ஆப்பிரிக்காவில் உள்ள போட்ஸ்வானாவில் உள்ள காடுகளில் ‘நேஷனல் ஜியாகரபி’ சானலுக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு படம்பிடிக்கப்பட்ட வீடியோ இது. நண்பர் ஒருவர் என்னுடைய பர்சனல் ஃபேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார். அனைவரும் பார்க்கட்டுமே என்று இங்கு தனிப் பதிவாக தருகிறேன்.
காட்டில் பசியோடு திரியும் சிறுத்தை ஒன்று தூரத்தில் ஒரு குரங்கை பார்த்துவிட, ஒரே பாய்ச்சலில் குரங்கிடம் சென்று அதை ஒரே அறையில் அடித்து வீழ்த்துகிறது. (குரங்குகள் சிறுத்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவாகும். இரண்டுக்கும் ஆகவே ஆகாது.)
சிறுத்தையின் தாக்குதலில் குரங்கு உடனே இறந்துவிடுகிறது. அப்போது தான் பார்க்கிறது…. அன்று பிறந்த அதன் குட்டி ஒன்று அந்த குரங்கின் மடியிலிருந்து வெளியே வருகிறது. ஒரு தாயை கொன்றுவிட்டோமே அதன் குட்டியை அனாதையாக்கிவிட்டோமே என்கிற குற்ற உணர்வு அதன் பசியை மறக்கச் செய்கிறது.
நடப்பது என்னவென்றே தெரிந்து கொள்ளமுடியாத அந்த குரங்கு குட்டியை பார்க்கும் சிறுத்தைக்கு என்னவோ போலாகிவிடுகிறது. அதை வாஞ்சையுடன் தடவிக் கொடுக்கிறது. இதனிடையே இரத்த வாடையை மோப்பம் பிடித்து ஒரு கழுதைப்புலி கூட்டம் ஒன்று அங்கு வந்துவிடுகிறது. கழுதைப்புலிகளிடம் இருந்து குரங்குக் குட்டியை பாதுக்காக்க வேண்டி சிறுத்தை அதை கவ்வி சென்று மரத்தின் மீது பாதுகாப்பாக வைத்துவிடுகிறது. குட்டி கீழே விழுந்துவிட ஒவ்வொரு முறையும் சிறுத்தை அதை காப்பாற்றி மேலே கொண்டு வந்து வைக்கிறது. குரங்குக் குட்டியை பாதுகாக்க வேண்டி சிறுத்தை இரவு முழுவதும் கண் விழிக்கிறது.
மண்ணில் என்ன தோன்றக் கூடும்
மழை இல்லாத போது
மனிதனோ மிருகமோ
தாயில்லாமல் ஏது
வாழவைத்த தெய்வம் இன்று
வானம் சென்றதேனோ
உலகிலே உன் மகன்
நீர் இல்லாத மீனொ
மீண்டும் இந்த மண்ணில் வந்து
தோன்ற வேண்டுமே
வாழ்க வாழ்க மகனே என்று
வாழ்த்த வேண்டுமே
எங்கே எங்கே
அம்மா
நீ சுமந்த பிள்ளை
சிரகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும்
கொண்டாடும் தெய்வம்
தாயே அன்னை ஒர் ஆலயம்
இதை படம் பிடித்த நேஷனல் ஜியாகரபி வீடியோ குழுவே இந்த நிகழ்வை கண்டு கண்கலங்கிவிட்டதாம்.
ஒரு சிறுத்தைப் புலி குட்டியாக பிறந்து, பெரிய வேட்டை மிருகமாக மாறி, இனப்பெருக்கம் செய்யும் நிலையை அடைந்து, இறுதியில் மூப்படைந்து இறக்கும் வரை அதன் வாழ்வை டாக்குமெண்டரியாக படம்பிடிக்கும் ஒரு நிகழ்ச்சிக்காக இந்த வீடியோ எடுக்கப்பட்டது. (இந்த வீடியோ எடுக்கப்படும்போது இந்த சிறுத்தைக்கு மூன்றரை வயதாம்!)
தன சுயநலத்துக்காக செய்த பாவங்களை பற்றிய குற்ற உணர்வே இல்லாமல் திரியும் மனித ஜென்மங்களுக்கு நடுவில் இந்த விலங்குகளே மேல் அல்லவா?
Leopard Kills Monkey and discovers baby! Incredible reaction!! – Video
Video URL
http://www.youtube.com/watch?v=TqklTPCRLGI
………………………………………………………………………………………….
விலங்குகளுக்கும் பக்தி உண்டு. நம்மை விட சற்று அதிகமாகவே.
விரைவில்…
விலங்குகள் இறைவனை பூஜித்து பேறு பெற்ற சைவத் தலங்கள்!
………………………………………………………………………………………….
ஒரு நிமிடம் கண் கலங்கி விட்டேன். சிறுத்தையை பார்த்து ஆவது மனிதன் திறுந்த வேண்டும் .
நல்லதைய பார்போம் , நல்லதைய செய்வோம் .
விவேக் ராம்.
சிறுத்தையின் குற்ற உணர்வு – நம்பவே முடியவில்லை. மிருக உணர்வுடன் மட்டும் இருந்திருந்தால் சிறுத்தை குரங்கு குட்டியையும் கொன்று உணவாக்கிகொண்டிருக்கும். ஆனால் அப்படி செய்யாமல் ஒரு தாயைப்போல் குரங்கு குட்டியை காபாற்ற அது செய்யும் முயற்சி மனதை நெகிழ வைக்கிறது.
மனிதனோ மிருகமோ தாயில்லாமல் ஏது என்னும் வரிகளுக்குபிறகு, அந்த குட்டியின் நிலையிலிருந்து பார்த்தால், மீண்டும் இந்த மண்ணில் வந்து தோன்ற வேண்டுமே, வாழ்க வாழ்க மகனே என்று வாழ்த்த வேண்டுமே; எங்கே எங்கே என்ற வரிகளும் ஞாபகத்திற்கு வருகிறது. மனிதர்களுக்கு மனிதாபிமானத்தை நினைவூட்டும் நிகழ்வாக இருக்கிறது.
வளர்ப்பு விலங்குக்கு மட்டும் தான் மனிதநேயம் தெரியும், என்றும் புரியும் என்றும், இத்தனை நாள் நினைத்திருந்தேன் .
காட்டுவிலங்கு மனிதநேயம் என்னை கண்கலங்கவைத்துவிட்டது .
நாட்டில் தான் மனிதவிலங்குகள் அதிகமாகிவிட்டது .மனிதன் மாறவேண்டும் .மனிதா மனிதா நாம் மாறிவிடுவோம் .
No words…..it teach us many things…
thanks for sharing ji….
குற்ற உணர்வு …இப்போ சில மனிதர்களுக்கு கூட வருவதில்லை
தற்போது மனித உணர்வு மிருகத்துக்கு வந்துவிட்டது. அதேசமயம் மிருக உணர்வு மனிதர்களுக்கு வந்துகொண்டிருக்கிறது. இது உண்மை இல்லாவிடில், ஏன் தினமும் ஒரு பாலியில் பலாத்கார கொடுமை செய்தியாக வந்துகொண்டிருக்கிறது.
மிக மிக அற்புதம். மனிதர்களாகிய நாம் பார்த்து திருந்த ஒரு சந்தர்ப்பம்.
மனிதர்களை விட மிருகங்கள் நன்றியிலும் பாசத்திலும் ரொம்ப உசத்தி என்பதற்கு இந்த வீடியோ ஒரு உதாரணம்
நல்ல குணத்துக்கு எடுத்துக்காட்டு