இந்த அரிய வாய்ப்பை நமக்கும் நமது நண்பர்களுக்கும் நல்கிய ஈசனின் கருணையை என்னவென்று சொல்வது?
இன்றைக்கு காலையில் நாம் இந்த பணிக்காக கோவிலுக்கு செல்லும்போது ஆங்காங்கே குப்பைகள் மற்றும் உணவருந்திய இலைகளுடன் குப்பை கூளங்களுடன் காட்சியளித்தது. (நேற்று சனிப்பிரதோஷம் என்பதால் கோவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்).
முதலில் வெளியில் இருந்த பிரகாரம் மற்றும் விசாலமான ஹால் போன்ற பகுதியை பெருக்கினோம். நண்பர்கள் ராசாவு, ஹரிஹரனும் உள்ளே சென்றனர். உள்ள பிரகாரத்தில் இருந்த அபிஷேக நீர் மற்றும் கழிவு நீரை பெருக்கி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அவர்களது சீரிய முயற்சியினால் உட்பிரகாரம் சற்று நேரத்தில் பொலிவடைந்தது.
பின்னர் பெரம்பூரிலிருந்து வந்திருந்த நம் தள வாசகர் விவேக் என்பவர் ஒட்டடை அடிக்கும் பணியில் ஈடுபட்டார். சண்டேஸ்வரர், துர்க்கை அம்மன் சன்னதி ஆகியவை அவர் கைவண்ணத்தில் சுத்தம் அடைந்தது.
அதே போல தாம்பரம் அருகேயிருந்து வந்திருந்த நம் தள வாசகி ஒருவர் இன்றைக்கு நமது உழவாரப்பனியில் அளித்த பங்கு மகத்தானது. பெருக்குவது, குப்பைகளை அள்ளுவது, பாத்திரங்களை கழுவுவது என்று அவர் ஆற்றிய தொண்டு பெருந்தொண்டு. பிரகாரத்தில் தர்ம தரிசன நுழைவாயிலில் தேங்கியிருந்த நீரை வெளியே தள்ளி, பெருக்கி பின்னர் சுண்ணாம்பும் ப்ளீச்சிங் பவுடரும் போட்டுவிட்டார்கள்.
வளாகம் முழுதும் நாட்பட்ட குப்பைகள், உடைந்த அகல் விளக்குகள், ஆகியவை அகற்றப்பட்டன.
நண்பர் குட்டி சந்திரன் மடப்பள்ளியை கூடி, பெருக்கி, நீர் விட்டு கழுவி சுத்தம் செய்து கொடுத்தார்.
திருவள்ளூரிலிருந்து வந்த நண்பர் மனோகரனுக்கு காலபைரவர் சன்னதியை சுத்தம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. முழுமையாக கழுவி பாசிகளை நீக்கி, பெருக்கி துடைத்தார்.
நண்பர் மாரீஸ்கண்ணன் பொருட்களை வாங்கி வருவது, போக்குவரத்து உள்ளிட்டவைகளை பார்த்துக்கொண்டு, பின்னர் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியும் செய்து பின்னர் துப்புரவு பணியும் மேற்கொண்டார்.
நாராயணன் என்னும் என் நீண்டகால நண்பர், நம் தளத்தின் சமீபத்திய வாசகர் வந்திருந்து சாதரணமாக நாம் கைகளால் தொட தயங்குகிற கழிவுகளை கூட சிறிதும் முகம் சுளிக்காது அப்புறப்படுத்தி சேவைகள் செய்தார். சனீஸ்வரர் சன்னதி மற்றும் வெளிப் பிரகாரம் சுத்தமானதற்கு காரணமே இவர் தான்.
‘ஆத்மசேவா தர்ஷன சமிதி’ என்கிற உழவாரப்பணி செய்யும் அமைப்பை சார்ந்த திரு.சிவகுமாரனும், திரு.ராமஜெயமும் நம்மை உற்சாகப்படுத்தவும், நமக்கு உதவிடவும் வந்திருந்தார்கள்.
கூட்டு முயற்சியில் பிரகாரத்தில் இருந்த பழைய இரும்பு சட்டங்கள், கண்ணாடி துண்டுகள் ஆகியவை அகற்றப்பட்டது.
இன்று இரவு நடைபெறும் பூஜையில் நமது தளம் சார்பாக சுண்டல் நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. நண்பர்களுடன் முழு இரவும் கோவிலில் இருந்து தங்கி, கூட்டத்தை ஒழுங்கு படுத்த உதவி விரதம் அனுஷ்டிக்க உத்தேசித்துள்ளோம்.
பக்தர்கள் கூட்டம் அதிகம் வரும் என்பதால் நமது துப்புரவு பணி இரவும் தொடரும். சிவராத்திரி பூஜையை கண்டு ரசிப்பதை விட அந்நேரத்தில் வளாகத்தை தூய்மை செய்யும் பணியை பாக்கியமாக கருதுகிறேன். ஏனெனில், பெரும்கூட்டம் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும் இது போன்ற வைபவங்களில் துப்புரவு பனி செய்யவே ஈசனுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.
இந்த பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்ட நண்பர்களும் அவர் தம் குடும்பங்களும், இந்த பணிக்கு பொருளுதவி உள்ளிட்ட உதவிகளை நல்கிய வாசகர்களும் அவர் தம் குடும்பங்களும் நோய் நொடியின்றி சீரும் சிறப்பும் பெற்று வாழ அந்த ஈசனை வேண்டிக்கொள்கிறேன்.
இன்றைய பணிக்கு வந்தவர்கள் எவரையும் நான் அழைக்கவில்லை. அவர்களாக மனமுவந்து வந்தவர்கள் தான். நமது சிவராத்திரி பதிவுகளில் உழவாரப்பணி குறித்த செய்தியை பார்த்துவிட்டு “எப்போது எங்கே வரவேண்டும் என்று மட்டும் சொல்லுங்கள்” என்று கேட்டுவிட்டு வந்தவர்கள் தான் இவர்கள். நான் அழைத்தது குட்டி சந்திரன் ஒருவரை மட்டுமே. காரணம் அவருக்கு இணையம் பார்க்க வாய்ப்பில்லை. பார்க்கவும் தெரியாது.
இப்போதைக்கு இது ஒரு Quick Update. விரிவான பதிவு பின்னர் அளிக்கப்படும்.
வணக்கம் சுந்தர். கட்ந்த 2 நாட்களா (எனது அலுவலகம் விடுமுறை ) நமது தளத்தை படிக்க முடியல. இப்ப தான் படிச்சேன். அப்பபா, எவ்வளவு பெரிய காரியம் செஞ்சிருக்கிங்க. ரொம்ப சாதரணமா சொல்லிட்டிங்க. Great தான். “அவன் வேலைக்கு அவன் விரும்புகிறவர்களை அவனே தேர்ந்தெடுப்பான்!” – உண்மை. உண்மை. சத்தியமான வார்த்தை. சிவராத்திரி விரதம் பத்தி முழுமையா நம்ம தளத்தில் படிச்சுட்டு நானும் இந்த முறை கண்டிப்பா சிவனை வழிபடனும்நு நினைச்சேன். எனக்கும் கடவுள் அருள் இருக்குன்னு தான் நினைகிறேன். எங்க ஊரில், 350 ஆண்டு பழமையான சிவன் கோவில் (அண்ணன்மார் கோவில்) உள்ளது. சனிக்கிழமை பிரதோஷம்.சிவா கோவிலுக்கு போனேன். பின்னர், நேற்றும் காலை முதல் சாப்பிடாமல் இரவு 8 மணிக்கு மேல் இங்கு கோவையில் வெள்ளிங்கிரி மலை ( எங்க ஊரில் இருந்து 40கிமீ தொலைவில் உள்ளது.) இரவு 9 மணிக்கு அங்கு சென்று 4 மணி வரை சாமி தரிசனம் முடித்து, பின்னர், ஈஷா யோகா மையம் சென்று சிறிது நேரம் இருந்தோம். பின்னர், காலை 6 மணி பூஜைக்கு, எங்க ஊரில் உள்ள கோவிலுக்கும் வந்து சேர்ந்து விட்டோம். 6.30 மணி வரை பூஜை முடிந்து, வீட்டுக்கு சென்று விட்டு, நான் எனது அலுவலகத்துக்கு ஷிபிட்ககும் வந்து, தங்கள் பதிவுகளை படித்து முடித்து, பதிலும் அனுப்பி விட்டேன். நினைச்சு பார்க்கவே
மலைப்பா இருக்கு, ஏன்னா, நேற்று இரவு என் கணவரால எங்க கூட வர முடியல. (பொண்ணுங்க மட்டும் ) நான், என் பொண்ணு (9வது படிக்கிறாள் ), அவரோட தங்கை, அண்ணி, அவங்க பொண்ணு (8வது படிக்கிறாள் ). நாங்க 5 பேர் மட்டும் 2 வண்டியில (இரு சக்கர வாகனத்தில்) இரவு நேரத்தில் தனியாவே 90 முதல் 100 கிமீ வரை பயணம் செய்து வந்து விட்டோம். இப்ப தான் முதல் முறையா துணைக்கு ஆண்கள் யாரும் இல்லாம நாங்க பொண்ணுங்க மட்டும் போய் வந்தோம். கடவுள் அருள் தானே தவிர வேற என்னன்னு சொல்ல முடியும்? மிக்க நன்றி.
இதைவிட எனக்கு வேறு மகிழ்ச்சி என்ன இருக்க முடியும்?
மிக்க நன்றி. உங்களை சிவராத்திரி விரதம் இருக்க ஒரு தூண்டுகோலாக இருந்ததன் புண்ணியம் எனக்கும் நிச்சயம் கிடைக்கும்.
யார் யாரெல்லாம் சிவராத்திரி விரதம் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் சிவபெருமானின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகிறார்கள்.
உங்கள் பரம்பரைக்கே ஒரு கவசத்தை உருவாக்கிவிட்டீர்கள்.
வாழ்க உங்கள் பக்தி.
– சுந்தர்
கண்டிப்பாக இது ஒரு மிக சிறந்த சேவை….
நேரமின்மை காரணமாக என்னால் கலந்து கொள்ள இயல வில்லை..
எங்கள் இல்லத்திற்கு அருகே உள்ள நங்கநல்லூர் சிவன் கோவிலுக்கு நானும் என் மனைவியும் சென்று அபிஷேகத்திற்கான சில பொருட்களை (பால், பன்னீர் , வில்வ இல்லை ) வங்கி குருக்களிடம் தந்து விட்டு சுவாமி தரிசனத்தை கண்டு வந்தது எங்களுக்கு மிக பெரிய மகிழ்ச்சி..
நம் தளம் மிக சிறந்த சேவையை செய்து கொண்டிருகிறது. இது மென் மேலும் தொடர என்னுடைய வாழ்த்துகள்..
எல்லோரையும் அந்த ஈசன் காத்து அருள வேண்டும்…..
PVIJAYSJEC
பார்த்தாலே முகம் சுளிக்கவைக்கும் குப்பைகளையும் கழிவுகளையும் இவ்வளவு ச்ரத்தையுடன் அகற்றி சிவனின் மனம் குளிர உழவாரப்பணி செய்திருக்கும் சுந்தர், ராஜா, மனோகரன், நாராயணன், குட்டி சந்திரன் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடு மட்டுமல்ல, கோயிலும்தான். ஆலயம் தொழுவது சாலவும் நன்று, அதைவிட ஆலயத்தை சுத்தம் செய்வது மிக மிக நன்று. ரைட் மந்தராவின் பணிகள் தொடர இறைவனை வேண்டுகிறேன்.
இது போன்ற வாய்ப்பு அளித்தமைக்கு சுந்தர்ஜிக்கு கடமைப்படவனாகிவிட்டேன் .
நன்றி ஜி.
மீண்டும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் .
மனோகரன் .
ஓம் சிவ சிவ ஓம்.
நாங்கள் ஒரு நாள் இந்த பணியை செய்ததன் இடையில், காலம் முழுதும் இந்த பணியை செய்துகொண்டிருக்கும் கோவில் ஊழியர்களை ஒரு கணம் நினைத்துப் பார்க்கிறோம்.
அவர்கள் நிச்சயம் போற்றுதலுக்குரியவர்கள்.
இப்படி ஒரு பாக்கியம் சுந்தர் மூலமாக இறைவன் எங்களுக்கு கொடுத்துள்ளார். இந்த பணி இன்னும் தொடரும் அதுவும் கூடுதல் ஆட்களோடு மேலும் சிறப்பாக வளரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
சென்னையில் இருக்கும் நம் தல வாசகர்கள் தங்கல்லால் முடிந்த வரை இந்த பணியில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்
இறைவனுக்கு தொண்டு செய்யும் வாய்ப்பு அளித்த சுந்தர் ஐயா அவர்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்து உள்ளேன்.
விவேக்
குப்பைகள் சேர காரணம் நம்முனடைய ஒவ்வருவருடைய மனம் தான். நம்முடைய அடிமை வாழ்வில் ஆங்கிலேயர் காலத்திலிருந்து நாம் “கிளெர்க்” வேலை செய்ய மட்டுமே தயார் செய்யப்பட்டுள்ளோம். மற்ற வேலைகள் பற்றி நம்முடைய சமூகத்தின் எண்ணம் தவறானது. வெளி நாடுகளில் “கழிவு மேலாண்மை”யில், எங்கோ உயர்வாக உள்ளனர். அதற்குரிய கழிவு இயந்திரங்களை உபயோகிக்கிறார்கள். எல்லாவற்ற்கும் மேல் மக்கள் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்கிறார்கள். இங்கே எல்லாம் இலவசம், இலவச இணைப்பு சோம்பேறித்தனம். பொது இடத்தில எச்சில் துப்புபவர்கள், குப்பை போடுபவர்களுக்கு தண்டனை/ அபராதம் என அறிவித்து செயல் படுத்தினால் நம் நாடு சுத்தமாகும் சிங்கபூர் போல. மக்கள் மனது மாற வேண்டும், மாற்றப்பட வேண்டும். “சிறு துளி பெருவெள்ளம்” , ஊர் கூடி தேர் இழுக்க தயாராகுவோம். எல்லாவற்ற்கும் அரசாங்கம் தான் செய்ய வேண்டும் என்றில்லை. அந்த அந்த பகுதி நல்லோர் வட்டம் / மக்கள் ஒருங்கிணைந்து உறுதி ஏற்று செயல் பட வேண்டும். இது பற்றி நாம் ஏன் சிந்திக்கக் கூடாது?
கோவில் உழவாரப்பணி என்பது நாம் நினைத்தும் செய்துவிட முடியாது…அது அந்த கடவுள் விருப்படவேண்டும் என்று நம்னுடன் உழவாரப்பணி ஆற்றிய பெரியவர் ஒருவர் கூறினார்….அது எந்தளவுக்கு உண்மை என்பது நேரிடையாக உணர்ந்தேன்….உணர்ந்தேன் என்பதைவிட உணர்ந்தோம் என்பதுதான் சரியாக இருக்கும்…
.
அப்படிப்பட்ட உழவாரப்பணி -ல் என்னையும் ஈடுபடுத்த அந்த ஈஸ்வரன் நம் சுந்தர்மூலம் என்னை பணித்தார் என்று நினைக்கும்போது என்ன சொல்வதுஎன்று தெரியவில்லை….
.
மீண்டும் இந்தமாதிரி ஒரு அற்புத சேவைக்காக காதிருகிறோம்…
.
மாரீஸ் கண்ணன்
First and foremost Hearty Thanks to Sundar anna for giving this divine oppurtunity, which is very rare to get!!
When we reached in the morning, the thought that struck my mind was is this going to be possible?there was huge amount of waste around the temple..
We separated out and started our work–By LORD SHIVA’s grace we all got an energy that we worked with full vigour and enthusiasm..
Within 2 hours we had made a remarkable change with the resources we had..That was MIND BLOWING!!
Fortunately i was also involved in diverting the crowd..Was right next to the ShivaLingam..i was wondering..have i done such good deeds that made me stand next to HIM for almost one hour?
Hundreds of people were in queue, waiting for their chance just for a few seconds to get a glimpse of VIBRANT SHIVA..but here I was right next to HIM!!Ellam ANDAVAN SEYALL!!
What else can i ask for??
No way wil any other materialistic things will equal 1% of the feeling i got there!!DEFINITELY NOT!!
One thing is sure–
There is a feeling of Satisfaction in the mind!!Thanked HIM for giving me the chance!!One of our friends said that “When we serve HIM, he becomes Indebted to us..”, ..i don want all that!!
All I want is HIS ETERNAL PRESENCE IN ma life:):)
If few of us could do miracles then just imagine the POWER if OUR WHOLE NATION AWAKENS !!!We can easily become SUPER-POWER by 2020..
HE will definitely GUIDE our NATION TO REGAIN ITS LOST GLORY!!
Though i could not make it in the evening due to avoidable/unavoidable circumstances!!Anyways It has taught me a lesson!!
Last but not Least–
Heartfelt praise and wishes for our RIGHTMATRA SUNDAR anna for his upcoming ventures!!
KEEP ROCKING!!
Regards
R.HariHaraSudan.
“HE WHO KNOWS THE SELF KNOWS ALL”
Romba sirappana kaariyathai neenga sivan arulal sethu mudichi irukinga sundar ji.
Naan en vaalkaila muthal muraiya viratham irunthu iruken. Athuvum sivarathiri viratham. Athuku thoonduthal ungaloda intha right mantra website & ungaloda pathivukal than kaaranam.
Nandri sundar ji,
சிவனருளால் நீங்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற வாழ்த்துக்கள்.
– சுந்தர்
இத்தகைய உங்களது அறிய சேவையை பாராட்ட வார்த்தைகள் இல்லை. எல்லோரையும் சிவனடியார்களாக மாற்றி விட்டீர்கள். வாழ்க வளமுடன். சிவகுமார்
வாழ்த்துக்கள் சுந்தர். எல்லாமே உங்கள் எண்ணப்படி நடந்திருக்கிறது. தொடரட்டும் உங்கள் சேவை.
சுந்தர் சூப்பர் 🙂
ரொம்ப நல்ல பணி செய்து இருக்கீங்க.. எப்படியோ இருந்து இப்படி வந்துட்டீங்க 🙂 அனைத்தும் நன்மைக்கே.
“யார் யாரெல்லாம் சிவராத்திரி விரதம் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் சிவபெருமானின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகிறார்கள்.”
நான் ஃபுல் கட்டு கட்டிட்டேன் 😀 சிங்கப்பூரில் உள்ள சிவன் கோவிலுக்கு முதல் முறையா சிவராத்திரிக்கு சென்றேன்.. பொதுவாக இப்படி எல்லாம் போக மாட்டேன். இந்த முறை நேரம் இருந்ததால் சென்று வந்தேன்.
Hi….great job done by all. I wish I was in Chennai.
I pray to GOD that he gives u all strength and blessings to continue with this kind of services.
God bless all of u .
shashi
இந்த சிவராத்திரி பணி மிக அருமை. சிவன் அருள் என் பக்கம் இன்னமும் வரவேண்டும். ( திருவேற்காடு வர இயலாதது ) better luck next time atleast to me !?