இந்து சமுதாயத்தின் பாரமபரியத்தையும் மேன்மையையும் எடுத்து கூறும் பொருட்டும், அதிலுள்ள பல்வேறு அமைப்புக்களின் சேவை மற்றும் சமுதாயப் பணிகளை விளக்கும் பொருட்டும் ஒவ்வொரு ஆண்டும் இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி நடைபெற்றுவருகிறது.
விவேகானந்தரின் 150வது பிறந்த நாளையொட்டி, 5வது இந்து ஆன்மிகம் மற்றும் சேவை கண்காட்சி, மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி வளாகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி துவங்கி, 24 ஆம் தேதி வரை சுமார் 6 நாட்கள் நடைபெற்றது. கண்காட்சிக்கு செல்ல முடியாதவர்களின் வசதிக்காக அது பற்றிய விரிவான பதிவுகள் நம் தளத்தில் வெளியாக இருக்கின்றன.
இந்த பதிவுகளில் கண்காட்சியில் ஹை -லைட்டாக அமைந்த விஷயங்களை பற்றி ஒவ்வொன்றாக விரிவாக பார்க்கலாம்.
முதலில் ஆந்திர மாநில அறநிலையத்துறையின் ரதங்கள்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து கீழ்கண்ட தேவஸ்தானங்களில் இருந்து ரதங்கள் இடம்பெற்றிருந்தன.
1) திருமலா திருப்பதி தேவஸ்தானம் ரதம்
2) ஸ்ரீ காலஹஸ்தீஸ்வர சுவாமி தேவஸ்தானம் ரதம்
3) ஸ்ரீ ஸ்ரீசைலம் பிரம்மரம்பா மல்லிகார்ஜூன சுவாமி தேவஸ்தானம் ரதம்
4) ஸ்ரீ சுயம்பு வரசித்தி விநாயக சுவாமி ரதம் – காணிப்பாக்கம்
5) ஸ்ரீ வராஹ லக்ஷ்மி நரசிம்ம சுவாமி தேவஸ்தானம் ரதம் – விசாகபட்டினம்
6) ஸ்ரீ துர்க்கா மல்லேஸ்வர சுவாமி ரதம் – விஜயவாடா
கண்காட்சியில், 240க்கும் மேற்பட்ட அமைப்புகள், காட்சி மற்றும் விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில், ஆன்மிகம், தொடர்பான புத்தகங்கள், குறுந்தகடுகள், பாரம்பரிய விளையாட்டுகள், இயற்கை உரத்தில், தயாரான விளை பொருட்கள், மூலிகை செடிகள் இடம் பெற்றிருந்தன. இந்தியாவில், புகழ் பெற்ற கோவில்களில் உள்ள, லிங்கங்கள் கண்காட்சியில் தரிசனத்திற்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்த ஆண்டு புதுமையாக வளாகத்தின் வெளியே ஆந்திர மாநில முக்கிய கோயில்களில் இருந்து வந்துள்ள பிரசார ரதங்களின் அணிவகுப்பு பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம், விஜயவாடா ஸ்ரீதுர்கா மல்லீஸ்வரர், ஸ்ரீகாளஹஸ்தி, ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனேஸ்வரர், விசாகப்பட்டினம் லட்சுமி நரசிம்மர், சித்தூர் வரசித்தி விநாயகர் ஆகிய கோயில்களிலிருந்து வந்திருந்த பிரமாண்டமான ரதங்கள் கண்காட்சி வளாகத்தில் அணிவகுத்திருந்தது பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தது.
மேற்படி ரதங்களில் உள்ள விக்ரகங்கள் அந்தந்த கோவில்களின் மூலவர் எப்படி இருப்பாரோ அதே போன்று அமைக்கப்பட்டிருந்தன.
கண்காட்சி அரங்கிற்கு வெளியே மைதானத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்த ரதங்களில் அர்ச்சனைகளும் பூஜைகளும் அந்தந்த கோவில்களில் நடைபெறுவதைப் போலவே நடந்த என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் இந்து சமய அறநிலையத் துறை எங்கே?
திருமலை திருப்பதி தேவஸ்தானம், திருவிதாங்கூர் தேவஸ்தானம், ஆந்திரப் பிரதேச மாநில அறநிலையத் துறை, கர்நாடக மாநில அறநிலையத் துறை உள்ளிட்ட அண்டை மாநிலத்தை சேர்ந்த பல அறநிலையத்துறை அமைப்புக்கள் இந்த கண்காட்சியில் கலந்துகொண்டு அவர்கள் மாநிலங்களில் உள்ள கோவில்களின் சிறப்புக்களை EXHIBIT செய்த சூழ்நிலையில், சென்ற ஆண்டு பங்கு பெற்ற இந்து சமய அறநிலையத் துறை இந்த ஆண்டு இந்த கண்காட்சியில் பங்கு பெறவில்லை.
மேலும் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பாக எதுவுமே இடம்பெறவில்லை. ஸ்டாலும் அமைக்கப்படவில்லை.
தமிழகத்தில் அறநிலையத் துறை என்கிற அமைப்பு இருக்கிறதா என்றே தெரியவில்லை என்று கண்காட்சிக்கு வந்தவர்கள் பேசிக்கொண்டதை கேட்க முடிந்தது. இது குறித்து அமைப்பாளர்களிடம் கேட்டபோது அவர்கள் பதில் எதுவும் கூறவில்லை.
இது குறித்து அமைப்பாளர்களிடம் கேட்டபோது அவர்கள் பதில் எதுவும் கூறவில்லை.
இது போன்ற கண்காட்சிகளில் பங்கேற்று தமிழகத்தில் உள்ள கோவில்களின் சிறப்பை மக்களிடம் எடுத்துச் சென்று, மக்களை அந்தந்த கோவில்களை நோக்கி ஈர்ப்பது தமிழ இந்து அறநிலையத்துறையின் கடமை. அடுத்த முறை நிச்சயம் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி தமிழகத்தில் ஆலயங்கள் தழைக்க சம்பந்தப்பட்டவர்கள் உறுதுணையாக இருப்பார்கள் என்று நம்புவோமாக.
……………………………………………………………………………………………………….
அடுத்தடுத்த பதிவுகளில்….
கண்காட்சிக்கு உள்ளே இடம்பெற்றிருந்த முக்கிய விஷயங்கள்
* சுவாமி விவேகானந்தரின் சனாதன மரம்
* பிரம்ம குமாரிகள் அமைப்பினர் நிறுவிய 12 ஜோதிர் லிங்கங்கள்
* மகா பெரியவா தத்ரூப சிலை
* சேவாபாரதி என்ற தொண்டு நிறுவனத்தின் அரங்கில் வைக்கப்பட்டிருந்த மாதிரி கிராமத்தின் வடிவமைப்பு
* திருவோடு, கல்காரம், ருத்ராட்சம், செங்கற்றாழை, பன்னீர்மரம் போன்ற மூலிகை செடிகள் இருந்த ஸ்டால்கள்.
* மாப்பிள்ளை சம்பா அரிசி தெரியுமா?
* பசுவின் சாணத்தில் இருந்தும் கோமியத்தில் இருந்தும் என்னென்ன செய்யலாம் தெரியுமா?
* இன்றைய டில்லி, பாட்னா, லக்னோ, பெங்களூரு, போபால், உள்ளிட்ட முக்கிய நகரங்களின் இதிகாச புராண கால பெயர்கள் என்ன ?
மேலும் பலப் பல சுவையான தகவல்கள் அவற்றுக்குரிய பிரத்யேக ஸ்டால்களில் இருந்து…. நேரடி கவரேஜ்!
……………………………………………………………………………………………………….
திவ்ய தரிசனம். ஆஹா… ஆன்மிக வெள்ளத்தில் திளைக்க வைத்து விட்டீர்கள் சுந்தர். தாமதம் என்றாலும் இது ஏற்புடைய தாமதமே! வாழ்த்துக்கள்
அருமையான பதிவு நானும் சென்று வந்தேன். மஹா பெரியவா திருவுருவச் சிலை பார்க்க கண் கோடி வேண்டும் அவ்வளவு அருமையாக இருந்தது . ஒவ்வொரு ஸ்டால் மிகவும் நன்றாக
இருந்தது.
ரதங்களை நேரில் பார்த்த மாதிரி அருமையான புகைப்படங்கள்.
அருமையாக உள்ளது . வாழ்த்துக்கள் சுந்தர் சார்.
விவேக் ராம்.
நேரில் பார்த்த அனுபவம் ..
நன்றி
Wonderful article. Thanks very much for this.
***
It’s been like tens of temples/deities have come together for us to give darshan. Thanks so much for such amazing pictures of gods, rathams, overall pic which look like heaven (can’t put into words better).
***
All this made me feel that I should have come to see it. But, it’s all his call and his blessings. Whoever had blessings had a chance to go and see all these things. I don’t but however at least I could see it here through you. Thanks so much.
***
No need to be sorry for the delay as in you’re penning such an amazing articles in your leisure time behind your working (hectic) hours.
People like me, don’t even comment due to laziness or whatever may be the reason. But you’re allocating time to go and experience and wanting to share these amazing things and happenings.
***
Thanks so much. Waiting to get drown in these blessed things/happenings of this expo. Eagerly waiting to know what are the things kept related to Swami Vivekananda. It would be better if you can give it as separate article of the things kept for him since I heard that this expo had been dedicated to him and so, hoping that organizers would have done measurable part about him.
***
**Chitti**.
Thoughts becomes things.
Stunning Rathas…
பிரமிப்பூட்டும் பதிவு !!!
வரமுடியாத நிலையில் இருக்கும் எம்மை போன்றவர்களை கண்காட்ச்சிக்கு அழைத்து சென்று பல்வேறு ஷேத்திரத்தின் இறைஅருளை ஒருசேர எமக்கு அளித்தமைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் !!!
ரதங்களின் கட்டமைப்பு அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடிப்பதாக உள்ளது !!!
எவ்வளவு நேர்த்தி !!!
ஒரே வளாகத்தில் அத்துணை ஆலைய அமைப்பை காண்பது கண் கொள்ளா காட்சி !!!
அடுத்த பதிவிற்காக
ஆவலுடன் !!!