Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, September 12, 2024
Please specify the group
Home > Featured > மலையை பிளந்த ஒற்றை மனிதன் – ‘முடியாது’ என்கிற வார்த்தையை இனி நாம் சொல்லலாமா?

மலையை பிளந்த ஒற்றை மனிதன் – ‘முடியாது’ என்கிற வார்த்தையை இனி நாம் சொல்லலாமா?

print
நீங்கள் படிக்கப்போகும் இந்த பதிவு வாழ்க்கை குறித்த எனது கண்ணோட்டத்தையே புரட்டிப்போட்ட ஒன்று. இப்படியும் மனிதர்கள் – சாதனையாளர்கள் – இந்த மண்ணில் வாழ்ந்திருக்கிறார்களா? அதுவும் வெகு சமீபத்தில்….? நம்பமுடியாத ஆச்சரியம் தான். நமது பிடறியில் அடித்து நமக்கு விடுக்கும் சவால் விடுவது போன்று இருந்தது.

“மாபெரும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டவை வலிமையினால் அல்ல… விடா முயற்சியினால்!” என்னும் புகழ் பெற்ற மேற்கோளை நான் அடிக்கடி பயன்படுத்துவதுண்டு. அதன் அர்த்தத்தை முழுமையாக இப்போது தான் புரிந்துகொண்டேன்.

இந்த பதிவை மேற்கொண்டு தொடர்வதற்கு முன்பு, அவசியம், இதன் முந்தைய பகுதியான உயர்நீதிமன்ற நீதிபதி திரு.எம்.எம்.சுந்தரேஷ் அவர்கள் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் அளித்த பட்டமளிப்பு விழா பேருரை பற்றிய பதிவை படித்துவிட்டு பின்னர் இந்த பதிவை படிக்கவும்.

http://rightmantra.com/?p=2976

இப்படி ஒரு சாதனையாளரை பற்றி கல்லூரி விழாவில் பேசி அவரை பற்றி நாம் தெரிந்துகொள்வதற்கு காரணமாக இருந்த நீதிபதி அவர்களுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது.

மலையை பிளந்த அந்த மாமனிதனை பற்றி விரிவாக பார்ப்போமா?

பாவம் பெரிசுக்கு பைத்தியம் முத்திடிச்சு போல….

பீகாரில் உள்ள கயா அருகே ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்தவர் தசரத் மஞ்சி. அவர்களது ஊர் எல்லையிலிருந்து சில கி.மீ. தூரமே உள்ள அடுத்த ஊருக்கு செல்லவேண்டும் என்றால் 70 கி.மீ. சுற்றி தான் செல்லவேண்டும். காரணம் அவரது ஊரையொட்டி உள்ள அத்திரி மற்றும் வாஸிர்கஞ்ச் ஆகிய பகுதிகளுக்கு இடையே உள்ள மலை தான்.

பீகாரில் 40 வருடங்களுக்கு முன்பு ஒரு கிராமம் இருந்த நிலை பற்றி சொல்ல வேண்டுமா? அரசாங்கத்திடம் எத்தனையோ முறை இது பற்றி சொல்லியும் ஒரு சாலை அமைத்து தரும்படி மனு அளித்தும் பலனில்லை.

இதற்கிடையே ஒரு நாள் தசரத் மஞ்சியின் மனைவி எதிர்பாராத விதமாக நோய்வாய்ப்பட்டார். அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு செல்லவேண்டுமென்றால் மலையை சுற்றி சுமார் 70 கி.மீ தூரத்தை கடந்து செல்லவேண்டும் என்பதால் மஞ்சியால் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லமுடியவில்லை. எனவே அவரது மனைவி சரியான நேரத்தில் உரிய சிகிச்சை கிடைக்காமல் பரிதாபமாக இறந்துவிட்டார்.

மனைவியின் மரணம் மஞ்சியை மிகவும் பாதித்துவிட, இனி இப்படி ஒரு நிலை தனது ஊரில் எவருக்கும் வரக்கூடாது என்று எண்ணி, தனது ஆடு மாடுகளைகளை விற்று சுத்தியல், உளி, கடப்பாரை, மற்றும் கயிறு ஆகியவற்றை வாங்கிக்கொண்டு மலையை உடைக்க ஆரம்பித்தார். மலையை வெட்டி வழி ஏற்படுத்துவது தான் இவரது நோக்கம்.

“பாவம்… பெரிசுக்கு பைத்தியம் முத்திடிச்சு போல” என்று ஊர் மக்கள் அவரை ஏளனம் செய்தனர். ஆனால் தசரத் மஞ்சி அது பற்றி கவலைப்படவில்லை. தான் பாட்டுக்கு மலையை உடைக்க ஆரம்பித்தார்.

1960 இல் ஆரம்பித்து 1982 வரை சுமார் 22 ஆண்டுகாலம் தொடர்ந்து மலையை சிறிது சிறிதாக உடைத்து கடைசியில் 360 அடி நீள, 26 அடி உயர மலையை தனி ஆளாக வெட்டி, அதில் 30 அடி அகல சாலையையும் ஏற்படுத்திவிட்டார்.

இதன் மூலம் அத்திரி மற்றும் வாஸிர்கஞ்ச் ஆகிய ஊர்களுக்கு இடையே இருந்த 70 கி.மீ. நெடுந்தூரம் தூரம் ஜஸ்ட் 1 கி.மீ. தூரமாக குறைந்தது.

அது வரை அவரை ஏளனம் செய்துகொண்டிருந்த அவ்வூர் மக்கள் பின்னர் இவரை காவல் தெய்வமாக கொண்டாட ஆரம்பித்தனர். ‘மலை மனிதர்’ என்றும் இவருக்கு பெயர் ஏற்பட்டது.

“நான் மலை சம்மட்டியாலடிக்க தொடங்கிய போது, மக்கள் என்னை ஒரு பைத்தியம் என்றனர். அந்த வார்த்தைகள் எனக்கு உறுதியைத் தான் தந்தனவே தவிர என் உறுதியை குலைக்கவில்லை நானும் அதற்கு இடம் கொடுக்கவில்லை!” என்கிறார் மஞ்சி.

பீகார் முதல்வர் நிதீஷ் குமாரின் ஜனதா தர்பாரின் போது அவரை சந்தித்தார் மஞ்சி. நிதீஷ் குமார் இவரது சாதனையை பற்றி கேள்விப்பட்டு தான் உட்கார்ந்திருந்த நாற்காலியில் இருந்து எழுந்து இவரை அதில் உட்கார வைத்தாராம்.

பின்னர் பீகார் மாநில அரசு சார்பாக இவருக்கு 5 ஏக்கர் இலவச நிலம் வழங்கப்பட்டது. ஆனால் மஞ்சி அதை தனது ஊருக்காக மருத்துவமனை கட்ட நன்கொடையாக கொடுத்துவிட்டார். அம்மருத்துவமனைக்கு இவரது பெயரையே மாநில அரசு பிற்பாடு சூட்டிவிட்டது.

2007 ஆம் ஆண்டு கணையத்தில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக தசரத் மஞ்சி அவஸ்தைப் பட…. அவருக்கு பீகார் அரசின் செலவில், தலைநகர் தில்லியில் உள்ள ஏ.ஐ.ஐ.எம்.எஸ். மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி மஞ்சி இறந்துவிட, அவரது உடல் பீகார் கொண்டுவரப்பட்டு முழு மாநில அரசு மரியாதையோடு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டது.

தான் பிறந்து வளர்ந்த ஊருக்காக தன்னையே அர்பணித்துக்கொண்ட இந்த மாவீரனுக்கு ஒரே ஒரு மகனும் மருமகளும் தான் இருக்கின்றனர். அவர்களும் உடல் ஊனமுற்றவர்கள். வறுமையை தவிர அவர்களுக்கு வேறு சொத்து எதுவும் இல்லையாம்.
——————————————————————————————————-
(FAITH CAN MOVE MOUNTAINS) நம்பிக்கை மலையையும் நகர்த்தும் என்பார்கள். ஆனால் இங்கே அது ஒரு மலையையே உடைத்து தூள் தூளாக்கிவிட்டது.

ஒரு செயலை செய்யாமல் இருப்பதற்காக ஆயிரம் காரணங்களை சமாதானங்களை அடுக்கும்  நாம், மஞ்சியின் மலையை புரட்டும் செயலை எண்ணிப் பார்க்கவேண்டும்.

எப்படி பார்த்தாலும் ஒரு தனி மனிதனால் இது நிகழ்த்தப்பட்டது என்பதை நம்பவே முடியவில்லை அல்லவா?

அடுத்த முறை ஏதேனும் ஒரு செயலில் இறங்கும்போது “இது நம்மால் முடியுமா?” என்கிற மலைப்பும் அவநம்பிக்கையும் உங்களுக்கு ஏற்பட்டால், பெரியவர் தசரத் மஞ்சியின் முகம் உங்கள் நினைவுக்கு வரவேண்டும்.

மற்றதை உங்கள் மனசாட்சி பார்த்துக்கொள்ளும்!

——————————————————————————————————-
மஞ்சியின் வாழ்க்கை சொல்வது இது மட்டும் தானா? அவர் ஒரு பெரிய பல்கலைக் கழகம் சார்.

அடுத்து….

மஞ்சியின் சாதனையிலிருந்து நாம் கற்றுகொள்ளவேண்டியது என்ன என்பது பற்றி விரிவாக பார்ப்போம்.
——————————————————————————————————-

21 thoughts on “மலையை பிளந்த ஒற்றை மனிதன் – ‘முடியாது’ என்கிற வார்த்தையை இனி நாம் சொல்லலாமா?

  1. பிரமாதம் சுந்தர். மலை மனிதனைப் பற்றி படித்து விட்டு சிலை ஆனேன். வாவ். மலைக்க வைத்து விட்டார். முடியாதது எனபது இனி இல்லவே இல்லை என்பதை ஆணித்தரமாக சொல்லி விட்டீர்கள். நன்றி.

  2. சுந்தர், இவரின் வீடியோ கிளிப்பிங்க்ஸ் நான் ஏற்கனவே பார்த்திருக்கேன். இருப்பினும் தங்கள் பதிவில் வாசிக்கும் போது மனதில் இருந்து நீங்காது. தசரத் மஞ்சி வாழ்கையில் மறக்க முடியாதவர்.

    22 ஆண்டுகள் ஒரு தனி மனிதன் உழைப்பை அரசாங்கம் வேடிக்கை பார்த்து கொண்டிருப்பது நமது நாட்டில் தான் நடக்கும். தசரத் மஞ்சியின் செயல் ‘ முடியாது என்று ஒன்று இல்லை ‘ என்பதை நமக்கு உணர்த்துகிறது.

  3. முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை ,முயற்சி திருவினையாக்கும் போன்ற பொன்மொழிகள் ஏன் வந்தது என்று அர்த்தம் இப்பொழுது புரிகிறது

  4. Pain makes/creates/transfers ordinary human into an extra-ordinary being.
    ***
    As a great personality said, “Good will and thoughts are need not be possessed by everyone henceforth, its there in every one of us – just we have to realize it”.

    And this man did and evolved into a phenomenon. And I was so moved by this story of success happened merely by persistence and focus and patience. As I was searching with more obsessiveness for some more, some more, some more the greater heightened acts of self-confidence, this man’s story came exactly by God’s powerful act.
    ***
    And whatever the exemplary people and their histories for the extra-ordinary successes I came across so far, this too will be added as one with them.
    ***
    I am very grateful for you – for bringing such a wonderful man’s story to us.
    ***
    **Chitti**.
    Thoughts becomes things.

  5. அருமையான இதுவரை பலரும் அறிந்திராத பதிவு..முதலில் உங்கள் முயற்சிக்கு நன்றி..!

    தசரத் மஞ்சி அவர்களின் செயல் மூலம் ஒன்றை தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது..வெற்றி என்பது வெறும் உழைப்பினால் மட்டும் வருவது அல்ல..”விடாமுயற்சி+ பொறுமை + உழைப்பு + அறிவு + எல்லாவற்றையும் விட சகிப்புத்தன்மை” இவைகளின் கூட்டுப்பலன் தான் வெற்றி..!

    மலையை குடைய வேண்டுமானால் அதன் உயரம், சுற்றளவு, எங்கு ஆரம்பித்து எங்கு, எப்படி முடிக்க வேண்டும் என்பது போன்ற “அறிவு” இல்லாமல் ஆரம்பித்தால், இறுதியில் மொத்த உழைப்பும் வீணாகி இருக்கும்…! மலையை உடைக்க ஆரம்பித்த பொழுது ஏளனமாய் பேசியவர்களின் வார்த்தைகளை “சகித்துக் கொண்டதால்” தான் சாதிக்க முடிந்தது…மலைகள் என்றால் எத்தனையோ இயற்கை இடர்பாடுகள் இருக்கும்…அதையும் தாங்கிக்கொண்டு “விடாமுயற்சியுடன்” உடைத்ததால் தான் வெற்றி காண முடிந்தது..மலை என்பது எவ்வளவு பெரியது…அதைக்கண்டு மலைக்காமல் “பொறுமையுடன்” 22 வருடங்கள் “உழைத்ததால்” சாதிக்க முடிந்தது…!

    ஆகவே, பொறுமையுடன் கூடிய விடாமுயற்சியும், அறிவுடன் சேர்ந்த உழைப்பும், சகிப்புத்தன்மையும் இருந்தால் வெற்றி நம் வசமே…!

    “கடமையைச் செய்; பலனை எதிர்பார்”

    விஜய் ஆனந்த்

  6. நம்ப முடியாத நம்பகமான, ,நம்பிக்கை ஏற்படுத்தும் பதிவு… சூப்பர் ணா..

    -ஜி.உதய்

  7. “FAITH IS GOD”..
    Astonished by the will power of munshi ji..can any one have that much will power?22 years is not a small period..its 8030 days.. 1,92,720 hours…11.56 million minutes..693.792 million seconds…!!giving these facts to HIGHLIGHT that this Legend has shown us the way to create our destiny!!

    When Munshi ji can control his mind…I am Sure mind played a big part in his life because without superiority over mind THIS HIMALAYAN FEAT is not possible..WHY cant WE control and SAVE OUR NATION from the EVILS..WE CAN!!WE SHOULD..IT IS OUR DUTY TOO!!

    When educated people give up so easily HOW could dis legend ACHIEVE such a feat?..
    NO ONE in the UNIVERSE would dare to even TRY this kind of feat again..!!I ll be glad if someone proves me wrong!!

    Feeling ashamed of NOT being able to meet this EXTRAORDINARY PERSON!!but I am sure HIS SOUL will guide all the people who are putting up a BRAVE FIGHT to reach their goals and Lead a meaningfull life…

    Palam Iyya ,Elangovan sir,Ms Prema, Munshi Ji..WHOSE NEXT??!!Only U can answer SUNDAR ANNA..

    One thing anna..
    UR EFFORTS WON GO WASTE!!
    It will CHANGE OUR NATION–Time will tell!!

    Impressed by the GROWTH of our website..
    Lots of things to write…but i guess dis is enough for now..

    Regards
    R.HariHaraSudan..
    “HE WHO KNOWS THE SELF KNOWS ALL”..!!

  8. இதை படிக்கும் எவருக்கும் விட முயற்சியும் தன்னம்பிக்கையும் வளர்ந்து விடும் . சூப்பர் பதிவு.

  9. இவர்களை போன்ற சரித்திர சாதனையளர்கள் செய்யும் மிக பெரிய சாதனை ஏன் வெளி உலகிற்கு தெரியவில்லை என்ற கேள்வி எழுகிறது?

    ஒரு இந்தியன் எங்கு சாதனை செய்தாலும் கின்னஸ் போன்ற புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை ஆனால் அவர்களை பற்றிய செய்தி ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கை மூலமாவது வெளி உலகிற்கு தெரிய வேண்டும்…

    இவரை பற்ற நினைக்கும்போது என் நினைவிற்கு வருவ தெல்லாம்

    “Most of the important things in the world have been accomplished by people who have kept on trying when there seemed to be no hope at all.”

    முயற்சி திருவினையாக்கும்…

    இந்த செய்தி நம் தளத்தில் வெளிவந்தது மிகவும் மகிழ்ச்சி…

    PVIJAYSJEC

    1. மனசாட்சியை உலுக்கி எழுப்பிவிடுமோ என்கிற அச்சாத்தாலேயே பலர் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ளவிரும்புவதில்லை. தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களை எப்படியோ ஏதோ ஒரு ரூபத்தில் இது போன்ற செய்திகள் சென்று சேர்ந்துவிடும்.

      – சுந்தர்

  10. தனக்கு கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விட தன்னுடைய உழைப்பின் மதிப்பை உயர்த்திக் காட்டும் மனிதந்தான் சமூகத்தில் முன்னேற முடியும்!
    -ஆபிரஹாம் லிங்கன்.

    சரியானது எது என்று உணர்ந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதுதான் மகா கோழைத்தனம்!
    – கன்பூசியஸ்.

    தொண்ணூற்றொம்பது சதவிகித உழைப்பும், ஒரு சதவிகித உள்ளக்கிளர்ச்சியும் சேர்ந்ததுதான் மேதைத் தன்மை எனப்படுவது!
    -தாமஸ் ஆல்வா எடிசன்.

    தன்னம்பிக்கை இருந்தால் தைரியம் தன்னால் வரும்!
    -எமர்சன்.

    வரலாற்றைப் படைக்கும் மனிதர்கள் அதை எழுத அவகாசம் எடுத்துக் கொள்வதில்லை.
    -மேட்டர்னிக்.

    பிரச்சினைகளையும் நோய்களையும் சமாளித்து வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையே அனைத்தையும் வெற்றிகரமாக மாற்றித்தரும்.
    – ஹெச்.ஷீல்லர்.

    முன்னேற்றத்தை நோக்கி அது எத்தனை சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை, ஒரு அடி எடுத்து வையுங்கள்.
    நெப்போலியன் கில்.

    எல்லாம் போய் விட்டது என்று சோர்ந்து போய் விடாதீர்கள்.எந்த மனிதனாலும் வெல்ல முடியாத மன வலிமை இருக்கிறது. அதை மூலதனமாக வைத்துக் கொண்டு உழையுங்கள். வளம் பெறலாம்.
    -மில்டன்.

    பேனாவைக் கையில் பிடித்தவர்களெல்லாம் புத்திசாலிகளில்லை. பிடிக்காதவர்களெல்லாம் முட்டாள்களுமில்லை.
    -ஸாமுவேல் ஜான்சன்.

    1. நன்றி. நன்றி. அனைத்தும் அருமை.

      நீங்கள் அளித்தவற்றுள் எனக்கு மிகவும் பிடித்தது மேட்டர்னிக் அவர்கள் சொல்லியிருப்பது தான்.

      – சுந்தர்

  11. தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்

  12. “மாபெரும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டவை வலிமையினால் அல்ல… விடா முயற்சியினால்!”

    உண்மையான வார்த்தைகள் சுந்தர் சார் ..

    “நான் மலை சம்மட்டியாலடிக்க தொடங்கிய போது, மக்கள் என்னை ஒரு பைத்தியம் என்றனர். அந்த வார்த்தைகள் எனக்கு உறுதியைத் தான் தந்தனவே தவிர என் உறுதியை குலைக்கவில்லை நானும் அதற்கு இடம் கொடுக்கவில்லை!

    மலை மனிதரை வணங்குகிறேன் …..

    சரியானது எது என்று உணர்ந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதுதான் மகா கோழைத்தனம்!
    – கன்பூசியஸ்.

    நன்றி மனோகரன் அவர்களே…

  13. அருமை உடைத்தென்று அசவாமை வேண்டும்
    பெருமை முயற்சி தரும் …குறள்

    ‘Nothing is impossible …’ we should have this mindset. if we approach any issue with this mindset and make committed & sincere efforts ,in the long run things will fall in place and we will automatically reach our goal.. further such selfless efforts only add meaning to our life….

  14. மனது வைத்தால் எதுவும் முடியும் என்பதற்கு இந்த உண்மை கதை ஒரு சான்று

  15. சுந்தர், எங்கள் அலுவலகத்தில் விஷன் என்ற தலைப்பில் நாங்கள் இவரின் சாதனையை RLELENTLESS PURSUIT OF EXCELLENCE என்ற மூல கூறு (core vlaues) பதிவில் எங்கள் பணியாளர்களுக்கு எடுத்து உரைக்கிறோம். ஒரு சாமான்ய மனிதனின் மாபெரும் தவம் இவரின் வாழ்க்கை. அதனால் தான் உலகம் இன்றும் அழியாமல் இருக்கிறது

  16. I become a fan follower of God, “Dasrath Manjhi” after reading this. This article travels deep into our conscious and prepares us for self-realization. We, as humans are strong in finding reasons/excuses for being impossible rather than making it possible in our life/attitude.

    Amazed at this Super-Human Dasrath Manjhi & his work. Loss of words! I bow down at his feet to give us strength& courage.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *