Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Sunday, October 6, 2024
Please specify the group
Home > Featured > மெரினாவில் 26 உற்சவ மூர்த்திகள் எழுந்தருளிய மாசி மக தீர்த்தவாரி!

மெரினாவில் 26 உற்சவ மூர்த்திகள் எழுந்தருளிய மாசி மக தீர்த்தவாரி!

print
25/02/2013 திங்கட்கிழமை காலை சென்னை சீரணி அரங்கில் உள்ள கடற்கரை பகுதி, பவித்திரம் பெற்றது. ஆம், சென்னை நகரில் உள்ள உள்ள பல்வேறு திருக்கோவில்களில் எழுந்தருளியிருக்கும் அந்தந்த கோவில்களின் உற்சவ மூர்த்திகள் மாசி மகத்தை முன்னிட்டு  ‘தீர்த்தவாரி’ நிகழ்ச்சியில் பங்கேற்று அருள்பாலித்தனர். மொத்தம் 26 திருக்கோவில்களில் இருந்து தெய்வங்கள் இந்த உற்சவத்திற்கு எழுந்தருளியதாக தெரிகிறது. நம் தள வாசகர்களுக்காக இந்த அறிய நிகழ்வின் புகைப்படங்கள் தரப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள புராதன கோவில்களில் எழுந்தருளியிருக்கும் பல்வேறு உற்சவ மூர்த்திகளை இதோ தரிசியுங்கள்.

ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தன்று நடைபெறும் இந்த தீர்த்தவாரிக்கு அந்தந்த திருக்கோவில்களிலிருந்து அவரவர் சௌகரியப்படி உற்சவ மூர்த்திகளை இந்த புனித நாளில் கடற்கரைக்கு கொண்டு வந்து தீர்த்தவாரி செய்வர். ஆனால் இந்த ஆண்டு பல்வேறு காரணங்களினால் ஒரே நேரத்தில் தீர்த்தவாரி செய்விக்கும்படி அறநிலையத்துறை ஆணை பிறப்பித்ததையடுத்து, அனைத்து தெய்வங்களும் ஒரே நேரத்தில் தீர்த்தவாரி செய்தனர்.

இதற்காக பல்வேறு கோவில்களில் இருந்து உற்சவமூர்த்திகளை சிறப்பாக அலங்கரித்து, கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அசுராயுதம் எனப்படும் இறைவனின் ஆயுதத்துக்கு (சூலாயுதம், வேல், ஸ்ரீ சுதர்சனர் முதலியன)  பால், சந்தனம், மஞ்சள், இளநீர், தேன், பன்னீர், உள்ளிட்டவற்றால் அபிஷேக ஆராதனைகள் செய்து, தீபாராதனைகள் காட்டி பின்னர் மூன்று முறை கடலில் முக்கி எடுத்து தீர்த்தவாரி செய்வர். இறைவேனே சமுத்திரத்தில் நீராடுவதாக ஐதீகம். இதன் முடிவில் பின்னர் பக்தர்களுக்கு தீர்த்தமும், வெள்ளரிக்காய்-தயிர்சாதம் பிரசாதமும் வழங்கப்படும்.

அனைத்து தெய்வங்களையும் ஒரே இடத்தில் காணக்கூடிய இந்த அரிய காட்சியை காண, பெருந்திரளான மக்கள் கடற்கரையில் கூடியதால் கடற்கரையே அல்லோலப்பட்டது.

இந்த ஆண்டு மாசி மகம் தீர்த்தவாரியில் திருவள்ளுவர் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும் உற்சவரான சந்திரசேகரர், உமா மகேஸ்வரி, கச்சாலீஸ்வரர், காரணீசுவரர், வெள்ளீஸ்வரர், கபாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர், வாலீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர், காரணீஸ்வரர், மல்லீஸ்வரர், வாலீஸ்வரர், வீரபத்திரர், கங்கையம்மன், திருவேற்காடு தேவி கருமாரியம்மன், அங்காளம்மன், கேசவப்பெருமாள், மாதவப்பெருமாள், பார்த்தசாரதி உள்ளிட்டக் சைவ, வைணவத் தலங்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் கொண்டுவரப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.

[box type=”tick”]

[/box] [box type=”tick”] தீர்த்தவாரியின் தாத்பரியம் என்ன?

தீர்த்தவாரியின் தாத்பரியத்தை பலர் தவறாக புரிந்துகொண்டுள்ளனர். மனிதர்களுக்கும் தரை மீது வாழும் விலங்கினங்கள் உள்ளிட்ட பிற உயிரினங்களுக்கும் இறைவனை சென்று திருக்கோவிலில் தரிசிக்க வாய்ப்புகள் உள்ளன. ஆனால், மீன் உள்ளிட்ட கடல் வாழ் & நீர் வாழ் உயிரினங்களுக்கு? இயற்கையின் விதிப்படி அவை நீரை விட்டு வெளியே வரமுடியாது அல்லவா?

எனவே அவையெல்லாம் இறைவனிடம் இது குறித்து முறையிட்டன. இறைவன் படைப்பில் தான் அனைவரும் சமமாயிற்றே. எனவே அவர்களுக்காக மனமிரங்கிய இறைவன், “என்னைத் தேடி நீங்கள் வரவேண்டாம். உங்களை தேடி உங்கள் இருப்பிடத்திற்கே வருடம் ஒருமுறை – மகத்துவம் மிக்க ஒரு நன்னாளில் – நாமே வருவோம்” என்று வரமருளினார். அந்த நாள் தான் மாசி மகம். இறைவன் வந்து கடலில் இறங்கி கடல்வாழ் உயிரினங்களுக்கு தரிசனம் தரும் அந்த நிகழ்வே “தீர்த்தவாரி” என்றழைக்கப்படுகிறது.

[/box]

சமுத்திரம் இருக்கும் ஊரில் இறைவனை சமுத்திரத்தில் எழுந்தருளச் செய்வர். சமுத்திரம் இல்லாத ஊரில் அந்த ஊரில் நதி ஏதேனும் இருக்குமானால் நதியில் தீர்த்தவாரி செய்வர். அதுவும் இல்லாவிடில், அந்த ஊரில் உள்ள கோவில் திருக்குளத்தில் தீர்த்தவாரி செய்வர். இந்த நிகழ்வின் மூலம் நீரில் வாழும் உயிரனங்களும் இறைவனை தரிசித்து மகிழ்வதாக ஐதீகம்.

இதேபோல, மனிதர்களின் ஜீவிதத்திற்கு ஆதாரமாக விளங்கும் நெல்மணியும் ஒரு சமயம் குறைப்பட்டுக்கொண்டதாம். “மனிதர்கள் உண்டு உயிர் வாழ எங்களையே அற்பணிக்கிறோம். எங்கள் உமி முதல் அனைத்தும் பயன்தருகின்றன. ஆகையால் தேவரீர் தங்களை தரிசிப்பதில் எங்களுக்கு ஏதேனும் சிறப்பு செய்யவேண்டும்” என்று கேட்டுக்கொண்டனவாம். அவற்றுக்கு சிறப்பு செய்யவே ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேக வைபவம் நடைபெறுகிறது. அன்னம் இறைவனுக்கே போர்வையாக இருக்கிறபடியால் அதன் அருமை உணர்ந்து அனைவரும் அதை போற்ற வேண்டும்.

இந்த பதிவில், சுவாமி புறப்பாடு ஆரம்பித்து, தீர்த்தவாரி நடைபெற்று, மறுபடியும் கோவில் நடைக்கு திரும்புவது வரை அனைத்து புகைப்படங்களும் இடம்பெற்றிருக்கின்றன. இந்த மகத்தான மாசி மகம் நன்னாளில் அனைத்து திருக்கோவில் உற்சவ மூர்த்திகளும் தீர்த்தவாரிக்கு எழுந்தருளியிருக்கும் புகைப்படங்களை ஒருங்கே காண உங்கள் பாக்கியம் தான் இந்த எளியவனையும் இந்த நிகழ்வுக்கு கருவியாக்கின என்றே கருதுகிறேன்.

அனைவருக்கும் நன்றி!

[END]

12 thoughts on “மெரினாவில் 26 உற்சவ மூர்த்திகள் எழுந்தருளிய மாசி மக தீர்த்தவாரி!

  1. மாசி மகம் நேரில் தரிசனம் கண்டு ரசித்தது போல் உணர்வு உணர்ந்தேன் …….

    நன்றிகள் பல …..

    மனோகரன் .

  2. யான் பெற்ற இன்பம் வையகம் பெருக என்று தாங்கள் அனுப்பிய புகைப்படங்கள் நேரில் பார்த்தார் போல உள்ளது . வாழ்க வளமுடன்

  3. தீர்த்தவாரிக்கு இப்படி ஒரு மிக அருமையான அர்த்தம் உள்ளது இப்பொழுது தான் தெரிந்து கொள்ள முடிந்தது தகவலுக்கு மிக நன்றி.

    புகைப்படங்கள் மிகவும் அருமை,கடற்கரை சென்று இறைவனை தரிசிக்க முடியாதவர்கள் இந்த தளத்தின் மூலம் தரிசிக்க நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்து உள்ளீர்கள்

  4. நீங்கள் அறிந்ததை நாங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் எடுத்த இம்முயற்சிக்கு முதலில் என் நன்றிகள் …! புகைப்படங்கள் ஒவ்வொன்றும் நேரில் கண்ட அனுபவத்தை தருகின்றன …!

    வெறும் புகைப்படங்கள், நிகழ்வுகள் மட்டுமில்லாமல், அந்தந்த நிகழ்வுகளுக்கான காரணங்கள், விளக்கங்கள் ஆகியவற்றையும் சேர்த்துத் தருவது ஆன்மீகத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள உதவுகிறது ..! நன்றி….!

    ” கடமையைச் செய்; பலனை எதிர்பார்”

    விஜய் ஆனந்த்

  5. மாசி மகம் அப்படின்னா கோவை – ல காரமடை தேர் நடக்கும். அது மட்டும் தான் தெரியும். நம்ம தளத்தில் ஒவ்வொரு பதிவிலும் ஒரு புது செய்தி சொல்லி கொடுக்குது சுந்தர். உங்க நல்ல மனசுக்கு நீங்க ரொம்ப நல்லா இருக்கணும்.

    1. என்னை உற்சாகப்படுத்தும் வகையில் உங்கள் நேரத்தில் சற்று ஒதுக்கி இங்கு கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
      – சுந்தர்

  6. ஒரு ஆன்மீக நிகழ்வின் புகைப்படைத்தை வெறுமனே அளிக்கலாமல் அதை கண்முன்னே நடக்கும்படி பதிவு செய்துளீர்கள். அதுமட்டும் அல்லாமல் இந்த மாசி மகத்தின் உண்மையான அர்த்தம் இதுதான் என்று இந்த பதிவை படிக்கும்வரை என்னக்கு தெரியாது…..ஒவ்வொரு பதிவிலும் ஒரு தனித்துவம் தெரியும்படி செய்துளீர்கள்…
    .
    மாரீஸ் கண்ணன்

  7. புகைப்படங்கள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது !!!
    நேரில் சென்றிருந்தாலும் இந்த அளவுக்கு மனநிறைவுடன் தரிசனம் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே !!!
    வாசகர்களுக்கு கோடானு கோடி புண்ணியத்தை இருப்பிடம் தேடி கொண்டு வந்து சேர்த்தமைக்கு எவ்வளவு நன்றி கூறினாலும் தகும் !!!
    தொடர்க உங்கள் இறைப்பணி !!!
    வாழ்க வளமுடன் !!!

  8. அருமையான பதிவு … காண கிடைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி …நன்றி சுந்தர்

  9. வீட்டில் இருந்த படியே மாசிமாக தீர்த்தவாரி கண்டு களிக்க வாய்ப்பளித்த rightmantra.com தளத்திற்கு நன்றி. படங்கள் யாவும் மிக அருமை.

    நாராயணசாமி

  10. என்ன தவம் செய்தேன், இத்தகைய காட்சிகளை இறைவன் தரிசனத்தை காண கண் கோடி வேண்டும்;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *