இந்து ஆன்மிக சேவை கண்காட்சி
5-வது இந்து ஆன்மிகம் மற்றும் சேவை கண்காட்சி சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 24-ந்தேதி வரை நடைபெற உள்ளது. தொடக்க விழா இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணிக்கு அதே கல்லூரியின் கலை அரங்கில் நடக்கிறது. பாடகி சுதா ரகுநாதனின் இறைவணக்கத்தோடு நிகழ்ச்சி தொடங்குகிறது.
முன்னாள் துணை பிரதமரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான எல்.கே.அத்வானி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு இந்து ஆன்மிக சேவை கண்காட்சியை தொடங்கிவைக்கிறார்.
விழாவில் தேனி சித்பவானந்தா ஆசிரம சுவாமி ஓம்காரநந்தா, சென்னை ராமகிருஷ்ண மடத்தின் சுவாமி ஆசுதோஷானந்தா, திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி எல்.வி.சுப்பிரமணியம் மற்றும் ஆன்மிக தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.
(Double Click the above image to ZOOM and READ)
வாழும் கலை, அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம், ஸ்ரீராமகிருஷ்ணமடம், ஸ்ரீகாஞ்சி காமகோடிபீடம், திருவாவடுதுறை ஆதீனம், சிருங்கேரி சாரதாபீடம், சர்வதேச காயத்ரி பவார், விவேகானந்தா கல்விக்குழுமம், பிரம்மகுமாரிகள் இயக்கம், வேலூர் ஸ்ரீநாராயணீபீடம் உள்பட 250 சேவை நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொள்கின்றன. அதற்கான அரங்குகள் கல்லூரியின் நுழைவு வாயில் அருகே அமைக்கப்பட்டுள்ளன.
செயற்கை ஆலமரம்
அதில் செயற்கை ஆலமரம் ஒன்று பார்வையாளர்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தினமும் கலை நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. அதற்காக தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக விவேகாந்தரின் கொள்கைகளை விளக்கும் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
அரங்குகள் அமைத்துள்ள சேவை நிறுவனங்கள் பொதுமக்களுக்கு செய்துவரும் சேவைகளை இந்த அரங்குகளின் வாயிலாக விளக்குகின்றன.
ஸ்ரீனிவாச திருக்கல்யாணம்
இந்த கண்காட்சியில் 23-ந்தேதி, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீனிவாச திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. இதை எல்லோரும் கண்டுமகிழலாம். சாமி தரிசனம் செய்யலாம்.
ஒவ்வொரு நாளும் பொதுமக்களுக்காக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காகத்தான் இந்த கண்காட்சி நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்பாடு
கண்காட்சி ஏற்பாடுகளை இந்து ஆன்மிக கண்காட்சி அமைப்பு தலைவரும், இந்திய தேர்தல் ஆணைய முன்னாள் தலைமை ஆணையருமான கோபால்சாமி, கண்காட்சியின் துணைத்தலைவரும் பரதநாட்டிய கலைஞருமான பத்மா சுப்பிரமணியம் ஆகியோர் செய்துவருகிறார்கள்.
அத்வானி வருவதையொட்டி கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. (செய்தி உதவி : தினத்தந்தி)
[நமது நண்பர்களுடன் இந்த கண்காட்சிக்கு வரும் ஞாயிறு செல்லவிருக்கிறேன். simplesundar@gmail.com என்ற முகவரிக்கு இது குறித்து மின்னஞ்சல் செய்யவும். வரவேண்டிய நேரம் மற்றும் சந்திக்க வேண்டிய இடம் குறித்து வெள்ளியன்று தகவல் தெரிவிக்கிறேன். விரும்புகிறவர்கள் இணைந்து கொள்ளலாம்!]
…………………………………………………………….
சென்ற ஆண்டு (2012) நடைபெற்ற இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சியின் புகைப்படங்கள் மற்றும் விபரங்களுக்கு :
http://rightmantra.com/?p=2589
…………………………………………………………….
சென்னையில் உள்ளவங்க கொடுத்து வச்சவங்க தான். என்ன மாதிரி வெளியூரில் (கோவை) உள்ளவங்களுக்கு தான் அந்த கொடுப்பினையே இல்லையே சுந்தர். என்ன செய்ய?
—————————————————-
கவலைப்படாதீர்கள். தளத்தில் நமது கவரேஜ் வரும். அது உங்களை கண்காட்சிக்கே அழைத்து செல்லும்.
-சுந்தர்
மிக்க நன்றி சுந்தர்.
நாங்கள் கிரோம்பெட்டில் இருக்கின்றோம்
தங்கள் வரும் டைம் தெரிந்தால் உங்களோடு பங்கு கொண்டு மகிழ்வோம்
நேற்று ஆரம்ப விழாவிற்கு சென்றிருந்தேன். அற்புதமான விழா அற்புதமான கண்காட்சி. எங்களது உலக சமாதான ஆலயம் சார்பாக ஸ்டால் எண் T10 உள்ளது. நம் தளம் நண்பர்கள் அனைவரும் இந்த அறிய கண்காட்சிக்கு அவசியம் வர வேண்டும்.
நன்றி சுந்தர்ஜி…
ப.சங்கரநாராயணன்
நேற்றய விழாவில் திரு. அத்வானி அவர்கள் உரையாற்றும்போது சுவாமி விவேகனந்தர் பற்றி கூறும்போது, சுவாமி விவேகனந்தர் அவர்கள் மேற்கத்திய பயணம் முடித்து சென்னைக்கு (அந்நாட்களில் மெட்ராஸ்) 1897-ம் வருடம் பெப்ரவரி மாதம் வந்தாராம். அப்போது அவர் உரையில் எல்லா தெய்வங்களும் உறங்கிவிட்டது ஆனால் ஒரேஒரு தெய்வம் உறங்கவில்லை. அந்த தெய்வம் நமது பாரத மாதா என்று குறிப்பிட்டு உள்ளார். அவர் சொன்ன அந்த வருடத்தில் இருந்து சரியாக 50-வது வருடம் நமது இந்திய நாடு சுதந்திரம் பெற்றது. என்ன ஒரு தீர்க்க தரிசனம்.
இதுபோல தீர்கதரிசிகள் அவதரிததல்தான் நமது நாடு இன்னமும் பரம்பரியதோடு இருந்துகொண்டிருகிறது.
வாழ்க பாரத மாதா
ப.சங்கரநாராயணன்
சுந்தர் என்ற பெயரில்லை அவருக்கு இனி வேறு பெயர் அது “சித்தர்”
\\கையளவு நெஞ்சத்தில கடலளவு ஆசை,
நாம நாலு பேருக்கு நன்மை செஞ்சாலே அதுவே போதும் \\
என்று நினைக்கும் சுந்தர்ஜிக்கு பாராட்டுக்கள் பல ……..
சொய்… சொய்…
தங்களின் வாசகன் .
மனோகரன்.