Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, September 11, 2024
Please specify the group
Home > Featured > “மகிழ்ச்சிக்கு வழி” – குட்டிக்கதை!

“மகிழ்ச்சிக்கு வழி” – குட்டிக்கதை!

print

“நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் அவன்.

“ என்ன காரணம்?” என்று கேட்டார் ஒரு பெரியவர்.

“மற்றவர்கள் எனக்குத் துன்பம் கொடுக்கிறார்கள்”

“உனக்குத் துன்பம் கொடுப்பது உன்னுடைய மனம்தான்”

“அப்படியா சொல்கிறீர்கள்?“

“ஆமாம்!”

“அப்படியானால் துன்பத்திலிருந்து விடுபட என்ன வழி?”

“மனதைப் புரிந்து கொள்… அது போதும்.”

“எப்படிப் புரிந்து கொள்வது?” என்றான் அவன்.

“இந்தக் கதையைக் கேள்“ என்று அவர் சொன்னார் – “ஆசையாக ஒரு பூனையை வளர்த்தார் ஒருவர். அந்தப் பூனை ஒருநாள் எலியைப் பிடித்து கவ்விக் கொண்டு வந்தது, அவருக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது.

மறுநாள் அந்தப் பூனை, அவர் ஆசையாக வளர்த்த ஒரு கிளியைக் கவ்கிக் கொண்டு வந்தது, அவருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது,

இன்னொரு நாள் அந்தப் பூனை எங்கேயோ சென்று காட்டிலேயிருந்து ஒரு குருவியைப் பிடித்துக் கவ்விக் கொண்டு வந்தது. இப்போது அவர் மகிழவுமில்லை; வருந்தவுமில்லை.

எதையாவது பிடிப்பது பூனையின் சுபாவம் என்பதைப் புரிந்து கொள்ள அவருக்குக் கொஞ்ச காலம் ஆயிற்று.

தனக்குப் பிடிக்காத எலியைப் பிடிக்கிறபோது இன்பம். தனக்குப் பிடித்தமான கிளியைப் பிடிக்கிறபோது துன்பம், தனக்குச் சம்பந்தமே இல்லாத குருவியைப் பிடிக்கிறபோது இன்பமுமில்லை… துன்பமுமில்லை…” – அவர் கதையை முடித்தார். இவன் சிந்திக்கத் தொடங்கினான்.

துன்பச் சிறையின் கதவுகள் திறக்கப்படுகிற ஓசை அவன் செவிகளில் விழுந்தது.

“மனதைப் புரிந்து கொள்கிறவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.”

–  ‘உள்ளமே உலகம்’ – தென்கச்சி கோ.சுவாமிநாதன்நன்றி : ஷங்கர் நடராஜன்

================================================

இந்த மாத ‘விருப்ப சந்தா’ செலுத்திவிட்டீர்களா?

We need your SUPPORT. Help Rightmantra in its functioning. Click here!

================================================

Also check…

ஞானிகளுக்கெல்லாம் பெரிய ஞானி யார்?

வெற்றுப் படகுகளை கண்டால் என்ன செய்வீர்கள்?

நம்முடைய மதிப்பை உயர்த்துவது எது?

Think before you decide!

அள்ளிக்கொடுத்த வள்ளலும் நன்றி மறந்த புதுப்பணக்காரனும்!

வாழ்க்கையில் வெற்றி என்பது உண்மையில் என்ன?

எதுக்கு இந்த விஷப்பரீட்சை? உன்னால ஜெயிக்க முடியுமா??

யார் மிகப் பெரிய திருடன் ?

எல்லோருக்கும் பொதுவான ஒரு மிகப் பெரிய சொத்து!

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

தெய்வத்தான் ஆகா தெனினும்….

செய்யும் தொழிலே தெய்வம்; அதில் திறமை தான் நமது செல்வம்!

வியாபாரத்திலும் சரி வெற்றியிலும் சரி நிலைத்து நிற்க ஆசையா?

எது உண்மையான வெற்றி? எது உண்மையான தோல்வி?

What is the real meaning of PRECIOUS ? மதிப்புமிக்கது என்றால் என்ன ?

இன்று கிடைக்கும் தேன்துளி Vs நாளை கிடைக்கக்கூடிய வெகுமதி!

பாலைவனமாய் இருக்கும் வாழ்க்கை சோலைவனமாக வேண்டுமா?

இறைநம்பிக்கை Vs தன்னம்பிக்கை!

ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?

விதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா?

நாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் ?

‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது?’

எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? –

வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா?

பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா?

சந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்

மகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா ?

இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ?

நடப்பதெல்லாம் நன்மைக்கே! நடக்காதது இன்னும் நன்மைக்கே!!

அனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் ?

நினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்!

மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா?

தவளையை கொன்றது எது?

================================================

Don’t miss this….

எதுக்குமே டயம் இல்லை சார்… என்ன பண்றது?

தெய்வமே தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே!

================================================

[END]

2 thoughts on ““மகிழ்ச்சிக்கு வழி” – குட்டிக்கதை!

  1. vishayam migavum aalamaanadhu
    adhai sonna vidham miga elimaiyaanadhu
    arumaiyaana seidhi
    manadhai purindhukollaadhadhaaldhaan inraikku ulagam indha nilaiyil ulladhu
    idhu innum engay poi mudiyapppogiradho
    iraivaa
    elloraiyum kaappaattru

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *