உடலுக்கு எவ்வாறு இரத்தமோ அவ்வாறே மனதுக்கு பிரார்த்தனை என்கிறார் அன்னை தெரெசா. நிம்மதியான வெற்றிகரமான வாழ்க்கைக்கு பிரார்த்தனை இன்றியமையாதது. உள்ளம் ஒன்றி உருகிச் செய்யப்படும் பிரார்த்தனையின் வலிமை அளப்பரியது. அதுவும் பிறர் நன்மைக்காக செய்யப்படும் பிரார்த்தனைகள் உடனே இறைவனால் கவனிக்கப்படுகின்றன.
“என்னைக் காத்து வருவது பிரார்த்தனையே; அதில்லாவிட்டால் நான் பைத்தியக்காரனாகி வெகுகாலம் ஆகியிருக்கும்” என்றார் காந்தி.
புற உடலை சுத்தம் செய்ய எப்படி தினசரி குளிக்கிறோமோ அதே போல அக உடலை அதாவது மனதை சுத்தம் செய்யும் கருவி தான் பிரார்த்தனை.
உலகம் கனவு காணும் அனைத்தையும் விட அதிகமாக பிரார்த்தனையால் சாதிக்க முடியும் என்றார் ஆங்கில கவிஞன் டென்னிசன்.
ரமண மகரிஷியை பார்க்க வந்த பக்தர் ஒருவர் இறைவனின் கருணை எப்போது என் மீது பொழியும்? அதற்க்கு நான் என்ன செய்யவேண்டும்? என்று கேட்டார்.
அதற்க்கு ரமணர், “அது பொழியாத நேரம் எது? நீ தான் அதற்குப் பாத்திரமாயிருக்கவேண்டும்” என்று பதிலளித்தார் மகரிஷி.
மழைபொழியும்போது பாத்திரத்தைக் கவிழ்த்து வைத்துக் கொண்டு என் பாத்திரத்தில் நீர் நிரம்பவே இல்லையே என்பவனை என்னவென்று கூறுவது?
பாத்திரத்தை முதல்ல ஒழுங்கா நேரா வைங்கப்பா…. நேராக வைத்தால் தான் மழை நீரைப் பிடிக்க முடியும். அதேபோல் “பிரார்த்தனை மூலம் கருணையைப் பெற முடியும்!” என்கிறார் ரமணமகரிஷி.
இந்த வார கூட்டுப் பிரார்த்தனைக்கான கோரிக்கைகள்
================================================================
நெஞ்செரிசல் பாடாய் படுத்துகிறது
வணக்கம் .என் பெயர் கோகுலதாஸ் வயது 35.நான் கடந்த 5 வருடங்களாக
நெஞ்செரிசல் பிரச்னையால் அவதிபடுகிறேன் .டாக்டரிடம் கன்சல்ட் பண்ணியதில் அமிலம் அதிகமா சுரப்பதால் இந்த பிரச்சனை என்றார். மாத்திரை தான் போடா வேண்டும் என்று சொன்னார் இன்னொரு டாக்டர் ஆப்பரேசன் பண்ணவேண்டும் என்று சொன்னார் ஆனால் நான் கடந்த 5 வருடங்களாக மாத்திரை எடுத்து வருகிறேன் மாத்திரை விட்டால் எரிசல் வந்து விடுகிறது என்ன பண்ணுவது என்று தெரியவில்ல மாத்திரை போட வேண்டும் என்று சொன்ன டாக்டர் மறுபடியும் ஒரு என்டோஸ்கோபி டெஸ்ட் பண்ணலாம் என்று சொல்லிருக்கார்.எந்த பிரச்சனையும் இல்லாமல் நல்லபடியாக உடல்நிலை சரிவர இறைவனை பிரார்த்திக்க வேண்டுகிறேன்
கோகுலதாஸ்
================================================================
நரம்புத் தளர்ச்சி
மேற்கு மாம்பலத்தை சேர்ந்த திரு.சக்திபாய் அவர்கள் தம் கணவர் திரு. எம்.ராஜகோபாலன் (வயது 70) அவர்கள் நரம்புத் தளர்ச்சி நோயால் நீண்ட காலம் அவதிப்பட்டு வருவதாக கூறுகிறார். இது தவிர முதுமைக்கே உரிய வேறு சில பிரச்னைகளும் அவருக்கு இருப்பதாக தெரிகிறது.
அவரும் தமது கணவருக்காகவும் தமக்காகவும் நம்மை பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார்.
================================================================
திரு.கோகுலதாஸ் அவர்களின் நெஞ்செரிச்சல் நீங்கவும், திரு.ராஜகோபாலன் அவர்களின் நரம்புத் தளர்ச்சி முற்றிலும் சரியாக அவர் பரிபூரண நலம் பெறவும் நம் வாசகர்களை பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.
பிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.
சைவ, வைணவக் கோட்பாடுகளை ஐக்கியப்படுத்தும் திருநாமமாகவும் `ராம’ நாமம் அமைந்துள்ளது. அஷ்டாக்ஷர மந்திரத்தில் நாராயணாய என்ற சொல்லில் இரண்டாவது எழுத்து “ரா”, சிவாக்ஷரத்தில் நமசிவாய என்பதில் இரண்டாவது எழுத்து `ம’ இரண்டையும் இணைத்து `ராம’ என்றாகிறது என்று சொல்வார்கள்.
அதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.
முந்தைய பிரார்த்தனைகளில் நாம் பிரார்த்திக்கொண்டவர்களுக்கு சீக்கிரம் அனுக்ரஹம் செய்யும்படியும் பரம்பொருளை வேண்டிக்கொள்ளுங்கள்.
பிரார்த்தனை நாள் : ஏப்ரல் 7, 2013 ஞாயிறு
நேரம் : மாலை 5.30 – 5.45
இடம் : அவரவர் இருப்பிடங்கள்
================================================================
உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…
உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.
உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!
உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.
E-mail : simplesundar@gmail.com Mobile : 9840169215
================================================================
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. அன்பே சிவம். ஒவ்வொரு முறையும் இந்த பதிவினைப்படிக்கும்போது உடம்பு சிலிர்க்கிறது. உள்ளம் குளிர்கிறது.
இந்த வாரம் பிரார்த்தனையில் எங்கள் தோழர்கள் 500 பேர் கலந்துகொள்கிறார்கள்.
அன்பே சிவம்.
நன்றி சார்.
தங்களின் அறிமுகத்திற்காக காத்திருக்கிறேன்.
– சுந்தர்
சுந்தர்ஜி,
எல்லாம் சிவ மயம்.
வெற்றி மேல் வெற்றி . சிவகுமார் அவர்களின் பதிவை பார்த்ததும் என்னை அறியாமல் கண்களில் கண்ணீர். பிரார்தனையின் வலிமை மிக பெரியது.500 தோழர்களுக்கும் என்னுடைய நன்றி. நிச்சயம் பிரார்த்தனைகளின் மூலம் மேலே குறிப்பிட்டுள்ள நபர்கள் குணமடைந்து விடுவார்கள்.
நன்றி
எல்லாம் வல்ல இறைவனருளால் கூட்டுப் பிரார்த்தனை சிறப்புடன் நடக்க பிரார்த்திகிறோம். பாரிஸ் ஜமால்
கூட்டுப் பிரார்த்தனையை விட சக்திவாய்ந்த முறை வேறொன்றும் இல்லை.
நாம் விரும்பும் குறிக்கோளை எட்ட முடியும்.
மாறும் என்ற வார்தைதவிர அனைத்தும் மாறும் .
தொடருந்து பிரார்த்தனை செய்வோம் .
பலன் பெறுவோம் ….
எலோருடைய பிரார்த்தனை மூலம் நோய்கள் குணமடைந்து விடும்.
நானும் பிரார்த்தனையில் கலந்து கொண்டு வேண்டி கொள்கிறேன். நன்றி.
பிரார்த்தனைகள் நிறைவேற
இறைவனின் திருவடியில் மண்டி இடுவோம் !!!
வாழ்க வளமுடன் !!!