நம் நாடு எத்தனையோ சக்கரவர்த்திகளை, சரித்திர புருஷர்களை கண்டிருக்கிறது. அவர்களில் மிகச் சிறந்தவர்களுள் ஒருவராக போற்றப்படும் மாவீரன் சத்ரபதி சிவாஜி அவர்களின் பிறந்த நாள் இன்று.
மகாராஷ்டிர மாநிலம் பூனா அருகே உள்ள சிவனேரி கோட்டையில், 1627 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி ஒரு சாதாரண சிப்பாயின் மகனாக பிறந்தார் சிவாஜி. தனது சர்வ வல்லமையால் ஒரு மாமன்னனாக உருவெடுத்தார். வீரதீரத்தோடு வளர்ந்த இவர் மகாராஷ்டிரத்தையே ஓர் இந்து சாம்ராஜ்யமாக மாற்றிக் காட்டினார். தன்னை எதிர்த்து வந்தவர்களையெல்லாம் புறமுதுகிட்டு ஓடச்செய்தார்.
மராட்டிய மன்னராக இருந்த இவரது ஆட்சிக்காலம் இந்திய வரலாற்றில் பொற்காலமாக கருதப்படுகிறது. தனது வலுவான கப்பல் படை மூலம் பல கோட்டைகளை கைப்பற்றினார். உள்துறை, வெளியுறவுத்துறை, மந்திரி சபை போன்ற நவீன அமைப்புகள் சிவாஜி ஆட்சிகாலத்திலேயே உருவாக்கப்பட்டிருந்தன. இவரது ஆட்சியில் ராணுவம் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டது. அன்னியர் ஆட்சியை எதிர்க்கும் போர் என்றவுடன் நம் நினைவுக்கு வருபவர் வீர சிவாஜி தான். தான் வாழ்ந்த காலத்தில் தன்னைவிட படையிலும் வீரத்திலும் பலம் குறையாத ஒளரங்கசீப்பை எதிர்த்த துணிச்சல்காரர் மாமன்னர் சத்ரபதி சிவாஜி.
வாழ்நாள் முழுதும் போராட்ட மயமான ஒரு வாழ்க்கையே சிவாஜி வாழ்ந்துவந்தார். தன இறுதி மூச்சு உள்ளவரை அந்நியர்களை எதிர்த்துப் போரிட்டு வாழ்ந்த தியாகி சத்ரபதி சிவாஜி.
சிவாஜியை ஒரு வெற்றிகரமான சக்கரவர்த்தி மட்டுமல்ல நற்குணங்கள் ஒருங்கே பெற்ற ஒரு குணக் குன்று. சிவாஜியின் வரலாற்றை படிக்கையில் அவரது அன்பு, வீரம், பாசம், ராஜதந்திரம் அத்தனையும் நம்மை பிரமிக்க வைக்கும்.
சென்னையில் பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு சிவாஜி வந்து சென்றிருக்கிறார். தனது போர் வாளை அன்னை காளிகாம்பாளிடம் வைத்து பூஜை செய்ததாக கூறப்படுகிறது. அது குறித்த கல்வெட்டு காளிகாம்பாள் கோவிலில் இன்றும் உள்ளது.
அவருக்கு குருவாக இருந்து நல்வழி காட்டியவர் ஸ்ரீ சமர்த்த ராமதாசர். சிவாஜியை பல முறை பல இக்கட்டுக்களிளிருந்தும் ஆபத்துக்களிலிருந்தும் சமர்த்த ராமதாசர் காப்பாற்றியிருக்கிறார். ராமதாசரின் வேண்டுகோளுக்கிணங்க சாட்சாத் பாண்டுரங்கனே ஒரு முறை சிவாஜி போல வேடம் புனைந்து எதிரிகளுடன் போரிட்டிருக்கிறான் என்றால் சிவாஜியின் குரு பக்தி எந்தளவு உயர்ந்ததாய் இருந்திருக்க்கும் என்று பார்த்துக்கொள்ளுங்களேன்.
அவரது வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு சிலிர்க்க வைக்கும் சிந்திக்க வைக்கும் சம்பவத்தை பார்ப்போம். சிவாஜியின் வீரத்தையும் ஆண்மையையும் இது பறைசாற்றும்.
சுல்தானின் மனைவியை சிறைபிடித்த சிவாஜியின் வீரர்கள்!
சிவாஜியின் படைகள் ஒரு முறை ஒரு பிராந்தியத்தை கைப்பற்ற நடைபெற்ற போரில் அதை ஆண்டு வந்து சுல்தான் ஒருவனை தோற்கடித்தன. அவனது கோட்டையையும் கைப்பற்றின.
அப்போதெல்லாம் யுத்தத்தில் வெற்றி பெற்றால் சம்பந்தப்பட்ட பட்டத்து இளவரசிகளையும் ராணிகளையும் கவர்ந்து சென்றுவிடுவார்கள். வெற்றி பெறும் மன்னனோ சுல்தானோ விரும்பினால் அவளை அவனுக்கு விருந்தாக்கிவிடுவார்கள். இங்கே சிவாஜியின் படை வெற்றி கொண்ட சுல்தானின் மனைவி பேரழகி. அவளது அழகு அந்த பிராந்தியத்திலேயே மிகவும் பிரசித்தம். எனவே சிவாஜியின் படைத் தளபதி மற்றும் வீரர்கள் தம் மன்னனின் மனமும் உடலும் குளிரட்டும் என்று எண்ணி, அவளை சிறைபிடித்து கடுங்காவலுக்கிடையே பல்லக்கில் ஏற்றி அவளை கொண்டு வந்து அவள் தப்பிக்க முடியாதபடி சிவாஜியின் அந்தப் புறத்திற்கு வெளியே விட்டுவிடுகின்றனர்.
அன்றிரவு தூங்கச் செல்லும் சத்ரபதி சிவாஜி, தனது அறைக்கு வெளியே பல்லக்கு இருப்பதை பார்த்து, “பல்லக்கில் இருப்பது யார்?” என்று தனது தளபதியிடம் கேட்க, “மன்னா இவள் சுல்தானின் மனைவி. பார் போற்றும் பேரழகி. இவள் அழைகை கண்டு மயங்காதவர்களே இந்த பிரதேசத்தல் இருக்க முடியாது. எனவே இன்றிரவு இவளை உங்களுக்கு விருந்தாக்கலாம் என்று எண்ணியே இங்கே கொண்டு வந்தோம்” என்று கூறுகிறான்.
சிவாஜி நேரே பல்லக்கு அருகே செல்கிறார். பல்லக்கின் திரைச் சீலையை விலக்கி பார்க்கிறார்… ஏற்கனவே அச்சத்தில் இருந்த சுல்தானின் மனைவி மருண்ட விழிகளோடு சிவாஜியை பார்க்கிறாள்.
சிவாஜியோ, “அம்மா…. நீங்கள் உண்மையில் மிகவும் அழகு தான். உங்கள் வயிற்றில் ஒருவேளை நான் பிறந்திருந்தால் நானும் அழகாக பிறந்திருப்பேன்….!” என்று கூறுகிறார். சிவாஜியின் தளபதி முதல் படைவீரர்கள் வரை அனைவரும் வெட்கித் தலைகுனிகின்றனர். சுல்தானின் மனைவி அந்த வீரமகனை. கையெடுத்து கும்பிடுகிறாள்.
தனது தளபதியை சினந்துகொண்ட சிவாஜி, “பெண்கள் நம் நாட்டில் தெய்வமல்லவா? இப்படி ஒரு காரியத்திற்கு எப்படி துணிந்தீர்கள்? பொன்னாசை, மன்னாசையைவிட கொடியது பெண்ணாசை. மாபெரும் சாமாராஜ்ஜியங்களையே இது தரை மட்டமாக்கியிருக்கிறது. இனி இப்படி ஒரு இழி செயலை கனவிலும் செய்யத் துணியாதீர்கள். முதல் வேலையாக இவர்களை கொண்டு போய் இவர் விரும்பும் இடத்தில் விட்டுவிட்டு வாருங்கள்” என்று கட்டளையிடுகிறார்.
இந்த உலகில் உள்ள மக்கள் பெரும்பாலானோர் இரண்டே வகைகளில் அடங்கிவிடுவர். 1) கெட்டவர்கள் மற்றும் 2) சந்தர்ப்பம் கிடைக்காத நல்லவர்கள்.
எந்த சூழ்நிலையிலும் குணம் மாறாது நல்லவர்களாக இருப்பவர்கள் மிக மிக அரிது.
நாம் என்றும் எந்த சூழ்நிலையிலும் நல்லவர்களாக மட்டுமே இருப்போம். திருவருள் துணை புரியட்டும்.
[END]
///கெட்டவர்கள்… அப்புறம் சந்தர்ப்பம் கிடைக்காத நல்லவர்கள் .///
உண்மை
சுந்தர் சார் , மிகவும் அருமையான வரிகள் . இரண்டு வகை மக்கள் . 1. கெட்டவர்கள் , 2. சந்தர்பம் கெடைக்காத நல்லவவர்கள் . மிக மிக நன்று .
“இந்த உலகில் மக்கள் இரண்டே வகை தான். கெட்டவர்கள்… அப்புறம் சந்தர்ப்பம் கிடைக்காத நல்லவர்கள் .”
மனசாட்சிப்படி நடந்தாலும் இறைவன் நம்மை பார்கிறான் என்ற அச்சமும் இருந்தால் தவறு செய்ய வாய்ப்பில்லை.
நாம் என்றும் எந்த சூழ்நிலையிலும் நல்லவர்களாக மட்டுமே இருப்போம்.
அப்படி செய்ததால் தான் இன்றும் அவர் யாராலும் மறக்கபடாமல் இருக்கிறார் அது தான் உண்மையான வீரனுக்கு அழகு
அருமையான செய்தி !!!
பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி சுந்தர்ஜி !!!
சரித்திரம் பேசும் உண்மை மிகவும் வியக்கத்தக்கது..
அருமை…
தொடரட்டும் சுந்தர்ஜி ராஜ்யம் …..
மனோகரன் .
Nam thalaivanum Maveran dhan…
Sandharpam kidaithum Maradha Mamanidhar…(For Politics)…
நல்ல பதிவு . அருமையாக உள்ளது
தொடரட்டும் உங்கள் பயணம்
அன்பரே, தங்கள் தளத்திற்கு புதியவன். மிக அருமையான வெளியீடுகள். நன்கு வளர என் அன்னை ஆதிசக்தியை வேண்டினேன். மாவீரன் சத்ரபதி சிவாஜி ஒரு சிறந்த ராம பக்தன். இதற்கு இவர் குரு சமர்த்த ராமதாசர் காரணம். சிறு வயது முதல் ராம பக்தியை ஊட்டி வளர்த்தார். அப்படிப்பட்ட ராம பக்தனுக்கு எந்த துர்குணமும் இருக்க வாய்ப்பில்லை. எனவே சத்ரபதி சிவாஜி ஒரு சக்ரவர்த்தி. பேரன்புடன் ராம் ராம் லக்ஷ்மி நரசிம்ஹன், ஈரோடு
Super Sunderji
As I told you I tell these stories to my daugther whichever l read from our website and others ..
Today I got two stories….
சுந்தர்ஜி எனக்கு சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசை. சிவாஜியின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் தமிழில் இருகிறதா? அப்படி இருந்தால் அந்த புத்தகத்தின் பெயர் தெரியபடுத்துங்கள்