பதிவின் தலைப்பில் நாம் கேட்டிருக்கும் கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா? இருந்தால் முதலில் கையை கொடுங்கள். வாழ்த்துக்கள்! நீங்கள் ஏற்கனவே பாதி ஜெயித்தாகிவிட்டது. இல்லையா…? உடனடியாக பதிலை தெரிந்துகொள்ளுங்கள். அதாவது நீங்கள் எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று. உங்கள் தற்போதைய செயலே நீங்கள் எங்கே செல்லப்போகிறீர்கள் என்பதை தீர்மானிக்கும். அதாவது NOT YOUR FORTUNE. ONLY YOUR PRESENT ACTION & GOALS WILL DECIDE YOUR DESTINATION.
போகும் இடம் எதுவென்று தெரியாமலே பலர் பயணம் செய்து கொண்டிருக்கின்றோம் என்பது தான் உண்மை.
அற்பத்தனமான ஆசைகளோ விருப்பங்களோ எந்த காலத்திலும் லட்சியமாகாது. சில இலட்சியங்கள், உண்மையில் இலட்சியங்கள் அல்ல சவக்குழிகள் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு விழுந்த பின்னர் தான் புரிகிறது. எனவே, என்றும் உயர்ந்த/உன்னத விஷயங்களையே இலட்சியமாக கொள்ளவேண்டும்.
இலட்சியங்கள் என்றால் அவை எப்படி இருக்கவேண்டும்?
இதோ கவியரசு கண்ணதாசன் மிக அழகாக கூறுகிறார்.
வாழ்ந்து பார்க்க வேண்டும் அறிவில்
மனிதனாக வேண்டும்
வாசல் தேடி உலகம் உன்னை
வாழ்த்திப் பாட வேண்டும்!
நாடு காக்க வேண்டும் முடிந்தால்
நன்மை செய்ய வேண்டும்
கேடு செய்யும் மனதை கண்டால்
கிள்ளி வீச வேண்டும்!
இலட்சியங்கள் எப்படிப்பட்டவையாக இருக்க வேண்டும் என்று இதை விட எவரும் விளக்கமுடியாது.
======================================================================
ரைட்மந்த்ரா தளம் துவக்கியதிலிருந்து வாழ்க்கையின் போக்கே மாறிவிட்டது. ஒவ்வொரு நொடிக்கும் அர்த்தம் புரிகிறது. ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சியோடு உழைக்கிறேன். நண்பர் சிட்டி என்னிடம் கூறியதை போன்று இது எனக்கு ஒரு புதிய பிறவி. புதிய உலகம். இந்த புதிய உலகில் பிரச்சனைகளோ, ஏமாற்றங்களோ இல்லாமல் இல்லை. ஆனால் அதை உரிய முறையில் எதிர்கொள்ளக்கூடிய பக்குவமும், சரியான விதத்தில் அணுக வேண்டிய அணுகுமுறையும் கைவரப்பெற்றுவிட்டது. ஆகையால், விதி என்னை நோக்கி வீசும் கடினமான பந்தில் கூட சிக்ஸர் அடிக்கும் லாவகம் வந்துவிட்டது.
அடிக்கடி புராதன கோவில்களுக்கு செல்லும் வாய்ப்பு, இறை தரிசனம், நல்லோர் அறிமுகம் மற்றும் நட்பு, நல்லவைகளையே நினைப்பது, பேசுவது, மற்றும் படிப்பது, பன்னிரு திருமுறை, திவ்விய பிரபந்தம் உள்ளிட்டவைகளை ஸ்ரவணம் செய்யும் (கேட்பது) வாய்ப்பு, நல்ல விஷயங்களை தேடுவது, நல்லவைகளை எதிர்பார்ப்பது, ஆன்மீக சுயமுன்னேற்ற நிகழ்ச்சிகளுக்கு செல்வது, நல்ல நூல்களை படிப்பது, எல்லாவற்றுக்கும் மேல்… இந்த தளத்திற்காக எழுதுவது என்று உண்மையில் ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியின் அலைகள் தான்!
மேலே கூறியவற்றில் மிக முக்கியமாக நான் கருதுவது நல்ல நூல்களை தேடி பிடித்து படிப்பது. காரணம் படிக்க படிக்க தான் சிந்தனை விரிவடையும். புதுப் புது விஷயங்களை தெரிந்துகொள்ளமுடியும். அண்மையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கு சென்ற போது பல நல்ல நூல்களை வாங்கி வந்தேன். ஒவ்வொன்றாக படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.
நேற்று திரு.பால ஹனுமானின் தளத்திற்கு சென்றபோது கீழ்கண்ட பதிவை பார்த்தேன். அதில் கூறப்பட்டிருக்கும் ‘வெற்றிக்கு சில புத்தகங்கள்’ என்ற நூலை உடனே கடைக்கு சென்று வாங்கிவிட்டேன்.உண்மையில் நம் வாசகர்கள் அனைவரும் படிக்கவேண்டிய நூல்.
படிக்கும் வழக்கம் எந்தளவு குறைந்துவருகிறது என்று கீழே உள்ள கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. என் வருத்தமும் அது தான். தங்கள் சிந்தனை செழிக்க – வாழ்வில் நல்ல மாற்றங்களை பார்க்க விரும்புகிறவர்கள் – ஃபேஸ்புக்கில் உலவும் நேரத்தை குறைத்து – நல்ல நூல்களை படிப்பதில் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டும்.
விசேஷம் என்னவென்றால் நண்பர் சிட்டி எனக்கு பரிந்துரைத்த – எனது வாழ்க்கையில் மிகப் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்திய – The Secret என்ற நூல் பற்றியும் இந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
======================================================================
ஓவர் to balhanuman.wordpress.com
உங்கள் இலக்கு என்ன ? – என்.சொக்கன்
வாழ்க்கையில் வெற்றி சிகரத்தைத் தொடுபவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்.அவர்கள் இலக்கை நிர்ணயித்து அதனை நோக்கிப் பயணிக்கிறார்கள்.மற்றவர்கள் இலக்கில்லாமல் அலைகிறார்கள்.
உதாரணமாக, ‘இந்தவாட்டி எக்ஸாம் நல்லா எழுதணும்‘ என்று ஒரு மாணவன் யோசித்தால்,அது வெறும் ஆசை.இதையே ‘எல்லாப் பாடத்திலயும் 95%க்குமேல மார்க் எடுக்கணும்’ என்று லேசாக மாற்றினால்,அது ஓர் இலக்காக,அடைய வேண்டிய லட்சியமாக மாறி- விடுகிறது.
இலக்குகள்/லட்சியங்களை நிர்ணயிப்பது ஒரு கலை. ஒவ்வொரு தனி மனிதரும், நிறுவனமும், அமைப்பும், நாடும் இதைக் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கான நுணுக்கங்களை எளிய உதாரணங்களோடு விளக்கமாகக் கற்றுக்கொடுக்கும் ஒரு சுவாரஸ்யமான புத்தகம்,ப்ரையன் ட்ரேஸி எழுதிய ‘கோல்ஸ்!’ (Goals!).
இந்தப் புத்தகம் நாமே நமது ‘கோல்’களைத் தீர்மானிப்பதற்கான படிப்படியான வழிமுறைகளைச் சொல்லித் தருகிறது.அந்த ‘12 ஸ்டெப்ஸ்’ இங்கே சுருக்கமாக:
ஸ்டெப் 1 இலக்கை நிர்ணயிப்பதற்கு நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள்? அதைத் தெளிவாகத் தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
ஸ்டெப் 2 இந்த இலக்கு அடையக்கூடியதுதான் என்று நீங்கள் முதலில் நம்பவேண்டும். அதில் உங்களுக்கு 1 சதவிகிதம் கூடச் சந்தேகம் இருக்கக்கூடாது. இது கிடைக்குமா, கிடைக்காதா என்கிற சந்தேகத்தோடு ஒரு விஷயத்தில் இறங்கினால், உங்களால் அதில் முழு ஈடுபாட்டுடன் போராடமுடியாது. ஜெயிக்கமுடியாது.
ஸ்டெப் 3 இதுவரை உங்கள் மனத்தில் இருந்த இலக்கை இப்போது காகிதத்தில் எழுதிவையுங்கள். அடிக்கடி உங்கள் கண்ணில் படுகிற ஓர் இடத்தில் ஒட்டிவையுங்கள்,அந்தச் சிந்தனை உங்கள் மனத்தில் ஆழப் பதியும்வரை விடாதீர்கள்!
ஸ்டெப் 4 இந்த இலக்கை அடையவேண்டுமென்றால், எங்கேயிருந்து ஆரம்பிக்கவேண்டும்? அந்தத் தொடக்கப் புள்ளியைத் தீர்மானியுங்கள்.
ஸ்டெப் 5 உங்களுடைய இலக்கை ஏற்கெனவே தீர்மானித்துவிட்டீர்கள். இப்போது,அந்த இலக்கு ஏன் உங்களுக்குத் தேவைப்படுகிறது என்று யோசியுங்கள்.
ஸ்டெப் 6 ஒவ்வோர் இலக்குக்கும் ‘டெட்லைன்’ நேரக்கெடு அவசியம். ‘ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பேன்’ என்பதைவிட ‘இன்னும் பத்து வருடங்களில் ஒரு கோடி ரூபாய் சம்பாதிப்பேன்’ என்பது வலுவான இலக்கு இல்லையா?
ஸ்டெப் 7 இந்த இலக்கை நோக்கிய உங்களுடைய பயணப் பாதையில் என்ன மாதிரியான தடைகள் வரக்கூடும் என்று யோசியுங்கள். அவற்றை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள் என்று தீர்மானியுங்கள்.
ஸ்டெப் 8 தடைகள் வெளியே மட்டுமல்ல,உங்களுக்குள்ளும் இருக்கலாம். உங்களிடம் ஏதாவது திறமை குறைகிறதா என்பதைக் கவனித்து சரி செய்யுங்கள்.
ஸ்டெப் 9 இலக்கை அடைய வழிகாட்டக் கூடிய நலம்விரும்பிகள் யார் யார்? யோசியுங்கள், அவர்களிடம் இலக்கைச் சொல்லி அதனை எட்டுவதற்கு உதவும்படி கேளுங்கள்.
ஸ்டெப் 10 திட்டமிடுங்கள். ‘இன்னும் 1 மாதத்தில் நான் பைக் ஓட்டக் கற்றுக்கொள்வேன்,அதற்கடுத்த மாதம் லோனுக்கு விண்ணப்பம் போடுவேன், மூன்றாவது மாதம் பைக் வாங்கி விடுவேன்,அந்தக் கடனை ஒரு வருடத்துக்குள் திரும்பச் செலுத்தி விடுவேன்’ … இப்படி.
ஸ்டெப் 11 உங்களுடைய இலக்கை எப்போதும் நினைத்துக்கொண்டே இருங்கள். அதை அடைந்துவிட்டால் உங்களுக்கு என்னவெல்லாம் கிடைக்கும் என்பதை யோசித்து யோசித்துப் பரவசப்படுங்கள்.
ஸ்டெப் 12 எப்போதும் நம்பிக்கை இழக்காதீர்கள். இலக்குக்கான அந்தப் பாதையிலிருந்து விலகாதீர்கள்.அப்படி விலகினீர்கள் என்றால், நிஜமாகவே அது உங்கள் இலக்கு இல்லை என்று அர்த்தம்.
வழிகளை சொல்லியாகிவிட்டது.இனி,இலக்கை நிர்ணயிப்பது உங்கள் வேலை..
–நன்றி குமுதம்
நூலின் தலைப்பு : வெற்றிக்கு சில புத்தகங்கள்
நூலின் ஆசிரியர் : என். சொக்கன்
பதிப்பகம் : மதி நிலையம் , சென்னை 86
மொத்த பக்கங்கள்: 184, விலை ரூ 120
வெற்றிக்கு சில புத்தகங்கள் (சுய முன்னேற்ற வகையைச் சேர்ந்த முப்பது ஆங்கிலப் புத்தகங்களைப் பற்றிய சிறு அறிமுகக் கட்டுரைகள், நூல் சுருக்கம், குமுதம் வார இதழில் இரண்டரை ஆண்டுகள் வெளிவந்த ‘வெற்றிக்கு ஒரு புத்தகம்’ தொடரின் முதல் பகுதி)
புத்தகம் படிக்கும் பழக்கமே குறைந்துவரும் காலகட்டம் இது. என்னதான் பயனுள்ள விஷயங்களைப் புத்தக வடிவில் தந்தாலும், ‘அதையெல்லாம் உட்கார்ந்து படிச்சுகிட்டிருக்க முடியாதுங்க. சுருக்கமா அஞ்சு நிமிஷத்துல சொல்லுங்க சார்’ என்று கேட்கிறவர்கள் ஏராளம்.
குமுதம் இதழில் இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வெளியான ‘வெற்றிக்கு ஒரு புத்தகம்’ தொடர் இதனைச் சாதித்துக் காட்டியது. பல பிரமாதமான புத்தகங்களை எடுத்துக் கொண்டு, ஒவ்வொரு வாரமும் நான்கே பக்கங்களுக்குள் அதனைச் சுருக்கமாகவும், சுவை குறையாமலும் அறிமுகப்படுத்திய விதம், லட்சக்கணக்கான வாசகர்களை ஈர்த்தது. இதைப் படித்துவிட்டு அந்தப் புத்தகங்களைத் தேடிச் சென்று முழுப்பலன் பெற்ற வாசகர்களும் ஏராளம்
அந்தத் தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நூல் அறிமுகங்களை இங்கு தொகுத்து அளித்திருக்கிறோம். ஒரு அலமாரி முழுக்க நிரம்பக்கூடிய புத்தகங்களை ஒன்றிரண்டு மணி நேரத்துக்குள் படித்துப் புரிந்துகொள்ளக்கூடிய அபூர்வமான வாய்ப்பை இது உங்களுக்குத் தரும்!
[END]
நன்றி சார் என் இலட்சியத்தை நோக்கி அடி எடுத்து வைக்கேரன்.. ,
உங்கள் லட்சியத்தை நீங்கள் விரைவில் அடைய வாழ்த்துக்கள்!
– சுந்தர்
hallo ஜி, already நான் ஆல்பா மூலம் லட்சியத்தை அடைய தியானம் செய்கின்றேன். அதில் ஓரளவு வெற்றியும் கண்டு உள்ளேன்.நம் தளத்தில் உள்ள அனைவருக்கும் இலட்சியங்கள் நிறைவேற வாழ்த்துக்கள். நாம் சாதயனார்கள் பட்டியலில் நாமும் ஒருவராக இருக்க வேண்டும்.
நீங்கள் படித்த பத்தகத்தை பார்த்ததும் எனக்கும், புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் வந்துள்ளது .
நன்றிகள்.
இரவில் படுக்கும் முன்பாக நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கம் நல்ல எண்ணங்களை விதைக்கும். நீண்ட காலமாக நான் கடைபிடித்து வரும் பழக்கத்திற்கு ஒரு உற்சாகத்தை தந்தது உங்கள் கட்டுரை.
ரைட் மந்த்ரா சார்பாக நாம் சேர்ந்து செய்யும் காரியங்களுக்கு நல்ல பலன் எனக்கு தெரிய ஆரம்பித்துவிட்டது என்ன வென்று சில மாதங்கள் களைத்து சொல்கிறேன்
புத்தகம் படிக்கறது ரொம்ப நல்ல விசயம் ஆனால் அதை முழுசா பயன்படுத்தனும் .அதுல முழுக்க ஊரிடனும் .அதாவது உங்களுடைய கவனம் சிதறாமல் இலட்சியத்தை நோக்கிய பயணம் ஒரு குரிக்கோல் மட்டும் இல்லாமல் அதுகூட வாழனும் .நானும் புத்தகம் படிப்பேன் ஆனால் பின்பற்ற முடியல . தகவலும் ,சிந்தனைகளும் வைத்து பிரச்சினைகள் வந்தால் சமாளிக்க முடியும் . இதை நான் அனுபவிச்சேன் .உங்களால் முடியும் என்று மனசு வைத்தால் கண்டிப்பாக முடியும் .நல்ல புத்தகங்களை படிக்க ஒரு வழி சொல்லவும் .நல்ல புத்தகம் பட்டியல் இடவும்.நான் சிங்கப்பூர் இல் வேலை செய்து கொண்டுருக்கிறேன் அப்புறம் திரு.பாலம் கல்யாணசுந்தரம் அய்யா பற்றி மேலும் விரிவாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன். உங்கள் சேவை மேலும் மேலும் பரவலாக பரவட்டும்… திரு.சுந்தர்…நன்றி .நண்பர்கள் அனைவரும் என்னோடு பகிருந்துக்கனும்..இப்படிக்கு பாரதி(பாரதிதாசன் )
நல்ல ஊக்கமுடைய பதிவுகல் சார்..நானும் ஒரு இலக்கை அமைக்கின்றேன்.
\\உங்களுடைய இலக்கை எப்போதும் நினைத்துக்கொண்டே இருங்கள். அதை அடைந்துவிட்டால் உங்களுக்கு என்னவெல்லாம் கிடைக்கும் என்பதை யோசித்து யோசித்துப் பரவசப்படுங்கள்\\
நான் இலக்கை அமைத்துவிட்டேன்.
உங்கள் வாழ்த்துக்காக காத்திருக்கிறேன் ..
நீங்க நிச்சயம் ஜெயிப்பீங்க. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
இலக்கு நிர்ணயித்துள்ள மற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
கடந்தவைகள் கடந்தவைகளாக இருக்கட்டும். வருங்காலம் உங்கள் கையில். நேரத்தின் அருமை உணர்ந்து, செயலாற்றுங்கள். இறைவன் உங்கள் பக்கம்.
– சுந்தர்
I’m indeed very happy to see this article.
***
yup. To see, hear, speak, and know good things are the great steps we could ever take to succeed our ambitions and life.
***
Soon, I would like to see above mentioned book. Eager to know all those infos about the good books in it.
***
And as mentioned in the article, The book ‘The Secret’ indeed is a gift. Those who’re interested in their development, can read it and get benefited out of it.
***
Wish you all success for those who endeavours to succeed in their lives – financially, physically, emotionally and intellectually.
***
“When the voice and vision on the inside become more profound and clear and loud than the opinions on the outside, you’ve mastered your life” – John De martini, one of the teachers of ‘The secret’.
***
**Chitti**.
Thoughts becomes things.
@ Sundarji,
I forgot to thank. Thanks so much for this lovely article. Keep enlightening people with this kind of article.
***
I like friend Bharathi’s comment. As said by him, I also would love to know the good books. people who have read any good books can describe those books or at least, can mention the category of those books with their names like Self help/philosophical books, biography (inspirational people’s), religion & spirituality, health kinda ones.
***
To start with, I will give a list of few:
1. Religion books:
(to get know Sri Raghavendra, saint of Mantralaya and Bhuvanagiri, who have been mentioned in the recent articles),
Sri Raghavendra Mahimai – there are 9 parts for this. written by Amman Sathiyanathan. would also give info about Sri vishnu and related gurus and history of sri raghavendra.
2. Self help/Philosophy related:
1. The secret – written by Rhonda Bryne
2. The monk who sold his ferrari, Discover your destiny – Robin sharma.
3. You can win – Shiv khera.
***
**Chitti**.
Thoughts becomes things.
The Secret – is a very good book. This should be read in leisure, again and again, understand, digest and ponder over. This is definitely not for just killing boredom. The essence of this book is the main theme of Hindi movie “Om Shanthi Om”, which was very wisely used by the Director.
Nice article….thx
நல்ல விஷயம்
மிகவும் அருமையான பதிவு நானும் ஒரு நல்ல குறிக்கோளை நோக்கி அடி எடுத்து வைத்து வாழ்கையில் ஜெயித்துக் காட்டுவேன் ஜெயிப்பதற்கு வயது ஒரு தடை அல்ல
நான் power of positive thinking என்ற ஒரு புத்தகம் போன மாதம் வாங்கி படித்துக் கொண்டிருக்கிறேன். மிகவும் அருமையான புத்தகம்
author norman vincent .
எல்லோருக்கும் பிள்ளையார் சதுர்த்தி தின வாழ்த்துக்கள்
நன்றி
uma