரசித்தேன்…இது போன்ற குட்டிகதைகள் மூலம் சொல்லும் விஷயம் மற்றவர்களை எளிதில் போய் சேர்ந்து விடுகிறது…இது மாதிரியான யோசிக்கத் தூண்டும் கதைகள் / பதிவுகளை அடிக்கடி பதிவிட கேட்டுக் கொள்கிறேன்…!

    “கடமையைச் செய்; பலனை எதிர்பார்”

    விஜய் ஆனந்த்

  2. அழகு ணா.. இதைபோல் அதிகம் எதிர் பார்கிறோம்..

    -ஜி.உதய்

  3. HOW A SON THINKS OF HIS DADDY AT DIFFERENT AGES:

    At 4 Years My daddy is great.
    At 6 Years My daddy knows everybody.
    At 10 Years My daddy is good but is short tempered.
    At 12 Years My daddy was very nice to me when I was young.
    At 14 Years My daddy is getting fastidious.
    At 16 Years My daddy is not in line with the current times.
    At 18 Years My daddy is becoming increasingly cranky.
    At 20 Years Oh! Its becoming difficult to tolerate daddy. Wonder how Mother puts up With him.
    At 25 Years Daddy is objecting to everything.
    At 30 Years It’s becoming difficult to manage my son. I was so scared of my father When I was young.
    At 40 Years Daddy brought me up with so much discipline. Even I should do the same.
    At 45 Years I am baffled as to how my daddy brought us up.
    At 50 Years My daddy faced so many hardships to bring us up. I am unable to manage A Single son.
    At 55 Years My daddy was so far sighted and planned so many things for us. He is One Of his kind and unique.
    At 60 Years My daddy is great. Thus, it took 56 years to complete the cycle and come back to the 1st. Stage.
    Realize the true value of your parents before its too late

    1. இன்றுள்ள அனைத்து இளைஞ்சர்களும் படிக்க வேண்டியது.

  4. எங்களைப்போன்ற பெரிய பெரிய நிறுவனங்களில்
    “why-why analysis ”
    “point of cause ”
    “five whys key points”
    “fish bone diagram”
    Extera…Exetra……….
    இது போன்ற tools use செய்து தான் Root Cause கண்டு பிடித்து GM & vp & md & finance approvel வாங்கி இது போன்ற improvement செய்றோம் .இவரு என்ன சாதரணமா fan வெக்க சொல்லிட்டரு.
    நாலுபேரோட வேல போச்சி .
    நாங்களும் ஜாக்கிரதைய இருக்கணும் போல ????

    “எங்களுக்குள்ளும் “THEY DO THINGS DIFFERENTLY “கெலம்பிட்டன்கய்ய”

    {ரொம்ப யோசிக்காதீங்கப்பு ….. }தலைப்பே டக்கர்.

    என்றும் தங்களுடன்
    -மனோகர் .

  5. கீழே நான் கொடுத்துள்ள ஆங்கில வரிகளை நான் அவ்வப்போது நினைத்து கொள்வதுண்டு …. அது சமயத்தில் தெம்பூட்டும் ..

    >> If you can solve the problem, then why to worry !
    If you can not solve the problem, then why the hell to worry !!

    >> Anger is the punishment we give to ourselves, for other’s mistakes!

    >> Worrying is like a rocking chair, it gives a sense of movement, but will not take you anywhere.

    >> Don’t take life too seriously…you are anyways not gonna come out of it alive!

    1. //If you can solve the problem, then why to worry !
      If you can not solve the problem, then why the hell to worry !!//

      இது போன்ற மேற்கோள்களை புறக்கணிக்கவும். இவை உண்மையில் சாதனையாலர்களாலோ அறிஞர்களாலோ சொல்லப்பட்டவையாக இருக்க முடியாது என்பது என் கருத்து.

      மற்ற இரண்டும் ok.

      – சுந்தர்

      1. அதன் ஆழத்தில் பார்த்தால் நீங்கள் சொல்வது உண்மை ..i agree…. இவை அனைத்துமே வருத்த படாமல் வாழ ஒரு humorous saying என்று எடுத்து கொள்ளலாம் …வெறும் மேலோட்டமாக பார்க்க மட்டுமே !

  6. ரொம்ப யோசிக்காதீங்கப்பு ….. SOLUTIONS ARE VERY SIMPLE !

    தலைப்பு மிகவும் அருமை. மற்றும் கதை சூப்பர்.

    எது எப்படி இருந்தாலும் எந்த ஒரு நிர்வாகமும் மேலதிகரிகளாக உள்ளவர்களை மட்டும் கலந்து ஆலோசனை செய்கின்றார்கள்.
    this is problem what is the remedy ? என்று A to Z எல்லோரையும் கலந்து ஆலோசனை செய்தால் SOLUTIONS ARE VERY SIMPLE !

  7. அருமையான கருத்துல்ல கதை ,அன்னால் நம்ம நாட்டுல,பொதுவா
    கீழ்மட்ட வேலை ஆட்கலின் கருத்துக்கலை கேட்கமாட்டாங்க,அப்படி கேட்டாலும் அந்த குரிப்பிட்ட விசையத்த அவர்களே கண்டு பிடிச்சா மாதிரி மேல் இடத்துல சொல்லிப்பாங்க,என்னா ஓரு ஈகோ சார்…

    மாற்று வழிகலில் சிந்திக்க வேண்டும் என்ர கருத்தை சொன்னதுர்க்கு நன்ரி..

  8. அருமையான கதை !!!
    எந்த ஒரு பிரச்சனையையும் பதட்டமில்லாமல் பொறுமையோடு ஆராய்ந்தால் தெளிவான தீர்வு நிச்சயம் என்பதற்கு இந்த கதையை விட சிறந்த சான்று வேண்டுமோ ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *